• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 14

Joined
Jan 15, 2026
Messages
33
14

"சார். இப்போ வலி எப்படி இருக்கு?” என்று கொடிவீரனைக் கேட்டதும்.

"ம்... வலி இப்ப கொஞ்சம் தேவலைங்க” என்றான்.

"காயத்துல தண்ணி படக்கூடாது. நான் கேன்டீன்ல இருந்து, பிளாஸ்டிக் சீட் கொண்டு வந்தேன். இத கையில சுத்திகிட்டு குளிங்க” என்று தன் கையில் இருந்த கவரை கொடியிடம் கொடுத்தாள் மகிழினி.

"ஏங்க. சுரேஷ் வண்டி நடுரோட்டில் நிக்குது. நான் குளிச்சிட்டு போய் முதல்ல எடுத்துட்டு வந்துர்றேன்” என்றான் கொடி.

"ஐயோ இல்லிங்க. கேன்டீன்ல நம்ம சாப்பாடெல்லாம் எடுத்துட்டு போறதுக்கு, குட்டி யானை வண்டி வரும். நான் அந்த வண்டியில அண்ணனுடைய பைக்கை ஏத்திட்டு வந்து, வீட்ல இறக்க சொல்லிட்டேன். வண்டி எப்பவோ வீட்டுக்கு வந்துருச்சி” என்றாள் மகிழினி.

"அத்த. இவருக்கு கையில அடி தானே பட்டுருக்கு. ஆனா, இவரு வேலைக்கு போக போறாறாம்” என்று வேணு சொல்ல,

"ஐயோ. இந்த கையை வச்சிக்கிட்டு நீங்க எப்படி வேலைக்கு போவீங்க. அடலீஸ்ட் ஒரு வாரமாவது நீங்க ரெஸ்ட்ல இருக்கனும்” என்று அக்கறையாக சொன்னாள் மகிழினி.

"இல்லிங்க. வேலைக்கு போகாம வீட்டுல இருந்து, நான் என்ன பண்ண போறேன்” என்று சொன்னான்.

"நம்ம ஜாலியா விளையாடலாம். நீங்க வேலைக்கு போக வேணா” என்று வேணு சொல்ல.

"ம்... சரி நான் மூணு நாள் கடந்து வேலைக்கு போறேன்” என்றான் கொடி சிரித்து கொண்டே.

"சரி சரி. சார் நீங்க குளிச்சிட்டு சாப்பிடுங்க. அத்த நீங்க வாங்க. நம்ம கீழே போகலாம்” என்று தன் கையோடு மகிழினியை கீழே அழைத்து சென்றான் வேணு.

நேரம் 11.30 மணி அளவில், மகிழினி மீண்டும் மாடிக்கு மதிய உணவுடன் வேணுவை அழைத்து கொண்டு வந்தவள், கதவைத் தட்டியபடி அறைக்கு செல்ல, அங்கே உறங்கி கொண்டு இருந்தவனைப் பார்த்து, சத்தம் இல்லாமல் சாப்பாட்டை மேசை மேல் வைத்த நேரம், கொடியின் கைபேசி சிணுங்கியது.

அந்தச் சத்தத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்தவன் எதிரில் மகிழினியும் வேணுவும் நின்று இருப்பதைப் பார்த்து புன்முறுவலுடன் தன் கைபேசி அழைப்புக்கு பதில் தந்தான் கொடி.

"சொல்லு அக்கா?” மறுமுனையில் சசி என்ன சொன்னாளோ, "எப்போ” என்று கேட்க, பின், "ம்... சரி அக்கா. நான் பாத்து சொல்லுறேன். ம்... அம்மாகிட்ட நான் நைட்டு பேசுறேன்” என்று சொன்னான்.

அவன் கைபேசி இணைப்பை துண்டிக்கும் வரை காத்து இருந்த மகிழினி. "சார். மதியம் சாப்பாடு எடுத்துட்டு வந்து வச்சிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. அப்புறம் வாஷ் பண்ண துணி இருந்தா தாங்க. நான் துவைத்து தரேன்” என்று கேட்டாள்.

