Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 91
- Thread Author
- #1
விவாதம் – 45
“ஜீவா உனக்கு தான்டா நான் நன்றி சொல்லணும். நீ மட்டுமே சரியான நேரத்துல வராம போய் இருந்தா, கண்டிப்பா எனக்கு இன்னும் அதிகமா இஞ்சுரி ஆகிருக்கும்” என்றான் வலி கலந்த வார்த்தைகளில்.
“நாங்களா எங்க வந்தோம்? இதோ ரேஷ்மா தான் எங்கள அங்க அழைச்சிட்டு போனா” என்று சொன்ன மீனாவை புரியாமல் பார்த்த கீதா, “ஆமா என் மாப்பிள்ளைக்கு எங்க ஆக்சிடண்ட் நடந்துச்சு? நீங்க எங்க அவர பார்த்தீங்க?” என்று மகிழினி மனதில் எழும்பிய கேள்வியை கீதா கேட்க,
“மேரேஜ்கு தைக்கக் கொடுத்த டிரஸ் வாங்க நானும் ஜீவாவும் ரேஷ்மா கூட போனோம். பர்சேஸ் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு போகும் வழியில கைகால் அடிபட்டு வீரன் பிரதர் வலியோட பைக் எடுக்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்காரு. இவரை காருல இருந்தபடியே பார்த்த ரேஷ்மா அவருக்கு ஆக்சிடன்ட்னு தெரிந்து, வேகமா இவரை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போக சொன்னா. நாங்களும் ஹாஸ்பிடலுக்கு இவரை அழைச்சிட்டு போயிட்டு உங்ககிட்ட விவரத்தை சொல்லலாம்னு பார்த்தா உங்க போன் நம்பர் எல்லாம் என்னனு கூட தெரியல. போதாக்குறைக்கு இந்த சித்ரா வேற செல்போன் இல்லாம இருக்கா. அதுவும் இந்த காலத்துல... ஹ்ம்... அதான் உங்க யார்கிட்டயும் இன்பார்ம் பண்ண முடியல” என்று நடந்ததை சொன்ன மீனா நேரத்தைப் பார்த்து, “ப்ரோ நாங்க கிளம்பட்டுமா? நைட் லேட்டா போனா அத்தை மாமா திட்டுவாங்க. அதுவும் இல்லாம கல்யாண நேரத்துல நாங்க ஒண்ணா சுத்த கூடாதுன்னு வேற ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க” என்று சொல்லி ஜீவாவை பார்த்தாள்.
“ஆமா மச்சான். நேரம் ஆகுது. நாங்க கிளம்புறோம்” என்றவன் ரேஷ்மாவை பார்த்து கண்களால் அழைத்தான்.
கவலையுடன் கொடியை பார்த்த ரேஷ்மா, “அண்ணா நான் இங்கேயே இருக்கவா?” என்று கேட்டதும் மகிழினி அவளை முறைத்து சட்டென்று தன் பார்வையை கொடி பக்கம் திருப்,ப
“என்ன ரேஷ்மா காமெடி பண்ணுறீங்களா? பிளீஸ் நீங்க முதல்ல நேரத்தோடு கிளம்புங்க. மச்சான் நீ கிளம்புடா நேரமாகுது பாரு” என்றவன் மகிழினி பக்கம் பார்வையை திருப்பவில்லை.
“ம்... ஓகே வீரா. நான் இப்போ போய்ட்டு நாளைக்கு வரேன். ஹாங் நீங்க டேப்லெட் எல்லாம் சரியா போடுங்க” என்றவள் வேணுவை அங்கிருந்து நகரும்படி சைகை காட்ட,
“என்னங்க என்ன காத்துல காக்கா ஓட்டுறீங்க” என்று கேட்டான் கடுப்பாகவே.
“பிளீஸ் மூவ்” என்று சொன்னதும்,
“ஒ... இடுப்பு வலியா? ஆனா, எங்க வீட்டுல நாங்க இடுப்பு வலி எல்லாம் வந்தா அயோடெக்ஸ் தான் தடவுவோம்” என்றான் கிண்டலாக.
“ஹேய் நான் அதை மீன் பண்ணல” என்றாள் ரேஷ்மா.
“அப்போ கருவாடு பண்ண போறிங்களா? அதுல முருங்கைக்காய் உருளை கிழங்கு எல்லாம் போடுவீங்களா?” என்றான் கிண்டலாக.
“வேணு நீ இந்த பக்கம் வா. அவங்க அவர்கிட்ட ஏதோ பேச போறாங்க” என்றவள் கொடிவீரனை முறைக்க, அவனுக்கு ஐயோ என்றானது.
“பாப்பா நீ இங்க இருந்தே பேசுமா” என்றார் கீதா.
“ஒ... மை குட்னஸ். என்ன வீரா இது உங்ககூட பேச எனக்கு இங்க பிரைவசியா இருக்காது போல” என்றாள் முகம் மாறிய நிலையில்.
