• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 19

Joined
Jan 15, 2026
Messages
39
💙விவாதக் காதல்💙

விவாதம் - 19

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரி வனிதா, மகிழினியை பார்த்து கோவமாக பேசிக்கொண்டு இருந்தவள், சட்டென்று மகிழினியை அடிக்க கை நீட்டினாள்.

தன்னை அடிக்க வந்த வனிதாவின் கரங்களை தடுத்த மகிழினி, "என்ன அராஜகம் இது உங்கள எல்லாம் தட்டி கேக்க ஆள் இல்லைனு நினைக்கிறிங்களா" என்று மகிழினி கோவமாக வனிதாவை கேள்வி கேட்டாள் .

"ஆமா அராஜகம் தான். இங்க நான் வைக்கிறது தான் சட்டம். நீ யாருடி என்னை எதிர்த்து கேள்வி கேக்க?" என்று வனிதா கடுங்கோபத்துடன் மகிழினியை முறைத்தாள்.

"நீங்க உங்க ஸ்டேஷன்ல அராஜகம் பண்ணுங்க. இல்ல என்ன வேணா பண்ணுங்க. ஆனா, என்னை ஏங்க இங்க அழைச்சிட்டு வந்து வம்பு பண்ணுறீங்க" என்று மகிழினி கேட்டாள்

"ஏன்னு உனக்கு தெரியாதா? ஏன்டி அப்படி என்ன பொல்லாத கேன்டீன் வச்சி நீ நடத்துற? அத காலி பண்ண சொன்னா. பண்ண மாட்டேன்னு பிலிம் காட்டுறியாமே" என்று வனிதா போலீஸ் ஸ்டேஷன் மேசை மேல் அமர்ந்து கொண்டு திமிராக மகிழினியை அதட்டினாள்

"நான் ஏங்க காலி பண்ணனும்நான் அந்த கேன்டீன் இருக்குற இடத்துக்கு லீஸ் பணம் கட்டி இருக்கேன் என்னால எல்லாம் அந்த இடத்தை காலி பண்ண முடியாது" என்று மகிழினி திட்டவட்டமாக சொன்னவள் காதின் அருகில் சென்ற வனிதா

"ஏய்.! உன்னை அந்த இடத்தை விட்டு காலி பண்ண வைக்க முடியாதுன்னு நினைக்கிறியா நீ" என்று திமிராக வனிதா கேட்டாள்

"அதிகாரத்துக்கு எல்லாம் என்னால அடி பணிந்து போக முடியாதுங்க.உங்கனால என்ன பண்ண முடியுமா பண்ணுங்க. நான் இத சட்டப்படி டீல் பண்ணிக்கிறேன்" என்று மகிழினி சொல்ல,

"ஏய்! உனக்கு புருஷன் இல்ல தானே. அப்போ அங்க கேன்டீன் நடத்துற இடத்துல, நீ பிராத்தல் தொழில் பண்ணுறன்னு, உன் மேல கேஸ் போட்டு இப்போவே உன்னை உள்ள தூக்கி வைக்கிறேன். பாக்குறியா?" என்று வனிதா கேவலமாக பேசி முடிக்கும் முன்பு,

மகிழினியின் கரங்கள் வனிதாவின் கன்னங்களை பதம் பார்க்க இந்த காட்சியினை மகிழினியை தேடிக்கொண்டு ஸ்டேஷன்கு வந்த சசியும் கொடியும் தூரத்தில் இருந்து பார்த்து குழம்பி போயினர்.

"ஐயோ! என்னடா இது. ஏன் சித்ரா அந்த பெண் போலீசை அடிக்கிறாங்க" என்று சசி பதற்றதுடன் கேட்க,

"நான் தான் சொன்னேனே. இந்த பொண்ணு இப்படி தான். சரி வா உள்ள போய் என்ன ஏதுன்னு கேப்போம்" என்ற கொடி தன் அக்காவை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன்க்குள் சென்றான்.

"ஏய். உனக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தா என் மேல கை வைப்ப". என்று மேசையை தட்டிய வனிதா பல்லை கடித்துக்கொண்டு. மகிழினியின் கன்னத்தில் ஒரு அறை விட்ட வேகத்தில், கீழே விழுந்தவளின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்ததை பார்த்து, சசியும், கொடியும் பதறி போனார்கள். என்ன ஏது என்று விசாரிப்பதற்குள், சில கேமராக்கள் இங்கே நடந்த நிகழ்வுகளை படம் பிடிக்க அரம்பித்தது.

