• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 42

Joined
Jan 15, 2026
Messages
85
விவாதக் காதல்

விவாதம் – 42


“சுரேஷ் சித்ராக்கு என்னாச்சு?”

“பாட்டி பாப்பா ஏன் இன்னும் வரலன்னு நாங்க கேண்டீன் போய் பார்த்தோம். அப்போ தலை ரொம்ப வலிக்குது. அதான் கொஞ்சம் லேட்டா வரலாம்னு இருந்தேன்னு பாப்பா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டா. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அதான் உடனே ஒரு ஆட்டோல பாப்பாவை தூக்கிட்டு நானும் வேணுவும் ஹாஸ்பிடல் வந்துட்டோம்.”

“என்ன இது ஏன் இந்த பொண்ணு அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்துட்டு இருக்கா?”

“அவங்களுக்கு ஏற்கனவே ஹெல்த் இஸ்யூ இருக்கு அத்தை. இவங்க இதேபோல ஒருமுறை மயக்கம் போட்டு விழும்போது, பழனி சார் கூட இவங்கள இதே ஹாஸ்பிடலுக்கு தான் அழைச்சிட்டு வந்தேன். அவங்களும் செக் பண்ணிட்டு டேப்லெட் தந்தாங்க. பட் இவங்க அந்த டேப்லெட்ஸ் எல்லாம் யூஸ் பண்றது இல்ல போல” என்றான்.

“ஐயோ! இவ ஏன் இப்படி பண்றானே தெரியல. இவளுக்கு மட்டும் ஒரு நல்லதும் நல்லதாவே நடக்காதா?”

“பாட்டி அழாதீங்க. டாக்டர் உள்ள செக் பண்ணிக்கிட்டு இருக்காரு வந்ததும் பேசிக்கலாம்.”

“அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சுதா? இல்லையா?” என்றான் கொடிவீரன்.

“இல்ல மச்சான். நான் இங்க அழைச்சிட்டு வரும்போது பாப்பா மயக்கத்துல தான் இருந்தா.”

“சார் உங்கள டாக்டர் வர சொல்லுறார்.” என்று நர்ஸ் சொல்ல,

“பாட்டி, அத்தை நீங்க இருங்க. நாங்க என்னனு கேட்டுட்டு வரோம்” என்றவன் மருத்துவர் அறைக்கு சுரேஷுடன் சென்றான்.

ஏற்கனவே மகிழினியை பரிசோதித்த அதே மருத்துவர் இவர்கள் எதிரில் அமர்ந்து இருக்க, அவர் அருகில் மகிழினி சோர்வாக அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சு உங்களுக்கு?" என்று மகிழினியை பார்த்ததும் பதறிய கொடிவீரன், "வணக்கம் டாக்டர்" என்று சொல்ல,

புருவத்தை உயர்த்தி யோசித்த மருத்துவர், "நீங்க ஓ... உங்க நண்பனோட தங்கச்சின்னு நீங்க இவங்கள ஆல்ரெடி அழைச்சிட்டு வந்திருக்கீங்க இல்ல" என்று கேட்டார்.

"ம்... ஆமா டாக்டர். ஆனா, இப்போ இவங்க என் மனைவி" என்று மகிழினியை பார்க்க, அவளோ இவனை கொலைகாண்டில் முறைத்தாள்.

மருத்துவர் தன் புருவத்தை தடவியபடி, "இத அன்னைக்கு நான் சொன்னதுக்கு தானே சார், நீங்க அப்படி என்னை முறைச்சீங்க?"

"அதை நீங்க சொல்லக்கூடாதுல்ல டாக்டர். ஆனா, நான் சொல்லலாம். சரி அதெல்லாம் இருக்கட்டும், என் மனைவிக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி அடிக்கடி மயக்கம் போட்டு விழறாங்க?" என்று அக்கறையாக இவன் விசாரிக்க.

"டாக்டர் என்னை பற்றிய விஷயங்களை எல்லாம் நீங்க எனக்கு சம்மந்தம் இல்லாத ஆளுங்ககிட்ட சொல்லக்கூடாது" என்றாள் கோவமாக.

"பாப்பா என்ன நீ வெளி இடத்துல இப்படியா நடந்துப்ப? மச்சான் நீ ஏதும் தப்பா எடுத்துக்காதடா. இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு போல" என்று சுரேஷ் எதார்த்தமாக சொல்ல,

"ஆமா. எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. நான் ஒரு பைத்தியம். இவரு என்னை சும்மா சும்மா அவரோட பொண்டாட்டின்னு சொன்னா, கண்டிப்பா நான் பைத்தியமா மாறி இவரை எதாவது பண்ணிடுவேன்" என்று ஆக்ரோஷமாக கத்தியவள், மீண்டும் தன் தலையை பிடித்து கொண்டு வலியில் துடித்தாள்.

