அத்தியாயம் -2-
மங்கலம் அஷ்டலட்சுமியின் அவதாரமாய்… நகைகள், ஒப்பனை, பணப்பெட்டி என வீட்டின் நடு ஹாலில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கவும்…., அதைப் பார்த்த அவளின் கணவன் மாணிக்கம் அதிர்ந்து விழி விரிக்கிறவன்….!!!,
‘கனவோ….!!!?’
என்று நினைத்துக் கண்களைக் கசக்கவும்….!!!, இது உண்மைதான் என நிதர்சனம் புரிய…, அவனே அவனைக் கிள்ளியும் பார்க்கிறவன்….
“இஸ்ஸ்ஸ்ஸ்… ஆஆஆஆ…”
என அவன் வலியால் கத்த…, அவள்
“ஹா… ஹா…”
என சத்தமாகச் சிரிக்கிறாள்…..
‘ஒருவேள செத்துப்போய் புண்ணியவதி பத்தினி பேயாக வந்திருக்காளோ….?’
எனவும் திகைக்கிறவன்,
‘ ஒருவேள நிஜமாகவே உயிருடன், சதையாகத்தான் உட்கார்ந்திருக்கிறாளா….???’,
எனவும் சந்தேகமாக யூகித்து, ஒரு புருவம் உயர்த்தி அவளை கேள்வியாக வெறித்துப் பார்த்தபடியே…, அவளை நெருங்கித் தொட முயல…
“ச்சீ… மாணி…., என்னய தொடாதே…!”
என அவனை மங்கலம் தடுத்து விலக்கி வைக்கிறவளிடம் கணவன்,
“அதுசரி… நீ யாரும்மா….? என் மனைவி தானா…?…!!!.”
என நக்கலாக அவன் விசாரிக்கவும்….,
“இல்ல இல்லவே இல்ல!”
என மங்களம் தெள்ளத் தெளிவாக உரத்த குரலிலே குரலை உயர்த்திச் சொல்கிறாள். அதைக் கேட்டதும்,
‘அடிப்பாவி….!!!, நான் நக்கலா கேட்டா பதிலுக்கு நக்கல் அடிக்கிறாளே….’
என மாணிக்கம் கோபம் கொள்ளவும்…..
“ஏய் திமிங்கலம்…..! எவ்ளோ திமிரா கூலிங் கிளாஸ்! போட்டுட்டு, பணத்த கையில வைச்சும் ஆட்டிக்கிட்டு, கால் மேல காலு… அதுவும் புருஷன் முன்னாலயே இப்புடி கால் மேல காலு போட்டு உட்காருவ நீ…? உனக்கு அவ்ளோ திமிரா டி நாயே…? சூட்கேஸ் நிறைய பணம் வேறு… எங்கடி திருடின….?”
என்று அவன் ஆணவமாகக் கேட்கிறான்….
“உனக்கு அது தேவையே இல்ல….!”
என அவள் பதிலுக்குக் கடிந்து கொள்ள….
“பதிலுக்கு பதில் பேசுறீயாடி …. எனக்கு நீ எய்தது கேள்வி கேட்டாலோ புடிக்காதுன்னு உனக்கு நல்லா தெரியும்ல….. தூக்கி அடிச்சேன்னா பாத்துக்கோ… என்ன குளிர் விட்ருச்சா….? , கன்னத்துல ஒண்ணு விட்டு, ஒரு வாரமாக உன் கன்னம் உப்பி இருந்ததே, மறந்துட்டியா….?”
என்று அவன் பழைய அதிகாரத்தோடு மிரட்ட…அவனைப் பார்த்து அலட்சியமாகச் சொடக்கு போட்டவள்,
“ஏய்… பழைய மாதுரி நினைச்சுக்கிட்டு, இப்ப என்ட்ட அடிக்க கை ஓங்கிடாத…! என் கை ஒன்னும் பூ பறிக்காது….!”