"ஐயோ. அதெல்லாம் வேணாங்க. நீங்க இப்படி எனக்காக சாப்பாட்டை மாடிக்கு எடுத்துட்டு வரதே எனக்கு கஷ்ட்டமா இருக்கு“ என்றான் கொடி.

"இருக்கட்டும் சார். துவைக்க துணி இருந்தா தாங்க” என்று மீண்டும் மகிழினி கேக்க.

"இல்லிங்க. அழுக்கு துணி எல்லாம் இல்ல” என்று பொய் சொன்னான் கொடி.

"சரிங்க சார் . நீங்க சாப்பிடுங்க. வேணு வா நம்ம கீழே போகலாம்” என்று மகிழினி வேணுவை அழைத்தாள்.

அதே சமயம் பாட்டி மாடிக்கு ஏறி வந்தவர், "என்ன தம்பி இப்போ எப்படி இருக்கீங்க” என்று அக்கறையுடன் நலம் விசாரித்தார்.

"வாங்க பாட்டி.இப்போ ok தான்” என்றான் கொடி.

"அடிக்கடி உன்னை இங்க வந்து பாக்க முடியல தம்பி. கோச்சிக்காத” என்று பாட்டி தன் உடல் நிலை சோர்வால் சொன்னதும்.

"இருக்கட்டும் பாட்டி. நீங்க எல்லாம் என்னை இந்த அளவுக்கு கவனிச்சிக்குறதே பெருசு” என்று நன்றி சொன்னான் கொடி.

"சரிப்பா நீ சாப்புடு. இங்க இருக்க போர் அடிச்சா கீழே இறங்கி வந்து டிவி கூட பாரு” என்று சொன்னார்.

"இல்ல பாட்டி. எனக்கு டிவி பாக்குற பழக்கம் எல்லாம் இல்ல. நான் பாட்டு தான் கேப்பேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க அடிக்கடி மேலே ஏறி வராதீங்க” என்று சொன்னான் கொடிவீரன்.

"சரிப்பா. நாங்க வரோம். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்ற பாட்டி கீழே இறங்கி செல்ல, அவரை தொடர்ந்து மகிழினியும், வேணுவும் செல்ல, அதன்பின். மதிய உணவை முடித்த கொடி மீண்டும் ஓய்வு எடுத்தான்.

இப்படியாக. கொடியின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில், அவனுக்கு தேவையான எல்லா விஷயங்களையும், மகிழினி பார்த்து பார்த்து செய்து கொடுத்தாள்.

5 நாட்கள் கடந்த நிலையில், கொடியின் கையில் ஏற்பட்ட காயங்கள் சற்று குணமடைய, கொடி வேகமாக குளித்து முடித்த மாப்பிள்ளை கணக்கில் வெளியே கிளம்பி கொண்டு இருந்தான்.

"என்ன சாரே. ஹீரோ போல ரெடி ஆகுறீங்க. எங்க சினிமாக்கு போறீங்களா?” என்று வேணு ஆவலாக கேக்க.

"இல்ல இல்லடா. நான்...” என்று கொடி வேணுவின் கேள்விக்கு உண்டான பதிலை சொல்லி முடிக்கும் முன் மகிழினியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு கொடி கீழே இறங்கி ஓடினான்.

ஆட்டோவில் இருந்து இறங்கியது கொடிவீரனின் சகோதரி சசிகலா. தன் அக்காவை பார்த்ததும், அன்பாக தோளணைத்து, "என்ன அக்கா நீ. நான் வண்டி எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து இருப்பேன் இல்ல. நீ ஏன் தனியா ஆட்டோ எல்லாம் புடிச்சுகிட்டு கஷ்டப்படுற. ஆமா அம்மா எங்கே?” என்று கொடி கேட்ட கேள்விக்கு பதில் தராத சசியின் கண்கள் தேடியது என்னவோ மகிழினியை தான்.

"என்ன அக்கா நீ. அம்மா எங்கன்னு கேட்டா. நீ யாரை தேடுற?” என்று அதட்டினான் கொடி.

"டேய்! ஆட்டோல வரும்போது பக்கத்து தெருவுல ஒரு கோவிலை பார்த்துட்டு, அம்மா அங்க விளக்கு போட இறங்கிட்டாங்க. நம்ம அப்புறம் போய் அவங்கள அழைச்சிட்டு வரலாம்” என்று மீண்டும் தன் பார்வையால் சசி மகிழினியை தேட.

