• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 32

Joined
Jan 15, 2026
Messages
65
விவாதக் காதல் – 32

கோவில் மேற்பணி செய்யும் விஷயமாக, கோவில் நிர்வாகிககள் நாராயணன் மற்றும் வனிதாவிடம் கலந்துரையாடியபடி தெப்பக்குளத்தின் பக்கம் வருகை தந்து இருக்க,

இவர்களை கவனிக்காத மகிழினி நிலவின் வெளிச்சத்தில் குளத்து நீரில் ப்ரதிபலிக்கும் வெள்ளை நிலவை ரசித்து கொண்டு இருக்க, அவளை பார்த்து வனிதாவின் முகம் இறுகிப்போனது.

தன் அக்கா வனிதாவை கவனித்த நாராயணன், மகிழினிக்கும் வனிதாவுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, வனிதா, மகிழினி ரன் பண்ணும் கேண்டீன் மேல் ஆசை கொண்டதையும்... அதற்காக, மகிழினி தன்னை மீடியா முன் அசிங்கப்படுத்தியதும் சொல்லி முகம் கடுத்தாள்.

"என்ன அக்கா சொல்ற. இவ உன்னை அசிங்க படுத்தினாளா? பார்க்க சின்ன பொண்ணு போல இருக்கா. இவ எப்படி” என்று வனிதாவிடம் நாராயணன் ஆச்சிரியமாக வினாவினான்.

“ம்... உண்மை தான்டா. இவ என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டா. டிபார்ட்மென்ட்ல என் பெயர் நாறிடுசசி. மீடியால என் முகத்தை போட்டு ஊர் பெயர் தெரியாத ஆளுங்களாம், என்னை கமெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. இவளால நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன்” என்று தன் தம்பியிடம் உறுமினாள் வனிதா.

"அக்கா, இப்போ சொல்லு. இவள என்ன பண்ணலாம்” என்று நாராயணன் வன்மத்தை சுமந்தபடி கேட்டான்.

"பண்ணனும்டா தம்பி. பிசுரு தட்டாமல் பண்ணனும். அவ வாழ்க்கையில என்னை மறக்க முடியாத அளவுக்கு எதாவது ஒன்றை பண்ணனும். எந்த மீடியா முன்னாடி இவ என்னை அசிங்கப்படுத்தினாளோ, அதே மீடியால இவ பெயர் அசிங்கப்படனும்” என்ற வனிதா மகிழினியை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

நாராயணனும், வனிதாவும் தெப்பக்குளத்தின் நுழைவாயிலில் நின்று பேசிக்கொண்டு இருந்ததை கவனிக்காத மகிழினி, இன்னமும் நீரில் நீந்தி கொண்டு இருக்கும் நிலவின் நகலை மட்டுமே கண்டு ரசித்துக்கொண்டு இருந்தாள்.

"சரி சொல்லுக்கா. என்ன பண்ணலாம்?” என்று கேட்க,

"ஆமா. இவளுக்கும் உன் மச்சான் சிவா கல்யாணம் முடிக்ப் போறானே அந்த சசி, அவனுக்கும் என்ன சம்மந்தமாம்” என்று விசாரிக்க,

"சசியோட தம்பி, வேலைக்கு போன இடத்துல, இவ வீட்டு மாடியில தான் தங்கி இருக்கான் போல. அந்த நட்பின் அடிப்படையில தான் இந்த பொண்ணு சிவா, சசி கல்யாணத்துக்கு வந்து இருக்காள்” என்று விளக்கமாக சொன்னான் நாராயணன்.

"ஓ... அவனா? நான் கூட இவ இந்த ஊருல இருக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கு, இவ கையை எல்லாம் பிடித்து ரொம்ப சீன் போட்டான் இல்ல” என்று வனிதா தன் புருவம் உயர்த்தி கேட்க,

“ம்... ஆமா அக்கா. நானும் பாத்தேன். அப்போவே நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். ஆனா, என் மச்சான் அந்த சிவா இருக்கான் இல்ல, அவனால தான் நான் அமைதியா இருக்க வேண்டியதா போச்சு” என்று முகம் சிவந்தான் நாராயணன்.