மகிழினி அவளை முறைக்க, “ஜீவா நீ இவங்கள அழைச்சிட்டு கிளம்பு பிளீஸ்” என்றான் கொடிவீரன்.
“ஆமா ஜீவா மாமா. வா போகலாம். நேரம் ஆகுது பாரு. ரேஷு வா சீக்கிரம்” என்றாள் அவசரமாக
“இருங்க அண்ணி வரேன். வீரா இந்த டேப்லெட் எல்லாம் எப்படி போடணும்னு உங்களுக்கு தெரியுமா? இல்லைனா நான் எழுதி வச்சிட்டு போகவா?” என்று கேட்க,
“அம்மாடி ரேஷு எங்க பொண்ணு என் மாப்பிள்ளையை பார்த்துப்பா. நீங்க பண்ண ஹெல்ப்கு ரொம்ப நன்றி. நீங்க நேரத்தோடு கிளம்புங்க” என்றார் அவள் செய்வதைக் கண்டு கடுப்பாக.
“உங்க பொண்ணா? அது யாரு?” என்று புருவம் உயர்த்த,
“ம்... நான்தான்” என்றாள் மகிழினி உரிமையோடு
“ஓ... நீங்களா? பட் நீங்க எப்படி இவரை பார்த்துப்பிங்க? இவருக்கும் உங்களுக்கும் தான் எதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு கேள்விப்பட்டேனே” என்றதும் கொடிவீரன் மானசீகமாக தலையில் கைவைக்க,
“சோ வாட்?” என்றாள் மகிழினி கடுங்கோபத்துடன்.
“நீங்க பாட்டுக்கு இவரு மேல இருக்குற கோவத்துல இவருக்கு டேப்லெட் எல்லாம் ஒழுங்கா கொடுக்காம விட்டுட்டா. நான் என்ன பண்ணுறது?” என்று முகம் மாற, மகிழினியின் முறைப்புக்கு அளவில்லாமல் போனது.
“ஏய் அவளே நர்ஸ் தான் ரேஷு” என்றாள் மீனா சிரித்துக்கொண்டே.
“ஒ... அப்படியா?” என்று கேட்க,
“அப்படி இல்லைனாலும் நாங்க அவரை நல்லாதான் பார்த்துப்போம். ஏய் மீனா நீ முதல்ல கிளம்பு. நேரம் ஆகுது பாரு” என்றவளின் கோவம் முழுதும் ரேஷ்மா, கேவி மேல் இருந்தது
“ஓகே வீரா டார்லிங். நான் நாளைக்கு உங்கள வந்து மீட் பண்ணுறேன். பை டியர்” என்றாள் கண்சிமிட்டி.
“மச்சான் உடம்ப பார்த்துக்கோடா.”
“நாங்க போய்ட்டு வரோம் பிரதர். எங்க மேரேஜ்குள்ள நீங்க உடம்ப தேத்திடுங்க” என்று மீனா சொன்னதும், கைவிரல் தூக்கி சரி என்றான்.
“உங்களுக்கு கல்யாணமா?” என்று வேணு கேட்க,
“ம்... ஆமா குட்டிப்பையா” என்றாள் அவன் கன்னத்தை கிள்ளி.
“எங்க வச்சி கல்யாணம்? இந்த ஊர்லையா?” என்று கேட்க,
“இல்ல பெங்களூர்ல” என்றாள் சிரித்த முகத்துடன்.
“ஏன் இங்க மண்டபம் கிடைக்கலையா?”
“டேய் வேணு அமைதியா இரு” என்று அழைத்து மருமகனை முறைக்க,
“தம்பி எங்க சொந்த ஊர் பெங்களூரு தான்பா” என்ற ஜீவாவும் வேணு கன்னத்தை கிள்ள,
“ஒருவன் அழகா இருந்தா, ஆளாளுக்கு கிள்ளுறீங்க” என்றான் தன் கன்னத்தை தடவிக்கொண்டே.
“சரி நாங்க கிளம்புறோம்.” மீனா சொன்னதும்,
“வீரா டார்லிங் பாய்” என்று ரேஷ்மா கையசைக்க
“அவரு பாய் தான். நீங்க கிளம்புங்க” என்று வேணு கிண்டல் செய்தான்.
அவர்கள் சென்றதும் வீட்டுக்குள் நுழைந்த பாட்டி கொடியின் நிலையை கண்டு பதறி, "என்ன நடந்தது" என்று விசாரிக்க, கீதா விவரத்தை சொன்னதும் கண் கலங்கியவர், “என்ன தம்பி இது. கொஞ்சம் ஜாக்கிரதையா வண்டி ஓட்டக்கூடாதா?” என்று கேட்டார்.
“பாட்டி எனக்கு ரொம்பல்லாம் அடி படல” என்று கொடிவீரன் அவரை சமாதானம் செய்ய,
“என்னப்பா நீ? கையில இவ்ளோ பெரிய கட்டு இருக்கு. போதாதகுறைக்கு கால்ல அடிபட்டிருக்கு.”
