Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 69
- Thread Author
- #1
விவாதக் காதல் – 34
ஊர் மக்களின் வாயை அடைக்கும்படி. வானத்தில் இடி முழங்கி மழை பொழிய, "ஐ...” என்று சொன்ன வேணு, ஜாலியாக மழையை ரசிக்க, கூடி இருக்கும் மக்கள் அனைவரும் மழையில் நனைந்த காளானைப் போல நின்றிருந்தனர்.
இடி சத்தத்தை கேட்ட மகிழினிக்கு தலை வலிக்க ஆரம்பிக்க, தன் வலியைப் பொறுத்துக்கொள்ள தலையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு கண்கள் கலங்கினாள்.
இங்க பாருங்க. இதெல்லாம் உங்க வேலைதான்னு எனக்கு நல்லாவே தெரியும். சித்ராவை பழி வாங்க. நீங்க கடவுளின் பெயரை சொல்லி இவங்களுக்கு கலங்கம் ஏற்படுத்த பாத்திங்க. ஆனா, இப்போ அந்தக் கடவுளே நீங்க சொன்ன மாதிரி, மாரியாக மாறி மழையாக இந்த கிராமத்து மண்ணை குளிர வச்சிட்டா. சோ, இப்போ நீங்க சொன்ன காரியத்தை எல்லாம் பண்ணி தான், என் தம்பியும், சித்ராவும் சுத்தமானவங்க என்று நிரூபிக்க அவசியம் இல்லை” என்று சசி தெளிவாக சொன்னனாள்.
"அப்போ இவங்க ரெண்டு பேரும் எதுக்காக தனியா இந்த கோவிலுக்குள்ள இருந்தாங்க” என்று மீண்டும் நாராயணன் கேட்க,
“நாங்க தான் சொல்றோமே. நாங்களா அங்க போகல. யாரோ திட்டம் போட்டு தான் எங்களுக்கு இந்த கெட்ட பெயரை வாங்கித் தர பாக்குறாங்க” என்று ஆணித்தரமாக சொன்னான் கொடிவீரன்.
"உங்க பேர்ல கெட்ட பெயர் வாங்கி தரதால எங்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை. இப்போவும் சொல்லுறேன். இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுக்காரங்க. அந்தப் பொண்ணும் கணவனை இழந்துட்டு, ஆசையை அடக்க முடியாமல், ஏதோ வயசு மோகத்துல இந்த பையன் மேல ஆசைப்பட்டு இருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலையில இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இளமை வேகத்துல ஏதோ தப்பு பண்ண முயற்சி பண்ணிருப்பாங்க. அதை ஒத்துகிட்டு ஆமா நாங்க தப்பு பண்ணிட்டோம். இனிமே இப்படி எல்லாம் நடக்காதுன்னு சொல்லிட்டு, இந்தப் பொண்ணு தீச்சட்டி தூக்கிகிட்டு, இந்த கிராமத்தை வலம் வந்துட்டா எல்லா பிரெச்சனையும் முடிஞ்சு போச்சு. அதை விட்டுட்டு சும்மா உங்க மேல இருக்குற தப்பையும், அசிங்கத்தையும் மறைக்க, எங்க கிராம மக்களை அசிங்க படுத்தாதீங்க” என்று மீண்டும் வனிதா முதலிலிருந்து ஆரம்பித்தார்.
“இந்தாமா சு...னி...தா.” என்று வனிதாவைப் பார்த்து கீதா அழைத்தார்.
“என் பெயர் வனிதா” என்று கீதாவை முறைக்க,
“நீ சுனிதாவோ, சனிதாவோ, சவிதாவோ. ஐ டோன்ட் மைன்ட். நீ சொல்ற மாதிரி, வயசு வேகத்துல தப்பு பண்ணனும்னு நினைக்கிற ஆளுங்க, கோவிலுக்குள்ள போய் தப்பு பண்ண மாட்டாங்க. அதுவும் இல்லாம, சித்ராவுக்கும், என் மருமகனுக்கும் நாங்களே முறைப்படி அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணதான் காத்துகிட்டு இருக்கோம்.” என்று கீதா சொன்னதும்,
மகிழினி கோவமாக, "அம்மா” என்று அழைக்க, பாட்டி மகிழினியின் கையை பிடித்து தன்வசம் இணைத்துக் கொண்டு அவளை கட்டுப்படுத்தினார்.
கொடிவீரன் "அத்தை " என்று அதிர்ச்சியாக, அவனின் கரங்களைப் பிடித்த சசி, "அதானே. நாங்களே சித்ராவுக்கும், என் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கதான் முடிவு பண்ணிருக்கோம். அப்படி இருக்கும்போது, என் கல்யாணத்துக்கு வந்த இவங்க எதுக்காக, இப்படி ஒரு தப்ப பண்ண போறாங்க. அதுவும் இல்லாம கோவில்ல போய் இப்படி எல்லாம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லையே” என்று சொன்னாள்.
“அக்கா” என்று மகிழினி அலற,
“இரு சித்ரா. பேசிகிட்டு இருக்கோம் இல்ல” என்று அவளை பேசவிடாது தடுத்தாள்.
