• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 31

Joined
Jan 15, 2026
Messages
63
விவாதக் காதல் – 31


நேரம் வேகமாக கடந்த நிலையில், கடைக்குச் சென்ற கொடிவீரனும்... அவனின் அத்தையும் கையில் சில பொருள்களை எடுத்துக்கொண்டு வேணுவுடன் உள்ளே நுழைந்தார்கள்.

மகிழினி இவர்களுக்கு குடிக்க தண்ணீர் தந்தாள்.

"ஏன்டி ஜெயா, உன் மவனுக்கு என்ன புத்தி கெட்டு போச்சா?” என்று குதற்கமாகக் கேட்டார் கீதா.

"ஏன் அண்ணி? என்னாச்சு?”

"பின்ன என்னடி, நம்ம வீட்டு பொண்ணுக்கு நம்ம ஆயிரக்கணக்குல செலவு பண்ணி துணிமணி எல்லாம் எடுத்துக் கொடுத்தா, அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா, இவன் என்னமோ, மாப்பிளையோட மாமன் கூட பிறந்த பிறப்புக்கு எல்லாம் ஆயிரக்கணக்குல செலவு பண்ணி, பட்டுப்புடவை எடுக்குறான். இது எந்த ஊரு நியாயம்டி” என்று கடுகடுக்க,

"என்ன அண்ணி பண்ண சொல்லுறீங்க. நம்ம வீட்டுப் பொண்ணு கௌவரவமா வாழணும்னா, நம்ம இதெல்லாம் பண்ணித்தானே ஆகணும்” என்றார் ஜெயா.

“என்னமோ போங்க. இதெல்லாம் ரொம்ப அதிகம். ஐ டோன்ட் லைக் திஸ். பேட் ஹேபிட்” என்று தன் எதிர்ப்பை தெரிவித்தார் அவர்.

"அண்ணி உங்களுக்கே தெரியும்ல, இந்த கல்யாணம் நடக்க நாங்க எவ்வளவு பணம் செலவு பண்ணிருக்கோம்னு. இவ்ளோ பணம் செலவு பண்ணுற எங்களுக்கு, நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிளையோட அக்கா மாமா ஆசைப்படுற மாதிரி, அவங்க சொந்தங்களை திருப்திபடுத்த, நாங்க கொஞ்சம் செலவு பண்ணுறது தப்பு இல்ல அண்ணி” என்றார் ஜெயா.

"அத்தை நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. அதே போல இதெல்லாம் ஒரு விஷயம்னு நீங்க சசி அக்காகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதிங்க. அப்புறம் அக்கா ரொம்ப மனசு கஷ்டப்படும்” என்று கொடிவீரன் சொல்ல, அறையின் உள்புறம் அமர்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த சசியின் இதயம் ரணமாக இருந்தது.

அன்றைய தினம் மாலை நேரம். சிவாவின் அக்கா ஆண்டாளின் கணவன் நாராயணனின் அக்காவிற்கு மரியாதை செய்வதற்காக கொடிவீரனும்... ஜெயாவும் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் காத்திருக்க, சசியின் முகமோ இங்கு நடக்கும் எந்த விஷயங்களும் பிடிக்காமல் கோபத்துடன் காட்சி தந்தது.

“அக்கா இப்போ ஏன் முகத்தை இப்படி வச்சி இருக்க நீ?”

“எனக்கு இங்க நடக்குற எதுவுமே பிடிக்கல.”

“உனக்கு மாப்பிளையை பிடிச்சிருக்குல்ல. அது போதும் எங்களுக்கு. நீ கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம இரு.

“ஆமா அக்கா. ப்ளீஸ் முகத்தை அப்படி வச்சிக்காதிங்க” என்று மகிழினியும் கொடிவீரனுக்கு ஆதரவாக பேசினாள்.

