Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 77
- Thread Author
- #1
விவாதம் - 38
மகிழினி விவாகரத்து என்றதும் அதிர்ச்சியில் இருந்தவன், சில நிமிடங்கள் கழித்தே சுற்றம் நினைவு வந்து சந்தேகம் தீராது, யாருக்கு டிவோர்ஸ்?" என்று கேட்டான் அழுத்தமாக.
"என்னங்க நீங்க இப்படிக் கேக்குறீங்க? நமக்கு தாங்க டிவோர்ஸ்" என்று மகிழினி சொல்ல, அதே சமயம் கீதா, பாட்டி, வேணு என்று அனைவரும் கையில் டீ கப்புடன் மாடிக்கு ஏறி வர
"ஏங்க என்ன சொல்லுறீங்க நீங்க? நமக்கு ஏன் டிவோர்ஸ் நடக்கணும்?" என்று இவன் மீண்டும் குழப்பத்துடன் கேட்க,
"நான்தான் உங்ககிட்ட தரச் சொல்லி வேணுகிட்ட ஒரு லெட்டர் தந்தேனே. அதை நீங்க படிச்சீங்களா இல்லையா?" என்று இவள் சந்தேகமாக கேட்க,
"என்ன லெட்டர்? நான் எந்த லெட்டரும் படிக்கலையே” என்றான் புரியாது.
"டேய் வேணு இங்க வா. காலையில கோவில்ல வச்சி உன்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்து, இவர்கிட்ட தர சொன்னேனே. நீ அதை இவர்கிட்ட தரலையா?" என்று கடுங்கோபத்துடன் கேட்டாள்.
"ஐயோ ஆமா அத்தை. வடை சாப்பிடுற நியாபகத்துல, நீங்க கொடுத்த லெட்டரை இவர்கிட்ட அப்போ தர மறந்துட்டேன். இருங்க இப்போ தந்துடுறேன்" என்று சொன்ன பொடியன், தன் டிரௌசர் பாக்கெட்டில் இருந்த சிறு பலகார கடையின் மத்தியில் கசங்கி இருந்த கடிதத்தை எடுத்து, கொடிவீரன் கையில் கொடுத்தான்.
"என்ன லெட்டர் இது?" என்று மகிழினியை கேட்டுக்கொண்டே அந்தக் கடிதத்தை வாசித்தவன், கண்கள் சிவந்த நிலையில் மகிழினி அருகில் வந்து, அந்தக் கடிதத்தை கசக்கி கீழே எரிந்தவனை பார்த்து அனைவரும் குழம்பிய வண்ணம் நின்று இருக்க,
"என்ன மருமகனே? அப்படி அந்த கடிதத்துல என்ன எழுதி இருக்கு? ஏன் நீ இவ்வளவு கோவப்படுற?” என்று கீதா கேட்கும் கேள்வியை காதில் வாங்காத கேவி, தன் சிஎம் கண்ணை சுட்டெரிக்கும் பார்வையால் வதைத்து கொண்டிருந்தான்.
"ஐயோ! தம்பி அப்படி என்னதான் அந்த லெட்டர்ல இருக்கு? அடியே சித்ரா என்னத்தடி நீ எழுதிக்கொடுத்த?” என்று பதறிப்போய் கேட்டார் பாட்டி.
“அது அது பாட்டி” என்று மகிழினியின் வார்த்தை தடுமாற,
“ம்... சொல்லுங்க. நீங்க என்ன எழுதி வச்சிருக்கீங்க? என்னை நீங்க என்னவா நினைச்சு இருக்கீங்க? இந்த கல்யாணத்தை எதுக்காக பண்ணிக்கிட்டீங்க? இன்னும் கதை கதையா இந்த லெட்டர்ல எழுதி வச்சிருக்குறதை எல்லாம் சொல்லுங்க மேடம்” என்றான் அதிகப்படியான கோபத்துடன்
“என்ன மருமகனே அப்படி என்னதான் உன் பொண்டாட்டி இந்த லெட்டர்ல எழுதி வச்சிருக்கா?” என்றார் கீதா.
“ம்... இவங்க என் பொண்டாட்டி இல்ல. நான் இவங்க கழுத்துல கட்டினது தாலி இல்ல. ஏன் அந்த கோவில்ல நடந்தது கல்யாணமே இல்ல. சோ, நம்ம சென்னைக்கு போனதும் விவாகரத்து பண்ணிக்கலாம்ன்னு எழுதி வச்சிருக்காங்க” என்றவன் கண்களில் கோவமும், பேச்சில் எரிச்சலும் வெளிப்பட, சூழ்நிலை கைதியாக மௌனம் காத்து நின்றாள் மகிழினி.
