ஹீரா நிலவனின்
ஆதிரையின் அழகன்
அத்தியாயம் – 1
“ஹோய் அழகா!” என்ற நொடி பட்டென அவளின் உதட்டில் ஒரு முத்தம் அழுத்தமாக விழ, “ம்ம்ம்…” என்ற முனகலில் அவனின் முகத்தை நிமிர்த்தி நேராகப் பார்த்து, “பேட் பாய்” என்றாள் அவள் நாணம் கொண்டு.
“படுக்கையில் குட் பாயா இருந்தா ஒன்னும் பண்ண முடியாதுடி. இங்க பேட் பாய் மட்டும் தான் சரி. அவனால தான் இப்படி கண்ட இடத்திலும் கை வைக்க முடியும். கண்ட இடத்தி…”
அவன் முடிக்கும் முன், அவனின் வாய் மூடி, “டர்ட்டி வேர்ட்ஸ் பேசாதீங்க. எனக்கு கூச்சமா இருக்கு” என்று வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்துகொள்ள,
அவள் முகம் நிமிர்த்தி, தாங்கள் இருவர் இருக்கும் நிலையை காண்பித்து, “இதைவிட வார்த்தை கூச்சம் தருதா? இன்னைக்கு நமக்கு முதலிரவு. இப்ப நாம சாந்தி முகூர்த்தம் நடத்திட்டு இருக்கோம். இதை எல்லாம் ரசிக்கணும்” என்று காதோரம் செல்லக்கடி கடித்துக் கூறியதில் திரும்பவும் அவன் வாயை மூடி, “தப்பு தப்பா பேசுறீங்க” என்றாள்.
“சரி பேசல. ஆனா, செயல்ல காட்டுறேன்” என்று அவனிட்ட முத்தங்களும், கடிகளும், மோகத்தையும் தாபத்தையும் அதிகப்படுத்த, வலிகளையும் மீறிய இன்பச் சித்திரவதை என்பது இதுதானோ என்றிருந்தது அவளுக்கு.
அவளின் மொத்தமும் கணவன் வசம் செல்ல, அவளின் முகத்தில் வரும் ஒவ்வொரு அசைவையும் ஆசையாய் ரசித்துப் பார்த்திருந்தான் அவன். மோகம், தாபம், உணர்ச்சித் தாக்குதலின் போது உதடு கடித்தும், மெத்தை விரிப்பை அழுத்திப் பிடித்தும், முடியாத பட்சத்தில் அவன் பின்னந்தலை முடியை பிய்க்காத குறையாக இழுத்து, அந்த உணர்ச்சிகளைக் கடக்க, அவள் செய்பவை யாவும் அவனைப் பித்தனாக்க, இன்னும் இன்னும் அவளை அவஸ்தைப்பட வைக்கும் வேகம் வந்தது.
அடி வயிற்றில் ஆரம்பித்த உணர்ச்சி, வயிற்றில் மையம் கொண்டு பலவித சிலிர்ப்புகளைக் கொடுத்து, மார்புப் பகுதியை தாண்டுகையில், உடல் தன்னிச்சையாய் மேலேறி இறங்க, தொண்டைக்குழி வந்து முனகலாய் வந்து விழுந்தன அர்த்தமில்லா சப்தங்கள்.
“வாட் இஸ் திஸ்? வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்? டெல் மீ” என்று ரௌத்திரமாய் நின்றாள் அவள். ஆதிரை அருளானந்தமாக இருந்தவள், நேற்று தான் ஆதிரை மெய்யழகன் ஆக மாறி இருக்கிறாள்.
“ஹேய் ஆதிரை! கம் கம். வாட்ச் தட் வீடியோ. சோ செக்ஸினா” என்றவன் கண்களில், காதல் ரசம் பொங்கி ரசனையாக வழிந்தது..
“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்குப் புரியுதா?” என்றாள் ஆதிரை கோபம் குறையாது.