"யாருங்க இந்த லேடி?” என்று வேணு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு திமிராக கேட்டான்.

"ஓ... நீ தான் அந்த வேணு கேடியா?” என்று சசி பதிலுக்கு வேணுவை கலாய்த்தாள்.

"அக்கா. நீ ஏன் இப்போ வந்ததும் வராததுமா சின்ன பையன் கட்ட வம்பு பண்ணுற? சரி நீ மாடிக்கு போய் பையை வச்சிட்டு வா. நான் ஆட்டோக்கு பணம் கொடுக்குறேன். நம்ம சீக்கிரம் போய் அம்மாவை அழைச்சிட்டு வரலாம்" என்று சொல்லவும் அப்படியே செய்தால்.

தன் அக்காவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும் கோவில் வாசலில் வண்டியை நிறுத்திய பின், கோவிலுக்குள் சென்றவர்கள், தன் தாயைத் தேடிக்கொண்டு சாமி சன்னிதியை சுற்றி வர, அம்மன் சன்னதி முன் நின்றிருந்த தாயைப் பார்த்ததும், அவர் அருகில் சென்றான் கொடி.

"அம்மா” என்று அழைத்ததும், மகனைப் பார்த்து அன்போடு கட்டி அணைத்து கொண்டவர், தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு, "எப்படிடா இருக்க?” என்று அன்போடு விசாரித்தார் கொடியின் தாய் ஜெயா.

"நல்லா இருக்கேன் அம்மா. என்ன வந்ததும் கோவிலுக்கு வந்துட்டீங்களா? எங்க போனாலும் சாமியை தொல்லை பண்ணுறதை விடமாட்டீங்களா?” என்று தன் தாய் ஜெயாவை கேலி செய்தான் கொடிவீரன்.

"வேற வேலை” என்று ஒத்து ஊதினாள் சசி.

"உனக்கும், உன் அக்காவுக்கும் என்னை வம்பு பண்ணலைனா தூக்கம் வராதே” என்று கொடியின் காதை திருகினார் ஜெயா.

தனக்கு பின் நின்று பேசும் நபர்களின் பேச்சைக் காதில் வாங்காத ஒரு பெண், கண்கள் மூடி அம்மனை வணங்கிக்கொண்டு இருந்தவள், சில நிமிடத்தில் கண் திறந்து, "விபூதி தரீங்களா?” என்று ஐயரிடம் கேட்க,

ஐயர் இவள் அழைப்பதைக் காதில் வாங்கமால் சன்னதிக்குள் செல்ல,

"பாப்பா. நீ கூப்பிடுறது ஐயர் காதுல விழல போல. இந்தாம்மா குங்குமம்”
என்ற கொடியின் தாய், அந்த பெண்ணின் முன் சென்று, அவள் நெற்றியில் தன் கரங்களால் குங்குமத்தை வைக்க, அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தாள்.

கண்முன் நின்று இருந்த ஜெயாவின் அருகில், கொடி பதற்றதுடன் நின்று இருந்தவன் கண் முன் ஜெயா இட்ட குங்குமத்தை ஏற்று நின்று இருந்தாள் சித்ரமகிழினி.
 
Joined
Jan 15, 2026
Messages
33
"அம்மா என்ன பண்ணுறீங்க?” என்று கொடி பதறினான்.

"என்னடா. அம்மா அந்த பொண்ணுக்கு குங்குமம் தானே வச்சாங்க. அதுக்கு நீ ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?” என்று சசி கேட்டதும்.

மகிழினியின் கண்கள் கொடியை பார்த்தபடி கலங்கிய தருணம்.

"என்னமா? என்னாச்சு.? குங்குமம் கண்ணுல பட்டுருச்சா?” என்றபடி ஜெயா மகிழினியின் கண்ணீரை தன் முந்தனையில் துடைத்து விட்டார்.

ஜெயாவின் அன்பை கண்டு, மகிழினி ஒரு நொடி தன் நிலையை மறந்து சிலை போல நின்று இருந்தாள்.

