• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 48

Joined
Jan 15, 2026
Messages
97
விவாதக் காதல் - 48


ரேஷ்மாவிடம் தோற்று போனவனாக இறங்கி வந்தவன், கீழ் வீடு பூட்டி இருப்பதை பார்த்து, ‘வீட்டுல யாரும் இல்லையா? அத்தை, பாட்டி ரெண்டு பேரும் எங்க கிளம்பி போனாங்க?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டிருக்க,

அவனைக் கண்டுவிட்ட ரேஷ்மா வேகமாக காரில் இருந்து இறங்கி முன் கதவை திறந்துவிட்டு, “வீரா வாங்க நேரமாச்சு” என்று அழைத்ததும், கொடிவீரன் காரில் ஏறி அமர்ந்துகொண்டான். இந்தக் காட்சியை எதிர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த வேணு பார்த்த சமயம், மருத்துவமனை அழைத்துச் சென்றவள், திரும்பி வந்து விடும்போது மணி மாலை ஆறு ஆகிவிட்டது.

காரில் இருந்து இறங்கிய கொடிவீரன், “ரொம்ப தேங்க்ஸ்ங்க. நீங்க கிளம்புங்க. நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்” என்றான்.

“நீங்க ரொம்ப மோசம் வீரா. நான் உங்கள வெளிய எங்காவது காபி ஷாப் அழைச்சிட்டு போறேன்னு சொன்னதுக்கும் வேணான்னு சொல்லிட்டீங்க. சரி உங்க வீட்டுலயாவது ஒரு வாய் காபி தருவிங்கன்னு பார்த்தா, இப்படி ரோட்டுல நிக்க வச்சு விரட்டி விடுறிங்க.”

“இப்போ என்ன உங்களுக்கு காபி வேணுமா?”

“ம்... ஆமா.”

“சரி வாங்க” என்றவன் ரேஷ்மாவுடன் வீட்டுக்குள் நுழைய ஹாலில் பாட்டியும் கீதாவும் அமர்ந்து இருந்தார்கள்.

“ஹாய் பாட்டிஸ்” என்று ரேஷ்மா குதூகலமாகக் கத்த,

“வாமா உக்காரு.” என்றதும் அவள் அவர் அருகில் அமர, கீதாவோ வாயை மூடி திறக்கவில்லை.

“என்ன தம்பி வெளிய போயிட்டு வரிங்களா? எங்க கையில கட்டு கழட்டியாச்சா?”

“ம்... ஆமா பாட்டி. நாளைக்கு வேலைக்குப் போகணும். அதான் டாக்டரை பார்த்து கட்டு ரிமூவ் பண்ணிட்டு வந்தேன்.”

“நீங்க ஹாஸ்பிட்டல்கு தனியாவா போனீங்க?” என்று அவர் கேட்க,

“அது...” என்று திணறினான் கொடிவீரன்.

“நோ நோ. நான்தான் வீராவை என் காருல அழைச்சிட்டு போய், அவரு கூடவே இருந்து மறுபடியும் ஜாக்கிரதையா அழைச்சிட்டு வந்தேன்.” என்று ரேஷ்மா சொல்ல, கீதா அப்படியே அமைதியாகவே அமர்ந்திருக்க, பாட்டி, “ஓ...” என்றார்.

“அத்தை என்னாச்சு உங்களுக்கு பல்வலியா?”

“ஹ்ம் இல்ல மாப்ள.”

“பின்ன ஏன் வாயில கைய வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?”

“சாரி மாப்ள.”

“எதுக்கு சாரி?”

“அது வந்து... நான்...” என்று பேசாதிருக்க,

“கீதா இரு. பாப்பா நீ என்ன சாப்பிடுற?” என்று கேட்டார் பாட்டி.

“பாட்டி அவங்களுக்கு காபி வேணுமாம். கீதா அத்தை நீங்க இவங்களுக்கு ஒரு காபி போட்டு கொண்டு வரிங்களா?” என்று தன் அத்தையை கேட்க, கீதாவோ வாயில் வைத்த கையை எடுக்காமல் திருட்டு முழி விழித்து கொண்டிருக்க, அதைப் பார்த்து, "என்ன?" என்று கண்களால் கேள்வி கேட்கும் சமயம்

"காபி காபி காபி எடுத்துக்கோங்க காபி காபி" என்று சமையல் அறையில் இருந்து வந்த வேணு, தன் கையில் இருந்த காபியை ரேஷ்மா எதிரில் நீட்டினான்.

