Stories that touch hearts

Home  /  செழியனின் செங்குருதி (சீமா)  /  Chapter 1

CHAPTER 1

செழியனின் செங்குருதி

By seema · September 27, 2026

0

சிதம்பரம்:

சிதம்பரம் சார்பதிவாளர் அலுவலகம் வழக்கம்போலவே மக்கள் கூட்டத்தால் அலைமோதிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஒரு மூலையில் மட்டும் ஒருவிதமான அமைதி கலந்த பதற்றம் நிலவியது. மணமக்களும், அவர்களுக்குப் பக்கபலமாக வந்திருந்த நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட அஞ்சினர்.உள்ளுக்குள் இருக்கும் படபடப்பை வெளியில் காட்டிவிடக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தார்கள்.

மணமகளின் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருக்க, மணமகன் தான் அவளது கரங்களைப் பற்றி ஆறுதல் தந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது.அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென அங்கிருந்த டிஜிட்டல் பலகையில் அந்த இரண்டு பெயர்கள் மின்னி மறைந்தன.

“ஹேய்… நம்முடையது தான்! கூப்பிட்டுட்டாங்க!” என்று உற்சாகமாகச் சொன்னபடி, அந்த நண்பர் குழாம் உள்ளே நுழைந்தது.அலுவலகத்தின் அந்தப் பெரிய மேசைக்கு முன்னால், சாட்சிகள் கையெழுத்திட, சட்டப்படி அந்தத் திருமணம் இனிதே நிறைவேறியது. ஒரு நீண்ட போராட்டத்தின் முதல் வெற்றி அது. வெளியே வந்தபோது, இளஞ்செழியனின் முகம் நிம்மதியையும் அதே சமயம் ஒருவித எச்சரிக்கையையும் காட்டியது.

நண்பர்களில் ஒருவனான பாபு ஏதோ பேச முற்பட, அதைத் தடுத்த இளஞ்செழியன், “அருண், இப்போ நமக்கு பேச நேரமில்லை. கார் அங்கே தயாரா நிக்குது. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்புங்க. பாதுகாப்பான இடத்துக்குப் போனப்புறம் மத்ததை நேரில் பேசிக்கலாம்,” என்று குரலில் உறுதி காட்டினான்.

அருகில் இருந்த இன்னொரு நண்பனான மருது, ஆமாம் டா செழியன் சொல்வது சரி…நீங்கள் முதலில் கிளம்புங்கள் என்று இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த வாகனம் சாலையின் திருப்பத்தில் மறையும் வரை செழியன் அசைவற்று நின்று கொண்டிருந்தான். ஒரு பெரிய பொறுப்பு அவனிடமிருந்து விலகியது போன்ற உணர்வு.

அப்போது மருது, செழியனின் தோளைத் தட்டி அவனை நிகழ் உலகிற்கு இழுத்து வந்தவன். “செழியா, நாமளும் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பணும்டா. பாரதி அப்பாவிற்கு இவ்வளவு நேரம் விஷயம் நிச்சயம் போயிருக்கும். இந்நேரம் ஆட்களோட தேடி வந்துட்டு இருப்பாரு,” என்றான் பதற்றத்துடன்.பின்னர் மீதமிருந்த நண்பர்களிடம், “மச்சான், எல்லாரும் கிளம்புங்க. போன்ல பேசிக்கலாம்,” என்று சைகை காட்டிவிட்டு, செழியனை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டான் மருது.

பைக் வேகம் எடுத்தது. காற்றின் இரைச்சலையும் தாண்டி, பின்னால் ஏதேனும் வாகனம் துரத்தி வருகிறதா என்று செழியன் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டான்.அரைமணி நேர பயணத்தில், பைக் சிதம்பரம் ரயில் நிலையத்தின் வாசலில் வந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக செழியன் செல்ல வேண்டிய ரயிலும் அதே நேரத்தில் முதலாம் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது.“மச்சான், எதாக இருந்தாலும் போன் பண்ணு. எதுவும் பயப்படாத,” என்றான் மருது.

