Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 99
- Thread Author
- #1
விவாதக் காதல் – 49
மகிழினி கணவனை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், "அத்தை அத்தை இந்தாங்க தண்ணி” என்று கூப்பாடு போட்டு கொண்டே வேணு அறைக்குள் நுழைய, அந்த சத்தத்தில் கொடிவீரன் எழ, எதிரில் மகிழினி நின்றிருந்தாள்.
“என்ன மாமா சாப்பிடாம படுத்துட்டீங்க. ஓ... அந்த ரேஷ்மா ஆண்ட்டி கூட சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா? போச்சு போங்க எங்க அத்தை வேற உங்களுக்கு தானியம் எல்லாம் போட்டு தோசை ரெடி பண்ணி, உங்களுக்கு பிடிச்ச சாம்பார் எல்லாம் செய்து கொண்டு வந்துருக்காங்க ஆனா, நீங்க தூங்குறத பார்த்தா இதெல்லாம் நான்தான் சாப்பிடணும் போலயே” என்று வேணு மூச்சு விடாமல் பேச, மகிழினி கடுங்கோபத்துடன் கொடிவீரனை முறைத்தாள்.
“ஏங்க இந்த குட்டி சாத்தான் சொல்றத எல்லாம் நம்பாதீங்க. நான் பசி மயக்கத்துல தான் தூங்கிட்டேன். ரேஷ்மா கூட போய் நான் பச்சத்தண்ணி கூட குடிக்கலைங்க. என்னை நம்புங்க” என்றான் பாவமாகவே.
“ஓ... பச்சத்தண்ணி கூட குடிக்கலைன்னா அப்போ சூடா மசாலா பால் குடிச்சீங்களா?” இடுப்பில் கை வைத்து மாமனை அத்தையிடம் கோர்த்து விடுவதிலேயே குறியாக இருந்தான்.
“அடேய் உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன். ஏன்டா என் பொண்டாட்டிகிட்ட என்னை இப்படி மாட்டி விடுற. இப்போ என்னடா, உனக்கு நான் பொண்டாட்டி கையாள அடிவாங்குறதை பார்த்தா தான், நிம்மதியா தூக்கம் வருமா. ஏங்க இவன் ஆசைக்காகவாது நீங்க என்னை ரெண்டு அடி அடிச்சுக்கோங்க. ஆனா, பிளீஸ் இப்படி அந்த அழகான கண்ணால என்னை கொல்லுற மாதிரி முறைக்காதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றான்.
“என்ன கஷ்டமா இருக்கு?”
“ம்... உங்க விழிகள் பேசும் அழகை ரசிக்காம, இப்படி உங்கிட்ட விதண்டாவாதம் மட்டுமே பேசிகிட்டு இருக்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க.”
“நீங்க ஆள் எப்படி? எல்லா பொண்ணுகிட்டயும் இப்படி தான் விழி, பழி, குழின்னு பேசி கரெக்ட் பண்ண பார்ப்பீங்களோ?” என்றாள் கிண்டலாக.
“ம்க்கும் கட்டின பொண்டாட்டியையே கரெக்ட் பண்ண கையாலாகாத மக்கு புருஷன்ங்க நான். நான் எப்படிங்க வேற பொண்ண எல்லாம் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணப்போறேன்?” என்றான் அப்பாவியாக.
“ஓஹோ!”
“ஏன் என்னை பார்த்தா எல்லா பொண்ணுங்க கூடவும் கடல போடுற ஆளு மாதிரி உங்களுக்கு தெரியுதா?”
“நீங்க கடல போட்டாலும் சரி. அவங்க உங்க தலையில கல்லை போட்டாலும் சரி. எனக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். வாங்க வந்து சாப்பிடுங்க.”
“என்னங்க நீங்களாவே டின்னர் மாடிக்கு கொண்டு வந்துட்டீங்களா?” நம்பாது பார்த்தான் மனைவியை.
“பின்ன அதுவா மாடிக்கு ஏறி தனியா வருமா?”
“ஐயோ செம்ம காமெடிங்க. கண்டிப்பா சாப்பிட்டு முடிச்சிட்டு மறுபடியும் ஒருமுறை நீங்க சொன்ன காமெடியை நினைச்சு சிரிக்கிறேன்.”
“ஹலோ என்ன லந்தா?”
“சரி கோவப்படாதிங்க. ஆமா வேணு, பாட்டி, அத்தை எல்லாம் சாப்பிட்டாச்சா?”
“ம்... ஆச்சு.”
“நீங்க சாப்ட்டிங்களா?”
“இன்னும் இல்ல.”
“ஓ... புருஷன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவிங்களா” என்றதும் மகிழினி முறைக்க, “ஓகே ஓகே முறைக்காதிங்க” என்றான்.
