• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல்

New member
Joined
Jan 15, 2026
Messages
8
Messenger_creation_6B240B6E-A821-4618-AEEB-CE7284B745DC.jpg



விவாதக் காதல் 💞

அத்தியாயம் - 1

"இல்ல இல்ல. இது சரிவராது. மாப்பிள்ள போலீஸ்காரர்னா எனக்கு வேணாம். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு பயமா இருக்கு." என்று தலையை சொறிந்தார் சித்ரமகிழினியின் தாய் வழிப் பாட்டி.
"என்னமா இப்படி சொல்றிங்க? மாப்பிள்ள சொக்க தங்கம் தாயி. சென்னையில இருக்குற ஆதரவற்ற இல்லத்துல தான்மா அவரு வளந்து இருக்காரு. அவரோட பத்து வயசுல ஒரு பெரிய மனுஷன், மாப்பிள்ளைக்கு தேவையான மொத்த செலவையும் ஏத்துகிட்டு, அவரே மாப்பிளையை படிக்க வச்சி, இப்போ அவரே சென்னையில மாப்பிள்ளைக்கு வேலையும் வாங்கி தந்து இருக்காருமா." என்றார் புரோக்கர்.
"நீ சொல்றது எல்லாம் சரி தான்ப்பா. சித்ராவும் தங்கமான பொண்ணு. அவளும் அவ அண்ணனும், இவளோட பதினாறு வயசுல, ஒரு விபத்துல அவங்க அம்மா, அப்பாவை இழந்து அனாதையா இங்க வந்தாங்க. அன்னையில இருந்து இன்னைவரைக்கும், அவங்கள என் பிள்ளைங்களா தான் நான் வளத்துட்டு வரேன். எனக்கு அவ வயசுல என் மகன் வழி பேர பிள்ளைங்க இருந்தாலும், எனக்கு சித்ரா மேல ஒரு தனிப் பாசம் இருக்கு. அதான் நீங்க போலீஸ்கார மாப்பிள்ளைன்னு சொன்னதும் கொஞ்சம் பயமா இருக்கு." என்றார் நம் கதையின் நாயகி சித்ரமகிழினியின் பாட்டி.
"நீங்க என்னம்மா போலீஸ்காரர்னா, இந்த படத்துல வர மாதிரி ஆளுங்கன்னு நினைச்சீங்களா? இல்ல இல்லமா. இந்தப் பையன் தங்கமான பிள்ளைமா." என்று மாப்பிள்ளைக்காக வாதாடினார் புரோக்கர்.
"சரி. நான் எதுக்கும் சித்ராகிட்ட பேசிட்டு உனக்கு தகவல் சொல்றேன். நீ மாப்பிள்ள போட்டோவை கொடுத்துட்டுப் போ." என்று கையை நீட்டிய பாட்டியிடம், மாப்பிளை போட்டோவை தந்த புரோக்கர், தன் தலையை தடவ,
"சரி சரி. இந்தா 500 ரூபாய். மாப்பிள்ளையை மட்டும் சித்ராக்கு பிடிக்கட்டும்.‌ அப்புறமா உன்னை வெயிட்டா கவனிக்கிறேன்" என்று சொன்ன பாட்டி, மாப்பிளையின் புகைப்படத்தை பார்த்தார்.
பார்த்ததும் கவரும் முகம்.‌ மையிட்டது போல கண்கள். கருமையான தலை முடி. அடர்த்தியான புருவம். மெழுகு போல சவரம் செய்த கன்னங்கள் என்று அழகான தோற்றதுடன் காட்சி தந்த, அந்த புகைபடத்தில் இடம் பெற்றிருந்த இளைஞனை பார்த்ததும் பாட்டி மனதில், இவன் தான் சித்ராக்கு ஏற்ற மன்னவன் என்று ஒரு பட்சி சொல்லியது.
"என்னம்மா மாப்பிள அழகா இருக்காரா?" என்று புரோக்கர் கேட்டார்.