"மேடம் நான்தான் உங்கள எமோஷனல் ஆகக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனே. பிளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். சார் இவங்களுக்கு காதுக்கு போற நரம்புல சின்ன ப்ராப்ளம் இருக்கு. ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணா, இவங்களுக்கு இந்த வலியும் வராது. அதுகூடவே இனி இவங்க எந்த ஒரு மெஷினும் யூஸ் பண்ண வேணாம்" என்றார்.

"அப்போ அந்த ஆப்ரேஷனை பண்ணலாமே டாக்டர்" என்றான் கொடிவீரன்.

"எந்த ஆப்ரேஷனையும் பண்ணிக்க நான் தயாரா இல்ல. என்னை இப்படியே விட்டுடுங்க" என்று கடுப்பாக சொன்னாள் மகிழினி.

“மிஸ்டர். இதுல டேப்லெட்ஸ் எழுதியிருக்கேன். இவங்கள இப்போ நீங்க அழைச்சிட்டு போகலாம். உங்க வீட்டுல இருக்குற எல்லோரிடமும் பேசிட்டு, என்கிட்ட நீங்க அப்பாய்ன்மென்ட் எடுத்தீங்கன்னா, இவங்களுக்கு நானே அந்த ஆபரேஷன் பண்ண ஏற்பாடு பண்ணுவேன். இப்போ இவங்கள நீங்க கூட்டிட்டு போங்க" என்று மருத்துவர் சொல்லி வாயை மூடும் முன் மகிழினி அங்கிருந்து வெளியேறி மருத்துவமனையில் இருந்து வெளியே வர, பாட்டியும், கீதாவும், வேணுவும் அவளைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

"தேங்க்ஸ் டாக்டர் நாங்க வீட்ல பேசிட்டு சீக்கிரமாவே உங்ககிட்ட அப்பாய்ன்மெண்ட் எடுக்குறோம். சுரேஷ் வா போகலாம்"

என்றவன் சிகிச்சைக்கான பணம் செலுத்திய பிறகு மகிழினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

“என்ன தம்பி டாக்டர் என்ன சொன்னாரு? இவள கேட்டா இவ வாயே திறக்கமாட்டுறா.”

“வீட்ல போய் பேசிக்கலாம் பாட்டி.”

“மச்சான் நாங்க ஆட்டோல வரோம். நீ பாப்பாவையும் இவங்களையும் அழைச்சிட்டு காருல போயிடு” என்றான் சுரேஷ்.

“அண்ணா நானும் ஆட்டோவிலேயே வரேன்.”

“ஏய் சித்ரா” என்று பாட்டி அதட்ட,

“விடுங்க பாட்டி” என்ற கொடிவீரனை மகிழினி முறைக்க, “அவங்களுக்கு கார்ல வர பயமா இருக்குமே. அவங்க ஆட்டோலேயே வரட்டும்” என்றான்.

“சரி மச்சான் நீ கிளம்பு. அதோ அங்க நிக்குற ஆட்டோல நாங்க வரோம்.”

“இந்தாடா கார் சாவி. நீ காருல இவங்கள அழைச்சிட்டு போ. நான் என் பொண்டாட்டி கூட ஆட்டோல வரேன்.”

“நான் உங்க கூட வரமாட்டேன்.” என்று மகிழினி முகம் சுளிக்க,

“பட் நான் உங்க கூடதான் வருவேன்.” என்றான் அவளின் கணவன்.

“எல்லாம் என் தலையெழுத்து” என்று அங்கிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், கொடியும் அதே ஆட்டோவில் அமர்ந்து, “மச்சான் நீ இவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நான் இவங்ககூட கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.” என்றதும் சுரேஷ் சம்மதிக்க, ஆட்டோ ஓட்டுனரிடம் வண்டியை கோவிலை நோக்கி விடச் சொன்னான்.

“இப்போ எதுக்கு கோவிலுக்கு போறீங்க? நான் வீட்டுக்கு போகணும். என்னை வீட்டுல விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க.”

”நான் உங்கிட்ட சில விஷயம் பேசணும்ங்க. சோ, கோவில் போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாம்.” என்றவன் மகிழினியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல, “சாமி கும்பிட்டுட்டு பேசலாமா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் அப்புறம் பாத்துப்போம். நீங்க என்ன பேசணுமோ, அதை சீக்கிரம் பேசுங்க.”

