“என்ன தனா. இங்க என்ன சத்தம்” என்று சரஸ்வதி கேட்க, “ரோஜா. இப்போ ஏன் நீ பிரச்சனையை பெருசாக்குற” என்று பல்லை கடித்தான் ரவி.
“என்னம்மா. இங்க என்ன பிரச்சனை” என்ற கதிர்வேலனின் முகத்தில் தெரிந்த கோவத்தை பார்த்து, “நண்பா. பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல. நீ சின்னமாவை புடவை எடுக்க உள்ள அழைச்சிட்டு போ” என்றான் நாகராஜன்.
“இங்க பாருங்க. மறுபடியும் சின்னமா கண்ணம்மான்னு சொன்னிங்க. கட்டப்பையை தூக்கி தலையில அடிச்சிடுவேன்” என்று ரோஜா சொல்ல.
“ஐயையோ ரோஜா. என்ன நீ. இப்படியெல்லாம் பேசுற. எங்க வீட்டுக்கு வாழ வர போற பொண்ணு இப்படியெல்லாம் சத்தமா பேசக்கூடாது” என்ற சரஸ்வதியின் காதருகில் சென்ற ரோஜா.“அப்போ உங்க காதுல வந்து பேசவா” என husky வாய்ஸில் கேட்டாள்.
“என்ன ரோஜா கிண்டலா. கதிர். இந்த வேலைகாரனை பற்றி பேசினா. உன் தங்கச்சிக்கு ஏன் கோவம் வருது” என்று தனா கேட்க.“யாரை இந்த லூசு வேலைக்காரன்னு சொல்லுது” என்று எண்ணியப்படி கதிர் திரும்பி பார்த்தவனின் கண்ணுக்கு எதிரே நாகராஜன் தான் நின்று இருந்தார்.
“ஏய். நாகா என் நன்பன்.“ என்று கதிர் பல்லைக் கடிக்க.
“இருக்கட்டும். ஏன் எங்கள விட ரோஜாவிற்கு அவன் முக்கியமா.?” என்று தனா கேட்டதும்.
“தனா. இவ்ளோ தான் உனக்கு மரியாதை. என்ன நினைச்சிக்கிட்டு நீ எங்கள அதிகாரம் பண்ணுற.
என்ன. நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன். என்னமோ உன்னை அண்ணின்னு கூப்பிட சொல்லுற. என் வாத்தியை அண்ணன்னு கூப்பிட சொல்லுற. என்ன விஷயம்.“ என்று ரோஜா கோவமாக கேள்வி கேட்க.
தனாவின் முகத்தில் ஈ ஆடவில்லை.
இங்கே என்ன பிரச்சனை நடக்கிறது என்று புரியாத கதிர்வேலன், “அம்மா. என்னதான் ஆச்சு. ஏன் நீங்க இப்படி கோவப்படுறீங்க” என்று தன் தங்கையிடம் கேட்டதும், ரோஜா அழுத்தமாக தனாவை பார்த்தவள்,
“உரிமை ஊறுகா எல்லாம் என்கிட்ட நீ பேசக்கூடாது புரியுதா. நான் இப்போவும் சொல்லுறேன். உன் கழுத்துல தாலி ஏற போற கடைசி நொடிவரை இங்க என்னவேனாலும் நடக்கலாம். நடக்கும், பொறுத்து இருந்து பாரு” என்ற ரோஜா. தனத்தை எச்சரித்தவளாக தன் அண்ணனின் கையை பிடித்து ஜவுளிக்கடைக்குள் அழைத்து சென்றாள்.
ரோஜா பேசிய வார்த்தையைக் கேட்டு ரவியும் தனாவும் கோபத்துடன் நின்று இருக்கு.“அம்மா. அந்த வாயாடியை என் தம்பிக்கு கட்டி வைக்காதிங்க” என்றாள் தனா.
“என்னடி உளறுற” என்று சரஸ்வதி ஏதும் புரியாமல் கேட்டதும்,
“ஆமா மா. அந்த ரோஜா எனக்கு வேணா அவளுக்கு ரொம்ப திமிர்” என்றான் ரவி.
“ஐயோ. உங்க ரெண்டு பேருக்கு என்ன தான் ஆச்சு. ஏன் இப்படி நல்ல காரியம் நடக்க இருக்கும் போது அபசகுனமா பேசுறீங்க” என்று கேட்டார் சரஸ்வதி.