"யாருக்கு பாட்டிம்மா மாப்பிள்ளை பார்க்கறீங்க? உங்களுக்கா?" என்று சிரித்த முகத்துடன் கையில் கொண்டு வந்த திருநீரை பாட்டி நெற்றியில் இட்டுவிட்டாள் சித்ரமகிழினி.
“இந்த வயசுக்கு மேல கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ண போறேன். உனக்கு தான்மா மாப்பிள பாக்குறேன். இந்தா இந்த மாப்பிள்ள போட்டோவை பார்த்து உனக்கு பிடிச்சி இருக்கான்னு சொல்லு. அவரை பெண் பார்க்க வர சொல்லலாம்.” என்று பாட்டி சொன்னதும், சித்ரா மாப்பிளையின் புகைப்படத்தை தன் கையில் வாங்கியவள் கண் முழுதும் நிறைந்து இருந்தான் அவன்.
“என்னமா. மாப்பிளையை வர சொல்லலாமா?” என்று பாட்டி கேக்க,
“உங்க இஷ்டம் பாட்டி. எனக்கு இது நாள்வரை நீங்கதானே எல்லாமே பார்த்து பார்த்து பண்ணீங்க. இப்போ மட்டும் ஏன் என் சம்மதத்தை கேக்குறீங்க. நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாலும் நான் பண்ணிப்பேன்.” என்று சொன்ன மகிழ் மாப்பிளையின் போட்டோவை கையோடு எடுத்து சென்றவளின் செயலை பார்த்து பாட்டி முகம் மலர்ந்தார்.
“சரி. நாளைக்கு மாப்பிளையை பெண் பார்க்க அம்மன் கோவிலுக்கு வர சொல்லுங்க. நான் இவளை அங்க அழைச்சிட்டு வரேன்.” என்று பாட்டி சொன்னதும், புரோகர் மனநிறைவோடு அங்கு இருந்து வெளியேறினார்.
“சித்ரா, சித்ரா.” என்று பாட்டி அழைத்ததும், இந்த நொடிவரை மாப்பிள்ளையை புகைப்படம் வாயிலாக ரசித்து கொண்டு இருந்தவள், அந்த புகைப்படத்தை தன் தலையணை கீழ் பதுக்கி வைத்தப்படி வேகமாக பாட்டியின் குரலுக்கு பதில் தரச் சென்றாள்.
சித்து நாளைக்கு சாயங்காலம் அந்த போட்டோல இருக்குற தம்பியை நம்ம அம்மன் கோவிலுக்கு வர சொல்லிருக்கேன். நீ தயாரா இரு. நம்ம அங்க வச்சி மாப்பிளையை பார்த்து பேசிடலாம்.” என்று பாட்டி சொன்னதும், மகிழினியின் மனதில் ஒரு வித பயம் படர்ந்தது.
“என்னம்மா. போகலாம் தானே?” என்று பாட்டி கேக்க.
“ஹாங் போகலாம். ஆனா அண்ணன்கிட்ட சொல்ல வேணாவா?” என்று இவள் கேட்டாள்.
“ஏன் சொல்லணும்? நீ ஒருத்தி இருக்குறது நினைவு இல்லாமல் அவன் பாட்டுக்கு கூடப் படிக்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊரை விட்டே ஓடி போயிட்டான் இல்ல. இனிமே அவன்கிட்ட நமக்கு என்ன பேச்சு.” என்று கத்திய பாட்டியை சமாதானம் செய்தாள் சித்ரமகிழினி.
தனக்கு கல்யாணம் என்ற செய்தியை கேட்டு சித்ரமகிழ்க்கு அன்றைய தினம் முழுதும் வேலை ஓடாமல் போக, எப்படியோ அன்றைய தினத்தை தள்ளி மறுநாள் மாலையே இவளே எட்டி பிடித்தது போல எண்ணம் தோன்றியது.
