• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
81
விவாதக் காதல்

விவாதம் - 40


அடுத்த நாள் காலை, மகிழினி எழுவதற்கு முன்பே, மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று காலை வேலைகளை முடித்தவன், தலையை துவட்டியப்படி தன் ரூமில் இருந்து வெளியே வர,

வண்ணப் புடவையில் கூந்தல் பின்னி புருவத்துக்கு மத்தியில் அழகாய் சின்னதாய் பொட்டிட்டு, மீண்டும் புதிதாய் பூத்த மலரைப்போல, அவள் உயிரினும் மேலாக எண்ணும் தன் மல்லிப்பூ செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டு இருந்தாள்.

அருகில் இருந்த மஞ்சள் ரோஜா செடியை பார்த்து முறைத்தபடி அதற்கு மட்டும், தண்ணீர் ஊற்றாமல் கீழே இறங்க பார்த்தவளை தடுத்து, “ஏன் சிஎம், அந்த எல்லோ ரோஸ்க்கு தண்ணி ஊத்தல?” என்று கேட்டான்.

"ம்... நீங்க என்னோட ஃப்ரண்ட்னு நினைச்சு தான், நான் உங்களுக்கு அந்த பூவை தந்தேன். ஆனா, இனிமே நீங்க எனக்கு நண்பன் இல்ல” என்றாள் கோவமாக.

“அப்கோர்ஸ்யா. இப்போ நான் உங்க ஹஸ்பன்ட்.”

அவனை எரிப்பதை போல முறைத்தவள், “உளராதீங்க. நான் இப்போ கேண்டீன் போறேன். நீங்களும் சீக்கிரம் ரெடி ஆகிட்டு என் கேண்டீன்கு வந்துடுங்க. வரும்போது ஜீவா சார் அட்ரஸ் எடுத்துட்டு வாங்க” என்றாள் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையை போல.

“ப்ச் காலையிலயே ஆரம்பிக்காதீங்க சிஎம். போங்க போய் கேண்டீன்ல உருப்படியான வேலையை பாருங்க. என்றான் கோவத்தை தலைதூக்க விடமால்.

“என்னோட முதல் வேலையே நமக்கு விவாகரத்து வாங்குறது தான். பிளீஸ் புரிஞ்சிக்கோங்க. முதல்ல போய் கிளம்பிட்டு சீக்கிரமா கேண்டீன்கு வாங்க” என்றவள் அவன் பதில் எதிர்பாராது இறங்கிச் செல்ல, வாசலில் நின்றிருந்த சுரேஷ் தன் தங்கையை பார்த்து கண்கள் கலங்கி வார்த்தை வெளிவராமல் அவளை கட்டிக்கொண்டான்.

“அண்ணா என்னாச்சு? ஏன் இப்போ அழற?” என்று கடுப்பாக கேட்டாள்,

“அம்மாடி உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சின்னு பாட்டி சொன்னாங்க. பார்த்தியா ஒரு அண்ணனா இருந்து உனக்கு ஒரு நல்லது நடக்கும்போது உன்கூட இருக்க முடியலையே” என்று கண்கள் கலங்கினான்.

“நீ நினைக்குற அளவுக்கு எல்லாம் இங்க எந்த நல்லதும் நடக்கல. நீ முதல்ல உள்ள வா. அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தாள்

“என்னமா நீ? என் நண்பனோட அக்கா கல்யாணத்துக்கு போன இடத்துல உனக்கு ஏதோ பிரச்சனை வந்து, அதனால உன் கழுத்துல கொடிவீரன் தாலி கட்டிட்டான்னு பாட்டி சொன்னதும், நான் என்ன ஏதுன்னு விசாரிக்க ஓடி வந்தா, நீ என்னமோ எதுவுமே நடக்காதது போல பேசுற” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது கொடிவீரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர, அவனை பார்த்து சுரேஷ் வேகமாக சென்று கட்டித் தழுவி, “மச்சான்” என்று அழைத்தான்.

”அதான் உங்க மச்சான் ஆகிட்டாரே என் மருமகன்” என்று சுரேஷ் கையில் காபியை தந்தார் கீதா.

