• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
59
விவாதக் காதல் – 29


கொடிவீரனும், அவன் அத்தையும் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தை நெருங்கி வந்தாள் மகிழினி.

"என்னங்க வேண்டுதல் எல்லாம் முடிஞ்சிதா? இப்பக் கிளம்பலாமா" என்றவனை கேள்வியாக பார்த்தாள் மகிழினி.

"என்ன அப்படி பாக்குறீங்க? போகலாம் தானே" என்று மீண்டும் கேட்டான்.

"நீங்க கோவிலுக்குள்ள போகலையா?" என கேட்டாள்.

"இல்லிங்க. பரவாயில்ல. நான் இன்னோரு நாள் வந்துக்குறேன். இப்போ நேரம் ஆகுது, வாங்க நம்ம கிளம்பலாம்" என்றவன் கோவில் வாசலை நோக்கி நடந்தான்.

"சார் ஒரு நிமிஷம்" என்று அழைத்தவள், தன் கையில் இருந்த கோவில் பிரசாதத்தை அவன் முன் நீட்டினாள்.

"எடுத்துக்கோங்க" என்றதும், மறுக்காமல் எடுத்து கொண்டான் கொடிவீரன்.

“நன்றிங்க” என்று வேணுவின் கையை பிடித்தபடி காரின் அருகில் சென்றவனை, பின் தொடர்ந்து வந்தார்கள், கொடியின் அத்தையும், மகிழினியும்,

"அத்த நாங்க கிளம்புறோம். நீங்க எப்போ கல்யாணத்துக்கு வருவீங்க?" என்றான் கேள்வியாக,

"உங்க கூட தான் மருமகனே வர போறேன்" என்று அத்தை சொன்னதும், மகிழினி, கொடியை குழப்பமாக பார்த்தாள்.

"எங்க கூடவா?" என்று கேட்ட கொடியின் பார்வையும் மகிழினியை உள் வாங்கி இருக்க,

"ஆமா, உங்ககூட தான்" என்ற அத்தை, வேகமாக சென்று கொடிவீரனின் கார் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

"ஏங்க, என் அத்த நம்ம கூட வரது உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க. நான் வேணா உங்கள அழைச்சிட்டு போய் விட்டுட்டு வந்து, அப்புறமா என் அத்தையை கூட்டிட்டு போறேன்" என்று இவன் கேட்டதும்,

"ஐயோ எதுக்கு ரெண்டு வேலை? நம்ம எல்லோரும் ஒன்னாவே போகலாம். எனக்கு எந்த சங்கடமும் இல்லை" என்றவள் வேணுவை அழைத்து கொண்டு காரின் பின் சீட்டில் ஏறபோக,

"இந்தாமா பொண்ணே! எனக்கு ரொம்ப இடுப்பு வலிக்குது. நான் ப்ரீயா உக்காந்துட்டு வரணும். அதனால அந்த பொடி பையன் என் கூட உக்காரட்டும். நீ முன்னாடி சீட்ல உக்காரு" என்று அவனின் அத்தை சொன்னதும், மகிழினியின் முகத்தில் பயம் தோன்றியதை பார்த்த கொடிவீரன்,

"என்னாச்சுங்க? எதாவது பிரச்சனையா?" என்றான் அவளின் பயத்திற்கான காரணம் புரியாது.

"ஹ்ம் ஹ்ம் இல்ல" என்று சொன்னவள், காரின் முன் சீட்டில் வந்து அமர்ந்து கொண்டதும், முதல் வேலையாக சீட் பெல்டை அணிந்து கொண்டு, கண்கள் மூடி இருக்கையில் சற்று பின் பக்கமாக சாய்ந்து கொண்டாள்.

"ஏங்க, என்னாச்சு? தலை வலி எதாவது இருக்கா?" என்று இவன் கேக்க,

"அதெல்லாம் இல்ல. பிளீஸ் வண்டியை எடுங்க. வழியில என்னை பார்த்து எல்லாம் ஏதும் பேசாதீங்க. பிளீஸ்” என்றவளை ஏதும் புரியாதவனாக பார்த்தான் கொடிவீரன்.

"என்னங்க, எதாவது ப்ரோப்ளமா?" என்று மீண்டும் வினாவினான்.

"இல்லிங்க. அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க கிளம்புங்க நேரம் ஆக போகுது" என்றவள் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

இவளின் செயலை புரியாதவனாக தன் காரை பக்கத்து கிராமத்தை நோக்கி விரட்டினான் கொடிவீரன். வழியெல்லாம் வேணுவும் கொடிவீரனின் அத்தையும் சகஜமாக பேசிக்கொண்டு வந்த நிலையில், அவள் மூடிய கண்களை திறவாமல் அமைதி காத்தாள் மகிழினி.

