Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 5

CHAPTER 5

விவாதம் – 5

By S.K Velan · October 1, 2026

0

“மேடம் இந்தப் பணத்தை இந்த அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ண முடியாதுங்க” என்று கொடி சொன்னான்.

 மகிழினி குழப்பதுடன்,”ஏன் முடியாது? என்ன பிரச்சனை?” என்றாள்.

“இந்த அக்கௌன்ட் யாரோடது? இதுல உங்க பெயரே இல்லையே?” தன் சந்தேகத்தைக் கேட்டான் கொடிவீரன்.

“இந்த அக்கௌன்ட் நம்பர் என் வீரா வளர்ந்த, ஆஸ்ரமத்து பேர்ல இருக்குற அக்கௌன்ட் நம்பர். எனக்கு இந்த அக்கௌன்ட்ல நீங்க என் வீராக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் பணத்தை டெபாசிட் பண்ணிடுங்க.” என்றாள் அவள்.

“இல்லிங்க. அதுக்கு வாய்ப்பில்ல.” என்று மறுத்தான்.

“ஏன் அப்படி சொல்லுறீங்க?” எனப் புரியாது கேட்டாள் மகிழினி.

“எங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உங்க கணவர் கட்டிய பணத்தை, அவருக்கு பிறகு அவர் மனைவி பேர்ல தான் தொடரணும்னு Sign பண்ணி இருக்காரு. ஆனா, நீங்க இப்போ இத பாதியில் எடுக்க, நாங்க ஓகே பண்ணதே பெருசு தான். அப்படி இருந்தும் இந்த பணம் உங்களுக்கு வரணும்னா உங்க Name ல அக்கௌன்ட் இருக்கணும்… அப்படி இருந்தா. நாங்க உங்க அக்கௌன்ட்ல இந்த பணத்தை டெபாசிட் பண்ணிடுவோம்… அப்புறமா நீங்க உங்களுக்கு யாருக்கு தரணும்னு தோணுதோ அவங்க அக்கௌன்ட்கு டிரான்ஸ்பர் பண்ணிக்கோங்க.

“வேற ஏதும் ஆப்ஷன் இல்லையா?” எனக் கேட்டாள் மகிழ்.

“ஹ்ம் இல்ல மேடம்… இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேன்.”

“சரிங்க சார். அப்போ நான் நாளைக்கு பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டு, அந்த நம்பரை எடுத்துட்டு வந்து தரேன்.” என்றாள்.

“ம் இது நல்ல ஐடியா. அதையே செய்யுங்க.”

  “ஒகே சார். ரொம்ப நன்றி. நான் கிளம்புறேன்.” என்று அவள் எழ,”மேடம் ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான் கொடிவீரன்.

அவளோ என்ன என்பதாய் அவனைப் பார்க்க,”என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்… யாரு நீங்க? உங்களைப் பார்த்ததா நினைவில் இல்லை.” என்று புருவம் சுருக்கினாள்.

“என்னங்க இது. நான் தான் உங்க அண்ணன் சுரேஷாட நண்பன். நேத்து கூட ஊருல இருந்து வந்து. உங்க வீட்டு மாடியில் தங்கிட்டு இருக்கேனே.” என்றான் ஆச்சரியமாய்.

“ஓ. சாரி சார். நான் கவனிக்கல.”

“நானும் சாரிங்க.”

“ஏன்?” என்றாள் புரியாது.

“நேத்து நான் வேணும்னே உங்க வீட்டு மல்லி செடியில பூத்த பூவை எல்லாம் கிள்ளி போடல. அது தெரியாம ரியலி சாரிங்க” என்று மன்னிப்புக் கேட்டான்.

அவள் எதுவும் பேசாது அமைதியாக நிற்க,”நேத்தே நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனா,, நீங்க நான் பேசுனத காதுல வாங்கிக்கவே இல்ல.”

