Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 9

CHAPTER 9

மலர்மாலை – 9

By Yuva Sri · November 14, 2026

0

ரகுவின் வீடு,,

ரகு வீட்டில் கார் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு தன் அவளை திரும்பி பார்த்தான் ஈசன்,

அவளும் அவனைப் பார்த்தாள்,

தன்னை பார்க்கும் அவளை பார்த்து இறங்கு துர்கா என்றவன் காரில் இருந்து இறங்க,

அதன் பிறகு துர்காவும் இறங்கினாள்,

அவர்கள் வருவது அந்த காரின் சத்தத்தை வைத்து புரிந்து கொண்ட வைதேகி வேகமாக உள்ளிருந்து வெளியே வந்து, இருவரையும் வரவேற்க காத்துக் கொண்டிருந்தாள்,

இருவரும் காரை விட்டு இறங்கி நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்க அவர்களை பார்த்த வைதேகி,

வாங்க அண்ணா வா துர்கா ஹாப்பி மேரேஜ் லைப் 💐என்று சொன்னவள் துர்காவின் கைபிடித்து அழைத்துக் கொண்டு சென்றவள் வாங்கண்ணா என்று சொல்லிவிட்டு சென்றாள்,

அவளும் தன் மனைவி நடந்து போவதை பார்த்துக் கொண்டே நடந்து சென்றான் உள்ளே,

இத்தனை நாள் குழந்தையாக பார்த்துக் கொண்டிருந்தவளை குமரியாக தனக்கு மனைவியாக பார்க்கும் பொழுது,

அவன் மனதும் ஏதோ இனம் புரியா இன்பத்தில் தான் திளைத்தது,,

ஆனால் அவளிடம் நெருங்க முடியவில்லை அவள் வயது தடுக்கிறது,,

வா ஈசா உனக்காக தாண்டா காத்துட்டு இருக்கேன் என்று ரகு ஓடி வந்து தன் நண்பனின் கையைப் பிடிக்க,

அவனும் அதற்கு சிரித்து விட்டு,

என்னடா புதுசா நான் இந்த வீட்டுக்கு வர மாதிரி வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு என்று சொல்லிக் கொண்டே சிரிக்க,

டேய் இத்தனை நாளா நீ வந்தது என் பிரண்டா மட்டும்தான்,

ஆனா இன்னைக்கு என் துர்காவோட  ஹஸ்பண்டா வந்திருக்க அப்போ உனக்கு வரவேற்பு அதிகமா இருக்கணும் தானே என்று சொல்ல,

அதற்கு சிரித்துக் கொண்டே ரகுவை பார்த்த துர்கா, எங்கே அஜய்யை காணோம் என்றாள்,

அஜய்க்கு படிக்கிற வேலை இருக்கு அதனால மேல படிச்சிட்டு  இருக்கான்,, வேணும்னா அழைச்சிட்டு வரட்டா என்று வைதேகி கேட்க,

ஐயோ வேண்டாம் அக்கா அவன் படிக்கட்டும் அதுதான் முக்கியம். என்றவள்,

என்ன சமைச்சு இருக்கீங்க வாசனை இங்க வரைக்கும் வருது,, உடனே சாப்பிடணும் போல இருக்கு என்றாள்,.

.

எல்லாம் துர்காவுக்கும் எங்க அண்ணனுக்கும் பிடித்தது தான் செஞ்சிருக்கேன் என்றவள்,

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என் ரூமுக்கு வரியா என்று கேட்க,

என்ன பேசப் போறீங்க மாமாவ எனக்கு உண்மையாவே புடிச்சிருக்கா இல்ல அந்த மாதிரி பிரச்சனை ஆனதுனால கல்யாணம் பண்ணிக்கிட்டியா அப்படித்தானே கேட்கப் போறீங்க அக்கா என்றாள்,

ஏய் துர்கா எப்படி நீ நான் நினைத்ததை அப்படியே சொல்லிட்டே என்று வைதேகி கேட்க,

எனக்கு தெரியும் நீங்க மட்டும் இல்ல இந்த கல்யாணம் நடந்ததிலிருந்து எல்லாரும் இதைதான் கேக்குறாங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி பதில் சொல்லி சொல்லி எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்றவள்,

