Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 103
- Thread Author
- #1
விவாதக் காதல் – 51
சில நிமிடங்கள் கடந்த நிலையில், ஐடி கம்பெனியில் இருந்து உணவு எடுத்துக்கொண்டு போக வண்டி வந்ததும், உணவை வண்டியில் ஏத்தி அனுப்பிய பின்னர், சிரித்துக்கொண்டே கணவன் பக்கம் வந்த மகிழினி, “சாருக்கு கை வசம் நிறைய தொழில் தெரியும் போல?” என்றாள்.
“கைத்தொழில் ஒன்று தான் மனிதனை என்னைக்குமே கைவிடாதுங்க.”
“ம்... அப்போ சீக்கிரமா நீங்க ஒரு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணிடுவிங்களா?”
“நான் ஏன் புதுசா ஸ்டார்ட் பண்ணணும். என் பொண்டாட்டி நடத்துற கேண்டீன்ல எனக்கு ஒரு வேலை கேட்டா தர மாட்டாங்களா என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“உங்களுக்கு வேணும்னா இந்த கேண்டினை நீங்களே எடுத்துக்கோங்க.”
“அதெல்லாம் வேணாம். எனக்கு நீங்க மட்டும் போதுங்க” என்றான் கொடிவீரன்.
“என்னை வச்சி நீங்க என்ன போறீங்க?”
“ம்... அதை ஒரு வருஷம் கடந்து நீங்களே தெரிஞ்சிப்பிங்க.”
“புரியல.”
“நமக்குப் பிறக்கப்போற பிள்ளைங்களுக்கு அம்மா என்ற அந்தஸ்தை தருவேன்னு சொல்ல வந்தேங்க.”
“என்கிட்ட நீங்க அடி தான் வாங்க போறீங்க.” என்று எச்சரித்தாள் அவள்.
“ம்... கண்டிப்பா ஒரு வருஷத்துக்கு அப்புறம் வாங்கிக்கிறேன். இப்போ வாங்க கிளம்பலாம்.”
“ம்... நீங்க உங்க பையை எடுத்துக்கிட்டு வெளிய வெயிட் பண்ணுங்க. நான் கேண்டீன் பூட்டிட்டு வரேன்.” என்றவள் கேண்டினை பூட்டிக்கொண்டு வெளியே வர,
பைக்கில் அமர்ந்து இருந்தவன் கைபேசியை எடுத்து, “நான் வேணா ஆட்டோ புக் பண்ணவா? இல்ல கேண்டீன் ஆட்டோ இருக்கா?” என்று கேட்க,
“எதுக்கு ஆட்டோ?” என்று இவள் முகம் சுருங்க
“வீட்டுக்கு போக தாங்க. எப்படியும் நீங்க என் கூட வண்டியில வர மாட்டீங்க. அதான் ஆட்டோ கூப்பிடவான்னு கேட்டேன்.”
“நான் வர மாட்டேன்னு நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க. வண்டியை எடுங்க போகலாம்” என்றவளின் செயலில் சற்று குழம்பி தான் போனான். மேற்கொண்டு அவளை சீண்டிப் பார்க்காமல் முதல் முறையாக தன் மனைவியுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றான்.
“நான் டின்னர் ரெடி பண்ணுறேன். நீங்க ரெப்ரஷ் ஆகிட்டு வாங்க” என்று கீழ் வீட்டுக்கு செல்ல, கொடிவீரன் எப்போதும்போல மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று, சில நிமிடங்களில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கீழே இறங்க, மகிழினி வீட்டுக்குள் நுழைந்த சமயம், சட்டென்று கரண்ட் நின்று வீடே இருள் சூழ்ந்தது.
அவன் போனில் இருந்த லைட்டை ஒளிர செய்தவன், எதிரில் தரையில் பேச்சு மூச்சு இல்லாமல் மகிழினி கீழே விழுந்து இருப்பதைக் கண்டு பயந்து அவள் அருகில் சென்று, “ஏங்க என்னாச்சு உங்களுக்கு? இங்க பாருங்க” என்று அவள் கன்னத்தை தட்ட, மயங்கிய நிலையிலேயே இருந்த மகிழினியின் முகத்தில் தண்ணீர் தெளித்தான் கொடி.
முகத்தில் குளிர்ந்த நீர் பட்டதும், மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள் தன் வலது கையை உதறியபடி வலியால் முகம் சுருங்க, அந்த இருளிலும் அவளின் வலியை அவள் விழிகளில் கண்டு கொண்டான் கொடிவீரன்.
“என்னங்க என்னாச்சு?” என்றவன் செல்போன் வெளிச்சத்தை கொண்டே அவளை கைத்தாங்கலாக தூக்கி சோபாவில் அமர வைத்தான்.
“அங்க அந்த சுவிட்ச் போட போனேன். அப்போ சட்டுன்னு ஷாக் அடிச்சிடுது” என்றாள் மீண்டும் கைகளை உதறிக்கொண்டே.
