சிந்து வருணின் பக்கத்தில் முன்னேறி வந்து தன் கையில் இருந்த, ரோஜா பூக்கள் அடங்கிய பொக்கே ஒன்றை வருணின் கைகளில் கொடுத்தாள்
வருண் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டே சிந்து கொடுத்த பொக்கேயை தன் கைகளால் வாங்க, அவன் தலை மேல் பூக்கள் கொட்டியது.
அவன் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டே நிற்க “ஹாப்பி பர்த்டே டூ யூ, ஹாப்பி பர்த்டே டூ யூ” என்ற சத்தம் ஒலிக்க, பின்னால் திரும்பிப் பார்த்தான் வருண்.
தன் நண்பர்கள் ஐவரும் கேக் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தனர்
அப்போதுதான் வருணிற்கு ஞாபகம் வந்தது இன்று அவனுடைய பிறந்த நாள் என்று!
நம் நாயகன் சில நாட்களாக காதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிந்துவின் நினைவை தவிர
எந்த ஒரு விஷயங்களும் அவன் ஞாபகத்தில் வருவதே இல்லை,
வருணின் அம்மாவும் அப்பாவும்,பிறந்தநாளன்று
முதல் வாழ்த்தாக தங்களுடைய வாழ்த்தை தெரிவிக்கும் போது தான் அவன் பிறந்தநாள் என்பது ஞாபகம் வரும் அவனுக்கு!
இன்று அவர்களும் போன் பண்ணாமலிருக்க, அவனுக்கு பிறந்தநாள் ஞாபகம் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது.
‘அம்மாவும் அப்பாவும், நம்ம மேல கோவமா இருக்காங்க, அதனாலதான் பிறந்தநாள் வாழ்த்து கூறல போல இந்த ராகவும் நமக்கு விஷ் பண்ணலையே?’ என நினைத்துக் கொண்டே இருக்க,
“என்ன மச்சான், கனவு கண்டு முடிச்சிட்டியா?” என கேட்டான் குணா.
“வரு வேகமாக கேக் கட் பண்ணு, எச்சில் ஊறுது!” என ஷாலினி கூற
கேக் கட் பண்ணும் கத்தியை வருணின் கையில் திணித்தான் குணா.
அதை வாங்கி கேக்கை கட் செய்து விட்டு அருகில் நின்ற சிந்துவிடம் கொடுக்க “உங்க பிரண்ட்ஸ்க்கு முதல்ல குடுங்க!” எனக் கூறினாள் சிந்து.
“மச்சான் சிந்துவுக்கே முதல்ல கொடு! எங்களுக்கு எந்த ஆட்சயபனையும் இல்ல “ என திவ்யா கூற மீதி நால்வரும் ஆமாம் என்று சிரித்துக் கொண்டே தலையசைத்தனர்.
வருண் கொடுக்க வேறு வழியில்லாமல் சிந்து அதை வாங்கிக்கொண்டு வருணுக்கு கொஞ்சம் ஊட்டியும் விட்டாள். அவ்வளவுதான் ஆடவனின் மனம் இறக்கை கட்டி பறந்தது,
“மச்சான் நீ வானத்தில் பறந்தது போதும்,எங்களையும் கவனி!” என வருணின் காதுகளில் மெதுவாக திவ்யா கூற,“சாரி மச்சி” என இளித்து விட்டு திவ்யா,ஷாலினி,குணா மணி , என அனைவருக்கும் ஊட்டினான்
அவர்களும் அவனுக்கு கேக்கை ஊட்டி விட்டு, அதிலிருந்த கிரீமை வருணின் முகத்தில் அப்பி விட்டனர்,
சிந்து வருணின் பக்கத்தில் வந்து,
“சாரி வருண்,உங்க பிறந்த நாள்னு எனக்கு தெரியாது, கிப்ட் எதுவும் வாங்கல,ஆபீஸ் வந்ததுக்கு அப்புறம் உங்க பிரெண்ட்ஸ் சொல்லித்தான் எனக்கு தெரியும். மன்னிச்சுருங்க, இதை என்னோட கிப்டா நெனச்சு ஏத்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவள் கைவிரலில் இருந்த மோதிரத்தை எடுத்து அவன் விரல்களை பிடித்து போட ஆரம்பித்தாள் .
அவ்வளவுதான் வருணின் கால்கள் பூமியில் இல்லாமல் விண்வெளியில் பறக்கத் தொடங்கியது.