ஆனா நான் அதுதானே சொல்ல முடியும் அதுதானே உண்மை என்றவள்,

உங்களுக்கு மட்டும் இல்ல இங்க இருக்குற எல்லாருக்கும் சேர்த்து சொல்றேன்,

எனக்கு மாமாவ ரொம்ப பிடிச்சிருக்கு, இந்த கல்யாணம் வேணும்னா ஏதோ ஒரு சூழ்நிலைல நடந்து இருக்கலாம்,,

ஆனா இந்த கல்யாணம் முடிந்ததிலிருந்து நான் மாமாவ விரும்ப ஆரம்பிச்சுட்டேன் அக்கா, இனிமே என் வாழ்க்கையில என் மாமா மட்டும் தான் நான் சாகுற வரைக்கும் இல்ல அவரு சாகுற வரைக்கும் என்றவள் அவனைப் பார்த்துக் கொண்டே சொல்ல,

துர்கா நீ ரொம்ப நல்லா பேசுற அதுவும் கரெக்ட்டா பேசுற, என் நண்பன அப்படியே பிடிச்சுக்க அவனை விட்டுடாதம்மா என்றான்,

கண்டிப்பா விட்டு விட மாட்டேன் இனிமே அவர் வாழ்க்கையில நான் மட்டும் தான் என்றவள்,

ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா என்று தன் மாமாவை பார்த்துக் கொண்டே கேட்க,

என்ன நீ சாப்பிடுவதிலேயே இருக்க ரொம்ப பசியோ சரி சரி வாங்க முதல்ல சாப்பிடலாம் அப்புறம் பேசலாம் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு போய் சாப்பாட  பரிமாற தொடங்கினாள் வைதேகி,,

இரவு உணவு ரொம்ப அருமையாக சமைத்து வைத்திருந்தாள் நான் வெஜ் தான்,

சிக்கன் மட்டன் ஃபிஷ் என்று ஒன்று விடவில்லை அனைத்தையும் சமைத்து வைத்திருக்க,

அதை பார்த்து முகம் மலர்ந்த துர்கா நன்றாக சாப்பிட தொடங்கினாள்,

ஈசானும் தான்,,

என்ன இது ரெண்டு பேரும் உங்க பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்கீங்க என்றவள் இருவரையும் பார்க்க,

அதற்கு இருவரும் அவளைப் பார்த்தனர்,

அதுவும் கேள்வியாக,,

என்ன அப்படி பாக்கறீங்க உங்க பாட்டுக்கு நீங்களே சாப்பிட்டுட்டு இருந்த எப்படி,,,, ஒருத்தரை  ஒருத்தர் ஊட்டிக்க மாட்டீங்களா என்றவள் அண்ணா துர்காவுக்கு ஊட்டி விடுங்க என்றாள்,

ஐயோ வைதேகி அதெல்லாம் வேண்டாமா என்று ஈசன் சொல்ல,

டேய் ஊட்டி விடு டா துர்காவுக்கு என்றவன்,

நானும் வைதேகியும் கல்யாணம் பண்ணிட்டு வரும் பொழுது எங்களை என்னென்ன டார்ச்சர் பண்ண அதெல்லாம் மறந்துட்டேன்னு நினைக்கிறியா? எத்தனை வருஷம் ஆனாலும் மறக்காதடா என்று ரகு சொல்ல,

நீ கல்யாணம் பண்ணிட்டு வரும் பொழுது உனக்கு 25 வயசுடா எனக்கு இப்ப 45 வயசு, அதுவும் ஒரு சின்ன பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கேன்,,

எனக்கு இந்த பொண்ண கூட்டிக்கிட்டு இங்க வர்றதுக்கு கூட ஒரு மாதிரி இருக்குடா அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி அவளுக்கு ஊட்டி விடறது இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றவன்,,