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல், காவல்துறை பெண் அதிகாரி வனிதா குழம்பி போய் நின்று இருக்க,

"பார்த்திங்களா நேயர்களே. போலீஸ் ஸ்டேஷன்னில் அராஜகம். காக்கி சட்டை போட்டுக்கிட்டு பெண் போலீஸ் ரவுடித்தனம் பண்ணுறாங்க" என்று ஒரு பெண் நிரூபர் கேமராக்கு முன் நின்று பேட்டி தந்து கொண்டு இருக்க, கொடியும், சசியும் நெற்றியில் இரத்தகாயத்துடன் நின்று இருந்த மகிழினியின் அருகில் சென்றார்கள்.

"என்ன சித்ரா என்ன பிரச்சனை இங்க" என்று சசி மகிழினியை விசாரிக்க,

"அக்கா. அவங்க நெத்தியில ரத்தம் வருது பாரு. இந்தா இத அவங்ககிட்ட கொடு" என்று தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுத்து, தன் அக்கா கையில் கொடுத்தான் கொடி.

இவர்கள் யாரையும் கண்டு கொள்ளாத மகிழினி. சசி தந்த கைக்குட்டையை பொருட்படுத்தாமல், கோவமாக எழுந்தவள் வனிதாவின் அருகில் சென்றாள்

"ஏய்! இங்க என்ன நடக்குது? கான்ஸ்டபிள் மீடியா ஆளுங்கள யாரு உள்ள விட்டது? இவங்கள எல்லாம் வெளிய போக சொல்லுங்க" என்று வனிதா ஆக்ரோஷமாக கத்தினாள்.

"இவங்க எல்லாம் நீங்க சொன்னா போக மாட்டாங்க மேடம். நான் சொன்னா தான் போவாங்க. இப்போ சொல்லுறேன் பாருங்க" என்ற மகிழினி இயல்புக்கு மாறாக காட்டமான குரலில் பேச, அவளை பார்த்து. கொடியும் அவனின் அக்கா சசியும் ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பி போய் நின்றனர்.

"என்ன மேடம் இங்க என்ன தான் பிரச்சனை? எதுக்காக இந்த லேடி போலீஸ், உங்கள ரத்தம் வர மாதிரி அடிச்சாங்க?" என்று பத்திரிகை நிபுணர் மகிழினியை பார்த்து கேள்வி கேட்டார்.

"நான் ரெண்டு தெரு தள்ளி வீரன் கேன்டீன் சர்வீஸ் ரன் பண்ணிக்கிட்டு வரேங்க. அந்த இடத்தோட ஓனர் வயசான முதியவரு. அவருகிட்ட நான் அந்த இடத்தை 5 வருஷ லீசுக்கு பணம் தந்து அக்ரீமெண்ட் போட்டு வாங்கியிருக்கேன். டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட பக்கவா தான் இருக்கு. ஆனா, இந்த லேடி போலீஸ் அவங்க ஹஸ்பண்ட் காம்ப்ளக்ஸ் கட்டுறதுக்கு, நான் கேன்டீன் வச்சி நடத்துற இடம் தான் வேணும் சொன்னாருன்னு, எங்கள அந்த இடத்தை காலி பண்ண சொல்லி ஒரே டார்ச்சர் பண்ணுறாங்க.”

“எங்கனால அந்த இடத்தை காலி பண்ண முடியாதுன்னு, நானும் எத்தனை முறையோ நல்ல விதமா சொல்லி பாத்துட்டேன் ஆனா, இவங்க அதெல்லாம் கேக்காம, எப்போ பாரு என்கிட்டயே வம்பு பண்ணுறாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, என்னை ஆள் வச்சி இவங்க இடத்துக்கு தூக்கிட்டு வர ஏற்பாடு பண்ணிருக்காங்க. ஆனா, என்னோட நல்ல நேரம். என் அண்ணனோட நண்பன் அன்னைக்கு என்னை காப்பாத்திட்டாரு. ஆனா, என்னை காப்பாத்த போய் அவருக்கும் ரத்தகாயம் எல்லாம் ஏற்பட்டுச்சு. இவ்ளோ பெரிய கேவலத்தை எல்லாம் பண்ணது மட்டும் இல்லாம, இவங்க தான் அதெல்லாம் பண்ணினேன். இன்னும் பண்ணுவேன்னு என் கேன்டீன்கு வந்து என்கிட்டயே சவால் விடுறாங்க. எங்க வாழ்க்கையை எங்கள வாழ விடுங்கன்னு சொன்னதுக்கு, என் மேல பிராத்தல் கேஸ் போட்டு உள்ள தூக்கி வைப்பேன்னு மிரட்டுறாங்க" என்று மீடியா முன் நின்று தைரியமாக பெண் காவல் துறை அதிகாரி வனிதா மீது உள்ள குற்றத்தை அனைவரின் முன்னிலையிலும் மகிழினி எடுத்துரைத்தாள்.