“டேய் வேணு நீயா காபி போட்ட” என்று இவன் கேட்டதும்

“நான் இல்ல மாமா. அத்தை போட்டாங்க” என்றான்.

“ஓ... சிஎம் கேண்டீன்ல இருந்து வந்துட்டாங்களா?” என்று சமையல் அறையை எட்டிப்பார்க்க, அங்கே மகிழினியின் நிழல் மட்டுமே தரையில் தெரிந்தது.

“ரேஷ்மா நீங்க அத்தைகிட்ட பேசிகிட்டு இருங்க. நான் இதோ வரேன்” என்றவன் சமையல் அறையை நோக்கி செல்ல

“மாப்பு வேணா போகாதீங்க” என்று எச்சரித்தார் கீதா.

புருவம் உயர்த்தி "ஏன்?" என்று கேட்க,

“சாரி மாப்ள. ஆக்சுவலி இன்னைக்கு உங்க சிஎம் காலையில கேண்டீன் போகும் போது, உங்ககிட்ட சொல்லச் சொல்லி என்கிட்ட ஒரு செய்தி சொன்னாங்க. அதை நான் உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்றவர் பச்சைப்பிள்ளையை போல முகத்தை பாவமாக வைக்க,

அவர் அருகில் சென்றவன், “என்ன அத்தை? என்ன சொல்லுறீங்க? என்கிட்ட அவங்க அப்படி என்ன சொல்ல சொன்னாங்க?” என்று கேட்டான்.

“அதுவா மாப்பிள்ள. இன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல்கு போகணும்னு நேத்து என்கிட்ட சொன்னதை நான் உங்க சிஎம்கு இன்னைக்கு காலையில சொன்னேனா...”

“ம்... சரி. அதிலென்ன?”

“அதுக்கு உங்க சிஎம், கேண்டீன்ல வேலையை சீக்கிரமா முடிச்சிட்டு நான் 5 மணிக்கு எல்லாம் வந்து அவரை நானே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன்னு, உங்ககிட்ட சொல்ல சொன்னாங்களா...” கொடிவீரன் அவரை முறைக்க, “அதை நான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”

“அத்தை” என்று அவன் பல்லைக்கடிக்க,

“நான் மகிழினி பாட்டி கூட பக்கத்துல கடைக்கு போய்ட்டு வரதுக்குள்ள, நீங்க இந்த பொண்ணு கூட வெளிய போய்ட்டிங்களா... நீங்க அப்படி போனதும் இப்படி உங்கள ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போக, உங்க சிஎம் ஆட்டோல வந்துட்டாங்க. உங்களை எங்கனு கேட்டதுக்கு இந்த வேணு பையன், நீங்களும், இந்த ரேஷ்மா பொண்ணும் ஒண்ணா காருல கிளம்பி போனீங்கன்னு போட்டு விட்டுட்டான்.” என்றார் கீதா.

“என்ன அத்தை சொல்லுறீங்க? அவங்க என்கூட ஹாஸ்பிடல் வர போறாங்கனு நீங்க சொல்லிருந்தா, நான் அவங்களுக்காக வெயிட் பண்ணிருப்பேனே” என்றவன் வேகமாக சமையல் அறைக்குள் நுழைய, வேகமாக இரவு உணவுக்காக காய்களை வெட்டி கொண்டுருந்த மனைவி அருகில் அருகில் சென்றவன், “ஏங்க சாரிங்க. நீங்க என்கூட வராதா இருந்திங்கன்னு எனக்கு தெரியாதுங்க.” என்று அவள் முகத்தையே பார்த்தான்.

“ஏன் மாமா நீங்க ரேஷ்மா அக்கா கூட காருல போகும்போது ஒரு பாட்டு சத்தம் கேட்டுச்சே. அது ஹிந்தி பாட்டா? இல்ல இங்கிலிஷ் பாட்டா?” என்று உள்ளே வந்தவனை பார்த்த கொடிவீரன் கடுப்பாக முறைக்க, மகிழினியோ இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

“ஏங்க உங்கிட்ட தான் பேசுறேன். பிளீஸ் என்னை பாருங்களேன். நீங்க அத்தைக்கிட்ட சொன்னது எனக்கு தெரியாதுங்க” என்று கெஞ்சும் குரலில் பேசியவனின் சூழ்நிலையை அறிந்துகொள்ள விரும்பாத மகிழினி, மேலும் அவள் செய்யும் வேலையில் மட்டுமே கவனமாக இருந்தாள்.

