• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
மதுரை ரிஜிஸ்டர் ஆபிஸ்:

வழக்கம் போல் அந்த இடம் பரபரப்பாக இருந்தது...ஒரு பக்கம் சைக்கிளில் டீ கேனோடு வந்தவர் டீ டீ என்க,சிலர் அவரிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.


சிலர் தாங்கள் வாங்கிய சொத்துக்களை பத்திரப்பதிவு பண்ணுவதற்காக அங்கே ஒரு பக்கம் காத்திருக்க,இன்னும் சிலர் திருமண உதவித்தொகைக்காகவும் மற்ற அரசு உதவிக்காக விண்ணப்பிப்பதற்காக உட்கார்ந்திருக்க,இடை தரகர்களோ ஒரு பக்கம் அவர்கள் வந்த காரியத்தை விரைவில் முடித்து கொடுப்பதாக பேரம் பேசிக் கொண்டிருந்தனர்...

அப்பொழுது....

வக்கீல் தம்பி அடுத்தது நீங்கள் தான் போகணுமென்று அட்டென்டர் வந்து சொல்லவும்,அங்கு மணமக்களோடு இருந்த மாறனோ சரிங்கண்ணா என்றான்.

மணப்பெண் கோலத்தில் இருப்பவளுக்கு இந்த நிமிடம் வரையிலும் தனது வாழ்க்கையில் நடப்பது உண்மை தானா?இல்லை கனவு ஏதாவது காண்கிறோமா?என்று தனக்குள் எண்ணிக் கொண்டவளுக்கு அங்கிருக்கும் சூழல் உண்மைதான் என்பதை பிடறியில் அடித்த போல உணர்த்திக் கொண்டிருந்தது.

நமக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?

கனவிலும் இப்படி ஒரு நிகழ்வு நமது வாழ்நாளில் நடக்குமென்பதை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லையே.

"காதல் வந்தால் மனுசனை எந்த எல்லைக்கும் கொண்டு வந்து விடும் போல னு" எண்ணற்ற கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொண்டு தரையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

மேலும் சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,இளஞ்செழியன்-ஷமீரா தாஸ் என்கும் பெயர்கள் சற்று தள்ளி நின்றவர்களின் காதில் விழவும்,டேய் நம்மை தான் கூப்பிடுறாங்கள் வாடா என்ற மாறன் மற்றவர்களோடு முன்னே செல்ல மணமக்கள் இருவரும் அவர்களின் பின்னே சென்றனர்.

அங்கிருந்த ரிஜிஸ்த்ரர் இருவரின் டாக்குமெண்ஸை சரி பார்த்தவர்,என்ன வக்கீல் சார் ரொம்ப வேண்டியவங்களாயென்று அவர்களோடிருந்த அட்வகேட் தீரனிடம் கேட்க ஆமாம் மேடம்.

சரிங்க சார் எந்த பிரச்சினை வராமல் பார்த்துக்குங்க.ரெண்டு பேரும் மேஜர் தானென்றாலும் மற்றது எல்லாம் வெவ்வேறாக இருக்கென்றவர் இதில் சைன் பண்ணுங்களென்று நோட்டை நீட்ட,மணமகன் இடத்தில் S.இளஞ்செழியனென்று கையெழுத்திட்டான்.

ம்ம் பண்ணுயென்று அருகில் இருப்பவளிடம் செழியன் சொல்ல எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியவள், M.ஷமீரா தாஸ் என்று அவளும் கையெழுத்திட,மணமக்கள் இருவருக்கும் சாட்சி கையெழுத்தாக மாறன் அவன் மனைவி பானு,அட்வகேட் தீரன் அவன் மனைவி நசீராவும் கையெழுத்து போட்டனர்.

பின்னர்,ரெண்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு உள்ள கேமராவை பார்த்து உட்காருங்களென்றவர் சிஸ்டம் மூலயமாய் இருவரையும் போட்டோ எடுத்தனர்.

கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள் ரெசிப்ட் வந்துடுமென்று சொல்ல சரிங்க மேடமென்று வெளியே வந்தனர்.

மாறா,எப்படியும் ரெசிப்ட் வர அரை மணி நேரத்திற்கு மேல தான் டா ஆகும்.நாம ஏற்கெனவே பிளான் பண்ணிய போல கோயில்ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துடலாமென்று தீரன் சொன்னான்.

சரி டா போகலாமென்று பார்க்கிங்கிலிருந்த இனோவா காரில் ஏறியவர்கள் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலை நோக்கி சென்றனர்.

முன்பே பணத்தை கட்டி பதிவு செய்திருந்ததால் ஆபிசில் போய் இவர்கள் வந்த காரணத்தை சொல்ல,அவரோ அங்கிருந்த அய்யரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார்.

வாங்கோ என்றவாறு அய்யர் போக இவர்களும் அவரின் பின்னே சென்றனர்.

இந்தாங்கோ சாமியென்று தாலியும் மாலையும் இருக்கும் தாம்பாளத்தை பானு நீட்ட,அதை வாங்கிக்கொண்டு அம்மனிடம் சென்றவர் வேதங்கள் ஓதியபடியே மாலையை அம்மனுக்கு காட்டி எடுத்து வந்து இருவரும் போட்டுக்கோங்களென்றார்.

மச்சான் ம்ம் என்று மாறன் சொல்ல தனது இடது பக்கத்தில் நிற்பவளின் கழுத்தில் செழியன் மாலை போட,பாப்பா நீயும் மச்சானுக்கு போடுடா என்றான்.

ம்ம் ணா என்றவளும் மாலையை எடுத்து செழியனின் கழுத்தில் போட்டாள்.

நசீரா மெட்டி எங்கேடியென தீரன் கேட்க,என் கிட்ட தான் இருக்குங்க.

தாலிக்கு அர்ச்சனை செய்து மஞ்சள் குங்குமத்தை வைத்தவர் தாம்பாளத்தோடு வந்து கட்டுங்கோயென்க,பெற்றோரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக்கொண்டு தனது காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட,இவ்வளவு நேரம் குனிந்திருந்தவளோ தனது கழுத்தில் தாலி ஏறுவதை கண்டு தனது மான்விழிகள் விரிய நிமிர்ந்து பார்க்க,தன்னவளின் கழுத்தில் முடிச்சு போட்டுக் கொண்டே அவளை பார்த்தவன் இந்த பார்வையில தாண்டி விழுந்தேனென்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்று அய்யரும் மந்திரத்தை ஓத இவர்களோ பூக்களை தூவி மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்தனர்.

அம்பி குங்குமத்தை எடுத்து தாலியிலும் நெற்றியிலும் வைங்கோ என்கவும்,செழியனும் அவர் சொன்னதை கேட்டு தலையாட்டியவன் அதைப்போல செய்தான்.

அண்ணா இந்தாங்களென்று மெட்டி இருக்கும் சிறிய பெட்டியை நசீரா நீட்ட அதை வாங்கியவனோ கீழே குனிந்தான்..

தன்னவளின் பாதத்தை நோக்கி கையை நீட்ட,ஷமிராவோ தனது வலது காலை தூக்கி கணவனின் கையில் வைக்க, மெல்லிய பாதத்தை பிடித்தவன் தன்னவளின் நீண்ட கால் விரல்களில் மெட்டியை போட்டு விட,ஷமீராவிற்கோ தன்னவனின் ஸ்பரிசங்கள் சிலிர்ப்பை கொடுத்தது.

டேய் மச்சான் போதும்டா என் தங்கச்சி கால்ல விழுந்ததென்று மாறன் சிரிக்க,எல்லாம் நேரம் தான் மாமா என்றவாறு எழுந்தான்.