துர்கா நீ சாப்பிடு என்றான்,

முடியாது வைதேகி அக்காவும் அவரும் சொல்ற மாதிரி நாம ஒருவரை ஒருவர் ஊட்டிக்கணும் என்றவள் தன் கையில் இருந்த ஒரு பிடி சாதத்தை அவன் வாய்க்கு நேராக கொண்டு போனாள் துர்கா,,

துர்கா அவங்க தான் ஏதோ விளையாடுறாங்க, நீயுமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்  சாப்பிடு என்றான்,

மாமா ப்ளீஸ் என்றவள் அவன் கையைப் பிடித்து எனக்காக வாங்கிக்கோங்க என்று கண்களை சுருக்கி அவனைப் பார்த்து கேட்க,

அவனும் அவளைப் பார்த்தான் அவள் முகத்தை பார்த்தான் அவள் கண்களைப் பார்த்தான்,,,பார்த்தவன் தன்னையும் மறந்தான் அந்த நொடியில், எவ்ளோ அழகான கண்கள் அவளுக்கு   நொடி பொழுதில் மனதை மயக்கிடுதே   என்று அந்த நிமிஷத்தில் நினைத்தவன் எதுவும் சொல்லாமல் வாய் திறக்க,

அவன் வாய் திறந்து தான் தாமதம் என்று அவனுக்கு ஊட்டி விட்டவள்,, குழந்தை போல் ஆ,,,,,என்று தன் வாயை திறந்தாள்,🌷

அதுவும் அவன் முகத்துக்கு நேராக தன் முகத்தை எடுத்துக் கொண்டு போய்,

குழந்தை மாதிரி வாயை திறந்து கொண்டு வந்த அவளை ஏமாற்ற மனம் இல்லாமல் அவனுக்கு,,,

கொஞ்சம் சாதம் எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்,

ஊட்டி விட்ட அவன் விரலை நறுக்கென்று கடித்துவிட்டாள் துர்கா,

அவ கடித்த உடன் வலி கொடுத்தது  அவனுக்கு அதனால் ஆஆ,,,, என்றவன் கத்த,

ஐயோ சாரி மாமா தெரியாம கடிச்சுட்டு என்றவள் வேகமாக அவன் கையைப் பிடித்து தன் கடித்த அந்த விரலை தன் வாயில் வைத்து உறிஞ்சி எடுத்தாள் வலி தெரியாமல் இருக்க,,

அவள் அவ்வாறு  செய்ய பாவம் ஆண்மகனின் மனசு   ஒரு நிலையில் இல்லை,, அவள் எச்சில் ஈரம் சூடாக இருக்க,,

அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,

ரொம்ப வருஷங்களாக இல்ல இல்ல எப்பொழுதுமே பெண்ணின் வாடையே இல்லாமல் இருந்தவனுக்கு, அவளின் இந்த செயல் அவன் மனதை ஏதேதோ செய்தது,

தடுமாறினான் ஈசன்,

தடுமாறியவன் வேகமாக அவள் வாயிலிருந்து தன் கையை உருவி எடுத்தவன்,

எனக்கு வலிக்கல துர்கா  நீ சாப்பிடு என்றவன் சாப்பிட தொடங்கினான்,

வலியும் கொடுத்து சுகத்தையும் கொடுக்க பெண்ணால் மட்டும் தான் முடியுமோ என்று மனதில் நினைத்துக் கொண்ட சாப்பிட்டான்,,,

 அவனுக்கு அவளின் ஸ்பரிசமும்  வேண்டும் என்று தோன்றியது அந்த நொடி,,

அடம்பிடித்த தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான்,

நேரங்கள் சென்றது சாப்பிட்டு முடித்தவர்கள், ஒருவரை ஒருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்துவிட்டு,

சரி போகலாமா துர்கா என்று கேட்டான் ஈசன் ,

அது எப்படி போக முடியும் உங்க ரெண்டு பேருக்கும் நைட் ஷோ சினிமாவுக்கு டிக்கெட் எடுத்து வச்சிருக்கேன் என்றவன் வைதேகி அதை எடுத்துட்டு வா என்று சொல்ல,,