“வீரா நீங்க என்ன இதுக்கெல்லாம் இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க. இவங்க உங்க வொய்ப் தானே. ஏன் உங்க அத்தைகிட்ட இன்பார்ம் பண்றவங்களுக்கு, உங்களுக்கு ஒரு போன் பண்ணி விவரத்தை சொல்ல முடியாதா என்ன? ஐ திங்க் இவங்ககிட்ட உங்க போன் நம்பர் கூட இருக்காதுன்னு தான் நான் நினைக்கிறேன்” என்று சமையல் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த ரேஷ்மாவைப் பார்த்து மகிழினி முகம் மாறினாள்.

“ப்ச் ரேஷ்மா நீங்க ஹால்ல போய் உக்காந்து காபி குடிங்க. நான் பேசிட்டு வரேன்.” என்றவன் மனைவியை பார்க்க,

“என்ன வீரா நீங்க. இவங்க பண்ண வேண்டிய கடமையை நான் உங்களுக்காக பண்ணிருக்கேன். ஆனா, இவங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லாம முகத்தை இப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. ஓ... இதுனால தான் இவங்கள நீங்க சிஎம்னு கூப்பிடுறிங்களா?” என்றதில் கொடிவீரன் அதிர, மகிழினி முறைத்தாள்.

"அப்போ சிஎம்னா சிடு மூஞ்சியா" என்று ரேஷ்மா கிண்டலாக கேட்க,

அதே சமயம் பளார் என்று இடி விழும் சத்தம் போல அடி விழுந்தது வேணு கன்னத்தில்.

வேணுவுக்கு விழுந்த அடியில் கொடிவீரன், ரேஷ்மா அரண்டு போய் நின்று இருக்க,

“ஏன் அத்தை என்னை அடிச்சீங்க?” வேணு அழுதபடி கேட்டான்.

“சமையலறைக்கு செருப்பு காலோட வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

“நான் எங்க செருப்பு போட்டு இருக்கேன்.”

“நீங்க என்னை தானே சொல்லுறீங்க?” என்று இடையிட்டாள் ரேஷ்மா.

“ரேஷ்மா நீங்க ஹால்ல போய் உக்காருங்க. பிளீஸ்” என்றான் கொடிவீரன்.

“இட்ஸ் ஓகே வீரா. நான் கிளம்புறேன். நம்ம நாளைக்கு வொர்க்ல மீட் பண்ணலாம்” என்றதும் தலையசைத்தான்.

“ஹலோ மேடம்” என்று செல்பவளை நிறுத்தினாள் மகிழினி.

“இப்போ ஏங்க போறவுங்கள கூப்புடுறீங்க” என்று பதறினான் கொடிவீரன்.

“வாட்?” கொஞ்சம் திமிராகவே கேட்டாள் ரேஷ்மா.

“அடுத்தவங்க வீட்டுக்கு போனா வாசல்ல செருப்பை கழட்டிட்டு போகணும்னு கூட உங்களுக்கு தெரியாம இருந்து இருக்கலாம். பட், அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல இன்டர்பயர் ஆகக்கூடாதுன்னு கூடவா உங்களுக்கு தெரியாது.”

மகிழினியின் வார்த்தையில் எரிச்சலாகிய ரேஷ்மா, “லிசன் நான் உங்க பர்சனல் லைஃப்ல தலைவிடல. நான் என் வீரா டார்லிங் கூட தான் பேச வந்தேன்.” என்றாள்.

“உங்க டார்லிங் டம்மக்கு எல்லாம் உங்க ஆபீஸ்குள்ள வச்சிக்கோங்க. இது எங்க வீடு. அண்ட் அவரு என்னை என்னவா நினைத்து சிஎம்னு கூப்பிடுறாருன்னு நீங்க கமெண்ட் பண்றதுக்கு, உங்களுக்கு எந்த ரைட்ஸ்ம் இல்ல. ஏதோ நீங்க என் ஃப்ரண்ட் மீனாவோட சிஸ்டர் இன்லானு உங்கள சும்மா விடுறேன். இல்லைன்னு வைங்க....”

கொடிவீரன் “ஐயோ!” என்று அலற,

“என்ன என்ன பண்ணுவீங்க?”

“ம்... நான் என்ன பண்ணுவேன்னு நீங்க உங்க டார்லிங்கிட்ட கேளுங்க. அவரு தெளிவா சொல்லுவாரு.”

