Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 32

CHAPTER 32

முல்லை – 32

By Roja Roslin · October 29, 2026

0

“அதானே. ஏன் ரோஜா. கதிருக்கு ஏற்பட்ட காயத்துக்கு என்னமோ உனக்கு மட்டும் தான் கவலை இருக்குற மாதிரி நீ மட்டும் அவரை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய் இருக்கியே. ஏன். நான் கட்டிக்க போற கதிருக்காக நான் அவர்க்கூட போகணும்னு எனக்கு ஆசை இருக்காதா” என்று தனா கேட்க.

“அதானே. ஏன் டி ரோஜா. கதிருக்காக நீ இந்த அண்ணியை. மன்னிச்சிடுங்க. அதான் சரஸ்வதி அண்ணியோட பொண்ணு தனாவை அழைச்சிட்டு போகலைனா கூட பரவாயில்ல. ஆனா ஏன் டி இந்த முல்லையை அழைச்சிட்டு போன” என்று கடுப்பாக கேட்டார் கஸ்தூரி.

ரோஜாவை குற்றவாளியை போல பாவித்து அனைவரும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க.“போதும். கொஞ்சம் எல்லோரும் நிறுத்துறிங்களா. நாங்க என்ன சினிமாவுக்கா போய்ட்டு வந்து இருக்கோம். என்னமோ ஆளாளுக்கு கேள்வி கேக்குறிங்க. என் கையில ரத்தத்தை பார்த்ததும் ரவா லட்டும், அம்மாவும் பதறிப்போய் முருகன் மாமா காருல என்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனாங்க. இப்போ என்ன அதுக்கு” என்று கதிர்வேலன் சற்று கோவமாக கத்தியதும் அனைவரும் சட்டென்று வாயை மூடிகொண்டார்கள்.

“இல்ல கதிர். என்னை கூப்பிட்டு இருந்தால் நான் வந்து இருப்பேனே” என்ற தனா அங்கிருந்த முல்லையை முறைத்து பார்க்க.

“ஏன். நீ வந்தா ஹாஸ்பிடல்ல எனக்கு இலவச மருத்துவம் பார்க்க போறாங்களா” என்று கேட்டான் கதிர்வேலன்.

“எதை பேசினாலும் எடக்கு மடக்காக பேசும் கதிர்வேலனை, “கதிர். கொஞ்சம் பொறுமையா பேசு.“ என்று பாண்டியன் சத்தம் போட,

“சரி சரி. அதான் ரோஜாவும் கதிரும் வந்துட்டாங்களே. சட்டுனு அப்போ நிச்சியத்தை முடிச்சிடலாமே” என்றார் சரஸ்வதி.

“என்ன. நிச்சியமா. அட அதான் நல்ல நேரம் முடிஞ்சு போச்சே. இனி எங்க இருந்து நிச்சயத்தை நடத்த.“ என்று கஸ்தூரி கேட்க.

“அப்போ நேரா நம்ம கல்யாண தேதியை குறிச்சிடலாம்” என்றார் சரஸ்வதி.

“ஆமா ஆமா. அப்போ நேரடியா பசங்களுக்கு கல்யாணமே பண்ணிடலாம்” என்று பாண்டியனும் சொல்ல. இதை சற்று எதிர்பார்க்காத ரோஜாவுக்கு கடுப்பாக இருந்தது.

கதிருக்கு நிச்சயம் நடக்க போகிறது என்ற செய்தியே முல்லைக்கு ஒரு வித அழுத்தத்தை கொடுத்து இருக்க. இப்போது அவனின் திருமண செய்தி அதை விட பெரிய அளவில் மனக்கவலையை அளித்தது.

“அண்ணா. நேத்தே நம்ம வீட்டுல நான் நல்ல நாளை பார்த்துட்டேன், வர புதன் கிழமை 5 ல இருந்து 6am அருமையான முகூர்த்த நாள். அப்போவே நம்ம கல்யாணத்தை வச்சிடலாம்” என்று சரஸ்வதி சொல்ல.

“என்ன நீங்க. நடுவுல ரெண்டு நாள் கூட இல்ல. அதுக்குள்ள கல்யாணமா” என்று கேட்டார் கஸ்தூரி.

நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறதே என்ற யோசனையில் ரோஜா நின்று இருக்க.

முல்லையின் முகத்தை பார்த்த முருகனுக்கு தன் மகளின் மனதில் நினைத்து இருந்த மணமகனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கதான் செய்தது.