மகிழினியை சுட்டேரிக்கும் பார்வையால் வனிதா முறைத்து கொண்டு இருந்தவள் முன்பு பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்ட, அதைத் தள்ளிவிட்டு, “கான்ஸ்டபிள் எல்லோரையும் அடிச்சு விரட்டுங்க" என்று வனிதா உத்தரவிட்ட நிலையில்.

"என்ன மேடம் பிரஸ் மேல கை வச்சிடுவீங்களா. நீங்க போலீஸா இல்ல பொம்பள ரௌடியா? உங்கள எல்லாம் கேக்க ஆள் இல்லைனு நினைச்சு தானே, ஸ்டேஷன்குள்ள இருந்துகிட்டு இவ்ளோ அட்டூழியம் பண்றீங்க. ஆனா, இனி உங்க ஆட்டம் எல்லாம் செல்லாது மேடம். நாங்க நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற டிவி ஷோல இருந்து வந்து இருக்கோம். கிட்டதட்ட ஒருமணி நேரமா இந்த ஸ்டேஷன்ல நடந்த எல்லா விஷயத்தையும் நாங்க எங்க சீக்ரட் வீடியோ மூலம் கவர் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். இனி உங்க அதிகாரம் எல்லாம் செல்லாது மேடம்" என்று அந்த பத்திரிகை நபர் வனிதாவை எதிர்த்து பேச. மகிழினியோ கம்பிரமாக வனிதாவின் முன் சென்று நின்றாள்.

"இதான் உங்களுக்கு கடைசி முறை. இனி கேன்டீன் விஷயமா நீங்க என்கிட்ட எதாவது பிரச்சனை பண்ணிங்க, இப்போ நான் மீடியா வரைக்கும் மட்டும் தான் போயிருக்கேன். மீறி இதே போல உங்கனால எனக்கு பிரச்சனை வந்துச்சுனா, கண்டிப்பா நான் மனித உரிமை ஆணையம்ல போய், உங்க மேல கம்பளைண்ட் தர வேண்டியது இருக்கும். சொல்லிட்டேன்" என்று அழுத்தம் திருத்தமாக மகிழினி போலீஸ் அதிகாரியை மிரட்டும் காட்சியை கண்டு, கொடியின் இதயம் ஆட்டம் கண்டது என்னவோ உண்மை தான்.
 
Joined
Jan 15, 2026
Messages
39
வனிதாவை கண்டித்த மகிழினி, அதே கோவத்தோடு வேகமாக ஸ்டேஷனில் இருந்து வெளியே வர, அவளை பின் தொடர்ந்து வந்தனர் கொடியும் சசியும்

மீடியா ஆட்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன்ககுள் நின்று இருக்கும் வனிதாவை கேள்வி கேட்க, மகிழினி ஏளனமாக வனிதாவை பார்த்து தூரத்தில் இருந்தபடி சிரித்தாள்.

"என்ன சித்ரா? என்னமா நடக்குது இங்க? முதல்ல இந்த கர்சீப் வச்சி தலையில வர ரத்தத்தை தொடமா" என்று பதற்றதுடன் கேள்வி கேட்டப்படி, மகிழினியின் கையில் கைக்குட்டையை தந்தாள் சசி

"நீங்க எப்போ அக்கா வந்திங்க" என்று தெரியாமல் கேட்டாள் மகிழினி.

“என்ன எப்போ வந்தோமோ? அது சரி. நீங்க அந்த போலீஸ் கன்னத்தை தொட்டு பாக்கும் போதே வந்துட்டோம்.”

“அச்சோ அப்படியா. சாரி நான் கவனிக்கல.”

