Stories that touch hearts

Home  /  15. யாத்ரிகா (ஆதவனின் வெண்பனி)  /  Chapter 3

CHAPTER 3

வெண்பனி – 3

By Yathriga · October 19, 2026

0

யாரைக் கேட்கனும்

தன் அருகில் அமர்ந்திருந்த வெண்பனியை பார்த்த ஆதவனின் புருவங்கள் இடுங்கியது கோபமாக அவளைப் பார்த்தான்.

“என்னடா எதுக்கு இப்ப நம்மளை இப்படி முறைக்கிறான்?” என்று நினைத்தவள் ,வேகமாக தமையந்தியின் புறம் திரும்பி,“ இல்ல அதெல்லாம் வேண்டாம் மேடம், இதுக்கு வேற வழி இல்லையா?” என்று கேட்க,

“ இங்க பாருமா உனக்கும் ஒரு பாதுகாப்பு இருந்தால்தான் திரும்பவும் ,உன்னோட புருஷன்.” என்று அவள் சொல்ல வர,“ ஐயோ போதும் மேடம், அப்படி சொல்லாதீங்க எனக்கு அப்படியே அருவருப்பா இருக்கு, அவன் எல்லாம் எக்ஸ்ன் கூட சொல்றதுக்கு பிடிக்கல” என்று சொல்ல, சட்டென ஆதவனும் தமயந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவன் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு என்ன வார்த்தைகளை பயன்படுத்தினானோ, அதே வார்த்தைகளை அவளும் கூறினாள்.தமயந்தி இதழில் ஒரு மென் சிரிப்பு வந்து போக கடுப்புடன் அவளை முறைத்தான் ஆதவன்,“ பாத்தியா எண்ண ஓட்டம் கூட ஒரே மாதிரி இருக்கு” என்று  சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.‘போதும் நிறுத்து என்பதைப் போல் பார்த்தான் அவன்,

பின்னர் மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, வெண்பனியன் பக்கம் பார்வையை திருப்ப, இங்க பாருமா உன்னுடைய நல்லதுக்கும் சேர்த்து தான் சொல்றேன், ஃபியூச்சர்ல இப்ப இருக்கிற சிச்சுவேஷன்ல உனக்கும் ஒரு லைஃப் பார்ட்னர் வேணும்” என்று சொல்ல,அவள் எதோ சொல்ல வரும் முன், “இரு நான் பேசிடுறேன்” என்று மறுத்துக் கூறிய தமயந்தி,

“எல்லாத்துக்கும் மேல ,உன் பிள்ளைக்கு அப்பா வேண்டும், இப்ப இருக்குற பிள்ளைகளுக்கு அப்பாவுடைய கண்டிப்பு இருந்தால்தான் பிள்ளைகள் சரிப்படுவாங்க, ஃபர்ஸ்ட் நீ அது புரிஞ்சிக்க” என்று கூறினாள்.

பின்னர் ஏதேதோ சொல்லி அவளையும் ஆதவனை எப்படி சம்மதிக்க வைத்தாளோ, அதேபோல் சம்மதிக்க வைத்து விட்டாள் தமயந்தி.வெண்பனி குழப்பத்துடனே அமர்ந்திருந்தாள், சரி உங்க ரெண்டு பேர் பேரன்ட்ஸ் கிட்டயும் வேணும்னா பேசிடலாம் என்று சொல்ல, அதையும் தமயந்தியே ஏற்பாடு செய்தாள்.ஆனால் கடைசியில் அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால், திருமணத்திற்கு வர முடியாமல் போனது,  அந்த வாரம் கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது ஆதவனுக்கு, அதற்க்காகத்தான் அவசரமாக அந்த திருமணத்தை முடித்தார்கள்,

குழந்தை ஒரு நல்ல குடும்ப சூழ்நிலையில் தான் வளர்கிறது என்று சொல்வதற்கு.. இருவருக்குமே மற்றவர் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லை, தப்பி தவறி கூட மீண்டும் அந்த திருமண வாழ்க்கைக்குள் அந்த திருமணம் என்ற பந்தத்திற்குள் அவர்கள் இணைய விரும்பவே இல்லை..கணவன் மனைவி என்ற பொறுப்புக்கு உண்மையாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் தந்தை தாய் என்ற பொறுப்பில் உறுதியாக உண்மையாக இருக்க வேண்டும் என்று இருவருமே மனதார முடிவு எடுத்துக் கொண்டார்கள்.