"டேய்!! உன் மச்சான் அந்த சிவாவை எல்லாம் இப்போவே நீ தட்டி வைக்கணும். இல்லைனா அவன் உன்னை சுத்தமா மதிக்கமாட்டான்” என்று வனிதா சொல்ல,

சில நொடிகள் யோசித்த நாராயணன், "ஏன் அக்கா, ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சா எப்படி இருக்கும்” என்றவன். தன் அக்கா வனிதாவிடம் ஒரு யோசனையை சொல்ல, கேவலமாக வாய் விட்டு சிரித்தாள் வனிதா.

"என்ன அக்கா பிளான் ஓகே தானே” என்று நாராயணன் கேட்க,

"அடி தூள்டா தம்பி. நம்ம பிளான் மட்டும் சரியா நடந்ததுன்னா, கண்டிப்பா இந்த கல்யாணமும் நின்னு, இதோ அங்க இருக்காளே, அவளோட வாழ்க்கையும் நாசமாகும்” என்றாள் அரக்கியாக மாறிய வனிதா.

"அது மட்டும் இல்ல அக்கா, உன்னை எதிர்த்து பேசிய அந்த சசியோட தம்பியின் தலையெழுத்தும் மாறப்போகுது பாரு” என்றான்.

“ம்... ஆமாடா. ஆனா, ஒன்னு மட்டும் நினைவில் வச்சிக்கோ, எக்காரணத்தை கொண்டும் நம்ம நேரடியா இந்த பிளான்ல இன்வால்வ் ஆகக்கூடாது. ஏன்னா நமக்கு இந்த ஊருல ரொம்ப நல்ல பெயர் இருக்கு. நம்ம இந்த மாதிரி கேவலமா பிளான் போடுறது மட்டும் யாருக்காவது தெரிய வந்தா, அப்புறம் நம்ம குடும்பத்துக்கு தான் கெட்ட பெயர்.”

"நீ கவலையை விடுக்கா. நான் நமக்கு நம்பிக்கையான ஆளை வச்சி நைசா காயை நகர்த்துறேன்” என்று நாராயணன் ஒரு திட்டம் போட,

"டேய்!! இந்த விஷயம் உன் பொஞ்சாதி ஆண்டாளுக்கு கூட தெரியக்கூடாது. ஏன்னா, ஆயிரம் இருந்தாலும் நாளைக்கு நிக்கப்போறது உன் பொஞ்சாதி தம்பியோட கல்யாணம். இப்போ நீ போய் நம்ம திட்டத்தை உன் பொஞ்சாதிக்கிட்ட சொல்லிட்டனா, அவ நம்மள ரொம்ப கேவலமா நினைப்பாள்” என்று சொன்ன வனிதாவின் திட்டத்தை நிறைவேற்ற நாராயணன் எடுக்கப்போகும் முடிவு ஒரு பக்கம் இருக்க,

மறுபக்கம், நாளை காலை நடக்க இருக்கும் சசியின் கல்யாணத்துக்கு வருகை தந்த அனைவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.

“என்ன சசிமா. கோவிலுக்கு போன சித்ரா ஏன் இன்னும் வரல?” என்று ஜெயா கேட்க,

"அம்மா. அவ என்ன தனியாவா போயிருக்கா. கூட நம்ம அத்தையும் தானே போயிருக்காங்க” என்று சொன்ன நேரம் வேணுவுடன் வீட்டுக்குக் வந்த கீதாவை பார்த்த சசி, "அதோ அத்தையே வந்துட்டாங்க பாருங்க. அத்தை சித்ரா எங்க? அம்மா என்னமோ சின்ன பிள்ளையயை காணோம்னு தேடுற மாதிரி, அவளை தேடிகிட்டு இருக்காங்க” என்று சொன்னவளின் கண்கள் சித்ராவைத் தேடியது.

"என்ன இன்னும் சித்ரா வரலையா?" என்று கீதா கேட்டதும், அதிர்ந்து போனார் மகிழினியின் பாட்டி.