“சரிடா… நீயும் ஜாக்கிரதையா இரு,” என்று சொல்லிவிட்டு லக்கேஜோடு தன் பெட்டியைத் தேடி ஓடினான் செழியன்.உள்ளே போனவனோ தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

சிறிது நொடிகளில் ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவனுக்கு, கடந்த சில நாட்களாக நடந்த போராட்டங்கள், அருண்-பாரதி திருமணம், நண்பர்களின் உதவி என அனைத்தும் ஒரு திரைப்படத்தைப் போல அவன் மனக்கண்ணில் ஓடத் தொடங்கின. அந்தப் பயணம் வெறும் ஊருக்கான பயணம் அல்ல, ஒரு புதிய வாழ்விற்கான தொடக்கம் என்பதை அவன் மட்டுமே உணர்ந்த உண்மை..செழியன் நினைவுகள்:காரையூர், கொள்ளிடம் ஆற்றங்கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாய பூமி…அந்த கிராமத்தின் பஞ்சாயத்தார் நகுலன்..இந்தப் பதவி, வழியாக அவர்கள் குடும்பதாரோடு தொடர்கிறது. ஏன் இப்படி என்று கேட்க தான் நாதியில்லை..காரணம் பணம், செல்வாக்கு. ஊருக்குள் பாதி சொத்துக்கு அதிபதியானவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சர்க்கரை, இரண்டாவது மகள் ஜானகி. ஐந்தாவது வரைக்கும் பயிலும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியும் ஊருக்குள் இருக்கின்றன..அதற்கு மேலே படிக்க வேண்டும் என்றால் கிழக்கு பக்கம் இருக்கும் ஊரான சீர்காழி இல்லை மேற்கு பக்கம் இருக்கும் சிதம்பரத்திற்கு தான் பஸ்ஸில் ஏறி செல்லவேண்டும்.இதன் காரணமாகவே பெரும்பாலான பெண் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பை தாண்டாமல் வீட்டில் இருப்பதும், வயல் வைத்திருப்பவர்களோ அவர்களது வயலுக்கு வேலைக்கு செல்வதும், இல்லாதவர்கள் இருப்பவர்கள் நிலத்தில் வேலைக்கு செல்வதுதான் காலம் காலமாக தொடர்கிறது.ஜானகியை தனது அக்கா மகனுக்கு கட்டிக் கொடுத்த நகுலன், இரண்டு ஆண்டுகள் சென்று மகனுக்கும் வரன் பார்க்கலானார்.அப்படி பொண்ணு தேடும் போது தூரத்து உறவிலிருந்த வந்த வரனான கனகு-வின் சாதகம் பொருந்தி போக, சுபயோக சுப நாளில் சர்க்கரை- கனகு திருமணம் வல்லம்படுகையில் இருக்கும் நகுலனின் இல்லத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.சர்க்கரையாவது அதே பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பாவது படித்திருக்கிறான்.ஆனால் கனகுவோ மழைக்கும் பள்ளி ஓரத்தில் ஒதிங்கியதில்லை.ஆனாலும் குடும்பத்தை தாங்கி பிடிக்கும் அளவுக்கு பொறுமையான குணத்தை கொண்டவள். இருவரின் வாழ்க்கை கேளி கிண்டல்கலுடன் போக, மறாவது வருடத்தில் தலைச்சம் பிள்ளையாக மகளை பெற்றெடுத்தாள்.மகள் பிறந்த சந்தோஷத்தில் சர்க்கரை அன்று வயலில் வேலை செய்பவர்களுக்கு ஒரு ஆள் சம்பளத்தை உயர்திக் கொடுக்க, நகுலன் தான் மகனை முறைத்தார். இருந்தும் என்ன செய்ய முடியும்?.இனாயமாக கொடுத்த பணத்தை திருப்பி வாங்குவது அவருக்கு கௌரவ குலைச்சல் என்பதால் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாகிவிட்டார்.