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை கூறிவிட்டு “சரி வருண் என்னோட கேபினுக்கு போறேன்” என சொல்லிக்கொண்டு விடைபெற்றாள் சிந்து.
போனவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்
“மச்சான் எங்களையும் பாரு,
எங்க சர்ப்ரைஸ் எப்படி?” என திவ்யா கேட்க,
“சூப்பர் மச்சி,தேங்க்ஸ் டி,
ஆனா ஒரு வருத்தம் சிந்து பொக்கே குடுத்து ஹேப்பி பர்த்டே சூரியான்னு சொன்னதுக்கு பதிலா,
ஐ லவ் யூ வருண்னு சொல்லி இருந்தால் இன்னும் ஹாப்பியா இருந்திருப்பேன்”
“ரொம்ப தான் ஆசை, ஹாப்பி பர்த்டேனு வருண்ணு சொல்லி இந்த பொக்கைய குடுங்க சிந்துனு சொன்னதுக்கே,
ரொம்ப யோசிச்சா,
நாங்க தான், நாங்க நாலு பேர்ல யாராவது கொடுத்தா கண்டுபிடிச்சுருவான். சர்ப்ரைஸ் ஆக மாட்டான்.அதனால நீங்களே கொடுங்கன்னு சொல்லி அவள கொடுக்க வச்சோம்
நீ என்னமோ ரொம்ப ஓவரா பண்ற”
என நால்வரும் கோரசாய் கூறினர்
“சாரி கைஸ் நான் ரொம்ப ஹேப்பி, சும்மா உங்க கிட்ட விளையாண்டேன்” என சொல்லி சிரித்தான் வருண்.
நால்வரும் அவர்கள் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அவன் கையில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான்.
“சரி நாங்க செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சுட்டோம்,நீ எங்களுக்கு எப்ப ட்ரீட் தருவ”
“என் லவ்வ இன்னைக்கு சிந்து கிட்ட சொல்ல போறேன், அப்படி சொல்லி அவ ஓகே சொல்லிட்டானா,
நீங்க என்ன கேட்கிறீர்களோ அதை வாங்கி தருவேன்”
“ஒருவேளை அவ உன் காதல ஏத்துக்கலைனா, ட்ரீட் கொடுக்காம எங்களை ஏமாத்திடுவியோ?”என தனது அதீத சந்தேகத்தை குணா கேட்க வருணின் முகம் வாடியது.
அதைக் கண்டு கொண்ட மற்ற மூவரும், “ஏண்டா பர்த்டே பாய, வருத்தப்பட வைக்கிற”என மூவரும் குணாவின் தலையை கொட்டினர்,
“ஏய் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்”
“விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத குணா, என்னால தாங்க முடியல”என வருத்தப்பட்டான் வருண்.
“அவன் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கான்,நீ ஏண்டா பெருசு பண்ற,
அதெல்லாம் உனக்கு ஓகே சொல்லுவா?” என திவ்யா கூறினாள்
இப்போது வருணின் முகம் பிரகாசமானது,
“மச்சான் உன் லவ்வ எப்ப சொல்ல போற?” என்று மணி கேட்க,
“இப்ப சொல்லலாம்னு இருக்கேன் , ஆனா பயமா இருக்கு.எப்படி பேசுறதுன்னு தெரியல?”
“அப்போ ஒன்னு பண்ணுவோம்.நம்ம அஞ்சு பேரும் சிந்துவ கூட்டிட்டு கேண்டீன் போவோம்,அப்புறம் நாங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா அங்கிருந்து வேலை இருக்குன்னு கிளம்பிடுறோம்.
அதுக்கப்புறம் நீ சிந்து மட்டும் தனியா இருப்பீங்க.அந்த சமயத்தை பயன்படுத்தி உன் லவ்வ சொல்லிரு”என கூறினாள் ஷாலினி,
“ சூப்பர் சாலு” என்று வருண் சொல்ல,”இந்த பிளான் எல்லாருக்கும் ஓகேவா “என மத்த நால்வரையும் பார்த்து கேட்டாள் ஷாலினி.
“ஓகே, ஓகே” என நால்வரும் சிரித்தனர்,
திவ்யா நிலாவிடம் தங்களின் திட்டப்படி “நாங்க அஞ்சு பேரும்,
டீ குடிக்கிறதுக்கு கேண்டீன் போறோம்.நீயும் வாயேன்” என கூப்பிட
“எனக்கு வேண்டாம், நீங்க போய் குடிச்சிட்டு வாங்க” என கூறினாள் சிந்து.