மாலை 5 மணி அளவில். பாட்டியுடன். ஒரு ஆட்டோவில் டிசைனர் சாரீயில் சித்ரமகிழினி அம்மன் கோவிலுக்கு செல்ல, அங்கே புகைப்படத்தில் பார்த்த அதே வாலிபன். கூடுதலாக தன் நெற்றியில் சந்தன பொட்டு குங்குமத்துடன், அம்மன் சன்னதியின் படிக்கட்டில் புரோக்கருடன் அமர்ந்து இருந்தான்.
கோவில் வாசலில் சூர தேங்காய் உடைப்பதை பார்த்து, அடித்து பிடித்து ஓடி ஒரு துண்டு தேங்காயை எடுத்துக் கடித்தவன் எதிரில் நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மகிழினியை பார்த்து, தன் தேங்காய் பத்தையை முதுகுக்கு பின்னாடி ஒளித்தவனின் தோளை தட்டினார் புரோக்கர்.
“என்ன மாப்பிள்ள தம்பி. போலீஸ் வேலைக்கு போனாலும் இன்னும் தேங்காய் பொறுக்குற தொழிலை விடல போல?” என்று புரோக்கர் கிண்டலாகக் கேட்டார்.
ஏனோ அந்த மாப்பிள்ளையை சித்ரமகிழினி கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்ன மாப்பிள்ள தம்பி. உங்களுக்கு தேங்காய்னா ரொம்ப பிடிக்குமோ?” என்று பாட்டி கேக்க.
மாப்பிள்ளை கையில் இருந்த தேங்காயை தன் பாக்கெட்டில் வைத்து கொண்டவன், “என் பல நாள் பசியை போக்கியது இந்த தேங்காய் தான்.”
என்றான் மகிழினியை பார்க்க வந்த மாப்பிள்ளை பையன்.
“சரி சரி. மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசட்டும். நம்ம இப்படி ஓரமா உக்காருவோம்” என்று சொன்னபடி புரோக்கர் மாப்பிள்ளையயை பார்த்து கண் அடித்தார்.
“என்ன சித்ரா. நீ எதாவது மாப்பிளைக்கிட்ட பேசணுமா?” என்று பாட்டி கேட்டதும். மகிழ் ‘இல்லை’ என்று தலை அசைக்க,
“ஐயோ என்னமா நீ. மாப்பிள உன் கூடப் பேசதான் ரெண்டு மணி நேரமா காத்துகிட்டு இருக்காரு.” என்றார் புரோக்கர்.

“சரி சரி. சித்து போமா. சாமியை கும்பிட்டுட்டு போய் பேசிட்டு வாங்க.” என்று பாட்டி சொன்னதும், சித்ரமகிழினி தன் பாட்டியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சாமி சன்னிதானத்தை சுற்றி வர, மாப்பிள்ளைப் பையன் மகிழினியை சுற்றினான்.
“மகிழ் ஒரு நிமிஷம் இருங்க. இப்படியே நான் உங்கள சுத்திகிட்டு இருந்தா, நான் மறுபடியும் ஊர் போய் சேர நள்ளிரவு ஆகிடும். சோ பிளீஸ்.” என்று மாப்பிள்ளை சட்டென்று மகிழினியை வழி மறைத்து பேச, சித்ரா குனிந்த தலையை நிமிராமல் அதே இடத்தில் நின்று இருந்தாள்.
“சரி. அங்க தான் தெப்பகுளம் இருக்கு. வாங்களேன் அங்க போய் பேசலாம்.” என்று மாப்பிள்ளை சொன்னதும். சித்ரமகிழினி தெப்பக்குளத்தை நோக்கி நகர பின் தொடர்ந்தான் மாப்பிள்ளை பையன்.
“இதோ இங்க உக்காரலாமா?” என்று அவன் கைகளை காட்ட, சித்ரமகிழினியும் அவன் சொன்ன இடத்தில் அமர, பத்தடி தள்ளி மாப்பிளை பையனும் அமர்ந்து கொண்டான்.
“ஏன் எதுமே பேசாம இருக்கீங்க?” என்று அவன் அவள் முகத்தை பார்த்து கேட்க,
“என்ன பேசுறது?” என்று விழித்தாள் மகிழினி.