சர்க்கரைக்கும் அவனது மனைவி கனகுவுக்கும் அழகான பெண் குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகிவிட்டன. கிராமத்து வழக்கப்படி, நல்ல நேரம் பார்த்து, குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு குழந்தைக்குப் பூஜை செய்யப்பட்டது.ஊர் பெரியவர்கள் முன்னிலையில், சர்க்கரை தன் மகளின் காதில் “ராணி… ராணி… ராணி…” என்று மூன்று முறை மென்மையாகச் சொல்லிப் பெயர் சூட்டினார். தன் குட்டி இளவரசிக்கு ‘ராணி’ என்று பெயர் வைத்ததில் சர்க்கரைக்கு அத்தனைப் பெருமை.சடங்குகள் முடிந்ததும் கனகுவின் பெற்றோர் மெல்லப் பேச்சுக் கொடுத்தனர். “மாப்பிள்ளை, இது முதல் பிரசவம். அதுவும் சுகப்பிரசவம் என்பதால் உடம்பு தேற இன்னும் கொஞ்ச நாள் ஆகும். இன்னும் ஒரு மூணு மாசம் கழியட்டும், அப்புறம் நாங்களே குழந்தையையும் அவளையும் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுடுறோம்,” என்று அன்புக் கட்டளையிட்டனர்.மனதிற்குள் லேசான வருத்தம் இருந்தாலும், மனைவியின் நலன் கருதி சர்க்கரை அதற்குச் சம்மதித்தான். தன் உயிரையே அங்கே விட்டுவிட்டு வருவது போன்ற பாரத்தோடு, பெற்றோருடன் கிளம்பித் தன் ஊரான காரையூருக்கு வந்து சேர்ந்தான்.காரையூர் வந்த சர்க்கரைக்கு வீடு வெறிச்சோடி இருந்தது. அந்தத் தனிமையைப் போக்க அவன் தன் முழு கவனத்தையும் வயல் வேலையில் செலுத்தினான்.அதிகாலையிலேயே கலப்பை தூக்கிக் கொண்டு வயலுக்குப் போவான்.களை எடுப்பது, நீர் பாய்ச்சுவது எனத் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்.ஆனாலும், ராணியின் பிஞ்சு முகமும், கனகுவின் நினைவும் அவனை வாட்டியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேருந்து பிடித்து மாமியார் ஊருக்கு ஓடிவிடுவான்.தன் மகளைக் கொஞ்சி விளையாடிவிட்டு, “இன்னும் எத்தனை நாள்?” என்று ஏக்கத்துடன் கேட்டுவிட்டுத் திரும்புவான்.நாட்கள் நகர, மூன்று மாதங்கள் முடிவுக்கு வந்தன. சொன்னபடி கனகுவின் பெற்றோர், தாய்-சேயைத் தயார் செய்து சர்க்கரையின் ஊருக்கே வந்து விட்டனர். காரையூர் வீடே மீண்டும் உயிர் பெற்றது. தன் மகளைத் தன் கைகளால் ஏந்திய சர்க்கரை, இனி அவளைப் பிரியப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.ராணி அதே காரையூர் மண்ணில் தவழ்ந்து, எழுந்து ஓடத் தொடங்கினாள். காரையூர் பள்ளியிலேயே அவளுக்குப் படிப்பு ஆரம்பமானது. காலையில் அப்பா வயலுக்குப் போகும்போது, ராணி தன் பள்ளிப் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வாள்.மாலையில் சர்க்கரை வயலில் இருந்து திரும்பும்போது, ராணி ஓடிவந்து “அப்பா!” என்று கட்டிப்பிடிப்பதைக் காணும் போது, உடம்பின் வலி எல்லாம் ஒரு நொடியில் மறைந்துவிடும். சர்க்கரையின் செல்ல மகளாக ராணி வளர்ந்து வந்தாள்.