• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 28, 2024
Messages
7
1000068529.jpg



வழக்கம் போல் பள்ளி இடைவேளை நேரம், அனைவரும் கூட்டமாக அமர்ந்து தோழியுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க,

பிரணிதாவோ "ஹே ஏஞ்சல்.. இப்போலாம் இன்ஸ்டால தான் நல்ல டைம் ஸ்பெண்ட் பண்றேன்.. நிறைய ப்ரெண்ட்ஸ் கூட கிடைச்சுருக்காங்க.. நீயும் இன்ஸ்டாவா.. உனக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்ட்ரோடியுஸ் பண்றேன். நல்ல என்ஜாய்மெண்ட்டா இருக்கும்.. உனக்கும் டைம் பாஸ்ஸாகும்ல"

"இல்ல பிரணி.. எங்க வீட்டுல இன்ஸ்டாலாம் யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க"

"அட பக்கி.. எங்க வீட்டுல மட்டும் யூஸ் பண்ண சொல்லி ஓபன் பண்ணியா கொடுத்தாங்க.. எல்லாம் அவங்களுக்கு தெரியாம யூஸ் பண்றது தான்"

"என்னடி சொல்ற.. வீட்டுக்கு தெரியாமயா... ஒருவேளை உன் மொபைல் வீட்டுல பாத்தா மாட்டிக்க மாட்டியா"

"நான் வீட்டுல இருக்கும் போது மொபைல் என்கைல தான் இருக்கும்.. அம்மாக்கு இருக்கிற வேலைக்கு என் மொபைல் செக் பண்ண வாய்ப்பில்ல.. இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு வருர நேரம் இன்ஸ்டா அன் இன்ஸ்டால் பண்ணிட்டு வந்துருவேன்.. சோ யாருக்கும் டவுட் வராது" என்று கூறி முடிக்க, இடைவேளை முடிந்து வகுப்பு தொடங்கும் மணி அடிக்க, ஆசிரியரும் வந்ததால், அனைவரும் பாடத்தை கவனிக்க தொடங்கினார்கள்.

இப்படியே நேரங்கள் கடக்க பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்து, தன் அறையின் குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தபடுத்தி பள்ளி சீருடையிலிருந்து வேறு ஆடைக்கு மாறியவளோ வீட்டு பாடத்தை எல்லாம் முடித்து, தனக்கு பிடித்தமான ஓவியத்தை தீட்டி முடித்தவளுக்கோ தன் பெற்றோரிடம் காட்டி பாராட்டு வாங்க வேண்டுமென்று வழக்கமாக வரும் ஆசையில் காலத்தை பின்நோக்கி அழைத்து சென்றாள்.

ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டு, முதல் ஓவியம் வரைந்தவளோ அதை எடுத்துக்கொண்டு வேகமாக கீழே வந்தது சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியை தட்டிகொண்டிருந்த தந்தையிடம் சென்றவளோ "அப்பா.. நான் ஃபர்ஸ்ட் டைம் பண்ணின பெயின்டிங் எப்படி இருக்கு"

இருந்த வேலையில் சரியா கவனிக்காத தந்தையோ "நல்லா இருக்குமா" என்று கூற,

தன் தந்தை மேலும் ஊக்கபடுத்துவாரென்று நம்பி வந்த சிறுமிக்கோ ஏமாற்றம் இருப்பினும், அந்த ஓவியத்துடன் அன்னையை காண சமையல் அறைக்குள் சென்று "அம்மா.. அம்மா நான் பண்ணின பெயின்டிங் எப்படி இருக்கு"

"அம்மா வேலையா இருக்கேன்.. கையெல்லாம் அழுக்கா இருக்கு.. வேலைய முடிச்சிட்டு பாக்குறேன்" என்று கூறினார்.

இதில் சிறுமியின் தவறு எதுவுமில்லை பொதுவா தான் முதலில் எது செய்தாலும் பெற்றோரிடம் காட்டி சந்தோஷப்படுவதே குழந்தைகளின் இயல்பு, அதை போல் தான் ஏஞ்சலினாவும்.. ஆனால், ஒருமுறை அல்ல பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றம் தான், அதை நினைத்து அழுதவாறே நிகழ் உலகிற்கு வந்தவள்,

சிறிதும் நேரம் நாட்குறிப்பு புத்தகத்தில் இன்றைய நிகழ்வுகளை எழுதிவிட்டு உறங்கிவிட்டாள்.

