Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 95
- Thread Author
- #1
விவாதக் காதல் – 47
“இப்போ ஏன் இப்படி பிஹேவ் பண்ணுறீங்க. என்மேல எதாவது கோவம்னா என் முகத்துக்கு நேரா சொல்லி பழகுங்க. இப்படி சின்னப்புள்ளதனமா எல்லாம் நடந்துக்காதீங்க.” என்று கொடிவீரன் கையில் இருந்த பொருள்களை மகிழினி வேகமாக பிடிங்கினாள்.
அவனோ வலியில் "ஆ" என்று கத்தியவன் கண்கள் சிவந்த நிலையில், “இப்போ உங்களுக்கு என்னங்க பிரச்சனை நான் உங்களுக்கு தொல்லை தர வேணான்னு தான் என் இடத்துக்கு வந்துட்டேன். அண்ட் உங்கள கெஞ்ச வச்சி உங்கள கஷ்டப்படுத்தி எல்லாம் நான் உங்கக்கூட வாழனும்ன்னு ஆசைப்படலங்க. இன்னும் ஒரு வருஷம் நமக்கு டைம் இருக்கு. இந்த ஒரு வருஷத்துல நீங்க என்னை என்னவேனாலும் சொல்லுங்க. ஆனா, உங்களுக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் நாடக கல்யாணம்னு மட்டும் சொல்லாதீங்க” என்றதும் அவள் மெளனமாக, “மனசு வலிக்குதுங்க. என்னடா இது விருப்பம் இல்லாத பொண்ணை நம்ம கூட வாழச்சொல்லி கஷ்டத்தை தரேனான்னு என்மேல எனக்கே கோவமா வருதுங்க.
“அ...” எதோ சொல்ல வந்தவளை தடுத்து, “வார்த்தைக்கு வார்த்தை நமக்கு நடந்தது பொம்மை கல்யாணம்னு இனி சொல்லாதீங்க. நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி எல்லாம் இருக்கமாட்டேன். பிளீஸ் இப்போ நீங்க கீழே போங்க. அண்ட் எனக்கு நைட் டின்னர் வேண்டாம். நீங்க கொடுத்த சூப்பும் ஆப்புமே எனக்கு வயறு நிறைஞ்சிடுது. நானே நாளைக்கு காலையில கீழே இறங்கி வரேன். பாட்டி, அத்தைகிட்ட சொல்லிடுங்க” என்றவன் மீண்டும் மகிழினி கையில் இருந்த தன் பொருள்களை எல்லாம் வாங்கி, மேசை மேல் வைத்து கட்டிலில் படுத்து கண்கள் முடியவனைக் கண்டு, ஒரு வார்த்தை எதிர்த்து பேசாமல் மகிழினி கீழே இறங்கி சென்றாள்.
அதே தினம் இரவு 11 மணியளவில் உறக்கத்தில் இருந்து கண் விழித்தவன் அருகில் தன் கட்டிலின் மூலையில் படுத்து இருந்த கருப்பான ஒரு உருவத்தை பார்த்து பயந்து கண்கள் கசக்கிப் பார்த்ததும், “ஐயோ குட்டி சாத்தான், இல்ல இல்ல பேய்.” என்று கத்தியவன் வாயை பின்னிருந்து பெண்ணின் கரங்கள் மென்மையாக மூட, தன்னை மோகினி தான் தாக்க முயல்கிறது என்று எண்ணியவன், தன் வாயை மூடிய கரங்களுக்கு சொந்தக்காரியான பேதை அவள் கையைப் பிடித்து தன் முன் இழுக்க, பூ மூட்டையை போல கொடிவீரனின் மடியில் சுழன்று வந்து விழுந்தவளின் அழகான கண்களை பார்த்து, பனிக்கட்டி போல உறைந்து போனான் கொடிவீரன்.
தன் மடியில் விழுந்த மகிழினியை பார்த்தவன், "ஏங்க நீங்க என்ன பண்ணுறீங்க இங்க? இது யாரு என் பக்கத்துல?" என்று கேட்க,
"ஹலோ முதல்ல என் கையை விடுங்க" என்றவள் தட்டுத்தடுமாறி கணவன் மடியில் இருந்து எழுந்தவள் அவனை பார்த்து முறைத்தபடி தன் சேலையை சரி செய்தபடி, "எப்பா சரியான ஆளு தான் போல நீங்க" என்று வாய்க்குள் முனுமுனுத்தவள் தரையில் விரிக்கப்பட்ட பாயில் போய் படுத்துக்கொண்டாள்.
“ஏங்க என்ன விளையாடுறிங்களா.? இப்போ நீங்க ஏன் இங்க வந்து படுக்குறீங்க? அதுவும் இல்லாம இவன் இவன் வேணு தானே, என்ன இது இவன் முகம் எல்லாம் கருப்பா இருக்கு?” என்று கேட்டான்.