“இதெல்லாம் சின்ன அடிதான்” என்றான் சிரித்துக்கொண்டே.
“ஆமாமா. இவங்களுக்கு இதெல்லாம் சின்ன அடிதான். இதுங்க எல்லாம் கபடி ஆடிட்டு வரும்போது கைகால் வாய்னு எல்லாத்தையும் உடைச்சிகிட்டு தான் வருவாங்க” என்றார்.
“அத்தை இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?” என்று கேட்டான்.
“புரியல மாப்பிள்ள?”
“ம்... அடிப்படணும்னு விதி இருந்தா, அது கபடி களத்துக்கு போகலைனாலும் அடிபடும் தான்” என்றான் மகிழினியை பார்த்தபடி.
“இப்போ இந்த தத்துவம் யாருக்கு?” என்று கீதா கேட்க, மகிழினி எப்பவும் போல் அவளின் முறைப்பைத் தொடர,
“யாருக்கு வேணுமோ எடுத்துக்கோங்க” என்றவன் மகிழினியை பார்த்து கண்சிமிட்டினான்.
“தம்பி நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”
“ம்... சரி பாட்டி. நான் மாடியில போய் இருந்துக்குறேன். இப்போ இருக்குற நிலைமையில என்னால இங்க கால்நீட்டி படுக்க முடியாது” என்று சோபாவில் இருந்து தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவனை பார்த்து குரலை செருமிய மகிழினி,
“பாட்டி அவரை மாடிக்கு எல்லாம் போக வேணாம் சொல்லுங்க. இதோ இந்த ரூம் சும்மாதானே இருக்கு. அங்க படுக்க சொல்லுங்க” என்றாள் அக்கறையாக.
“இல்லிங்க. அந்த ரூம்ல ஜன்னல் இல்ல எனக்கு மூச்சு முட்டும். நான் மாடியிலேயே போய் இருந்துக்குறேன்” என்றவன் மீண்டும் வாசலை நோக்கி செல்ல,
“அப்... அப்போ... நான் இருக்குற ரூம்ல படுத்துக்கோங்க. அங்க ரெண்டு ஜன்னல் இருக்கு. காத்து நல்லா வரும்” என்றாள் தயங்கியபடி.
“ஐயையோ அங்க வந்தா என் மூச்சே நின்னுடும்” என்றவன் சட்டென்று நாக்கை கடித்துக்கொள்ள, மகிழினி கோபத்தில் பல்லைக்கடிக்க,
“அது இல்லிங்க நான்...” வார்த்தை தடுமாற,
“போதும். அப்போ நீங்க என்கூட ஒரே ரூம்ல இருந்தா, உங்க மூச்சு நின்னுடுமா?” என்று கலங்கிய கண்களை அவனுக்குக் காட்டாதவாறு கேட்டாள்.
“செத்தான்டா சேகர்” என்று சிரித்தார் கீதா.
“என்ன தம்பி நீங்க? ஏன் இப்படிப் பேசிறீங்க?” என்று பாட்டியும் சோகம் பாட,
“இல்ல பாட்டி. நான் இவங்க கூட ஒரே ரூம்ல இருக்கும்போது, நான் நார்மலா பேசுனா கூட எதாவது தப்பா நினைக்க போறாங்கன்னு தான்...” என்று தயங்கி சொல்ல,
“ஏன் சார்? எனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு பொண்ணு வந்து, என் வீட்டுல என் எதிர்லயே என்னை என்னென்னமோ பேசிட்டு போறாங்க. அதுக்கே நான் தப்பா நினைக்கல. நீங்க பேசுறதுக்கா நான் தப்பா நினைக்க போறேன்” என்றாள் கிண்டலாக
“மாப்பிள்ள நீங்க சிக்கிட்டீங்க. டேய் வேணு உன் பாட்டியை அழைச்சிட்டு வாடா. நம்ம போய் நைட் டின்னர் ரெடி பண்ணலாம்” என்றார்.
மகிழினி அதே முறைப்புடன் இருக்க, “ஏங்க இப்போ ஏன் கோவப்படுறீங்க? நான் சொல்ல வந்தது என்னன்னா...” என்று வார்த்தையை வளர்க்க
“ம்... போதும். ரொம்ப நீட்டி முழக்காதீங்க. வாங்க வந்து என் ரூமை ஷேர் பண்ணிக்கோங்க” என்றவள் ரேஷ்மா இவனிடம் தந்த டீயை கையில் எடுத்து அவனை முறைத்தபடி, “சாருக்கு இந்த டீயை சூடு பண்ணி தரணுமா? இல்ல...” என்று புருவம் இறுகி கேட்க,
“பரவாயில்லைங்க” என்றான் டீக்காக கையை நீட்டி,
“அப்படினா...” என்று கோவமாக கேட்க,
“ஆறினாலும் பரவாயில்ல. நான் அதையே குடிச்சிக்கிறேன்” என்றவன் எதார்த்தமாக சொன்னான்.