“பாஸ் நான் நட்பின் அடிப்படையில தான் சாப்பாடு கொண்டு வந்தேன். இப்போ சாப்பிட வரிங்களா, எனக்கு தூக்கம் வருது.”
“ம்... நட்பு.! அது சரி. நீங்க போங்கங்க நான் டிரஸ் மாத்திட்டு சாப்பிடுக்குறேன். நீங்க நேரத்தோட சாப்பிட்டு போய்ப்படுங்க.” என்றவன் இரவு உடையை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றவன், சில நிமிடங்களில் வெளியே வர, மகிழினி இரவு உணவை ஹாட்பாக்ஸில் இருந்து தட்டில் எடுத்து வைத்தாள்.
“கீழ உக்கார முடியுமா? இல்ல பெட்ல உக்காந்து சாப்பிட போறிங்களா?”
“நான் எடுத்து வச்சி சாப்பிடுக்குறேன். நீங்க போங்க.”
“ப்ச் நீங்க தானே சொன்னிங்க. யாராவது பரிமாறனா நல்லா சாப்பிடலாம்னு. நீங்க உக்காருங்க நானே எடுத்து வைக்கிறேன்.”
“யாராவது ஊட்டி விட்டா கூட தான் நான் நல்லா சாப்பிடுவேன்.” என்று பல்லைக் காட்டினான்.
“ஓ... எத்தனை பேர் சாருக்கு ஊட்டி விட்டுருக்காங்க?”
“ம்... என் அப்பா. என் அம்மா. என் அக்கா. அப்புறம்...” என்று நிறுத்த, அவளோ முறைக்க, “சரி வேணாம் விடுங்க. அதை தெரிந்து நீங்க என்ன பண்ண போறீங்க?” என்றான்.
“பரவாயில்ல சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன்.”
“உங்களுக்கு என்னை பற்றி தெரிஞ்சிக்க, இது மட்டும்தான் கேட்க தோணுதா?”
“ஏன் வேற என்ன உங்கள பற்றி நான் தெரிஞ்சிக்கணும்?”
“ம்... எப்போடா என் பொண்டாட்டி, என் காதல ஏத்துப்பான்னு நான் காத்து இருக்குறத பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு நீங்க ஆசைப்படவே மாட்டிங்களா?”
“காதலா? நீங்க யாரையாவது காதல் பண்ணுறீங்களா? ப்ச் பார்த்திங்களா என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல. சரி யார லவ் பண்ணுறிங்க?” என்றவளுக்கு ஆர்வமும் ஒருவித எரிச்சலும் இருந்தது.
“ம்... இருங்க வரேன்” என்று எழுந்து சென்றவன் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வர,
“ஹலோ சார் பொண்ணு யாருன்னு கேட்டா, சுவத்துல இருக்குற கண்ணாடியை ஏன் எடுத்துட்டு வரீங்க?” என்று கேட்டாள்.
“ம்... என் கண்ணுக்குள்ள இருக்குற என் காதலியை தான் உங்க கண்ணுக்கு தெரியல. அட்லீஸ்ட் இந்த முகம் காட்டும் கண்ணாடியில தெரியுற பிம்பத்தையாவது பார்த்து தெரிஞ்சிக்கோங்க, என் காதலி நீங்கதான்னு.” மகிழினியின் முன்பு முகம் காட்டும் கண்ணாடி இருந்தாலும் அவளின் பார்வை என்னவோ கொடிவீரனை மட்டும்தான் உள்வாங்கி இருந்தது.
“ம்... முகம் காட்டுற கண்ணாடிக்கு, உங்க மனசையும் காட்டுற சக்தி இருந்தா, இந்நேரம் நம்ம ஜாலியா ஹனி மூன் போய் இருக்கலாம்.”
“ஓ... சாருக்கு அந்த ஆசையெல்லாம் வேற இருக்கா?”
“நான் என்ன உணர்ச்சி இல்லாத ஜடமா. எனக்கும் என் பொண்டாட்டி கூட தேன்நிலவு போகணும். பார்க், சினிமா, பீச், ஹான் முக்கியமா கோவிலுக்கு எல்லாம் போகணும்னு ஆசை இருக்காதா?”
“ஓஹோ சாருக்கு வேற என்ன எல்லாம் ஆசை இருக்கு.?”
“அதெல்லாம் ஏகப்பட்டது இருக்குங்க.”
“ஏகப்பட்டதுல இப்போ மனசுக்குபட்ட ரெண்டு மூணு விஷயத்தை சொல்லுங்க கேப்போம்.” என்றாள்.