அதுவும் இல்லாமல். ஆரம்பித்தில் முல்லை மனதில் மட்டும் தான் கதிர் வேலன் இருந்தார் என்று நினைத்தவருக்கு.

கதிர்வேலனுக்கும் முல்லையை பிடிக்கும் என்ற உண்மை அங்கே தெரியாமல் போனது.

இப்படி ஒருவர் மனதில் ஒருவர் இருப்பதை யாரும் வெளிப்படையாக பேசிடாத பட்சத்தில்.

“சரி மா சரசு. நீ சொன்னது போலவே வர புதன் கிழமை நம்ம பசங்களுக்கு கல்யாணத்தை நடத்திடலாம்” என்ற பாண்டியனின் வார்த்தையைக் கேட்டு கதிர்வேலனின் பார்வை முல்லையை தேட. அவளோ அதற்குள் கடவுளின் சன்னிதானத்தில் சென்று இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன அண்ணா நீங்க. இவங்கதான் புரியாமல் பேசுறாங்கன்னா இன்னும் ரெண்டு நாள்ல நீங்களும் கல்யாண ஏற்பாடு பண்றீங்களே. இந்த ஊர்ல நீங்க எவ்வளவு பெரிய ஆளு, ரெண்டு நாள்ல பத்திரிக்கை அடிச்சு எப்படி நம்ம சொந்தபந்தங்களை கூப்பிடுறது” என்று கஸ்தூரி கேட்க.

“உன் மகளும் இந்த வீட்டோட பெரிய பையனும் செய்து வைத்த கேவலத்துக்கு ஊரைக் கூட்டி கல்யாணம் எல்லாம் இனி இந்த வீட்டில் பண்ண முடியாது. பேசாம சரஸ்வதி சொன்ன மாதிரி வர புதன்கிழமை இதே கோவிலில் என் பசங்களுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும்” என்று பாண்டியன் சொல்ல. அவர் வார்த்தைக்கு யாரும் மறுவார்த்தை பேசாமல் வர புதன்கிழமையன்று திருமண நாளை நிச்சயித்தார்கள்.

“அப்புறம் என்ன, கல்யாண தேதி தான் குறிச்சாச்சுல்ல. நடுவுல இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு, அதுக்குள்ள யார் யார் என்னென்ன வேலை செய்யணும்னு நான் பிரித்துக் கொடுக்கிறேன். எல்லாரும் ஒண்ணா நின்னு இந்த கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு கொடுங்க” என்று பாண்டி என்று சொல்ல,

“மாமா. எங்க தரப்புல இருந்து நாங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க. நம்ம வீட்டு பசங்க திருமணத்தை நல்லபடியா முடிக்கலாம்” என்று முருகனும் அவர் தரப்பில் இருந்து இறங்கி வந்தவர். மனதார ரோஜாவின் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று எண்ணினார்.

கதிர்வேலன் எக்கேடு போனால் என்ன. ஆனால் ரோஜாவின் திருமணம் தடைபெற்று. அவளை சுந்தரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணிய கஸ்தூரிக்கு இந்த தகவல் இடியென அவர் தலையில் விழுந்து இருக்க. இந்த செய்தியை உடனே சுந்தரேசனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தார் கஸ்தூரி.

இதே போல எப்படியாவது கதிருக்கும் தனாவுக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணிய ரோஜா. தன்னையே முறைத்தப்படி நின்று இருந்த தனாவை பார்த்து.“என்ன முறைக்கிற” என்று கேட்க.

“இருடி. கதிர் கையாள என் கழுத்துல மட்டும் தாலி ஏறட்டும். அப்போ இருக்கு டி உனக்கு.“ என்று தனா தனக்குள் ரோஜாவை பார்த்து வசனம் பேசிக்கொண்டு இருக்க.

“அதுக்கு வாய்ப்பில்ல” என்றாள் ரோஜா.

தான் மனதில் நினைத்த வார்த்தைக்கு இவள் எப்படி பதில் சொல்கிறாள் என்று எண்ணிய தனா.“எதுக்கு வாய்ப்பில்ல” என்று கேட்க.

“எதுக்குமே வாய்ப்பில்ல.“ என்ற ரோஜா. எப்படியாவது தன் அண்ணனை தனாவிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

அன்றைய தினம் மதிய நேரம் கோவிலில் இருந்து அனைவரும் பாண்டியனின் இல்லத்திற்கு திரும்பி இருக்க.