”என்ன மச்சான் எப்படி இருக்க?” என்றவன் சுரேஷை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

“என்னடா ஒரு அண்ணனா இன்னைக்காவது இங்க இருந்து, உன் தங்கச்சிக்கு பண்ண வேண்டிய முறை எல்லாம் பண்ணுவியா? இல்ல அதையும் நான்தான் பண்ணனுமா?” என்று பாட்டி கேட்க,

முறை அது இதென்று பேசியதில் முகம் மாறியவள், இருக்கையில் இருந்த தன் பையை எடுத்துக்கொண்டு, “இந்த ட்ராமா எல்லாம் பார்க்க எனக்கு நேரம் இல்ல. சீக்கிரமா கேண்டீன் வாங்க” என்று கொடியை பார்த்து சொன்னவள், வேகமாக தன் வீட்டில் இருந்து வெளியேறினாள்.

“அவ கிடக்குறா தம்பி. நீங்க இதெல்லாம் பாருங்க” என்றார்.

“என்ன பாட்டி என்ன இது?” என்று கேட்டவன் கையில், நகை பெட்டியை தந்த பாட்டி, அதனுடன் சேர்த்து தான் வசிக்கும் வீட்டுப் பத்திரத்தையும் கொடிவீரன் கையில் கொடுக்க, சுரேஷும் சந்தோஷமாக முகம் மலர்ந்தான்.

“பாட்டி என்ன இதெல்லாம்?” என்று இவன் கோவமாக கேட்க,

“என் பேதிக்காக நான் சேர்த்து வச்சச்சதுபா” என்றார் பாட்டி

“அதை ஏன் என்கிட்ட தரிங்க?” என்றவன் தன் கையில் இருந்த பொருளை எல்லாம் மேசை மேல் வைத்தான்.

“எல்லாம் உனக்கு தான்பா” என்றார் அவன் மீது உள்ள அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தும் விதமாக.

“ஏன் பாட்டி இதெல்லாம் நீங்க எனக்குத் தரலன்னா, உங்க பேத்திய என்னால சந்தோஷமா பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கிறிங்களா?” என்றான் தன்மானத்துடன்.

“ஐயோ இல்ல தம்பி. இதெல்லாம் ஒரு சீர் முறைதானே. ஏன் சசிக்கு நீங்க இதெல்லாம் பண்ணலையா என்று கேட்க,

“ம்...” பண்ணோம் தான் ஆனா, அக்கா கதை வேற. சிவா மாமா குடும்பத்துல அதெல்லாம் எதிர் பார்த்தாங்க அதனால தான் நாங்க பண்ணோம் ஆனா, எங்க விஷயத்துல நானோ என் அம்மாவோ உங்கிட்ட இருந்து சல்லிக்காசு எதிர்பார்க்கல. இந்த சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு எல்லாம் நான் அவங்க கழுத்துல தாலி கட்டல” என்றான் மகிழினி மீது இவன் கொண்ட காதலை மட்டுமே நம்பி.

“ஐயோ தம்பி நீங்க இதுக்கெல்லாம் ஆசைப்பட்டிங்கன்னு நான் சொல்லவே இல்லையே. ஆனா, இதெல்லாம் என் பேத்திக்காக நான் தரணும்னு சேர்த்து வச்சதுப்பா. அதான் உங்ககிட்ட இதெல்லாம் தரேன். தயவுசெய்து இதெல்லாம் வாங்கிக்கோ தம்பி” என்றார் அவர்.

“ப்ச்... இல்ல பாட்டி. அப்பா சேர்த்து வச்ச சொத்து இல்லாம, மாமனார் வீட்டுல வாங்குன வரதட்சணை இல்லாமல், என் பொண்டாட்டியை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும் பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க இதெல்லாம் கொடுத்து நான் என் சிஎம் மேல வச்சிருக்க அன்பை கொச்சைப்படுத்தாதீங்க” என்றான் அவள் மீதுள்ள விலைமதிப்பில்லா காதலுடன்.

“இல்ல தம்பி...” என்றவரின் வாயை அடைக்கும் விதமாக,

“அதான் இதெல்லாம் வேணாம்னு என் மாப்பிள சொல்லிட்டாரு இல்ல. முதல்ல இதெல்லாம் எடுத்து வையுங்க” என்று கீதா சொன்னதும் மறுப்பேச்சு பேசாமல் அங்கே இருந்த பொருளை எடுத்து வைத்தார்.

