Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 93
- Thread Author
- #1
விவாதக் காதல் - 46
சில நிமிடங்கள் கடந்த நிலையில், மகிழினி தன் அறைக்குள் நுழைந்தவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கொடிவீரனை பார்த்து, “என்னா பேச்சு. இவருக்கு வாய் ரொம்ப அதிகம்பா.” என்று தனக்குள் அவனை கடிந்துக்கொண்டே, அவளை அறியாமல் அவனை ரசித்தவள், அருகில் இருந்த போர்வையை அவன் மீது போர்த்திய சமயம், கொடியின் கைபேசி பாடலை நிறுத்தி ஒரு அழைப்பு வந்தது. அதில் நம்பர் எதுவும் இல்லாது அந்னோன் என்று வந்தது.
“யாரு இந்த நேரத்துல போன் பண்ணுறாங்க? ஒருவேளை முக்கியமான கால் எதாவது இருந்தா. ம்... இவரை எழுப்பலாமா? இவரு வேற நல்லா தூங்குறாரே. சரி நம்மளே எடுத்துப் பேசுவோம்” என்று அழைப்பை ஏற்று,
"ஹலோ" என்று சொல்லும் முன்பே,
"என்னடா புது மாப்பிள, இன்னைக்கு தப்பிச்சிட்டன்னு சந்தோஷமா இருக்கியா? எப்பவா இருந்தாலும் உன்னோட முடிவு என் கையிலதான்டா மிஸ்டர். கொடிவீரன்" என்று மறுமுனையில் அதிகாரமான குரல் ஒலிக்க, அந்த குரலை கேட்டு மகிழினியின் முகம் இருள் சூழ்ந்தது.
அந்நேரத்தில் கண்கள் விழித்த கொடிவீரன், “என்னாச்சு சிஎம்? யார் போன்ல?” என்று கேட்க, அவளோ அதிர்ச்சி குறையாது நின்றிருக்க, “உங்கள தான் கேக்குறேன். என்னாச்சு?” என்றான்.
மகிழினி அவள் கையில் இருந்த போனை மேசை மேல் வைத்து, “உங்களுக்கு நடந்தது ஆக்சிடண்ட் இல்லையா?” என்று கேட்டதும், தன் படுக்கையில் இருந்து எழுந்தவன், “அது இல்ல. இ...இது விபத்து தான். ஆமா யாரு போன்ல?” என்றவன் கைபேசியை எடுக்க,
“அப்போ என்னால தான் உங்கள மறுபடியும் அந்த வனிதா தொல்லை பண்ணுறாளா?” என்றவளின் கண்களில் கண்ணீர் இருகோடுகளாக வெளியேற,
“ஐயோ இல்லங்க. ஏன் இப்ப அழறீங்க? சரி யாரு போன் பண்ணது? இதுல எந்த நம்பரும் தெரியலையே.”
“ம்... ஆமா. நமபர் ஏதும் தெரியலதான். ஆனா, பேசுனது கண்டிப்பா அந்த வனிதா தான். எனக்கு அவ குரல் நல்லாவே தெரியும்.”
“ஓ... சரி என்னவாம்?”
“ப்ச்... அப்போ அவளால தான் உங்களுக்கு விபத்து நடந்துச்சா?” அவன் அமைதியாக இருக்க, “பிளீஸ் சொல்லுங்களேன். அவ உங்கள என்னதான் பண்ணா?” என்று மகிழினி கத்தியதும் இவள் குரலை கேட்டு பாட்டியும், கீதாவும் கதவை தட்டிக்கொண்டு இவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.
“என்னம்மா சத்தம்? என்று கீதா கேட்க,
“என்ன சித்ரா இது? அடிபட்டு வந்துருக்குற பிள்ளைகிட்ட கத்திகிட்டு இருக்க நீ?” அவளைத் திட்டினார் பாட்டி.
“பாட்டி நாங்க சும்மாதான் பேசிகிட்டு இருக்கோம். பிளீஸ் நீங்க எல்லாம் போய்ப்படுங்க. சிஎம் நம்ம அப்புறம் பேசிப்போம். அவங்கள போய் படுக்க சொல்லுங்க” என்றான்.
கணவனை முறைத்த மகிழினி, “அம்மா இவருக்கு விபத்து தானா நடக்கல.” என்றதும் என்னவென்பதாய் இருவரும் கொடிவீரனைப் பார்க்க,
“அது வந்து பாட்டி” என்று திணறினான்.
“இப்போவது சொல்லுங்க. என்னதான் நடந்துச்சு?”
