• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
45
விவாதம் – 22

மறுநாள் காலை எப்போதும் போலவே மகிழினியின் வீட்டுக்கு செல்ல, அங்கே வேணு மட்டும் பாட்டியுடன் அமர்ந்து இருந்தான்.

காலை உணவை சாப்பிட அமர்ந்த கொடியின் கண்கள் மகிழினியை தேடுவதை உணர்ந்த பாட்டி, “என்ன தம்பி? யாரை தேடுற?” என்று கேட்டார்.

“உங்க பேத்தி இல்லையா பாட்டி?”

“அவ பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய் இருக்கா” என்று பாட்டி சொன்னதும், அவசரமாக இரண்டு இட்லியை விழுங்கியவன், "வேணு என்கூட வெளிய வரியா?" என்று கேட்டான்.

"ம் வரனே" என்றதும், கொடி வேணுவை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றான்.

"வேணு உன் அத்தை இந்த கோவிலுக்கு தானே வந்து இருப்பாங்க" என்று கேட்டான்

"ம்..... ஆமா" என்றான் வேணு

"எங்க அவங்கள காணோம்" என்று தன் பார்வையை அலைய விட்டான் கொடிவீரன்.

"அத்த எப்போ கோவிலுக்கு வந்தாலும், தெப்பக்குளத்துல தான் போய் உக்காந்து இருப்பாங்க" என்று வேணு சொன்னதும், அவனை அழைத்து கொண்டு தெப்பக்குளத்தின் அருகில் சென்றவன் கண் முன், மகிழினி தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து, குளத்தில் உள்ள மீன்களுக்கு எல்லாம் பொறி போட்டு கொண்டு இருப்பதை பார்த்தான்.

சத்தம் இல்லாமல் அவள் அருகில் சென்று நின்றவனின் பிம்பம், குளத்தின் உள் இருக்கும் நீரில் பிரதிபலிக்க, மகிழினி தலை தூக்கி பார்த்தவளின் விழிகளுக்குள் நிறைந்து இருந்த கொடிவீரன்

"ஏங்க என்ன தான் உங்க பிரச்சனை? நான் உங்க ப்ரண்ட்னு நீங்க தானே அன்னைக்கு சொன்னிங்க/ இப்போ ஏன் சின்ன விஷயத்துக்கு கூட இவ்ளோ ரியாக்ட் பண்ணுறீங்க" என்று புரியாமல் கேட்டான்.

"எது சின்ன விஷயம்... நீங்க என் அண்ணனுக்கு தனியா பத்திரிக்கை தருவிங்க. என் பாட்டிக்கு தனியா பத்திரிக்கை தருவிங்க. ஆனா, எனக்கு ஒரு பத்திரிக்கை தரணும்னு உங்களுக்கு தோணல இல்ல" என்று கோவமாக கேட்டாள் மகிழினி

"இப்போ என்னங்க? உங்களுக்கு ஒரு தனி பத்திரிக்கை தரணும் அவ்வளவு தானே. சரி தரேன்" என்றான் கொடிவீரன்.

"ப்ச் ஹலோ சார் பிரச்சனை தனி பத்திரிக்கை இல்ல” என்று மீண்டும் சீறினாள் மகிழினி

"பின்ன” என்று கொடி புருவம் உயர்த்தினான்

"நமக்குள்ள எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும், நான் உங்கள என்னோட நண்பனா தான் பார்த்தேன். ஆனா, நீங்க கூட என்னை அப்போ இந்த ஊர் உலகம் ஒதுக்கி பார்ப்பது போல தான் பாக்குறீங்க இல்ல" என்று மகிழினி கேட்கும் கேள்விக்கு உண்டான பதில் தெரியாமல் கொடிவீரன் குழம்பிய வண்ணம் நின்று இருந்தான்.

“ஏங்க... சத்தியமா நீங்க சொல்றது எனக்கு புரியல. நீங்க என் அக்கா கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்... இது என்னோட அம்மா, அக்காவின் ஆசை. பிளீஸ் நீங்க வரதுக்கு நான் இப்போ என்னங்க பண்ணனும்?”

“ஓ... உங்க அக்காவும், அம்மாவும் மட்டும்தான் ஆசைப்படுறாங்க இல்ல. நான் சசி அக்கா கல்யாணத்துக்கு வரணும்னு, உங்களுக்கு அப்போ ஆசை இல்ல. அப்படித்தானே?” என கோபமாகக் கேட்டாள்.

“ஏங்க. நீங்க எப்பவும் இப்படிதானா? இல்ல என்கிட்ட மட்டும் இப்படி இருக்கீங்களா?”