சோழனூர்:

சூரியனும் கிழக்கே உதயமாகுவதற்கு முன்பே வழக்கம் போல் எழுந்த அந்த பெண்மணியும்,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவர் வழக்கமாக படிக்கும் பைபிளை எடுத்துக் கொண்டு ஹாலில் இருக்கும் சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தார்...

சிறிது நிமிடங்கள் சென்று படித்ததை மூடி வைத்தவர் கண்ணை மூடிக்கொண்டு ஜெபத்தை செய்து முடித்து விட்டு பைபிளை அது இருக்கும் இடத்திலேயே எடுத்து வைத்தவர்,நேராக கிச்சனிற்குள் சென்று அடுப்பை பற்ற வைத்து பிரிட்ஜில் இருந்த பசும்பாலை எடுத்து சுட வைத்து,மகளுக்கு காபிக்கான பால் தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு டீ போட்டவர் ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து சேரில் உட்கார்ந்தவருக்கு அங்கிருந்த காலண்டர் கண்ணில் பட்டது...

இன்னும் இரண்டு நாட்களில் மகளுக்கு பிறந்தநாள் வருகிறதை பார்த்து இந்த முறை அவளுக்காக வாங்கி வைத்த பொருளை நினைத்தவர் இது பார்க்கும் போது கண்டிப்பா உனக்கு பிடிக்குமென்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

நேரமும் கடந்து சென்றது...காலை டிபனை செய்து முடித்தவர் என்ன இவளை காணவில்லையேனு அந்த இரண்டு மாடி கொண்ட வீட்டின் உள்ளே இருக்கும் படியில் ஏறி மேலே வந்தவர்,இந்த பொண்ணு என்ன இன்னும் தூங்குறாயென்றவாறு மாடியில் இருக்கும் மகளின் ரூமின் முன்பு போய் நின்ற எஸ்தர்,ஷமீ ஷமீ என்று கதவை தட்டினார்.

"கதவு திறந்த பாடில்லை".

இவ்வளவு நேரம் மகள் தூங்க மாட்டாளே?என்று நினைத்தவருக்கு ஒருவித பதட்டம் வந்து லாக்கில் கை வைக்க அதுவும் திறந்து கொண்டது.

உள்ளே வெறுமையான பெட் மட்டுமிருக்க கீழேயும் இல்லையே??என்று யோசனையோடு மாடியில் நின்று தோட்டத்தில் எங்கேயாவது மகள் நிற்கிறாளானு தேட,அங்கே பலவகையான செடி கொடிகள் மற்றும் மரங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.

எங்கே போனாளென்று தெரியலையேனு பதறியபடியே கதவை சாத்தி விட்டு கீழே வந்தவர்,தனது போனை எடுத்து மகளின் நம்பருக்கு கால் பண்ண ரிங்டோன் சத்தமோ அந்த ஹாலிலேயே கேட்டது.

எங்கே கேட்குதென்று எஸ்தர் தேட ஷோகேஸிலிருந்து சத்தம் வருவது தெரிந்து கண்ணாடி கதவை விலக்கி பார்க்க அங்கே போனும் அதன் கீழ் மடித்து வைக்கப்பட்ட வெண்மை நிற பேப்பரும் இருந்தது.

ஜீசஸ் என்றவாறு ஒருவித நடுக்கத்தோடு அந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினார்...

அன்புள்ள அம்மா அப்பாவிற்கு அபாக்கியவதி ஷமீரா எழுதுவது..

இதுவரை என் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவிலே நானும் இத்தனை வருடங்களாக கடந்து வந்தேன்.எனக்கென்று தனியாக எந்த விருப்பத்தையும் நான் வளர்த்துக்கவில்லை.

வளரத்துக்கவில்லை என்பதை விட எனக்கென்று தனி விருப்பத்தை நீங்கள் இருவரும் வளரவே விடவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

முதன் முதலாக நான் விரும்பிய, என்னை மட்டுமே நேசிக்கும் ஜீவனை எந்த சூழலிலும் என்னால் இழக்க முடியவில்லை.