“என்ன மருமகனே சொல்றிங்க? இந்த லெட்டர்ல இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே கீதா கீழே கசங்கி இருந்த கடிதத்தை கையில் எடுத்து,
“மிஸ்டர். கேவி! எனக்கு இந்தக் கல்யாணத்துல ஒரு துளி கூட சம்மதம் இல்லை. ஏன் உங்களுக்கும் அப்படித்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்
ஆனால், நம்ம கெட்ட நேரம் சந்தர்ப்பமும் சாட்சியங்களும் உங்களையும் என்னையும் இணைக்க சதி செய்தது போல, ஒரு சூழ்நிலை அமைஞ்சிருச்சி. இந்த நேரத்துல நான் தனிச்சையா எந்த முடிவு எடுத்தாலும், அது சசி அக்காவின் திருமணத்தை தான் பாதிக்கும். அதனால நான் அன்னைக்கு சொன்னது போலவே, நம்ம நல்ல நண்பர்களாகவே இருப்போம். ஏதோ காலேஜ் ட்ராமால, நீங்க என் கழுத்துல தாலி கட்டுற மாதிரி நினைத்து, ஊர் எதிர்ல இந்த கல்யாணத்தை பண்ணிப்போம். நம்ம சென்னைக்கு போனதும் அடுத்த நொடியே, என் தோழி மீனாவின் மாமா ஜீவாவை பார்த்து நம்ம டிவோர்ஸ் பண்ண நான் ஏற்பாடு பண்ணிடுறேன். சோ, இதுதான் என் முடிவு. உங்களுக்கும் இந்த முடிவுல சம்மதம்னா, இந்த நாடகத்தை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே நிறைவேற்றுவோம். அப்படி உங்களுக்கு இந்த பிளான்ல இஷ்டம் இல்லைனா, நீங்களா ஒரு பிளான் போட்டு, இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.” என்று சத்தமாக வாசித்தார்.
மகிழினி எந்த ஒரு நெருடலும் இல்லாமல், அந்த கடிதத்தை சட்டென்று கீதா கையில் இருந்து தன் வசம் வாங்கி, “சரி இந்த லெட்டரை நீங்க என் கழுத்துல இந்க் கயிறை கட்டுறதுக்கு முன்னாடி படிக்கத் தவறிட்டீங்க. பரவாயில்ல. ஆனா, இதுதான் என் முடிவு. வாங்க நம்ம போய் ஜீவா சாரை பார்த்துட்டு வருவோம்” என்று தைரியமாக சொன்னாள்.
“ஏய்! நீ என்ன லூசா. உன்னோட பைத்தியக்காரத்தனத்தால ஏன்டி இப்படி உனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை கெடுத்துக்குற. உன்ன...” என்று மகிழினியை அடிக்க ஓங்கிய பாட்டியின் கரங்களை தடுத்தவன்,
“பாட்டி வேண்டாம். அவங்கள ஒன்னும் சொல்லாதீங்க” என்றவன் மகிழினியின் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான்
“என்ன மருமகனே நீங்க. இந்த பொண்ணு இப்படி ஒரு கடிதத்தை எழுதி வச்சிருக்கு. இரு நான் உடனே ஜெயாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுறேன்” என்று சொன்னார் கீதா.
“அத்தை வேணாம். இது எங்க பிரச்சனை. இதுல அம்மாவோ, ஏன் நீங்களோ கூட தலையிடாதீங்க. நாங்க பேசிக்கிறோம்” என்றவன் கண்கள் இன்னுமே மகிழினியை தான் உள்வாங்கி இருந்தது.
“சரி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். டேய் வேணு நீ வா. நம்ம போய் முருங்கைக்காய் மஸ்கட் அல்வா பண்ணலாம். சம்மந்தி நீங்க வாங்க. என் மாப்பிள்ள உங்க பேத்தியை பாத்துப்பாரு.” என்று கீதா சொல்லவும் கண்கள் கலங்கிய வண்ணம் அவருடன் சென்றார்.
அறையின் வாசலில் கைகளில் கடிதத்துடன் நின்றிருந்த மகிழினி மனக் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட கொடிவீரன், எக்காரணத்தை கொண்டும் தன் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று எண்ணியப்படி அழுத்தமாக தன் தலைமுடியை கோதிக் கொண்டவன் பெருமூச்சுடன் "உள்ள வாங்க" என்று அழைக்க, கையில் இருந்த கடிதத்தை இறுக்கமாக பிடித்துகொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
"உக்காருங்க" என்று கேவி இருக்கையை சுட்டிக்காட்ட, அவளோ மேசையின் ஓரமாக சென்று ஒரு மூலையில் நின்றிருந்தவள் கையில் உள்ள கடிதத்தை வேகமாகக் கசக்கினாள் என்ன செய்கிறோம் என்றே தெரியாது.