அவளும் போய் டிக்கெட்டை எடுத்துட்டு வந்து கொடுக்க,

இந்தா இது ஹாலிவுட் ரொமான்டிக் மூவி தான், ஆனா ரொம்ப நல்ல படம்டா ஹஸ்பண்ட் வைஃப் பார்க்கலாம், அதனாலதான் உங்க ரெண்டு பேருக்கும் டிக்கெட் எடுத்து வச்சேன் போய் பாத்துட்டு அப்படியே வீட்டுக்கு போங்க என்றவன் நாங்க இத நேத்து தான் போய் பார்த்தோம் செமையா இருந்தது எங்களுக்கு பிடிச்சது அப்படி தானே வைதேகி என்று ரகு சொல்ல,

நிஜமா தான்,,ஃபேமிலியா போக முடியாது ஆனா ரொமான்டிக் மூவி என்பதனால் ஹஸ்பண்ட் வைப் போகலாம் ரொம்ப அழகான மூவி போய் பாத்துட்டு வாங்க என்றனர்,

ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் எனக்கு கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் இருக்கு என்றவன்,,,

நீங்க என்ன பண்ணுங்க இன்னைக்கும் போய் இந்த படத்தை பார்த்துட்டு வாங்க என்று எழுந்து நின்று துர்கா  போகலாம் என்றான்,

மாமா அதான் ரெண்டு பேரும் இவ்வளவு சொல்றாங்க இல்ல  படத்துக்கு போனா என்ன என்று அவள் சொல்ல,

ஏய் என்ன நினைத்துவிட்ட ஏதோ என் பிரண்டு கூப்பிட்டான் அவன் பேச்சை தட்ட முடியாம தான் இங்க வந்து இருக்கேன்,

மத்தபடி உன்ன நான் என் மனைவிய ஏத்துக்கல புரிஞ்சுக்க,

நீ ரொம்ப சின்ன பொண்ணு உன் வயசு கோளாறுல இப்படி பேசிட்டு இருக்க, உனக்கு உணர்வுகள் உணர்ச்சிகள் இந்த வயசுல  வரதான் செய்யும்,,

ஆனா நான் அப்படி கிடையாது,, என்னுடைய உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் செத்து போச்சு,

ப்ளீஸ் என்ன ரொம்ப கம்பெல் பண்ணாதே, பிடிக்காத ஒரு விஷயத்தை என் மேல திணிக்க நினைக்காதே என்று கொஞ்சம் கோபமாக பேசி விட்டான்,

அவன் அவ்வாறு பேச முகம் வாடிப்போன துர்கா,

எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும், ரொம்ப நல்லா இருக்கும் அதனாலதான் உங்க கூட பார்க்கணும்னு கூப்பிட்டேன் என்றவள் ,,,

அது ஒரு தப்பா அதுக்கு எதுக்கு இப்படி மனசு நோகுற மாதிரி பேசுறீங்க என்றவள் சரி வாங்க வீட்டுக்கு போகலாம் என்றவள் ரகு வைதேகி இருவரிடமும் சொல்லி விட்டு அஜய கேட்டனு சொல்லுங்க என்றவள் முன்னாடி நடக்க,

ஏய் வாலு நீ என்ன சொன்ன இந்த படத்தை பார்த்துட்டியா எப்ப பார்த்த என்று வைதேகி சிரித்துக்கொண்டே   கேட்க,

நீங்க என்ன புது படத்துக்க டிக்கெட் எடுத்து வச்சிருக்கீங்க, இந்த படம் வந்து 5 வருஷத்துக்கு மேல  ஆச்சு, இது ரீ ரிலீஸ் தான்,  படம் ரொம்ப நல்லா இருக்கும் அதனால ரீ ரிலீஸ் பண்ணி இருக்காங்க,,,,,நான் காலேஜ் படிக்கும் பொழுதே பார்த்துட்டேன் என்று சொன்னவள் தன் மாமனை பார்க்க,,