இப்படியே நாட்கள் கடக்க ஒன்பதாம் வகுப்பு முழுவாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாட்கள் வந்தது, வழக்கம் போல் செய்யும் வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாருமில்லா தனி அறையிலே பொழுதை கழித்திருக்க, அப்படியே ஒருவாரம் கடந்துவிட, தீடிரென்று ஒருநாள் பகிரியில் நண்பர்களுடன் உரையாடை நினைத்து செய்தி ஒன்றை தட்டிவிட,

"ஏய்.. இன்ஸ்டா சாட்டிங் போகுதுடி அப்புறம் வரேன்" என்று அந்த பக்கமிருந்து பதில் வர, அதில் கடுப்புடன் திறன்பேசியை படுக்கையில் வீசிவிட்டு தனிமையின் சோகத்தில் ஜன்னல் வெளியே வானத்தை வெறித்திருந்தவளின் எண்ணத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை வீசிய திறன்பேசியை கையில் எடுத்தவளோ இன்ஸ்டாகிராமை பதிவிறக்கம் செய்ய தொடங்கினாள்.

பதிவிறங்கரதுக்குள்ள ஏஞ்சலினா மற்றும் அவளின் குடும்பத்தை பற்றி பார்க்கலாம்.

(பெயர் - ஏஞ்சலினா ஜோஸப்
ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள், படிப்பில் கெட்டிக்காரி, அவளின் தந்தையின் பெயர் ஜோஸப் - சின்னத்திரை தயாரிப்பாளர், அவளின் தாயின் பெயர் - மேரி ஜோசப் - சின்னத்திரை நடிகை, அவளின் சகோதரியின் பெயர் - எஸ்ரா ஜோஸப், அவளை விட ஆறு வயது மூத்தவள், வெளி மாநிலத்தில் தங்கி வானூர்தி பொறியியல் படிப்பு படிக்கிறாள். எஸ்ராவிற்கு சிறு வயதில் இருந்தே கதை எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், இப்போது படித்து கொண்டே கிடைக்கும் நேரங்களில் கதை எழுதி புத்தகமாகவும் வெளியிட்டுளாள்.

மேரி, தன் மகள் ஏஞ்சலினாவை உண்டாகிருந்த நேரம், மூன்றாம் மாதம் முடியும் கர்ப்ப காலத்தில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, குழந்தை பெற்றெடுப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல ஆரோக்கியமான பெண் குழந்தையான ஏஞ்சலினாவை பெற்றெடுத்தார்.

இப்படியே ரெண்டு வருடம் குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தியவாறே இருந்தவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, குழந்தை பெற்றதில் தன் உடல் எடை கூடியததால், தன் எடையை குறைத்தவர் குழந்தையை தன் மாமியார் பொறுப்பில் விட்டு விட்டு மீண்டும் நடிகையாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

சமத்தாக ஒரு வருடம் பாட்டியின் பொறுப்பில் வளர்ந்த ஏஞ்சலினாவோ மறுவருடமே பள்ளி செல்ல தொடங்கினாள்.

பள்ளி செல்ல தொடங்கியதிலிருந்து பள்ளி நேரம் முடிந்தது வீட்டிற்கு வந்ததும் பாட்டியிடம் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு தன் அறைக்கு வருபவள் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் தொலைகாட்சி பார்ப்பதும், தனியாக விளையாடுவதுமாக நேரத்தை கழிக்க, சாப்பிடும் நேரம் மட்டும் கீழே சென்று சாப்பிட்டு விட்டு, அவளின் பெற்றோர்களுக்காக காத்திருந்து பொறுமை இழந்து, மறுபடியும் அறைக்குள் வந்து வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டே உறங்கி போவாள்.

