Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்:
ஏண்டி நான் தான் அவள் உறவு வேண்டானு சொல்லுறேன்.உன் அண்ணன் என்னவென்றால் அந்த ஓடுகாளியோட பங்ஷனுக்கு போறேனு ஒத்த காலில் நிக்கிறாரே,என்னடி இதெல்லாம்?
உன்னை உதைச்சி உங்கப்பன் வீட்டுக்கு துரத்தாம வீட்டுக்குள்ள வச்சிருக்கேன் பாரு அதான் டி நான் பண்ணிய பெரிய தப்பு என்றவாறு மகி சாப்பிட,எஸ்தரோ எதுவும் பேசாமல் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக கணவனுக்கு பரிமாறினார்.
ஒத்த புள்ளைய ஒழுங்கா வளர்க முடியலை,இவயெல்லாம் பொம்பளையா என்றபடியே மனைவி சமைத்த நண்டை ருசித்து சாப்பிட்டான்.
எஸ்தருக்கோ சூடாக இருக்கும் குழம்பை எடுத்து கணவன் தலையிலே கொட்ட வேண்டும் போல அவ்வளவு ஆத்திரம் வந்தது.
என் மானம் மரியாதை எல்லாவற்றையும் உன் மவள் காத்துல பறக்க விட்டுட்டா டி....என்னை பார்த்தால் பம்மிட்டு போற பயலுங்க எல்லாரும் இன்னைக்கு வாய்க்கு வந்த போல பேசுறாங்கடி.
இதுக்கெல்லாம் யாரு மூல காரணம் நீ பெத்து வச்ச அவளால் தாண்டி என்று திட்டினாலும் வயிறு முட்ட சாப்பிட்டு எழுந்த மகி வாஸ்பேசனில் கையை கழுவிட்டு செல்ல,எஸ்தரோ வரும் அழுகையை அடக்கிக் கொண்டு மீதமுள்ள உணவை எடுத்து மூடி வைத்துவிட்டு சாப்பிட்ட தட்டை மட்டும் கழுவி வைத்தார்...
வயிறு பசித்தாலும் மனதிற்குள் இருக்கும் வேதனையில் சாப்பிடும் எண்ணம் வராமல் தோட்டத்து பக்கமிருக்கும் கதவை திறந்து போய் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூட தன்னை மீறி கண்ணீர் வடிந்து ஓடியது. ..
அப்படியே இந்த மனுஷன் குடும்பத்துல எல்லாம் யோக்கியமா இருக்குறானுங்க? எவங்களும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கவே இல்ல பாரு,என் பொண்ணு தான் அதிசயமா பண்ணிக்கிட்டாளா?
ஏன் இவங்க சித்தப்பா பையன் காதலித்து கல்யாணம் பண்ணிக்கலையா?.இல்ல இவங்க தம்பி மவ தான் எழுத்த வீட்டு பையனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலையா?அதுக்காக எல்லாரும் உசுர விட்டுட்டாங்களாயென்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டவருக்கு வாய் விட்டு கேட்க முடியாத சூழ்நிலை...
ஏனென்றால் எஸ்தருக்கு தற்போதைய போக்கிடம் அண்ணன் வீட்டைத் தவிர வேறு இல்லையே...வாழ்ந்தாலும் செத்தாலும் தலையெழுத்து இந்த வீட்டில் தானே என்னும் உண்மை நிலையை உணர்ந்தார்.
இது தான் தன் தலைவிதி.எத்தனையோ முறை தனது தாய் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னாரே...அவன் சரியான சிடு மூஞ்சி,கோவக்காரன்,உன் குணத்துக்கும் அவனுக்கும் ஒத்து வராது வேண்டாம் எஸ்தர்னு..
அன்று அவர் சொன்னதை கேட்காமல் தன் அத்தை மகன் என்ற எண்ணத்தில் தானே இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்.அதுக்கு தான் இன்னைக்கு நான் அனுபவிக்கிறேன்.
ஷமி ஏன் டி இப்படி பண்ணுன?
நான்தான் சொன்னேனே இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேண்டாம்,உன் அப்பன் ஒத்துக்க மாட்டார் என்று...என்கிட்ட சரிமானு தலையாட்டிட்டு இன்னைக்கு எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க உனக்கு மனசு வந்துச்சி?
எதா இருந்தாலும் அம்மா உனக்காக பார்த்து பார்த்து செய்தனே,அப்பா ஊருக்குள்ள இல்லாமல் ஒரு பொம்பளையா இருந்து உன்னை வளர்த்து ஆளாக்கினேனே டி.
நாலு பேரு நாக்கு மேல பல்லு போட்டு ஒரு வார்த்தை உன்னை தவறாக பேசிடக்கூடாது என்பதற்காகத் தானே நீ கேட்கும் முன்பே உனக்கு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.அதுக்காகவா இந்த அம்மாவுக்கு இப்படி ஒரு நல்ல பேரை வாங்கி வச்சுட்டு போன?.ஒரு நிமிஷம் கூட என் நிலைமையை நினைத்து பார்க்கவில்லையே டி..