“ப்ச் பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லங்க. நான் பைக்ல வரும்போது, ஒரு கார் வேணும்னே வந்து என் வண்டியில மோதுச்சு. நான் கீழே விழுந்த வேகத்துல சின்னதா அடிபட்டுச்சு. அப்போ அந்த காருல இருந்து இறங்கின ஒருத்தன், கத்தியோட என்னை நோக்கி வந்தான். அதுக்குள்ள அங்க கூட்டம் கூடிட்டதால, அங்க இருந்து அவங்க போயிட்டாங்க. ஆனா, அவனுங்க எல்லாம் யாருன்னு எனக்கு அப்போ தெரியல. அதுக்கு அப்புறம் தான் என் ஃப்ரண்ட் ஜீவா பார்த்து காப்பாத்தினது எல்லாம்.
“என்ன மாப்பிள்ள இது? அப்போ கொஞ்சம் விட்டுருந்தா இன்னைக்கு உங்கள அந்த ஆளுங்க எதாவது பண்ணிருப்பாங்க போல” என்றார் கீதா.
“ம்... ஆனா, இதெல்லாம் வனிதா ஆளுங்க தான் பண்ணாங்கன்னு எந்த சாட்சியும் இல்லையே அத்தை.”
“அதான் இப்போ அவளே போன் பண்ணி மிரட்டினாளே. கண்டிப்பா இது அவளோட வேலையா தான் இருக்கும். இது போதாதா அவளை மாட்டிவிட.” என்று சொன்னாள் மகிழினி.
“ப்ச் சரி இருந்துட்டு போகட்டும் விடுங்க.”
“என்ன விடணுமா? என்ன விளையாடுறிங்களா? இது உங்க உயிர் சமந்தப்பட்ட விஷயம்ங்க. ரொம்ப சாதாரணமா சொல்லுறீங்க” என்று எகிறினாள்.
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாதுங்க.”
“அப்படி நீங்க சொன்னா ஆச்சா. இல்ல நாளைக்கு நம்ம போய் கமிஷனரை மீட் பண்ணி அந்த வனிதா மேல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வரலாம்/”
“ஐயையோ நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா? அதெல்லாம் வேணாங்க.” என்றான் திரும்பவும்.
“நீங்க சும்மா இருங்க. வனிதா அடிபட்ட வெறி நாய் கண்டிப்பா அவ மறுபடியும் நம்மள தான் கடிக்க வருவா. அதுக்கு முன்னாடி அவ பல்லோடு சேர்த்து அவ பதவியையும் நான் புடுங்குறேன் பாருங்க.”
“நல்லா புடுங்குன நீ. இப்போ பாரு நீ அவகிட்ட வச்சிகிட்டதால தான் கொடி தம்பிக்கு இப்போ பிரச்சனை.”
“என்ன பாட்டி நீங்க. அப்போ அவ அதிகாரத் திமிர்ல இத்தனையும் பண்ணிக்கிட்டு இருப்பா. நம்ம இதெல்லாம் பார்த்துகிட்டு அமைதியா போகணுமா?”
“அம்மாடி சித்ரா. இப்போ அதெல்லாம் வேணாம்மா. நம்ம வேணும்னா இந்த விஷயத்தை சட்டப்படி டீல் பண்ணலாம்.” என்றார் கீதா.
“அத்தை ஏன் நீங்க வேற.”
“ஏங்க நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. கீதா அம்மா நீங்க சொல்லுங்க. சட்டப்படினா எப்படி டீல் பண்ணலாம்னு சொல்லுறிங்க.?”
“நாம அந்த வனிதா மேல கேஸ் போடலாம்.”
“ஆமா கோர்ட்ல இருக்குற பெண்டிங் கேஸ் எல்லாம் பத்தல போல.” என்று சடைத்தான் கொடிவீரன்.
“ஆமாமா கேஸ் எல்லாம் வேணாம். நாளைக்கு நான் இவரை அழைச்சிட்டு போய் கமிஷனர் கிட்ட வனிதா மேல கம்பளைண்ட் பண்ணிட்டு வரேன்.”
“ஏங்க நாளைக்கு கதையை நாளைக்கு பேசிப்போம். அத்தை நீங்க பாட்டியை அழைச்சிட்டு போய்ப்படுங்க.”
“ம்... சரி மாப்பிள.” என்று கீதா சொல்லவும்,
“என்னமோ போங்க. ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியல” என்ற பாட்டியும், கீதாவும் இவர்கள் அறையில் இருந்து வெளியே செல்ல,
பாவமான முகத்துடன் மகிழினி எதிரில் வந்த கொடிவீரன், “பிளீஸ் கோவப்படாம இப்போ தூங்க வரிங்களா” என்றான்.