“நான் சொன்ன வேலை எல்லாம் சரியா முடிச்சிட்டு எனக்கு தெரியப்படுத்து, நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி சாப்பாடு தாம்பூலம். அப்புறம் இன்னும் என்னென்ன சமாச்சாரம் வேணுமோ அதையெல்லாம் பார்த்து செய்ய சொல்லிடு” என்று நாகராஜனுக்கு பாண்டியன் உத்தரவிட.

இதே தருணம் கோவிலில் நடந்த அனைத்து விஷயங்களை ஒன்று விடாமல் கஸ்தூரி சுந்தரேசனுக்கு கைப்பேசி மூலம் தெரியப்படுத்தினாள்.

“உங்களை எல்லாம் நம்பறது சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல. அந்த கேசவனும் ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல் படுத்துகிட்டு இருக்கான். இப்போ இந்த ரோஜாவுக்கு இரண்டே நாள்ல அவங்க அப்பன் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்கான்னு நீ எனக்கு அழைப்பு கொடுக்கிறியா?” என்று சுந்தரேசன் கோபமாக கேட்க,

“என்னை என்ன தம்பி பண்ண சொல்ற” என்றார் கஸ்தூரி.

“அதானே. ஏன் பேச மாட்ட? உன் மகனுக்கு நீ விருப்பப்பட்ட மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க தானே. நீ பேசுவ தான். இனி உங்கள நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. நானே களத்தில் இறங்குறேன். இங்க பாரு. நான் சொல்றத மட்டும் நீ செஞ்சா போதும். கல்யாணம் எப்பன்னு சொன்ன” என்று சுந்தரேசன் கேட்க,

“வர புதன் கிழமை காலையில 7. 00மணிக்கு தாலி காத்த அம்மன் கோவிலில் கல்யாணம்” என்று கஸ்தூரி சொல்ல.

“சரி உன் போனை நீ ஆஃப் பண்ணவே கூடாது. புதன்கிழமை காலையில அங்க ரோஜா கழுத்துல என் தம்பி தான் தாலி கட்டுவான்” என்ற சுந்தரேசன் ஒரு முடிவோடு தன் கைபேசி இணைப்பை துண்டிக்க. என்ன நடந்தால் எனக்கென்ன. என் மகள் பாண்டியன் வீட்டின் மூத்த மருமகள் என்ற சந்தோஷத்தில் கஸ்தூரியும் கைப்பேசி இணைப்பை துண்டித்தார்.

மறுநாள் நாள் திங்கள் கிழமை பாண்டியனின் வீட்டில் பந்தல் கால் நட்டு வைத்து. திருமண வேலைகள் அமோகமாக ஆரம்பித்து இருந்தது.

புதன் கிழமை காலை ஏழு மணி அளவில் முகூர்த்தம் என்பதால். சரஸ்வதியும் ரவி தனாவின் குடும்பமும் நேரே கோவிலுக்கு வருவதாக தெரியப்படுத்தி இருக்க.

செவ்வாய் கிழமை காலை நேரம் சிவகங்கையில் இருக்கும் முருகனின் வீட்டில் நாளை நடக்க இருக்கும் திருமணத்திற்கு தேவையான துணிமணிகளை பார்வதியும் முருகனும் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ஏனோ முல்லைக்கு இதயத்தில் வலி அதிகரித்தது.

“என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று முருகனை பார்வதி கேட்க.

“நான் மட்டும் நல்லவனா இருந்து இருந்தால் முல்லை தானே பாண்டியன் வீட்டுக்கு மருமகளா போயிருக்கணும், இந்த போலி கௌரவம் அது இதுன்னு பார்த்து நல்ல மனுஷர்களை நான் இழந்துட்டேன்” என்று முருகன் வருத்தப்பட

“ஏன் முடிஞ்சதெல்லாம் பேசுறீங்க. ஏதோ இப்பதான் முல்லை கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கிறாள். நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசி மறுபடியும் அவளை வருத்தப்பட வைக்காதீங்க” என்று பார்வதி சொல்ல.

“இல்ல பார்வதி. என் மகள் சந்தோஷமா இல்ல. என் மகனின் சந்தோஷத்தை நானே அழிச்சிட்டேன்” என்று கவலைக் கொண்டார் முருகன்.