“ஐயோ அதான் மயங்கிட்டிங்களா? ஏங்க வேற எங்காவது அடிபட்டு இருக்கா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று இவன் பதற
“ஹாங் இல்ல இல்ல. அடி எல்லாம் படல.”
கைபேசியை மனைவியிடம் தந்தவன், “இருங்கங்க நான் தண்ணி கொண்டு வரேன்” என்று மேசை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை அவள் கையில் தந்து, “நீங்க தண்ணி குடிங்க ஷார்ட் செர்க்கட் எதாவது ஆகியிருக்கும். நான் என்னனு பார்க்குறேன்.” என்றவன் மெயினை ஆஃப் செய்த பின்னர் சுவிட்ச் போர்டில் சில வயர்களை கனெக்ட் செய்து மீண்டும் மெயினை ஆன் செய்ததும் வீட்டில் மின்சாரம் மிளிர்ந்தது.
“ஷப்பா! நல்லவேளை உங்களுக்கு இந்த வேலை தெரிஞ்சிருக்கு. இல்லைனா நாளைக்கு வர நம்ம இருட்டுல தான் இருந்து இருக்கனும்.” தன் கையை உதறிக்கொண்டே சோபாவில் இருந்து எழ பார்க்க,
“இருங்க இருங்க. டின்னர் பண்ணவா போறீங்க?” என்று கேட்டதும்
“ம்... ஆமா” என்று இவள் தலை அசைக்க,
“நீங்க பாட்டு கேட்டுகிட்டு நிம்மதியா உக்காருங்க. நான் இன்னைக்கு டின்னர் ரெடி பண்ணுறேன்” என்றவன் கைபேசியில் பாடலை ஒலிக்க செய்து சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டான்
கிட்டத்தட்ட ஐந்து பாடல்கள் முடிந்த நிலையில் உணவுடன் வெளியே வந்தவன், “வாங்கங்க சாப்பிடலாம்” என்று அழைக்க அவளோ அசதியில் உறங்கிப் போயிருக்க, அவளைக் கண்டு தனக்குள் ரசித்தவன், “ஏங்க...” என்று பொறுமையாக அழைக்க,
“தூக்கம் வருது பாட்டி. நான் போய் தூங்குறேன்.” தூக்க கலகத்தில் சோபாவில் இருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றவளை வழி மறைத்தான் கொடிவீரன்.
தன் முன் நிற்கும் உருவம் யாரென்று கண்கள் கசக்கி பார்த்தவள், மீண்டும் கண்களை தேய்த்து கொண்டு பார்க்க, “என்னங்க நல்ல தூக்கமா? சரி வாங்க சாப்பிட்டிட்டு போய் நிம்மதியா படுங்க” என்று மேசையை காட்ட,
“சாரி. நல்லா தூங்கிட்டேன் போல. இருங்க வரேன்.” ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை அலம்பிக்கொண்டு வர,
“உக்காருங்க சாப்பிடலாம். எனக்கு உங்க அளவுக்கு எல்லாம் சமையல் பண்ண தெரியாதுங்க. ஏதோ எனக்கு தெரிந்ததை பண்ணி இருக்கேன். சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றவன் இருவருக்கும் உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
“இது கிச்சடி தானே.ரொம்ப நல்லா இருக்கு. பட் ஏதோ வித்தியாசமான சுவையில் தெரியுது.” என்றாள் மகிழினி.
“ம்... ஐடிஸ் போஹா கிச்சடி மாதிரி இருக்கும்.”
“ரொம்ப நல்லா இருக்கு” என்றவள் உண்மைக்கே அவன் சமையலை ருசித்து சாப்பிடும் அழகை இவனும் ரசித்து கொண்டே சாப்பிட்டு முடிக்க,
“இன்னும் கொஞ்சம் வச்சிக்கிறிங்களா?” என்றவன் மீண்டும் வைக்கப்போக,
“ஹ்ம் ஹ்ம் வேணா வேணாம். நானே சமைச்சு நானே சாப்பிடும் போது, இதுல ஒரு பங்குகூட சாப்பிட மாட்டேன். இன்னைக்கு நிறைய சாப்பிட்டுட்டேன். தேங்க்ஸ்” என்றாள்.
இருவரும் உண்டு முடித்ததும் சேர்ந்தே அந்த இடத்தை சுத்தம் செய்ய, பின் கையில் பிளாஸ்குடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், “கீதா அம்மா போன் பண்ணாங்களா? நல்லபடியா ஊருக்கு போயிட்டாங்கல்ல?” என்று கணவனிடம் கேட்க,
“ம்... அக்கா மெசேஜ் பண்ணாங்க. நல்லபடியா வந்துட்டாங்களாம்.”
“ம்... நம்ம எப்ப ஊருக்கு கிளம்பனும்? நமக்கும் பஸ் டிக்கெட் எல்லாம் ஆன் லைன்ல தான் புக் பண்ணனுமா?”