“அம்மா. நான் சொல்றத கேளுங்க. கதிரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அந்த ரோஜா என் தம்பிக்கு வேண்டவே வேண்டாம்ம்” என்று தனா வன்மத்துடன் வாதாட,
“ஏய் பைத்தியக்காரி. ரோஜாவை உன் தம்பி கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதால தான், கதிர் உன்னை கல்யாணம் பண்ண ஓகே சொல்லிருக்கான். இல்லைனா. எனக்கே ஆன்ட்டி மாதிரி இருக்குற உன் கழுத்துல தாலி கட்ட அவனுக்கு என்ன ப்ராந்தா” என்று சரஸ்வதி கேட்க. தனாவின் மொத்த கோவமும் ரோஜாவின் பக்கம் திரும்பியது.
“அக்கா. விடு. நான் அவ கழுத்துல தாலி கட்டியதும் என்கூட வெளியிருக்கு அழைச்சிட்டு போக போறேன். அங்க போய் அவ திமிரை எல்லாம் அடக்கிடலாம்” என்று நாகராஜன் சொன்னதும்,
“ஆமா டா தம்பி. முதல்ல இந்த கதிரை என் பக்கம் இழுக்குறேன்” என்ற தனா. அதே வைராக்கியத்துடன் கடைக்குள் சென்றாள்.
ஜவுளிக்கடையில் அனைவரும் புது துணிகளை எடுத்துக்கொண்டு இருக்க.
“மீனா அண்ணி. நீங்களும் புடவை எடுங்க” என்று தன் அருகே மீனாவை அழைத்தாள் ரோஜா.
மீனாவை பார்த்த சரஸ்வதி.“ஆமா. உன் புருஷன் வரலையா மீனா” என்று கேட்க.
“அவரு வேலை விஷயமா வெளியே போய் இருக்காரு” என்ற மீனாவின் பார்வை கதிர் மேல் படிய. இதை கவனித்த தனாவோ.
“கதிர். இந்த புடவை நல்லா இருக்கா” என்று அவன் கவனத்தை தன் பக்கம் இழுத்தாள் தனா.
தனாவின் குரலுக்கு செவி சாய்க்காமல் கதிர்வேலன் ஓரமாக நின்று இருக்க.
“தம்பி கதிர். என் பொண்ணுக்கு நீயே ஒரு நல்ல புடவையா எடுத்துக் கொடு” என்று சரஸ்வதி கதிர்வேலனை தன் அருகே அழைக்க.
பொறுத்திருந்த கதிர்வேலனுக்கு கடுப்பான நிலையில், “நான் எந்த புடவை எடுத்துக் கொடுத்தாலும் உங்க பொண்ணு கட்டிப்பாளா” என்று கேட்டார்.
“பின்ன. என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளையே நீங்கதான், உங்க ரசனைக்கு ஏற்ற மாதிரி தானே அவ புடவை கட்டணும்” என்று சரஸ்வதி சொல்ல. கதிர்வேலனும் அங்கிருந்த ஒரு காட்டன் புடவையை எடுத்து சரஸ்வதி கையில் கொடுக்க. அவர் புரியாமல் கதிர்வேலனைப் பார்த்தார்.
“என்ன கதிர். காட்டன் புடவை எடுத்து கொடுத்திருக்க. இது யாருக்கு?” என்று சரஸ்வதி கேட்க
“எனக்கு இந்த புடவை பிடிச்சிருக்கு, முடிஞ்சா உங்க பொண்ண இந்த புடவையை கட்ட சொல்லுங்க” என்று கதிர் சொல்ல. அருகே இருந்த கஸ்தூரி சட்டென்று சிரித்து விட்டார்.
கஸ்தூரி சிரித்ததும் தனாவிற்கு கோபம் எழ.“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க”. என்று கஸ்தூரிடம் சண்டைக்குச் செல்ல.
“இதே சீன் என் பொண்ணுக்கும் நடந்து இருக்கு” என்றார் கஸ்தூரி.
“ஓ. ஆமா இல்ல. உங்க பொண்ணு கதிரை நேசிச்சிட்டு. அப்புறம் ஜீவாவை கட்டிக்கிட்டா அப்படித்தானே.“ என்று தானா கேட்க.