பாவம் ஈசனுக்கு அந்த படத்தை பத்தி தெரியல,, என்ன இது இவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் ஒய்ஃப் பார்க்கிற படம்னு சொன்னாங்க,,, ஆன இவ காலேஜ் படிக்கும் பொழுதே பார்த்துவிட்டேன் என்று சொல்றா,, அப்ப காலேஜுக்கு  படிக்க போகல சினிமா அது இதுன்னு சுத்துறதுக்கு தான் போயிருக்காளா என்று நினைத்தவன்,

அப்படி என்ன இருக்கு இந்த படத்துல என்று உடனே பார்க்கணுமே என்று அவன் மனதிலும் அந்த நேரம் ஆசை தோன்ற,

திரும்பி தன் நண்பனை பார்த்தான்,

பாத்தியாடா அந்த பொண்ணு காலேஜ் படிக்கும் பொழுதே இந்த படம் பார்த்து இருக்கு,

நீ என்னடனா இந்த வயசுல இந்த படத்துக்கு போறதுக்கு இவ்வளவு தயங்குற ,,

நான் உன்ன துர்கா கூட சந்தோஷமா வாழுன்னு சொல்லல, ரெண்டு பேருக்கும் டின்னர் ரெடி பண்ணிட்டு ரெண்டு பேருக்கும் கொஞ்சம் ரொமான்ஸ் மூவியோட டிக்கெட் வாங்கி வச்சேன் அது தப்பா என்றவன்,சரி விடுடா தப்புதான் அதனால ,,, நானே என் பொண்டாட்டி கூட்டிக்கிட்டு   இன்னிக்கும் படத்துக்கு போறேன் என்று அவன் சொல்ல,,

அதற்கு ஈசனுக்கு என்ன தோன்றியதோ ஏதோ தெரியவில்லை,

சரிடா ரொம்ப இழுக்காதே டிக்கெட்டை  கொடு போயிட்டு வருகிறோம் என்றவன்,, இன்னைக்கு  போயியே ஆகணுமா இல்ல இன்னொரு நாள் கூட போகலாமா என்று கேட்டான்,❤️

இல்லடா அந்த மாதிரி எதுவும் இல்லை  இன்னைக்கே போங்க போய் படத்த பாத்துட்டு ஜாலியா இருந்துட்டு வீட்டுக்கு போங்க என்றவன்,

ஜாலியானு சொல்றது படத்தை என்ஜாய் பண்ணி பார்த்துட்டு அதுக்கும் போங்கன்னு சொல்றது,,, அது வேற தப்பா புரிஞ்சுகிட்டு திரும்பவும் வயசு அது இதுன்னு பேசிட்டு இருக்காதடாப்பா சாமி கிளம்பு என்றான் ரகு,

அதற்கு எதுவும் சொல்லாதவன் சரி வரேன் வைதேகி வரேன் டா என்று சொல்லிவிட்டு துர்கா பின்னாடி இவன் போக,

இவர்களை வழி அனுப்ப ரகு வைதேகி வெளியே வர,

துர்கா இவனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள் கார் எடுத்துட்டு வருவதற்காக,

நான் வெளியே வர முடிஞ்சது ஆனா நீங்க கார் எடுத்துட்டு வந்தா நானே வீட்டுக்கு போக முடியும் அதனால் தான் வெயிட் பண்றேன்,

மத்தபடி ஒன்னும் இல்ல என்றவள் சரி போய் சீக்கிரம் கார் எடுத்துட்டு வாங்க கிளம்பலாம் தூக்கம் வருது என்று இவள் சொல்லி முடிக்கவில்லை,,

ரகுவின் வீட்டு வாசலில் வந்து ஒரு கார் நின்றது,

கார் வந்து நின்றவுடன் அனைவரும் அந்த காரை பார்க்க,,

அதிலிருந்து முதலில் மகேஷ் இறங்கினான் பிறகு மாயா இறங்கினாள்,

அவள் இறங்கியதை பார்த்தவுடன் ஒரு மாதிரி அதிர்ச்சி அடைந்து தடுமாறி முகம் எல்லாம் வாடி போனது ஈசனுக்கு,,,,😔

தொடரும்😍

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!