"என்ன அத்தை இப்படிக் கேக்குறீங்க. சித்ரா உங்ககூட தானே கோவிலுக்கு வந்தா” என்று சசி பதட்டமாக கேட்க,

வேறொரு அறையில் இருந்து வெளியே வந்த கொடிவீரன், "என்னாச்சு அக்கா? ஏன் இப்படி கத்திகிட்டு இருக்க?” என்று கேட்டு கையில் இருந்த கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு சசியின் அருகில் வந்தான்.

"டேய்! இங்க பாருடா இந்த அத்தையை. சித்ரா இவங்க கூட தான் கோவிலுக்கு போனாள். ஆனா, இப்போ இவங்க மட்டும் வேணு கூட வந்துட்டு, சித்ரா இன்னுமா வரலன்னு கேக்குறாங்க” என்று சொல்லி கீதாவை முறைக்க,

"அடியே! நீ என்னடி. நான் என்னமோ ஒரு வயசு குழந்தையை கோவிலுக்கு கூட்டிட்டு போய் தொலைச்சிட்டு வந்தது போல என்கிட்ட சண்டைக்கு வர” என்று கீதா முகம் சுளிக்க,

"கடவுளே என் பேத்திக்கு என்னாச்சுன்னு தெரியலையே. மணி ஒன்பதுகிட்ட ஆகுது. அவ ஏன் இன்னும் வீட்டுக்கு வரல. அவளுக்கு இந்த ஊர்ல வேற யாரையும் கூட தெரியாதே” என்று பாட்டி புலம்ப.

"அம்மா அம்மா, இருங்க பயப்புடாதிங்க. இங்க இருக்குற கோவிலுக்கு தானே போய் இருக்கா. இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாள்” என்று ஜெயா மகிழினியின் பாட்டியை சமாதானம் செய்தார்.

"ஏன் அத்தை. நீங்க எல்லாம் ஒண்ணா தானே போனீங்க? இப்போ எப்படி நீங்களும் வேணுவும் மட்டும் தனியா வரீங்க?” என்று கொடிவீரன் கேட்க,

"டேய்!! இந்த பொடிப் பையனுக்கு கோவில்ல இருக்கப் பிடிக்கலன்னு சொன்னான். அதான் நான் அவனை என் ஒண்ணுவிட்ட தங்கச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன்.” என்றார்.

"அப்போ சிஎம் எங்க” என்று கொடி வீரனும் பதற்றதுடன் கேட்க,

"நான் இவனை வெளிய அழைச்சிட்டு போகும்போது, உன் சிஎம் அந்த கோவில் தெப்பக்குளத்தில் தான்டா உக்காந்துட்டு வரேன்னு சொன்னாள்” என்று கீதா சொன்னதும்,

"ஓ... அப்போ அவங்க அங்கதான் அக்கா உக்காந்து இருப்பாங்க” என்று இயல்பாக சொன்னான்.

"என்னடா சொல்ற” என்று புரியாமல் கேட்டாள் சசி.

"ஆமா அக்கா. அவங்க கோவிலுக்கு போனா தெப்பக்குளத்துல மணிகணக்குல உக்காந்து இருக்குறது வழக்கம். சோ, இன்னைக்கும் அப்படி தான் அங்க உக்காந்துட்டு வருவாங்க” என்று சொன்னான்.

"தம்பி, இருந்தாலும் எனக்கு என்னமோ பயமாவே இருக்குப்பா” என்று மகிழினியின் பாட்டி கலகத்துடன் சொன்னதும்.

"தம்பி, எதுக்கும் நீ கோவில்ல போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாப்பா” என்று ஜெயா சொல்ல,

“ம்... சரிம்மா” என்று சொன்னவன், வீட்டில் இருந்து வெளியேறி. கோவிலை நோக்கிச் சென்றான். கோவில் நுழைவாயில் பூட்டி இருப்பதை பார்த்தவன், " என்ன இது கோவில் பூட்டி இருக்கு? அப்போ இவங்க எங்க போய் இருப்பாங்க. இந்த கோவிலுக்கு வந்ததா தானே அத்தை சொன்னாங்க. ஒருவேளை வீட்டுக்கு திரும்பி போய் இருப்பாங்களா. சரி அக்காவுக்கு போன் பண்ணி பாப்போம்” என்று தனக்குள் எண்ணியவன் தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை தேடினான்.
 