“இது எங்க குடும்ப விஷயம், அதை நடுக்கடையில் நின்னு பேசிகிட்டு இருக்காதீங்க” என்றாள் ரோஜா வெடுகென்று.
“ரோஜா. என்ன நீ. தனா யாரு? உங்க வீட்டுக்கு வாழ வர போற மருமக தானே, ஏன் அவளை பிரிச்சு பேசுற?” என்று சரஸ்வதி கேட்க.
“நான் ஒன்னும் பிரிச்சு பேசல ஆன்ட்டி. ஆரம்பத்திலிருந்து உங்க பொண்ணு தான் விதண்டாவாதமா பேசிக்கிட்டு இருக்காங்க. அடுத்தவங்க இவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிற மாதிரி, இவங்களும் எங்க வீட்டு மூத்த மருமகளுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகணும்” என்று ரோஜா சொல்ல, தனத்திற்கோ ரோஜாவால் அவமானத்திற்கு மேல் அவமானம் ஏற்பட்டது.
“ரோஜா. என்ன மா நீ. ஏன் தனாவிடம் கோபமா இருக்குற” என்று அங்கு நடக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் கேட்க.
“அப்பா. இவங்க மேல நான் ஏன் கோபப்பட போறேன். இவங்க தான் ஆரம்பத்துல இருந்தே இல்லாத முடிக்கு பூ வச்சுக்கிட்டு இருக்காங்க” என்றாள் ரோஜா.
“என்னது. இல்லாத முடிக்கா. நீ எந்த அர்த்தத்தில் இதை சொல்ற” என்று சரஸ்வதி கேட்க.
“உங்களுடைய மூளைக்கு ஏத்த மாதிரி எல்லாம் என்னால விளக்கம் சொல்ல முடியாது. மீனா அண்ணி உங்களுக்கு என்ன புடவை தேவையோ அதை எடுங்க. வாத்தி எனக்கு இந்த புடவையை நான் எடுத்துட்டேன்” என்று தன் கையில் இருந்த புடவையை கதிர்வேலனிடம் ரோஜா கொடுக்க.“இந்த கலர் ரொம்ப அழகா இருக்க அம்மா. உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்” என்றான் கதிர்வேலன்.
“என்ன ரோஜா. நீ புடவை எடுத்துட்டியா. ஏன் நீ எடுத்த புடவை எனக்கு பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கூட கேட்கல” என்று ரவி கேட்க,
“ஏன்?நீங்களா புடவை கட்டிக்க போறீங்க, நான் தானே கட்டிக்க போறேன், உங்களுடைய கருத்த நான் ஏன் கேட்கணும்” என்று ரோஜா கேட்க,
“இருந்தாலும் நீ கட்டிக்க போற புடவை என் கண்ணுக்கு தானே அழகாக இருக்கணும்” என்றான் ரவி
“அப்படியா. ஆனா நான் கட்டிக்க போற புடவை எனக்கு அழகா இருந்தா போதும். உங்க கண்ணுக்கு வேற ஏதாவது புடவை அழகா இருந்தா அதை கிழிச்சு நீங்க வேணா சட்டை தைச்சுக்கோங்க” என்ற ரோஜா. இவர்களிடம் பிடி கொடுக்காமல் பேசியவளின் மனதில் என்னதான் இருக்கிறது என்று பாண்டியனும் குழம்பி இருக்க,
அவள் மனதில் இருக்கும் ஒரே எண்ணம் தனலட்சுமியை தன் அண்ணன் கதிர்வேலனுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது என்று கதிர்வேலன் மட்டுமே அறிந்திருந்தார்.
ரோஜாவின் செயலில் தனா கோவத்தின் உச்சியில் இருக்க, தன் மகளை சரஸ்வதி சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.
பல வகையான வாய் தகராறுக்கு பிறகு ஒரு வழியாக அனைவரும் புது துணியை எடுத்து முடிக்க. அதே சமயம் முல்லையின் தந்தை முருகன் இவர்கள் இருக்கும் ஜவுளிக்கடை கடைக்குள் வருகை தந்திருக்க. அவரை அங்கு சற்றும் எதிர்பாராத ரோஜா
“வாத்தி அங்க பாருங்க முருகன் மாமா” என்றாள்.