சுரேஷும், கொடியும் சகஜமாகப் பேசி கொண்டிருக்கும் வேளையில், பாட்டியின் கைபேசி சிணுங்க எடுத்துப் பேசியவர், கைபேசி இணைப்பை கோவமாக துண்டித்தார்.

“என்ன பாட்டி? யாரு போன்ல?” என்று கேட்டதும்,

“உன் தங்கச்சி தான். அவளுக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு போல” என்று கோவமாக கத்தினார்.

“என்ன பாட்டி? என்னை கேண்டீன்கு வரச்சொல்லி போன் பண்ணாங்களா?” என்று கொடி கேட்டதும்

“ம்... ஆமா தம்பி. உன்னை கேண்டீன்கு வர சொல்லுறா. நீங்க அங்க இருந்து அப்படியே வக்கீல் வீட்டுக்கு போகணுமாம்” என்றார் கடுப்பாக

“ம்... சரி பாட்டி நான் கேண்டீன் போயிட்டு அப்படியே அவங்கள ஜீவா ஆபீஸ்கு அழைச்சிட்டு போறேன்” என்றவனை கேள்வியாக அனைவரும் பார்க்க,

“என்ன பாக்குறீங்க? உங்க பேத்தி வழியில போய் தான் அவங்கள நான் என் வழிக்கு அழைச்சிட்டு வரமுடியும். அதனால கொஞ்ச நாளைக்கு நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. அத்தை நீங்களும் இதெல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்காதிங்க” என்றான் ஒரு முடிவோடு.

கீதா - யூ டோன்ட் வொர்ரி மாப்பிள. நான் சொல்ல மாட்டேன் யூ கேரி ஆன்.” என்று கீதா இவன் செயலுக்கு பச்சைக்கொடி காட்ட, சுரேஷை பார்த்து, “போய்ட்டு வந்துடுறேன் மச்சான்” என்று வீட்டில் இருந்து கிளம்பிய பைக், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீரன் கேண்டீன் சர்வீஸ் வாசலை சென்றடைந்தது.

உரிமையாக கேண்டீன்குள் நுழைந்தவனை பார்த்த மகிழினி, “ஒரு பத்து நிமிஷம் இருங்க. ஆட்டோ சொல்லிருக்கேன். வந்ததும் போயிடலாம்” என்றதும் கொடிவீரன் சிரிக்க, “இப்போ நீங்க கிண்டலா சிரிக்கிற அளவுக்கு நான் என்ன ஜோக் பண்ணேன்?” என்று கேட்டாள்.

மீண்டும் வாய் விட்டு சிரித்தவனைப் பார்த்து கடுப்பாக, அதற்குள் அங்கே பணி புரியும் சில பெண்மணிகள் இவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.

“மகிழு இந்த பையன் தான் உன் புருஷனா?”

“ஐயோ அம்மா...” என்று அவள் எதோ சொல்ல வர,

“அப்படி சொல்லக்கூடாதுங்க. ஐ ஆமாம்னு சொல்லணும்.” என்றான் கொடிவீரன்.

“நீங்க கொஞ்சம் வாயை மூடுங்க.” என்று சிடுசிடுக்க,

“ஒய்?” என்றான்.

“அம்மா நீங்க கேண்டீன் பாத்துக்கோங்க. நான் இவர் கூட வெளிய போயிட்டு வரேன்” என்றாள் அங்கிருந்த பெண்மணியிடம்.

“ம்... பரவாயில்ல தம்பி. எங்க மகிழினி உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு, அவங்க பாட்டி நேத்து நைட்டு எங்களுக்கு போன் பண்ணி சொல்லும்போது கூட நாங்க நம்பல. ஆனா, இப்போ இப்படி உங்கள ஜோடியா பாக்கும்போது தான் மனசு நிறைவா இருக்கு.” என்றார்.