கொடிவீரனுக்கோ இவளின் செயல்கள் குழப்பதை ஏற்படுத்திய நிலையில், அவள் மனநிலை என்னவாக இருக்கும் என்ற யோசனையில் தன் காரை ஓட்டியவன், ரோட்டில் இருந்த மேடு பள்ளத்தை கவனிக்காமல் தன் காரை விரட்டிய நிலையில், சின்ன பள்ளத்தில் காரை இறக்கி ஏற்றயிருந்தான்.

"ஐயோ வீரா, பார்த்து." என்றவள் பதறிப்போய் கொடிவீரனின் இடது கரங்களை பற்றிக்கொண்டு அவன் தோள்களில் முகம் பதித்தவளின் செயலில், தன்னிலை மறந்து அதிர்ச்சியுற்ற நிலையில், சட்டென்று காரை ஓரமாக நிறுத்திநான்.

"ஏங்க என்னாச்சு? இங்க பாருங்க. என்னாச்சுங்க உங்களுக்கு" என்றவன் பயத்துடன் தன் தோள்களில் முகம் பதித்து இருந்த மகிழினியின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

"என்ன மருமகனே. என்னாச்சு இந்த பொண்ணுக்கு?" என்று கொடிவீரனின் அத்தை கேட்க,

அப்போது தான் கொடிவீரன் உணர்ந்தான், இவன் தோள்களில் மகிழினி மயங்கிய நிலையில் துவண்டு போய் இருக்கிறாள் என்று.

"ஐயோ. இவங்க மயங்கிட்டாங்க அத்த. தண்ணி, டேய் வேணு, பின் பக்கம் தண்ணி பாட்டில் இருக்கான்னு பாருடா" என்றதும்,

"அச்சோ என் அத்தைக்கு என்னாச்சு?" என்று பதறிய நிலையிலேயே வேணு தண்ணீர் பாட்டிலை கொடியின் அத்தையிடம் தந்தான்.

தன் தோளில் மயங்கிய நிலையில் சரிந்து இருக்கும் மகிழினியை, பட்டு போல அவள் இருக்கையில் அலுங்காமல் சாய வைத்தவன், அவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க,

ரோஜா மலரின் மேல் படர்ந்து இருக்கும் பணி துளிகளை போல, அவள் முகத்தில் அங்கங்கே தண்ணீர் துளிகள் பட்டதும், மகிழியின் விழிகள் பொறுமையாக மலர்ந்தது.

இவள் கண்களை திறந்ததும், தன் விழிகளுக்கு முன்னால் நின்று இருந்த கொடியின் முகம் இவள் கண்ணுக்கு அரைகுறையாக தெரிந்த நிலையில்,

"வீரா. வீரா உங்களுக்கு." என்றவள் அவன் கன்னங்களை தன் கரங்களில் ஏந்த, அப்போது தான் தெளிவாக தெரிந்தது கொடிவீரனின் முகம். தான் வேறொரு ஆணின் முகத்தை கண்டு, தன் கணவன் வீரனை எண்ணிக் கொண்டோம் என்ற உணர்வு சட்டென்று அவள் மூளையில் உதிக்க,

தன் கரங்களை கொடியின் கன்னத்தில் இருந்து தன் வசம் இழுத்து கொண்டாள் மகிழினி.

அவள் தொடுதலை கூட கண்ணியமாக எண்ணியவனோ, அவளின் மனநிலையை உணர்ந்து அவளிடம் தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டியதும், மகிழினி வேகமாக வாங்கி தண்ணீரை குடித்தாள்.

“சாரிங்க நான், நான் ஏதோ பயத்துல" என்று வார்த்தைகளை தொலைத்தவளாக தடுமாறி போனாள்,

“பரவாயில்லைங்க. சாரி எல்லாம் வேணாம். ஆனா, ஒன்னு மட்டும் சொல்லுங்க, நீங்க மாத்திரை எல்லாம் போடுறீங்களா இல்லையா" என்றான் தன் புருவம் உயர்த்திய தோரணையில்,

"அது. இல்ல. நான்." என்று தான் சொல்ல வந்த வாக்கியத்தை பிரித்து சொல்லிக்கொண்டு இருந்தாள் அவன் கண்களை பாராமல்.

"ஏங்க இப்படி பண்ணுறீங்க. அந்த மாத்திரை எல்லாம் போடாததால தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி மயக்கம் வருது. இனிமே இப்படி எல்லாம் பண்ணாதீங்க. அப்புறம் நான் கண்டிப்பா உங்க பாட்டிகிட்ட சொல்லிடுவேன்" என்றான் கண்டிப்பென்ற பெயரில் அன்பாகவே.