“ இப்போ ஏன் நடு ஜாமத்துல இப்படி கத்தி கூப்பாடு போடுறீங்க. ஆமா இவன் வேணு தான். அவன் முகத்துக்கு சார்கோல் அப்ளை பண்ணி படுத்திருக்கான்.
“என்ன சாக்லேட்டா?”
"ம்... சாக்லேட் இல்ல சார்கோல்.”
“அவனவன் வாய்க்கு சொந்தமா ஒரு தேன் மிட்டாய் கூட கிடைக்க மாட்டுது. ஆனா, இவன் முகத்துக்கு சாக்லேட் கேக்குதா?”
“ஹலோ அது சார்கோல். என்ன பொறாமை உங்களுக்கு? போய்ப் படுங்க” என்றாள்.
“நான் படுக்குறது இருக்கட்டும். நீங்க ஏன் இங்க வந்திங்க?”
“எதுக்கு வருவாங்க?”
“கண்டிப்பா எனக்காக வந்துருக்க மாட்டிங்க.”
“ஆமா உங்களுக்காக வரல.”
“பின்ன யாருக்காக வந்திங்க?”
“ம்... வேணு உங்க கூட படுக்கப்போறேன்னு சொன்னான், சரின்னு நான் அவனுக்கு துணையா வந்தேன்.”
“ஓ...”
“என்ன ஓ...?”
“இந்த பயபுள்ளைக்கு என்மேல இருக்குற அக்கறையை நினைத்து மனசு பூரித்து போச்சு.” என்றான் கிண்டலாக.
“ம்... பூரிக்கும் பூரிக்கும். சரி படுங்க” என்றாள்.
“நான் படுக்கறேன்ங்க, பிளீஸ் நீங்க போய் உங்க ரூம்ல கட்டில்ல நிம்மதியா படுங்க.”
“ரொம்ப பண்ணாதிங்க உங்களுக்கு கை கால் அடிப்பட்டு இருக்கும்போது நான் எப்படி தனியா ரூம்ல போய் நிம்மதியா படுக்கமுடியும். நீங்க கொஞ்சம் சரியானதும் நான் என் ரூமுக்கு போய்க்கிறேன், அது வர நான் இங்க தான் தூங்குவேன்.”
“ப்ச் சிஎம் சொன்னா கேளுங்க.”
“மாட்டேன்.”
“ஏங்க இப்படி வம்பு பண்ணுறீங்க?”
“ம்... கம்முனு படுக்குறீங்களா. இல்ல நான் போய் வெளிய குளிர்ல படுக்கவா?”
“என்ன?”
“ஆமா இப்போ நீங்க அமைதியா படுக்கலைனா, கண்டிப்பா நான் போய் வெளிய தான் படுப்பேன்.”
“உங்களோட பெரிய லொள்ளு போலங்க.”
“சேம் டு யூ. அண்ட் குட் நைட். சீக்கிரம் படுங்க. படுக்குறதுக்கு முன்னதாக பாட்டை போட்டுட்டு படுங்க. உங்கனால எனக்குமே பாட்டு கேட்டுகிட்டு தூங்குற பழக்கம் வந்துடுது.”
“ம்... அது சரி” என்றவன் தன் செல்போனில் இனிமையான பாடலை ஒலிக்க செய்தவன் மகிழினியின் நடவடிக்கையை நினைத்து மனதில் சிரித்து கொண்டாலும், உள்ளுற தன்னவள் தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எண்ணத்தை நினைத்து மனம் வருந்ததான் செய்தான்,
அன்றைய நாளில் இருந்து அடுத்த இரண்டு நாட்களும் மகிழினியும் வேணுவும் இரவில் கேவி அறையில் படுத்து கொள்ளகொடிவீரன் மற்றும் மகிழினிக்குள் சின்ன சின்ன சண்டைகள் சமாதானங்கள் என்று இருவருமே ஒருவரை ஒருவர் வம்பு செய்து கொண்டு தான் இருந்தார்கள்
நிறைய விடயங்களில் மகிழினி கொடிவீரனுக்காக அவளை மாற்றி கொண்டாலும் அவனிடம் ஒரு வருடத்திற்க்கு பிறகு நமக்கு விவாகரத்து நடந்தே தீரும் என்ற தாரக மந்திரத்தை மட்டும் ஒப்பிக்க மறக்காமல் இருந்தாள்
நீ என்னதான் என்னை தவிர்க்க நினைத்தாலும் உன்னை நான் தீவிரமாக பின் தொடர்ந்துதே வருவேன் என்று கொடி வீரனும் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்தான்
கிண்டல், கேலி,கோவம், கண்ணீர், அன்பு, பிடிவாதம் என்று பல பரிமாணங்கள் இவர்கள் இருவருக்கு இடையில் வெளிப்பட்டாலும் ஒருவரை ஒருவர் அக்கறையாக கவனித்து கொள்ள தவறாமல் இருந்தனர்
இவ்வாறாக மூன்று நாட்கள் கடந்த நிலையில்அன்றைய தினம் காலை பொழுது விடியும் காட்டிலும் மகிழினி தன் தூக்கத்தில் இருந்து எழுந்தவள் எப்பொழுதும் போலவே வீட்டு வேலைகளை முடித்து கொண்டு கொடிவீரனுக்கு தேவையான வற்றை எல்லாம் செய்து வைத்தவள்தன் கேண்டீன்கு கிளம்பினாள்
அங்கிருந்தப்படியே மணிக்கு பல முறை கொடிவீரனின் உடல் நலத்தை அலைபேசி மூலம் கீதாவிடம் விசாரித்து கொண்டும் இருந்தாள்
அதேதினம் மதியம் 3 மணி அளவில் கொடிவீரன் அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம், வீட்டில் இருந்தபடியே தன் மடிக்கணிணி மூலம் செய்து கொண்டிருந்தவனின் கைபேசிக்கு அவனின் அக்கா அழைக்க, அதை ஸ்பீக்கரில் போட்டு, “ஹலோ சொல்லுக்கா. என்ன... மாமா வந்ததும் உன் தம்பியை மறந்துட்ட போல” என்றான் கிண்டலாக.