“மாமா, ஜெயா பாட்டி உங்களை கூப்பிடுறாங்க” என்று வேணு சொல்லவும்...”ஆங் இதோ வரேன்.” என்ற கொடிவீரன், "ஏங்க. அநேகமா மாப்பிளையோட வீட்டுல இருந்து தான் கண்டிப்பா அவரோட மாமாவோட அக்கா வந்து இருப்பாங்க போல. நான் போய் அங்க அவங்கள கவனிக்குறேன். நீங்க அக்காவை அவங்க பாக்கணும்னு சொல்லும் போது மட்டும்... நான் வேணுகிட்ட சொல்லி அனுப்புறேன். அப்போ நீங்க அக்காவை வெளிய அழைச்சிட்டு வாங்க” என்று வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

"பாரு சித்ரா. இன்னும் இந்த கல்யாணமே முடியல. அதுக்குள்ள இவனும்... என் அம்மாவும் இந்த குடும்பத்துக்கு அடிமை போல நடந்துக்குறாங்க” என்று கடுப்பாக சொன்னாள்.

"விடுங்க அக்கா. பொண்ணு வீடுனாலே இப்படி அடங்கித்தான் போகணும் போல” என்று மகிழினி சசியை சமாதானம் செய்ய,

"இல்ல இல்ல. தாலி மட்டும் என் கழுத்துல ஏறட்டும். அப்புறம் இருக்கு பாரு, இவனுங்க போடுற ஆட்டதுக்கு நான் எப்படி பிஜிஎம் மாத்துறேன்னு மட்டும்” என்று சசி சொல்ல, மகிழினி சிரித்து கொண்டாள்,

"அத்தை அத்தை. உங்களை சசி அக்காவை அழைச்சிட்டு வெளிய வர சொன்னாங்க” என்று வேணு சொன்னதும். மகிழினி சசியை அழைத்து கொண்டு வெளியே வர, வீட்டு வாசலில் மேளச்சத்தம் முழங்க. கையில் பூ மாலையுடன் சிவாவின் அக்கா கணவன் நாராயணன் காத்து இருக்க,

ஜெயா, கொடிவீரன், மற்றும் சசியின் அத்தை என்று அனைவரும். சிவாவின் அக்கா கணவன் நாராயணனின் அக்கா வரும் காரை எதிர்பார்த்து, இவர்களை வரவேற்க அடிமைகளை போல நின்றிருப்பதை பார்த்து, மகிழினியின் முகமும் மாறியது.

நின்ற காரில் இருந்து இறங்கிய பெண்மணின் கழுத்தில் மாலை அணிவித்து, "அக்கா வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்து எத்தனை நாளாச்சு” என்று நாராயணன் தன் அக்காவை வரவேற்றார்.

“ஐயோ! இந்தப் பொம்பளையா, இந்த ஆளோட அக்கா? இவ உன்கிட்ட பிரச்சனை பண்ண போலீஸ் தானே” என்று சசி மகிழினியைக் கேட்க,

"ம்... ஆமா அக்கா. என் கேண்டீனைக் கேட்டு என்கிட்ட பிரச்சனை பண்ண போலீஸ் வனிதா தான் இவங்க” என்று சிறு அச்சதுடன் அவள் சொல்ல, கொடியின் முகமும் வனிதாவை கண்டதும் இருண்டுபோனது.

"வாங்க. உள்ள வாங்க அக்கா. ஏய் சிவா. என் அக்காவை உள்ள அழைச்சிட்டு வாடா” என்று அவர் சொன்னதும்... வனிதா கெத்தாக மாலையுடன் வீட்டுக்குள் நுழைந்து, நடுவீட்டில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டபடி திமிரின் உச்சத்தில் அமர்ந்து இருந்தாள்.

"அக்கா, இவங்க தான் என் மச்சான் சிவா கட்டிக்க போற பொண்ணு வீட்டு காரங்க” என்று சிவாவின் மாமா நாராயணன் சொல்ல, தயக்கத்துடன் கொடிவீரன் ஒரு வணக்கத்தை போட்டு வைத்தான்.