கொடிவீரன் முகம் சந்தோஷத்தில் குதிக்க, அவனை முறைத்து, “அம்மா போதும். போய் வேலையை பாருங்க அந்த எஸ்எஸ்ஐடி கம்பெனி ஆளுங்க வந்தாங்கன்னா இந்த மன்த் மெனு என்னன்னு கேட்டு வச்சிடுங்க” என்றாள்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். முதல்ல நீ உன் புருஷன் கூட ஜாலியா வெளிய போயிட்டு வா.” என்றதும் கொடிவீரன் வாய்பொத்தி சிரிக்க, இவளோ முறைத்தாள்.
 
Joined
Jan 15, 2026
Messages
81
“தம்பி போகும் போது மகிழுக்கு பூ வாங்கி வச்சிவிட்டு அழைச்சிட்டு போங்க.”

“கண்டிப்பா.” என்றான் வேகமாக.

“என்ன கண்டிப்பா?”

“அதெல்லாம் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்காதுன்னு சொல்ல வந்தேங்க.”

“ம்... அந்த புரிதல் இருக்கனும்.”

“ஆங் அதெல்லாம் அதிகமாவே இருக்கு.”

“சரி போகலாமா?”

“போகலாம். ஆனா,” என்றான்.

“என்ன?”

“பசிக்குதுங்க. காலையில ஒரு புருஷன்காரனுக்கு வயித்துக்கு ஒன்னும் தராம, நீங்க பாட்டுக்கு இங்க வந்து ஊருக்கே சோறு போடுறிங்க. நான் சாப்பிட்டேனான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?”

“நீங்க இன்னும் சாப்பிடலையா?”

“ப்ச் இல்லையே. சரி பரவாயில்ல என்னைப் பற்றிக் கவலைப்பட, நீங்க என்ன என்னை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“போதும். இப்போ என்ன சாப்பாடு வேணுமா?”

“ம்...”

“இப்படி உக்காருங்க. இதோ வரேன். அக்கா பொங்கல் இருக்கா” என்று கேட்க,

”இருக்குமா.” என்று உள்ளே இருந்து பதில் கொடுக்க,

“இவருக்கு ஒரு ப்ளேட் பொங்கல் எடுத்துட்டு வாங்க.” என்றாள்.

“தம்பி தேங்காய் சட்னி வேணுமா? இல்ல?” என்றவரிடம்,

“அவருக்கு சாம்பார் தான் பிடிக்கும் நீங்க அதையே எடுத்துட்டு வாங்க.”

“எப்பா சூப்பர்ங்க. இதுக்கு தான் நம்மள புரிஞ்சிகிட்ட ஒரு துணை வேணும்னு சொல்றது. பார்த்திங்களா எனக்கு சாம்பார் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியது பாருங்க.”

“சார் அதோ எதிர்த்த கட வாசல்ல உக்காந்து இருக்காரே செக்யூரிட்டி தாத்தா, அவருக்கு தேங்காய் சட்னி பிடிக்கும்னு கூட தான் எனக்கு தெரியும். அதுக்காக அவருக்கு நான்...”

“ம்... போதும். வாங்க போகலாம்” என்று அவளின் வார்த்தையை நிறுத்தினான்.

“சாப்பாடு கேட்டீங்களே?”

“நீங்க தேனா பேசுனதுல, பசி தானா போச்சு. வாங்க போகலாம்”

“இல்ல நீங்க சாப்பிட்டே வாங்க.”

“வேணா தாயி. வாங்க போகலாம்.” இருவரும் ஆட்டோவில் அட்வகேட் ஜீவா அலுவலகத்தை தேடிச்செல்ல, அலுவலக வாசலில் ஜீவாவும் மீனாவும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த மகிழினி, “அங்க பாருங்க. மீனாவும் அங்க தான் இருக்கா.” என்றாள்.

“ம்...”

"ஆட்டோகாரர் அண்ணா நீங்க வெய்டிங்ல இருங்க. நாங்க இப்போ வந்துடுறோம்” என்றவள் கணவனுடன் ஜீவாவை நெருங்க.

“ஹாய் ஜீவா” என்று நண்பனைக் கட்டிக்கொண்டான் கொடிவீரன்.

“மீனா” என்று தன் தோழியை கட்டிக்கொண்டாள் மகிழினி.

“ஏய் சித்து என்னடி நீ எப்படி இங்க? அதுவும் இவர்கூட?”