“ம்... நம்ம ஒருவரை ஒருவர் புரிஞ்சிகிட்டு, நம்ம லைஃபை அழகா ஸ்மூத்தா கொண்டு போகணும். அங்கேங்க கல்லு, முள்ளு, மேடு, பள்ளம் எல்லாம் வந்தா கூட ஸ்லிப் ஆகலாம். பட் அங்கேயே ஸ்லீப் ஆகக்கூடாது. காலையில சண்ட போட்டா கூட நைட்டுக்குள்ள சமாதானம் ஆகிடணும்.”
“ஓ... எப்படி? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சாரி கேட்டீங்களே. அப்படி கேட்டா.”
“ம்... ஆமா. தப்பு பண்ணா சாரி கேக்குறது தப்பு இல்லையே.”
“ம்... தப்பு இல்ல.”
“வெளி ஆளுகிட்ட எல்லாம் அனாவசியமா நான் சாரி கேட்கமாட்டேன். என் சாரிக்கு வேல்யூ இருக்கு.”
“அப்போ என்கிட்ட எப்படி கேட்டீங்க?”
“ப்ச் நீங்க என்ன வெளி ஆளா. நீங்க என் பொண்டாட்டிங்க. அந்த சிவன் கூட தன்னோட பாதியை தான் சக்திக்கு தந்தான். ஆனா, நான் இந்த வேலன், என்னைக்கு உங்க கழுத்துல தாலி கட்டினேனோ, என்னோட ஆதியில் இருந்து அந்தம்வரை அன்னைக்கே உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணிட்டேன்.” என்று தன் காதலைச் சொன்னான்.
“வேலனா! அது யாரு வேலன்.?”
”அதுவும் நான்தான்.”
“என்ன சொல்லுறீங்க? உங்க பெயர் கொடிவீரன் தானே.?”
“என் முழுப்பெயர் கொடிவீர கந்தவேலன். நான் எங்க அம்மா வயத்துல இருக்கும்போது, எங்க அம்மாவுக்கு மஞ்சள்காமாலை ரத்தத்துல கலந்து சாக பிழைக்க கஷ்டப்பட்டு இருக்காங்க. அப்போ என் அப்பா எங்க அம்மாவையும் என்னையும் நல்லபடியா அந்த கடவுள் காப்பாற்றி கொடுத்தா, அந்த பழனி ஆண்டவனுக்கு வெள்ளியில வேல் சாற்றி, எனக்கும் அந்த கோவில் சன்னதியில பெயர் வச்சி, சாமிக்கு அபிஷேகம் பண்ணுறேன்னு வேண்டுகிட்டாறாம். அதான் எனக்கு இவ்ளோ பெரிய பெயர்.”
“ம்...” என்று அவள் உதட்டை சுளிக்க,
“என்னை யாருக்கு எப்படி கூப்பிடணும்னு தோணுதோ அப்படி கூப்பிடுவாங்க.”
“அப்போ வேலனும், வீரனும் உங்க பெயர் தானா?”
“ம்... ஆமா. ஏன் கேக்குறீங்க?” என்று கேட்டான்.
“ஹ்ம் சும்மா தான். சரி சாப்பிடுங்க ஆறிடப்போகுது.”
“ம்... நீங்களும் இங்கேய சாப்பிடுங்களேன்.
‘இல்ல ஒரு தட்டுதான் இருக்கு. நீங்க சாப்பிடுங்க.” என்றாள் மகிழினி.
“நான், என் அம்மா, அக்கா எல்லாரும் ஒரே தட்டுல தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடலாமே.”
“என்ன ஒரே தட்டுலையா?”
“ம்... அம்மாவே எங்களுக்கு உருண்டை பிடிச்சி கொடுப்பாங்க. நாங்க வயிறார சாப்பிடுவோம். ம்... நம்மளும் இந்த ஒரு தட்டுலயே சாப்பிடலாம். நீங்களே உங்க கையாள சாப்பாடு கொடுங்க. நான் சாப்பிடுக்குறேன்” என்றான்.
“நானா?”
“ம்... ஆமா. ஏன் எனக்கு நீங்க உங்க கையாள சாப்பாடு தரமாட்டிங்களா?”
“ம்... இல்ல நான்...” என்று அவள் தடுமாற,
“அட கொடுங்கங்க. ரொம்ப கஞ்சம் போலங்க நீங்க. உங்க காதலை தான் எனக்கு தர மாட்டுறீங்கன்னு பார்த்தா, உங்க கையாள சாப்பாடு கூட தரமாட்டீங்க போல.”
“சரி ரொம்ப ஓட்டாதீங்க. இந்தாங்க சாப்பிடுங்க” என்றவள் தன் கையால் கணவனுக்கு இரவு உணவை எடுத்து கொடுக்க,
“நீங்களும் சாப்பிடுங்க” என்று இன்று மனைவியிடம் மனம் விட்டு பேசிய சில நிமிடங்களை ரசித்தபடியே, அவள் தந்த உணவையும் ருசிக்க தொடங்கினான்.