"அம்மாடி சித்ரா, சசியை அழைச்சிட்டு வந்து இவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லு மா” என்று ஜெயா சொன்னதும் சசியை அழைத்து கொண்டு வந்த மகிழினியை பார்த்த வனிதா முகம் மாற, தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூர வீசினாள்.

"டேய்! இவ இங்க என்னடா பண்ணுறா? இவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்? இவ வீட்டுல தான் நீங்க பொண்ணு எடுத்து இருக்கீங்களா” என்று வனிதா அதிகபட்ச கோவத்தில் உருமியவளை சமாதானப்படுத்தும் விதமாக,

"நான் இவங்களோட ஃப்ரண்ட் தாங்க. சொந்த காரங்க எல்லாம் இல்ல” என்று மகிழினி சொன்னதும்... வனிதாவின் கோவத்துக்கு என்ன காரணம் என்று புரியாமல் நாராயணன் குழப்பதுடன் நின்று இருக்க,

"இவ உங்களுக்கு யாரா வேணா இருக்கட்டும். ஆனா, இன்னும் ஒரு நொடி இவ இங்க இருந்தாலும்... இந்தக் கல்யாணம் நடக்காது” என்று வனிதா கோபத்துடன் சொன்னார்.

“ஏன் நடக்காது? அப்படி என்ன இந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் பிரச்சனை?" என்று கீதா கேட்க,

"அதெல்லாம் உங்ககிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்ல. இவ இருந்தா இந்த கல்யாணம் நடக்காது” என்று வனிதா மீண்டும் அழுத்தமாக சொன்னார்.

"என்னால இங்க எந்த மன சஞ்சலமும் வேண்டாம். நான் கிளம்புறேன், இந்த கல்யாணம் எந்த தடங்களும் இல்லாம நல்லபடியா நடக்கனும். வேணு நீ வா நம்ம கிளம்பலாம். பாட்டி வாங்க போகலாம்” என்ற மகிழினி, வேணுவின் கரங்களை பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற,

அவளின் கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்திய கொடிவீரன், "இவங்கள நாங்க எங்க வீட்டு கல்யாணத்துக்கு முறைப்படி அழைத்திருக்கோம். சோ இப்போ இவங்க எங்க வீட்டு பொண்ணு. அதனால உங்களோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக எல்லாம்... எங்க வீட்டுக்கு வந்த பெண்ணை இப்படி பாதியில வெளிய அனுப்ப இயலாது. சோ பெட்டர் நீங்க கசப்பான விஷயத்தை எல்லாம் மறந்துட்டு, ஆக வேண்டிய நல்ல காரியத்தை நடத்திக் கொடுத்துட்டு போங்க” என்று வனிதாவை பார்த்து சொன்னவனின் கைபிடியில், அவள் கரங்கள் அகபட்டு இருக்க, சிலையென அதே இடத்தில் நின்றுருந்தாள் அழகு தேவதை சித்ரமகிழினி.

"என்ன பேசுற தம்பி நீ. என் அக்காவை எதிர்த்து எல்லாம் நீ இப்படி பேச கூடாது” என்று உருமினான் நாராயணன்.


"சார். நான் எதிர்த்து எல்லாம் பேசல. நியாயத்தை தான் பேசினேன். உங்க அக்காவுக்கும் இவங்களுக்கும் என்ன வேணா பிரச்சனை இருக்கலாம். ஆனா, இன்னைக்கு இவங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட். நாங்க அவங்கள அப்டி எல்லாம் விட்டு தர முடியாது” என்றான் ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில்.
 
Joined
Jan 15, 2026
Messages
63
"ஏங்க என்னால இங்க பிரச்சனை வேணாம். நான் கிளம்புறேன்,நீங்க அக்கா கல்யாணத்தை நல்ல விதமா நடத்துங்க ப்ளீஸ்” என்றாள் கெஞ்சும் விதமாக.