“ஆமாமா இவ்ளோ நடந்துருக்கு. இதெல்லாம் மறச்சிட்டு அப்படியே நல்ல பிள்ளை போல தூங்க கூப்பிடுறிங்களா?”
“நான் நல்ல பிள்ள தாங்க” என்றான் அப்பாவியாய்.
“ம்... இவ்ளோ நல்லவனா இருந்தா இதுக்கு பெயர் கேனைத்தனம்.”
“ம்... உண்மைதாங்க. என்னை கேனையன்னு நினைத்ததால தான், கட்டின பொண்டாட்டியே என்னை வேணான்னு சொல்லிட்டாங்க.” அவள் முறைக்க, “நீங்க ஏங்க முறைக்கிறிங்க நான் என் பொண்டாட்டியை தானே சொன்னேன்?” என்றான் கிண்டலாக.
“நீங்க பேச்சை மாத்தாதீங்க. நாளைக்கு கமிஷனரை பார்க்க போறோம்” என்றவள் தரையில் பாய் விரித்து புத்தகத்துக்கு நடுவில் இருக்கும் வீரவேலின் கிழிந்த புகைப்படத்தை எடுத்து, தன் தலையணை கீழ் வைத்தவள், “எதாவது வேணும்னா என்னை எழுப்புங்க குட் நைட்” என்று படுத்துவிட்டாள்.
மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்த மகிழினி, உறங்கிக் கொண்டிருக்கும் கொடிவீரனுக்கு தொல்லை தராமல், அவனுக்கு தேவையானவற்றை தயார் செய்து, பாட்டியிடமும், கீதாவிடமும் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி தன்னுடைய கேண்டீன்கு சென்றவள், அடிக்கடி பாட்டியை அழைத்து கணவன் நிலையை அறிந்து கொண்டாள்.
வேலைகளை சீக்கிரமாக முடித்து மூன்று மணியளவில் வீடு திரும்பியவள் கண் எதிரில் மாறன், கீதா, பாட்டி மற்றும் கம்பீரமான தோரணையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அமர்ந்திருக்க, அவரை பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தவள் அனைவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் வணக்கம் சொன்னாள்.
"வாமா பாப்பா. சார் இவங்க தான் என் தம்பி பொண்டாட்டி. பாப்பா இவரு யாருன்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்டான் மாறன்.
"தெரியாதுங்க" என்றவளின் கண்கள் கொடிவீரனை தேட,
"என்னமா உன் புருஷனை தேடுறியா? நான்தான் அவர்கிட்ட வனிதா மேல கம்பளைண்ட் லெட்டர் எழுதி தர சொன்னேன். அந்த லெட்டர் ரெடி பண்ணதான் உன் புருஷன் உங்க ரூமுக்கு போயிருக்காரு" என்று அந்த நபர் சொல்ல, அறையில் இருந்து வந்த கொடிவீரன் தன் கையில் இருந்த கம்ப்ளைன்ட் லெட்டரை அந்த நபரிடம் கொடுத்தான்.
அதைப் பார்த்த மகிழினி கண்களால் "யாரு இவரு" என்று கேட்க,
"இவர் கமிஷனர் ஜெகன். நம்ம கபடி குழுவுல இவரோட பையன் தான் இப்போ டாப் ப்ளேயர்” என்று சொல்ல, மகிழினி அவரை பார்த்து மீண்டும் வணக்கம் வைத்தாள்.
“என் பையன் இன்னைக்கு டாப் ப்ளேயர்னா அதுக்கு இவங்க ரெண்டு பேர் தான்மா காரணம்.”
“அப்படி எல்லாம் இல்ல சார். உண்மையாவே உங்க பையன் நல்ல திறமையானவன் தான்.”
“ம்... நல்லதுபா. சரி நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. இந்த கம்பளைண்டை நான் பர்சனலா டீல் பண்ணிக்குறேன்.” என்றார் ஜெகன்.
“உங்களுக்கு ரொம்ப நன்றி சார்” என்றான் கொடிவீரன்.
“நோ பார்மாலிடீஸ் வீரா. உடம்ப பார்த்துக்கோங்க.”
“ம்... சரி சார். உங்க பையன கேட்டதா சொல்லுங்க.”
“கண்டிப்பா சொல்லுறேன்,
“சார் அந்த வனிதாவை சும்மா விடாதீங்க.” என்றாள் மகி.
“நான் பார்த்துக்குறேன் மிசஸ்.மாறன். யூ டோன்ட் ஒர்ரி.”
“ரொம்ப தேங்க்ஸ் சார். இவ்ளோ தூரம் என் தம்பியை பார்க்க நேர்ல வந்தது பெரிய விஷயம் சார்” என்றான் மாறன்.