ராணியை விட ஐந்து வயது மூத்தவன் குமார். அதே ஊரைச் சேர்ந்த வேலு- கனி இருவரின் இளைய மகன். மூத்தமகளை சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.ராணி ஒன்றாம் வகுப்பு அந்த பள்ளியில் சேரும் போது குமார் ஐந்தாம் வகுப்பு படித்தான்.வருடங்களும் ஓட குமார் தனது தாத்தா ஊரான சீர்காழியில் தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஊருக்குள் வந்தான்.மேற்படிப்பு படிக்க அவ்வளவு வசதி இல்லாத காரணத்தினால் அவனது அப்பா வேலு கூட சேர்ந்து அவர்களிடம் இருந்த சொற்ப நிலத்தில் குமாரும் வேலை பார்க்க ஆரம்பித்தான்.ராணியும் தனது பத்தாம் வகுப்பை முடித்தவள், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது அப்பாவுக்கு அன்று மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு போனாள்.ஆற்றின் ஓரமாக தான் விவசாய நிலங்கள் இருப்பதால் ஊருக்குள்ளிருந்து மலை போல இருக்கும் மேடான பகுதியை தாண்டி பின்னர் கீழே இறங்கி தான் விளை நிலங்களுக்கு போக வேண்டும்.அக்கம் பக்கத்தில் எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் யாருக்கும் அந்த இடத்தில் சென்று வர பயம் இருப்பதில்லை.அன்று ராணியும் மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு போனவள் வழியில் இருந்த மா மரத்தில் மாங்காய் இருப்பதை பார்த்தவளுக்கு எச்சில் ஊரியது. இந்த மரத்தில் இருக்கும் பழமும் காய்களும் அவ்வளவு இனிப்பாக இருக்கும்.ராணி வீட்டிலும் மாமரங்கள் இருக்கிறது ஆனால் இதன் சுவை அதில் வருவதில்லை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவள் இடுப்பில் இருக்கும் கூடை இறக்கி ஓரமாக வைத்துவிட்டு, இடுப்பு தாவணியை தூக்கி சொருவிக் கொண்டு மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக் கொண்டிருக்கும்போது குமாரும் அவனது நண்பனும் பாலுவும் அந்த இடத்துக்கு வந்தவர்கள்,சாப்பாடு கூடையை பார்த்தனர். யார் இந்த சோத்து கூடை கொண்டு வந்து வச்சிருக்காங்க என்று வேலு போய் பார்க்க யாருதுன்னு தெரியாம நீ ஏன்டா கைய வைக்கிறேன் என்று குமார் திட்டினான்.இவர்களின் குரலை கேட்ட ராணிக்கு பயம் வந்துவிட்டது பஞ்சாயத்துக்காரர் பொண்ணு இப்படி மாங்கா திருடறது தெரிஞ்சா எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே அவளுக்கு அழுகை வர, அவள் போதாத நேரமோ தாவணியில் முடிந்து வைத்திருந்த மாங்காய்கள் கனம் தாங்காமல் கீழே விழ,அது சரியாக குமாரின் தலையில் விழுந்தது.ஒரே நேரத்தில் நாலஞ்சு காய்கள் திடுதிப்பென விழவும் அலறி அடித்து ஓடியவன், எலேய் மரத்து மேல யார்னு பாருடா என்றவனோ தலையை தேய்த்து விட, எந்த களவானினு தெரியலையே என்று வேலுவும் எட்டிப் பார்க்க, மேலே இருக்கும் கிளைகளில் ராணி பயந்து கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிந்து.யாரும் இல்லை என்ற தைரியத்தில் மரத்தின் மேலேறி மாங்காய் பறித்த ராணி, குமார் மற்றும் பாலுவிடம் மாட்டிக்கொண்டாள்.”