“இனி வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல. எல்லாம் கடவுளுடைய திட்டப்படி நடக்கட்டும். வாங்க நம்ம கிளம்பலாம், அத்தை மாமா ஸ்தானத்தில் இருந்து தாயில்லா பிள்ளைகளுக்கு நம்ப முன்ன நின்னு அந்த திருமணத்தை நடத்தி வைக்கலாம்” என்று பார்வதி சொல்ல

முருகன், பார்வதி, முல்லை ஆகிய மூவரும் அடுத்த சில மணி நேரத்திலேயே பாண்டியனின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

வீட்டிற்கு வந்திருக்கும் சொந்தங்களை எப்பொழுதும் போலவே பாண்டியனின் இல்லத்தில் உள்ளவர்கள் உபசரிக்க.

அன்றைய தினம் மாலை 7மணி அளவில். வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் திருமண வேலையில் வெளியே சென்று இருந்த தருணம்,

பார்வதியும் முருகன்னும் கூட நாளை நடக்க இருக்கும் திருமணத்திற்கு புதுமண தம்பதியினருக்கு நகை வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார்கள்.

வீட்டில் ரோஜாவிற்கு முல்லை மருதாணி வைத்துக்கொண்டு இருக்க.“மீனா. நீ என்கூட வா. நம்ம கடைக்கு போயிட்டு வரலாம்” என்று கஸ்தூரி தன் மகளை அழைத்தார்.

“அத்த. வீட்ல யாருமே இல்லாத நேரம் இப்ப நீங்க மீனாவை எங்க அழிச்சிட்டு போறீங்க” என்று ரோஜா கேட்க,

“என்ன அம்மாடி பண்ண சொல்ற. என் மகளை கட்டின மாப்பிள்ளைக்கு விவரம் பத்தல. நாளைக்கு இந்த வீட்ல ஒரு சுப முகூர்த்தம் நடக்க போகுது. அப்போ எங்க சார்பில் இருந்து உனக்கு எதுவும் நாங்க நகை போடவில்லை என்றால். அது எங்களுக்கு தானே கேவலம். அதான் நானும் மீனாவும் கடைத்தெரு வரைக்கும் போயிட்டு வரோம். நீயும் முல்லையும் பாதுகாப்பா இருங்க” என்ற கஸ்தூரி மின்னல் வேகத்தில் பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

முல்லையும் ரோஜாவும் மட்டும் தனியே வீட்டில் இருக்க. அந்தத் தருணம் ரோஜாவின் கைபேசிக்கு கதிர்வேலனின் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது

“என்ன இது. வாத்தி அவசரமா அப்பா பீரோல இருந்து ரெண்டு லட்ச ரூபா பணம் எடுத்துக்கிட்டு கோவிலுக்கு வர சொல்லி மெசேஜ் பண்ணி இருக்காரு”

என்று ரோஜா யோசித்தவள்.

சற்றும் தாமதிக்காமல் கதிர்வேலனின் கைப்பேசிக்கு தொடர்பு கொள்ள. அவரோ இவள் அழைப்பிற்கு பதில் தராமல் இருந்தார்.

“என்ன ரோஜா, எதாவது பிரச்சனையா” என்றும் முல்லை கேட்க.

“வாத்தி ரெண்டு லட்ச ரூபா பணத்தை கோயில் அருகே எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு… அதான். ஏன் போன் பண்ணாம மெசேஜ் வைத்தாருன்னு யோசிக்கிறேன்” என்று ரோஜா சொல்ல

“அதானே. ஏன் வேற யாரையாவது அனுப்பி கூட பணத்த வாங்கிட்டு சொல்லி இருக்கலாமே. இந்த நேரத்துல உன்னையை ஏன் எடுத்துட்டு வர சொன்னாரு” என்று முல்லை கேட்க

“இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை கூட நான் கொண்டு போயி இந்த மாதிரி பணம் எல்லாம் கொடுத்து இருக்கேன்” என்று யோசித்த ரோஜா

“சரி. ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கும். இப்படி தான் வாத்தி அப்பாவுக்கு தெரியாம நிறைய பேருக்கு உதவி பண்ணுவாரு. சரி நான் போய் பணத்தை கொடுத்துட்டு வரேன்” என்று ரோஜா பணத்தை எடுத்துக்கொண்டு வாசலில் நிற்கும் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்.