அது இருவர் மனம் மட்டுமே அறியும், அதனால் தான் ஆதவன் வெண்பனியின் குழந்தையை இயல்பாக, “அப்பாடா..” என்று தூக்கி கொஞ்ச,  வெண்பனியும் அதுல்யாவை தன் மகளாகவே பாவித்தாள்.இதையெல்லாம் இருவரும் நினைத்தபடி படுத்திருந்தனர்,

கொஞ்சம் கூட அவளிடம் இலகுத்தன்மை காட்டி விடக்கூடாது என்று அவனும்,இவன் ஏன் இப்படி இருக்கிறான், நான் என்ன அவனுடைய சொத்தையா கேட்கிறேன், சாதாரணமாக ஒரே வீட்டில் இருக்கிறோம், சாதாரணமாக பேசினால் என்ன, எப்போதும் இப்படியே உர்றென்று சுத்தவா முடியும், தனக்கும்தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லை,ஒரு ஆபீசில் வேலை செய்வது போல அல்லது வீட்டில் அம்மாவாக வேலை செய்வதற்காக கூட நினைத்துக் கொள்ளட்டுமே என்று மனதில் நினைத்தாள், எப்படியாவது இந்த கடுமையான சொற்களை மீண்டும் தன்னால் தாங்க முடியாது, மனதில் அந்த அளவிற்கு திடமில்லை,இதைப் பற்றி அவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று அழுகையினூடே நினைத்தவளுக்கு, மனதில் ஒரு தெளிவு பிறந்தவுடன் நிம்மதியாக படுக்க சென்றாள்.

அடுத்த நாள் ஆதவன் எழும்பொழுது அங்கு வெண்பனி இல்லை, என்ன சீக்கிரமா எழுந்துட்டாளா? நைட் கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ, அழுதாளா? என்று நினைத்தபடியே நேரத்தை பார்த்தான்.மணி 5, அதுக்கு முன்னாடி எழுந்துட்டு இருக்கா, அவன் உடற்பயிற்சிக்காக எழும்புவான் காலையில், “இவ..” என்று நினைத்தவன் குளித்து வர குளியலறைக்கு சென்றான்.அவன் செல்ல ,அவள் தலை குளித்துவிட்டு தலையில் துண்டுடன் வேகமாக வெளியே வரவும், ஈர கால்களுடன் வேறு வந்திருந்தாள்,

இப்படி தீடிரென  அவன் எழுந்து வருவான் என்று தெரியாததால், அவள் குளியலறை கதவை திறக்கவும் அவன் வரவும் சரியாக இருக்க, அவன் மேலே மோதி கீழே விழப் போனாள், கால் வேறு வழுக்கி விட்டதால் நிலையில்லாமல் அவள் விழப்போக, சட்டென அவளைப் பற்றிப் பிடித்துக் கொண்டான்.

அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்த அவளின் குளியல் வாசமும், கள்ளம் கபடம் இல்லாத அவளின் மதிமுகமும் ஆங்காங்கே ஒட்டி இருந்த சில நீர் மணித்துளிகள் வேறு ரோஜாவின் மீது இருந்த பனித்துளி போல் தான் அவன் கண்களுக்கு தெரிந்தது.அதிர்ச்சியுடன் அவன் பார்க்க அவளும் அதிர்ச்சியுடனே நின்றிருந்தாள்,

இதையும் வேணும்னே பண்ணனு சொல்ல போறாரு என்று அவள் மிரட்ச்சியுடன் நிற்க,அவள் கண்களில் என்ன கண்டானோ, “பார்த்து வர மாட்டியா” என்று கேட்டுவிட்டு, அவளைத் தாண்டி சென்றான் .‘அப்பாடா காலையிலேயே ஏழரை கூட்டல’ என்று மனதில் நினைத்தவள், இவர் எதுக்கு எழுந்தாரு என்று மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள்.

அவளுக்கும் காலையில் தியானம் மூச்சுப் பயிற்சி, சாமி கும்பிடுவது இதையெல்லாம் செய்துவிட்டு தான் வேலையை துவங்குவாள், அதற்காகவே இவ்வளவு சீக்கிரம் எழுந்தாள்.

அவள் மூச்சுப் பயிற்சி யோகா எல்லாம் செய்து முடித்துவிட்டு அவளின் காலை வேலைகளை தொடங்கியிருந்தாள், அவனும் உடற்பயிற்சி எல்லாம் முடித்துவிட்டு வேர்வை சொட்ட துடைத்தபடியே வந்தான் அவன்.அவன் வெளியே  கார்டனுக்கு சென்றதையெல்லாம் அவள் பார்க்கவில்லை. 