"இல்ல இல்ல. என் மேல சத்தியம். அப்படி எல்லாம் நீங்க பண்ணக்கூடாது. நான் ஊருக்கு போய் கண்டிப்பா மாத்திரை எல்லாம் கண்டினியு பண்ணுறேன். பிளீஸ் இப்போ வாங்க கிளம்பலாம்" என்றாள் சிறு அச்சதுடனே.

"அதான் இந்த பொண்ணே போகலாம்னு சொல்லிட்டா இல்ல மருமகனே. ம். சீக்கிரம் கிளம்பு. ஊருல எல்லோரும் உனக்காக தான் காத்து இருப்பாங்க" என்றார் கொடியின் அத்தை.

"அத்த நீங்க முன்னால வந்து உக்காருங்க. ஏங்க. நீங்க போய் பின்னாடி உக்காருங்க" என்றான் அவள் பயத்தை புரிந்து கொண்டவனாக.

"இல்ல அவங்க தான் இங்க உக்காந்தா இடுப்பு வலி வருமுன்னு சொன்னாங்களே" என்றாள் சின்ன தயக்கத்துடனே.

"அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க. நீங்க முதல்ல கீழே இறங்கி வாங்க. வந்து பின்னாடி சீட்ல உக்காருங்க" என்றவன் பேச்சை கேட்டு மகிழினி முன் சீட்டில் இருந்து இறங்கியவள்,

"ரொம்ப தேங்க்ஸ்ங்க. எனக்கு, எனக்கு காருல போகணும்னாலே பயம் தான். அதுவும் முன்னாடி சீட்ல நான் உக்காந்தா எனக்கு." என்றவள் அவளை மீறி கண்கள் கலங்கினாள்,

"புரியுதுங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க போய் பின் சீட்ல உக்காருங்க" என்றதும் மகிழினி காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, தன் அத்தையின் அருகில் அமர்ந்தபடி காரை, பக்கத்து கிராமத்தை நோக்கி கொடிவீரன் விரட்ட, வழியெல்லாம் மூடிய விழிகளை திறவாமல் அமைதி காத்தாள் மகிழினி.
 
Joined
Jan 15, 2026
Messages
59
சில நிமிடங்களில், கொடிவீரன் விரட்டிய கார், தன் அக்கா சசிக்கு திருமணம் நடக்க இருக்கும் பக்கத்து கிராமத்தில் இவர்களுக்காக ஏற்பாடு செய்த வீட்டை சென்றடைந்தது.

கொடியின் காரை பார்த்ததும், சசி வேகமாக அவன் அருகில் ஓடி வந்து "ஏன்டா இவ்வளவு நேரம்?" என்றாள் கோவமாக.

"வாடி கல்யாண பொண்ணே. எப்படி இருக்க?" என்று அத்தை விசாரிக்க. சசியின் பார்வை காரின் பின் சீட்டில் கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்த மகிழினியின் பக்கம் திரும்பியது.

"என்னடி, நான் உன்னை கேள்வி கேட்டா, நீ என்ன உன் நாத்தனார பார்த்துகிட்டு நிக்குற" என்றார் அத்தை.

"அக்கா, நேரம் காலம் தெரியாம இந்த அத்தை சிஎம்கிட்ட வாயை கொடுத்து, கன்னத்தை புண்ணாக்கிக்க போறாங்க" என்றான் சிறு கடுப்புடனே.

"என்னடா, சித்ராக்கு என்னாச்சு” என்று சசி கேட்க,

"அவங்க முன்னாடி உக்கார்ந்துட்டு வந்தாங்கக்கா. அப்போவே கொஞ்சம் பயந்த மாதிரி தான் இருந்தாங்க. நான் தான் ரோட்டுல பள்ளம் இருக்கறதை கவனிக்காம காரை அதுல இறக்கிட்டேன். என்ன நினைச்சாங்களோ தெரியல. வீரான்னு அலறிய நிலைமையில அப்படியே மயங்கிட்டாங்க" என்றான் மன வருத்தத்துடன்.

"சரி. நீ இப்படி வா" என்றவள், "சித்ரா, சித்ரா" என்று காரின் பின் கதவை திறந்தபடி மகிழினியை அழைக்க, வேணு வேகமாக இறங்கி கொடியின் அத்தையுடன் வீட்டுக்குள் ஓடின தருணம், தன் கண்கள் மலர்ந்த மகிழினியின் விழிகள் சோர்ந்த நிலையில் காட்சி தந்தது.

"என்னமா ஆச்சு?” என்று இவள் கேட்டதும்” ஸ்மைலி பொம்மையை போல அளவாக சிரித்தவள், "தூக்கம் வர மாதிரி இருந்துச்சு. அதான் அக்கா. மற்றபடி வேற ஒண்ணுமில்ல" என்றவள் காரில் இருந்து கீழே இறங்கினாள்.