பணத்தை எடுத்துக்கொண்டு ரோஜா தனது இருசக்கர வாகனத்தில் கதிர் கைபேசியில் அனுப்பி வைத்த கோவில் முகவரியை நோக்கி விரைந்தாள்.

வீட்டில் முல்லை மட்டும் தனியே இருக்க.

விடிந்தால் கதிர்வேலனின் வாழ்க்கையில் வேறொரு பெண் வர போகிறாள் என்ற எண்ணம் அவளை பாடாய் படுத்தியது.

தனிமை சிலருக்கு பிடிக்கும்.

ஆனால் அந்த தனிமையில் நாம் இருக்கும் நேரம் தான், நம் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் பல நினைவுகள் நம் கண்ணீர் மழையால் மண் வாசனை போல மீண்டும் சில நொடிகள் வாசம் வீசும்.

அதே போல தான் பாண்டியனின் வீட்டில் முல்லை தனியாக இருப்பவளுக்கு பழைய நினைவுகள் பாலைவனமாக மாறி இருந்த அவளது இதயத்தில் முல்லை மொட்டை போல மலர ஆரம்பித்தது.

முல்லை நேரே ரோஜாவின் அறைக்குள் சென்றவள். தன் பையில் உள்ள அவளது கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்தாள்.

முதல் பக்கத்தில் முல்லையின் பதினாறு வயதில் அவள் பாவாடை சட்டையில் இருக்கும் புகைப்படம் இருந்தது.

அந்த படத்தில் முல்லையுடன் ரோஜா, மீனா, ஜீவா என்று அனைவரும் இருக்க. அந்த புகைப்படத்தை எடுக்கும் கதிர்வேலனை பார்த்து முல்லை அழகாய் சிரிக்கும்ப்படி அந்த படம் அமைந்து இருந்தது.

அந்த படத்தையே அவள் உற்று பார்க்க காரணம். அந்த படம் கதிர்வேலனால் எடுக்க பட்டது என்பது மட்டும் இல்லாமல்.

அவள் முதுகின் பின்னே இருக்கும் ஆள் உயர கண்ணாடியில் கையில் கேமராவுடன் தெரிந்த கதிரின் உருவமும் அதில் இருப்பது தான்.

முல்லை தன் மாமனை உற்று பார்த்து இருந்தாள்.

கதிர்வேலனை முல்லைக்கு பிடிக்கும்.

ஏன்?என்ன காரணம் என்று அறியாமலும். அறிந்துக்கொள்ள விருப்பம் இல்லாமலும் அவனை அவள் மனதில் சுமக்க ஆரம்பித்தாள்.

பரீட்சை விடுமுறை, திருவிழா என்று எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கதிரை பார்க்க ஓடோடி வரும் பெண்ணவளை கதிர்வேலனுக்கும் பிடிக்கும் என்ற உண்மை முல்லைக்கு இந்த நொடி வரை தெரியாமல் இருப்பது தான் இவர்களது விதி.

தன் விதியை எண்ணி முல்லை கண்கள் கலங்கியவளுக்கு. இனி கதிர்வேலனுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற உணர்வை நினைத்து பார்க்கவே அவ்வளவு வலியாக இருந்தது.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கதிர் மனதில் மீனா மட்டும்தான் இருக்கின்றாள் என்று நம்பிய முல்லையிடம், ஜீவா தன் காதலை சொன்னதும் அப்போது ஜீவாவின் மீது அவளுக்கு காதல் இல்லை எனினும் ஜீவாவின் காதலை முல்லை ஏற்றுக்கொண்டாள்.

ஜீவாவை திருமணம் செய்து கொண்டால் பாண்டியனின் வீட்டிற்கு மருமகளாக ஆகிடலாம். உறவும் விட்டு போகாது, அதுமட்டுமல்லாமல் ஜீவாவின் காதல் உண்மை என்று நினைத்து முல்லைக்கு ஜீவாவை மனம் முடிப்பதில் சம்மதமாகத்தான் இருந்தது.

ஆனால் தற்போது கதிர் முல்லை நினைத்ததும், மீனா ஜீவா நினைத்ததும் நிறைவேறாமல் கதை மாறி இருக்க,

இனி பாண்டியனின் குடும்பத்தில் கூட முல்லை மூன்றாவது மனுஷி தான் என்று எண்ணிய முல்லைக்கு ஒரு வேளை கஸ்தூரி சொன்னது போலவே நாம் ராசி இல்லாத பெண் தானா.