நானும் கடந்த ஒரு வருடமாய் உங்களிடம் கெஞ்சி,கதறி போராடி பார்த்தும் என் விருப்பத்திற்கு இணங்க உங்களுக்கு மனம் வரவில்லை.

பெற்ற மகளை விட உங்களுக்கு மதமும்,சாதியும் பெரிதாக இருக்கின்றது.இனி இந்த சாக்கடை பேய்ங்களையே கட்டி காப்பாத்துங்கள்.

எனக்கான வாழ்க்கையை நான் தேடி போகின்றேன்.

தயவு செய்து என்னை தேடாதீர்கள்.இருக்கும் நாட்களிலாவது எனக்கு பிடித்தவனோடு என் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொள்கின்றேன்.

ஷமீரா தாஸ்..

மகளின் கடிதத்தை படித்து முடித்தவர் அடி பாவி மகளேயென்று அதிர்ந்தார்....

வனிச்சூர்:

ஏண்டி வானதி உன் மகன் எங்க தான் போயிருக்கான்?.ரெண்டு நாளா ஆள் விலாசமே இல்லையென்று செல்லதுரை தனது மனைவியிடம் சத்தம் போட...

இங்க பாருங்க காலையிலே என் வாயை புடுங்காதீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்.

போற வர இடத்தை அப்பனும் மவனும் நேரம் தேதி தவறாமல் என்கிட்ட சொல்லிட்டு போற போல
முந்தா நாளுல இருந்து இதே பாட்டை பாடிட்டு இருக்கீங்க என்றவாறு மாட்டுக்கு கரைத்த தீவனத்தை எடுத்து போய் கஞ்சி தொட்டியில் ஊற்றிய வானதி,கவனையில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வந்து காட்ட, வாயில்லாத ஜீவன்களோ வேகவேகமாக குடித்து தனது பசியை போக்கிக் கொண்டிருந்தது.

ஏட்டி உன் மவனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?

அவன் கூட சுத்துர பயலுவோலாம் இங்கன தான் கிடக்காணுங்க..உன் அண்ணன் மவனும் எப்பவும் போல வேலைக்கு போறான்...புலிப்படை போல எல்லா எருமைங்களும் ஒன்றாக தான் மேயுமென்று தனது மகன் இளஞ்செழியனை பற்றி யோசனையானார்.

மகனை பற்றி வானதிக்கும் உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது.முந்தா நாள் காலை வழக்கம் போல அவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு போனவன் மதியவாக்கில் போன் பண்ணி வேலை விஷயமா வெளியூருக்கு போறேன்மா என்றவன் தான்.இதுவரை அவனிடமிருந்து எந்த போனும் வரவில்லை.

மகனின் நெருங்கிய நண்பனான தனது அண்ணன் மகன் கண்ணனிடம் விசாரிக்க,கம்பெனி வேலையா வெளியே போயிருக்கான்.
நீ ஏன் கவலை படுற?அவன் என்ன கொழந்தையாத்தை?

உன் மவன் உலகத்தையே வித்துடுவான் போ...போய் ஊட்டு வேலையை பாரென்று சமாளித்து அனுப்பியவன்,மீண்டும் தனது நண்பனுக்கு கால் பண்ண செழியன் அட்டென் பண்ணிய பாடில்லை.....

ஏட்டி வயித்துக்கு எதாவது போட போறியா இல்லையா என்கும் குரலில் கலைந்தவர்,இதோ வரேங்கயென்று கழுவி உள்ளே போனவர்,சமையற் கட்டிற்குள் சென்று இரவே கிண்டி வைத்த கேப்பை களியோடு,சுண்ட வைத்த மீன் குழம்பையும் எடுத்து வந்து முற்றத்தில் வைக்க செல்லதுரையும் வந்து உட்கார்ந்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
உணவு சுவையாக இருந்தாலும் மகன் பற்றிய சிந்தனையிலே சாப்பிட்டு எழுந்தவர் தோட்டத்தில் மிளகாய் பறிக்க ஆள் வருது.