Joined
Jan 15, 2026
Messages
65
"அட, நம்ம தான் போன் கொண்டு வரலையே. ம்... சரி நேரா வீட்டுக்கே போய் அவங்க வந்துட்டாங்களான்னு பாப்போம்” என்று எண்ணியவாரே கோவிலில் இருந்து திரும்பியவன் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்ட நிலையில், அங்கேயே நின்று சில நொடிகள் யோசித்தான்.

"ஒருவேளை இப்போ நம்ம வீட்டுக்கு போய், நம்ம சிஎம் அங்க இல்லைனா, வீட்டுல இருக்குற எல்லோரும் இவங்க எங்கன்னு பயந்து போய் டென்சன் ஆகிடுவாங்களே. ம்... இப்போ அவங்க வீட்டுக்கு போயிட்டாங்களான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்று நினைத்த நொடி அவன் பின் தலையை கட்டையைக் கொண்டு யாரோ தாக்கும் அதிர்வை உணர, அதே இடத்தில் மயங்கி சரிந்தவனை அள்ளி கொண்டு இருவர் கோவில் பின் பக்கம் இருக்கும் அறைக்குள் தூக்கி வீசினர்.

அதே அறையில் மகிழினி மயங்கிய நிலையில், சுயநினைவு இல்லாமல் ஓரமாக முடங்கி இருந்தவளைப் பார்த்து, அந்த இரண்டு நபர்களும் சிரித்து கொண்டே வெளியே வந்து, அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிய அக்கணமே இந்த தகவலை நாராயணனிடம் தெரியபடுத்தினர்.

"டேய்!! சூப்பர்டா. சொன்னது போலவே காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டீங்களே” என்று நாராயணன் இவர்களை பாராட்ட,

"ஐயா. இவங்களுக்கு நேரம் சரியில்ல போலங்க. அதான் நீங்க சொன்ன அந்த பையன், இந்த பொண்ணை தேடி வந்து தனியா கோவில் வாசல்ல சிக்கிகிட்டான். இவன் தனியா வந்ததால தான் நீங்க சொன்னது போலவே, நாங்க இவனை இந்த பொண்ணு இருக்குற ரூமுக்குள்ள தூக்கி வீச முடிந்தது. அதேபோல நீங்க சொன்ன மாதிரியே, இவங்க ரெண்டுபேர் கிட்டயும் போன் இருக்கான்னு தேடிப் பார்த்தோம் ஐயா. இவங்ககிட்ட அப்படி போன் எல்லாம் ஏதும் இல்லை” என்று அந்த நபர் சொல்ல,

"ஹா... அருமை அருமை. இப்போ நீங்க பண்ணது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க ரெண்டு பேருல யாராவது ஒருவர் மயக்கம் தெளிந்து எழுந்த பின்னாடி, இன்னொருவரை பார்த்து அவங்கள சுற்றி என்ன நடந்தது என்று பேசி தெரிஞ்சிக்க முயற்சி செய்யறதுக்கு முன்னதாக, நான் சொன்னபடி நீங்க நம்ம திட்டத்தை நிறைவேற்றனும்” என்று நாராயணன் கட்டளையிட்டார்.

இவர்களின் திட்டம் என்ன.?? வனிதா & நாராயணன் ஆகிய இருவரால், சிஎம் & கேவிக்கு ஏற்படபபோகும் தீமையும் நன்மையாக மாறப்போவது எப்படி?

மகிழினியும், கொடிவீரனும் நாராயணன், வனிதா விரித்த வலையில் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியாத சசி, அவர்கள் இருவரையும் காணாமல் தவித்து இருந்தாள்.

"என்ன சசி இது. மணி ஆகிகிட்டே இருக்கு. சித்ராவையும் காணோம். அவளை தேடிப்போன நம்ம கொடியையும் காணோமே. என்னமா இது. யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே” என்று புலம்பினார் ஜெயா.