"இருமா சித்ரா. அதான் என் மாப்பிள்ளை பேசிகிட்டு இருக்கான் இல்ல. நீ அமைதியா இரு” என்ற கீதாவைப் பார்த்து முறைத்தாள் வனிதா.

"மாமா, உங்க அக்காகிட்ட சொல்லுங்க. என்ன பிரச்சனையா இருந்தாலும் நம்ம அப்புறமா பேசிப்போம். உங்க அக்காவை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க” என்றான் மாப்பிள்ளை சிவா.

"ஒ... கதை அப்படி போகுதா. இன்னும் இந்த குடும்பத்துக்கு உன்னை கட்டியே கொடுக்கல. அதுக்குள்ள நீ இவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறியா” என்று வனிதா கோவப்பட.

"அக்கா. நீ ஏன் கோவப்படுற. அவன் ஏதோ அந்தப் பொண்ணு மேல இருக்குற பிரியத்துல அப்படி பேசுறான். நீ இப்போ சொல்லு. நான் என்ன பண்ணனும்? நீ ஓகே சொன்னா, இப்பவே கூட நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்” என்று நாராயணன் சொல்ல, கூடி இருக்கும் அனைவரின் முகத்திலும் கலவரம் நிறைந்து இருந்தது.

"மாமா என்ன பேசுறீங்க” என்று சிவா குரலை உசத்த,

வனிதா அவன் முகத்திற்கு முன் தன் கரங்களை நீட்டியவள், "நடக்கட்டும்... இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். நானே இந்த கல்யாணத்தை முன்ன நின்னு முடிச்சு வைக்கிறேன்” என்றவள், கண் இமைக்கும் நேரத்தில் வன்மத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

வனிதாவை தொடர்ந்து, நாராயணனும் கோவத்தோடு வெளியே போக, சிவா சூழ்நிலை கைதியாக நின்று இருந்தான்.

"ஹலோ பாஸ், என்ன நடக்குது இங்க? உங்க மாமா கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லுறாரு. என்ன எங்கள பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கு?” என்றாள் சசி கோபத்துடன்.

"சசிமா. அந்த ஆளு எல்லாம் ஒரு வெத்து வெட்டு. நீ அந்த ஆளு பூச்சாண்டிக்கு எல்லாம் கவலைப்படாத டார்லிங். உன் கழுத்துல நான் கட்டுற தாலி மட்டும் ஏறும்” என்று இவன் வாக்கியத்தை முடிக்கும் முன்,

"ம்... தாலி மட்டும் ஏறட்டும். அப்புறம் தெரியும் உங்க அக்கா மாமாவுக்கு நான் யாருன்னு” என்று கோபத்தில் முகம் சிவந்தாள்.

"அக்கா, நீ அமைதியா இரு. மாமா, நீங்க அக்கா பேசுனத எல்லாம் மனசுல வசிக்காதிங்க. நீங்க முதல்ல போய் உங்க மாமாவை சமாதானம் பண்ணுங்க” என்றான் அமைதியான முறையில்.

"சரி. நீங்க எதுவும் தப்பா நினைச்சிக்காதிங்க. நான் வரேன்" என்று சொன்னவன், இவர்கள் இருக்கும் வீட்டில் இருந்து வெளியேறினான்.

"அம்மா என்னை மன்னிச்சிடுங்க. எனக்கும் அவங்களுக்கும் ஒரு சின்ன பிரச்சனை. நான் இங்க இருந்தா அவங்க எதாவது உங்களுக்கு கஷ்டம் தர போறாங்க. அதனால நாங்க கிளம்புறோம்” என்றவள் வேணுவை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

கொடியும்... ஜெயாவும்... சித்ரா சொன்னதை கேட்டு குழப்பமடைய, "சித்ரா நில்லு. இப்போ என்னாச்சுன்னு நீ கிளம்புற. இங்க பாரு, நீ மட்டும் இப்போ இங்க இருந்து போனா, நானே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்” என்றாள் சசி.

