New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 18
- Thread Author
- #1
Part 8
மகிழினியின் பழியால் மனம் குன்றிய கொடிவீரன் அவள் அறைக்குச் சென்று அவளை நெருங்கி, அவள் கன்னத்தை நோக்கி தன் கரங்களை ஓங்கியவன், "என்ன பொண்ணு நீங்க? யாரு மேல கை வைக்கிறிங்க?
இழுத்து ஒன்னு வச்சேன்னு வையுங்க... வேணாம்... உங்கள மாதிரி நானும் இப்படி கேவலமா நடந்துகிட்டா, அப்புறம் உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இருக்காதுன்னு தான் உங்கள சும்மா விடுறேன்" என்று கர்ஜித்தவன் ஓங்கிய தன் கரங்களை கீழே போட்டான்.
"என்ன நான் கேவலமா நடந்துக்கிட்டேனா?? ஓ... அப்போ நீ பண்ணதுக்கு பெயர் என்ன?" என்று மகிழினி கண்களில் கொலை வெறியுடன் கத்தினாள்.
இவர்கள் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்த பாட்டி மகிழினி அறையின் கதவை தட்ட, "இங்க பாரு. ஒழுங்கா இங்க இருந்து போயிடு. இல்லைனா உன் மேல போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்" என்ற மகிழினி வேகமாக சென்றவள் தன் அறையின் கதவை திறந்தாள்.
"என்ன சித்ரா? என்ன இங்க சத்தம்?" என்று புரியாமல் கேட்ட பாட்டியின் கண்முன் கொடிவீரன் கண்களில் அனல் கக்கும் கோபத்துடன் நின்று இருந்தான்.
"தம்பி என்னபா? நீ எங்க இந்த நேரத்துல? எதாவது பிரச்சனையா? சித்ரா என்னமா ஆச்சு?” என்றார் பாட்டி பதற்றதுடன்.
"பாட்டி பாட்டி இவன் என்கிட்ட... இவன் என்னை டேட்டிங் கூப்பிடுறான் பாட்டி" என்றாள் மகிழினி அதே கோவத்தோடு.
"ச்சீ வாயை மூடுங்க. என்னை பெத்ததும் ஒரு பெண் தான். நீங்க சொல்ற மாதிரி கேவலமான புத்தி எல்லாம் எனக்கு இல்லை" என்று சீறினான் கொடி.
"ஐயோ இங்க என்னதான் நடக்குது? ஏன் இப்படி ரெண்டு பேரும் எனக்கு புரியாத மாதிரி பேசுறீங்க" என்று தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு புலம்பினார் பாட்டி.
"பாட்டி இந்த ஆளு வேணுகிட்ட எனக்கு காதல் கடிதம் தந்து அனுப்பி இருக்கான். அதுல வேற உனக்கு ஓகேனா சொல்லு நம்ம டேட்டிங் போகலாம்னு எழுதி இருக்கான். எவ்ளோ அசிங்கமான ஆளு பாட்டி இவன்" என்று முகத்தை சுழித்தாள் மகிழினி.
"ஏய் இன்னும் ஒரு முறை என்னை இப்படி கேவலமா பேசுனீங்கன்னு வையுங்க. உங்கள..." என்று பற்களை கடித்து கொண்டு கையை ஓங்கினான் கொடி.
"தம்பி என்ன நீ? என் பேத்தியை அடிக்கிற உரிமையை உனக்கு யாரு தந்தது? நீ பாட்டுக்கிட்டு அவளை அடிக்க கை ஓங்குற?" என்று தன் அதிகப்படியான கோவத்தை வெளிப்படுத்தினார் பாட்டி.
"ஓ... நான் உங்க பேத்தியை அடிக்க கை ஓங்கியதுக்கே உங்களுக்கு இவ்வளவு கோவம் வருதுன்னா, உங்க பேத்தி மாடி ஏறி வந்து, என் கன்னத்துல அடிச்சது மட்டும் இல்லாம, என்னை அசிங்கமா காரி துப்பிட்டு போனாங்களே. அதுக்கு யாரு நியாயம் சொல்லுவாங்க?" என்று கொடி அதே வீராப்புடன் கேட்டான்.
"நான் ஒன்னும் உன்னை சும்மா அடிக்கல. நீ பண்ண கேவலதுக்காக தான் உன்னை அடிச்சேன்" என்று தன் குரலை உயர்த்தினாள் மகிழினி.
"ஏய் நான் உன்னை என்ன பண்ணேன்?" என்று மீண்டும் அவளிடம் எகிறினான் கொடி.
"கேவலமா எனக்கு லவ் லெட்டர் தந்தியே. அது போதாதா" என்று மகிழினி சொன்னதும் பாட்டியின் முகம் மாறியது.
"நான் உங்களுக்கு லெட்டர் தந்தேன்னு எந்த பைத்தியக்காரன் சொன்னான்?" என்று விசாரித்தான் கொடி.
"படிக்கிற புள்ள கையில கிஃப்ட் பாக்ஸ் தந்து. அத நீ என்கிட்ட தர சொல்லல" என்று தெளிவாக கேட்டாள் மகிழினி.
"ஐயோ இங்க என்ன நடக்குது. மனுஷனை நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா" என்று கண்களை கசக்கி கொண்டே வந்தான் அழகன்
"பாட்டி. இவன்கிட்டயே கேளுங்க. இவன் தான் இந்த ஆளு தந்த கிஃப்டை எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்குள்ள வந்தான். நான் யாருக்குடா இதுன்னு கேட்டேன். இவன் தான் சொன்னான், இந்த ஆளு அந்த கிஃப்ட் உனக்குன்னு சொல்லி தந்தாருன்னு" என்று வேணுவை சாட்சிக்கு அழைத்தாள் மகிழினி.
