New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 21
- Thread Author
- #1
10
பழனியை மாடியில் உள்ள மல்லிப்பூ செடிகளின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, "என்னப்பா? பாட்டி அப்படி பேசினத நினைச்சு கவலைப்படுறீங்களா? அவங்க கொஞ்ச நாளாவே இப்படி தான் இருக்காங்க. உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி அவங்க பேசி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்." என்று தன் இரு கரங்கள் கூப்பி பழனியிடம் மன்னிப்பு கேட்டாள் மகிழினி.
"ஐயோ இல்லம்மா. உன் பாட்டியுடைய தரப்புல அவங்க பேசுறது நியாயம் தான். எனக்கு அவங்க மேல கோவம் எல்லாம் இல்ல" என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசினார் பழனி
"சரிப்பா என்ன இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று பழனி வந்த விஷயத்தை கேட்டுத் தெரிந்துகொள்ள நினைத்தாள்.
"இல்லம்மா அது வந்து” என்று தன் வார்த்தையை மென்று விழுங்கினார் பழனி.
"என்ன அப்பா இன்சூரன்ஸ் பணம் பத்தி ஏதாவது கேட்கணுமா?என்னன்னு தெரியல அந்த ஆபீஸ்ல இருந்து இன்னும் நல்ல செய்தி வரல/ அநேகமா அடுத்த வாரம் பணம் கிடைச்சுரும்னு நினைக்கிறேன்" என்று சொன்ன மகிழினியின் முன் கண்கள் கலங்கி நின்றிருந்தார் பழனி.
"என்னப்பா எதுக்கு கண் கலங்குறிங்க? வேற ஏதாவது பிரச்சனையா?" என்று பதற்றத்துடன் கேட்டாள் மகிழினி
"பிரச்சனை எல்லாம் இல்லம்மா. நாளையோட வீரன் இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. அவனுக்கு திதி கொடுக்கணும். அதைப் பத்தி பேச தான் நான் இங்கே வந்தேன்" என்று கண்கள் கலங்கினார் பழனி
"அப்பா! என்னைப் பொறுத்தவரை அவர் சாகல. அவர் என்னுடன் தான் இருக்காரு. ஆனா, அவருடைய ஆத்மா சாந்தி அடையனும்னா, அந்த சடங்கை எல்லாம் செய்யணும்னு ஏற்கனவே நீங்க என்கிட்ட சொன்னது எனக்கு நினைவிருக்கு. நேத்தே நான் பக்கத்து தெருவுல இருக்குற கோவில்ல ஐயர் ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலையில நீங்க அங்க வந்துடுங்க. என் வீராவுக்கு அப்பா ஸ்தானத்துல நீங்களே உங்க கையால திதி கொடுக்கலாம்" என்று மகிழினி சொன்னதும் பழனி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
மகிழினி தலையில் தன் கரங்களை வைத்து "நீ நல்லா இருக்கணும்மா. உன்னுடைய பாட்டியின் ஆசையும் கூடிய சீக்கிரமே நிறைவேறனும். அப்போதான் உன் கணவனுடைய ஆத்மாவும் சாந்தி அடையும். சரி நாளைக்கு காலைல பத்து மணிக்கு நான் கோவில்ல சந்திக்கிறேன்" என்று சொன்ன பழனி வீட்டில் இருந்து வெளியேறினார்.
மகிழினிக்கு தன் பாட்டியின் மீது கோபம் இருந்தாலும், அவரது மனநிலையில் இருந்து யோசித்தவள், இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் அன்றைய தினத்தை கடந்தாள்.
மறுநாள் காலை எப்பொழுதும் போலவே மகிழினி கேண்டினுக்கு கிளம்பியவள், அங்கே வேலைகளை முடித்த பிறகு கோவிலுக்குச் சென்று, தன் கணவன் வீராவை வளர்த்த பழனியின் வருகைக்காக காத்திருந்தாள்.
நேரம் காலை 11 மணியான பின்னரும் பழனி கோவிலுக்கு வராத நிலையில், மகிழினியிடம் கைபேசி இல்லாத காரணத்தால், பழனியை தொடர்பு கொள்ள முடியாத நிலமையில், குழம்பி போய் நின்று இருந்தாள் மகிழினி.
"ஏன்மா எனக்கு நேரமாகுது. நான் வீட்டுக்கு போகணும். உன் புருஷனுக்கு திதி கொடுக்க யாராவது வருவாங்களா மாட்டாங்களா" என்று ஐயர் வார்த்தையில் கோவத்தை வெளிப்படுத்தினார்.
"இல்லிங்க. என் கணவரோட அப்பா வரேன்னு சொன்னாரு. ஆனா, ஏன் வரலைன்னு தெரியல" என்று பதறினாள் மகிழினி
"நேரமாகுதுமா. இதுக்கு மேல நேரம் கடந்தா இந்த சாங்கியத்தை பண்ணக்கூடாது. இன்னும் அரை மணி நேரத்துல அவரு வந்தா பாரு. இல்லையா இன்னொரு நாள் பண்ணிக்கலாம்" என்று ஐயர் சொன்னதும், ஐயரின் எதிரில் சம்மணம் போட்டு அமர்ந்தாள் மகிழினி.