“சரி வாங்க. உங்களுக்கு பிடிச்ச தெப்பக்குளத்துகிட்ட போய் பேசலாம்.”

உங்க கூட எல்லாம் அங்க போய் எனக்கு பேச விருப்பம் இல்ல. எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.”

“ம்... சரி நீங்க ஏன் ஆபரேஷன் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லுறீங்க?”

“இத கேட்க தான் இங்க அழைச்சிட்டு வந்திங்களா?”

“ப்ச் கேள்விக்கு பதில் சொல்லுங்க?”

“எனக்கு எதை பண்ணவும் பிடிக்கல. எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல. நான் எதிர்பார்க்காத விஷயம் எல்லாம் எனக்கு நடக்குது. எதுக்கு இந்த கடவுள் என்னை இப்படி கஷ்டப்படுத்தி பாக்குறாருன்னு எனக்கே தெரியல. நான் அப்படி என்ன பாவம் பண்ணேன்?” என்றாள்.

“நீங்க பாவம் பண்ணீங்கன்னு யாருங்க சொன்னாங்க?”

“யாரு சொல்லனும்? அதான் எனக்கே நல்லா தெரியுதே. என்னை கட்டிக்கிட்டு ஒரே நாள்ல ஒருத்தரு போய் சேர்ந்துட்டாரு. இப்போ நீங்க என் கழுத்துல தாலி கட்டிட்டு, என்னை கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறிங்க.”

“அப்படி என்னங்க நான் பண்ணேன்? நமக்கு கல்யாணம் ஆகிடுச்சி. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னதுக்கா இவ்ளோ பேசுறீங்க நீங்க?”

“நான்தான் எனக்கு உங்கள அப்படி எல்லாம் பார்க்க தோணலன்னு தெளிவா சொல்லிட்டேனே.”

“சரி இப்போ தோணல. பட் போக போக தோணலாம் இல்ல.”

“அதெல்லாம் போக போக எதுவும் மாறாது. பிளீஸ் நான் வேணும்னா உங்க கால்ல கூட விழறேன். எனக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு நீங்க ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க.” என்றாள் மகிழினி.

“ஏங்க கையில கிடைத்த தங்கமான பொண்ணு உங்கள விட்டுட்டு, என்னை வேற எங்கேங்க போக சொல்லுறீங்க?”

“பார்த்திங்களா, நீங்க இப்படி எடக்கு மடக்கா பேசும்போது எனக்கு இன்னும் உங்க மேல கடுப்பா வருது.”

“சரி என் மேல உங்களுக்கு காதல் தான் வரல அட்லீஸ்ட் கடுப்பாவது வரட்டும் விடுங்க.”

“கடைசியா கேக்குறேன். நீங்க எனக்கு டிவோர்ஸ் தருவிங்களா? மாட்டிங்களா?”

“ஏங்க நீங்க படிச்ச பொண்ணு தானே. கல்யாணம் முடிஞ்சு கணவன் மனைவியா ஒரு வருடம் வாழாமல் யாரும் டிவோர்ஸ் வாங்கவோ, தரவோ முடியாதுங்க.”

“இல்ல நீங்க பொய் சொல்லுறீங்க. மியூச்சுவல் டிவோர்ஸ் எல்லாம் பண்ணலாம்.”

“அட அதெல்லாம் பண்ணக்கூட, நம்ம ரெண்டு பேரும் ஒரு வருஷம் ஒரே வீட்ல கண்டிப்பா வாழ்ந்தா தான் மியூச்சுவல் டிவோர்ஸ் பேப்பர்ஸ் அக்செப்ட் பண்ணுவாங்க.”

“உண்மையாவா?”

“நம்ம காதல் மேல சத்தியம்ங்க.”

“என்ன?” என்று முறைக்க,

“ம்... சரி என் காதல் மேல சத்தியம்” என்றான் அவன்.

“அப்போ நம்ம இப்போதைக்கு டிவோர்ஸ் பண்ண முடியாதா?” என்றவள் குரல் வருத்தத்துடன் வந்தது.

“ஹ்ம் கண்டிப்பா ரெண்டு வருஷம் ஆகும்.”

“இப்போ தான் ஒரு வருஷம்னு சொன்னிங்க. இப்போ ரெண்டுன்னு சொல்லுறீங்க? என்னை ஏமாத்தப் பார்க்குறீங்களா?” என்று எகிற,

“மியூச்சுவல் டிவோர்ஸ்னா ஒன் இயர் பட் நான் உங்களுக்கு டிவோர்ஸ் தர மாட்டேன்னு சொல்லிட்டா கண்டிப்பா டூ இயர்ஸ் ஆகும்.”

