Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 1

CHAPTER 1

அத்தியாயம் – 1

By Yuva Sri · October 5, 2026

0

ஒரு பெரிய கல்யாண மண்டபம் அந்த கல்யாண மண்டபத்தில் இப்போ கல்யாணம் நடக்கும் வேளை தான்.

ஆனால் அந்த கல்யாணம் நடக்காமல் அந்த கல்யாணம் மண்டபமே அமைதியாக இருக்கின்றது.

முகூர்த்த நேரம் ஆனால் கெட்டி மேளமும் நாதஸ்வரமும் அங்கே ஒலிக்கவில்லை. உறவினர்கள் சந்தோஷ கூச்சலும் இல்லை. ஐயரின் மந்திர உச்சரிப்பும் இல்லை. மிகவும் அமைதியை தழுவியது அந்த கல்யாண மண்டபம்.

ஆனால் அங்கே ஒருத்தன் காட்டு கத்து கத்தி கொண்டு இருந்தான்.

மண மேடையில் அமர்ந்து மணமகளுக்கு தாலி கட்டும் இந்த வேலையில் கையில் கொடுத்த தாலியை தூக்கி எறிந்து விட்டு.

எரிக்கும் பேச்சை பேசிக் கொண்டிருந்தவன் மாப்பிள்ளை தான்.

இந்த ஆளுக்கும் இந்த பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு. அதனாலதான் இந்த கல்யாணத்தை நான் வேண்டான்னு சொல்றேன் என்று ரொம்பவும் சத்தமாக சொல்ல.

என்னப்பா நீ பேசறது கொஞ்சமாவது நியாயமா இருக்கா அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்து வளர்த்தது அந்த பிள்ளை தான்.

அந்தப் புள்ள மேல போய் சந்தேகப்படுறியே என்று ஒரு வயதான பெண்மணி ஒருவர் கேட்க.

நீ அமைதியா இருங்க பாட்டி. எனக்கு தெரியும்.

இதோ நிக்கிறானே இந்த ஆள் ரொம்ப நல்லவெல்லாம் கிடையாது.

தன் அக்காவை தான் கூடவே வெச்சிக்கிட்டு வசதிய வாழ வச்சது எதுக்கு. இவ்ளோ அழகான அக்கா பொண்ணுக்காக தானே.

ஆனா ஊராரு முன்னாடி ஓடிப்போன பொண்டாட்டியே நினைச்சுட்டு இருக்காருன்னு எல்லோரும் நினைக்கணும்.

ஆனா உள்ளுக்குள்ள அழகான அக்கா மக கூட உல்லாசமாக இருக்கணும் இதுதான் இவங்களுடைய ஃபேமிலி.

இப்படிப்பட்ட தரம் கெட்ட ஃபேமிலில நான் பொண்ணு எடுக்க விரும்பல.

சத்தியமா பாட்டி நான் ஒரு ஆம்பள பையன் தான் ஆனா இதுவரைக்கும் ஒரு பொண்ணு தொட்டுக் கூடப் பதில்லை ஆனா எனக்கு இந்த ஆளு மிச்ச வெச்ச எச்சயா இருக்கிற இவளை கல்யாணம் பண்ணிக்கனுமா.

அதெல்லாம் முடியவே முடியாது என்னால இவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது.

நான் எப்படி சுத்தமா இருக்கேனோ  அதே மாதிரி எனக்கு வரப்போற பொண்டாட்டியும் ரொம்ப சுத்தமா இருக்கணும்னு ஆசைப்படறேன்.

அதனால எதையும் பேச வைக்காதீங்க இந்த ஆளுக்கு இந்த பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு. இது எனக்கு நல்லா தெரியும் இவங்க வீட்டு வேலை ஆட்கள் முதல் இவங்க தொழில் ரீதியான நண்பர்கள் வரைக்கும் இத தான் சொல்றாங்க.

அதனால என்னால இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது என்ன மன்னிச்சிடுங்க உங்க எல்லோரையும் நான் இந்த கல்யாணத்துக்கு அழைத்து கஷ்டப்படுத்திட்டேன்  என்று சொன்னவன் இன்னும் என்ன நின்னுட்டு இருக்கீங்க வாங்க போகலாம் என்று தன் தாய் தந்தை உறவினர்களை எல்லோரையும் அழைத்துக் கொண்டு அந்த மண்டபத்தை விட்டு சென்றான் 25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் அந்த மாப்பிள்ளை.