பஞ்சாயத்துகார வூட்டு அம்மா லட்சணத்தைப் பாரு மச்சான்! படிக்கிறதை விட்டுட்டு இப்படி மாங்காய் திருட ஆரம்பிச்சிட்டீயா?” என்று நக்கலாக பாலு கேட்க, “அண்ணா…” என்று அவள் மரத்தின் மேலிருந்து பயந்துகொண்டே கூறினாள்.”மெதுவாப் பார்த்து இறங்கு, கை கால் உடைஞ்சிடப் போகுது. நல்லா இருக்கிற பிள்ளைகளுக்கே மாப்பிள்ளை கிடைக்க மாட்டேங்குது, இதுல கை கால் போச்சுன்னா என்ன ஆகும்?” என்று குமார் சொல்ல, “அப்பாகிட்ட சொல்ல மாட்டீங்களே?” என்று பயந்து கொண்டே மாமரத்திலிருந்து கீழே இறங்கியவள், வரப்பின் மேல் வைத்திருந்த சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.தூரத்தில் கூடையோடு நீள முடி அசைய ஓடுபவளையே பார்த்த குமாருக்கு, முதல்முறையாக அவள் மீது ஒரு ரசனை பிறந்தது. அவள் அழகை ரசித்துப் பார்த்தவன், “பெரிய வீட்டுப் பொண்ணு… இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது” என்று தன் மனதை தடுத்துக் கொண்டான்.”அவ்வளவு பெரிய பணக்கார வூட்டுப் பிள்ளை, நம்ம வூட்டு மாமரத்துல மாங்காய் திருட வந்திருக்கே…” என்னத்த சொல்ல என்று குமார் வியக்க, “எல்லாம் நம்ம மாமரத்தோட சுவைதான் மச்சான்!” என்று சொல்லிய, வேலு கீழே கிடக்கும் ஒரு மாங்காயை எடுத்து நறநறவெனக் கடித்தான்.”ஏண்டா, அந்தப் புள்ள ஆசையாப் பறிச்சிருக்கு… அதை போய் இப்படி மாடு போல திங்கிறியேனு குமார் முறைக்க, வேணும்னா போய் தொர ஊட்டி விட்டுட்டு வாங்களேன், இப்ப யாரு வேணாம்னு சொன்னா?” என்று நண்பனை பாலு கிண்டல் செய்தான். “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு…” என்று சலித்துக்கொண்ட குமார், சிதறிக் கிடந்த மாங்காய்களைப் பொறுக்கி, தலையில் கட்டியிருந்த துண்டில் முடிந்து கொண்டு நண்பனுடன் வீட்டை நோக்கி நடந்தான்.மூச்சு வாங்க ஓடி வந்த ராணியோ தங்கள் தோப்பு வந்ததும் கொஞ்சம் நிதானம் பண்ணிக் கொண்டவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டு பின்னர் இயல்பாக இருப்பது போல் சாப்பாடு கூடையே தூக்கிக்கொண்டு அங்கிருந்த மூங்கில் படலை திறந்து தோட்டத்திற்கு போக, தூரத்தில் ஒரு பக்கம் நடவு நடந்து கொண்டிருக்க, வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்துகொண்டு சர்க்கரை அவர்களை மேற்பார்வை பார்ப்பது தெரிந்தது.காரைக்குடி:காரைக்குடியின் அந்தப் பெரிய வீடு, விழாக்கோலம் பூண வேண்டிய நாளில் ஒரு மரண வீட்டைப் போலக் காட்சியளித்தது.இன்று பாரதிக்கும், அவளது அப்பா தயாளன் பார்த்து வைத்திருந்த வசதியான மாப்பிள்ளைக்கும் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டிய நாள். ஊரே திரண்டு வந்து வாழ்த்த வேண்டிய வேளையில், கடந்த இரண்டு நாட்களாக பாரதியைக் காணவில்லை என்ற செய்தி அந்த வீட்டின் கௌரவத்தைச் சுக்குநூறாக உடைத்திருந்தது.