மாசானிய அனுப்புறேன் டீ போட்டு குடுத்தனுப்பு வானதி என்றவாறு கொடியில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டு வெளியே வந்தவர் அங்கிருந்த பைக்கில் ஏறி தங்களது விவசாய நிலத்தை நோக்கி சென்றார்.

ஒருவேளை காதல் கீதல்ன்னே யாருக்காச்சும் உதவி பண்ணுகிறேன்னு போயிருக்கிறானா என்பதை யோசித்தவர் பின்னர் தனது மகனின் குணத்தை உணர்ந்து இந்த முரட்டுப் பயலுக்கு அது ஒத்து வராது...

வேற ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கிட்டானா தெரியலையேனு பலவிதமான யோசனையோடு வண்டியை ஓட்டிச்சென்றார்

போகும் வழியில் பக்கத்து வயலுக்கு சொந்தக்காரரான வாசுவும் வர இருவரும் பேசியபடியே அந்த மலையடிவாரத்தில் வண்டியை ஓட்டினர்.

நண்பனின் முகத்தை பார்த்த வாசு என்ன தொரை யோசனை எல்லாம் பலமா இருக்கென்க,எல்லாம் உன் மருமவனை பத்திதான்.

ரெண்டு நாளா ஆள காணுமென்றார்.

ஏய்யா உனக்கே இது அக்கப்போரா இல்லையா?

மாப்ளை என்னமோ நம்ம போல காடு கழனியில உழைக்குற ஆளுனு பேசிட்டு கிடக்க..

அந்தா பெரிய பேக்டரில சூப்ர்வைசர்னா சும்மாவா?எதாவது முக்கியமான வேலையா இருக்கும் தொரை.
உம்பாட்டுக்கு கண்டதை யோசனை பண்ணி சும்மா மனச போட்டு உழட்டாதேயா..

என்னமோ தெரியல வாசு...எனக்கு மனசு எதோ சஞ்சலமாக இருக்கு.பயல் என்ன காரியமா போயிருந்தாலும் அந்த மலையாத்தா புண்ணியத்துல நல்லபடியா முடிச்சுட்டு சுளுவா வீடு வந்து சேரணும்...

அதுலாம் மாப்ளைக்கு ஒன்னும் பிரச்சினை இருக்காதுய்யா.கண்ணன் இங்க தானே இருக்கான் பொறவு என்ன..அதுவும் சரிதான்...ரெண்டும் ரெட்ட மாடு போல தானே சுத்திட்டு கிடக்குங்களென்று செல்லதுரையும் சிரித்தார்.

அப்போ என்னத்துக்கு மொசரகட்டைய ஏழு மொழத்துக்கு தூக்கி வச்சிருக்கயென்க,மொகரையே அப்படி டா..நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை செய்யுறேனென்க,அதற்கு வாசுவோ அதுவும் வாஸ்தவம் தானென்று சிரித்தார்.

பின்னர் இருவரும் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அவரவர் வயலுக்கு இறங்கி சென்றனர்..

இருவர் வீட்டு வயலிலும் வேலை நடந்து கொண்டிருக்க அவர்களும் ஒரு ஆளாய் இறங்கி மிளகாய் பறிக்க ஆரம்பித்தார்கள்

சோழனூர்:

அண்ணி அண்ணி என்றவாறு வீட்டிற்குள் வந்த ராணி அங்கே அதிர்வாய் நிற்கும் எஸ்தரை பார்த்தவர்,அண்ணி என்னாச்சென்று போய் அவரின் தோளை தொட்டதும் அதில் நிகழ்விற்கு வந்தவர் அய்யோ அண்ணி இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு போய்ட்டாளே நான் என்ன பண்ணுவேன்னு கதறினார்.

ராணிக்கோ தனது அண்ணி அழும் காரணம் புரியாமல் என்னாச்சினு சொல்லுங்கண்ணி.