“இவரு ஏன் இங்க வராரு. ஒரு வேள கேசவனை நம்ம எதாவது பண்ணோமான்னு கேக்க வந்து இருக்காரா” என்று கதிர் கேட்க.“இருங்க வாத்தி. என்னன்னு பாப்போம்” என்றாள் ரோஜா.
முருகனை அங்கே எதிர்பார்க்காத பாண்டியன், “கதிர். இவங்க எடுத்த துணிகளுக்கு எல்லாம் பணம் கட்டிட்டு நீ இவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்று சொன்னதும்.
“என்ன அப்பா நீங்க. முருகன் மாமா வந்து இருக்காரு. அவர் கூட எங்கள பேச விடாம உடனே எங்களை எங்க கிளம்ப சொல்லுறிங்க” என்று கேட்டாள் ரோஜா.
தன் மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், “அது. அது வந்து மா. நாளைக்கு முல்லைக்கும் நிச்சயம் நடக்கப்போகுது தானே. .
அதான் மச்சான் துணி எடுக்க வந்து இருக்காரு” என்ற பாண்டியன்.
“தனா. ரவி இங்க வாங்களேன்” என்று சரஸ்வதியின் பிள்ளைகளை தன் அருகே அழைத்தார் பாண்டியன்.
முல்லைக்கு கதிரை மாப்பிளை கேட்ட பிறகும் பாண்டியனின் செயலில் முருகனுக்கு வருத்தம் ஏற்பட.
“என்ன மாமா. யார் இவரு” என்று முருகனை பார்த்து கேட்டாள் தனா.
“இவரு முருகன். என் தங்கச்சி வள்ளியோட கணவன். இவங்க பொண்ணுகூட நாளைக்கு தான் நிச்சயம் நடக்கப் போகுது. மச்சான். இந்த பொண்ண தான் கதிருக்கு பார்த்து இருக்கேன். இதோ இவரு ரவி. இவரை தான் ரோஜாவிற்கு பார்த்து இருக்கேன். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க போறோம். பல சம்மந்தம் தள்ளிப்போய் இப்போ தான் என் பொண்ணுக்கு நல்ல வரன் கிடைத்தது இருக்கு” என்ற பாண்டியனின் சொல்லில். முருகனின் முகம் சட்டென்று மாறிபோனது.
“மாமா. இவங்க பொண்ண தானே உங்க மூத்த பையன் விரும்புனாங்க” என்று தனா கேட்க.“என் பொண்ணு ஒன்னும் ஜீவாவை காதலிக்கல. அவ பாண்டியன் வீட்டுக்கு மருமகளா போகணும்னு தான் ஆசைப்பட்டா. தெரியாம எதையும் பேசிடாதீங்க.“ என்ற முருகனின் வார்த்தையில் கதிர்வேலனின் முகம் மாறியது.
“என்ன. என்ன சொல்றிங்க நீங்க” என்று முருகனை பார்த்து சரஸ்வதி கேட்க. அதற்குள் பயந்து போன பாண்டியன்.
“மச்சான். இன்னும் ரெண்டு நாளுல என் பசங்களுக்கு நிச்சயம் நடக்காப்போகுது. நீ தான் முன்ன நின்னு இந்த நல்ல காரியத்தை முடித்து தரணும்” என்ற பாண்டியணை பார்த்து வெறுமையாக சிரித்த முருகன்.
“புரியுது மாமா. உங்க பொண்ணோட வாழ்கை நல்லா இருக்கணும்னு ஒரு அப்பாவா நீங்க நினைக்கிறீங்க. ம். புரியுது.“என்ற முருகன். ரோஜாவை பார்த்து சிரித்த முகத்துடன், “நல்லா இரு தாயி” என்றபடி மேற்கொண்டு யாரிடமும் எதையும் பேசாமல் அந்த கடையில் இருந்து வெளியேறி இருந்தார்.
முருகனின் முகத்தில் தெரிந்த கவலை.
அவரின் நடையில் இருந்த சோர்வு என அனைத்தையும் பார்த்த ரோஜாவிற்கு ஏதோ ஒன்று சரியில்லாததை போல உணர்ந்தவள், “அப்பா. மாமா ஏன் ஆள் ஒரு மாதிரி இருக்காரு” என்று கேட்டதும், “நாளைக்கு அவர் பொண்ணுக்கு நிச்சயம் நடக்கப்போகுது தானே. அதான் பொண்ணைப் பிரிய போற கவலையில இருக்காரு போல” என்றார் பாண்டியன்.