“நான் என்னோட இயர் மெஷின் போடாம இருந்து இருப்பேன். அதனால  நீங்க பேசினது என் காதுல கேட்க ல போல. இட்ஸ் ஓகே சார். நான் கிளம்புறேன்.” என்றாள்.

“எப்படி வந்தீங்க? நான் வேணா உங்களை ட்ரோப் பண்ணவா? எனக்கு இன்னும் அரை மணி நேரத்தில் வேலை முடிஞ்சிடும்…” என்று கொடி நட்பின் அடிப்படையில் மகிழினியிடம் கேட்டான்.

 அவளோ தன் காதில் இருந்த மெஷினை கழட்டி பேக்கில் வைத்து கொண்டு கொடியை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், ”பேணக் சம்பந்தப்பட்ட ஆலோசனை சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் போய்ட்டு வரேன்” என்று சொன்னதும் கொடியின் முகம் மாறி போக, மகிழினி எதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

“ரொம்ப திமிர் பிடித்த பொண்ணா இருக்காங்க. நேத்து நம்ம இவங்க வீட்டுக்கு வந்தது கூட தெரியலன்னு சொல்லுறாங்க. நான் போய் உங்களை ட்ரோப் பண்ணவான்னு கேக்குறேன் அதுக்கு ஒரு பார்மாலிட்டிக்கு கூட எந்த பதிலும் சொல்லாமல், பெரிய இவங்க மாதிரி கிளம்பி போறாங்க.  ஹ்ம் போகட்டும் ஏதோ நம்ம நட்போட தங்கச்சின்னு பார்த்தா, ரொம்ப ஆட்டிடியூட் தான் போல” என்று தனக்குள் புலம்பியவன் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அன்று மாலை ஆறு முப்பதுக்கு  மொட்டை மாடியில் உள்ள கொடியின் அறைக்கு வெளியே,”உள்ள வரலாமா?” என அனுமதி கேட்டு நின்றான் வேணு.

“அடடே நீங்களா? வாங்க சார்” என்றான் வரவேற்பாக.

“என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு. இது சரியில்லையே” என்று அவன் புத்தி குதர்க்கமாய் யோசிக்க ஆரம்பிக்க,

“டேய்! சும்மா தான்டா. கண்டதையும் யோசிச்சி என்னை படுத்தாத.

“சரி உங்களுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.

“எதுக்குடா?”

“ம் எனக்கு கணக்கு கத்து தர.”

“ஏன் அதைன் பிறகு எங்க போறீங்க நீங்க” என்று கிண்டலாகக் கேட்டான்.

“தூங்க போவேன்.”

“நேரம் வச்சி எல்லாம் படிக்க கூடாது. சரி வாங்க டியூஷன் ஆரம்பிக்கலாம்” என்றதும் வேணு சரியென்று சொல்ல,

“ஆமா கணக்குல உங்களுக்கு என்ன புரியல.?”

”எவ்வளவு முயற்சி பண்ணியும் கணக்கே புரியல.” என்றான் சிறுவன்.

“சரிதான்.  நான் சில டிப்ஸ் எல்லாம் சொல்லி தரேன். அதை வச்சி இப்போதைக்கு சிம்பிளா கத்துக்கோங்க. இப்போ வர போற டெஸ்ட் முடிஞ்ச பின்னாடி அப்புறமா எல்லாத்தையும் கத்துக்கலாம்… சரியா?”

“எனக்கு முப்பத்து நான்கு அரை மார்க் வர மாதிரி கத்துத்தாங்க. அது போதும்…” என்றான் வேணு.

“அது சரி. ம் வாங்க” என்று வேணுவுக்கு கணக்கு பாடம் கத்து கொடுத்தான்.

 அதே சமயம்… மகிழினி கையில் தண்ணீர் வாலியுடன் வந்தவள், அவள் வளர்க்கும் மல்லி பூச்செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்து, அந்த செடியில் துளிர்விட்ட இலைகளை கூட சுத்தம் செய்பவளின் செயலை, தன் ரூமில் அமர்ந்தப்படி கவனித்து கொண்டு இருந்தான் கொடி.

