New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 20
- Thread Author
- #1
Part 9
மல்லி பூ தோட்டத்தின் நடுவில் யாரோ அமர்ந்தப்படியே உறங்கி கொண்டு இருப்பதை பார்த்த கொடி, தன் கண்களை கசக்கியப்படி உற்று பார்த்தவன் கண்கள் முழுதும் நிறைந்து இருந்தாள் மகிழினி.
"இவங்க ஏன் இங்க உக்காந்துக்கிட்டே தூங்குறாங்க?” என்று தனக்குள் யோசித்த கொடியின் இதயம்
"இவங்க தூங்குனா நமக்கு என்ன. வாயா இவங்களுக்கு. எப்பா... இனி இவங்க பக்கமே நம்ம திரும்பக்கூடாது சாமி. டேஞ்சரஸ் " என்று தன் மூளையில் எண்ணியப்படி அறையின் கதவை தாழிட்டு கொண்டு கொடி அவன் கட்டிலில் சரிந்தான்.
நேரம் நள்ளிரவு இரண்டை தொட்டு இருக்கும். வானத்தில் இடி முழங்கும் சத்தம் கேட்டு கண் விழித்தான் கொடி.
"ஐயோ மழை வரும் போல. வெளிய வேற துணி காய போட்டோமே" என்று எண்ணியப்படி திட்டுக்கிட்டு எழுந்தவன் கட்டிலில் இருந்து இறங்கி அறையின் கதவை திறந்து தான் காய போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு இருக்கும் போதே மழை பொழிய ஆரம்பித்தது. வேகமாகத் துணிகளை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவன் அப்போது தான் கவனித்தான், மகிழினி இவனை நோக்கி வருகிறாள் என்று.
அவளை பார்த்ததும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கதவை தாழிட போனவனை, “சார் ஒரு நிமிஷம்" என்று தடுத்தாள் மகிழினி.
அவள் முகத்தை நேர்கொண்டு பார்க்க எண்ணாதவன், வாசலுக்கு பின்புறம் நின்று இருக்க, மகிழினியோ வாசலுக்கு வெளியே நின்று இருந்தவள் தலை குனிந்தபடி, "என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்ககிட்ட அப்படி நடந்து இருக்கக் கூடாது. நான் பண்ணது பெரிய முட்டாள்தனம். ப்ளீஸ் சார் என்னை மன்னிச்சுக்கோங்க." என்று குரல் தாழ்த்தி அவள் பேசும் தோரணையில், தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவள் முகம் பார்த்தான் கொடிவீரன்.
"இனி நான் உங்க கண்ணுல படாம இருந்துக்குறேன். நீங்க எனக்காக இந்த ரூமை எல்லாம் காலி பண்ண வேண்டாம். அப்புறம் என் அண்ணன் மனசு கஷ்டப்படும். என் மன்னிப்பை நீங்க ஏத்துக்கலனாலும் பரவாயில்ல. ஆனா இப்படி ஒரு தவறான புரிதலோடு நீங்க இங்க இருந்து போகாதீங்க. அது காலத்துக்கும் நம்ம ரெண்டு பேர் மனசிலும் ஆறாத வடுவா ஆகிடும்" என்று தன் மனதில் எண்ணியதை இவனிடம் சொல்லவென்று, அவள் சேர்த்து வைத்த வார்த்தைகளை எல்லாம், விட்டு வைக்காமல் சொல்லி முடித்தாள் மகிழினி.
இவள் பேசிய எந்த வார்த்தைக்கும் கொடியிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், வானத்தில் இருந்து மழை துளிகள் இவள் பேச்சை கேக்க பூமியை ஈரமாக்கியது. மகிழினியின் தேகத்தை மழைத் துளிகள் தொட்டதும், அவள் தன் முந்தானையைக் கொண்டு அவளை சுற்றிக்கொண்டாள்.
"இங்க பாருங்க. உங்க மேல எனக்கு கோவம் இல்லைன்னு நான் பொய் எல்லாம் சொல்ல விரும்பல. நான் உண்மையாவே உங்க மேல கொலை காண்டுல தான் இருக்கேன். உடனே எல்லாம் என்னால அதை மறக்க இயலாது. மழை வேற வருது. நீங்க தயவு செய்து கீழே போறிங்களா" என்று தன் வார்த்தையில் வெறுப்பை காட்டினான் கொடி.
"உங்க கோவம் நியாயம் தான். நீங்க என் மேல கோவபடாதீங்கன்னு நான் சொல்ல வரல. ஆனா, என்னால நீங்க இந்த வீட்டை விட்டு போகாதீங்க" என்று மீண்டும் கொடியிடம் மன்றாடினாள் மகிழினி.