“ஆமா ஆமா. அவனெல்லாம் இவருக்கு மாப்பிளையான்னு நினைத்து கவலை மட்டும் தான் பட முடியும்” என்று கதிர்வேலன் தனக்குள் புலம்பியவனின் காலில் கோவமாக மிதித்தாள் ரோஜா.
தன் தங்கையின் செயலில்”ஆ.“ என்று அலறிய கதிர்வேலனின் வாயை மூடிய ரோஜா.“வாத்தி. நீங்க உண்மையாவே பைத்தியம் தான் வாத்தி. கேசவனுக்கு accident ஆகி அவன் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது. எப்படி அவன்கூட முல்லைக்கு நிச்சயம் நடக்கும்” என்று ரோஜா கேட்க.
“அட ஆமா ல்ல. நான் அதே மறந்தே போயிட்டேனே” என்றார் கதிர்.
“அது மட்டும் இல்லாம. அடிபட்ட கேசவனை போய் முருகன் மாமா நேர்ல பார்க்காம, அவர் ஏன் இங்க நம்ம அப்பாவை பார்க்க வரனும்” என்று ரோஜா கேட்க.
“அதானே. ஏன் இங்க வரணும்” என்று புருவம் முடிச்சியோடு கேட்டார் கதிர்.
கதிரின் கேள்வியை கேட்டு கோவம் கொண்ட ரோஜா.“ஐயோ வாத்தி. உண்மையாவே நீங்க தத்தி தான், போங்க. போய் அந்த சரஸ்வதி ஆன்ட்டியை. சாரி. ஆன்ட்டி பெத்த அல்ட்டாப்பை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்ற ரோஜா. கோவமாக கடையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
மறுபக்கம் இதே நாளில் சிவகங்கையில் உள்ள முருகன் வீட்டில்.
“என்ன சொல்லுற முல்லை. அந்த பத்திரத்துல அப்படியா எழுதி இருக்கு” என்று நம்பாமல் மீண்டும் மீண்டும் பார்வதி முல்லையின் கையில் இருந்த பத்திரத்தை பற்றியே கேள்விக்கொண்டு இருக்க.
“ஆமா சித்தி. இதுல உங்க பேர்ல இருந்த எல்லா சொத்தும் உங்க தம்பி கேசவன் பேருக்கு நீங்க சுயநினைவோடு எழுதிக்கொடுத்து இருக்கீங்க” என்று முல்லை சொன்னதும். பார்வதியின் கண்கள் கண்ணீரை வடித்தது.
பார்வதி அழுவதை வைத்தே. பார்வதி பேரில் உள்ள சொத்தை அவருக்கே தெரியாமல் கேசவன் தன் பெயருக்கு மாற்றி இருக்கிறான் என்று முல்லை அறிந்துருக்க.
“பாவி. அவனை என் சொந்த பிள்ளையாட்டோம் நினைச்சேன். ஆனா அந்த பாவி என் பேர்ல இருக்குற சொத்தை எல்லாம் அவன் பேருக்கு நான் எழுதி தந்த மாதிரியே மாத்தி வச்சி இருக்கானே. அவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான். அப்போ இதுநாள் வரை இந்த பணத்துக்காக தான் அவன் இங்க இருந்து இருக்கானா. பாவி பாவி. இரு இன்னைக்கு அவன் வரட்டும். அவனை என்ன பண்ணுறேன்னு பாரு” என்று பார்வதி கேசவனை கடிந்துக் கொண்டு இருந்த தருணம் முருகன் சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தார்.
முருகனை கண்ட பார்வதி, “ஏங்க ஏங்க. இந்த படுபாவி என்ன பண்ணிருக்கான் பாருங்க” என்று முல்லை கையில இருந்த பத்திரத்தை முருகனிடம் வாங்கி கொடுத்தார் பார்வதி.
“அந்த பத்திரத்தை பார்த்த முருகன், “இது கொஞ்சம் தான். இன்னும் அவன் மலை அளவு நமக்கு துரோகம் பண்ணி இருக்கான்” என்று முருகன் சொல்ல.