“எப்படி இருக்காங்க? நீங்க சொன்ன மாதிரி அழு மூஞ்சி, சிடு மூஞ்சி போல இருக்கேனா.”

“ஐயோ இல்லிங்க. அன்னைக்கு நான் ஏதோ கடுப்புல அப்படி சொல்லிட்டேன். உண்மைக்கே நான் உங்கள அப்படி சொல்லி இருக்க கூடாது. ஐஆம் ரியலி சாரி.”

“ம்..... இருக்கட்டும்... ஆமா. நீங்க என்ன காலையிலேயே கோவிலுக்கு வந்து இருக்கீங்க?”

“உங்கள பார்க்க தான் வந்தேங்க.”

“என்னையா” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“ம்ங்க.”

“நான் இங்க இருப்பேன்னு உங்களுக்கு யாரு சொன்னது?”

“வேணு தான். ஐயோ வேணு என்கூட வந்தான். அச்சோ பயபுள்ளயை நான் தொலைச்சிட்டேன் போல” என்று பதற்றமானான்.

“ஏங்க ஏங்க இருங்க. ஏன் பதறுறீங்க? அவனுக்கு இந்த கோவில் அத்துப்படிங்க. பிரசாதம் கொடுக்குற இடத்துல தான் நின்னுகிட்டு இருப்பான்.”

“ஒஹ்... கூட்டிட்டு வந்த பயல காணோம்னதும் கொஞ்சம் பயந்துட்டேன்.”

“சரி. நீங்க போங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்.”

”ஏங்க இன்னும் வேண்டுதல் முடியலையா?”

“இல்ல. நான் எப்பவுமே கோவிலுக்கு போனா. அங்க இருக்குற தெப்பக்குளத்துல கொஞ்ச நேரம் உக்காந்துட்டு தான் வருவேன்.” என்றாள் அவள்.

“ஏன் அப்படி?”

“ம்..... அது...”

“சரி விடுங்க. எதாவது பர்சனல்னா வேணாம்...”

“அப்படி எல்லாம் இல்ல. என்னை பொண்ணு பார்க்க வரும்போது, என்னோட வீரா இந்த மாதிரி இடத்துல தான் என்கூட நின்னு பேசினாரு. அந்த நியாபகம்...”

“ஓஹோ. ஆனா,” என்று நிறுத்த,

“ம்... என்ன?” என்று கேட்டாள்.

“இல்லிங்க ஒண்ணுமில்ல.”

“பரவாயில்ல கேளுங்க.”

“உங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தானே?” சந்தேகமாகக் கேட்டான் கொடிவீரன்.

“ம்... ஆமா.”

“நீங்க கோவப்பட்டாலும் பரவாயில்ல. சுரேஷ் சொன்னான் உங்களுக்கு கல்யாண முடிந்த முதல் நாளே அவரு... சாரி.” என்றான்.

“ம்... புரியுது. நீங்க கேக்க வந்ததை கேளுங்க.”

“எப்படிங்க ஒரு நாள் கூட அவரோட வாழாமல், உங்களுக்கு அவர் மேல இப்படி ஒரு பிரியம்?” அவள் காதலை எண்ணி வியந்து கேட்டான்.

“ம்... நீங்க யாரையாவது காதல் பண்றிங்களா?”

“ஐயோ அதெல்லாம் இல்லிங்க. நம்ம வாய்கு யாரும் சேர்ந்தா போல அரைமணி நேரம் கூட என்கிட்ட பேசமாட்டாங்க” என்றான் அவசரமாக.

“ம்... சரி. இந்த க்ரஷ்னு சொல்லறாங்களே அப்படி எதாவது?”

“ம்... இருக்கு. இரண்டு வருடம் முன்ன, எங்க சொந்த ஊருல ஒரு முறை ஒரு பொண்ணை பார்த்தேன். இல்ல இல்ல அவங்க கண்ண மட்டும் பார்த்தேன். என்னமோ தெரியல. அந்த கண்ணழகியை மீண்டும் பார்த்தா, அவங்களுக்கு கல்யாணம் முடியலைன்னா, முறைப்படி பொண்ணு கேட்டு அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை.”

“ம்... ஊர் பெயர் தெரியாத பொண்ணையே உங்களால இன்னும் மறக்க முடியல. பட், என் கழுத்துல மூணு முடிச்சு போட்ட நொடியில இருந்து, என் வீரா தான் இனி எனக்கு எல்லாமேன்னு, நான் அந்த தாலியோட மகிமையை உணரும் முன், என்னைக் காப்பாற்றி, அவர் உயிரைக் கொடுத்த என் புருஷனை நான் எப்படிங்க மறக்க முடியும்?” என்று கேட்டாள் சித்ரமகிழினி.