"அக்கா என்ன பேசுறீங்க நீங்க? நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று கவலையாக சொன்னாள் மகிழினி.


"பின்ன என்ன, அந்த வனிதா எல்லாம் ஒரு ஆளா. அவ ஏதோ சொன்னான்னு நீ பாதியில் கிளம்புனா என்ன அர்த்தம்” என்று சசி தவிப்புடன் கேட்க,

"அம்மாடி சித்ரா. இங்க என்ன நடந்தாலும் நீ என் மக கல்யாணம் முடியும் வரை எங்கேயும் போகக்கூடாது” என்று கட்டாயமாக சொன்னார் ஜெயா.

"இல்லம்மா. என்னால இங்க தேவையில்லாத பிரச்சனை எதாவது வர போகுது” என்று மகிழினி பயம் கொண்டாள்.

"ஏங்க. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுங்க. மீறி வந்தா பாத்துப்போம்.” அவளை சமாதானம் பண்ணும் விதமாக சொன்னான் கொடிவீரன்.

"ஆமா சித்ரா. நீ கவலைப்படாத. கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்று மகிழினியின் பாட்டி சொன்னதும்... சற்று குழப்பமான மனநிலையோடு மகிழினி, சசியின் திருமணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தாள்.

அன்றைய தினம் மாலை நேரம்... நாளை நடக்க இருக்கும் சசியின் திருமணத்திற்காக ஆளுக்கொரு வேலைகளை செய்து கொண்டு இருக்க, வேணு ஒரு அறையில் பாட்டியின் கைபேசியில் விளையாடி கொண்டு இருந்தான்.

"சசி. உன் அம்மா எங்கடி” என்று கீதா கேட்க,

"அம்மா தம்பி கூட வெளிய போயிருக்காங்க அத்தை. ஆமா நீங்க எங்க போயிருந்திங்க?” என்று கேட்டாள்,

"இங்க பக்கத்துல என் புகுந்த வீட்டு சொந்தம் இருக்கு. அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தேன்” என்றார்.

"ஏன் சசி அக்கா. இங்க இருந்து உங்க கல்யாணம் நடக்கப்போற கோவில் எவ்வளவு தூரம் இருக்கு?” என்று மகிழினி கேட்க,

"அது என்ன, ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கு” என்றார் கீதா.

"ஏன் சித்ரா. எதுக்கு கேக்குற?” என்று சசி விசாரிக்க,

"எனக்கு மனசு சரியில்ல அக்கா. நான் வேணுவை அழைச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டு வரவா?” என்றாள் கவலையாக,

"தனியாவா. இரு சித்ரா. என் தம்பி வந்ததும்... நம்ம அவன் கூட போகலாம்” என்றாள் சசி.

"ஏய் இல்ல இல்ல, நாளைக்கு கல்யாணம் வச்சிக்கிட்டு நீ இப்போ வெளிய எல்லாம் போகக்கூடாது. இப்போ என்ன சித்ரா, நீ கோவில் போகனும் அவ்வளவு தானே. நீ என்கூட வா. நான் அழைச்சிட்டு போறேன்” என்றார்.

"ஆமாமா சித்ரா. நீ இவங்க கூட போயிட்டு வா. நான் சசிக்கு துணையா இங்கேயே இருக்கேன்” என்று பாட்டி சொல்ல, மகிழினி, வேணுவை அழைத்து கொண்டு. கீதாவுடன் கோவிலுக்கு சென்றாள்.

வழியெல்லாம் அமைதியாக வந்த மகிழினியை பார்த்த கீதா, "என்னமா. ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று விசாரித்தார்.

"எனக்கு என்னமோ கொஞ்சம் பயமாவே இருக்கும்மா. நான் இங்க கிளம்பி வந்து இருக்ககூடாதுன்னு நினைக்கிறேன்” என்றாள் மகிழினி கவலையாக.