“அந்த பாவியை சும்மா விடக்கூடாதுங்க. நமக்கூட இருந்து நமக்கே துரோகம் பண்ணுருக்கான். அவனை போலீஸ்ல புடித்து கொடுங்க” என்று பார்வதி ஆதங்கத்துடன் கத்தினார்.
பார்வதியின் குரலை காதில் வாங்காத முருகன். தன்னையே பார்த்து இருந்த முல்லையை பார்த்து இருக்க “இப்படிப்பட்ட ஆளுக்கு தானே அப்பா நீங்க என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுறீங்க.“ என்று முல்லை கேக்க வந்த கேள்வியை அவள் பார்வையை வைத்தே அறிந்துகொண்டார் முருகன்.
“ஏங்க. நான் இங்க கத்திகிட்டு இருக்கேன். நீங்க என்ன பிரம்மை பிடித்த மாதிரி நின்னுகிட்டு இருக்கீங்க” என பார்வதி கேட்க.
“இப்போ தான் தகவல் வந்துச்சு. கேசவனுக்கு லாரி accident ஆகிடுது” என எந்த வித உணர்வும் இல்லாமல் சொன்னார் முருகன்.
தான் ஆடாட்டியும்தன் தசை ஆடும் என்பதை போல, “என்னங்க சொல்றிங்க. விபத்தா.“ என்று பார்வதி கேட்க.
“ஆமா. GH ல சேர்த்து இருக்காங்க. உனக்கு வேணும்னா நம்ம டிரைவர்க்கூட போய் பார்த்துட்டு வா” என்ற முருகன்.
“முல்லை. அப்பாவுக்கு பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றபடி தன் அறைக்குள் சென்றார்.
“முருகன் என்ன சொல்கிறார்.
அப்போ நாளை நமக்கு அந்த பாவி கேசவனுடன் நிச்சயம் நடக்க போறது இல்லையா” என்ற மகிழ்ச்சியில் முல்லையில் அதே இடத்தில் சிலையென நின்று இருக்க. மீண்டும் தன் அறையில் இருந்து வெளியே வந்த முருகன், ஒரு முறை முல்லையின் அலைபேசியை தன் வசம் பிடுங்கி வைத்து இருந்தவர். மீண்டும் அவளிடமே அவளின் கைபேசியை கொடுத்து,
“அம்மாடி. நீ ஆசைப்பட்ட மாதிரியே. உன் வீட்டுல நீ மகாராணியாக இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் நிம்மதியா சந்தோசமா உன் இஷ்ட்டப்படி இருமா” என சிரித்த முகத்துடன் சொன்னார் முருகன்.
கேசவனின் நிலையை அறிந்தும் முருகன் தன்னிடம் இன்முகத்துடன் பேசுவதை பார்த்து முல்லையின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி நிலவ.
“ஏங்க. நீங்க போய் கை கால் அலம்பிட்டு வாங்க. நம்ம முணு பேரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்” என்றார் பார்வதி.
முருகன் பார்வதியின் மாற்றத்தை கண்டு முல்லை திக்கு முக்கு ஆகி போனாள்.“சித்தி. நீங்க உங்க தம்பியை போய் ஹாஸ்பிடல்ல பார்க்கலையா” என்று முல்லை கேட்க.
“ம். போறேன். இப்போ என்ன அவசரம்”என்ற பார்வதிக்கு. ஏனோ கூடவே இருந்து குழி வெட்டிய கேசவனின் மீது இப்போதெல்லாம் முழுமையான அன்பும் அக்கறையும் எழாமல் இருந்தது.
“சரி சரி. உன் சித்தி அப்புறம் போய் பார்த்துப்பா. வாங்க முதல்ல நம்ம சாப்பிடலாம்” என்ற முருகன். அன்றைய தினம் முழுதும் முல்லை பார்வதி என்று இருவருடனும் சிரித்து பேசி சந்தோசமாக இருந்தவரின் இன்னோரு முகத்தை பார்த்த முல்லைக்கு இப்போதெல்லாம் அவளின் தந்தை அவளுக்கு மற்றுமொரு அம்மாவாக தான் தெரிந்தார்.