என்று அவள் திருப்பி மிரட்ட…. தன்னால் எப்பவும் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒருத்தி…, கூலிங் கிளாஸ் அணிந்து, பணத்தோடு, கால் மேல் கால் போட்டுத் தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதை பார்க்கிறவனின் நெற்றிப் பொட்டு சுருங்கி , அவனது இரு புருவங்களையும் குறுக்கி,
‘ இது எப்படி சாத்தியம்! …’
என மாணிக்கம் சிந்திக்கவும்…..அவள் வைத்திருக்கும் பணத்தைப் பார்த்து சந்தேகப்பட்டவன், உடனே தன் கைப்பேசியை எடுத்து அவனது பேங்க் அக்கவுண்ட் சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்தான்.அதைப் பார்த்த மங்களம்,
“என்ன… எல்லாம் சரியா இருக்கா….? ,உன்னய என்ன செஞ்சா தகும்…? உன் காசை நான் எடுக்கிற மாதிரியா நீ வெச்சிருக்க….? அதையும் நான் எடுக்க முடியாது….. எனக்குன்னு தனி அக்கவுண்ட் இருக்கு…., ஆனா அதையும் நீயேதான் உன் கண்ட்ரோல்ல வெச்சிருக்க பாவி மவனே….! இதுல நான் அதுல இருந்து காசு எடுத்திருப்பேன்னு உனக்கு சந்தேகம் வேறயா….!”
என அவள் கடிந்து கொள்ளவும்….. ‘
அதானே… நம்ம எல்லாத்தையும் நம்ம கண்ட்ரோல்ல தானே வெச்சிருக்கோம்…? அப்போ அவளால எடுக்க முடியாதுல… அப்புறம் ஏது இவளுக்குக் காசு…?’
என அவன் மனதிற்குள்ளாக யோசித்தவன்…..
‘ஒருவேள அவங்க வீட்டு சைடு அவளுக்குன்னு கல்யாணத்தப்ப போட்ட நகைய ஏதும் போட்டுருக்காளோ….????’
என அவன் அவளை மேலிருந்து கீழாக ஆராய…, அது அவளுடைய பழைய நகையே இல்லையே….. என அதிர்ந்து விழி விரித்தவனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள்,
“என்ன… என்ன பாக்குற….? இது என் நகைதான்….. ஆனா, என் பெத்தவங்க எனக்குன்னு போட்ட நகை இது இல்ல….. அதெல்லாம் உன் கண்ட்ரோல்ல பேங்க் லாக்கர்ல தானே தூங்கிட்டு இருக்கு….?, அதெல்லாம் நீயா பாத்து ஏதாவது ஃபங்ஷன்ல போட்டுக்கோன்னு கொடுத்தாதானே நான் போட முடியும்….? அதுவும் கூட என் ஆசைப்படி போட முடியாது தானே எல்லாமே உன் இஷ்டம் தானே…..!”
என வருத்தம் கலந்த குரலிலும், அதேசமயம் தீர்க்கமான உரத்த குரலிலும் அவள் சொல்லி முடிக்கவும்…..
‘அட ஆமாம்ல! ஆனா அப்புறம் எப்புடி இவளுக்கு இதெல்லாம் கிடைக்க சாத்தியம்….?’
என எதுவும் புரியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான் மாணிக்கம்…..
“ஏய்… என்ன லாங்கா யோசிச்சுட்டே போற….? எனக்கு டைம் ஆகுதுல….! உன் யோசனை எல்லாம் அப்புறம் வச்சுக்கோ…., முதல்ல நான் உன்கிட்ட பேசணும்….,”
என்று தன் கூலிங் கிளாஸை லேசாக இறக்கி நக்கலாக மங்கலம் அவனிடம் பேச…அதைச் சற்றும் எதிர்பாராத மாணிக்கத்திற்கு விக்கலே வந்துவிட்டது…..
‘ஆத்தி… இவ நம்மள ஓவர்டேக் பண்றாளே….!’
என அவளின் அதிரடி மாற்றத்தைக் குறிப்பால் உணரவும் அதிர்ந்தவனிடம்,
“அது சரி… விக்கலா? போ… போய் முதல்ல தண்ணி குடி…. குடிச்சுட்டு நேரே வா பேசலாம்….! ஏன்னா நான் சொல்ல போறத கேட்டாக்கா உனக்கு ஹார்ட் அட்டாக்கே வரலாம்….,”
என்று மேலும் மங்கலம் நக்கலடிக்கவும்….