உனக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி சீரும் சிறப்புமா பாபு கூட வாழ வைக்கணும்னு நான் கனவு கண்டுக்கொண்டு இருந்தேனே,
என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டு இன்னைக்கு உன் அப்பன் கிட்ட என்ன வாங்காத பேச்செல்லாம் வாங்க வச்சிட்டு போயிட்டியே டி பாவி..
25 வருஷமா உன்ன பெத்து வளர்த்து பாதுகாத்த எங்களை விட,இன்னைக்கு வந்தவன் உனக்கு பெருசா போயிட்டானா டி?
கடைசி வரைக்கும் அவன் கூட நல்லபடியா நீ வாழ்ந்து காட்டுனாக்க நல்லது.அவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் எந்த நம்பிக்கையிலடி நீ போன?
உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டியே டி என்று சத்தமின்றி கதறி அழுதார்.
அப்பொழுது மகளுக்கு நாளைக்கு பிறந்தநாள் என்கும் ஞாபகம் வந்தது. ஐயோ என் பொண்ணுக்கு நாளைக்கு பிறந்தநாளாச்சே.ஒவ்வொரு வருஷமும் என் பொண்ணுக்காக ஆசையா ஏதாச்சும் ஒரு பொருளை வாங்கி சர்ப்ரைசா கொடுப்பேனே..
இந்த வாட்டியும் உனக்கு கொடுப்பதற்கு உன் பேரு எழுதுன டாலரை செய்து வச்சிருக்கேனே,அதை நான் யாருக்கு போய் கொடுப்பேன்??இன்னும் ரெண்டு பிள்ளையா நான் பெத்து வச்சிருக்கேன் உன்ன மறந்து அவங்க கூட நேரத்தை போக்குறதுக்கு..
ஒன்னே ஒன்னு தானே கருவேப்பிலை கொத்து போல பெத்து வெச்சேன்...எதுக்கு ஆண்டவரே எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்தீங்க என்று கதற.....
அப்பொழுது அண்ணி அண்ணி என தனது நாத்தனாரின் குரல் கேட்கவும், கண்ணை துடைத்தவர் தோட்டத்தில் தான் இருக்கிறேன் வாங்களென்றார்.
தோட்டத்து வழியாக வந்த ராணியும் தனது நாத்தனார் முகத்தை பார்த்து விட்டு எதுக்கு மூஞ்சிய தூக்கி இப்படி வச்சுட்டு இருக்க?
அழுதியா?
அண்ணன் ஏதாச்சும் சொல்லுச்சா?
உன் அண்ணன் எதுவும் சொல்லவில்லை என்றால்
தானே ஆச்சரியப் படணுங்கண்ணி..
என்னமோ நான் அவளை ஓட சொன்ன போல பேசுறாரே...ஏன் உங்க குடும்பத்தில் யாருமே இந்த தப்பு பண்ணலையா சொல்லுங்க?
உங்க சின்ன அண்ணன் பொண்ணு பண்ணலையா?உங்க சின்ன தம்பி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிலையா?அதுக்காக அவங்க எல்லாரையும் வெட்டி போட்டுட்டீங்களா என்கவும்,விடு எஸ்தர்..
கோவத்துல அண்ணன் பேசுது அது குணம் தான் உனக்கு தெரியுமே,நீ ஏன் அதை பெருசா எடுத்துக்குற?.
இப்படி வாழ்க்கை முழுவதும் இதையே சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?எல்லாத்துக்கும் நான் பொறுத்துப் போயிட்டே இருக்கணும் அப்படி தானேனு கண்ணை துடைத்துக் கொண்ட எஸ்தர்,சரி சொல்லுங்க அண்ணி..
நானும் உங்க அண்ணனும் உங்க சித்தி கூட நாளைக்கு வனிச்சூருக்கு போகிறோம்.
அதான் எங்க அண்ணன் சொல்லிட்டே தாய்க்கு அடுத்தது தாய் மாமனென்று. இந்த உறவாவது என் பொண்ணுக்கு இருக்கேனு நெனச்சு நான் சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் என்கும்போது எஸ்தரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது..
எல்லாம் ஒரு கால நேரம் தான்..ஆண்டவர் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் இப்படி பண்றாரென்று ராணி சொல்ல... உங்க மருமகள் செஞ்சதுக்கு எதுக்கு அண்ணி ஆண்டவர் மேல பழியை போடணும் என்று விரக்தியாக சிரித்தார்....
அப்படி இல்லைங்கண்ணி.
இன்னார்கு இன்னார் என்பதை ஆண்டவர் எப்பயோ முடிவு பண்ணிட்டாரு...நாம நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்னு...
மனிதரோட விருப்பமும் அவர் செயலும் ஒன்னாகிட முடியுமா என்க,எஸ்தரோ அதுவும் சரி தானென்றார்.