இதே நாள் இரவு. நாளைய மறுநாள் நடக்க இருக்கும் நிச்சியதார்தத்திற்கு தேவையான சமையல் வேலைகள், தம்புல விவகாரம் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து செய்துக்கொண்டு இருந்த பாண்டியனின் அறைக்கு சென்ற ரோஜா.
“அப்பா. இன்னைக்கு ஏன் முருகன் மாமா உங்கள பார்க்க நேர்ல வந்தாரு” என்று கேட்டாள்.
தன் மகளின் கேள்வியை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பாண்டியன் தயங்கும் தருணம்.
“ரோஜா. ரோஜா” என்று வாசலில் நின்றப்படி தன் தங்கையை கத்தி அழைத்தான் ஜீவா.
அவன் குரலை கேட்டு அனைவரும் வெளியே செல்ல. ஜீவா அதீத குடியில், “ரோஜா, உனக்கு விஷயம் தெரியுமா. அந்த கேசவனுக்கு accident ஆகிருச்சு. நாளைக்கு அவனுக்கும் என் முல்லைக்கும் நிச்சயம் நடக்காது” என்ற ஜீவாவின் வார்த்தையை கேட்டு பாண்டியன் தன் மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
பாண்டியனின் செயலில் மீனா, ரோஜா கதிர் நாகராஜன் என்று அனைவரும் உறைந்துப்போய் நின்று இருக்க,
நல்ல நேரமாக அங்கே கஸ்தூரி இல்லாமல் போனார்.
“அப்பா. என்ன நீங்க. ஏன் அண்ணனை அடிச்சீங்க” என்று கதிர் கேட்க,
“நீ சும்மா இரு கதிர். இவனுக்கும் முல்லைக்கும் தானே கல்யாணம் நடக்க இருந்துதுச்சு. அப்புறம் ஏன் இவன் மீனா கழுத்துல தாலி கட்டினான்” என்று பாண்டியன் கேட்க.
“அப்பா, அதான் இவங்க கல்யாணம் நடந்து முடிஞ்சிடுதே. இனி அதைப்பற்றி பேசி என்னவாக போகுது” என்று கேட்டாள் ரோஜா.
“அதைத்தான் நானும் சொல்றேன். இவனுக்கு தான் மீனா கூட கல்யாணம் ஆகிடுது இல்ல. இனி இவன் ஏன் முல்லையை பற்றி பேசணும். அதுவும் இல்லாம. கதிரும் முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு சொன்னதால தானே நான் கதிருக்கும் உனக்கும் ஒரே இடத்துல சம்மந்தம் பார்த்து இருக்கேன். இப்போ நம்ம வீட்டுல ஒரு விஷேஷத்தை வச்சிகிட்டு இவன் இப்படி குடிச்சிட்டு எப்ப பாரு முல்லை புராணம் படிக்கிறது நல்லாவா இருக்கு” என்று பாண்டியன் கேட்க.
“அப்பா. இப்போ ஜீவா அண்ணன் குடிச்சிட்டு வந்தது தப்பா. இல்ல முல்லையை பற்றி இந்த வீட்டுல பேசுறது தப்பா” என்று ரோஜா கேட்க.
“ரெண்டும் தப்பு தான். அதான் முல்லை இந்த வீட்டுக்கு வர நமக்கு கொடுத்து வைக்கலைன்னு தெரிஞ்சு போச்சே. இனி ஏன் முல்லையை பற்றி பேசணும்.“ என்று பண்டியன் கேட்க.
ரோஜாவிற்கு மட்டும் தன் தந்தையின் பேச்சில் ஏதோ ஒன்று புரிந்ததை போல தோன்றியது.
பாண்டியன் இருக்கும் மனநிலையில் தற்போது எதை பேசினாலும் பிரச்சனை தான் வளரும் என்று அறிந்திருந்த ரோஜா “வாத்தி அண்ணனை ரூமுக்கு அழைச்சிட்டு போங்க” என்றாள்.
ஜீவா குடிபோதையில் நிற்பதை பார்த்து மீனாவிற்கு தர்ம சங்கடமாக இருக்க. அவளும் சூழ்நிலை கைதியாக நின்று இருந்தவள், இந்த நேரம் தன் அன்னை இல்லை என்ற நிம்மதி அவளுக்கும் இருக்கத்தான் செய்தது.