மகளைப்பற்றி எந்த துப்பும் தெரியாத ஆத்திரத்தில் தயாளன் சோஃபாவையும் எட்டி உதைத்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் சிவந்து, ஆத்திரத்தில் உடல் நடுங்கியது. ஊர் பஞ்சாயத்துத் தலைவராகவும், கட்சிப் பிரமுகராகவும் இருக்கும் அவருக்கு, தன் மகள் எங்கே போனாள்?, தொழில் மற்றும் அரசியல் ரீதியான யாராவது எதிரிகள் அவளை கடத்தி கொண்டு போய்விட்டார்கள் என்பது தெரியாமல் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. திடீரென அந்த ஆத்திரம் முழுவதும் பாரதியின் தாய் மாலாவின் பக்கம் திரும்பியது. மூலையில் முக்காடு இட்டு அழுது கொண்டிருந்த மாலாவைப் பார்த்ததும் தயாளன் வெறி கொண்டவர் போலப் பாய்ந்தார்.“பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் துப்பில்லையாடி உனக்கு? வீட்டுக்குள்ளேயே வச்சிருந்து என்னத்தக் கிழிச்ச?” என்று கத்தியவாறே, மாலாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.“ஐயோ… எனக்குத் தெரியாதுங்க…நான் சொல்வதை நம்புங்கள்!” என்று மாலா கதறினார்.தயாளன் விடுவதாக இல்லை. “எல்லாம் உன்னால வந்ததுதான்! அவளுக்குப் போனும், சுதந்திரமும் கொடுத்துக் கெடுத்தது நீதான். இன்னைக்கு ஊர் முன்னாடி என் தலையை உருட்டிட்டாளே!” என்று மீண்டும் அடிக்கக் கையை ஓங்கினார்.அங்கிருந்த நெருங்கிய உறவினர்கள் ஓடி வந்து தயாளனைப் பிடித்துத் தடுத்தனர்.“தயாளன், விடுப்பா… அவங்க என்ன பண்ணுவாங்க? இப்போ அடிக்கிறது தீர்வல்ல. முதல்ல நம்ப பொண்ணு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும். ஊர்ல யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடி வீட்டுக்கு கூட்டிட்டு வரப் பாருங்க,” என்று சமாதானப்படுத்தினர்.மாலாவை அடித்துவிட்டுத் தயாளன் ஆத்திரத்தில் திணறிக்கொண்டிருக்க, வீட்டின் மூத்த உயிர்—பாரதியின் ஆச்சி— இரண்டு நாட்களுக்கு பிறகு மெல்லப் பூஜையறைக்குள் நுழைந்தார்.சாமிப் படங்களுக்கு முன் ஏற்றிய தீபம் அணைந்திருந்தது. மனதிற்குள் ஏதோ ஒரு பாரத்தோடு ஆச்சி குனிந்து பார்த்தபோது, அங்கே முருகன் படத்தின் காலடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதம் தென்பட்டது.என்னது இது என்று நடுங்கும் கைகளுடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தார் ஆச்சி. பாரதியின் கையெழுத்து. அதில் இருந்த வரிகள் ஒவ்வொன்றும் ஒரு வெடிகுண்டைப் போல அந்த வீட்டின் கௌரவத்தைச் சிதைக்கக் காத்திருந்தன.”அப்பா… அம்மா… என்னை மன்னிச்சுடுங்க. நீங்க பார்த்து முடிக்கிற இந்த நிச்சயதார்த்தம் எனக்குச் சம்மதம் இல்லை. நான் வேறொருவரை மனசாரக் காதலிக்கிறேன்.அவனுடைய சொத்து, ஜாதியைக் காரணம் காட்டி நீங்க அவனை ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால்தான், உங்ககிட்ட சொல்லாமலேயே வீட்டை விட்டு வெளியேற முடிவு செஞ்சேன். என்னைத் தேடாதீங்க. நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டுப் பாதுகாப்பா இருப்போம்.”