Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 87
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் - 43
மறுநாளே மருத்துவரிடம் அனுமதி வாங்கி அதே வாரம் அறுவை சிகிச்சையும் செய்துவிட, அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன் மூன்று நாட்கள் வேலைக்கு போகாமல், அவளுடன் இருந்து மனைவியை கவனமாக பார்த்துக் கொண்டான்.
மருத்துவரின் அறிவுரைப்படி மகிழினிக்கு காதில் கட்டு பிரிக்கும் வரை, தண்ணீர் படாமல் கவனமாக பார்த்து கொண்ட பாட்டியும், கீதாவும் அவளோடு சேர்ந்து கேண்டீன் வேலைகளையும் கவனித்துக் கொண்டனர்.
மகிழினி தன் பாட்டியின் கைபேசியில் அவ்வப்போது கொடிவீரனின் அம்மா ஜெயா, மற்றும் சசியிடம் அன்பாக பேசுபவள், தனக்கும் கேவிக்கும் உள்ள பணிப்போரை பற்றி, எள்ளளவும் சொல்லாமல் மறைத்தாள்.
குளிரில் அடிக்கடி மாடிக்கு போக முடியாத காரணத்தால், அவள் வளர்க்கும் மல்லிப்பூ செடிகளை பார்த்து கொள்ளும் முழு பொறுப்பும் கொடியை வந்தடைந்தது.
பாட்டிக்காகவும் ஜெயாவுக்காகவும் தன் வீம்பை கொஞ்சம் தளர்த்திக் கொண்ட மகிழினி, இவள் அறையின் வெளியே போடப்பட்டிருந்த சோபாவில் கொடியை உறங்க அனுமதித்திருக்க, அவன் கேட்கும் பாடல்களுக்கு இவளும் ரசிகையாக மாறி இருந்தாள்.
என்னதான் கொடிவீரன் அன்பையும், அக்கறையும் மகிழினியிடம் வெளிப்படுத்தினாலும், அவள் மனதை ஆக்ரமித்து இருக்கும், தன் அன்புக்கு சொந்தமான வீரவேலின் கிழிந்த புகைப்படத்தைப் பார்த்து, தினமும் மகிழினியின் கண்கள் கலங்காமல் இருந்தது இல்லை.
இவை அனைத்தும் ஒரு வார காலத்தில் நடந்து முடிய, அவ்வப்போது அலுவலகத்தில் ரேஷ்மாவிடம் இருந்து சில சங்கடங்கள் கொடிவீரனுக்கு வராமல் இருந்ததும் இல்லை.
இதோ மகிழினியின் காது கட்டு பிரிக்க, அப்போது தான் அவளுக்கு பிறர் சொல்லும் "ம்" கூட தெளிவாக ஒலித்தது. இந்த ஒரு வார காலமும், கேவி தன்மேல் கொண்ட அக்கறையை கண்ட மகிழினி, எங்கே அவன் மீது மீண்டும் நட்பு மலர்ந்து விட போகிறதோ என்று பயந்தவள், தனக்கு தானே சில கட்டமைப்புகளை போட்டு வைத்துக்கொண்டாள்.
அன்றைய தினம் ஞாயிறு என்பதால் மகிழினியின் பாட்டி பிரியாணி செய்து கொண்டிருக்க, மாடியில் இருக்கும் அறையில் அமர்ந்து இசையுடன் சேர்ந்து புத்தகம் வாசித்து கொண்டு இருந்தவனைத் தேடி ஓடி வந்தாள் மகிழினி.
“என்னங்க என்னாச்சு? ஏன் இவ்ளோ வேகமா ஓடி வரீங்க?” என்று கேட்பவனுக்கு பதில் சொல்லாமல், அவன் அறையின் கதவுக்கு பின் ஒழிந்து கொண்டாள்.
“அந்த வேணு பையன் வந்தா, நான் இங்கே இருக்கேன்னு சொல்லாதீங்க பிளீஸ்.” என்று இவள் கெஞ்சும் தருணத்தில் வேணு மாடிக்கு கையில் கலர் பொடியுடன் ஓடி வந்தான்.
“மாமா அத்தை இங்க வந்தாங்களா?” என்று கேட்டவனின் கண்கள் மொட்டை மாடியில் உள்ள மீதி இடங்களை நோட்டமிட்டது.
“ம்... உன் அத்தையா?” என்றவன் கதவின் பின் சிறு பிள்ளையை போல, அவள் இதழ் கடித்து, கண்கள் படபடத்து, தன் கை விரல்கள் பத்தையும் பயத்தில் பிசைந்து கொண்டு இருந்தவளை பார்த்து உள்ளுற சிரித்தான்.