“இல்ல இல்ல. நீங்க அப்படி எல்லாம் சொல்லாதிங்க. எனக்கு ஒரு வருஷத்துக்கு அப்புறம் மியூச்சுவல் டிவோர்ஸ் தரேன்னு சொல்லுங்க. பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
 
Joined
Jan 15, 2026
Messages
85
“அட அதை எப்படிங்க இப்போ சொல்ல முடியும்? ஒரு வருஷத்துக்கு அப்புறம் தான் அதைச் சொல்ல முடியும்?”

“அப்போ ஒரு வருஷத்துக்குப் பிறகு எனக்கு டிவோர்ஸ் தருவிங்க இல்ல?”

“ம்... தரலாம். ஆனா, அதுக்கு சில கண்டிஷன் எல்லாம் இருக்கு.” மனைவியின் முறைப்பைக் கண்டவன், “என்னனு கேளுங்க?” என்றான்.

“என்ன?” என்று சிடுசிடுக்க,

“நானா உங்ககிட்ட என் லிமிட் தாண்டி வரமாட்டேன். ஆனா, என் அம்மாவோ, அக்காவோ, ஏன் உங்க பாட்டியோ இருக்கும்போது, நீங்களாவே என்னை உங்க புருஷனா ஏத்துகிட்டு நார்மலா அவங்க எதிர்ல பிஹேவ் பண்ணனும்.”

“என்ன?”

“இருங்க இன்னும் இருக்கு. இந்த ஒரு வருஷத்துக்குள்ள, என்னைக்காவது உங்களுக்கு என் மேல அன்பு காதல் பாசம் இதெல்லாம் வந்தா?”

“அதெல்லாம் ஒன்னும் வராது.”

“சர்ரி. அப்படி வந்தா? நீங்க ஈகோ எல்லாம் பார்த்துகிட்டு என்கிட்ட இருந்து சொல்லாம மறைக்கக்கூடாது. சரியா?” என்றான்.

“எனக்கு உங்கள முன்னாடியாவது நண்பனா நினைக்க தோணுச்சு. ஆனா, இப்போ உங்கள பார்த்தாலே எனக்கு செம்ம கோவம் வருது. சோ அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்றாள் மகிழினி.

“அது உங்களுக்கு என் மேல வர கோவம் இல்லைங்க. உங்களுக்கு உங்க மேலேயே இருக்குற தாழ்வு மனப்பான்மை.”

”அப்படில்லாம் இல்ல. எனக்கு உங்க மேல நிறைய கோவம் இருக்கு.”

“ஓகே. இருந்துட்டு போகட்டும். அப்போ நான் உங்களுக்கு மியூச்சுவல் டிவோர்ஸ் எல்லாம் தர மாட்டேன்.”

“ஐயோ ஏன் என்னை இப்படி படுத்துறீங்க?”

“ஓகே அப்போ லாஸ்ட் கண்டிஷன் சொல்லவா?” என்றான் வந்த சிரிப்பை மறைத்து.

“சொல்லித் தொலைங்க.” என்று எரிச்சலில் முனக,

“இப்போ நான் உங்கள வீட்டுல விட்டுட்டு நேரா ஹாஸ்பிடல் போய் உங்களுக்கு சர்ஜரி பண்ண அப்பாய்ன்மெண்ட் வாங்குவேன். நீங்க அந்த ஆப்ரேஷனை பண்ணிக்கணும்.”

“பண்ணலனா?”

“நான் கண்டிப்பா டிவோர்ஸ் தரமாட்டேன்.”

“நீங்க ஒண்ணும் தர வேணாம். எப்படி இருந்தாலும் நீங்க தரலைனா கூடகண்டிப்பா டூ இயர்ஸ்ல டிவோர்ஸ் கிடைச்சிடும்.”

“ம்... கிடைச்சிடும். ஆனா, கண்டிப்பா அதுக்குள்ள நமக்கு குறைந்தபட்சம் ரெண்டு பிள்ளையாவது பிறந்துடும்.”

“ஏய் என்ன உளர்ற?”

“அட உண்மையா தாங்க சொல்லுறேன்.”

“என்ன உண்மையை சொல்லுறீங்க?”