"ஏன், அந்த வனிதாவை நினைத்து பயப்புடுறியாக்கும்... அவ எல்லாம் ஒரு ஆளா சொல்லு, அதுக்கெல்லாம் நீ பயப்புடாத” என்று கொடியின் அத்தை மகிழினிக்கு தைரியம் சொல்ல, வேணு இங்கு நடக்கும் எதையும் கண்டு கொள்ளலாம் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான்,

இவர்கள் மூவரும் சில நிமிடத்தில் கோவிலுக்குள் நுழைய, அங்கே நாராயணன் மற்றும் வனிதா ஆகிய இருவருக்கும்... மாலை மரியாதை என்று ஊரே அவர்களை சூழ்ந்து இருந்தது.

"என்னம்மா இது. கோவில்ல கூட இவங்களுக்கு தான் அதிகமான பவர் போல” என்று மகிழினி கேட்க,

"ஆமாம்மா. இப்போ எல்லாம் சாமி சன்னதியில் கூட, பணமும் கௌரவமும் படைத்தவனுங்க தான் அதிகாரம் பண்ணுறானுங்க” என்றார் கீதா பெருமுச்சுடன்.

"அத்தை எப்போ பாரு நீ கோவிலுக்கு தான் என்னை அழைச்சிட்டு வருவியா? வேற எங்காவது என்னை கூட்டிட்டு போ அத்தை” என்று வேணு அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

"வேற எங்க போகப் போற நீ. இந்த கிராமத்துல நீ பார்க்க வேற என்ன இருக்கப்போகுது” என்று மகிழினி இயல்பாக கேட்க,

"அப்போ நான் என்ன தான் பண்ணுறது. எனக்கு கடுப்பா இருக்கு அத்தை” என்று கண்கள் அழ ஆரம்பித்தான் வேணு.

"சரி சரிடா. இப்போ ஏன் அழற? இரு சித்ரா சாமி கும்பிட்டு வந்த பின்னாடி நான் உன்னை என் சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீ அங்க போய் உன் வயசு பசங்க கூட விளையாடு” என்றார் கீதா.

"அப்போ வாங்க இப்போவே போகலாம். என் அத்தை கோவிலுக்கு வந்தா மூணு மணிநேரம் இங்கேயே சுத்தி வருவாங்க. நீங்க வாங்க நம்ம போகலாம். அத்தை தனியா சாமி கும்பிடட்டும்” என்று வேணு அடம் பிடிக்க,

"டேய்! டிரம்ஸ்டிக் வாயா. ஏன்டா இப்படி கத்துற? இப்போ என்ன நீ விளையாடனும் அவ்வளவு தானே. இரு வரேன். அம்மாடி சித்ரா, நீ சாமி கும்பிட்டுட்டு இங்கேயே வெயிட் பண்ணு. நான் போய் இவனை என் சொந்தக்காரங்க வீட்ல சொல்லி விட்டுட்டு வரேன்” என்றார் கீதா.

"அம்மா, நீங்க இவனை அங்க தனியா எல்லாம் விட்டுட்டு வராதீங்க. கொஞ்சம் இவன் வாலுத்தனம் பண்ணுவான். அதனால நீங்க இவனை கையோடு இருந்து அழைச்சிட்டு, சசி அக்கா இருக்குற வீட்டுக்கு போயிடுங்க. நான் கொஞ்ச நேரம் கோவில்ல இருந்துட்டு வரேன்” என்று மகிழினி சொன்ன வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் கீதா, வேணுவை அழைத்து கொண்டு கோவிலில் இருந்து வெளியேறினார்.

மகிழினி கோவிலை சுற்றி வந்தவள், நாராயணன் மற்றும் வனிதா கண்ணில் படாமல் கோவில் பின்புறம் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் சென்று, அங்கே படிக்கட்டில் அமர்ந்தவள் சிந்தை முழுதும் நாளை சசிக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தை பற்றிய நினைவுகள் மட்டுமே நிறைந்து இருந்தது.

விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top