மனைவியின் கோபம் உணராதவனோ, “நம்ம முதலிரவு வீடியோவ பார்த்துட்டு இருக்கேன்டி. அங்க பாரு உணர்ச்சி அதிகமாகி உன்னோட லிப்ப கடிச்சி மெல்ல விடுறப்ப, விடுபட்டு வர்ற சதையை கடிச்சி என்னன்னவோ பண்ணனும் தோணுது. தொண்டைகுழி ஏறி இறங்குற அழகு இருக்கு பாரு, அப்படியே கடிச்சி உறிஞ்சிடலாமா இருக்கு. ஏறி இறங்குற மார்பு வாவ்! அப்படியே இறங்கி வரும் வயிறு, அதன் மென்மை ஐயோ… அதுக்குள்ளயே புதைஞ்சி போகனும் இருக்கு. கடைசி நேரத்தில் கண்ணு ரெண்டும் மோகத்தில் மூழ்கி என்னைப் பார்த்தப்ப, ப்பா… எந்த மொழியிலும் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு பொண்ண இந்தளவு சந்தோசப்படுத்தின எனக்கு நானே…”
“ஸ்டாப் இட். ப்ளீஸ் ஸ்டாப் தட் வீடியோ. ஸ்டாப் யுவர் இன்டீசன்ட் டாக்” என்று கத்தினாள்.
அதன் பின்னரே மனைவியை கண்டவன், “யேய் வாட்ஸ் அப் யா? ஒய் ஆர் யூ ஸௌட்டிங்?” என்றான் சாதாரணமாக.
“நான் கத்துறனா? முதல்ல அந்த டிவியை அணைங்க” என்று அவன் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி அணைக்க, அவசரத்திற்கு அது அணைய மறுக்கவும், நேரே டிவியின் வயர்களை உருவிவிட்டாள்.
“வாட் நான்சென்ஸ் ஆதிரை. எதுக்காக இப்படிப் பண்ணுற?” என்றான் அவள் கோபத்திற்கான அர்த்தங்கள் புரியாது.
“முதல்ல எனக்கு காரணம் சொல்லுங்க. என்ன இதெல்லாம்? நம்ம பர்ஸ்ட் நைட்டை வீடியோ எடுத்தீங்களா? அசிங்கமா இல்லையா உங்களுக்கு?” என்றவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“நம்மளோடது தான ஆதிரை. நம்ம முதல் இரவு, முதல் உறவை வீடியோ எடுத்து வச்சா எப்ப வேணும்னா பார்க்கலாம். இதே ஃபீல் நம்மளிடம் எப்பவும் இருக்கா தெரிஞ்சிக்க ஆசை. நைட் ஃபீல் பண்ணாத நிறைய இப்ப பார்த்து தெரிஞ்சிக்கிறப்ப, உடனே நீ வேணும்னு உடம்பு கேட்குது ஆதிரை” என்று மனைவியை நெருங்க, அவனைத் தள்ளிவிட்டு கன்னத்தில் பளாரென ஒரு அரை வைத்தாள்.
“யேய்…” என்று அவன் சீறிக்கொண்டு வர,
“கோபம் வருதா? எனக்கு இந்த வீடியோ பார்த்தப்ப உங்களைக் கொல்லுற வெறி வந்தது. கணவன் மனைவி உறவை புனிதமா காண்பிக்கிற இரவை, இப்படி வீடியோ எடுத்து, அதை பகிங்கரமா பார்க்கிற உங்களை என்ன சொல்ல? அசிங்கமா இல்லையா? இரவை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தா, அந்த உறவுக்கு என்ன அர்த்தம்?” அவனை விட அதிகமாக சீறினாள் ஆதிரை.
“ஆதிரை ஸ்டுபிட் மாதிரி பேசாத. நாம ஒன்னும் ஐம்பது வருடம் முன்னாடி உள்ள காலகட்டத்தில் இல்லை. ட்வென்டி ஒன் சென்சுவரில இருந்துட்டு பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசாத” என்றான் கடுப்பாகிப் போன குரலில்.