"ஏம்மா சசி. நான் வேணா சித்ரா போன கோவிலுக்கு போய்ப் பாத்துட்டு வரவா?” என்று கேட்டார பாட்டி.

"நான் இப்போ அங்க இருந்து தான் வரேன். கோவில் வாசல் பூட்டி இருக்கு” என்று கீதா சொல்ல,

"என்னம்மா இது. பேசாம நான் சிவாக்கு போன் பண்ணி என்ன ஏதுன்னு பார்க்கச் சொல்லவா” என்று சசி கேட்டாள்.

"எனக்கு என்னமோ பயமா இருக்கு சசி. இந்தக கொடி வேற போனை விட்டுட்டு போயிருக்கான். நம்ம சித்ராகிட்டையும் போன் இல்ல. விடிந்தா உனக்கு கல்யாணம். இல்ல எனக்கு என்னமோ ரொம்ப படபடப்பா இருக்கு” என்றார் ஜெயா.

இப்படியாக இவர்கள் தங்களுக்குள் பதற்றதுடன் பேசி கொண்டு இருக்க, நேரம் வேகமாக கடந்தது.

அன்றைய தினம் நள்ளிரவு கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள சின்ன அறையில், மகிழினியும், கொடியும் மயங்கிய நிலையில் ஆளுக்கொரு மூலையில் சுருண்டு கிடந்த நிலையில், சில நிமிடங்கள் கடந்திருக்க, கொடிவீரனுக்கு கொஞ்சம் சுயநினைவு வந்தது. தலையில் வலியை உணரந்தவன், மகிழினியைத் தேடி வந்த தருணம், யாரோ தன்னை அடித்ததை நினைத்து பார்த்தான்.

‘என்னாச்சு நமக்கு? யாரு நம்மள அடிச்சாங்க? நம்ம எப்படி இங்க வந்தோம்?’ என்று தனக்குள் எண்ணியப்படி அவன் பார்வையை அந்த அறையை சுற்றி படரவிட்டவன் கண்களில் மகிழினி ஒரு மூலையில் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்ததும், பதறிய வண்ணம் அவள் அருகில் சென்றான்.

“கடவுளே! இவங்க எப்படி இங்க? என்னாச்சு இவங்களுக்கு? ஏங்க. உங்களைத் தான்ங்க. ஏங்க எழுந்திருங்க” என்றவன் மகிழினியின் கன்னத்தை தட்ட, அவளிடம் எந்த அசைவும் இல்லை. ‘கடவுளே! இவங்க எப்படி இங்க? என்னாச்சு இவங்களுக்கு’ என்று தன்னுள் புலம்பியவன், அந்த அறையில் கொட்டி கிடந்த தேங்காயை உடைத்து, அதில் இருந்த தண்ணீரை மகிழினியில் முகத்தில் தெளித்தான்.

மயங்கி இருந்தவளின் கண்கள் திறந்து, அவள் கண்முன் இருந்த கொடிவீரனைப் பார்த்து, “நான்... நீங்க...” என்று தன் காதின் பின்புறம் கையை வைத்தவள், "ஆ...” என்று வலி தாங்காமல் முகம் இறுகி, "நான், நம்ம எப்படி இங்க?” என்று கேட்டாள்.

அதே சமயம் அந்த அறையின் வெளியே நின்று இருந்த இருவரில் ஒருவன், "ஐயோ கடவுளே! இந்த அநியாயத்தை வந்து பாருங்க. இந்த ஊருல இப்படி ஒரு காரியமா? எங்க நடக்கும் இந்தக் கூத்து. ஊர் விட்டு ஊர் வந்து இவங்க பண்ற கேவலத்தை கேக்க யாருமே இல்லையா” என்று கத்தினான்.

"ஏங்க, வெளிய யாரோ கத்துற சத்தம் கேக்குது” என்றவன் இவர்கள் இருக்கும் அறையின் கதவை திறக்க, கதவு வெளியே பூட்டிருப்பதைப் பார்த்து, "என்னங்க இது, யாரோ கதவை வெளிய பூட்டி இருக்காங்க” என்று ஏதும் புரியாது குழம்பினான்.