என்ற சந்தேகம், அவள் மனதிலும் எழ ஆரம்பித்த்து.

முல்லைத் தன் விதியை நினைத்து நொந்து கொண்டு இருந்த வேளையில் வீட்டின் வாசல் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டு, அவள் தன் கைக்குறிப்பு புத்தகத்தை மூடி வைத்தவளின் கால் அருகே முல்லையால் மறைத்து வைத்து இருந்த தாலி வந்து விழுந்தது.

மாங்கல்யத்தை கையில் எடுத்த முல்லை. சில நொடியில். அவளுக்கு பாம்பு கடித்து கதிர் கையால் அவள் காலில் அந்த மாங்கல்யத்தை அவன் கட்டிவிட்ட நிகழ்வு நினைவுக்கு வந்த நிலையில். மீண்டும் அவள் கண்ணில் கண்ணீர் சுரக்க.

அந்த மாங்கல்யத்தை அப்படியே நெஞ்சோடு இணைத்துக் கொண்டவளின் காதில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க. முல்லை சட்டென்று அந்த மாங்கல்யத்தை தனது தாவணி முந்தியில் சுருக்கு போட்டு வைத்தவள். இந்த தாலியை எப்படியாவது கதிர்வேலனிடம் தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

மீண்டும் வேகமாக கதவை தட்டும் சத்தம் கேட்டு, முல்லை வாசல் கதவை திறக்க. அங்கே நாகராஜன் நின்று இருந்தான்.

“அண்ணா, நீங்க தானா. உள்ள வாங்க” என்று முல்லை அவனை அழைக்க.

“என்னமா இது. விடிந்தால் இந்த வீட்டுல இரண்டு கல்யாணம் நடக்கப்போகுது. ஆனா பாரு. கல்யாண கலையே இங்க இன்னும் வரலையே” என்றான் நாகராஜன்.

“நீங்க தான் பாட்டு செட் எல்லாம் போட்டு விடணும். அப்போ தானே கல்யாண கலை வரும்” என்று முல்லை சொல்ல.

“எனக்கும் ஆசை தான் மா. ஆனா என்ன பண்ணுறது, சின்னமா தான் எக்காரணத்தை கொண்டும் ஆடம்பரமா எதுவும் பண்ணவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்றான் நாகராஜன்.

“ம். ஆமா அண்ணா. ஜீவா மாமா, மீனாவால பாண்டியன் மாமாவே நாளைக்கு நடக்க இருக்குற கல்யாணத்துக்கு நிறைய பேரை அழைக்கவே இல்ல” என்று முல்லை சொல்ல, அதே சமயம் நாகராஜனின் கைபேசிக்கு முத்து என்ற நபரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“இவன் ஏன் இப்போ கூப்பிடுறான்” என்று யோசித்தப்படியே நாகராஜ் போனை எடுத்து பேச, “அண்ணா. வாத்தியார் ஏற்கனவே அதிகமா குடிச்சிட்டாரு அண்ணா. இன்னும் full வேணும்னு பிரச்சனை பண்ணுறாரு அண்ணா. நீங்க வந்து இவரை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க அண்ணா” என்று நாகராஜனுக்கு பழக்கமான முத்து சொன்னதும்.

“ஐயோ. வேண்டாம் டா. நாளைக்கு அவனுக்கு கல்யாணம். இப்போ போய் அவன் இப்படி குடிச்சா அது நல்லா இருக்காது. நீ அவனை அங்கேயே உக்கார வையு. இதோ நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்ற நாகராஜன் கைபேசி இணைப்பை துண்டித்தான்.

நாகராஜன் யாரைப்பற்றி பேசிகிறான் என்று முல்லை புரியாமல் பார்த்து இருக்க.

“இந்தாமா முல்லை. இதுல ஒரு லட்சம் இருக்கு. சின்னமாக்கிட்ட கொடுத்து. தென்ன மட்டை வரவுல எழுதிக்கோ சொல்லிடு” என்று நாகராஜன் சொல்ல.

“ம் சரி அண்ணா. ரோஜா வந்ததும் எழுதி வைக்க சொல்லிடுறேன்” என்றாள் முல்லை.

“என்னம்மா சொல்ற. வந்ததும் எழுதி வைக்க சொல்றியா. ஏன் சின்னமா வீட்டுல இல்லையா. வெளிய போய் இருக்காங்களா” என்று தன் பார்வையை அலைய விட்டவனாக கேட்டான் நாகராஜன்.