“ஹ்ம் இல்லடா. உன் அத்தை இங்க வரல.” என்றதும் வேணு ஏமாற்றமாக கீழே இறங்கி போக,
அதைக் கண்டு சிரித்த முகத்துடன் கதவின் பின்னால் இருந்து வெளியே வந்தவள், “ரொம்ப தேங்க்ஸ்ங்க. இந்த லட்டு பையன் என் மேல அந்த கலர் பொடி அடிச்சே தீருவேன்னு, அடம் பிடித்து என்னை துரத்திட்டு வந்துட்டான். அதான் உங்க ரூமுக்கு வந்துட்டேன். சாரி.” என்றவள் அவன் அறையில் இருந்து வெளியே செல்ல முயன்ற, தருணம் வாசலில் குட்டி சாத்தானை போல வேணு கையில் கலர் பொடியுடன் நின்றிருந்தான்.
"ஓ... புருஷனும் பொண்டாட்டியும் என்கிட்ட பொய் சொல்றிங்களா? இருங்க இப்போ உங்க ரெண்டு பேரையும் இந்த கலர் பொடியால குளிப்பாட்டுறேன்" என்றவன் கையில் இருந்த கலர் பொடியை இவர்களை நோக்கி வீச, அங்கிருந்து தப்பிக்க நினைத்த மகிழினி, கொடியின் தோளை பற்றிக்கொண்டு அவன் முதுகின் பின் ஒளிந்துகொண்டாள்.
அவளைக் காப்பாற்ற நினைக்காத கொடிவீரன், வேணு கையில் இருந்த கலர் பொடியை வாங்கி, இவன் பங்குக்கு மகிழினியின் மீது வீச, கோவம் கொண்டவள், தரையில் சிதறி இருந்த கலர்ப் பொடியை எடுத்து, கொடியின் கன்னத்தில் தன் கைகளால் பூச, அவளின் கரங்களை தடுத்த கொடிவீரனின் பிடியில் இருந்து பின் வாங்கியவள், கால் தவறி விழப்போகையில், கொடிவீரனின் டிஷர்ட்டை பற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தவள், கணவனையும் தன் தேகத்தோடு இணைத்து கொண்டு கீழே விழ, நிலத்தின் மேல் படர்ந்த கொடியாக மாறி இருந்தான் கொடிவீரன்.
இவர்கள் இருவரும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருக்க, "என்னடா நடக்குது இங்க? ஏன்டா டேய். என்ன இது ரூமுக்குள்ளயே மாறி மாறி கபடி ஆடிக்கிட்டு இருக்கீங்களா" என்று கிண்டலாக கேட்ட குரலுக்கு சொந்தக்காரனாக, இவர்கள் கண் முன் நின்று இருந்தான் கொடிவீரனின் தூரத்து சொந்தமான அண்ணன் மாறன்.
“அண்ணா நீங்களா!?” என்று ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியில் மாறனை வரவேற்க, மகிழினி தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்து கொண்டவள் வந்தது யாரென்ற கேள்வியை தன் பார்வையாள் கொடியிடம் கேட்க,
“இவரு எங்க பெரியம்மா பையன். நம்ம கீதா அத்தை இருக்காங்க இல்ல அவரோட மூத்த மருமகன். இவர் பெயர் மாறன்” என்றதும்
“ஒ... வாங்க உக்காருங்க” என்று இருக்கையை காட்டினாள் மரியாதை நிமித்தமாக.
“இருக்கட்டும்மா. அப்புறம்டா தம்பி கல்யாணம் எல்லாம் முடிஞ்சிருக்கு, இந்த அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணல பார்த்தியா?”
“ஏன் அண்ணா நீங்க வேற.” என்றான்.
“ம்... இவங்க தான் உன் மனைவியா?”
‘அப்படின்னு நான் மட்டும்தான் சொல்லிக்கிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ள, அதை உணர்ந்தாற்போல் மகிழினி அவனை முறைத்தாள்.
“என்னடா கேள்வி கேட்டா வாயில வடகம் போட்டுக்கிட்டு இருக்க? சொல்லு இவங்க தானே உன் பொண்டாட்டி?” எனக் கேட்டான்.