“அம்மா. என்னம்மா இதெல்லாம். அத்தை என்ன சொல்லுறாங்க?” என்று இவன் தயக்கத்துடன் கேட்க,
“டேய்! வீரா. கொஞ்சநேரம் அமைதியா இருடா. கீதா அண்ணி பேசட்டும்” என்று சொன்னார் ஜெயா.
“இங்க பாருங்க பெருசுங்களா. நீங்க நம்புனாலும், நம்பாட்டியும் உண்மை இது தான். உங்க ஊருக்கே கடவுளா இருக்காங்களே இந்த சங்கீதா...”
“வனிதா...” என்று பல்லைக்கடிக்க,
“ஹாங்... இந்த "தா" தான். இவங்களுக்கும், எங்க வீட்டு பொண்ணு சித்ராவுக்கும் சென்னையில ஒரு தொழில் விவகாரமா வாய் தகராறு ஏற்பட்டுருக்கு. அப்போ எங்க வீட்டுப் பொண்ணு இந்த தாவை மீடியா மூலம் டீல் பண்ணிருக்காள். சோ, அதுல இந்த கவிதாவுக்கு...” திரும்பவும் பெயரைத் தப்பாக கீதா சொல்லவும், வனிதா, நாராயணன் அவரை முறைத்தனர்.
“வனிதா அத்தை” என்று திருத்தினாள்.
“ஆமாமாம். அதனாலதான் இந்த தா... எங்க வீட்டு பொண்ணை பழி வாங்க இப்படி ஒரு கேவலத்தை பண்ணிருக்காங்க. இவங்க சூழ்ச்சி தெரியாம பெரியவுங்க நீங்க எல்லாம் இந்த தாவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க.” என்றார்.
“போதும் நிறுத்துமா. என்ன புதுசு புதுசா கதை சொல்லுறீங்க. யாருக்கு யாருக்கூட கல்யாணம் நடக்க போவதா முடிவு பண்ணிருக்கீங்க நீங்க” என்று கேட்டார் நாராயணன்.
“என் மருமகன் கொடிவீரனுக்கும், அதோ அங்க நிக்குறாளே எங்க வீட்டுக்கு வர போற பொண்ணு சித்ரா. அவளுக்கும் தான் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்கோம்.” என்றார் கீதா.
கொடிவீரனும், மகிழினியும் விழித்தபடி நிற்க, நாராயணனோ, “சும்மா பொய் எல்லாம் சொல்லாதீங்க. உங்க வீட்டு பையன் பண்ண கேவலத்தை மறைக்க இல்லாத விஷயத்தை இருக்குன்னு சொல்லி இவங்கள காப்பாற்ற முயற்சி பண்ணாதீங்க.” என்றார்.
“இல்லாத விஷயத்தை இருக்குன்னும், நடக்காத விஷயத்தை நடந்ததாகவும் சொல்ல நாங்க ஒன்னும் சில ஆளுங்கள போல ஈன பிறவிங்க இல்ல. நான் உண்மையை தான் சொல்லுறேன்.” என்று கீதா சொல்ல,
“என்ன உண்மையை நீங்க சொல்லுறீங்க.” என்று பதிலுக்கு வனிதா கேட்க,
“ம்... சித்ராவுக்கும் கொடிவீரனுக்கும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் முடிக்க நாங்க எல்லாம் முடிவு பண்ண உண்மையை தான் சொல்லுறேன்.” என்றார் நக்கலாக.
“இல்ல. நான் இத நம்பமாட்டேன். இந்தப் பொண்ணு தன் முதல் கணவனை இழந்தவள். இவள எப்படி உங்க மகனுக்கு நீங்க கட்டி தருவிங்க?” என்றதும் கொடிவீரன் முறைக்க, மகிழினி கணவன் நினைவில் மனம் கலங்கி நின்றாள்.
“ஏய்... நிறுத்து நிறுத்து நிறுத்து. என்ன கேள்வி இதெல்லாம்? எங்க வீட்டுப் பையனுக்கு நாங்க எப்படி வேணா பொண்ணு எடுப்போம். அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.” என்றார் கீதா.
“இல்லங்க இல்ல. நாங்க இந்த பொய்யை எல்லாம் நம்பமாட்டோம்.” என்றார் நாராயணன்.
“அது எங்க பிரச்சனை இல்ல.”
“அது உங்களுக்கு வேணா பிரச்சனை இல்லாம இருக்கலாம். ஆனா, இவங்க கோவில்ல பண்ண அசிங்கத்துக்கு, இப்போ இவங்களுக்கு நாங்க தண்டனை தராமல் போனா, அந்தப் பாவம் எங்க ஊரை வந்து சேரும்” என்று கீதாவுக்கு வனிதா பதில் கொடுக்க,
“ஏங்க. உங்களுக்கு இப்போ என்னதான் பிரச்சனை. அதான் கோவிலுக்குள்ள எப்படி மயங்கி இருந்தாங்கனே தெரியலன்னு சொல்லுறாங்க இல்ல. பின்ன என்னங்க. சும்மா தண்டனை தண்டவாளம்னு தேவை இல்லாததை எல்லாம் பேசுறீங்க. சிவா இதான் உங்க ஊர் லட்சணமா? கொஞ்சம் கூட இவங்க எல்லாம் மனசாட்சியோட பேசமாட்டாங்களா? அம்மா எனக்கு இந்த ஊரும் பிடிக்கல. இந்த குடும்பமும் பிடிக்கல. வாங்க முதல்ல நம்ம இங்க இருந்து போகலாம். எனக்கு இப்படிப்பட்ட கல்யாணமே வேணாம்” என்று கோவமாகப் பேசினாள் சசி.