எதுக்கு அழறீங்கள்?

அடியேய் ஷமீ ஏய் ஷமீ எங்கடி இருக்கயென்று சத்தம் போட தனது நாத்தனாரிடம் கையிலிருந்த கடிதத்தை எஸ்தர் நீட்ட யோசனையோடு வாங்கி படித்த ராணிக்கும் அய்யோ என்றானது.

"ஏ அண்ணி செத்த வாய மூடுங்க".

நீங்களே அக்கம் பக்கம் காட்டி கொடுத்துடுவீங்க போலனு மெயின் கதவை சாத்திட்டு வந்து இடுப்பிலிருந்த போனை எடுத்து தனது கணவருக்கு கால் பண்ணினார்.

அந்த பக்கம் அட்டென் பண்ணிய அந்தோணி சொல்லு ராணி என்க,மாமா கொஞ்சம் சீக்கிரம் எங்க வீட்டுக்கு வாங்களென்று போனை வைத்தவர் அண்ணி அவள் எங்க இருந்தாலும் காதும் காதும் வைத்த போல கண்டு புடிச்சிடலாம்.

நீங்க அழாதீங்களென்று கணவரின் வருகைக்காக காத்திருக்க சிறிது நிமிடத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க அங்கு அந்தோணி தான் நின்றார்.

ஏய் எதுக்குடி இப்படி உசுர போற போல வர சொன்னா.அங்க லோடு ஏத்த லாரிங்க வரிசையா வந்து நிக்குதென்று சத்தம் போட....

அய்யோ மாமா உன் மருமவள் நம்ப தலையில கல்லை தூக்கி போட்டுட்டு போய்ட்டாள்...

என்னடி ஒளரிட்டு இருக்க?

புரியுற போல சொல்லி தொலை என்றவர் எங்கே எஸ்தரை காணுமென்க அண்ணா என்று உள்ளேயிருந்து எஸ்தர் அழுகும் சத்தம் கேட்டது.

என்னாச்சுடி?

ஏன் தங்கச்சி அழுதுயென்று வீட்டிற்குள் வர,அய்யோ அண்ணா இந்த பாவி இப்படி பண்ணிட்டாளே?அந்த மனுஷனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேனென்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்...

எஸ்தரின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் என்னாச்சு என்று ஓடி வந்தனர்....

மதுரை:

மூன்று ஜோடிகளும் கோயிலை சுற்றி வந்து அங்கிருந்த மண்டபத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு மீண்டும் ரிஜிஸ்டர் ஆபிசிற்கு வந்தனர்.

மாறா நீ போய் பார்த்துட்டு வாடாயென்று தீரன் சொல்ல சரிணா என்றவன் உள்ளே போய் விசாரிக்க பதிவு திருமணத்திற்காக பணம் கட்டிய ரசீதை கொடுத்தனர்.

இன்னும் ரெண்டு இல்லை மூன்று நாளில் ஒரிஜினல் சர்டிபிகேட் வந்து விடும் அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்களென்க,சரிங்க சாரென்று வெளியே வந்து காரில் ஏறி விட்டு விஷயத்தை சொல்ல சரியென்று அவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட்டை நோக்கி சென்றனர்.

அரைமணி நேர பயணத்தில் வந்து சேர்ந்தவர்கள் மூன்றாவது மாடிக்கு லிப்டில் சென்று இறங்க,கொஞ்சம் இருங்களென்ற பானு, வீட்டிற்குள் சென்று ஆலம் கரைத்து எடுத்து வந்தவள் மணமக்களுக்கு சுற்றி நெற்றியில் பொட்டு வைத்து உள்ளே வாங்களென்றாள்.

யார் வீடு இதுவென்று ஷமீரா சுற்றி பார்க்க,பாப்பா நம்ப வீடு தான் மா பயப்படாதேயென்ற தீரன்,நசீரா பாப்பாவை ரூமிற்கு கூட்டிப்போ என்கவும் வாம்மாயென்று இருவரும் ஷமீராவோடு பக்கத்து அறைக்குள் சென்றனர்.