"வேணு, உன்கிட்ட நானா அதைத் தந்து உன் அத்தைக்கிட்ட தர சொன்னேன்?" என்று அமைதியான குரலில் வேணுவிடம் கேட்டான் கொடி.
"இல்லையே அந்த கிஃப்ட் உனக்குன்னு நீங்க என்னை தானே எடுத்துக்க சொன்னிங்க" என்று மகிழினிக்கு புரியும்படி சொன்னான் வேணு.
"பாட்டி, இதை நான் வேலை செய்யுற இடத்தில் ஒரு பொண்ணு அவங்க மனசுல இருக்கறதை கடிதமா எழுதி இந்த பாக்ஸ்ல வச்சி எனகிட்ட தந்து இருக்காங்க போல. நான் அத பிரித்து பாக்காம இங்க எடுத்துட்டு வந்துட்டேன். வாசல்ல உங்க பேரன் நின்னுகிட்டு யாருக்கு கிஃப்ட் எனக்கான்னு கேக்கும் போது. ஆமாடா உனக்கு தான்னு நான் சொன்னது உண்மை தான்.”
“ஆனா, அந்த பாக்ஸ்ல இப்படி ஒரு கடிதம் இருக்கும்னு எனக்கு தெரியாது. ஏதோ நட்பின் அடிப்படையில் அந்த பொண்ணு எனக்கு அன்பளிப்பு தந்து இருக்காங்கன்னு தான் நான் நினைச்சேன். அது எப்படி உங்க பேத்தி கையில போச்சுன்னு கூட எனக்கு இப்போ வரை முழுசா புரிஞ்சிக்க முடியல. எது எப்படி இருந்தாலும், இவங்க எப்படி பாட்டி விசாரிக்காம என்னை அடிப்பாங்க? இவங்கள மாதிரியே நானும் பதிலுக்கு இவங்கள அடிச்சா நல்லாவா இருக்கும். பெண்கள் எப்படி ஆண்கள் அடிக்க கூடாதோ, அதே போல ஒரு ஆம்பள மேல பெண்களும் கை வைக்க கூடாது. உங்க பேத்திக்கிட்ட சொல்லி வையுங்க. நான் இன்னும் ஐந்து நாளுல இந்த வீட்டை விட்டு போயிடுவேன். ஆனா, இந்த மாதிரி அவசர குடுக்கை தனம் இருந்தா, இவங்கனால யாருக்கும் எந்த நிம்மதியும் கிடைக்காது.
“அப்புறம் இந்தாங்க. இதுநாள் வர நான் இங்க சாப்பிட்டதுக்கு பணம். இன்னும் 5 நாளுல நான் இங்க இருந்து போயிடுறேன். உங்க பேத்திக்கு என்னாட கோடி நன்றிகளை தெரியப்படுத்திடுங்க" என்று மூச்சு விடாமல் பேசிய கொடி, தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து டேபிள் மேல் வைத்தவன், மகிழினியை பார்த்து ஒரு முறை முறைத்தவன் பார்வையில் உள்ள உண்மையை கண்டு மகிழினியின் கண்கள் மேலும் கலங்கியது.
"என்னமா இது? ஏன் இப்படி அவசரப்பட்ட? இப்போ பாரு பாவம் அந்த தம்பி எவ்வளவு வருத்தம் இருந்தா, இனிமே இந்த வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு, சாப்பிட்ட சாப்பாடுக்கு பணத்தை எடுத்து வச்சிட்டு போகுது" என்று பாட்டி கொடியின் பக்கம் பேசினார்.
"இல்ல பாட்டி அந்த லெட்டரை பார்த்ததும் எனக்கு இவர் தான் எழுதி இருப்பாரோன்னு நினைச்சுட்டேன். தப்பு தான் பாட்டி. நான் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்" என்ற மகிழினி தன் அறையில் இருந்து மாட்டிக்கு செல்ல, அவளைப் பின் தொடர்ந்து வேணுவும் செல்ல, அங்கே கொடி தங்கி இருக்கும் ரூம் கதவு பூட்டி இருந்தது.
வாசலில் சுரேஷின் பைக் நின்று இருந்ததை பார்த்த மகிழினி, "வேணு அவர் வண்டி கூட கொண்டு போகல போல. அப்போ பக்கதுல எங்காவது போய் இருப்பாரா" என்று வருத்தத்துடன் கேட்டாள் மகிழினி.
"தெரியலயே அத்த. ஆமா நீ ஏன் அவர்கிட்ட சண்டை போட்ட? நார்மலா நீ யார் கூடவும் சண்டை போட மாட்டியே. என்னாச்சு உனக்கு?" என்று கேள்வி கேட்க,
"எல்லாம் உன்னால தான். வா கீழே போகலாம்" என்று பொடியனை இழுத்துக்கொண்டு கீழே சென்றாள் மகிழினி.
டீ கடையில் கையில் சின்ன பையுடன், கடுங்கோபத்தில் அமர்ந்து இருந்த கொடியின் செல் போன் ரிங் ஆனதும், அதே கோபத்துடன் போனை எடுத்தவன், தன்னை அழைப்பது தன்னுடன் பிறந்த உடன் பிறப்பு சசி என்று தெரிந்து கொண்டவன், பெருமூச்சியை வெளியேற்றிய நிலையில் சசியின் அழைப்புக்கு பதில் தந்தான்.