"அவர் வரலைன்னா என்ன? என் புருஷனுக்காக நானே எல்லா சடங்கையும் பண்றேன். நீங்க மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையை பாருங்கள்" என்று ஒரு முடிவோடு சொன்னாள் மகிழினி.
"என்னம்மா சொல்ற? பொம்மனாட்டிகள் எல்லாம் இந்த சடங்க பண்ணக்கூடாது. உன் ஆம்படையான் கூட பிறந்த உடன்பிறப்பு யாராவது இருந்தா பண்ணலாம். இல்லையா உனக்கு புள்ள குட்டி இருந்தா பண்ணலாம், அப்படி இல்லையா உன் புருஷனைப் பெத்த அப்பா இருந்தா பண்ணலாம், மத்தபடி பொம்மனாட்டிகள் எல்லாம் இந்த சடங்கை பண்ணக்கூடாதுமா" என்று தெளிவாக சொன்னார் ஐயர்.
"என் கணவர் கூட பிறந்த உடன் பிறப்பு எல்லாம் யாரும் இல்லிங்க. அதான் அவருக்கு எல்லாமுமா நான் இருக்கேன் இல்ல அது போதும். நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க. நானே என் வீராவுக்கு எல்லா சடங்கையும் பண்றேன்" என்று திட்டவட்டமாக சொன்னாள் மகிழினி
"பொம்மனாட்டிங்க இதெல்லாம் பண்ணக்கூடாது. அப்படி மீறி நீ தான் பண்ணுவேன்னு சொன்னா, என்னால என்ன பண்ண முடியும். சரி எனக்கு என்ன வந்துச்சு?" என்று புலம்பிக் கொண்டே சில சாங்கியத்தை செய்த ஐயர் பிண்டங்களை ஒரு தட்டில் வைத்து மகிழினியிடம் தந்தார்.
"அதோ பாருமா. அங்க தெப்பக்குளம் இருக்கு இல்ல. அங்க போய் இந்த பிண்டதை கரைச்சிடு" என்று ஐயர் சொன்னதும் மகிழினி அவர் தந்த பிண்டதை எடுத்துக்கொண்டு குளத்தின் படியில் இறங்கியவள், கால் தடுக்கி கீழே விழுந்த வேகத்தில், அவள் கையில் இருந்த பிண்ட உருண்டைகள் உருண்டோடி கொடிவீரனின் காலின் கீழ் விழ,
அந்த பிண்டதை கையில் எடுத்த கொடியும், அதை கீழே தவற விட அந்த பிண்டங்கள் கொடி வீரனின் கையில் இருந்து கீழே விழுந்து, தெப்பக்குளத்தில் கரையும் காட்சியை பார்த்து மகிழினியின் கண்கள் அகலமாக விரிந்தது.
"உன் புருஷனே இந்த தம்பியை அவரோட உடன் பிறந்த சகோதரனா ஏத்துகிட்டாரு போலமா. அதான் அவர் கையால உன் புருஷனுக்கு இன்னைக்கு சடங்கு நடந்து முடிந்து இருக்கு" என்று மனநிறைவோடு ஐயர் சொல்ல,
வெள்ளை வேஷ்டியுடன் தன் மார்பின் மீது வெள்ளை துண்டை போர்த்திக் கொண்டு, நெற்றியில் பட்டையுடன் நின்று இருந்த கொடிவீரன், தெப்பக்குள்ளத்தில் நின்றபடி மகிழினியை குழம்பிய வண்ணம் பார்த்து கொண்டு இருந்தான்.
நடக்கும் அனைத்தும் நன்மைக்கா என்பது தெரியாது ஆனால் நடந்த விஷயத்தில் நமக்கு தேவையான நன்மைகளும் மறைந்து இருக்க தான் கூடும்.
மகிழினி பிண்டதை எடுத்து கொண்டு குளத்தின் படியில் இறங்கியவள், கால் தடுக்கி கீழே விழுந்த வேகத்தில் அவள் கையில் இருந்த பிண்ட உருண்டைகள் உருண்டோடி கொடிவீரனின் காலின் கீழ் விழுந்தது.
அந்த பிண்டதைக் கையில் எடுத்த கொடியும், அதைக் கீழே தவற விட, அந்த பிண்டங்கள் கொடி வீரனின் கையில் இருந்து, கீழே விழுந்து, தெப்பக்குளத்தில் கரையும் காட்சியைப் பார்த்து மகிழினியின் கண்கள் அகலமாக விரிந்தது
"உன் புருஷனே இந்த தம்பியை அவரோட உடன் பிறந்த சகோதரனா ஏத்துகிட்டாரு போலமா. அதான் அவர் கையால உன் புருஷனுக்கு இன்னைக்கு சடங்கு நடந்து முடிந்து இருக்கு" என்று மனநிறைவோடு ஐயர் சொல்ல
வெள்ளை வேஷ்டியுடன், தன் மார்பின் மீது வெள்ளை துண்டை போர்த்தி கொண்டு, நெற்றியில் பட்டையுடன் நின்று இருந்த கொடிவீரன், தெப்பக்குளத்தில் நின்றபடி மகிழினியை குழம்பிய வண்ணம் பார்த்து கொண்டு இருந்தான்.