“என்ன வீரா இது இவங்க ஏன் இப்படி என்கிட்ட கோவமா நடந்துக்குறாங்க. இங்க நடந்ததை எல்லாம் நீங்களும் தானே பார்த்துகிட்டு இருந்திங்க. என்மேல என்ன தப்பு இருக்கு?” நியாயம் கேட்டாள் அவனிடம்.

“ரேஷ்மா பிளீஸ் நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க.”

“இட்ஸ் டூ மச் வீரா.”

“இல்லிங்க. நான் சொல்றத கேளுங்க நீங்க முதல்ல கிளம்புங்க.” கெஞ்சலாகக் கேட்டான் ரேஷ்மாவிடம்.

“ஹலோ உங்க கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் வெளிய போய் வச்சிக்கிறிங்களா? இங்க நான் டின்னர் பண்ணனும்.”

“இந்த அவமானத்தை நான் கண்டிப்பா மறக்க மாட்டேன் வீரா.”

“வேணு அந்த அருவா எடு. இந்த தேங்காய் வெறும் கத்தியில உடைச்சா சரி வராது போல. அருவாள ஒரே போடு போட்டா வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டா ஆகும் பாரு.”

“ஒரு வெட்டு. ரெண்டு துண்டா அத்தை?” தன் சந்தேகத்தைக் கேட்டான் வேணு.

“ம்... ஆமாடா. ஏன் சந்தேகமா இருக்கா? நான் வேணா ரெண்டு பேரையும் துண்டு போட்டு காட்டவா?” என்றதும் ரேஷ்மா முறைத்தாள்.

“என்ன ரெண்டு பேரையா?”

“இல்ல தேங்காயை ரெண்டு துண்டு போடவான்னு கேட்டேன்டா?”

“எம்மா தாயி நீங்க எதையும் போட வேணாம். ரேஷ்மா பிளீஸ் நீங்க கிளம்புங்க.”

ரேஷ்மா கோவமாக மகிழினி வீட்டில் இருந்து வெளியேற, கீதாவும், பாட்டியும் இங்கே நடந்த எந்த விஷயத்திலும் தலையிடாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, வேணு எப்போதும் போலவே, "நம்ம வாங்காத அடியா" என்று எதிர்த்த வீட்டுக்கு விளையாட சென்ற நிலையில், சமையல் அறையில் நின்றிருந்த மகிழினியின் முகம் கோவத்தால் சிவந்திருந்தது.
 
Joined
Jan 15, 2026
Messages
97
அவளை சமாதானம் செய்ய வார்த்தை கிட்டாமல் மௌனம் காத்த கொடிவீரன், “சாரி சிஎம். நீங்க என்னை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போக வருவீங்கன்னு எனக்கு தெரியாதுங்க.” என்க,

“இன்னோரு முறை நீங்க என்னை சிஎம்னு கூப்பிட்டா, அப்படியே அந்த நாக்கை அறுத்து விட்டுடுவேன் சொல்லிட்டேன்.”

“என்னங்க நீங்க. நான் எப்பவும் உங்கள அப்படி தானே கூப்பிடுவேன்.”

“ஓ... அப்போ உங்களுக்கு உங்க ஆளு சொல்ற மாதிரி என்னை பார்த்தா சிடுமூஞ்சி போல தெரியுதா?”

”ஏங்க எதுக்குங்க இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க. நான் உங்க பெயரை சுருக்கி தான் சிஎம்னு கூப்பிட்டேன்.”

“இனி நீங்க ஒன்னும் என்னை அப்படி கூப்பிட வேணாம்.”

“பின்ன நான் என்னனு சொல்லி உங்கள கூப்பிடுறது?”

“நீங்க என்னை கூப்பிடவே வேணாங்க. நீங்க ஏன் என்னை கூப்பிடனும்? அதான் உங்களுக்கு எதாவதுனா காரு எடுத்துட்டு வந்து உங்கள அழைச்சிட்டு போக ஆளு இருக்கே. இனி நீங்க அவங்களேயே கூப்பிடுங்க. அவங்க உங்களுக்கு பாட்டு எல்லாம் போட்டுவிட்டு, உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணுவாங்க” என்றாள் மகிழினி.

“ஏங்க நீங்க பேசுறதுல எதாவது லாஜிக் இருக்கா? நீங்க ஏங்க இப்படி எல்லாம் பேசி உங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்குறிங்க?”

“ஓ... அப்போ நான் பேசுறது அசிங்கமா இருக்குன்னு சொல்றிங்களா. சரிங்க இனி நான் பேசல போதுமா” என்றாள் அதற்கும்.