இப்படியே பள்ளி செல்வது வீட்டு பாடம் முடிப்பது தனியா விளையாடுவது சாப்பிடுவது, தன் பெற்றோர் வருகைக்காக காத்திருந்து ஏமாறுவது, தூங்குவது என்று பாட்டியின் துணையோடு காலத்தை கழித்து கொண்டிருந்தவளோ, வயதுக்கு வந்து ஒருவருடம் கழித்து பாட்டியையும் இழந்து யாருமில்லா தனியறையில் வாழ பழகி கொண்டாள்.

பாட்டி இறந்த பிறகு, இவள் கையில் பாதுகாப்பிற்காக திறன்பேசி வாங்கி கொடுக்க எண்ணிய அவள் பெற்றோர்கள்,

அதை கையில் கொடுப்பதற்கு முன் பகிறி யூடூயூப் தவிர வேறு எதுவும் பயன்படுத்த கூடாதென்று கட்டளையிட்டு, அவள் சம்மதம் தெரிவித்த பிறகு தான் திறன்பேசியை கையில் கொடுத்தார்கள்.

அதோடு காலையிலேயே மேரி ரெண்டு வேலை உணவையும் தாயார் செய்து வைத்துவிட்டு செல்வதால், பள்ளி சென்று வந்த பிறகு வீட்டுப்பாடத்தை எல்லாம் முடித்துவிட்டு இரவு உணவை மட்டும், அவளே தயார் செய்து சாப்பிட்டு கொள்வாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுநாள் பள்ளி செல்ல சீருடை அயன் செய்வது, தனது அறையை சுத்தம் செய்வது, படுக்கை மற்றும் தலையனைக்கு ஒரைமாற்றிவிட்டு, இரவு சமைத்த உணவு பாத்திரத்தையும் கழுவி அடுக்கிவிட்டு, உறங்குவதற்கு முன் அன்றாடம் தன் பெற்றோரிடம் பகிர நினைக்கும் நிகழ்வுகளையும் தன்னுடைய மனகஷ்டத்தையும் நாட்குறிப்பு புத்தகத்தில் எழுதி வைப்பதே அவளின் வழக்கம், அப்புத்தகமே பெண்ணவளின் தோழன் என்று கூறலாம் விடுமுறை நாட்களில் இதனுடன் சேர்ந்து ஓவியம் தீட்டுவது என்று நேரத்தை களிப்பாள்.

என்னதான் பெற்றோர்கள் இவளுக்குகாக நேரத்தை செலவிடவில்லை என்றாலும் அவளின் பிறந்தநாளன்று மட்டும் அவளுக்காக கேக் வெட்டுவது, பிடித்ததை சமைத்து ஒன்றாக சாப்பிடுவது, வெளியே செல்வது என்று இருப்பார்கள்.

இவை, அனைத்தும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் மீதி நாட்களில் யாருமில்லா தனியறை தான் என்ற வருத்தம் இருந்தாலும், அவர்களின் மனதை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணி அவள் வருத்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடந்து கொள்வாள்.)

பதிவிறக்கமானதும் தனக்கென்று தனி கணக்கை உருவாக்கியவள், அதில் போடபட்டிருந்த அனைவரின் பதிவையும் பார்த்து ரசித்துவிட்டு தன் தோழிகளுடன் உரையாடியவளோ "அட.. இது கூட நல்ல ஜாலியா தான் இருக்கு" என்று நினைத்து, அன்றைய பொழுதை இன்ஸ்டா பார்ப்பதிலயே கழித்தாள்.

மறுநாள் தன் பெற்றோர் வேலைக்கு சென்றதும் எழுந்தவள், காலை வேலைகளை எல்லாம் முடித்து சாப்பிட்டுவிட்டு திறன்பேசியில் இன்ஸ்டாவில் இருந்த பதிவை பார்த்து கொண்டிருக்க,

"ஹலோ.. ஐ அம் விஜய்" என்று டோய்ங் சத்தத்துடன் செய்தி வந்தது,

அதை கண்டு, முதலில் பதில் அளிக்க தயங்கியவளோ "பேசுவோமா.. வேண்டாமா.. சும்மா பேசி தான் பாப்போமே... டைம் பாஸ்ஸாகும்ல" என்று நினைத்து பதிலுக்கு "ஹலோ விஜய்.. வாட் டூ யூ வான்ட்"

"லெட்ஸ் பீ ப்ரெண்ட்ஸ்?"