அவனுக்காக ஒரு  எக்ஸ்சசைஸ் ரூம் உடற்பயிற்சி கூடம் போல கட்டி இருந்தான் , அவன் மன களைப்பு, உடல்களைப்பும்  தீர அங்கு வந்து எக்சர்சைஸ் செய்வான்.இவள் தியானத்திலிருந்து  இன்னொரு பக்கம் வர,அவன் வரும் நேரம் இவள் கிச்சனிற்குள் நுழைந்து விட்டாள், அதனால் பார்க்கவில்லை ,உடற்பயிற்சி செய்து வியர்க விறுவிறுத்து உள்ளே வந்தவனை, அவள் கவனிக்கவில்லை.

அவன் துண்டால்  துடைத்தபடியே உள்ளே வர ,அவள் பாலை ஆற்றிவிட்டு பிளாஸ்க்கில் ஊற்றி எடுத்துக்கொண்டு வேகமாக வந்தாள், அதே நேரம் அதுல்யாவும், “அம்மா” என்று கண்களை கசக்கி கொண்டே வர,“ இதோ வரேன் செல்லம்” என்று பேசிக்கொண்டே திரும்பி அவள் எதிரில் வந்த, ஆதவனை பார்க்கவில்லை, அவனும் அவளை கவனிக்கவில்லை மீண்டும் மோதல் தான், மீண்டும் விழப்போனவளை, அவன் தான் பிடித்திருந்தான் ,இப்போது அவனின் வெற்று மார்பில் அவனின் கரங்கள் இருக்க அதிர்ந்து தான் போனாள் பெண்ணவள்.ஃபிளாஸ்க்கு கீழே விழுந்து இருந்தது, மூடி டைட்டாக போட்டு இருந்ததால் பால் சிதறவில்லை..

அவன் அப்படியே தான் சிலை போல் நின்று இருக்க, அவள்தான் பயத்தில் அவனைப் பிடித்திருந்தாள்,அவனிடம் வந்த அவன் வியர்வை வாசம், அவன் நெருக்கம் என்று பதறிப் போய் நின்றவள், தொண்டையை செருமிக் கொண்டு சட்டென விலகி நின்றாள்.

ஏற்கனவே தன்னை தாறுமாறாய் பேசுகிறான், இன்னுமா..” என்று நினைக்க அவனும் முகத்தில் இருந்த உணர்வையும் காட்டாமல் பார்த்தான்.அதுல்யா, “அம்மா விழுந்துட்டீங்களா அடிபட்டுருச்சா?” என்று கேட்கவும்..இல்லடா கண்ணா” என்றவள் ‘ஐயோ காலையில இருந்து அவன் வாய மூடிக்கிட்டு இருக்குது அதிசயம், இதில் ஏன் இப்படி எல்லாம் நடக்குது’ என்று பதற்றத்துடன் நினைத்தபடி,“ என்னாச்சுடா, வா தம்பியை போய் பார்ப்போமா” என்று கேட்க,“

தம்பி அழறான், அதான் கூப்பிட வந்தேன்” என்று சொல்ல,“ சத்தம் கேட்டுச்சுடா.. அதான் வந்தேன்” என்றவள் கீழே விழுந்திருந்த பாலையும் எடுத்துக்கொண்டு, “சாரி” என்று அவனை பார்க்காமலே சொல்லிவிட்டு குழந்தைகள் இருந்த அறைக்குள் மறைந்தாள்.

அவன் போகும் அவளையே ஒரு கணம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், ஒரு ஆழப் பெருமூச்செரிந்தவன், தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்.அவன் குளித்து தயாராகி வெளியே வந்த சமயம், ஹாலே  கமகம என்று இருந்தது.அதுவும் சாம்பிராணி மனம் அப்படியே ஒரு தெய்வீக சூழ்நிலைபோல இருந்தது வீடு, அதுவும் அல்லாமல் கிச்சனிலிருந்து வந்ததுதான் கம கம வாசனை, டிபன் எல்லாம் பிரமாதமாய் இருந்தது.

ஆனாலும் அவன் மனதில் சில எண்ணங்கள் வந்து போக, எவ்வளவு நாளைக்கு நான் பார்க்கிறேன், புதுத்துடைப்பம் வீட்டை நல்லா கூட்டுமாம் என்று நினைத்துக் கொண்டு டைனிங் டேபிள் வந்து அமர்ந்தான். அவளும் தயாராக இருந்தாள் அவன் புருவ முடிச்சுடன் அவளைப் பார்த்தான்,

“எங்க கிளம்பிட்டா?” என்று கேட்டான் , “அவள் ஆபீஸ்க்கு” என்று சொன்னாள் அவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு,“ஆபீஸ்க்கா, அப்போ குழந்தைகளை யார் பார்த்துக்குறது?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.