“என்னடா நக்கல் பண்றியா? நீதான் ஊருல இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ண மாதிரி, அவ வந்த பின்னாடி போயி, உனக்கு அக்கா ஒருத்தி இருக்குறதையே மறந்துட்ட” என்று பதிலுக்கு இவளும் கிண்டல் செய்தாள்.
“சரி சரி நீங்க ரொம்ப ஓட்டாதீங்க. ஆமாம் மாமாவும், அம்மாவும் எப்படி இருக்காங்க?”
“ம்... இங்க எல்லோரும் நலம். ஆமா. உனக்கு இப்போ பெய்ன் எப்படி இருக்கு?” என்று கேட்டாள் சசி.
“என்ன பெய்ன்?”
“டேய் நடிக்காதடா. உனக்கு அந்த வனிதானால மறுபடியும் பிரச்சனை வந்துருக்குன்னு அத்தை என்கிட்ட சொல்லிட்டாங்க.”
“ஐயோ அப்போ அம்மாகிட்ட...”
“அம்மாக்கு தெரியாதுடா.”
“இந்த அத்தை வாய் இருக்கே.”
“அது அவங்க மூக்குக்கு கீழேயே அழகா இருக்கட்டும். நீ சொல்லு இப்போ பெய்ன் ஓகே தானே?” என்று கவலையாகக் கேட்டாள்.
“ம்... இப்போ ஓகேக்கா. எதுக்கும் ஈவினிங் ஒருமுறை போய் டாக்டரை பார்த்து வேலை பார்க்கலாமான்னு கேட்கணும்.”
“ஏன்டா அதுக்குள்ள வேலைக்குப் போற. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?”
“இல்லக்கா. நான் முடிக்க வேண்டிய பெண்டிங் வொர்க் ரொம்ப இருக்கு.”
“அதான் அந்த ரேஷு மறுபடியும் உன்னைப் பார்க்க வேலைக்கு வந்துட்டால்ல. அவகிட்ட சொல்லி உன் வேலையை முடிக்க சொல்லு.”
“ரேஷு பற்றி உன்கிட்ட யாரு சொன்னது?”
“அது ஏன் உனக்கு” என்றாள் சசி.
“என்ன மறுபடியும் அத்தை தான் இங்க நடக்குற விஷயத்தை எல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்களா.”
“ஹ்ம் இல்லடா.”
“பின்ன யாரு சொன்னாங்க?” என்றான் கோபமாக.
“அவசியம் சொல்லனுமா?”
“சொல்லுக்கா. யாரு சொன்னாங்க?”
“உன் பொண்டாட்டி தான்.” என்றாள் பட்டென்று.
“யாரு சிஎம்மா!!??” அதிர்வு அவனிடம். சசியின் ஆமென்ற வார்த்தையில், “என்னக்கா சொல்லுற. அவங்க என்ன சொன்னாங்க?”
“ம்... உன்கிட்ட ஒரு பொண்ணு ரொம்ப ஓவரா ஒட்டி ஒட்டி நின்னு பேசிகிட்டு இருக்காம். நீயும் ஈன்னு அவகிட்ட இழிச்சிகிட்டு பேசுறியாம். சோ, அந்த பொண்ணு யாரு என்னனு கேட்டா.”
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“ம்... அவதான் என் தம்பி அழகுல மயங்கி அவங்கிட்ட ப்ரொபோஸ் பண்ண, ஒரு கிப்ட் கொடுத்து அனுப்புனா. அதை நீதான் தவறா புரிஞ்சிகிட்டு என் தம்பி காது மேல ஒன்னு வச்ச. சோ, நீ என் தம்பி கன்னத்தை முதல் முதலாக தொட காரணமே அந்த பொண்ணு தான்னு சொன்னேன்.”
“ஏன் உன்னால இத விட சுருக்கமா அவங்கள பற்றி சொல்ல இயலாதா?” என்று பல்லைக் கடித்தான்.