அவனுக்கு, அது கணவன் மனைவிக்குள் உள்ள உறவாக மட்டுமே தெரிந்தது. அதனால் அதை ரசிக்கும் ரசிகனாகிப் போனான். அவளின் வாதம் அர்த்தம் இல்லாததாக தோன்றியது.
அவளுக்கோ இரவின் இனிமையை, காலையில் அணைத்தோ, முத்தமிட்டோ காட்டலாம். அது எதார்த்தம். ஆனால், அதற்கு மாறாக அதை திரையில் கண்டவள் மனம், அனலில் இட்ட உயிருள்ள மீனாய் தவித்துத் துடித்தது. காரணம் கணவன் அன்றோ.?? அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளால். அதை சரி என்று வாதிடும் கணவன் மேல் கோபம் பெருக்கெடுத்தது.
“எந்த காலகட்டத்தில் இருந்தாலும், கணவன் மனைவி உறவுக்குனு ஒரு புனிதம் உண்டு. இரண்டு பேருக்குள்ள உள்ளமும், உடலும் சார்ந்து நடக்குற ஒரு இனிமையான சங்கமம் அது. நாகரீகம் என்ற பெயர்ல அதை நீங்க அசிங்கப்படுத்துறீங்க.”
“ஹேய் இதுல என்ன இருக்கு. நீ வெளிச்சம் வேண்டாம் சொல்லி இருந்த. அந்த மெல்லிய வெளிச்சத்தில் உன்னை முழுசா ரசிக்க முடியலை. என்னோட முதலிரவு நான் பார்த்துப் பார்த்து ரசிக்கிற மாதிரி இருக்கனும்னு வீடியோ எடுத்தேன். நமக்குள்ள இருக்கப்போற சீக்ரெட் இது. இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுற?” என்றான் புரியாது.
பெண்ணவளின் உணர்ச்சியை ரசித்தவனுக்கு அவளின் உணர்வுகள் புரியவில்லை. அது புரியுமா என்றும் தெரியவில்லை.
“உங்களுக்கு இன்னும் புரியலையாங்க” என்று சோர்வாய் கணவனைக் கண்டு, “வீடியோ எடுத்தீங்க சரி. அதை எங்க இருந்து பார்க்கறீங்க?” எனக் கேட்டாள்.
“ஹோம் தியேட்டரில் பார்க்கிறேன். இதில் தான் வியூ கரெக்டா, எல்லாம் பெருசா தெரியும்” என்று கண்ணடித்தான்.
“ப்ச்…” என சலிப்பாக உதடு சுளித்து, “நீங்க பார்க்கிறதை நம்மை தாண்டி வேற யாராவது பார்த்தா என்ன செய்வீங்க?”
“லூசு மாதிரி உலராதடி. நாம பர்ஸ்ட் நைட்காக, பீச் ஓர கெஸ்ட் ஹவுஸ் வந்திருக்கோம். இங்க உன்னையும் என்னையும் தவிர யாரும் கிடையாது.”
“யாரும் கிடையாதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? சுவத்துக்கும் காது இருக்கும் சொல்லுவாங்க. அப்படி இருக்கிறப்ப யாரோ ஒருத்தர் இதைப் பார்த்தா, அது எவ்வளவு கேவலம்? அட அந்த பென்டிரைவ் மிஸ் ஆகி வேற யார் கையிலாவது கிடைக்குது வச்சிக்கோங்க. அப்ப என்ன செய்வீங்க? என்ன செய்ய முடியும் உங்களால்? எவன் எடுத்தான்னு தேடிட்டே இருப்பீங்களா? அதை அவன் நெட்ல போட்டுட்டான்னா, அப்ப என்ன செய்வீங்க? எல்லாத்தையும் விட என்னை ஒருத்தன் தப்பான கோணத்தில் பார்த்து ரசிச்சா, அதைவிட எனக்கு என்ன அசிங்கம் வந்திடப் போகுது. அதை எப்படி தடுப்பீங்க?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தாள் அவனை.