அவன் போவதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் துர்கா.

ஆனால் துர்காவைப் பெற்ற அம்மா.

தலையில் இடி விழுந்தது போல் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் தன்  ஒரே ஒரு மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என்று.

என்ன இது எந்த பாவமும் அறியாத என் மேல ஒரு பழியை போட்டுட்டு இவன் பாட்டுக்கு அசால்டா போய்ட்டான்.

இவளை நான் சின்ன வயசுல இருந்து என்று கூட சொல்ல முடியாது. குழந்தைல இருந்து பாத்துட்டு இருக்கேன் இவளுக்கும் எனக்கும் சம்பந்தமா.

என் வயசு என்ன அவ வயசு என்ன எனக்கு 45 அவளுக்கு 23 வயசு தானே ஆகுது எனக்கும் அவளுக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா.

அப்படியாப்பட்ட எங்களை இணைச்சு வச்சு பேசிட்டு கோவமா போறனே இந்த பையன் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக நின்று இருந்தான் நம் கதையின் நாயகன் ஈசன் 45 வயசு. 🌷

அவ்ளோதான் என் பொண்ணு கல்யாண நின்னு போச்சு இதுக்கு அப்புறம் என்ன பண்ண முடியும் எல்லாமே போச்சு. இனிமே என் பொண்ண யாரு கட்டிப்பா என்று ஈசனின் அக்கா மாதவி அழுது கொண்டிருக்க.

யாரு கட்டிக்கணும். என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றவள்.

என்ன வேணான்னு சொல்லிட்டு போனவன் சின்னதா என்ன அழகா இல்ல நான் யாரையோ விரும்புறேன் இல்ல அவங்க கேட்ட நகையை  நம்மளால போட முடியல அவங்க குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது அவங்க ஜாதி வேற என் ஜாதி வேற இந்த மாதிரி எல்லாம் காரணத்தை சொல்லி அவன் என்ன வேண்டாம்னு சொல்லிட்டு போகலாமா.

உன் தம்பி இதோ நிக்கிறாரே இவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லிட்டு போறான்.

அதுவும் உல்லாசமா நானும் இவரும் இருந்தோமா இருந்தோமா சொல்லிட்டு போறான்.

அவன் இப்படி சொல்லிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு ஈஸியா போறதுக்கு அஞ்சு நிமிஷம் ஆச்சி.

ஆனா அந்தப் பழியை சுமந்துகிட்டு காலம் முழுக்க நான் வாழனும் இல்ல.

இதோ கல்யாணம் வரைக்கும் வந்து கையில தாலி வாங்கின பிறகு அதை தூக்கி எறிஞ்சிட்டு என் மேல தீராத பழியை போட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான் அவனுக்கு என்ன அடுத்த முகூர்த்தத்தில் பொண்ணு ரெடியா இருக்கும்.

ஆனா என் வாழ்க்கை என்ன ஆகிறது.

அவன் சொல்றத இங்க இருக்கிறவங்களின் நம்பற மாதிரி தானே பார்த்துட்டு இருக்காங்க என்று மண்டபத்தில் உள்ள அனைவரையும் பார்த்து சொன்னவள்,

என்ன பத்தினின்னு தீக்குளிச்சி நிரூபிச்சாலும் தப்பு பண்ணிட்டு என்ன நடிப்பு நடிக்கிற அப்படித்தான் சொல்லுவாங்க என்று தன் தாயிடம் துர்கா சொல்ல.

அதுக்கு இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற அதான் உன்ன கட்டிக்க வந்தவன் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டானே. இதுக்கு அப்புறம் உனக்குன்னு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்காமையா போகும் கண்டிப்பா கிடைக்கும்.

அந்த மாதிரி வர மாப்பிள்ளை கிட்ட நம்ம பக்கம் நியாயத்தை சொல்லி உண்மையை புரிய வைத்து உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டியது தான் என்றாள் மாதவி.

ஆமா மா என்ன பொண்ணு பாக்க வரவங்க கிட்ட எல்லாம் என்னுடைய வெர்ஜின் சர்டிபிகேட் காட்டி  நான் நல்லவ உத்தமி என் மேல கலங்கம் இல்ல அப்படின்னு சொல்லி புரிய வைத்துக்கொண்டு இருக்கணுமா.