அப்புறம்டா என்ன பண்ண போறயென்று தீரன் கேட்க,மாமா நாங்க இன்றைக்கே ஊருக்கு கிளம்புறோமென்று செழியன் சொல்ல...

டேய் லூசாடா நீ?

இப்போ கிளம்பி மிட் நைட்ல போய் சேருவியா?

அங்க என்ன நிலவரம்னு தெரியலை வேற.அந்த தடிமாடு ஒரு மண்ணு போனும் பண்ணலையென்று தனது போனை எடுத்து பார்க்க அதில் கண்ணனிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டுகால் வந்திருந்தது.

அச்சோ என்றவாறு தனது தம்பிக்கு கால் பண்ண இரண்டாவது ரிங்கிலே அட்டென் பண்ணியவன் அண்ணா எங்கே தான் போனயென்று கத்தினான்.

இப்போ எதுக்குடா கத்துற?

எல்லாம் முடிஞ்சி வீட்டிற்கு இப்போது தான் வந்தோமென்க,அவன் எங்கே இருக்கான்?போனை குடு.

செழியா இந்தா கண்ணா பேசுறானென்று போனை குடுத்தும், தனது மாமன் மகன் கையிலிருந்து போனை வாங்கியவன் சொல்லு மாப்பு என்றது தான் மிச்சம் மூச்சு விடாமல் வண்ட வண்டையாய் கண்ணன் திட்ட ஆரம்பிச்சிட்டான்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் போன் அழைப்பை கட் பண்ணியவன் ஊப் என்க,தீரனும் மாறனும் அவன் செயலைக் கண்டு சத்தமாக சிரித்து விட்டனர்.

என்ன மாமா நக்கலா?

"இல்லைடா"

ஒருத்தன் பேசுனதையே உன்னால் தாங்க முடியலையே...நாளைக்கு ஊருக்குள் போனால் என்ன ஆவயென்று யோசிக்குறோமென்க ம்ம் சமாளித்துதான் ஆகணும் மாமா.

எதுக்கு இன்னும் நாளை வளத்திக்கிட்டு.என்னைக்கு இருந்தாலும் அங்க போய் தானே ஆகணும்.அதை இப்பவே செய்திடலாம்.

தீரா மாப்ளை சொல்வதும் சரி தானானென்று மாறன் சொல்ல சரிடா....நடப்பது நல்லதாகட்டும்.முதல்ல போய் அந்த புள்ளைக்கு மாத்திக்க துணி வாங்கிட்டு வாடா.

ம்ம் மாமா...

அவளை கூப்பிட்டு போறேன்.புடிச்சதை வாங்கிப்பாளென்க ,சரிடா என்ற தீரன் இந்தா பைக் சாவியென எடுத்துக் கொடுக்க அதை வாங்கியவனிடம், தனது ஏடிஎம் கார்டு எடுத்து மாறன் நீட்ட, கையில பணம் இருக்கு மாமா.

நீ வச்சுக்க... எனக்கு தேவை என்றால் உன் கிட்ட தானே கேட்பேன் என்றவன் பக்கத்து அறை வாசலுக்கு சென்று நசீரா என்கவும் உள்ளே வாங்கணா என்றாள்.

செழியன் உள்ளே வந்ததும் பானுவும் நசிராவும் எழுந்து வெளியே சென்றனர்.செழியனோ கதவின் மீது சாய்ந்து நின்று தன்னவளை இமைக்காமல் ரசித்து பார்த்தான்.

தான் கட்டிய மஞ்சள் தாலி கழுத்தில் பளபளக்க,பட்டுப்புடவையில் அதிக அலங்காரமின்றி கண்ணுக்கு உருத்தாத அழகாய் இயல்போடு உட்கார்ந்திருப்பவளையே உற்று பார்க்க,கணவனின் பார்வை தன்னை மேய்வது தெரிந்தும் அவன் பக்கம் திரும்பாமல் கீழே குனிந்து உட்கார்ந்திருந்தாள்.