"ஷூயர்"

இதிலிருந்து, இவர்களின் உரையாடல் நீடித்து கொண்டியிருந்தது, அதிக நேரம் அவனுடன் உரையாடினாலும் பெண்ணவளோ ஜாக்கிரதையாக தான் பழகி கொண்டிருந்தாள்.

இப்படியே விடுமுறை கழித்து, பத்தாம் வகுப்பில் காலடி வைத்த சமயம், இவர்களின் நட்பு மாதங்கள் பல கடந்தும் நீடித்திருக்க,

தனிமையில் அன்புக்காக ஏங்கிய மனமோ, மெல்ல மெல்ல அவன் பேசியில் கவர்ந்து, அவனே தன் தனிமையின் நட்பு என்னும் மரு

ந்து என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால், தன்னை பற்றி ஒவ்வொன்றாக கூறி, முக அழைப்பில் கூட பேசும் அளவுக்கு சென்றார்கள்.
 
Last edited by a moderator:
Joined
Nov 28, 2024
Messages
7
இப்படியே வழக்கம் போல் பள்ளி முடித்து வந்தவள், தன்னுடைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு திறன்பேசியில் அவனிடம் பேசிகொண்டிருக்க,

"ஏய் ஏஞ்சல் ரெண்டு நாளுல எனக்கு பர்த்டேடி.. சோ மீட் பண்ணலாமா?"

"ஸ்கூல் இருக்கும்டா.. லீவ்லாம் போட முடியாது"

"சரி அப்போ.. ஸ்கூல் முடிஞ்சி நேரா என் வீட்டுக்கே வந்திருடி.. இந்த தடவ உன்கூடையும் சேந்து பர்த்டே செளிப்ரட் பண்ண ஆசைபடுறேன் பிளீஸ்.. மாட்டேன் மட்டும் சொல்லாத"

"சரி வரேன்.. உடனே நடிப்ப போடாத பாக்க சகிக்கல" என்று கூறி, சிறிது நேரம் உரையாடலுக்கு பின் நிம்மதியாக உறங்கிபோனாள்.

இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருக்க,

ரெண்டு பேரும் ஒரே ஊர் என்பதால் அவன் கூறியது போல் பள்ளி முடித்து மாலை, அவன் வீட்டிற்கு சென்றாள்.

முந்தைய நாளே இத்தனை மணிக்குள் வந்துவிடுவேன் என்று கூறியிருந்ததால் வரும் வரை அவளுக்காக காத்திருந்தான்.

அவள் வந்ததும் உள்ளே அழைத்த வந்தவனிடம் பெண்ணவளோ "அம்மா இல்லையாடா"

"அம்மா வொர்க் போயிருக்காங்க.. இன்னும் கொஞ்சம் நேரத்துல கேக் வாங்கிட்டு வந்துருவேன்னு இன்பார்ம் பண்ணினாங்க.."

"ஓ ஓகே.. ஹேப்பி பர்த்டே" என்று கூறி பரிசை கொடுக்க,

அதை கையில் வாங்கியவனோ "தேங்க்ஸ்டி.. உக்காரு ஜூஸ் எடுத்துட்டு வரேன்" என்று கூறி சமையல் அறையிலிருந்து, அவளுக்காக பழசாறு எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து முடித்தவளோ அப்படியே மயங்க, அவளை தூக்கி கொண்டு அறைக்குள் வந்தான்.

இவ்வளவு நாள் குள்ளநரி போல் பதுங்கி நல்லவன் போல் வேடமிட்டவன், அவளை மொத்தமாக களவாடி ஆசையை தீர்த்து கொண்டு, அவள் தன்னை யாரிடமும் காட்டி கொடுக்க மாட்டாள் என்ற தைரியத்தில் அந்த இடத்தைவிட்டு மாயமாக மறைந்துவிட,

அவன் சென்றதும் மயக்கம் கலைந்து தன் நிலை கண்டு பதறி எழுந்தவளோ ஓவென்று கத்தி அழுதுவிட்டாள்.