“ப்ச் என்னங்க நீங்க. இப்போ ஏங்க நீங்க இவ்ளோ கோவப்படுறீங்க?”

“என்ன கோவப்படுறேனா? வேணாம் என்னை பேச வைக்காதிங்க.”

“என்ன பேச போறீங்க? பேசுங்க பரவாயில்ல பேசுங்க.” என்றான் அவனும்.

“நான் உங்க கிட்ட பேச தயாராயில்ல. நீங்க முதல்ல இங்க இருந்து போங்க .”

“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு. நீங்க என்கூட ஹாஸ்பிடல் வரதா என் அத்தைகிட்ட சொல்லிட்டு போனது எனக்கு தெரியாதுங்க. தெரிந்திருந்தா கண்டிப்பா நான் ரேஷ்மா கூட போயிருக்க மாட்டேன். அதே மாதிரி ரேஷ்மாவும் என்னை அழைச்சிட்டு போக வீட்டுக்கு வருவாங்கன்னு எனக்கு தெரியாது. அவங்களா வந்தாங்க. என்னை அழைச்சிட்டு போறேன்னு சொன்னாங்க. சரின்னு நானும் போனேன். இப்போ என்ன பண்ண சொல்லுறீங்க?”

“அதான் எல்லாம் பண்ணிட்டீங்க இல்ல. இப்போ இன்னும் பாக்கி என்ன இருக்குன்னு என்கிட்ட கேக்குறீங்க? அச்சோ நேரத்தோடு இவர ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணுமேன்னு அவசரம் அவசரமா வேலையை முடிச்சிட்டு வந்தா, சார் ரேஷ்மா கூட கிளம்பி போயிருக்கிங்க. அதுவும் காருல அதுவும் பாட்டு எல்லாம் கேட்டுகிட்டு ஜாலியா வேற.”

“ஆமா போனேன். இப்போ அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? சொல்லுங்க உங்களுக்கு நான் ஹாஸ்பிடல் போனது பிரச்சனையா? இல்ல ரேஷ்மா கூட போனது பிரச்சனையா?”

“நீங்க எவ கூட வேணா போங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.”

“இவ்ளோ பேசுறிங்களே. அத்தைகிட்ட சொன்னதை நீங்க என்கிட்ட சொல்லிட்டு போக என்ன வந்துச்சு?”

“நான் காலையில கேண்டீன் போகும் போது நீங்க தூங்கிட்டு இருந்திங்க. அதான் சொல்ல முடியலை.”

“சரி ஏன் நீங்க கேண்டீன்ல இருந்து எனக்கு ஒரு போன் பண்ணி விஷயத்தை சொல்லி இருக்கலாமே. அதெப்படி சொல்லுவீங்க உங்கிட்ட தான் என்னோட போன் நம்பர் இருக்காதே. உங்கள பொறுத்தவரைக்கும் நீங்க என்னை உங்க புருஷனா இல்லைங்க, ஒரு மனுஷனா கூட பாக்க உங்களுக்கு மனசு இல்ல” என்கையில் மகிழினி என்னடா என்பதாய் பார்க்க,

“எதாவது கேட்டா உங்க கேண்டீன்ல வேலை பாக்குற செக்யூரிட்டியை எப்படி பாக்குறேனோ, அதே மாதிரி தான் என்னையும் பாக்குறேன்னு சொல்லுவீங்க.” எனும்போது அவள் முறைக்க,

“வலிக்குதுங்க. அப்படி என்ன நான் உங்கள பண்ணேன். இன்றுவரை உங்ககிட்ட லிமிட் தாண்டி பிஹேவ் பண்ணி இருக்கேனா? நமக்கு நடந்த கல்யாணம், நாடக கல்யாணம்னு சொன்னிங்க. அதுக்கும் நான் அமைதியா இருந்தேன். கல்யாணம் முடிந்து வந்த மறுநாளே டிவோர்ஸ் வேணும்னு கேட்டீங்க அதுக்கும் நான் உங்க கூட வக்கீல் ஆபிஸ்க்கு வந்தேன். கேப் கிடைக்கும் போதெல்லாம், என்னை உங்களுக்கு பிடிக்கல. தலையெழுத்தேனு தான் என்னை சகிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு, உங்க செயலாலும், சொல்லாலும் முகத்துல அடிச்ச மாதிரி எத்தனையோ விதத்துல வெளிப்படுத்திகிட்டு தான் இருக்கீங்க.”