‘இவ காரியத்தையே கெடுத்துருவா போலயே?’என திவ்யா நினைத்துக் கொண்டே,
“ஏன் நாங்க எங்க கூப்பிட்டாலும் நீ வர மாட்டேங்குற,நீ எங்கள பிரெண்டா இன்னும் ஏத்துக்குறலையா?” என முகத்தை வாட்டமாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.
“அப்படிலாம் ஒன்னும் இல்ல,
வேலை இருக்குது அதான்”
“எங்களுக்கும் தான் வேலை இருக்கு,
நீ வந்தா, இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு உன்னைய கூப்பிடுறோம்.அப்புறம் உன்னோட இஷ்டம்” என்று கொஞ்சம் கோபமாக பேசுவதை போல் பேச
“இல்ல நான் வரேன் “என கூறிக்கொண்டே திவ்யாவோடு கேண்டினுக்கு சென்றாள் சிந்து.
குணா, மணி,ஷாலினி , வருண் என நால்வரும் கேண்டினில் அமர்ந்திருக்க சிந்துவும் திவ்யாவும் வந்தனர்,
ஆறு டீ கப்புகளையும்,பட்டர் பன்னையும் ஆர்டர் செய்து வைத்திருந்தனர்
ஆறு பேரும் டீயை எடுத்து குடித்துக் கொண்டே இருக்க,
ஷாலினி சிந்துவை பார்த்து
“ லவ்வ பத்தி என்ன நினைக்கிற சிந்து” எனக் கேட்டாள். சில நொடி எதையோ யோசித்து விட்டு அங்கு அமர்ந்திருந்த சூர்யாவை ஒரு முறை பார்த்தாள்.
பின்பு “லவ்வா?” என்று விரக்தியாக சிரித்தாள்.
அதைப் பார்த்த மணி
“உனக்கு காதல் நம்பிக்கை இல்லையா?” என கேட்டான்.
“ம்!” என்றாள் ஒற்றை வார்த்தையாக!
“ஏன்” என்று குணா கேட்க,
“ அது அப்படிதான்…. காதலுனுங்கு வார்த்தை கேக்குறதுக்கு அழகா இருக்கும். ஒரு தடவை அதுக்குள்ள போயிட்டா வெளியில் வர முடியாது ஒவ்வொரு நாளும் வலி தான்” என்று சொன்னவளின் விழிகளில் கண்ணீர் தழும்பியது.
“வலியும் இருக்கும் அதை விட சந்தோசமும் அதிகமா இருக்கும்” என்று திவ்யா சொல்ல,
“தெரியல, நான் பார்த்தவரை காதல் உயிரைக் கொல்லுற உயிர் கொல்லி தான் “என்று விரக்தியாக சிரித்தாள். அதைப் பார்த்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ சாரி கைஸ், நீங்க பேசுங்க நான் போறேன்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“என்ன மச்சான் இப்படி சொல்லிட்டு போறா?” என்றான் மணி.
“பேசாம கனவோடையே உன் காதல நிறுத்திக்க நிஜத்துல உன் காதலை சிந்துக் கிட்ட சொல்லணும் நெனச்சின்னா,
அவகிட்ட பிரண்டா இப்ப பேசுற பேச்சையும், பேச முடியாம போயிரும்” எனக் சிரித்தான் குணா.
“காதல்னாவே வலிதான்னு நினைக்கிறவ எப்படி உன் காதலை ஏத்துப்பா” என்று மணி கேட்க
“அதுக்கு வாய்ப்பு இல்ல” என்றாள் திவ்யா.
“ காதல்னா வலிதான்னு நினைக்கிற அவளுடைய எண்ணத்தை மாத்தி அது அழகான உணர்வுன்னு அவளுக்கு புரிய வச்சதுக்கு அப்புறம் என்னோட காதல அவ கிட்ட சொல்லுவேன்” என்றான் வருண்.
இவர்கள் அனைவரும் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஷாலினி யோசித்துக் கொண்டே
“டேய் வருண் அவ முகத்தை பார்த்தியா?
அவ யாரையாவது காதலிச்சு ஏமாந்து இருப்பாளோ?அதான் இப்படி விரக்தியா பேசுறா போல” என்று சொல்ல அதிர்ந்து விட்டான் வருண்
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்கள் மதிப்பீடுகளையும், விமர்சனங்களையும் கமெண்ட்களில் பதிவிட்டுச் செல்லுங்கள்,