வனிச்சூர்:
டேய் நீ இரு நான் வாங்கிட்டு வரேன் என்றவாறு வாங்கிக் கொண்டு வர பாபுவோ அவனை முறைத்தபடி கார் நிற்கும் இடத்திற்கு சென்றான்.
பின்னர் இருவரும் அங்கிருந்த மலைப்பாதையின் வழியா போனார்கள்.அடேய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் யாரையுமே காணுமே?
என்க,ஊருக்குள்ள போய் விசாரிக்கலாம்டா என்று பரத் சொல்லவும் சரிடா என்றான்.
இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கில்லையாடா...ஆமாண்டா சூப்பரா இருக்கென்று இருவரும் அங்கிருந்த மலைகளையும் விவசாய நிலங்களையும் ரசித்துக்கொண்டே அந்த மலையடிவாரத்தின் ஓரமாக பயணம் செய்தனர்.
அரை மணி நேரம் கடந்திருக்க அப்பொழுது அவர்களுக்கு எதிரே ஒரு பெண் கையில் பிரம்புக் கூடையை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து அந்த பொண்ணுகிட்ட கேட்கலாமென்று பரத் சொல்ல,சரிடா நான் கேட்கிறேன் என்கவும்,அவனும் காரை ஓரமாக நிறுத்தினான்.
பாப்பா பாப்பா என்று பாபு கூப்பிட அவளோ திரும்பி பார்த்து முறைத்தாள். பாப்பாயென்று கூப்பிட்டதுக்கு எதுக்குடா இந்த பொண்ணு முறைக்குது என்று பாபு சொல்ல,பின்ன...அந்த புள்ளைய பார்த்தா பாப்பா போலவா இருக்கு தடி மாட்டு பயலே என்று முறைத்தான். ..
யோவ் கண்ணு தெரியலையா?என்னை பார்த்தால் பால்வாடி போகும் பிள்ளையாவா இருக்கென்று அங்கிருந்தவள் திட்ட,தங்கச்சி அவன் ஏதோ தெரியாம சொல்லிட்டான்.
நாங்கள் ஊருக்கு புதுசு.நீ தப்பா எடுத்துக்காதம்மா என்று பரத் சொல்லவும் பாபுவை முறைத்தவள் சரிங்கண்ணா எதுக்கு என்னை நிறுத்துனீங்க என்க...ஒன்னும் இல்லமா.இன்னும் தெருவுக்குள்ளே போக எவ்வளவு நேரம் ஆகுமென்றான்.
இன்னும் கொஞ்ச தூரம் போய் திரும்பினாலே தெரு வந்துடுங்கணா என்றாள்.சரிமா என்றவன் காரை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து சொல்ல கண்ணாடி வழியாக அவளை பார்த்த பாபுவோ,ஏன்டா பாப்பா என்று சொன்னதுக்காடா அந்த பொண்ணுக்கு இவ்வளவு கோவம் வருது என்றான்.
அதேபோல் ஐந்து நிமிட பயணத்தில் தெரு ஆரம்பிப்பது தெரிந்தது.அங்கே டீக்கடை ஒன்று இருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தியவன்,அண்ணா செழியன் வீடு எங்கே இருக்கென்க,இவர்கள் பார்க்க டிப் டாப்பாக இருப்பதால் கூட படித்த பசங்க போல என்று நினைத்தவர் இங்கிருந்து போய் வலது பக்கம் திரும்பினால் நாலாவது பெரிய வீடுப்பா என்றார்.
ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு அதே போல்,அவர் சொன்ன வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும் அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று செழியன் செழியன் என்று கூப்பிட,தனது மகனின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவதை கேட்ட வானதியோ வெளியே வந்து பார்த்தார்.
வணக்கம்மா செழியன் இல்லைங்களாமா என்கவும் உள்ள வாங்கப்பா என்று வீட்டிற்குள் கூப்பிட்டு போனவர் உக்காருங்கப்பா தண்ணி எடுத்துட்டு வரேனென்று போனார்..
இருவரும் அந்த பெரிய வீட்டை சுற்றிப் பார்த்தார்கள்.சிறிது நிமிடத்தில் வானதியும் இரண்டு சொம்பில் மோர் கலந்து எடுத்துட்டு வந்தவர் இந்தாங்கப்பா குடிங்க என்றார்.
இருவரும் குடித்து முடித்து விட்டு சொம்பை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்து விட்டு நாங்க செழியனை பார்க்க வந்திருக்கோம் என்க, செழியன் இங்கதான் இருக்கிறான்.
இதோ போன் போட்டு வர சொல்றேன் பா...ஆமா நீங்க அவன் கூட படிச்ச பிள்ளைகளா?.உங்களை இதுக்கு முன்ன நம்ப வீட்டில் பார்த்ததே இல்லையே பா?.
ரெண்டு பேரும் எந்த ஊரு பா?