“ஐயோ. அவர நீங்க ஏன் மறக்க கூடாதுன்னு எல்லாம் நான் கேக்கலங்க. எப்படி இந்த அளவுக்கு உங்களுக்கு அவர் மேல அன்பு இருக்குன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். சரி நீங்க என்ன காலமெல்லாம் இப்படியே இருந்துடுவீங்களா என்ன?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.

“இருந்தா என்ன?? அது தப்பா??”

“தப்பு சரி எல்லாம் அவங்கவங்க பார்வையை பொறுத்தது. அடுத்தவங்க கண் குறைபாடுக்கு, நம்ம மூக்கு கண்ணாடி அணியக்கூடாது.
நான் என்ன கேக்குறேனா, உங்களுக்கு உங்க பாட்டி இன்னோரு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறாங்க இல்ல. நீங்க ஏன் அதை பற்றி யோசிக்கலன்னு கேட்டேன்.”

“அதுக்கெல்லாம் அவசியம் இல்லைன்னு தோணுச்சு. இன்னும் கேட்டா ஜெயா அம்மா சொன்னது போல, என் வீரன் கட்டின தாலியை நான் கழட்டிட்டேன். ஆனா, இனி பொட்டு எல்லாம் வச்சுக்கணும்னு தான் நானும் முடிவு பண்ணிருக்கேன். உங்களோட கண்டிப்பான அறிவுரை. ஜெயா அம்மாவோட அன்பான அரவணைப்பு, சசி அக்காவோட கிண்டல் பேச்சுன்னு, நானும் கொஞ்ச நாள் என்னை மாத்திகிட்டு தான் இருக்கேன். அதுக்காக தான் அன்னைக்கு நான் உங்களுக்கு மஞ்ச ரோஜா பூவை கொடுத்தேன். அந்த உரிமையில தான், ஏன் எனக்குன்னு நீங்க தனி அங்கீகாரம் தந்து, சசி அக்கா கல்யாணத்துக்கு என்னை தனியா இன்வைட் பண்ணலன்னு கேட்டேன். மற்றபடி உங்க மனச கஷ்டப்படுத்தணும்னு எல்லாம் நினைக்கல.”
 
Joined
Jan 15, 2026
Messages
45
ம்... நல்லா பேசுறீங்க. ஆனா, திடீர்னு சண்டைக்கு வருவீங்க போல”

“கண்டிப்பா சண்ட போடுவேன். அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம்.”

“ஓ... அப்ப சேம் டூ யூங்க” என்றான் கதிர்.

“அப்படினா?” என புரியாது கேட்டாள்.

“கண்டிப்பா நானும் சண்டை போடுவேன்னு சொன்னேன்.”

“ம் வெயிட்டிங் பாஸ்.”

“பாருடா.” என்றான் கிண்டலாக.

“சரி இன்னைக்கு நீங்க ஊருக்கு போகணும் தானே?”

“ம்... ஆமாம்.”

“அப்போ நேரத்தோட வேணுவை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க.”

“அப்போ நீங்க?”

“நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன்.”

“ம்ம்...” என்றவன், “ஹான் அப்புறம்” என்றான் திடீரென்று.

“சொல்லுங்க?”

“நேத்து நான் எடுத்துட்டு வந்த துணி எல்லாம் பார்த்திங்களா?”

“ம்... ஆமா.”

“உங்களுக்கு அந்த புடவை பிடிக்கலைனா நீங்க மாத்திக்கோங்க. அது கூடவே பில் இருக்கு.”

“இல்ல. உங்க செலக்சன் நல்லா தான் இருந்துச்சு. நான் அதையே எடுத்துக்குறேன்.”

“அப்போ நீங்க நம்ம கல்யாணத்துக்கு வருவீங்க இல்ல?”

“என்ன?”

“அதாங்க. நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வருவீங்க தானே?”

“முயற்சி பண்ணுறேன்.”

“அதெல்லாம் செல்லாதுங்க. நீங்க கண்டிப்பா வரணும்.”

“ம்... பாப்போம்.” என்றாள் அவள்.

“சரிங்க நீங்க பார்த்து வீட்டுக்கு வாங்க நான் வேணுவை அழைச்சிட்டு வீட்டுக்கு போறேன். அப்புறம்...”

“வேற என்னங்க” என்றாள் அலுப்பாக.

“சாரி.”

“இது எதுக்கு.?”

“அன்னைக்கு உங்கள நான் சிடு மூஞ்சின்னு சொன்னதுக்கு.”

“இட்ஸ் ஒகே. ஹாங் நானும் சாரி.” என்றாள் மகிழினி.