"அக்கா நீ இவங்கள உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ. பாட்டி எங்க. நான் போய் அவங்கள பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு வரேன்" என்றான் தீர்க்கமான முடிவுடன்.

"என் பாட்டிகிட்ட நீங்க என்ன பேச போறீங்க?" என்றாள் கடுகடுத்த முகத்துடன்,

"ம். அத உங்க பாட்டி வந்து உங்கிட்ட கேக்கும்போது தெரிஞ்சிக்கோங்க" என்றவன், மாப்பிளை வீட்டில் இவர்களுக்காக ஏற்பாடு செய்து இருந்த வீட்டுக்குள் வேகமாக நுழைந்தான்.

"ஐயோ அக்கா. உங்க தம்பி என்ன ப்ராந்தா? பிளீஸ் அவரை நிக்க சொல்லுங்க. பாட்டிகிட்ட இவர் போய் எதாவது பேசி வச்சிட்டா, அவங்க என்னை நினைச்சி மேலும் கவலைப்படுவாங்க, பிளீஸ் அக்கா. உங்க தம்பியை நிக்க சொல்லுங்க" என்று கொஞ்சம் பயத்துடனே கெஞ்சலாகக் கேட்டாள்.

"சரி சரி பயப்படாத. வா, போய் அவனை தடுப்போம்” என்றவள் மகிழினியை அழைத்து கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

"அக்கா, பாட்டி எங்க? ஜெயா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க" என்று இவள் கேட்க,

"அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க. உன் பாட்டி அதோ அந்த ரூம்ல தூங்குறாங்க. நான் தான் ரொம்ப நேரமா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். சரி, நீ வா நம்ம ரூமுக்கு போகலாம்" என்று சசி, மகிழினியை அழைக்க,

"சித்ரா. இங்க வா” என்று கோவத்துடன் அவளின் பாட்டி இவளை அழைக்கும் குரலை கேட்டு மகிழினி பாட்டி இருக்கும் அறைக்குள் நுழைய, அங்கே பாட்டியின் முன்பு கொடிவீரன் தன் கைகளை குறுக்கே கட்டி கொண்டு, மகிழினியை பார்த்து முறைத்தபடி நின்று இருந்தான்.

"என்னப்பாட்டி, ஏன் இப்படி கோவமா கத்துறீங்க" என்றவள், கொடிவீரனை முறைக்க.

"என்ன சித்ரா. இந்த தம்பி சொல்றது எல்லாம் உண்மையா? ஏன் இப்படி எல்லாம் பண்ணுற? உனக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்ல மாட்டியா? இந்த தம்பி சொல்லி தான் எனக்கு இதெல்லாம் தெரியனுமா" என்று பாட்டி கேக்க,

"பாட்டி. இப்போ ஏன் இப்படி கத்துறீங்க? ஹலோ சார், எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்துட்டு, இப்போ வந்து என் பாட்டிகிட்ட நான் மாத்திரை போடாம, அடிக்கடி மயக்கம் போட்டு கீழே விழறேன்னு, போட்டு கொடுத்து இருக்கீங்களே. இது தான் நீங்க நட்புக்கும் சத்தியத்துக்கும் கொடுக்குற மரியாதையா" என்று சீறினாள் அதிக பட்ச கோபத்துடன்.

"என்ன? நீ அடிக்கடி மயக்கம் போட்டு விழறியா,?? என்ன சித்ரா சொல்ற? தம்பி, சித்ரா என்னபா சொல்றா? என்ன மயக்கம் மாத்திரைன்னு பேசுறா இவ. சித்ரா என்ன பேசுற நீ?” என்று பாட்டி குழப்பத்துடன் மகிழினியை கேள்வி கேக்க,

"அப்போ, நீங்க என்கிட்ட இவர் சொன்னதை வச்சி கோவப்படலையா?" என்று மகிழினி தயக்கமாக கேட்டவளின் பார்வை கொடியின் மேல் படர.

"ம். நானா இப்போவரை உங்க பாட்டிகிட்ட உங்கள பற்றி எதுவுமே சொல்லலைங்க. நீங்களா தான் உங்க செவ்விதழ் வாய் மலர்ந்து, உண்மையை உரைத்துள்ளீர்கள்" என்று இவன் சொன்னதும், மகிழினியின் விழிகள் தன் பாட்டியை பார்க்க அச்சப்பட்ட நிலையில், கொடிவீரனின் கண்களை மட்டும் அதீத கோபத்துடன் உள்வாங்கி இருந்தது.


Urs,

SK💙💛
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top