“ரொம்ப கற்பனை பண்ணுறமா நீ. அப்படி எதுவும் நடக்காது. இங்க ஒரு ஈ காக்கா கூட கிடையாது. வாசலில் இருக்கிற செக்யூரிட்டி தவிர யாரும் இல்லை. நீ கவலைப்படாத. இப்ப என்ன இதை அழிச்சிடனும் அவ்வளவுதான? இதோ உன் கண்முன்ன காலி பண்ணிடுறேன்” என்று கழிவறை கோப்பையில் போட்டு தண்ணீர் விட, அந்த பென்டிரைவ் இருந்த இடம் தெரியாமல் போனது.
“இப்ப ஓகேவா?” என்று அவளை அணைக்க, “டோன்ட் டச்” என்று கணவனிடம் இருந்து விலகியவள், “இனிமேல் இதுபோல் எதுவும் செய்ய மாட்டேன் சொல்லி சத்தியம் பண்ணுங்க” என்றாள்.
“என்னை நம்பலையா நீ?” என்றவன் குரலில் சிறிது கோபம்.
“நம்புற மாதிரி நீங்க நடந்துக்கலை. இனி நீங்க என்னைத் தொட்டாலே, அந்த வீடியோ தான் மைண்ட்ல ஓடும். சோ, கொஞ்ச நாளைக்கு என் பக்கத்தில் வராதீங்க” என்று அங்கு இருந்து நகர,
“ஐயோ! என்னடி சொல்லிட்டுப் போற? அதெப்படி உன்னைத் தொடாம இருக்க முடியும்? பூனைக்கு பாலோட ருசியைக் காண்பிச்சி ஏமாத்தாதடி. அது பாவம். அதிலும் மீ ரொம்ப பாவம்” என்று அவள் பின்னே சென்றான்.
கணவன் செயலில் கோபம் குறைந்து வந்த சிரிப்பை அடக்கி, “பால் எதுவும் நான் தரலையேங்க. உங்களுக்குப் பிடிக்காது சொன்னதால, ரூமுக்கு வாட்டர் மட்டும் எடுத்துட்டு வந்தேன்” என்றவள் இதழில் ஒரு கள்ளப்புன்னகை.
மனையாளின் குரலில் இருந்த இளக்கம் அவனை குதூகலிக்கச் செய்ய, “பால் தரலைன்னு பொய் சொல்லாதடி. நீ நிறைய…” என்று மனைவியின் காதோரம் கூறிய அத்தனையும், கணவனுக்கும் மனைவிக்குமான அந்தரங்க வார்த்தைகள்.
பேசிப் பேசியே படுக்கைக்கு தூக்கிச் செல்ல, அவனின் தலை கலைத்து, “இனிமேல் அந்த மாதிரி கிறுக்குத்தனம் பண்ணக்கூடாது. எனக்கு அது பிடிக்கலை. எனக்குப் பிடிக்காததை நீங்க செய்யக்கூடாது. நமக்கு நடுவில் நம்மைத் தாண்டி எதுவும் வரக்கூடாது. சரியா?” என்று நடந்ததை மறந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“சரி அந்த மாதிரி பண்ணல. வேற மாதிரிப் பண்ணுறேன். நமக்கு நடுவில் எதுவும் வராது.” என்று மூக்கோடு மூக்கு உரசி கணவனவன் பேசிய அனைத்துக்கும் நாணம் கொண்டு அவன் நெஞ்சில் புதைய, அவர்களின் படுக்கையறை மூடப்பட்டது. எப்பொழுது திறக்கும் என்பது அவர்கள் இருவரும் அறிந்த இரகசியம்!
இரகசியம்! என்பது இருவருக்குள் இருக்கும் வரை தான். அது வெடித்து வெளியே வந்தால்? பாதிக்கப்படப் போவது யாரோ..???