"டேய்! நீ என்னடா அந்தப் பொண்ணை சைட் அடிக்கிறியா? உனக்கு ஓகேனா சொல்லு தம்பி. பொண்ணு யாரு என்னனு கேட்டு, பேசி முடிச்சிடலாம்” என்று சசி தன் தம்பியை சீண்ட, கொடி தன் கரங்களால் சசியின் வாயை மூடினான்.

"கொடி வா. கோவிலை சுத்திட்டு உன் வீட்டுக்கு போகலாம். பாப்பா போய்ட்டு வரோம்மா| என்று ஜெயா மகிழினியை பார்த்து சொன்னதும், மீண்டும் மகிழினியின் பார்வை கொடியின் பக்கம் திரும்பியது.

"இவங்க என் அம்மா. இவங்க என் அக்கா” என்று மகிழினிக்கு எதிரில் நிற்கும் தன் சொந்தங்களை அறிமுகப்படுத்தினான்.

"வணக்கம்ங்க” என்று தன் இரு கரங்கள் கூப்பி மகிழினி அவர்களுக்கு வணக்கம் சொன்னாள்.

"யாரு தம்பி இந்தப் பொண்ணு? உனக்கு தெரிந்த பொண்ணா?” என்று ஜெயா கேட்டார்.

"ம்... இவங்க வீட்டு மாடியில தான் அம்மா நான் ஸ்டே பண்றேன்” என்றான் கொடிவீரன்.

சசி உரிமையோடு மகிழினியின் அருகில் சென்று, “ஹாய் டார்லிங். எப்படி இருக்கீங்க? நான் உங்கள பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். உண்மையை சொல்லனும்னா, நான் உங்கள பார்க்க தான் சென்னைக்கு வந்தேன். நீங்க பாக்க அப்படியே கால்ஸ் பட ஹீரோயின் போல இருக்கீங்க” என்று சசி உரிமையோடு மகிழினியிடம் பேசினாள்.

‘இவங்க கையாள அக்கா அடி வாங்க போறது உறுதி’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டான் கொடி.

"ஒ... இவங்க வீட்ல தான் நீ தங்கி இருக்கியாப்பா. பாப்பா உன் பெயர் என்ன?” என்று மகிழினியிடம் கேட்டார் ஜெயா.

"சித்ரமகிழினி" என்று இனிமையான குரலில் பேசும் பாவையை, ஜெயாவிற்கு பார்த்ததுமே தன் வீட்டுக்கு மருமகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று, சராசரியாக ஆண் பிள்ளையை பெற்ற தாய்மார்களுக்கு எழும் எண்ணம், இவருக்கும் எழுந்தது என்னமோ உண்மைதான்.

"அம்மா. அவங்கள விடுங்க. வாங்க நம்ம கிளம்பலாம். நேரம் ஆகுது பாருங்க. சீக்கிரம் போனா தான் வீடு பார்க்க முடியும்” என்று தன் அம்மாவை அவசரப்படுத்தினான்.

"நீங்க” என்று மகிழினி கொடியை எதோ கேக்க வந்தவள், தன் வார்த்தையை விழுங்கி கொண்டாள்.

"என்ன டார்லிங் ஏதவாது கேட்கணுமா” என்று சசி மகிழினியிடம் கேட்டாள்.

"இல்ல. நீங்க சென்னையில வீடு வாடகைக்கு தேடுறிங்களா” என்று மகிழினி சசியிடம் கேள்வி கேட்டாலும், அவளின் பார்வை என்னவோ கொடியை தான் உள்வாங்கி இருந்தது.