“ஹாய் சிஸ்டர்” என்ற கொடிவீரனுக்கு பதிலுக்கு, “ஹாய் ப்ரோ” என்றாள் மீனா.

“என்னடா? என்ன திடீர்னு?”

“ஆபீஸ்குள்ள போய் பேசிப்போம் வா.” என்றதும் அனைவரும் ஜீவாவின் அலுவலகத்திற்கு சென்று தங்கள் திருமணத்தைப் பற்றிச் சொன்னதோடு, உடனே விவாகரத்தும் வேண்டும் என்று மகிழினி சொல்ல, ஜீவாவும் மீனாவும் அதிரிச்சியில் வார்த்தை வராமல் நின்று இருந்தனர்.

"வாட்? அப்போ உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சி விவாகரத்து ஆகப்போகுதா? வீரா, வாவ்! வாட் எ குட் நியூஸ் பார் மீ? ஜீவா அண்ணா, நீ யாரை லவ் பண்ணுறன்னு சொல்லு. அவங்க அம்மாகிட்ட பேசி எனக்கு அவரை கட்டி வைக்கிறேன்னு சொன்னிங்க இல்ல. நான் லவ் பண்ணுறது இதோ இந்த வீரனை தான். ஆமா ஐ ஸ்டில் லவ் கொடிவீரன்" என்று ஜீவாவின் தங்கை சொல்ல,

மகிழினி புருவம் சுளித்து அந்த பெண்ணை பார்க்க, கொடிவீரனின் நாக்கு நத்தையை போல சுருண்டு இருந்த தருணம்,

"ஏய் கேவி! அப்போ ஆப்டர் டிவோர்ஸ் நீ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கோ மேன்" என்று ஜீவா சொல்லவும் அதிர்வு தான் கொடிவீரனுக்கு.

“ரேஷ்மா நீங்க??” என்று விழித்தான் கொடிவீரன்.

“ஜீவா என்னோட அண்ணன்” என்றவள் கேவி அருகில் வந்து நின்றாள்.

“ரேஷ்மா உனக்கு இவரை தெரியுமா?” என்று கேட்க,

“ம் தெரியும் அண்ணி. என் ஆபீஸ்ல நான் ஒருத்தர்கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். அதுக்கு அவரு அவரோட அம்மா பெர்மிசன் இருந்தா தான் என்னை மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னாரு இல்ல. அவரு வேற யாரும் இல்ல. இதோ இவர் தான்” என்று கொடிவீரனை சுட்டி காட்டினாள்.

”ரேஷ்மா இப்போ ஏன் முடிஞ்ச கதையை பேசுறீங்க” என்றான் கடுப்பாக.

“கேவி இவங்க உங்களோட ஆபீஸ்ல வொர்க் பண்ணவங்க தானே?” என்று கேட்டதும்,

“இப்போ அது ரொம்ப முக்கியமா? நீங்க ஜீவாகிட்ட பேச வேண்டியதை பேசிட்டு வாங்க கிளம்பலாம்” என்றான் அதே கோவத்தோடு.

“என்ன வீரா நீங்க. இப்போ ஏன் இவ்வளவு கோவப்படுறிங்க? சரி சொல்லுங்க. உங்களுக்கு எப்போ கல்யாணம் முடிஞ்சுது. இவங்கள நம்ம வொர்க் பண்ண ஆபீஸ்ல பாத்தேனே. ஓ... இவங்க தான் உங்க அம்மா உங்களுக்கு பார்த்த பொண்ணா?” என்று கேட்டாள் இயல்பாக.

“ம்... ஆமா” என்றவன் மகிழினியை பார்க்க,

அவளோ, “ஏன் மீனா இவங்க தான் உன் நாத்தனரா என்று கேட்டாள்.

“ஆமாடி. ஆக்சுவலி இவளுக்கு தான் ஃபர்ஸ்ட் மேரேஜ் முடியுறதா இருந்துச்சு. ஆனா, இவதான் வேலைக்கு போன இடத்துல லவ் பண்ணிட்டேன். அவன் என் காதலை ரிஜெக்ட் பண்ணிட்டான்னு சொல்லி, இப்போ மேரேஜ் எல்லாம் வேணாம். கொஞ்சம் கேப் விடுங்கன்னு சொன்னா. அதான் மாமா எங்க கல்யாணத்தை முதல்ல முடிக்கலாம்னு சொல்லிட்டாரு” என்றாள்.