அவளின் நிலை உணந்தவனோ, “இங்க பாருங்க. உங்க மனநிலை எனக்கு புரியுது. ஆனா, நீங்க எடுத்த முடிவு ரொம்ப தப்பு. நீங்க என்ன நினைத்து நான் கட்டிய தாலியை ஏத்துகிட்டிங்கனு எனக்கு தெரியாது. ஆனா, நான் எப்போ உங்க கழுத்துல தாலி கட்டினேனோ, அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். இந்த ஜென்மத்துல நீங்க மட்டும்தான் என் மனைவின்னு.”
“இல்ல நான்.”
“இருங்க நான் பேசி முடிச்சிடுறேன். நம்ம கல்யாணத்துக்கு முன்ன, உங்கிட்ட சில விஷயம் மனசு விட்டு பேசினேன்.” என்றான்.
“என்ன? எப்போ?” என்றாள் வேகமாக.
“ம்...” பேசினேன்பட் இப்போ தான் எனக்கு புரியுது நான் பேசின எதையும் நீங்க கேட்கலன்னு. இட்ஸ் ஓகே. மனதில் உள்ள நல்ல வார்த்தைகளை அடிக்கடி சொல்றதால தப்பு இல்ல. இப்போ சொல்லுறேன்... நீங்க காதால கேக்காம, இதயத்தால கேளுங்க. எனக்கு உங்கள பிடிக்கப்போய் தான், நான் உங்க கழுத்துல தாலி கட்டினேன். ஆனா, அது உங்க சம்மததோடு நடந்த கல்யாணம்ன்னு தான் நான் நினைச்சேன். பட், இந்த லெட்டர், உங்க கண்டிஷன்ஸ் எல்லாம் எனக்கு தெரியாது.”
“அதான் இப்போ தெரிஞ்சிடுச்சில்ல.”
“இட்ஸ் டூ லேட்.”
“என்ன லேட்?”
“ஆமாங்க. நமக்கு கல்யாணம் நடந்துருச்சிங்க. இனிமே நீங்களும் நானும் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாகனும்.” என்றான் அமைதியாக.
“முடியாது. கண்டிப்பா என்னால உங்க கூட வாழ முடியாது. எனக்கு மறுமணமே வேணாம்னு நான் முடிவு எடுத்து பல மாசமாச்சு” என்றாள் அழுத்தமாக.
“பட், நமக்கு தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே.”
“அதுக்கு பெயர் ஒன்னும் கல்யாணம் இல்ல.”
“ஓகே அப்போ நிக்காஹ், மேரேஜ், விவாகம், இப்படி வேற எதாவது ஒரு நேம் வச்சிக்கோங்க.” என்றான் கிண்டலாக.
“என்னங்க என்னை பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா?”
“யாருக்கு? எனக்கா? அது சரி. நீங்க தாங்க ஊர் கூடி என் அம்மா, உங்க பாட்டின்னு எல்லோர் முன்னிலையிலும், கோவில்ல நடந்த நம்ம கல்யாணத்தை, என்னமோ பொம்மை கல்யாணம் பண்ண மாதிரி நக்கல் பண்ணிகிட்டு இருக்கீங்க” என்றவன் குரலில் சிறிது கோபம் எட்டிப்பார்த்தது.
“ஐயோ! நீங்க ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க. இன்னைக்கு காலையில நடந்ததை நான் கல்யாணமா நினைக்கல” என்றாள் அவள்.
“ஓ... அப்ப இனிமே நினைங்க” என்றான் அசால்டாக.
“என்னால முடியாது பிளீஸ். சொன்னா புரிஞ்சிக்கோங்க உங்களுக்கு வாழ வேண்டிய வயசு.”
“ஓ... அப்போ மேடம் ஔவையார் பாட்டியோ”
“ப்ச்... உங்களுக்கு நான் சொல்ல வரது புரியுதா, இல்லையா?”
“சத்தியமா புரியல.”
“எ...எனக்கு உங்கள, நட்பை மீறி அடுத்த கட்டத்தில் வச்சி பார்க்க தோணலங்க” என்று தடுமாற்றத்தையும் மீறி சொல்லிவிட்டாள்.
“அது உங்க பிரச்சனை?” என்றான் பட்டென்று.
“டேய்! நான் சொல்றது உனக்கு புரியலயா?” என்றாள் சத்தமாக.
“சுத்தமா புரியலடி” என்றான் இவனும் பதிலுக்கு.
“என்ன டியா?” என்று விழித்தாள் அவள்.
“அப்கோர்ஸ். நான் கொஞ்சம் மண்டை சூடு எடுத்தவன் மேடம். எனக்கு நீங்க என்ன தரீங்களோ கண்டிப்பா அதுவே உங்களுக்கு திரும்ப கிட்டும். பட், நீங்க என்மேல பாசம் காட்டினா, அது இரு மடங்கா உங்களுக்கு கிடைக்கும்.”