"ஆமாம்மா. பத்து நாள் இங்க தங்க வேண்டிய வேலை இருக்கு. என் மகளுக்கு எங்க பக்கத்து ஊர் கிராமத்துல மாப்பிள்ளை அமைந்து இருக்கு தாயி. பையன் மும்பையில வேலை பாக்குறாரு. மாப்பிளைக்கு அம்மா அப்பா எல்லாம் இல்ல. அக்கா, மாமா தான். கல்யாணத்துக்கு பிறகு என் மக மும்பைக்கு மாப்பிள்ள கூட போய்டுவா. ஆனா, கல்யாணம் என்னமோ மாப்பிள்ள ஊரான கிராமத்துல தான் நடக்கணும்னு, அவங்க அக்கா, மாமா சொல்லிட்டாங்க. நல்ல சம்மந்தம். ஆனா, என் பொண்ணு ஜாதகத்துல ஒரு சின்ன பிரச்சனை. அதான் இந்த ஊர் கோவில்ல 7 நாளைக்கு சின்ன பூஜை பண்ணா, இந்தக் கல்யாணம் எந்தத் தடங்களும் இல்லாம நடக்கும்னு ஜோசியர் சொன்னாரு. அதான் ஒரு பத்து நாளைக்கு மட்டும் இங்க வீடு எடுத்து தங்கிட்டு, பூஜையை முடிக்கலாம்னு இருக்கோம்மா” என்று ஜெயா. இவர்கள் சென்னைக்கு எதற்காக வருகை தந்துள்ளார்கள் என்ற விவரத்தை சொன்னார்.

"பத்து நாளுக்காக ஏன் வீடு வாடகைக்கு எல்லாம் எடுக்குறீங்க? நம்ம வீட்டுலயே தங்கிக்கலாமே” என்று மகிழினி இந்த முறை ஜெயாவை பார்த்து சொன்னாள்.

"இல்லிங்க. மாடி எல்லாம் அம்மாவால அடிக்கடி ஏற முடியாது. அதுவும் இல்லாம, அங்க எனக்கு மட்டும் தானே இடம் பத்தும்” என்று கொடி இயல்பாக சொன்னான்.

"நான் உங்க ரூமை சொல்லல. கீழ் வீட்டுல நிறைய ரூம் இருக்கு. அம்மாவும் அக்காவும் அங்க ஸ்டே பண்ணலாமே” என்று மகிழினி கேக்க.

"இல்ல இல்லைங்க. அதெல்லாம் சரி வராது. நான் பக்கத்து தெருவுல ஒரு வீடு பார்த்துட்டேன். கரண்ட் அடுப்பு, கொஞ்சம் பாத்திரம் வாங்கிக்கிட்டா போதும். பத்து நாள் தானே. இவங்க அங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. எனிவே உங்க பெருந்தன்மைக்கு நன்றி. அம்மா போகலாமா. அக்கா வா” என்று கொடி கறாராக மகிழினியின் யோசனையை மறுத்தான்.

"அம்மா. உங்க பிள்ளைகிட்ட சொல்லுங்க. நம்ம வீடு கொஞ்சம் பெருசா தான் இருக்கும். நீங்க பத்து நாள் இல்ல. எத்தனை மாசம் வேணாலும் அங்கேயே தங்கி, உங்க பூஜையை முடிச்சிட்டு நிம்மதியா ஊருக்கு கிளம்பலாம். அங்க உங்களுக்கு எந்த பிரெச்சனையும் வராது. உங்க அளவுக்கு இல்லைனாலும் நான் கொஞ்சம் நல்லாவே சமைப்பேன். நீங்க நம்ம வீட்டுலயே சாப்பிடக்கலாம். பிளீஸ்மா நீங்க நம்ம வீட்டுலேயே இருங்க” என்று மகிழினி, ஜெயாவை கெஞ்சுவதை கண்டு கொடி குழம்பிப் போனான்.

"இல்லமா. என் பையன்...” என்று ஜெயா ஏதோ சொல்ல வர,

"ஆமா. உன் பையனுக்கு வேற வேலை இல்ல. அதான் சித்ரா இவ்ளோ சொல்லுறாங்க இல்ல. பின்ன என்ன. டார்லிங் நீங்க கவலைப்படாதீங்க. நாங்க உங்க வீட்டுலயே தங்கிக்கிறோம்” என்று சசி சொன்னதும், கொடி தன் அக்காவை முறைத்தான்.

"சரி மா. என் மகளே சொல்லிட்டா. நாங்க உன் வீட்டிலயே தங்கிக்குறோம். எல்லாம் அவன் செயல்” என்று சொன்னார் ஜெயா.

"ரொம்ப சந்தோசம்மா” என்று சொன்ன மகிழினியை கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான் கொடிவீரன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top