“ஆமா அண்ணா. மாமா சார் பணம் எடுத்துட்டு வர சொன்னாருன்னு ரோஜா இப்போ தான் 2லட்சம் பணம் எடுத்துட்டு போய் இருக்கா” என்று முல்லை சொன்னதும்.

“என்ன மா சொல்ற. யார் யாரை பணம் கொண்டு வர சொன்னாங்க?” என்று புரியாமல் கேட்டான் நாகராஜன்.

“அண்ணா. மாமா சார் போன்ல இருந்து ரோஜா போனுக்கு உடனே ரெண்டு லட்சம் பணம் எடுத்துக்கிட்டு கோவில் பக்கத்துல வர சொல்லி மெசேஜ் வந்துச்சு அண்ணா” என்று முல்லை சொல்ல.

“ஐயோ. அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை மா. ஏன்னா கதிர் மூக்கு முட்ட குடிச்சிட்டு சாராய கடையில படுத்துட்டு இருக்கான்” என்றார் நாகராஜன்.

“என்ன. மாமா சார் குடிச்சிக்கிட்டு இருக்காரா. அப்போ. அப்போ ரோஜா.“என்ற முல்லையின் இதயம் பயத்தில் வேகமாக துடிக்க.

நாகராஜன் சற்றும் தாமதிக்காமல் தன் அலைபேசியிலிருந்து கதிர்வேலனின் கைபேசிக்கு தொடர்பு கொண்டதும். அவனோ பதில் தராமல் போக, ஏதோ ஒன்று சரியில்லை என்ற எண்ணம் நாகராஜன் முல்லைக்கும் புரிய வந்தது.

“அண்ணா. அப்போ மாமா சார் சொல்லி ரோஜா இங்க இருந்து போகலையா” என்று முல்லை கேட்க

“இல்லம்மா. அதுக்கு வாய்ப்பே இல்ல, நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு, ஏன் சின்னமாவை கதிர் பணம் எடுத்துக்கிட்டு வர சொல்லணும், இதுல வேற என்னமோ தப்பு நடந்திருக்கு” என்று நாகராஜன் சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் மீனாவும் கஸ்தூரியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

ரோஜாவை இந்த நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேற்ற திட்டமிட்ட கஸ்தூரியின் எண்ணம் நிறைவேறியதை நினைத்து கஸ்தூரியின் முகத்தில் பிரகாசம் ஒளிர “என்ன முல்லை ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டாள் மீனா.

“அடியே மீனா, இந்த முல்லை என்னைக்கு தான் சந்தோஷமா இருந்திருக்கா, இப்போ போய் அவளை புது கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க. சரி சரி போய் இந்த நகையை உள்ள எடுத்து வை. நான் சூடா காப்பி போட்டு குடிக்க போறேன்” என்ற கஸ்தூரி சமையலறைக்குள் நுழைய.“ஏய் முல்லை. ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று மீண்டும் கேட்டாள் மீனா.

“அது, அது வந்து, நம்ம ரோஜா” என்ற முல்லை ஏதோ சொல்ல வருவதற்கு முன்பே, “என்ன ஆச்சு, ரோஜா எங்கே?” என்று மீனா கேட்க,

“அது, சின்னமாவை கதிர் வெளியே அழிச்சிட்டு போயிருக்கான்” என்றார் நாகராஜன்.

“என்ன. இந்த நேரத்துல கதிர் மாமா ரோஜாவை வெளியே அழைச்சிட்டு போயிருக்காரா.“ என்று மீனா கேட்க. நிலைமையை சமாளிப்பதற்காக நாகராஜன் பொய் உரைக்கிறான் என்று தெரிந்து கொண்ட முல்லை,

“ஆமா, மாமா சார் தான் ரோஜாவை வெளியே அழைச்சிட்டு போயிருக்காரு” என்று முல்லையும் சூழ்நிலையை சமாளித்தாள்.

“சரி. பாண்டியன் அய்யா வந்தா நீங்க விவரத்தை சொல்லிடுங்க. நான் போயி கதிரையும் சின்னமாவையும் அழைச்சிட்டு வந்துடுறேன்” என்று நாகராஜன் சொல்ல

“அண்ணா. இருங்க நானும் வரேன்”என்ற முல்லை. நாகராஜன் உடன் வெளியே கிளம்ப, “ஏய் நில்லு. இந்த நேரத்தில் நீ எங்க போற” என்று கேட்டாள் மீனா.