எவ்வளவு அழுதாலும் ஒரு பிரோஜனும் இல்லையே, இதனால் தான் இழந்ததும் திரும்ப கிடைக்க போவது இல்லை என்பதை உணர்ந்தவள், இதற்கு மேல் இங்கிருக்க வேண்டாமென்று எண்ணி தன்னை சரி செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியே வந்தவள், யாருக்கும் சந்தேகம் வராதபடி இயல்பாகவே நடந்து வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் சென்று குளியல் அறை புகுந்தவளோ தண்ணீரில் நனைந்தவாறே தன் நிலை நினைத்து கதறி அழுதாள்.

இப்படியே தன் அறையில் தனிமையில் அழுதவாறும் தன் பெற்றோரின் முன்பும் பள்ளியிலும் தன் சோகத்தை வெளியில் காட்டிகொள்ளாமல் இயல்பாகவே இருப்பது போல் நடித்தே ஒரு வார்த்தை ஓட்டி விட்டாள்.

இருப்பினும் பெண்ணவளால் தனக்கு நடந்த கொடுமையில் இருந்து வெளியே வர முடியமால் தினமும் அழுது சோர்ந்தவளுக்கோ, இந்நிலையில் யாரையாவது கட்டிபிடித்து அழ வேண்டுமென்று ஆறுதல் தேடியது, ஆனால், யாருமில்லா தனி அறையில் இருந்தவளுக்கு வாழ்கையே வெறுத்துவிட,

உயிரை விடுவதே மருந்து என்று முட்டாள் தனமான முடிவை எடுத்தவளோ தன் நாட்குறிப்பு புத்தகத்தில் தன்னை நண்பன் என்று ஏமாத்திய அரக்கன் பத்தியும் அவனுடன் பழகி ஏமாந்ததையும் எழுதிவிட்டு, இன்னும் பல வார்த்தைகள் எழுதி முடித்தவள் தன் பெற்றோருக்கு ஒரு கடிதத்தை அழுதவாறே எழுதி, தன் கை செயினில் சொருகி வைத்தவளோ கண்களை துடைத்துக்கொண்டு தன் நாட்குறிப்பு புத்தகத்துடன் தன் சகோதரியின் அறைக்குள் சென்று மேஜையிலிருந்த புத்தகத்தின் மேல் கண்ணில் படுபடி வைத்துவிட்டு தன் பெற்றோரின் அறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த தன் அன்னையின் புடவையை எடுத்து அறைக்குள் வந்த மறுகணம் தன் அன்னையின் புடவையை மின் விசிறியில் வீசி கட்டி, ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவளோ, அதில் தலையை புகுத்தி உயிரை மாய்த்து கொண்டாள்.

மறுநாள் ஏஞ்சலினாவின் பிறந்தநாள் என்பதால் காலையில் அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணி தங்கள் மகளின் அறையை மெல்ல திறந்தவர்வர்களோ, தொங்கி கொண்டிருக்கும் மகளின் நிலையை கண்டு அதிர்ந்துவிட்டார்கள், மகளை இறக்கி படுக்கையில் கிடத்தி, மகளின் கை, கால் பற்றி அழுது ஒப்பாரி வைத்தார்கள்.

அழுது கொண்டிருந்தவர்களின் கண்ணில், அவள் கை செயினில் சொருகிருந்த கடிதம் தென்பட அதை பிரித்து பார்க்க,