படிக்கட்டில் கீழே விழுந்தபடியே ஏதும் புரியாதவளாய் அமர்ந்து இருந்தாள் மகிழினி.
"நீங்க எப்படி இங்க?" என்ற கொடி மகிழினியின் அருகில் வந்து, மேலே போர்த்தி இருந்த துண்டை சரி செய்துகொண்டே கேட்டான்
மகிழினியோ வார்த்தை வராமல் மெதுவாக கீழே இருந்து எழுந்து,
"வீராவுக்கு திதி கொடுக்க வந்தேன்" என்று கனத்த இதயத்தோடு சொன்னாள்.
"என்ன? நீங்க தனியா வந்திங்களா? ஏன் சுரேஷ்கிட்ட சொல்லி இருந்தா அவன் வந்து இருப்பானே?" என்று அக்கறையாக விசாரித்தான் கொடி.
"அண்ணி மாசமா இருக்கும் போது அண்ணனை இந்த சாங்கியம் எல்லாம் பண்ண சொல்ல எனக்கு மனசு வரல" என்று தன் அண்ணன் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தினாள் மகிழினி.
"அதுக்குன்னு நீங்க..." என்று ஏதோ சொல்ல வந்த கொடி சட்டென்று வார்த்தையை நிறுத்தினான். மனதிலோ, ‘ஐயோ வேண்டாம் வேண்டாம். நம்ம எதாவது கேக்க போய் இவங்க மறுபடியும் நம்மள ரொம்ப கேவலமா நினைச்சசுப்பாங்க’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் கொடி.
"என்னமோ சொல்ல வந்திங்களே?" என்று கொடியின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ள எண்ணினாள் மகிழினி.
"இல்லிங்க உங்க கணவர் பக்கம் இருந்து அவங்க நண்பர் யாரும் கூட வரலையான்னு கேக்க வந்தேன். ஆனா, நான் எதார்த்தமா எதாவது கேக்க வந்து, நீங்க அப்புறம் என் மேல இன்னும் வெறுப்பை காட்டுவீங்க. அதான் நான் அமைதியா இருந்துட்டேன்" என்றான் ஜாக்கிரதை உணர்வுடன்.
"வீரா வளர்ந்த ஆஸ்ரமத்துல, அவரோட அப்பா ஸ்தானத்துல இருக்குற ஒரு நல்ல மனிதன் தான் இன்னைக்கு வந்து இந்த சடங்கை செய்யறதா இருந்துச்சு. ஆனா அவருக்கு என்னாச்சுன்னு தெரியல. இன்னும் ஆள் வரல. அதான் நானே என் வீராவுக்காக இதை பண்ணலாம்னு நினைத்தேன்" என்று தன் கணவனை இன்றளவும் மனதில் சுமந்து இருக்கும் மனைவியாக, அவன் மீது இவள் கொண்ட அன்பை சொன்னாள் மகிழினி.
“ஒ... ஓகே. ஆனா அவர் ஏன் வரலைன்னு நீங்க போன் பண்ணி கேட்டு இருக்கலாமே?”
“என்கிட்ட செல்போன் இல்ல சார்.”
“ஒ... சரிங்க. அவரோட நம்பர் உங்களுக்கு தெரியுமா?”
“ம்... தெரியும்” என்றாள் அமைதியாக.
“உங்களுக்கு பிரச்சனை இல்லைனா என் போன்ல இருந்து வேணா அவருக்கு கால் பண்ணி என்ன விவரம்னு கேளுங்க” என்றான்.
“ம்...” என்று மகிழினி சொன்னதும், தன்னிடம் இருந்த கைபேசியை மகிழினி கையில் தந்தவன், "நீங்க என் போன்ல இருந்து அவங்களுக்கு கால் பண்ணி பேசுங்க. நான் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்" என்று சொன்னவன் தன் துணிகளை எடுத்து கொண்டு கோவிலின் பின் பக்கம் இருக்கும், ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்தான் கொடி.
கொடியின் உருவம் மறையும் வரை காத்திருந்த மகிழினி, சட்டென்று அவன் கைபேசியில் இருந்து, தன் கணவன் வீரன் ஆசிரமத்தின் உரிமையாளர் பழனியை அழைக்க, அவருடைய தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவருடைய கைபேசி எண் இணைக்கப்படாத பட்சத்தில், ஆசிரமத்தின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டவளின் அழைப்புக்கு ஒருவர் பதில் தந்தார்.
தொடரும்...