“போதும், ரொம்ப ஓவராகத்தான் டி போற நீ…”
” போலாம் இன்னுமே ஓவரா போலாம்…. என்ன ஏதுனு போய்த்தான் பார்ப்போமே மாமே…”
என்று ஈகோ உள்ளவனிடம் தன் பேச்சால் விட்டுக் குடுக்காமல் சமாளித்தவளிடம், மீண்டும் தன் பழைய அதிகாரத்தைக் கையில் எடுத்தால் தான் சரிப்பட்டு வரும் என்று மாணிக்கம் நினைத்துக்கொண்டு,
“அது இருக்கட்டும், எங்க என் டீ….?”
!”அடேய்..!. இந்த ரணகளத்திலும் உனக்கு டீ கேக்குதா…..?”
என ஒன்னுமே நடக்காதது போலவும் …. தன்னிடம் சர்வ சாதாரணமாய் டீ கேட்பவனிடம்…. நாக்கை மடக்கி நக்கலாகக் கேள்வியை கேட்டாள் மங்கலம்… அவனுமே அவளிடம் பேச்சை விட்டு கொடுப்பதாக இல்லை….
” சொல்லுடி… எங்கடி டீ?”
என இவன் மீண்டும் அதிகாரமாக விசாரிக்க…
“ம்ம்ம்… ஜெலுசில் வேணா குடி…., நெஞ்செரிச்சல் சரியாகும்…! ஏன்னா, நான் இன்னைக்கு டீ போடல….,”
என்று அலட்சியமாகச் சொன்னவளிடம்,
“ஏன்டி போடல….?”
என ஆத்திரத்தோடு எகிறியவனிடம்,
“உனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ருசியில தான் டீ முதல் கொண்டு சமையல், டிரெஸ்ஸிங் சென்ஸ் என எல்லாம் மாறும்….. சோ….., உனக்கு புடிச்ச மாதிரி டீயோ, சமையலோ… இனிமே நீயே செஞ்சுக்கோ….! ஏன்னா, ஸ்விட்ச் போட்டா உனக்கு பிடிச்ச மாதுரி சமைச்சுத் தர நான் ஒன்னும் ரோபோ பொம்மை இல்ல… நானும் இத்தனை வருஷமா உனக்கு புடிச்ச மாதுரி என்னய மாத்திக்கிட்டா…., நீ சரிப்பட்டு வருவேன்னு தான் நினைச்சேன்…. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இப்போதான் புரியுது….. கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்றேன் தான் நான்….. முதல்லயே உன் மூஞ்சில டீயை ஊத்திட்டு போடான்னு போயிருக்கணும்… தப்புதான்….!“
எனத் தன் கடந்த கால இயலாமையைக் கலக்கமான குரலிலும், அதே சமயம் தற்போதைய அதிகாரத் தோரணையிலும் அவள் சொல்லி முடிக்கவும்…..
‘அய்யோ… டீ இருந்தாத்தானே கொஞ்சமாவது கம்பீரமா இவகிட்ட பேச முடியும்!’
என்று நினைத்தவன், வேறு வழியின்றி அவனே சமையலறைக்குப் போய் டீ போட….. மணக்க மணக்க, அவனுக்குப் பிடித்த மாதிரியே சுடச்சுட டீயைத் தயார் செய்தான்….அந்த டீயின் வாசனை ஹால் வரைக்கும் வரவும்…. அந்ந வாசனையை தன் நாசியில் நுகர்ந்த மங்கலம்,
‘தெரியும்… உனக்கு நல்லா டீ போட தெரியும்னு எனக்கும் தெரியும்….. அதனாலதானே என்னய அப்படி போட சொல்லி பாடா படுத்தின….?’
என்று எண்ணினவள்…. அப்படியே,
‘அடேய் புருஷன்மார்களா… உங்களுக்கு பிடிச்ச டேஸ்ட்ல எது வேணும்னாலும், உங்க கையாலயே செஞ்சுக்கோங்களேன்டா….!இல்லைன்னா நாங்க எத சமைச்சுக் கொடுத்தாலும்,வாயை திட்றதுக்கு திறக்காம வாங்கிச் சாப்பிடுங்களேன்டா….! பாராட்ட மனம் இல்லைன்னாலும் கூட பரவாயில்ல…., ருசிய பத்தி மட்டும் குறை பேசாதீங்களேடா… நாங்களும் பாவம் தானே….!’