அன்புள்ள அப்பா அம்மாவிற்கு,

"முதல.. நான் இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.. வருஷத்துல ஒருநாள்.. அதுவும் என்னோட பிறந்த நாளுக்கு மட்டும் உங்ககூட சந்தோஷமா இருந்துட்டு.. மீதி நாட்கள் யாருமில்லா தனிமைல என்னால வாழ முடியல.. என்னோட நாலு வயசுலிருந்து இப்போ வர அதாவது பத்து வருஷமா நான் உங்ககிட்ட எதிர்பார்த்த எதுவுமே கிடைக்கல.. இவ்வளவு ஏன் என்னோட பீரியட்ஸ் பெயின்ல ஹக் பண்ணி ஆறுதல் சொல்ல கூட பக்கத்துல யாரும் இருக்க மாட்டாங்க.. அதுக்குன்னு இந்த முடிவுக்கு நீங்க தான் காரணம்ன்னு சொல்ல மாட்டேன்.. ஏன்னா உங்களோட வேலை அப்படி... எனக்காக கஷ்டப்படுறீங்க
அது எனக்கு புரியுது.. என்னோட உடம்பு உங்களவிட்டு பிரிஞ்சாலும் என்னோட ஆத்மா உங்கள சுத்தி தான் இருக்கும்.. சோ என்ன நினைச்சு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருங்க.. லவ் யூ அண்ட் மிஸ் யூ அம்மா அப்பா" என்று தன் மகள் தங்களுக்கு எழுதிய கடித்ததை கண்டு தங்கள் தவறை உணர்ந்து அழுதார்கள்.

விடயம் கேள்விபட்டு, மறுநாளே அவளின் சகோதரி எஸ்ரா தங்கையை காண வந்துவிட, முடியவேண்டிய சடங்கு எல்லாம் முடிந்ததும் தன்னறைக்கு ஓய்வு எடுக்க வந்தவளின் கண்ணில் தங்கையின் பெயரிட்ட நாட்குறிப்பு புத்தகம் தென்பட்டது, திறந்து அவள் எழுதிருந்த குறிப்பு மொத்தத்தை பார்த்து கண்ணீர் வடித்தவளோ கடைசி பக்கம் படிக்க,

"அக்கா.. இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது.. இத உனக்கு நான் தெரியபடுத்த என்ன காரணம்ன்னா எனக்கு நடந்த கொடும யாருக்கும் இனி நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. அதுனால ஒரு ரைட்டரா என் மூலமா ஒரு ஸ்டோரி எழுதி விழிபுணர்வு கொண்டு வரணும்.. இது தான் உன் தங்கச்சி கடைசி ஆசை" என்று முடிந்திருக்க, சகோதரியோ உடனே தங்கையின் ஆசையை நிறைவேற்ற மடிக்கணினியை தட்ட தொடங்கினாள்.

ஒரு மாதத்திற்குள் தங்கையின் கதையை எழுதி "யாருமில்லா தனி அறையில்.." இருந்து பெயர் பொறிக்கப்பட்டு புத்தகத்தை வெளியிட்டவளோ, புத்தகத்துடன் தங்கையின் சமாதிக்கு வந்து, அவளின் ஆசையை சமர்பித்து வணங்கி சென்றாள்.

பெண் குழந்தைகள் வழிமாறி உயிரை விடுவதற்கு ஒரு வகையில் பெற்றோரும் காரணமாகின்றனர்.. அதற்காக, அவர்கள் மட்டுமே காரணமென்று கூறிவிட முடியாது.. குழந்தைகளுக்காக உழைத்து கஷ்டபடுகின்றார்கள் ஆனாலும் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பதை விட மனம் தளரும் நேரம் பெற்றோர்களாக இல்லாமல் தோழனாகவும் இருந்து பாருங்கள் உங்களை விட்டு அவர்கள் வெளியே அன்பை தேட அவசியமும் வராது உயிரும் பிரியாது,

அதோடு பராசக்தி வடிவான பெண்களோ எதற்கும் உயிர் விடுவது முடிவல்ல என்பதை உணர்ந்து தடைகளை தகர்த்து சாதிக்க வல்லவர்க
ள் என்று அனைவரின் முன் நிரூபித்து காட்ட வேண்டுமென்று கூறி கதையை நிறைவு செய்கிறேன்.


நன்றி
*****

- ஆனந்த மீரா
 
Last edited by a moderator:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ஆனந்த மீரா 💐 💐 💐
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
வலைதளங்களின் ஆபத்து பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
தற்கொலை எதற்கும் முடிவு கிடையாதுன்னு இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு யார் சொல்வதோ?
 
Joined
Nov 28, 2024
Messages
7
தற்கொலை எதற்கும் முடிவு கிடையாதுன்னு இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு யார் சொல்வதோ?
கண்டிப்பா சொல்லிடலாம்.. நன்றி அக்கா 😍😍
 
Top