“ஏய் மீனா. நீயேன் அதெல்லாம் கேக்குற. இவளுக்கு நைட்ல ஊரு சுத்துறது புதுசா என்ன, அதான் ஒரு நாள் நைட் கதிர் கூடவே.“ என்று கஸ்தூரி பேசும் முன்னே

மீனா தன் ஆள்காட்டி விரலை நீட்டி,

“அம்மா. ஏற்கனவே இந்த வார்த்தையை சொல்லித்தான் நீ கதிர் மாமாகிட்ட வாங்கி கட்டிக்கிட்ட. கம்முனு போய் காப்பிய குடி” என்ற மீனா.

“என்ன முல்லை. இந்த நேரத்தில் நீயேன் வெளியே போகிற?” என்று மீண்டும் கேட்க.

“அது, அது ஒன்னும் இல்ல மீனா. ரோஜா தான் என்னை நாகராஜன் அண்ணன் கூட வர சொல்லி இருக்கா, நான் போயிட்டு வந்துடறேன்” என்று முல்லைச் சொல்ல.

“சரி பார்த்து போ” என்றாள் மீனா.

முல்லையும் நாகராஜனும் பாண்டியனின் வீட்டிலிருந்து வெளியே வர, நாகராஜன் தன் காரில் ஏறி அமர்ந்தவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று எண்ணம் தோன்றிய நிலையில். சற்றும் தாமதிக்காமல் நாகராஜன் ரோஜாவின் கைபேசிக்கு அழைத்துப் பார்க்க, அதுவோ தொடர்புக்கு வெளியே உள்ளதாக தெரியவந்தது.

“சின்னமா போன் வேற எடுக்கல. எங்க போய் இருப்பாங்க அவங்க” என்று நாகராஜன் யோசிக்க.

“அண்ணா. அப்ப ரோஜாவுக்கு மெசேஜ் பண்ணது மாமா சார் இல்லையா” என்று முல்லை கேட்க,

“அதற்கு வாய்ப்பில்லம்மா. சரி நம்ப முதல்ல போய் கதிரை பார்த்து பேசுவோம்” என்ற நாகராஜன் சாராயக்கடையின் வெளியே காரை நிறுத்தியவன். முல்லையை காருக்குள் இருக்கும்படி சொல்லிவிட்டு கடைக்குள் நுழைந்தான்.

சாராயக்கடைக்குள் நுழைந்த நாகராஜன் அடுத்த ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்தவன், சுயநினைவு இன்றி குடித்திருக்கும் கதிரை கைதாங்கலாக தூக்கி வந்து காரின் பின் இருக்கையில் அமர வைக்க. முல்லை முன் இருக்கையில் அமர்ந்திருந்தவளை கதிர்வேலன் கண்கள் சுருக்கி பார்த்தவன், “நீ, நீ ரவா லட்டு தானே” என்று கேட்க

“நண்பா. அவசரம் புரியாமல் நீ வேற தேவையில்லாத எதையும் பேசாத” என்ற நாகராஜன். கதிர்வேலனை தன் காரின் பின் இருக்கையில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டவன், வேகமாக காரை எடுக்க.

“நண்பா. உன் போன் எங்கே” என்று கதிரிடம் கேட்டான்.

“என் போனா,

ட்ரிங் ட்ரிங், ட்ரங் ட்ரிங்,

ஹலோ என் போன் எங்கே” என்று கதிர் குடிப்போதையில் உளற ஆரம்பிக்க.

“ஐயோ மாமா சார். உங்க போன் எங்கே” என்று முன் இருக்கையில் அமர்ந்து இருந்த முல்லை கேட்க.

“நீ யார் டி என்னை கேள்வி கேட்க, நீ கேட்டா நான் சொல்லனுமா” என்று முல்லையிடம் கோவமாக பேசினான் கதிர்.

“முல்லை. கதிர்கிட்ட போன் இல்ல. இவன் போனை எடுத்து யாரோ மெசேஜ் பண்ணி வேணும்னே சின்னமாவை கோவிலுக்கு வர சொல்லி இருக்காங்க. ஆனா. எந்த கோவிலுன்னு தெரிந்தா தானே நம்ம அங்க போக முடியும்” என்ற நாகராஜன் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக ரோஜாவை தேடி அவள் எப்போதும் செல்லும் அம்மன் கோவில் அருகே சென்றான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!