ஓய் பொண்டாட்டி என்க...

இதுவரை கீழே குனிந்து உட்கார்ந்திருந்தவள் தன்னவனின் பிரத்தியோகமான அழைப்பை கேட்டதும் நிமிர்ந்து பார்க்க வா என கண்ணால் அழைத்தான்.

முடியாதென்று தலையசைத்தவளை மீண்டும் வா என தனது கைகளை விரித்து நிற்க எழுந்து வேகமாய் போனவள் சில அடி தூரத்திலே தயங்கி தேங்கி நிற்க ....

எட்டி தன்னவளை இழுத்தவன் இடது கையால் அவள் இடுப்பை வளைத்து தன்னோடு இறுக்க பெண்ணவளுக்கோ முதன் முதலாய் தன்னவனின் தீண்டல்கள் நடுக்கத்தை தந்தது.

சந்தோஷம் தானேடி என்க நிமிர்ந்து செழியனின் கண்ணை பார்த்த ஷமீரா அப்போ உங்களுக்கு இல்லையா?.

தன் சண்டக்காரியின் இயல்பு திரும்புவதை கண்டு மனதிற்குள் சிரித்தவன் ஹம் அதுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

ஓஓஓ அவ்வளவு சலிப்போடு சொல்ல வேண்டாமென்று அவனிடமிருந்து விலகி திரும்பியவளின் கையை எட்டி பிடித்தவன் வலுவாய் இழுக்க செழியனின் நெஞ்சோடு மோதி நிற்பவளின் காதோரம் குனிந்தவன் காதல் மொழிகளை பொறுமையாய் அவளுக்கு மட்டும் கேட்பது போல சொல்ல பெண்ணவளுக்கு நாணம் வந்து அவனிடம் இருந்து விலக முயன்றாள்.

சரி வா போய்ட்டு டிரஸ் வாங்கிட்டு வரலாம்.எவ்வளவு நேரம் தான் இந்த புடவையோடு நிற்ப என்க,சரி நீங்க வெளியே போங்கள் நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேனென்றாள்.

நீ மாத்துடி...அதுக்கு நான் ஏன் வெளியே போகணுமென்றவாறு மனைவியின் கழுத்தில் முத்தம் வைக்க இப்படி இப்படி என்று தடுமாறியவளுக்கு ம்ம் அடுத்து என்றான்.

இல்லை இல்லை நீங்க வெளியே போங்க நான் 5 மினிட்ஸில் வரேனென்றாள்.முடியாது நான் இங்கே தான் இருப்பேனென்று அடம் பிடித்தான்...

பிளிஸ் வெளியே போங்களென்று அவனிடமிருந்து அசைந்தபடியே சொல்ல,காதல் மனைவியின் அங்கங்கள் அவனோடு உரசியபடி இருந்தால் அவனுக்குள் இருக்கும் காதல் வெள்ளம் மடை திறந்து விடும் என்பதால் தன்னை கட்டு படுத்தியவன் மேலும் அவளை சோதிக்க விரும்பாமல் சரி கிளம்பி வா என்றவாறு அங்கிருந்து சென்றான்.

சிறிது நொடியில் கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்தவளுக்கு இதில் நீ போட்டுருந்த டிரஸ் இருக்கு இப்போதைக்கு போட்டு வா..

ஷமீராவும் சுடிதாரை மாற்றிக்கொண்டு வெளியே வர அவர்களிடம் சொல்லியபடி இருவரும் படியிலிறங்கி கீழே வந்தனர்.

செழியன் பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ண ஷமீராவோ பின்னாடி ஏறி உட்கார்ந்ததும் இருவரும் அங்கிருந்து டவுனை நோக்கி சென்றனர்.

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
சூப்பர் பாப்பா
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top