"அண்ணி நான் லவ் பண்ண ஆளு இதோ இவர்தான். ஜீவாண்ணா இவரு மேரேஜ் லைஃப்ல என்ன பிரச்சனை? எதுக்காக இவங்க உங்கள பாக்க வந்து இருக்காங்க? என்ன வீரா? உங்களுக்கு எப்போ மேரேஜ் முடிஞ்சுது?" என்று தன் கேள்விகளை ரேஷ்மா அடுக்கிக்கொண்டே போனாள்.

"உங்களுக்கு ஏன் எங்க டீடைல்ஸ் எல்லாம்?" என்று ரேஷ்மாவை பார்த்து கேட்டவன், "ஜீவா இவங்க உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. ஏங்க என்ன கேட்கணுமோ கேளுங்க" என்று மனைவியிடம் சொன்னான்.

"ஜீவா சார் மியூச்சுவல் டிவோர்ஸ் பண்ண என்ன பார்மாலிட்டி" என்று கேட்டாள்.

"சாரி. இது மியூச்சுவல் எல்லாம் இல்ல. டிவோர்ஸ் நீங்க மட்டும்தான் கேக்குறிங்க. நான் இல்ல. சோ, அதுக்கு என்ன பார்மாலிட்டின்னு கேளுங்க" என்று கொடிவீரன் தெளிவாக சொன்னதும், ஜீவாவும், ரேஷ்மாவும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.

"ஏய் சித்ரா, அதான் ஊர் கூடி கோவில்ல பெரியவங்க முன்னிலையில உனக்கு இவர்கூட கல்யாணம் நடந்துடுச்சில்ல. இப்போ ஏன்டி விவாகரத்து அது இதுன்னு சீன் போடுற" என்று உரிமையாக மகிழினியை கண்டித்து கேள்வி கேட்டாள் மீனா.

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. ஜீவா சார் அவர் அப்படித்தான் சொல்லுவார். நீங்க மியூச்சுவல் டிவோர்ஸ்கே அப்ளை பண்ணுங்க" என்றாள் மகிழினி.

"ஜீவா எனக்கும் இந்த விவாகரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இவங்க என்ன பண்ணனும்னு ஆசைப்படுறாங்களோ அதைப் பண்ணட்டும். நான் எதுவா இருந்தாலும் கோர்ட்ல டீல் பண்ணிக்கிறேன்" என்று கொடிவீரன் சொல்ல,

"ஏய் என்ன, என்னை பார்த்தா உங்க ரெண்டு பேருக்கு எப்படி இருக்கு. நீ என்னமோ விவாகரத்து வேணான்னு சொல்லுற. அவங்க என்னமோ மியூச்சுவல் டிவோர்ஸ் வேணும்னு சொல்லுறாங்க. ஃப்ரண்ட் நீ சொல்ற பேச்சை கேக்குறதா? இல்ல மீனா ஃப்ரண்ட் சித்ரா சொல்றதை கேக்குறதா?" என்ற ஜீவா தன் மண்டையயை சொரிந்தான்.

"லிசன் ஜீவா. நான்தான் சொல்றேன்ல. எனக்கு இவங்கள டிவோர்ஸ் பண்ண இஷ்டம் இல்ல. பட், இவங்க தான் என்னமோ சின்னபுள்ளதனமா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை கூட விளையாடிட்டு இருக்காங்க. சரி இருக்கட்டும். நம்ம சொல்லி கேக்காத சில மேதைகளுக்கு, காலம் எல்லாத்தையும் உணர்த்தும். நீ இவங்க கேக்குறதை பண்ணித்தா. எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. ஏங்க நம்ம போகலாமா? நீங்க சொன்னதை ஜீவா பண்ணி கொடுத்துடுவான். நீங்க வாங்க நம்ம கிளம்பலாம்" என்று மகிழினியை அழைத்த கொடிவீரன், அனைவரையும் பார்த்து பரஸ்பரமாக தலையை அசைத்தபடி வெளியேறி வாசலில் நின்றிருக்கும் ஆட்டோவில் சென்று அமர்ந்து கொண்டான்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top