“இது எதுக்கு?” என்று அவன் கேட்க,

"ஹான், அன்னைக்கு என் அத்த உங்க காது மேல ஒன்னு வச்சதுக்கு" என்று இடையில் வந்து வேணு சொன்னதும், மகிழினி வாய் விட்டு சிரிக்க, அவளை கண்டு கொடியின் முகம் மாறிப்போனது.


“சாரிங்க கோவிச்சிக்காதீங்க” என்று சொன்னவள் மீண்டும் சிரித்து கொண்டே கையில் இருந்த பொரியை குளத்தில் வீச, அவளின் அழகான வதனம், புன்னகையால் மேலும் பேரழகாக மாறியது

"நீங்க இப்படி சிரிச்ச முகத்துடனே இருக்கணும்னா, நான் உங்ககிட்ட அடி வாங்கிகிட்டே இருக்கனும் போல" என்று கொடி சொன்னதும், மகிழினி அவனை ஆழ்ப்பார்வை பார்க்க, அவளின் அக்கண்கள் இவனை ஏதோ செய்தது.

"அதுதான் விதினா, கண்டிப்பா நீங்க என் அத்தைகிட்ட காலமெல்லாம் அடி வாங்குவிங்க தான் சார்" என்று வேணு சொன்னதும் மகிழினி வேணுவை பார்த்து முறைத்து, “டேய் நீ முதல்ல இவர்கூட கிளம்பிப் போ" என்று அதட்டினாள்.

"சரிங்க. நாங்க கிளம்புறோம். நீங்க பார்த்து வாங்க" என்றான்

"ம்...” என்று மகிழினி சொல்ல.

"ஹேய் சித்ரா! வாட் எ ப்ளசன்ட்சர்ப்ரைஸ்" என்று அழைத்த மகிழினியின் தோழி மீனா அவளைக் கட்டி அணைத்து நட்பு பாராட்ட, கொடியும் வேணுவும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அதே தருணம்

"டேய் கே.வி நீ எப்படிடா இந்த ஊர்ல" என்று கொடி வீரனை கட்டி அணைத்து கொண்டான் அவனின் நண்பன் ஜீவா

"மீனா.!! எப்படி இருக்கடி?" என்று மகிழினி தன் தோழியை கட்டி அணைத்து கொண்டாள்.

"டேய் ஜீவா" என்று கொடி நட்புடன் தன் நண்பனை கை குலுக்கினான்.

"என்ன இது உங்க ரெண்டு பேருக்கும் இவங்க ரெண்டு பேரையும் தெரியுமா" என்று வேணு கேட்க, ‘அதானே’ என்பதாய் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்னடா நீ எப்போ கிராமத்துல இருந்து இங்க வந்த” என்று ஜீவா கேட்டான்.

“போன மாசம் தான் மச்சான். எனக்கு இங்க தான் வேலை கிடைச்சு இருக்கு. அதான் இந்த ஊருக்கே வந்துட்டேன்.”

“என்னடா கல்யாணம் எல்லாம் முடிஞ்சிடுதா? ஏன் மீனா, அப்போ என் நண்பன் கே.வியோட மனைவியை உனக்கு ஏற்கனவே தெரியுமா? என்கையில், மகிழினி விழிக்க,

“ம்... நான், சித்ரா எல்லாம் ஒண்ணா தான் டிரைனிங் போனோம். ஆனா, என்ன இவள நான் பார்த்து 2 வருஷம் இருக்கும். என்னடி கல்யாணம் எல்லாம் முடிஞ்சுடுதா? இவர் தான் உன்னோட கணவரா? ஹாய் ப்ரோ” என்று நிறுத்தாது பேச, கொடிவீரன் அதிர்ந்து நின்றான்.

“ஏய்! இரு இரு நீயாக லூசு போல எதாவது பேசாத. இவரு என் அண்ணனோட நண்பன். எனக்கும் தான். மற்றபடி நீ சொல்ற மாதிரி ஏதும் இல்ல” என்றாள் மகிழினி.

“ஓ... சாரி சிஸ்டர். நீங்க இங்க ஜோடியா இருந்ததும் நீங்க கபுள்ஸ்னு நினைச்சிட்டோம்.”

‘நீங்க நினைசிட்டு போயிடுவீங்கடா. நீங்க போன பிறகு இவங்க ஊரப்போட்டு என்னை தானே அடிப்பாங்க’ என்றான் மனதினுள்.

“சார் உங்க Mind Voice எனக்கு கேட்டுடுச்சு” என்றான் வேணு.

“டேய், சும்மா இருடா.” என்று கடுப்பாக சின்னக்குரலில் எச்சரித்தான் கொடிவீரன்.

விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top