“ஏன் வேணு? உன் அத்தை ஏன் எப்போ பாரு இந்த செடிங்ககிட்ட நின்னுகிட்டு எதையாவது நோண்டிகிட்டே இருக்காங்க?” என்று கொடி தன் சந்தேகத்தை கேட்டான்.

“அதெல்லாம் நம்ம கேட்டாலும் அவங்க சொல்ல மாட்டாங்க. நானும் நிறைய டைம் கேட்டுட்டேன்” என்று தன் உதட்டை சுழித்தான் வேணு.

“சரி உன் அத்தையோட ஹஸ்பன்ட் இப்போ உயிரோட இல்லையா?” என்று மீண்டும் தன் சந்தேகத்தை கேட்டான் கொடி.

“அப்படி தான் எங்க அம்மா சொன்னாங்க” என்று தன் கண்களை கசக்கினான் வேணு.

“அவரு எப்படி இறந்தாரு?” என்று மீண்டும் கொடி கேள்வி எழுப்ப,

பொறுமை இழந்த வேணு, “யோவ் எனக்கு என்ன என் அத்தையை பற்றிய கேள்வி தான் நாளைக்கு எக்ஸாம்ல கேட்க  போறாங்களா? துருவித்துருவி அவங்களையே கேட்டுட்டு இருக்க” என்று கடுப்பாக கத்தினான்.

“டேய்! ஏன்டா இப்படி கத்துற? அவங்க காதுல விழுந்தா என்னை தப்பா நினைக்க போறாங்கடா” என்று பயந்தான் கொடி

“ஹாங் இல்லனா மட்டும் நீங்க நல்லவர் தான்” என்று முகத்தை சுழித்தான் வேணு

“டேய்! கத்தாதடா ப்ளீஸ்” என்று கொடி கெஞ்சினான்.

“நான் என்ன தான் கத்தினாலும் அவங்க காதுல விழாது” என்று சொன்ன வேணு மீண்டும் தன் கவனத்தை படிப்பில் செலுத்தினான்

“எப்பா சாமி. நான் உன் அத்தையை பற்றி தெரியாம கேட்டுட்டேன்டா. நீ ஒழுங்கா நான் சொல்லிக்கொடுத்த கணக்கை போடு சாமி” என்று கையெடுத்து கும்பிட்டான் கொடிவீரன்.

“நாங்க போடுறோம்… நீங்க என் அத்தையை கணக்கு பண்ற வேலையை விட்டுட்டு, நீங்க எதுக்கு இந்த ஊருக்கு வந்திங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க” என்று கோவமாக சொன்ன சிறுவன் கணக்கு பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

ஒரு மணிநேரம் கழித்து, “சரி. இன்னைக்கு இது போதும்… மீதியை நாளைக்கு பாத்துக்கலாம்… நீங்க சீக்கிரம் டின்னர் சாப்பிட வாங்க” என்று சொன்னவன் வேகமாக கொடியின் அறையில் இருந்து கீழே இறங்கி ஓடினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த பின்பும்… மகிழினி அந்த பூ செடிகளின் நடுவில் இருந்து வெளியே வராமல் இருக்க, அவளின் செயலைக் கண்டு கொடியின் மனதில் பல கேள்விகள் தோன்றினாலும்… அது எதையும் பொருட்படுத்தாமல் கீழே இறங்கி சென்று, வேணு எடுத்து வைத்த டின்னரை முடித்த பிறகு, மீண்டும் மாடிக்கு வந்தான்.

 அப்பொழுதும் மகிழினி மல்லி பூ செடிகளுக்கு நடுவில் நின்று இருப்பதை பார்த்து, அவள் அருகில் சென்றவன்,”ஹாய்” என்று இவனாகவே பேச முயற்சித்தான்.