அவள் அருகில் சென்ற ஆண்டாள், “கொஞ்சம் நில்லுமா. விடிந்தா கல்யாணம் நடக்கப்போற நேரத்துல நீ வாழ போற குடும்பத்தை பற்றி இப்படி எல்லாம் பேசக்கூடாது.” என்றாள்.
“இல்லிங்க. எனக்கு உங்க குடும்பமே பிடிக்கல. நீங்க எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடந்துக்குறீங்க.”
“சசி...” என்று சிவா அழைக்க,
“என்ன? என்ன சொல்லப் போறீங்க? சொல்லுங்க. நீங்க எல்லாம் படிச்சவங்க தானே. அதான் என் தம்பியும், சித்ராவும் சொல்லுறாங்க இல்ல. அவங்கள யாரோ பிளான் பண்ணி அந்த கோவில் ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்கன்னு. பின்ன என்னவாம் உங்க மாமாவுக்கு? போதாக்குறைக்கு. நாங்களும் தெளிவா சொல்லுறோம். என் தம்பிக்கு நாங்க சித்ராவை தான் கல்யாணம் பண்ணி வைக்கப்போறோம்னு சொன்ன பின்னாடியும், இவங்க ரெண்டு பேரும் அற்ப சந்தோஷத்துக்காக கோவிலுக்குள்ள அசிங்கம் பண்ணி இருப்பாங்கன்னு சொல்லி. வாழ வேண்டிய இந்த ஜோடிகளை இப்படி ஊர் முன்னாடி நிக்க வச்சி கேவலப்படுத்துறீங்களே இதான் உங்க ஊர் நியாயமா?” விடாது மழையாய்ப் பொழிந்தாள் சசி.
“இங்க பாருமா...” என்று ஆரம்பித்த நாராயணனிடம்,
“ஏங்க நீங்க இருங்க.” என்று தடுத்த ஆண்டாள், “இங்க பாருமா சசி. இந்தக் கல்யாண விஷயத்துல சீர் வரிசை சம்மந்தமா உங்க வீட்டுக்கும் எங்களுக்கும் பல மன வேறுபாடுகள் இருக்கலாம். ஆனா, அதுக்காக நாங்க சாமி விஷயத்துல எல்லாம் விளையாட மாட்டோம். நான் கடவுளுக்கு ரொம்ப பயந்தவள். யாரு பண்ண பாவமோ என் வயத்துல ஒரு புழு பூச்சி கூட தங்கல” என்கையில்,
நாராயணன், “ஆண்டாளு...” என்று தடுக்க,
“நீங்க இருங்க. சரி அது என் தலையெழுத்து. ஆனா, இப்போ நீ கோவப்பட்டு நாளைக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தை நிறுத்திட்டு, நீ காலமெல்லாம் கண் கலங்கி நின்றால், அந்தப் பாவமும் என் குடும்பத்தை தான் வந்து சேரும்.” என்றதில் கொடிவீரனும், மகிழினியும் அதிர்ந்து பார்க்க,
“அசம்பாவிதம் நடந்து இருக்குன்னு ரெண்டு பேர் சாட்சி சொல்லும்போது, அதை நாங்க விசாரிக்காமல் இருக்கவும் முடியாது.” என்றாள் ஆண்டாள்.
“நீங்க தாராளமா விசாரிக்கலாம். ஆனா, அந்த விசாரணை ஒரு தலையா இருக்ககூடாது தானே?” என்று இடையிட்டாள் சசி.
“கண்டிப்பா அப்படி எல்லாம் இருக்காது. இப்போ இங்க என்ன பிரச்சனை? எங்க ஊர்ல இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், உன் தம்பியும், அதோ அந்தப் பொண்ணும் கோவில்ல தப்பா நடந்துகிட்டாங்கன்னு சாட்சி சொல்லுறாங்க. ஆனா, நீங்க என்ன சொல்லுறீங்க. ஏற்கனவே உன் தம்பிக்கு பேசி அடுத்த முகூர்த்தத்துல இந்த பொண்ணுகூட அவருக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு சொல்லுறிங்க.”
“அவங்க பொய் சொல்லுறாங்க ஆண்டாள்” என்று வனிதா சொல்ல,
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க அண்ணி.”
“ஏய்! என்ன என் அக்காவை சும்மா இருக்க சொல்லுற. இந்த பஞ்சாயத்துக்கு நானும், என் அக்காவும் தான் பெரியவங்க” என்றார் நாராயணன்.