கடிதத்தைப் படித்து முடித்த ஆச்சிக்குத் தலை சுற்றியது. “ஐயோ… என் ஆத்தா இப்படிப் பண்ணிட்டியே!” என்று அலறியபடி, அந்தக் கடிதத்தைப் பிடித்துக் கொண்டு ஹாலுக்கு ஓடி வந்தார்.”தயாளா… தயாளா… இங்க பாருப்பா! புள்ளை எழுதி வச்சிட்டுப் போயிருக்கா!” என்று கூச்சலிட்டபடி ஆச்சி கடிதத்தை நீட்ட, தயாளன் அதைப் பிடுங்கிப் படித்தார்.கடிதத்தைப் படிக்கப் படிக்கத் தயாளனின் முகம் கறுத்துப்போனது.ஆத்திரத்தில் அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தார்.மாலா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தன் மகள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது அவருக்குப் பேரிடியாக இருந்தது.கசக்கி எறியப்பட்டிருந்த அந்தக் கடிதம் தயாளனின் காலடியில் கிடந்தது. சிதறிய வார்த்தைகள் அவமானத்தின் சாட்சிகளாக அவரை உற்றுப் பார்த்தன.குனிந்து அந்தப் பேப்பரை எடுத்தவர், மீண்டும் ஒருமுறை வரிகளை படிக்கவும். கண்கள் சிவக்க, ஆத்திரத்தில் உடல் நடுங்கியது.வாசலில் நின்றிருந்த தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை நோக்கிச் சென்றவர் “இந்த ஊர்ல… எந்தப் பயல அவ காதலிச்சா? எவன் கூட ஓடிப் போனா? யாரு அந்தத் துணிச்சல் புடிச்சவன்? உடனே எனக்குப் போய்ப் புலன் விசாரிச்சு சொல்லுங்கடா!” என்று கத்தினார்..அப்போது அவரது அடியாட்களில் ஒருவன், தயாளனின் நிலையைப் பார்த்துவிட்டு மெல்ல முன்வந்தான்.”தலைவரே, எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க? காரைக்குடியில உங்களை எதிர்க்கிற அளவுக்கு எவனுக்குத் தைரியம் இருக்கு? நீங்க ஒரு வார்த்தை சொன்னா, ஊர் முழுக்க சல்லடை போட்டுத் தேடி அவங்களைக் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துவோம்,” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னான்.ஆனால், தயாளனின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை எச்சரித்தது. கசக்கப்பட்ட காகிதத்தை மேஜையில் பலமாகத் தட்டியவர், “இல்லடா… சும்மா போனா பரவாயில்லை. எவனோ ஒருத்தன் திட்டமிட்டுத்தான் இதைச் செஞ்சிருக்கான். எல்லாத்தையும் அடிச்சு உடைச்சு உண்மையை விசாரிச்சுட்டு வாங்க. அந்தப் பய யாருன்னு தெரிஞ்சாகணும்!” என்றவரின் கண்கள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தன.காரைக்குடியின் தெருக்களில் தயாளனின் ஆட்கள் ஒருவித அமைதியான வேட்டையைத் தொடங்கினார்கள். பாரதி வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் ஊருக்குள் கசிந்தால் அது தயாளனின் கௌரவத்திற்குப் பேரிடியாக அமையும் என்பதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் காய்களை நகர்த்தினார்கள்.