“இதற்கு முன்னாடி யார் பார்த்துக்கிட்டார்களோ அவங்க தான் பாத்துக்கணும், அதுவும் இல்லாம ஹர்ஷனை நான் மோஸ்ட்லி டேக்கேர்ல தான் விடுவேன், அதுவும் இல்லாம சம்டைம்ஸ் நான் ஆபீஸ்க்கு தூக்கிட்டு போயிடுவேன்,அதுல்யாவுக்கு  5 இயர்ஸ் ஆகுது இல்ல,  ஸ்கூல்ல சேர்க்கலாமே ,நான் குழந்தைகளுக்காக தான் ஆஃப்டே ஆபீஸ் போயிட்டு ,ஆஃப்டே ஒர்க் ப்ரம் ஹோம் மாத்தி இருக்கேன்” என்று அவள் முடிந்தவரை அவனை திருப்திப்படுத்தும் அளவிற்கு பதிலை சொல்ல முயல, அவனோ மூர்க்கமாக அந்த டேபிளை தட்டி எழுந்தான்.

அவன் தட்டியதில் அங்கே இருந்த சட்னி சாம்பார் எல்லாம் கீழே ஊற்றியது. அவனது கோபத்தை பார்த்து உள்ளே இருந்து பதறியபடி வந்தார் அவனின் அம்மா தேவகி.“ யாரு கேட்டு, நீ வேலைக்கு போறதா முடிவு பண்ணுன.. !”என்று அவன் கேட்க,

அவளோ நடுங்கும் குரலில் தான், இருந்தாலும் தைரியமாக பேசினாள், இதற்கு மேல் அவளால் பொறுத்து பொறுத்து அமைதியாக இருக்க முடியவில்லை, நெஞ்சுக்குள் அழுத்திக் கொண்டிருக்கும் அழுத்தத்தை எல்லாம் வெளிப்படுத்தவே விரும்பினாள்.கடந்த முறை அவள் சென்ற டிப்ரஷன் அளவை அவளால் வார்த்தைகளால் சொல்ல இயலாது, அது அவள் பிரக்னன்சியிலேயே எவ்வளவு பாதித்தது ,அதனால் அவளும் பதிலுக்கு பேசத்தான் செய்தாள்.

“என்னது, யாரை கேட்கணும்?” என்றாள் அவள். ஏய்.. என்று அவன் கத்தஇவர்கள்  இப்படி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, அதுல்யா அதிர்ந்து போய் பார்த்தாள்.ஏற்கனவே இதையெல்லாம் அவள் பார்த்து இருக்கிறாளே, அதனால் அவள் பயத்துடன் நிற்க, இருவரின் கவனம் குழந்தையிடம் சென்றது.“அது வந்து, தவறி கீழே விழுந்துச்சுடா..” என்று வேகமாக குழந்தையின் அருகே செல்ல போக,அவளோ பயந்து வெண் பனியின் பின்னால் நின்றாள்,

தன்னையே கடிந்து கொண்டவன் ஒரு கணம்  பெருமூச்செரிந்து,“ சரிடா அழாதடா, அப்பா இனிமே அப்படி பண்ண மாட்டேன் டா, சாரிடா என்று சொல்லவும்,“ அப்பா எனக்கு பயமா இருக்கு, அந்த மாதிரி பண்ணாதீங்க” என்று அழும் குரலில் கூறவும், சட்டென மகளை அணைத்துக் கொண்டவன், நெற்றியில் முத்தமிட்டான்.அதுல்யா, “அப்போ மம்மி கூட பழம் விடுங்க” என்று கூற நிமிர்ந்து அவளை பார்த்தான், ஆனால் முகத்தில் கோப உணர்ச்சிகளை மறந்தும் கூட காட்டவில்லை..

“உன் கூட கொஞ்சம் பேசணும், கொஞ்சம் உள்ளவா..” என்று சொல்லிவிட்டு, அவன் முன்னே நடக்க,“ ஐயோ என்ன சொல்ல போறானோ, ஆனா வேலையை விடுவதெல்லாம் இனி வாய்ப்பே இல்லை..” என்று மனதில் நினைத்தபடி அவளும் அவனைப் பின் தொடர்ந்தாள்.அவள் உள்ளே வந்ததும், “டோர் க்ளோஸ் பண்ணு” என்று சொன்னவன் திரும்ப  குழந்தை இடமிருந்த கனிவு இப்போது இல்லை முற்றிலும், சுட்டெறிக்கு பகலவனாகவே மாறி இருந்தான் இந்த ஆதவன்.அதில் உருகிடுமோ இந்த வெண்பனி.

தொடரும்..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!