"ஏங்க மழை வருதுங்க. நீங்க முதல்ல கீழே போங்க" என்று கொடி சத்தமாக கத்தியதும்,
அவன் குரலில் உள்ள கோவத்தை கண்டு இரண்டடி பின் தள்ளியவள், "இல்லிங்க நீங்க இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்னு சொல்லுங்க. நான் கீழே போறேன்" என்று மழையில் நனைந்து கொண்டே பரிதாபமாக பேசும் மகிழியின் குரலில் தன் கோவத்தை சற்று தளர்த்தி கொண்டான்.
"என்னங்க இது. வச்சா குடுமி அடிச்சா மொட்டைன்னு சொல்ற மாதிரி, கோவம் வந்தா நல்லது கெட்டது தெரியாம என்னை அடிக்கிறீங்க. அதே பணிவா பேசுனா எதிர்ல உள்ள ஆளை உங்க பார்வையால போட்டு தள்ளுற மாதிரி பேசுறீங்க. உங்களோட பெரிய இம்சையா இருக்கு" என்று கொடி அவளை பாராட்டிக்கொண்டே திட்டினான்.
"சரிங்க. நான் இந்த வீட்டை விட்டு போகல. நீங்க முதல்ல கீழே போங்க" என்று தன் கரங்களை தலைக்கு மேல் கூப்பியப்படி நன்றி சொன்னான் கொடி.
"நன்றிங்க" என்ற ஒற்றை வார்த்தையை அவன் முன் உச்சரித்த மகிழினி தன் காது மெஷினை கழட்டிக்கொண்டே, படியில் இருந்து கீழே இறங்கியவள், தன் அறைக்குள் சென்று அவள் ஆடைகளை மாற்றிக்கொண்டு தன் படுக்கையில் சரிந்தாள்.
கொடி மாடியில் உள்ள அவன் அறையில், தன் சட்டையை கழட்டி, ஷர்ட் மாற்றிக்கொண்டு, போனை சார்ஜரில் போட்டவன் மனதில், மகிழினியின் செயல்கள் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.
அந்நிலையில் மேசை மேல் ரேஷ்மா இவனுக்கு தந்த அன்பளிப்பை எடுத்தவன் அதை மீண்டும் அழகாக அதே பெட்டியில் வைத்து, ரேஷ்மா தந்த கடிதத்தையும் அந்த பெட்டிக்குள் மடித்து வைத்து, அதை தன் வேலைக்குக் கொண்டு போகும் பையில் வைத்தவன், தன் கட்டிலில் படுத்து கண்கள் மூடினான்.
மறுநாள் காலை ஆறு மணி அளவில், வேணு இவன் அறையின் கதவை தட்ட, தூக்க கலக்கத்திலேயே கதவை திறந்தான் கொடி
“என்ன சாரே நல்ல தூக்கமோ? சரி சரி இந்தாங்க. இந்த டீயை குடிச்சிட்டு டிபன் சாப்பிட வாங்க.” என்றான்.
“என்ன இது புதுசா டிபன் எல்லாம் மாடிக்கு வருது? என்று சந்தேகமாகக் கேட்டான்.
“அதுவா வரல. நான் தான் கொண்டு வந்தேன்.” என்றான் வேணு.
“அதான் ஏன்?”
“ஏன்னா, நீங்க தானே இனிமே அந்த வீட்டுல சாப்பிட மாட்டேன்னு சொன்னிங்க. அதான் நான் உங்க ரூமுக்கு எடுத்துட்டு வந்தேன்.”
“இல்ல இல்ல வேணாம். நான் வெளிய போய் சாப்பிட்டுக்குறேன். நீ இந்த சாப்பாட்டை எடுத்துட்டு போ.”
“ரொம்ப பண்ணாதீங்க சாரே. நேத்து ஏதோ என்னால தான் உங்களுக்கும், என் அத்தைக்கும் சண்டை வந்து இருக்கு. அதனாலதான், நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்.எந்த ஒரு கோவத்தையும் சாப்பாடு மேல காட்டக்கூடாது. இந்த ஒரு வேளை சாப்பாடு கிடைக்காம கஷ்ட்டப்படுற ஆளுங்க, இந்த உலகத்துல எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா?”
“பாருடா. அது சரி சார் என்ன இவ்வளவு சமத்தா பேசுறீங்க. அவ்வளவு நல்லவங்க இல்லையே நீங்க” என்று கேட்டான்.
“சமத்தாவோ, சம்மந்தாவோ சீக்கிரம் சாப்பிட்டு கீழே வாங்க. நான் ஸ்கூல் போகணும்” என்றான்.
“நீ ஸ்கூல் போக, நான் ஏன் கீழே வரணும்?”
“என்ன கேள்வி இது? நீங்க தானே என்னை ட்ரோப் பண்ணனும். அதுக்குக் கீழ வரணும்ல” என்றான்.
“ம்... சரிதான். உத்தரவுங்க மகாராஜா. நீங்க போங்க. நான் குளிச்சிட்டு வரேன்.”