“இங்க பாருங்க சிஎம் நான் வெளிப்படையாவே சொல்றேன். நேத்து நமக்கு நடந்த கல்யாணத்தை நானுமே எதிர்பார்க்கல. எனக்கு உங்க விருப்பதோட தான் நான் உங்கள மேரேஜ் பண்ணிக்கணும்னு நினைச்சேன் சரி அது தான் அந்த ட்ரம் ஸ்டிக் வாயன் பண்ண அலும்பல்ல முடியாம போச்சு. ஆனா, நம்ம ரெண்டு பேரும் முழு மனசோடு, ஒருவரை ஒருவர் நேசிச்சு, நம்ம இல்லற வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு எனக்கு ஆசை. அதான் இந்த ஒரு வருட இடைவெளி எடுத்துக்கலாம்னு நானும் ஃபீல் பண்ணுறேன். ஆனா, நீங்க சும்மா சும்மா உங்க பாட்டியை கஷ்டப்படுத்திகிட்டு, எங்க அம்மாவை வருத்தப்பட வச்சிக்கிட்டு, உங்களையும் வருத்திக்கிட்டு இருந்தா, அப்புறம் நான் உங்க சம்மதம் இல்லாமலயே, என் புருஷன் அந்தஸ்த்தை எடுத்துக்க வேண்டியது வரும்.” என்று எச்சரித்தான்.

“என்ன மிரட்டுறிங்களா? என்னை மீறி உங்கனால என் விரலை கூட தொட முடியாது.” என்று சிலிர்த்து நிற்க,

“ம்... உண்மை தான். பெண்களின் பாதுகாப்பு விரல் நெகமும், பல்லும், தான்னு காந்தி தாத்தா சொல்லி நானும் படிச்சிருக்கேன். அதனால தான் இப்போ இருக்குற டேஷ்ங்க எல்லாம் பெண்களுக்கு மயக்கம் மருந்து தந்து அவங்கள வீணாக்குறாங்க. ஆனா, நான் உங்களுக்கு அதெல்லாம் பண்ண மாட்டேன். பிகாஸ் நீங்கதான் ஆல்ரெடி சத்தம் கேட்டாலே மயக்கம் போட்டு விழுறீங்களே. என்ன முறைக்குறீங்க? அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நான் உங்களுக்கு முழுசா புருஷனா மாறிடுவேன்.” என்றான் கொடிவீரன்.

“ச்சீ இவ்ளோ கேவலமான ஆளா நீங்க?”

“காலத்தின் கட்டாயம் அப்படிமா.”

“நான் உங்கள போலீஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்.”

“யாரு? அந்த வனிதாகிட்டயா?” என்றான் கிண்டலாக.

“எல்லாம் அவனால வந்துச்சு. அவ மட்டும் இப்போ என் கையில கிடைக்கணும்.”

“மேடம் உங்க கண் எதிர்ல இருக்குற, எனக்கு முதல்ல பதில் சொல்லுங்க மேடம்.”

“இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க?”

“ஒன் இயர் இப்படியே இருப்போம். உங்க வேலையை நீங்க பாருங்க. என் வேலையை நான் பார்க்குறேன். இதுக்கு நடுவுல நம்ம சொந்தங்க எதிரில மட்டும் கொஞ்சம் ட்ராமா பண்ணுங்க.”

“என்ன?” என்று மகிழினி அதிர,

“ஏங்க நான் கட்டின தாலியயே நீங்க ட்ராமா கல்யாணம்ன்னு தானே நினைச்சீங்க. சரி சரி முறைக்காதிங்க. என்ன நான் சொன்ன கண்டிஷன்கு சம்மதம் தானே?”

“சரி. நீங்க சொன்னது எல்லாம் நான் பண்ணா, நீங்க கண்டிப்பா எனக்கு மியூச்சுவல் டிவோர்ஸ் தரணும். அதுக்கு உங்களுக்கு சம்மதம் தானே?”

“கண்டிப்பா தரேன்.”

“சத்தியமா?” எனக் கேட்டதில் இப்பொழுது அவன் முறைக்க, “சொல்லுங்க. சாமி சத்தியமா ஒரு வருஷத்துக்கு அப்புறம், நீங்க எனக்கு மியூச்சுவல் டிவோர்ஸ் தரணும்.”

“ஹ்ம் சரிங்க. இந்த ஒரு வருஷத்துல உங்களுக்கு என் மேல இதே வெறுப்பு தொடர்ந்தா, கண்டிப்பா... இல்ல இல்ல சத்தியமா நான் உங்களுக்கு டிவோர்ஸ் தரேன்.”

“ம்...சரி அப்போ நானும் நீங்க சொன்னதுக்கு எல்லாம் சம்மதிக்கிறேன்” என்றாள் அவள்.

“சரி போகலாமா?

“ம்... வாங்க.” என்றாள்.

கொடிவீரன் போட்ட நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு ஆப்ரேஷன் செய்ய மகிழினி சம்மதம் தெரிவித்திருந்தாள்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top