"என்ன சொல்லுறீங்க? கதவை திறக்க முடியலையா? ஐயோ நம்ம எப்படிங்க இங்க இருக்கோம். இது என்ன இடம்?” என்று இவளும் குழம்பினாள்.

"ஏங்க நீங்க முதல்ல எங்க போனீங்க? நான் உங்களைத் தேடி தான் கோவிலுக்கு வந்தேன். ஆனா...” என்று கொடிவீரன் நடந்த விவரங்களை சொல்லும் முன்பு, இவர்கள் இருக்கும் அறையின் வெளியே நின்றபடி சிலர் கத்தும் சத்தம் கேட்டது.

மகிழினியும் கொடியும் கதவருகில் வந்ததும், வாசல் கதவை ஒருவன் திறக்க, இவர்கள் கண்முன் அந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் சிலர் கூடி இருக்க, கண்களில் கண்ணீருடன் மகிழினியின் பாட்டியும், கொடிவீரனின் அம்மா, அத்தை, சிறுவன் வேணு மற்றும் அக்கா என்று அனைவரும் நின்று இருக்க, அவர்கள் முகத்தில் கலவரம் நிறைந்திருந்தது.

தன் வீட்டாரை பார்த்ததும், கொடிவீரன் அவர்கள் அருகில் செல்ல, மகிழினியும் ஏதும் புரியாதவளாக அவன் பின்னே சென்றவள் எண்ணத்தில் ஏதோவொரு பயம்.

"தம்பி, என்னப்பா ஆச்சு? அம்மாடி சித்ரா என்னமா என்னாச்சு?" என்று பாட்டி கேட்க,

"இன்னும் ஆக என்ன இருக்கு. அதான் இந்த கோவிலோட புனிதமே கெட்டுப்போச்சே. இனி இந்த கோவில்ல எந்த ஒரு நல்லதும் நடக்காது போல. ஐயோ ஆண்டவா. இது என்ன எங்களுக்கு வந்த சோதனை” என்று ஒருவன், வனிதா எழுதித் தந்த வசனத்தை ஒப்பித்தான்.

"அக்கா, என்னாச்சு? ஏன் இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்க?” என்று கொடிவீரன் கேட்க,

"என்ன மருமகனே, நீங்க எப்படி இந்த ரூம்ல?” என்று கீதா புரியாமல் கேட்க,

"நான்...” என்று இவன் விவரத்தை சொல்வதற்குள், இவர்கள் அருகில் இருந்த ஒருவன், கொடிவீரன் சட்டைக் காலரை பிடித்து கோவிலுக்கு வெளியே உள்ள ஆலமரத்தின் அருகில் இழுத்து சென்றான்.

அவனின் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத மகிழினியும், கொடிவீரனின் குடும்பமும் பதற்றதுடன் கோவிலில் இருந்து வெளியே வந்தார்கள்.

"ஐயோ என் மகனை விடுங்க. என்ன பண்ணுறிங்க நீங்க? கொடிவீரா” என்று ஜெயா நெஞ்சை பிடித்துக்கொண்டு கத்த,

"தம்பி. ஏய் என் தம்பி மேல இருந்து கையை எடுங்கடா” என்று சசி ஆத்திரத்தில் கர்ஜித்தாள்.

"பாட்டி. ஏன் இவங்க எல்லாம் இப்படி நடந்துக்குறாங்க? என்ன நடக்குது இங்க?” என்று கண்கள் கலங்கிய நிலையில் கேள்வி கேட்ட மகிழினியின் கரங்களை பாட்டி இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

இருசக்கர வாகனத்தில் சிவாவும், ஆண்டாளும் வந்து இறங்க, இவர்கள் கூடி இருக்கும் இடத்தை நோக்கி, புழுதியைப் பறக்க விட்டபடி சிவப்பு நிற கார் வந்து நிற்க, அதில் இருந்து வனிதாவும், அவளின் தம்பி நாராயணனும் கெத்தாக வந்து இறங்கினார்கள்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top