“சீக்கிரம் இறங்கி வரணும்.” என்ற சிறுவன் வேணு படபடவென பொறிந்து தள்ளியப்படி கீழே ஓட, கொடி தனக்குள் சிரித்து கொண்டே காலை வேலைகளை முடித்தவன். வேணு கொண்டு வந்த டிபன்னை சாப்பிட்டு முடித்த பின், பாத்திரங்களை கழுவி எடுத்து கொண்டு தன் வேலைப் பையுடன் கீழே இறங்கினான்.
"ம் போகலாமா" என்று பள்ளிப் பையுடன் உடன் நின்று இருந்த வேணு கேட்டான்.
"ஆமா உன் அத்தை எங்க?" என்று கொடி பொறுமையாக கேட்டதும் வேணு அவனை கோவமாக முறைத்து, "அவங்க கேன்டீன் போயிட்டாங்க. ஆமா ஏன் கேக்குறீங்க" என்று தன் இடுப்பில் கைவைத்து கொண்டு, பெரிய மனிதன் தோரணையில் கேட்ட வேணுவின் கன்னத்தை கிள்ளி,
மகிழினியின் வீட்டுக்குள் நுழைந்தவன் கண்ணில் சோபாவில் அமர்ந்து இருக்கும் பாட்டி தென்பட்டார்.
"பாட்டி" என்று கொடி மரியாதையாக அழைத்தான்.
"வாப்பா தம்பி. உள்ள வா" என்ற பாட்டி கொடியை நோக்கி எழுந்து வர,
"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. நான் நேத்து அப்படி பேசி இருக்கக்கூடாது. அதுவும் பெரியவங்க உங்க முன்னாடி அப்படி எல்லாம் நடந்து இருக்கவே கூடாது. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க" என்று வருத்தத்துடன் சொன்னான் கொடி
"ஐயோ தம்பி இருக்கட்டும்பா. உன் கோவம் நியாயமானது தான். அதான் இப்போ எல்லாம் பேசி சரி பண்ணியாச்சு இல்ல. இனிமே அத பற்றி பேச வேண்டாம்." என்று சிரித்த முகத்துடன் சமாதானம் செய்தார் பாட்டி
"சரி பாட்டி. நான் வேலைக்கு கிளம்புறேன். நீங்க உடம்பை பாத்துக்கோங்க. ஹான் இந்தாங்க டிபன் பாக்ஸ். சாப்பாடு நல்லா இருந்தது. நான் கிளம்புறேன் பாட்டி" என்றான் கொடி
"சரிப்பா பாத்து போயிட்டு வா" என்று சொன்ன பாட்டிக்கு டாட்டா காட்டியப்படி வேணு கொடியின் வண்டியில் அமர்ந்ததும், கொடி பைக்கை வேணுவின் பள்ளியை நோக்கி விரட்டியவன், அவனை அங்கே இறக்கி விட்ட பின் தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்ப, இவன் வருகைக்காக அங்கே ரேஷ்மா கொடியின் கேபினில் காத்திருந்தாள்.
தனது கேபினில் கொடியை பார்த்த ரேஷ்மா, ஆசையோடு வந்து அவனை கட்டிக்கொள்ள, அலுவலகத்தில் உள்ள நபர்கள் அனைவரும் பசப்பு சிரிப்பு சிரித்தனர்.
"ரேஷ்மா என்ன பண்ணுறீங்க? இப்படி எல்லாம் பண்ணாதீங்க" என்று சொல்லிக்கொண்டே அவளிடம் இருந்து பின் வாங்கினான் கொடி.
"என்ன டியர் நீங்க? நான் தான் என் மனசுல இருக்குற காதலை உங்கிட்ட தெரியப்படுத்திட்டேனே. இன்னும் உங்களுக்கு என் மனசு புரியலையா?" என்று ரேஷ்மா மீண்டும் கொடியை நெருங்க, தன் பையில் இருந்து அவள் கொடுத்ததை எடுத்து திரும்ப ரேஷ்மா கையில் தந்தான் கொடி
"என்ன டியர் இது? நான் தந்ததை எனக்கே திருப்பி தரிங்க" என்று கேட்டாள் ரேஷ்மா.
கொடி அவன் இருக்கையில் அமர்ந்தவன், “முதல்ல உங்க மனசுல உங்க அன்புக்குரிய நபராக என்னை நீங்க தேர்ந்தெடுத்ததுக்கு ரொம்ப நன்றி. பட், எனக்கு இந்த காதல் எல்லாம் செட் ஆகாது. நான் என் அம்மா பாக்குற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன். சோ ஐ ஆம் சாரி ரேஷ்மா. நம்ம எப்பவுமே நல்ல நண்பர்களாகவே இருப்போம். என் சைடுல இருந்து நான் உங்கள எந்த தொல்லையும் பண்ணமாட்டேன். அதேபோல நீங்களும் நம்ம நட்பை மெய்ண்டைன் பண்ணிக்கோங்க." என்று தன் மனதில் ரேஷ்மாவை என்னவாக நினைத்து இருக்கிறான் என்று தெளிவாக சொல்லி முடித்தான்.