அவனின் வருகையைக் கண்டு தலை தூக்கிப் பார்த்த மகிழினி கடமைக்கென்று சிரித்து, அவனிடம் எதுவும் பேசாமல், பூ செடிகளில் இருந்து கீழே விழுந்த காய்ந்த மலர்களை எல்லாம் தன் முந்தானையில் எடுத்து கட்டிக்கொண்டு கீழே இறங்கினாள்.

அதைப் பார்த்த கொடி தன் புருவங்களை உயர்த்தி, உதட்டை சுழித்தபடி, “நமக்கு ஏன் இந்த வேலை? நம்மளா போய் பேசுறதால நம்மள இந்த பொண்ணு தப்பா நினைக்கிறாளா என்ன? ஐயோ! வேணாம் வேணாம் இனிமே இந்த பொண்ணு ரைட்ல வந்தா, நம்ம லெப்ட்ல போயிடனும்” என்று தனக்குள் புலம்பியவன் உறங்க சென்றான்.

இன்றும் காலையில் வேணுவை பள்ளியில் விட்டு, பின் தன் வேலைக்கு சென்றான்.

நேரம் 11 மணி அளவில், கொடியின் இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு வந்த மகிழினி அவனைச் சந்திக்க அனுமதி கேட்டு அவனின் கேபினில் காத்திருந்தாள்.

“நம்ம நண்பனோட தங்கச்சின்னு நான் நார்மலா பேசுனா கூட என்னை என்னமோ பொண்ணுங்ககிட்ட பேச அலையுற மாதிரி இந்த பொண்ணு நம்மள டிரீட் பண்ணுறாங்க. சோ இவங்ககிட்ட கொஞ்சம் நம்ம ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது தான் நமக்கு நல்லது” என்ற நினைப்பில் கொடி. மகிழினியை தன் அறைக்குள் அழைத்தான்.

“வணக்கம் சார். இந்தாங்க என் அக்கௌன்ட் நம்பர்.”

“ஓ வாங்கியாச்சா? கொடுங்க” என்று மகிழினியிடம் வாங்கி,”எங்க கம்பெனில இருந்து இன்னும் ஒரு வாரத்துல உங்க அக்கௌன்ட்ல பணம் போட்டுடுவாங்க. வேற ஏதாவது தகவல் வேனும்னா கேளுங்க” என்றான் பணி நிமித்தமாய்.

“ரொம்ப நன்றிங்க. பேங்க்ல பணம் போட்டதும் எனக்கு இன்பார்ம் பண்ண முடியுமா? தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்றாள் அவள்.

“அதைனால் என்ன? உங்க நம்பர் இருந்தா தந்துட்டு போங்க. எங்க ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி சொல்லுவாங்க.” என்றான் கொடிவீரன்.

“நம்பர் எங்க கொடுக்கணும் சார்?”

“என்கிட்ட கூட தாங்க. நான் உங்க ஹஸ்பண்ட் டீடைல்ஸ் இருக்குற பக்கத்தில் உங்க  போன் நம்பரை ஆட் பண்ணிடுறேன்.”

“சரிங்க சார்.” என்ற மகிழினி தன் தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி தந்தாள்.

அந்த எண்ணை வாசித்தவன்,”என்னங்க இது செல் நம்பர் மாதிரி இல்லையே?” என்று கொடி கேட்டான்.

“என்கிட்ட செல் போன் இல்ல. இது என்னோட கேட்டரிங்ல இருக்குற லேண்ட் லைன் நம்பர். உங்க சைடுல இருந்து இந்த நம்பருக்கே கால் பண்ணி சொல்லுங்க” என்றாள்.

“சரிங்க” என்று கொடி சொன்னதும்…

“ரொம்ப நன்றிங்க” என்று சொன்னவள் உடனே தன் காது மெஷின்னை கழட்டி பையில் வைத்தப்படி அங்கிருந்து சென்று விட, கொடிக்கோ மகிழினியின் செயல்கள் அனைத்துமே இவன் பார்வைக்கு புதிதாகவும்… திமிராகவும்… குழப்பமாகவும் தெரிந்தது.

நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்து செல்ல, அன்றைய தினம் ஞாயிற்று கிழமை. கொடியின் ஆபீஸ் விடுமுறை என்பதால், அவன் சற்று தாமதமாக கீழே இறங்கி வர, வீட்டு வாசலில் நின்று கொண்டு சுரேஷ் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தவன் கொடியை பார்த்து கையசைத்தான்.

“எப்போ மச்சான் வந்த?”

“நேத்தே வர வேண்டியதுடா. வீட்டுல அவளுக்குக் கொஞ்சம் முடியல. அதான்” என்று தன் நிலைமையை சொன்னவனின் தோளில் தட்டி கொடுத்த கொடி, “சிஸ்டர்க்கு இப்போ எப்படி இருக்கு” என்று அன்பாக கேட்டான்.

“ஆங். அவ இப்போ ஓகே தான். சரி நீ போய் டிபன் சாப்பிடு” என்று சொன்ன சுரேஷ் மீண்டும் வாசலை நோக்கி சென்றான்.

“ஏன் நீ எங்க போற?” என்று வினாவினான் கொடி.

“இன்னைக்கு என் தங்கச்சியை பொண்ணு பார்க்க வராங்கடா. அதான் நான் அவங்களுக்காக காத்து இருக்கேன்” என்று சிரித்த முகத்துடன் சொன்னான் சுரேஷ்.

“ஓ சரிடா. அப்போ பொண்ணு பார்க்கிற பார்மாலிட்டி முடியட்டும்… நம்ம அப்புறமா சேர்ந்தே சாப்பிடலாம்” என்று கொடி சொன்ன நேரம் புரோக்கருடன் காரில் வந்த ரெண்டு பெண்களும்… நடு வயதை எட்டிய தம்பத்தியனரையும் சுரேஷ் வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டாங்கடா. டேய்! வேணு பாட்டிகிட்ட போய் அவங்க எல்லாம் வந்துட்டாங்கன்னு சொல்லு போ” என்று மகனை விரட்டிய சுரேஷ், வந்தவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து போக, கொடியும் அவர்களை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.

“வாங்க” என்று பாட்டி அனைவரையும் வரவேற்க, புரோக்கர் பாட்டியை பார்த்து வணக்கம் வைத்தார்.

“எப்படி இருக்கீங்க?”

“நலம் தான்மா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்ரா பாப்பா எப்படி இருக்கு?” என்று பதிலுக்கு நலம் விசாரித்தார் புரோக்கர்.

“ம் இருக்கா. ஆமா. மாப்பிள்ளை வரலையா?” எனக் கேட்டார்.

“இவங்க எல்லாம் மாப்பிள்ளையோட குடும்பம்… இவங்க பொண்ணை பார்த்துட்டு போய் சரின்னு சொல்லிட்டா அப்புறமா மாப்பிள்ளை தம்பி வந்து பாப்பாரு.”

“அது எப்படிங்க?” என்றான் சுரேஷ்.

“எப்படின்னா? இது என்ன கேள்வி? எங்க குடும்பத்துல எதுவா இருந்தாலும் நாங்க பார்த்து சரி சொன்னா போதும்… எங்க வீட்டு பையன் அதுக்கு கட்டுப்படுவான்.” என்றனர் மாப்பிள்ளை வீட்டினர்.

“அது இல்லிங்க”

“சுரேஷ் நீ சும்மா இருக்கியா?”

“பாட்டி நான் என்ன சொல்ல வர்றேன்னா”

“நீ ஏதும் சொல்ல வேணாம்… வேணு நீ போய் உன் அத்தையை அழைச்சிட்டு வா.” என்று பேரனை அனுப்பினார்.

“என்ன மச்சான் இது. மாப்பிள்ளையே இல்லாம இவங்க மட்டும் வந்து பொண்ணை பார்த்து என்ன பண்ண போறாங்க?” என்று கொடிவீரன் கேட்க,

“நம்ம சொன்னா இந்த கிழவி நம்மள மதிக்கவா போகுது. இரு என்ன நடக்குதுன்னு பாப்போம்…” என்றான் சுரேஷ்.