“என்னங்க நீங்க. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? நம்ம கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு இஷ்டமா? இல்ல இந்த சினிமால எல்லாம் வர மாதிரி, உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நீங்க நல்லா படிச்சி இந்த ஊருக்கு கலெக்டர் ஆனதுக்கு பிறகு தான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு எதாவது கொள்கை லட்சியம் எல்லாம் வச்சி இருக்கீங்களா.” என்று படபடவென மாப்பிள்ளை பையன் பேசினான்.
 
New member
Joined
Jan 15, 2026
Messages
8
“ஐயோ. இல்லிங்க. அப்படி எல்லாம் எந்த லட்சியமும் இல்ல. பல வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் நானும் என் அண்ணனும். அம்மாவோட அம்மா கூடதான் இருந்தோம். என் அண்ணா அவர் படிக்க போன இடத்துல ஒரு பெண்ணை நேசிச்சு அவங்களையே கல்யாணம் பண்ணி இப்போ அவருக்கு 6 வயசுல ஒரு பையன் கூட இருக்கான். ஆனா என் அண்ணன் அவரோட 18 வயசுலேயே கல்யாணம் பண்ணிட்டு போனது என் பாட்டிக்கு பிடிக்கல. அதனால என்னையும் என் அண்ணன் கூட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என் பாட்டியை மீறி நான் எதுமே பண்ண மாட்டேன்.” என்று தன் மனதில் இருந்த எல்லா எண்ணங்களையும் மனப்பாடம் செய்தது போல ஒப்பித்தாள் சித்ரமகிழினி.
“ஒ... நல்லதுங்க. ஆனா உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கா. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்ற கேள்விக்கு நீங்க பதில் சொல்விங்களா? இல்ல அதையும் உங்க பாட்டி தான் சொல்லுவாங்களா?” என்று அவன் கேட்டதும். சித்ரமகிழினி அவன் முகத்தை பார்த்தாள்.
“என் பாட்டி சொன்னா நான் உங்கள கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று அவள் சொன்னதும். மாப்பிள்ளை வாய் விட்டு சிரித்தான்.
சில நொடிகள் கழித்து சிரிப்பை அடக்கி, “நீங்க உங்க பாட்டி பிள்ளை தான். ஆனா இல்லற வாழ்கை என்பது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டுமே நிகழும் அழகான உறவு. சோ, உங்களுக்கு என்னை பிடிச்சி இருந்தா, நம்ம அடுத்த முகூர்த்தத்துல கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று இவன் சொன்னதும். அவளிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு. தன் சட்டை கை மடிப்பை சரி செய்தபடி தன் வேஷ்டியில் ஒட்டி இருந்த தூசியை தட்டி விட்டவன், “சரி மகிழ். உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு நினைக்கிறேன். எனிவே உங்க நேரத்தை வீணாக்கியதுக்கு மன்னிக்கணும். நீங்க கிளம்புங்க. நான் புரோக்கர் அண்ணனுக்கு பணம் தந்துட்டு, உங்க பாட்டிகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.” என்று சொன்னவன் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் கால் வைத்து மேலே செல்ல,
“ஏங்க ஒரு நிமிஷம். நான் எப்போ உங்கள பிடிக்கலைனு சொன்னேன்.” என்ற சித்ரமகிழினி தயங்கியபடி கேட்டாள்.
“என்னை பிடித்து இருக்குன்னு கூட தான் இன்னும் நீங்க சொல்லல.” என்று அவன் கேக்க.
“போட்டோல பார்த்ததுமே உங்கள எனக்கு பிடிச்சி போய் தான் இன்னைக்கு உங்கள பார்க்க கோவிலுக்கு வந்தேன்.” என்று அவள் சொன்னதும், மேல் படிக்கட்டில் நின்று இருந்தவன் மகிழினியின் அருகில் வந்து நின்று கொண்டான்.
“அப்போ நம்ம கல்யாணதுக்கு தேதி குறிக்கலாமா?” என்று அவன் கேட்டதும், அவள் சொன்ன ‘ம்’ என்ற ஒரு வார்த்தையில் அவன் முகம் மலர்ந்தது.