“நம்ம ஏங்க பஸ்ல போகணும்? நம்ம நம்மளோட காருல போகலாம்.”
“என்ன காருலயா?”
“ஆமா. ஏன் மறுபடியும் பயமா இருக்கா?” என்று கேட்கவும், ஆமென்று தலையசைத்தாள்.
“அதான் நான் இருக்கேனே. ஏன் சும்மா பயந்துகிட்டு இருக்கிங்க?”
“வேணாங்க. நம்ம பஸ்லையே போகலாமே”
“ப்ச் ஏங்க நம்மகிட்ட கார் இருக்கும்போது, நம்ம ஏங்க பஸ்ல போகணும்? நம்ம காருலேயே போகலாம்.” என்றான் கொடிவீரன்.
“இல்ல. காருல போனா எனக்கு பழைய நியாபகம் எல்லாம் வரும்.” என்று தயங்கி சொன்னாள்.
“ஏங்க மனுஷனை டெபன்ஸ் பண்றதே மெமரிஸ் தாங்க. சோ, அதை பேஸ் பண்ணனும். அதுவும் இல்லாம நீங்க என்ன நம்பி வர மாட்டிங்களா என்ன?” கிடுக்குப்பிடியாய் கேட்க,
“ம்... சரி போகலாம்.” என்றாள் இருமனதாக.
“ம்... அது நல்ல பொண்ணுக்கு அழகு.”
“சரி இந்தாங்க ப்ளாஸ்க். நீங்க போய் படுத்துக்கோங்க.”
“எங்க போய் படுக்க சொல்லுறீங்க?”
“இது என்ன கேள்வி. உங்க ரூம்ல தான்.”
“உங்கள இங்க தனியா விட்டுட்டு நான் எப்படிங்க மாடியில தனியா தூங்குறது?”
“அதுக்கு?” என்று முறைத்தாள்.
“நீங்க போய் உங்க ரூம்ல படுங்க. நான் இங்க சோபாவுல படுத்துக்குறேன்.”
“உங்களுக்கு தான் இங்க கால் நீட்ட இடம் இல்லையே.”
“இட்ஸ் ஓகே. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க போய்ப்படுங்க.”
“ம்... வேணும்னா என் ரூம்ல வந்து படுத்துக்கோங்க.” என்றாள் மகிழினி.
“அதெல்லாம் வேணாங்க. நான் அங்க வந்தா நீங்க அப்புறம் தரையில படுப்பீங்க. அதுக்கு நான் சோபாவுலேயே படுத்துக்குறேன்.”
“ம்...”
“அப்புறம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். கேட்கட்டுமா?”
“கேளுங்க” என்றாள் அவள்.
“ஜீவா மேரேஜ்கு என்ன கிப்ட் தரலாம்?”
“அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க?”
“ஓ அப்போ நீங்க மீனாக்கு தனியா கிப்ட் பண்ண போறிங்களா?”
“ம்... ஆமா நான் அவ மேரேஜ் முடிந்து இந்த ஊருக்கு வந்ததும், அவ வீட்டுல போய் பார்த்து கிப்ட் பண்ணிட்டு வந்துடுவேன்.”
“என்னங்க சொல்றிங்க? அப்போ நீங்க ஜீவா மேரேஜ்கு பெங்களூரு வர மாட்டீங்களா?” என்று கேட்டான்.
“இதுவரை நான் அவ்ளோ தூரம் எல்லாம் போனதே இல்ல. அதான் வந்ததும் பார்த்துக்குறேன் சொன்னேன்.”
“இதுவரை போகலைனா என்னங்க. இனிமே போகலாம் இல்ல.”
“ஹ்ம் வேணாம். எனக்கு அவ்ளோ தூரம் எல்லாம் வர ஒரு மாதிரி இருக்கும்.”
“ஏன் அப்படி?” தெரிந்துகொள்ள கேட்டான்.
“ப்ச் அது அப்படித்தான். நானே நீங்க சொன்ன மாதிரி ஜெயா அம்மா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் அவங்க சொல்ற சடங்குக்கு எல்லாம் சம்மதம் சொன்னேன். இல்லைனா எனக்கு இதுல எல்லாம் பெரிய ஈடுபாடு எல்லாம் இல்ல.” என்றாள்.
“ என்னங்க மறுபடியும் பழைய மாதிரி ஆரம்பிக்கிறிங்களா?”
“ப்ச் உண்மையை தாங்க சொல்லுறேன். இந்த சடங்கு எல்லாம் பண்ணிக்க எனக்கு விருப்பமே இல்ல.”
”அப்போ ஏங்க அம்மாகிட்ட ஓகே சொன்னிங்க? அப்போவே உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே?”
“அவங்க நம்பிக்கையை எப்படி நான் வேணான்னு சொல்ல முடியும்?”
”தாலி ஏன் பெருக்கி போடுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”