வேணு மகிழினி அறைக்குள் சென்றவன் போன வேகத்திலேயே வெளியே ஓடிவர,”என்ன டா. எங்க உன் அத்தை ?” என்று கேட்டார் பாட்டி.

“அத்தை  ரூம்ல இல்ல பாட்டி.”

“என்ன ரூம்ல இல்லையா. ஒருவேள மாடியில இருக்காளா?”

“அங்க இல்ல பாட்டி. நான் மாடியில இருந்து தானே வரேன். அவங்க அங்க இல்ல.” என்றான் கொடி.

“இன்னைக்கு இப்படி ஒரு விஷேசம் நடக்க போகுதுன்னு சித்ராவுக்கு தெரியும் தானே?” என்று கேட்டார் புரோக்கர்.

“அது” என்று பாட்டி ஏதோ சொல்ல வருவதற்குள், கையில் புதிதாக இரண்டு மல்லி பூ செடிகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோவில் வந்து இறங்கிய மகிழினியை பார்த்து கோவம் கொண்டார் பாட்டி.

“என்னமா நீ. எங்க போன? மறுபடியும் எதுக்கு பூ செடியா வாங்கி அடுக்குற. சரி சரி வா. வந்து வந்தவங்களுக்கு எல்லாம் காபி கொடு” என்று பாட்டி சொல்ல,  மகிழினி தன் கையில் இருந்த மல்லி பூச்செடியை அலுங்காமல் மேசை மேல் வைத்தவள் தன் பையில் இருந்து இயர் மெஷின்னை எடுத்து காதில் மாட்டினாள்.

“என்ன புரோக்கரே பொண்ணு விதவைன்னு தானே சொன்னிங்க. ஆனா, இவங்களுக்கு காதும் கேக்காது போல?” வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி கேட்க,

“அது வந்துமா இவங்களுக்கு நடந்த விபத்துல தான் இவங்க முதல் புருஷன் இறந்து” என்று புரோக்கர் மகிழினியை பற்றிய விவரத்தை சொல்லும் முன்பு,

“மன்னிக்கணும் எனக்கு சம்மந்தம் இல்லாத ஆளுங்க என்னை பற்றிய விவரத்தை தெரிஞ்சிக்க நான் விரும்ப மாட்டேன்” என்று மகிழினி தெளிவாக பேசும் குரலை கேட்டு கொடி அவளை வினோதமாகப் பார்த்தான்.

“நாங்க என் தம்பிக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்கோம்மா. எங்கள போய் சம்மந்தம் இல்லாத ஆளுங்கன்னு சொல்லுற?”

“மறுபடியும் மன்னிக்கணும்… எனக்கு இந்த நிகழ்வுல சம்மந்தம் இல்ல. அதனால  நீங்க கிளம்பலாம்” என்றாள் அழுத்தமாக.

“சித்ரா” என்றார் புரோக்கர்.

“வாங்க. நல்லா இருக்கிங்களா?” என்று அவரை நலம் விசாரித்தாள்.

“என்னமா நீ. உனக்கு மறுபடியும் ஒரு நல்லது நடக்கணும்னு தானே நாங்க ஆசைப்படுறோம்… நீ இப்படிப் பேசினா எப்படிமா?”

அவர் சொல்லுவதைக் காதில் வாங்காது,”டீ காபி எதாவது கொண்டு வரவா?” என்றாள்.

பாட்டி,”சித்ரா” என்று அதைட்ட,

“வேணு அத்தைக் கூட மாடிக்கு வரியா?” என்று மருமகனைக் கேட்க, அவன் சம்மதமாகத் தலையசைத்ததும்…

“பாப்பா பாட்டி சொல்றத கேளுடா.” என்றான் சுரேஷ்.