மகிழினி சின்ன குற்றவுணர்ச்சியுடன் நிற்க, அவனோ அதைக் கண்டுகொள்ளாது, “நான் எதுக்குமே உங்கள ஒரு வார்த்தை கூட என்னனு கேட்கலையே. இப்போ கூட இந்த ரேஷ்மா விஷயத்துல என்மேல எந்த தப்பும் இல்ல. அந்த பொண்ணு அதிகமா பேசினது அவங்க தப்புதான். ஆனா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள புரிதல் இருந்தா, அடுத்த ஆம்பள தன் பொண்டாட்டிகிட்ட பேசினாலும், அடுத்த பொம்பள தன் புருஷன்கிட்ட பேசினாலும், அங்க இந்த மாதிரி தேவை இல்லாத பிரச்சனை எல்லாம் வராது.”

அவள் அமைதியாக நிற்க, “ஹாங் இன்னோரு முக்கியமான விஷயம். நீங்க இப்படி அடுத்த பொண்ணு கூட என்னை சேர்த்து வச்சிப் பேசுறதால, ஆமா உங்கள விட எனக்கு வேற பொண்ணை தான் பிடிக்கும்னு நான் சொல்லுவேன். அதை வச்சி நீங்க என்கிட்ட இருந்து சீக்கிரம் டிவோர்ஸ் வாங்கிடலாம்ன்னு எல்லாம் நினைக்காதீங்க. நீங்க தல கீழ நின்னு தண்ணி குடித்தாலும், நானா உங்களுக்கு டிவோர்ஸ் தரமாட்டேன். சும்மா எனக்கு கோவம் வந்து உங்ககிட்ட இருந்து விலகிடுவேன்னு நினைச்சு, என்னை கஷ்டப்படுத்தி பாக்குறேன்னு சொல்லி, உங்க நல்ல குணத்தை எல்லாம் நீங்க இழந்துடாதீங்க.”

“என் பொண்டாட்டி அவங்களுக்கு சேர வேண்டிய பல லட்ச ரூபாய் பணத்தையே ஆஸ்ரமதுக்கு தூக்கி கொடுத்ததும் இல்லாம, இன்னைக்கும். வீரா பேர்ல ஆரம்பிச்ச கேண்டீன் மூலியமா எவ்ளோ பேருக்கு ஹெல்ப் பண்ணுறாங்கன்னு எனக்கு தெரியும். சோ இவ்ளோ நல்ல குணம் இருக்குற என் பொண்டாட்டிக்கு ரேஷ்மா எல்லாம் ஒரு விஷயமே இல்ல. அந்த பொண்ணை என்கூட சம்மந்தம் பண்ணி பேசினா, நான் உங்கள வெறுத்து உங்ககிட்ட சண்டை போடுவேன்னு எல்லாம் பகல் கனவு காணாதீங்க. யாரு என்ன சொன்னாலும் உங்களுக்கு நான்தான். எனக்கு நீங்கதான் புரியுதா?”

அவள் அமைதியில், “சரி ரொம்ப பேசிட்டேன் போல. பட் தப்பா ஏதும் பேசியிருக்க மாட்டேன். இருந்தாலும் நீங்க என்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணும்னு நினைத்தும், இன்னைக்கு என் பொண்டாட்டி மனசு கஷ்டப்படுற மாதிரி என்னையே அறியாமல் நடந்து இருக்கேன். சோ என்னை மன்னிச்சிடுங்க. சாரி பொண்டாட்டி” என்றவன் அவளைப் பார்த்து கண்கள் சிமிட்டி சமாதானமாக பேசி தன் அறைக்கு சென்று கட்டிலில் சரிந்தவன் மனம் ஏனோ இனம் புரியாத அவஸ்தையை சுமக்க, அதை மறந்து தூங்கியும் போனான்.

கொடிவீரன் பேசிய எல்லா சொற்களையும் எண்ணி தனக்குள் குழம்பி கொண்டு இருந்தவள், அவன் செயலில் உள்ள அன்பும் உண்மையும் புரிய, இரவு 8 மணி அளவில் கணவனுக்கு இரவு உணவு கொடுக்க அறைக் கதவை தட்ட போனவள், கதவு திறந்து இருப்பதை கண்டு உள்ளே நுழைந்தாள்.

கொடி வீரனோ இருந்த களைப்பில் உடையை கூட மாற்றாமல் அசதியாக உறங்கி கொண்டு இருக்க, அவனை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தவள் மனதில் என்ன நினைத்தாளோ, என்னமோ அவளை மீறி அவளின் இதழ்கள் லேசாக மலர்ந்தது.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top