தயாளனின் ஆட்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனின் வீட்டிற்கும் சென்றனர். ஆனால், எங்குமே அவர்கள் ஆவேசத்தைக் காட்டவில்லை. மாறாக, எதார்த்தமாகப் பேசுவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.”தம்பி வீட்ல இருக்காரா? ஒரு விசேஷத்துக்கு ஆள் கணக்கு எடுக்கச் சொன்னாரு தலைவரு…” என்றானுங்கள். பேசுவது எதார்த்தமாக இருந்தாலும், அவர்களின் கண்கள் அந்த வீட்டின் மூலைமுடுக்குகளையும், அங்கிருப்பவர்களின் முகபாவனைகளையும் கூர்மையாகக் கவனித்தன. யாராவது பதட்டப்படுகிறார்களா, அல்லது பாரதியைப் பற்றித் தெரிந்திருப்பது போல் காட்டிக்கொள்கிறார்களா என்று ஆராய்ந்தனர்.ஊர் மக்களுக்கு இன்னும் விஷயம் தெரியாது. தயாளன் வீட்டுப் பெண் பாரதி ஓடிப்போய்விட்டாள் என்பது தெரிந்தால் காரைக்குடியே பரபரப்பாகிவிடும். அதனால், “தலைவர் ஒரு முக்கியமான வேலையா ஆட்களை அனுப்பி இருக்காரு போல” என்றுதான் ஊர்க்காரர்கள் நினைத்தார்களே தவிர, அது ஒரு தேடுதல் வேட்டை என்பதை யாரும் உணரவில்லை.அடியாட்கள் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினர். “தலைவரை எதிர்க்கிற அளவுக்கு யாருக்குத் தைரியம் இருக்கு?” என்று அவர்கள் முதலில் நினைத்தாலும், ஒவ்வொரு வீட்டிலும் விசாரிக்கும்போது அந்த மர்மமான நபர் யார் என்ற கேள்வி அவர்களைக் குடையத் தொடங்கியது.நேரமும் கடந்து செல்ல தயாளனின் ஆட்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஊரில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் தத்தம் வேலைகளில் பிசியாக இருப்பதையும், யாரும் காணாமல் போகவில்லை என்பதையும் உறுதி செய்தபின், சந்தேகம் வேறு பக்கம் திரும்பியது.இங்கே தயாளனுடைய வீட்டில் ஒருவிதமான நிசப்தம் நிலவியது. அப்போதுதான் தயாளனின் தந்தை குணா, “ஊருக்குள்ள எந்தப் பயலும் அவ கூடப் போகலன்னா… அப்போ இது வெளியூர் ஆளாகத்தான் இருக்கணும். காலேஜ்ல படிக்கும்போது எவனையாவது பழகியிருப்பாளோ?” என்று குணா கேட்டதுமே தயாளன் ஆவேசமாகத் திரும்பினார்.”அன்னைக்கே சொன்னேன்… அவளைப் படிக்க வைக்க வேணாம்னு! நீங்கதான் அவ மேல இருந்த நம்பிக்கையில ‘பொம்பளப் புள்ள படிச்சா என்ன?’ன்னு எனக்குச் சொல்லி ஒத்துக்க வச்சீங்க. இப்போ பாருங்க, படிக்கப் போன இடத்துல எவனையோ இழுத்துட்டுப் போயிருக்கா!” என்று கத்தி விட்டு, உடனடியாகத் தனது அடியார்களின் ஒருவனுக்கு கால் பண்ணினார். அடுத்த அரை மணி நேரத்தில் கருப்பு நிறச் சுமோக்களும், ஆட்களும் பங்களா வாசலில் வந்து நின்றனர்.”வண்டிய எடுங்கடா! நேராக திருச்சிக்கு விடுங்க. அவ எந்தக் காலேஜ்ல படிச்சாளோ, அங்க இருக்கிற ஒவ்வொருத்தரையும் பிடிச்சு விசாரிக்கணும்.” என்ற தயாளனின் முகம் கோபத்தில் கருத்திருக்க, காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கிய நெடுஞ்சாலையில் வண்டிகள் பறந்தன…குருதி கலக்குமா..…

← Previous All Chapters Next →

Leave a Comment