“அத விடு. ஆமா என்ன பிரச்சனை இங்க?”

“அது ஒரு பெரிய கதைக்கா. ஆமா நீங்க இன்னைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னிங்க இல்ல.”

“ஆமா. உன்கிட்ட சொல்லிட்டு போக தான் வீட்டுல வெயிட் பண்ணோம். அப்புறம் உன் பாட்டி தான், உங்க கேன்டீன்கு போன் பண்ணி, நீ எங்கன்னு கேட்டாங்க. அவங்க தான் நீ ஸ்டேஷன் வந்து இருக்கன்னு சொன்னாங்க. அதான் நானும் இவனும் உனக்கு என்னாச்சுன்னு பாக்க ஸ்டேஷன்கு வந்தோம்

“ஒ. சாரி அக்கா. நான் உங்கள பார்க்க தான் நேரத்தோட வீட்டுக்கு கிளம்பினேன். ஆனா, அதுக்குள்ள இந்த போலீஸ் தான் என்னை ஸ்டேஷன்கு வர வச்சி கலாட்டா பண்ணிட்டாங்க.”

“என்ன தான் வேணுமாம் இவங்களுக்கு?”

“நம்ம கேன்டீன் வச்சி நடத்துறோம் இல்ல அக்கா. அந்த இடம் வேணுமாம். அத விட்டுக் கொடுக்க சொல்லி, எப்போ பாரு ஒரே டார்ச்சர். ஏன் இந்த வனிதா பண்ண வேலையால தான், உங்க தம்பி கையில ரத்த காயம் ஏற்பட்டுச்சு.”

“என்ன ரத்த காயமா? என்னடா தம்பி? இது எப்போ?” என்று பதறிப்போய் கேட்டாள் சசி.

“அது அக்கா...”

“சொல்லுடா என்னாச்சு?”

“அக்கா இவங்கள ஒரு நாள் ஹாஸ்பிடல்ல சேர்த்தோம் இல்ல. அப்போ இவங்க நைட் அங்க இருந்து காணாம போயிட்டாங்க. இவங்கள தேடி நான் வெளிய வந்தேன். அப்போ ரெண்டு லேடி இவங்க கையை பிடிச்சிக்கிட்டு கலாட்டா பண்ணாங்க. அப்போ ஒரு ஆளு என்னை சின்னதா தாக்கிட்டு, அங்க இருந்து ஓடிட்டான். மத்தபடி பயப்பட எல்லாம் ஒன்னும் இல்ல” என்று சமாதானம் சொன்னான் கொடிவீரன்.

“என்னடா இப்படி சொல்ற? இத ஏன் என்கிட்ட நீ முன்னமே சொல்லல?”

“நீ இப்படி பயப்படுவன்னு தான் சொல்லல.”

“அன்னைக்கு உங்க தம்பிக்கு ஏற்பட்ட காயம் கூட இந்த வனிதாவல தான் அக்கா” என்றாள் மகிழினி.

“எக்ஸ்கியூஸ்மி மேடம். அன்னைக்கு எனக்கு ஏற்பட்ட காயத்துக்கு வனிதாவோ, புனிதாவோ காரணம் இல்ல. நீங்க... நீங்க தான் காரணம். உங்களோட அவசர புத்தி தான் காரணம்” என்று சொன்னான் கொடிவீரன்.

“டேய் இப்போ ஏன்டா நீ இப்படி பேசுற?”

“விடுங்க அக்கா. அவுக பேசட்டும். என்னை பாத்தாலே உங்க தம்பிக்கு எப்படி இருக்குன்னு தெரியல.” என்று முகம் சுளித்தாள்.

“ம்... உங்கள பார்த்தா நல்லா செதுக்கி வச்ச தங்கச்சிலை மாதிரி தான் இருக்கு. ஆனா, இந்த சிலை எப்போ என்ன வேலை பாக்கும்னு தான் தெரியல.” என்றான் அவனும் அதே சுளிப்புடன்.

“இங்க பாருங்க மிஸ்டர். இப்போ ஏன் நீங்க நடு ரோட்டுல நின்னுகிட்டு என்னை கமெண்ட் பண்ணிக்கட்டு இருக்கிங்க. நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? ஏதோ அன்னைக்கு என்னை காப்பாத்தினீங்கன்னு கொஞ்சம் சகஜமா பேசினா. நீங்க என்ன ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குறீங்க?” என்று கோபத்தில் கேட்க,

“என்ன? அட்வான்டேஜ் எடுத்துக்குறேனா ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ். உங்கிட்ட நான் ஏன் அட்வான்டேஜ் எடுத்துக்க போறேன்? நீங்க யாருங்க எனக்கு.”