என்னமா நீ பேசுற என்றாள்.

அப்ப என்ன தான்மா சொல்ல வர நீ.

நீ சொன்ன மாதிரி உனக்கு நகையாலையோ பணம் இல்லையா இல்ல ஜாதி மதம். இதால பிரச்சனை வந்திருந்தா இதால உன் கல்யாணம் நின்னு இருந்தா இந்த இடத்திலேயே நம்ம உறவிலேயே இந்நேரம் மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். ஆனா உன் மேல தீராத பழியை தூக்கி போட்டுட்டு அந்த பையன் போயிட்டான் அப்படி பழைய சுமந்துட்டு நிக்கிற உன்னை எப்படிமா சொந்தக்காரர் கூட கட்டிப்பாங்க.

உன் மேல விழுந்த பழி என்ன திருட்டு பழியா இல்ல கொலை பழியா அதுக்கான தண்டனை அனுபவிச்சா சரியாயிடும் அப்படி என்பதற்கு. உன் மேல உன் பெண்மைக்கு கலங்கப்படுத்துற மாதிரி ஒரு பழியை தூக்கி போட்டு இருக்கான் அப்படி இருக்கும் பொழுது யாரும் இந்த நேரத்துல உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாங்க கொஞ்ச நாள் போகட்டும் நலமா மாறும் அப்போ உன்ன மாதிரி இருக்கிற பெண்களை கூட கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க என்று அவர் சொல்ல.

அப்படி யாரும் எனக்கு வாழ்க்கை கொடுக்க தேவையில்லை.

இங்கே அவமானப்பட்டு நிக்கிறது நான் மட்டும் இல்லை என் மாமன் தான்.🌷

எந்த தப்பு செய்யாத எங்க மேல பழிய தூக்கி போட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான். இதுக்கு அப்புறம் பழியை சுமந்துகிட்டு நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல எப்படி இருக்கிறது.

அதனால நான் எங்க அம்மாவ கூட்டிக்கிட்டு எங்கேயாவது போறேன் என்று அவள் கலங்க.

துர்கா என்ன பேசுற உன்னையும்  அக்காவையும் அனுப்பிட்டு நான் என்ன பண்ண முடியும். எனக்கு உங்களை விட்ட யாரு இருக்கா என்றான் ஈசன்.

அதுக்காக இன்னும் என் பேரை கெடுத்துக்க சொல்றீங்களே மாமா என்றாள்.

என்னடி யாரோ எதையோ சொன்னதுக்காக என் தம்பிக்கு தண்டனை கொடுக்கலான்னு பாக்குற என்று மாதவியும் சொல்ல.

இப்போ நாம மாமா வீட்டுக்கு போனா இன்னும் இன்னும் நம்மள கேவலமா தான் பேசுவாங்க அதனால நாம இந்த மண்டபத்தில் இருந்து எங்கேயாவது போய்விடலாம் என்று இவள் சொல்ல.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உங்கள நான் வெளியே அனுப்ப மாட்டேன் நீங்க நம்ம வீட்டுக்கு தான் வரணும் என்று உறுதியாக சொன்னான் ஈசன்.

நாங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வரணும் என்று நீங்க நினைச்சா ஒரே ஒரு விஷயம் எனக்காக பண்ணுவீங்களா என்றாள்.

என்ன பண்ணனும் கண்டிப்பா நான் பண்றேன் ஆனா உங்களை இழக்க நான் விரும்பல என்று ஈசன் சொல்ல.

நானும் அம்மாவும் நம்ம வீட்டுக்கே முன்ன மாதிரி வரணும் என்றால் அதோ வீசி எறிஞ்சிட்டு போய் இருக்கானே அந்த தாலி எடுத்து என் கழுத்துல கட்டுங்க அப்பதான் நம்ம வீட்டுக்கு நாங்க வருவோம் இல்லன்னா இப்படியே எங்கேயாவது போயிடுவோம் என்று சொன்னவள் இப்ப நீங்க தான் முடிவெடுக்கணும் நாங்க வீட்டுக்கு வரதா இல்லையான்னு என்றவள் மண மேடையில் அமர்ந்தாள் நம் கதையின் நாயகி துர்கா.

தொடரும்.

 எழுத்து – யுவஸ்ரீ.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!