“ம்...” என்று கொடிவீரன் சொல்ல,
“சரி சரி. நீங்க ரெண்டு பேரும் கலர் பூசி விளையாடிக்கிட்டு இருக்கும் போது நான் குறுக்க வந்து உங்க ஆட்டத்தை கெடுத்துட்டேன் போல. நான் கீழே போறேன் நீங்க விளையாட்டை முடிச்சிட்டு வாங்க.” என்று நகர,
“ஒரு நிமிஷம் நில்லுங்க.” என்று மாறனை நிற்கவைத்து, “நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்றாள்.
“ஏம்மா என் பொண்டாட்டி கூட தான் என்கிட்ட சும்மா பேசுவா. பின்ன புருஷனோட பேசும்போது அவங்க அக்கௌன்ட்ல காசு போட்டுட்டா பேசுவாங்க.” என்றான் அவனுக்கே ஆன குசும்பில்.
“ஹாங் அது இல்லிங்க. நாங்க அப்போ விளையாட எல்லாம் இல்லைன்னு சொன்னேன்.”
“அப்போ விளையாடல. சோ இப்போ விளையாட போறிங்கன்னு சொல்ல வரிங்களா?”
“அச்சோ நான் அதை சொல்ல வரலைங்க” என்றாள் வேகமாக.
“ஏங்க இவரு இப்படி தான் எடக்கு மடக்கா பேசுவாரு. நீங்க கீழே போங்க நான் இவர அழைச்சிட்டு வரேன்” என்றான் மனைவியிடம்.
‘அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் வாய் ஜாஸ்தியா இருக்கு’ என்றெண்ணினாள்.
“டேய் உன் பொண்டாட்டி முகத்தை பார்த்தா, அவங்க நம்ம ரெண்டு பேரையும் பேட் வேர்ட்ஸ்ல திட்டுறாங்க போல.”
“அவங்க அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. சரி நீங்க வாங்க. அப்புறம் என்ன திடிர்னு சென்னைக்கு விஜயம்?”
“இங்க ரெண்டு நாள் கபடி டோர்ணமெண்ட்டா. அதான் பசங்க கூட ரூம் எடுத்து தங்கிருக்கேன். சரி நீயும் சென்னையில தான் இருக்கன்னு உன் அக்கா சசி சொன்னா. அதான் உன்னை வந்து பார்த்துட்டு, உன் மேரேஜ் க்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன்.”
“பசங்க கூட வந்திங்களா? அப்போ அண்ணி ஊருல தனியா இருக்காங்களா?”
“அது எப்படி அவ என்னை விட்டுட்டு இருப்பா. சிவன் இருக்குற இடத்துல சக்தி இருக்குறது போல, இந்த மாறன் இருக்குற இடத்துல மகி இருந்து தானே ஆகணும்.”
“அப்போ அண்ணி எங்க? அவங்கள அழைச்சிட்டு வரல?”
“ம்... வந்துருக்கா கீழே அவங்க அம்மாவை பார்த்து பேசிகிட்டு இருக்கா.”
“ஓ... பரவாயில்ல அண்ணா. அத்தை உங்கள ஏத்துக்கிட்டாங்களா?”
“அது எப்படிடா உன் அத்தை என்னை ஏத்துப்பாங்க?”
“அப்படி என்னதான் அவங்களுக்கு உங்க மேல கோவம்?”
“அதை நீ அவங்ககிட்ட தான் கேட்கணும்
“சரி வாங்க. போய் அண்ணியை பார்த்துட்டு அப்படியே அத்தைகிட்ட உங்க கதையை பேசி ஒரு முடிவு எடுப்போம். வாங்க கீழே போகலாம்.”
கொடியுடன் சேர்ந்து மாறன் கீழே இறங்கி வர, அங்கே கீதா அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு, வாசலில் ஓரமாக நின்று கொண்டு இருந்த மகிழினியின் அருகில் வந்த கொடிவீரன், “என்னங்க வாசல்ல நின்னுகிட்டு என்ன பண்ணறீங்க?” என்று மகிழினியிடம் கேட்க,
“உங்க அத்தை அதோ அங்க நிக்குறாங்களே அவங்கள கண்டமேனிக்கு திட்டிகிட்டு இருக்காங்க. அதான் நான் உள்ள போனா அவங்களுக்கு சங்கோஜமா இருக்குமேன்னு இங்கேயே நிக்குறேன்.”
“சரிதான். அத்தை சண்டையை ஆரம்பிச்சிட்டாங்களா?”
“இப்போ நான் போய் எப்படி ஸ்டாப் பண்ணுறேன் பாரு” என்று மாறன் வீட்டுக்குள் நுழைந்து, தன் மனைவியின் அருகில் செல்ல, மகி கண்களில் கண்ணீருடன் கீதா திட்டுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.