என ஒவ்வொரு குடும்பப் பெண்ணின் மனதிலும் இருக்கும் ஆதங்கத்தை போலவும்…. தன் மனதிற்குள்ளும் நினைத்துப் பெருமூச்சை விட்டாள் மங்கலம்…..
மணக்க…. மணக்க….. அவன் போட்ட மசாலா டீயைச் சுடச்சுட ஆவி பறக்கத் தான் குடிக்கும் கப்பில் ஊற்றி…. அதை ஒரு மடக்கு பருகவும்,
‘ஆகா… என்ன சுவை….!’
என நினைத்து மெய்மறந்து அந்தக் கப்பைக் கீழே வைத்தவன் கவனிக்காத அந்தச் சிறு இடைவெளியில், அதைக் கையிலெடுத்த மங்கலம் மொத்த டீயையும் சுவைத்துத் குடித்து முடித்திருக்கவும்….. அதை அறியாத மாணிக்கமோ, மீண்டும் டீயைப் பருக கப்பை எடுத்தான்….. ஆனால், அதிலே ஒரு சொட்டு டீ கூட இல்லை…!!! என்பதைக் கண்டு அவன் அதிர….. அவனுக்கு முன்னால் வந்து நின்றிருந்த மங்கலமோ வாயை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தாள்……
“அடிப்பாவி… நீயெடுத்து குடிச்சியாடி….?”
என அவளை அவன் அக்னியாய்த் தீயாய் முறைத்துப் பார்க்கவும்….
“ஆமா…., அதுக்கென்ன இப்ப….? ஆனா, நான் உன்னய மாதிரி ‘டீ நல்லா இல்ல’ன்னு உன்ன குறை சொல்ல மாட்டேன்…. நான் போடுறத விட உன் டீ பிரமாதம்னு உண்மையைத்தான் சொல்லுவேன்….. ஆமா அப்படியே உன்ட்ட ஒண்ணு கேக்கணும்… நீ என்ன டீ மாஸ்டரா….? உங்க வீட்ல மறைச்சு எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்களா என்ன…?”
என்றுவிட்டு அவள் கிண்டல் பண்ணிச் சிரிக்க…
‘வடை போச்சே… ச்சீ மண்டை குழம்புது… டீ போச்சே….!’
எனக் குழம்பிக்கொண்டே கொலைவெறியில் அவளை பார்த்தப்படி நின்றிருந்தான் கணவன் மாணிக்கம்….அதைக் கண்டும் காணததுமாக எந்த உணர்ச்சியையும்வெளிக்காட்டாதவள்,
“சரி சரி முறைச்சது போதும் …. உன்ட்ட நான் இப்பவே ஒரு மேட்டரு பேசனும் வா …வா….”
என்றப்படி அவ ஹாலுக்கு அழைக்கவும் ….. சற்றுத் தளர்ந்த நடையில் சமையலறையிலிருந்து கம்பீரம் குறைந்தவனாக அவளுக்கு பின்னால் அவன் நடந்து வரவும் ,
‘ தென்பாண்டி சீமையில….தேரோடும் வீதியில… மான்போல வந்தவன…. யாரடிச்சாரோயாரடிச்சாரோ…ஓ..ஓ…… யாரடிச்சாரோ….’
என்ற பாடலை ஒலிக்க விட்டப்படி மகன் வேலன்! செல்கிறவனை ஏக்கமாக பார்த்து , மாணிக்கம்…..
“டேய் நீயுமா டா..???..”
“டாடி…. நான் இல்ல பாடினது. இளையராஜா …”
“அடிங் கொய்யால ஓடிடு….!!!”
என விரட்டினான் மாணிக்கம் வேலனை….
-💒மறுமணாகும் ….
💛கொலைவெறியில் நிற்கும் மாணிக்கம் தன் ஏமாற்றத்தை எப்படி வெளிப்படுத்தப் போகிறான்…????,
♥️மங்களம் அவனிடம் சொல்ல வந்த அந்த ‘ஹார்ட் அட்டாக்’ விஷயம் என்ன….? பார்ப்போம்….