அவனின் சந்தோசத்தைக் கண்ட மகிழ், “உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும்?” என்று தயங்கித் தயங்கி பேசியவள் அருகில் வந்து நெருக்கமாக நின்றவன், “என்ன கேக்க போறீங்க? இண்டர்வியூ எதாவது எடுக்க போறிங்களா?” என்று குறும்பாகக் கேட்டான்.
“உங்க அம்மா அப்பா யாரும் வரலையா?” என்று சித்ரமகிழினி இவன் நிலைமையை அறிந்து கொள்ள எண்ணியவாரு கேள்வி கேட்டாள்.
“ம்... உக்காருங்க.” என்று மீண்டும் அவன் மகிழினியை அமர சொன்னதும். அவளும் அவன் சொல்லுக்கு கடுப்பட்டு அமர்ந்தாள். “நான் ஆதரவற்ற இல்லத்துல வளர்ந்தேன். என்னை ஒரு பெரிய மனுஷன் தான் படிக்க வச்சாரு. நான் ஏதோ கொஞ்சம் நல்லா படிப்பேன். அதனால எனக்கு உடனே இந்த வேலையும் கிடைச்சுடுத்து. வேலை கிடைச்சதும். தனியா ஒரு வீடு எடுத்தேன். என் கூட வேலை பாக்குற ஆளுங்க எல்லாம் கல்யாணம், பிள்ளை குட்டின்னு சுத்தும் போது. எனக்கும் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரு அல்ப ஆசை. அப்போ தான் ப்ரோக்கர் அண்ணன் உங்க போட்டோவை காட்டினாரு. உங்கள போட்டோல பார்த்ததுமே எனக்கு பிடிச்சி போச்சு. இப்போ நேர்ல பார்த்ததும். நாளைக்கே உங்கள கல்யாணம் பண்ணி என்கூட அழைச்சிட்டு போயிடலாம்னு ஆசையா இருக்கு.” என்று அவன் தன் மனதில் பட்டதை சொன்னான்.
சற்று நொடி யோசித்தவள், “அப்போ உங்களுக்கும் என்னை போல அம்மா அப்பா இல்லையா?” என்று மகிழினி தன் முகத்தை சோகமாக வைத்து கொள்ள,
“அதுக்கு ஏன் கவலைப்படுறிங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பிள்ளைங்களுக்கு அம்மா அப்பாவா இருக்கலாமே.” என்று கண்கள் சிமிட்டியபடி சொன்னவனை பார்த்து மகிழினி வெட்கத்துடன் சிரித்தாள்.
“என்ன மாப்பிள்ள தம்பி இன்னுமா பேசிகிட்டு இருக்கீங்க? பாட்டிமா உங்கள காணாம தேடிகிட்டு இருக்காங்க பாருங்க.” என்ற புரோக்கரின் குரலை கேட்டு,
“ஐயோ. நேரமாச்சு போல. நான் கிளம்புறேன்.” என்று சித்ரமகிழினி தெப்பக்குளத்தில் இருந்து கோவில் வளாகத்தை நோக்கி வேகமாக நடந்தவளை மாப்பிளையும் பின் தொடரந்தான்.
“என்ன சித்து பேசிட்டியா? உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கா?” எனக் கேட்டார் பாட்டி.
“ம்... பிடிச்சுருக்கு பாட்டி.”
“அப்புறம் என்ன... சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம் சொல்லி கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம் இல்ல” என்றார் புரோக்கர்.
“எங்க பக்கம் யாரும் சித்ரமகிழினி கல்யாணத்துக்கு வர மாட்டாங்க. அக்கம் பக்கம் வீட்டுல இருக்குற ஆளுங்க தான் எங்களுக்கு சொந்தம்.” என்றார் பாட்டி.
“பாட்டி. அண்ணன்?” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.