“எப்போ வந்திங்க நீங்க. அண்ணி பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று அண்ணனிடம் சம்பந்தம் இல்லாது நலம் விசாரிக்க, அண்ணன் அவனோ பே என விழித்தான்.

“சித்ரா என் கோவத்தை அதிகமாக்கி பாக்காத” என்று பாட்டி சொல்ல,

“வேணு நீ வா நம்ம மாடிக்கு போகலாம்…” என்று சொன்ன மகிழினி. தன் காது மெஷினைக் கழட்டி பையில் வைத்தவள், மேசை மேல் இருந்த பூச்செடிகளை எடுத்துக்கொண்டு   மாடிக்கு போக வேணுவும் தன் அத்தையுடன் சென்றான்.

“இன்னும் எதுக்கு இங்க நின்னுகிட்டு. வாங்க போகலாம்… யோவ் புரோக்கரே எங்கள அழைச்சிட்டு வரதுக்கு முன்னாடி, பொண்ணுக்கு மறுமணத்துல சம்மதமான்னு எல்லாம் விசாரிக்க மாட்டியா? ஆளையும் அவனையும் பாரு. எல்லாம் வாங்க போகலாம்” என்று கத்திய நபர் அவருடன் வந்த அனைவரையும் அழைத்து கொண்டு மகிழினியின் வீட்டில் இருந்து வெளியேறினார்.

 பாட்டி கோவமாக அருகில் இருந்த காபி கப்பை தள்ளி விட்டவர், அவரின் அறைக்கு செல்ல, சுரேஷ் கண்கள் கலங்கிய நிலையில் அந்த இடத்தை சுத்தம் செய்ததைப் பார்த்து கொடி மனம் வருந்தினான்.

“என்னடா ஏன் கண் கலங்குற?”

“என்னனு சொல்றது? எல்லாம் என் தங்கச்சி தலையெழுத்து. சரி நீ உக்காரு நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.” என்றான் சுரேஷ்.

“இல்ல மச்சான். நீ வா நம்ம வெளிய எங்காவது போயிட்டு வரலாம்…”

“ம் இரு நான் மாடிக்கு போய் பாப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்.” என்று சுரேஷ் மாடிக்குச் செல்ல, கொடியும் பின் தொடர்ந்தான்.

மகிழினி, வேணுவுடன் மீண்டும் அதே பூ செடிகளின் நடுவில் நின்றுக்கொண்டு இருந்தாள்.

“வேணு” என்று சுரேஷ் மகனை அழைக்க,

“என்ன?” எனக் கேட்டான் அவன்.

“நீ கீழே போ. நான் உன் அத்தைக்கிட்ட பேசணும்…”

“அதெல்லாம் முடியாது. எதுவா இருந்தாலும் என் எதிர்ல பேசுங்க.”

“ஷப்பா சரி. நீ போய் அவளோட காது மெஷின்னை எடுத்துட்டு வா.

“நீங்க தூரமா நின்னு பேசுனா தான் என் அத்தை  காதுல விழாது. இவ்ளோ கிட்ட தானே நிக்குறிங்க. பேசுங்க. அதெல்லாம் கேக்கும்” என்றான் அங்கிருந்து நகராது.

“புள்ளையாடா நீ?” மகனின் மேல் எரிந்து விழ,

“என்னை பெத்த உங்களுக்கு தெரியாதா?” என்றான் பதிலுக்கு.

மகனை முறைத்து தங்கையிடம் திரும்பி,”பாப்பா” என்றான்.

மகிழினி. தன் அண்ணனை பார்த்து கடமைக்கென்று சிரித்தாள்.

“ஏன்மா இப்படி பண்ணுற? உன் நல்லதுக்கு தானே அண்ணன் சொல்லுறேன். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போற? உனக்குன்னு ஒரு வாழ்கை வேணாமா?

“அண்ணா அண்ணிக்கு வாழைக்காய் மண்டி பண்ணி வச்சிருக்கேன். போகும் போது எடுத்துட்டு போ.”