“அதையே தான் நான் கேக்குறேன். நான் யாரு உங்களுக்கு? நான் அவசர புத்தியா இருந்தா உங்களுக்கு என்ன. கிறுக்கு புத்தியா இருந்தா உங்களுக்கு என்ன வந்துச்சு” என்று இருவரும் சண்டைக்கோழியாய் சிலிர்த்து நிற்க,

“அதானே எனக்கு என்ன வந்துச்சு? நீங்க என்னமோ பண்ணுங்க. உங்கள போய் தேடி வந்தேன் பாருங்க. என்னை சொல்லணும்.”

“ஹலோ சார். நான் ஒன்னும் உங்கள என்னை தேடி வர சொல்லல. நீங்க தான் யாருக்கு என்ன பிரச்சனை வரும். அவங்களுக்கு போய் நம்ம என்ன உதவி பண்ணலாம்னு காத்துகிட்டு இருக்கீங்க போல” என்றாள் நக்கலாக.

“இங்க பாருங்க...” என்று கொடிவீரன் ஆரம்பிக்க,

“ஏய்! ரெண்டு பேரும் சும்மா இருங்க. என்னடா தம்பி இது? நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்று தம்பியை அதட்டினாள் சசி.

“பின்ன என்ன அக்கா. எப்போ பேசினாலும் எதாவது இன்சல்ட் பண்ற மாதிரியே பேசுறாங்க.”

“அப்படி என்னங்க நான் உங்கள இன்சல்ட் பண்ணுறேன்?” எகிறிக்கொண்டு வந்தாள் மகிழினி.

“இவ்ளோ ஆட்டிடியூட் எல்லாம் ஆகாதுமா. பார்த்து பக்குவமா நடந்துகிட்டா தான் ஊரோட ஒட்டி வாழ இயலும்.”

“யாருக்கு ஆட்டிடியூட்னு சொல்றிங்க. நீங்க தான் திமிர் பிடிச்ச ஆளு. சரியான ஆண் ஆதிக்கம் பிடிச்சவர் போல” என்றாள் பதிலுக்கு.

“யாரு நானா ஆண் ஆதிக்கம் பிடிச்சவன்?”

“பின்ன நானா?”

“சரி நீங்க ரெண்டு பேரும் சண்ட போடுங்க. நான் கிளம்புறேன்” என்றாள் சசி.

“அக்கா எங்க போற நீ?”

“நான் கிளம்புறேன்டா. எங்களுக்கு மணி ஆகுது. உங்க சண்டையை ரசிக்க எனக்கு நேரம் இல்லை.”

“இரு. நானே உன்னை அழைச்சிட்டு போறேன்.” என்று சசிகலா அருகில் வர,

“சித்ரா நீ எப்படி போவ” என்று சித்ராவைக் கேட்டாள் சசி.

“இல்ல அக்கா. உள்ள பத்திரிகையாளர் எல்லாம் இருக்காங்க. அவங்க நான் சொன்னதுக்காக தான் வந்துருக்காங்க. நீங்க கிளம்புங்க. நான் வர லேட் ஆகும். அம்மாகிட்ட சொல்லிடுங்க. நான் பாட்டி போன்ல இருந்து உங்க அம்மாவுக்கு கால் பண்ணி பேசுறேன்.”

“ம்... சரி சித்ரா. ஆனா, இங்க உனக்கு எந்த பிரச்சனையும் வராதே?”

“வராது. வந்தாலும் நான் பாத்துக்குறேன் அக்கா” என்றாள் மகிழினி.

“சரிமா. நான் கிளம்புறேன். நீ கண்டிப்பா எனக்கு போன் பண்ணனும்.” என்றதும் சரியென்று சம்மதித்த மகிழினி, கொடி இருக்கும் பக்கம் கூட தன் பார்வையை திருப்பாமல் நின்று இருந்தவளின், கோவத்தை கண்டுகொள்ளாது, தன் அக்காவை அழைத்து கொண்டு மகிழினியின் வீட்டை நோக்கி தன் பைக்கை விரட்டினான்.

விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top