“உன் அண்ணன் உன் கல்யாணத்துக்கு வரணும்னா. நான் உன் கல்யாணத்துல நிக்க மாட்டேன். என்ன உன் அண்ணன்கிட்ட சொல்ல போறியா?” என்று கோபத்துடன் கேட்டார்.
“ஹ்ம் ஹ்ம் வேணாம் பாட்டி” என்று சித்ரமகிழினி கவலையாக சொன்னதும். பாட்டி தீர்க்கமான முடிவோடு சொந்தங்கள் யாரும் இல்லாமல் சித்ரமகிழினியின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்.
“சரி தம்பி. உங்களுக்கு சம்மதம்னா அடுத்த முகூர்த்ததுலேயே நீங்க எங்க சொல்றிங்களோ கல்யாணத்தை நம்ம அங்கேயே வச்சிப்போம்.” என்றார் அவர்.
“ஐயோ பாட்டி. நீங்க இப்போ சரி சொன்னாலும் நான் உங்க பேத்தி கழுத்துல தாலி கட்ட ரெடி தான்.” என்று மாப்பிள்ளை சொன்னதும். மகிழினி முகம் மலர்ந்து அவனை பார்த்தாள்.
“எங்க பக்கத்துல நீங்க என்ன எதிர் பாக்குறிங்கன்னு சொன்னா. நாங்க சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவோம்.” என்றார் பாட்டி.
“என்ன கேக்குறீங்க பாட்டி? நான் டவுரி எதிர் பார்க்குறேனான்னு கேக்குறீங்களா?” என்று மாப்பிள்ள பையன் கேக்க.
“ம்... ஆமாபா.”
“நான் கேக்குற டவுரி உங்கனால தர முடியுமா?” என்று அவன் கேட்டதும். மகிழ் அவனை ஏதும் புரியாமல் பார்த்தாள்.
“அப்படி என்னப்பா கேக்க போற?”
“ம்... எங்க கல்யாணத்துக்கு பிறகு. நீங்களும் எங்ககூடவே வந்து தங்கிடுங்க. ஏன்னா உங்க பேத்திக்கு இந்த உலகத்துல உங்களுக்கு அடுத்து தான்.எல்லோரும் போல. நான் இவங்கள கல்யாணம் முடித்து என் கூட அழைச்சிட்டு போனாலும், அவங்க உங்க நினைவுல என் கூட சந்தோசமா இருக்க மாட்டாங்க. அதனால. நீங்களும் எங்களோட வர மாதிரி இருந்தா. அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை வச்சிக்கலாம்.” என்று மாப்பிள்ளை பையன் சொன்னதும். மகிழினியின் மனதில் தனக்கான மணவாளன் இவன் தான் என்ற எண்ணம் மலர்ந்தது.
“ரொம்ப சந்தோசம் தம்பி. உங்க விருப்பம் போல எல்லாம் நடக்கட்டும். உங்க போன் நம்பர் என்கிட்ட இருக்கு. நான் உங்களுக்கு மீதி விவரத்தை போன்ல சொல்லுறேன். சரி நாங்க கிளம்பட்டுமா?” என்று பாட்டி சொல்ல, மாப்பிள்ளை பையன் கையெடுத்து கும்பிட்டபடி பாட்டிக்கு நன்றி சொன்னதும், பாட்டி புரோக்கரிடம் பேசியபடி கோவிலில் இருந்து வெளியே சென்றார்.
“சரிங்க. நான் போயிட்டு வரேன்.” என்று சிரித்த முகத்துடன் அவன் சொன்னான்.
மகிழினி மாப்பிளையை ஓரகண்ணில் பார்த்தவள், “ஒரு நிமிஷம்” என்று கேட்டாள்.
அவள் கேட்ட நிமிடத்தை தந்தவனாக, அவள் அருகில் நின்றவனை பார்த்த சித்ரமகிழினி, “உங்க பெயர் என்னனு சொல்லவே இல்லையே?” என்று மகிழினி கேட்கும் கேள்விக்குப் பதில் அவன் விழித்தான். 🤔

Bye
🤗Urs

SK💙
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top