“நான் என்ன பேசுறேன். நீ என்ன சொல்ற?”

“அவங்களுக்கு டெலிவரி டேட் எப்போ? பாவம் ரெண்டு பிள்ளைங்க வேற. அவங்கள நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.” என்றாள் தன் பாவத்தில் இருந்து மாறாது.

“பாப்பா” என்றவன் குரல் கெஞ்சலாக வந்தது.

“வேணும்னா மீதம் இருக்குற ரெண்டு பிள்ளைங்களை கூட இங்க அழைச்சிட்டு வந்து விடு. நான் பாத்துக்குறேன்.”

“ஏன்மா என்னை உயிரோட சாகடிக்கிற.”

“சரி அண்ணா. நான் பிரீயா இருக்குறதே இன்னைக்கு ஒரு நாள் தான். சோ நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று மகிழினி கீழே இறங்கி செல்ல முயல,

அவளை தடுத்த சுரேஷ், “நில்லு பாப்பா. இன்னும் எத்தனை நாளுக்கு தான் இறந்தவனை நினைத்து, நீ இப்படி உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்க போற? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.” என்று சுரேஷ் கோவமாகக் கத்தினான்.

சட்டென கண்கள் சிவந்து. ஆக்ரோஷமாக தன் ஆள் காட்டி விரலால் சுரேஷை கண்டிக்கும் விதமாக, “என் வீரா சாகல. இந்த செடியில பூக்குற ஒவ்வொரு மலரிலும் அவர் என்கூட தான் வாழ்ந்துகிட்டு இருக்காரு. இனி ஒரு முறை எனக்கு மறுமணம் பண்ணி வைக்கிறேன்னு கேனத்தனமா எதாவது பண்ணீங்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கோவமாக எச்சரித்தாள்.

 அந்நிலையில் மகிழினியை பார்த்த கொடி இரண்டடி தள்ளி நிற்க, சுரேஷ் கண்களில் கண்ணீர் ததும்ப, மகிழினி யாரையும் பொறுப்படுத்தாமல் தன் அறைக்குள் சென்று, அவளுடைய கணவன் புகைப்படத்தை எடுத்து தன் இதயத்தோடு இணைத்துக் கொண்டாள்.

“உடலால் உங்க கூட வாழ எனக்குக் கொடுத்து வைக்கல. ஆனா,, உணர்வால் நான் உங்க கூட வாழ ஆசைப்படுறேன். இதை ஏன் இவங்க புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. மறுமணம் பண்ணிக்கோ, மறுமணம் பண்ணிக்கோனா, எப்படி வீரா என்னால உங்களை மறந்து வேற ஒரு ஆணை நினைக்க முடியும்? அப்படி பண்ணா நான் உங்க மீது கொண்ட காதலுக்கும்… நீங்க என் மீது கொண்ட அன்புக்கும் துரோகம் பண்ணது போல இருக்காதா?”

“சாகும் தருவாயில் நீங்க என்னை பார்த்து, ஐ லவ் யூ மகிழ்னு சொன்ன வார்த்தை தான் என் செவியில் இன்று வரை ஒலிக்கிறது. அந்த வார்த்தையை தவிர, வேற எந்த அனாவசியமான சொற்களும் என் காதில் விழக்கூடாதுன்னு தான், நான் காது கேக்கும் கருவியை கூட உபயோக படுத்துவதில்லை. எனக்கு உங்களோட இந்த புகைப்படமும்… நான் உங்கள் மீது கொண்ட காதலும் மட்டும் என்னை விட்டு அழியாமல் இருந்தால் போதும் வீரா. I💙U வீரா” என்று மனமுறுகி சொன்னாள்.

 தன் காதல் கணவனை இன்றளவும் நேசிக்கும் மகிழினியின் வாழ்க்கையில், இவள் காதலுக்கு சமமா,க ஒருவன் தன் காதலை இவளுக்கு பரிசளிக்க காத்து இருக்கிறான் என்பதை வருங்காலமே உணர்த்தும்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!