Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
கவிதா மாடிக்கு போய் அக்கா கிட்ட அளவு பிளவுஸ் வாங்கிட்டு வாயேன்று புவனா சொல்ல சரிமா என்றபடி மேலே போனவள் அக்கா அக்கா என்று ரூம் கதவை தட்டினாள்.
ஷமீராவும் கதவை திறக்க, அக்கா என்றவள் வந்த விஷயத்தை சொல்ல, அவளோ எதுக்குடா என்றாள்..
அது தெரியலை கா.அம்மா தான் வாங்கிட்டு வர சொல்லுது என்கவும் சரியென்று கல்யாணத்திற்காக போட்டிருந்த பிளவுஸை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கிக்கொண்ட கவிதாவும் கீழே போய் புவனாவிடம் கொடுக்க பக்கத்து தெருவிலிருக்கும் டைலர் வீட்டிற்கு கவிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
செழியனோ தனது மனைவிக்கு வாங்கிய போனை எடுத்துக் கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்தான்.சுமதி பாட்டியோடு அவள் மாடியில் மிளகாய் காய வைத்துக் கொண்டிருப்பதால் கணவன் வந்தது தெரியவில்லை.
வீட்டிற்குள்ளே வந்தவன் எங்கே யாரையும் காணும் என்றவாறு கிச்சனில் எட்டி பார்க்க அவன் குரலை கேட்ட ரஞ்சனியோ கவிதாவும் அக்காவும் டெய்லர் கடைக்கு போயிருக்காங்க..
உன் பொண்டாட்டியும் அம்மாச்சியும் மாடியில் மிளகாய் காய வைக்கிறார்கள் என்க...சரிங்கத்தை என்றவாறு படியிலேறி மேலே சென்றான்.
ஷமீராவோ ஆச்சியிடம் பேசிக்கொண்டே மிளகாய்களை காய வைக்கும் போது நெடி ஏறவும் தும்பி கொண்டே இருந்தாள்.
ஆச்சி என்று பல்லை கடித்தவன் என் பொண்டாட்டியை என்ன பாடு படுத்துற? அவளுக்கு இந்த வேலையெல்லாம் தெரியாது..
ஏய் உன்னை யார்டி இங்கு வர சொன்னாயென்று அவளை இழுத்து நிழலில் விட்டு விட்டு அவனே மிளகாய்களை காய வைக்க,எப்பா நான் ஒன்னும் கூப்பிடல...உன் பொண்டாட்டி தான் பா வந்தாள்.
அவ ஒரு கூறு கெட்டவள்..அவளுக்கு இத பற்றி ஒன்னும் தெரியாது.உனக்கு நல்லா தெரியுமில்ல என்கவும் அடேய் எல்லாரையும் இப்படி தாண்டா பொத்தி பொத்தி வளர்த்தாங்க...
அதிசயமா நீ மட்டும் தான் பொண்டாட்டி வளர்க்கிறியா என்கவும்,ஆமாம் அதில் என்ன சந்தேகம்.ஊரிலில்லாத பொண்டாட்டி தான் எனக்கென்று மனைவியை போய் தோளோடு அணைத்து சொல்ல ரொம்ப தாண்டா பண்றனு பேரனை பார்த்து தனது தாவங்கட்டையை இடித்தபடி சொல்லிய பாட்டிக்கும் சிரிப்பு மட்டும் குறையவில்லை.
பின்னர் பாட்டியும் பேரனும் பேசிக்கொண்டே மிளகாய்களை காய வைத்துவிட்டு கீழே வந்தனர்.போய் கையை சோப் போட்டு கழுவிட்டு வாடி என்க,ம்ம் என தலையசைத்துக் கொண்டு சென்றாள்.
சிறிது நிமிடத்தில் அவளும் வர அங்கு டிவியின் மேலிருந்த பார்சலை எடுத்துட்டு வந்து மனைவியின் முன்பு நீட்டினான்.அவளோ யோசனையோடு என்னவென்று பார்த்தாள்.
"பிரித்து தான் பாரேன் மா"
உன் புருஷன் அப்படி என்ன பொக்கிஷம் வாங்கிட்டு வந்துருக்கான்னு என்றவாறு தம்புசாமி தாத்தா வீட்டுக்குள் வர அதானே எங்கிருந்தாலும் இந்த தாத்தன் மூக்குல மட்டும் வேர்த்துடுமேனு முணுமுணுத்தான்.
ஷமீராவோ என்னவா இருக்குமென்ற யோசனையோடு பார்சலை பிரிக்க அதில் புது போன் பாக்ஸ் இருந்தது.
ஓபன் பண்ணி பாருடியென்று செழியன் சொல்ல ம்கூம் என்று தலையை ஆட்டியவள் கணவனிடமே குடுத்து பிரிக்க சொன்னாள்.சிரித்துக் கொண்டே அதை ஓபன் பண்ணியவன் உள்ளேயிருக்கும் போனை எடுத்து மனைவியிடம் நீட்ட மொபைலை பார்த்தவள் எதுக்கு இவ்வளவு ரேட்ல என்க?ஏன் இதுல என்னடி இருக்கு?
நல்லதா வாங்கணுமே டி.
ஏன் மா உன் புருஷன் எவ்வளவு பணத்துல போன் வாங்கியிருக்கான் என்று தாத்தா கேட்க இந்த போனோட விலை 25 ஆயிரம் ரூபாய் தாத்தா என்றாள்...
அப்படியா....பொண்டாட்டிக்கு செலவு பண்றதுக்கு என்ன கணக்கு வேண்டி கிடக்கு.உருப்படியாக தான் உன் புருஷன் செலவு பண்ணிருக்கான்னு சொல்லிக் கொண்டே தனது மீசையை தடவிக்கொண்டு மருமகள் கொடுத்த மோரை வாங்கி குடித்தார்.
இரவு 10 மணிக்கெல்லாம் மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்த பாபு அங்கே பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு தனது லக்கேஜோடு வெளியே வந்து நண்பனுக்கு கால் பண்ண,டேய் இங்க தாண்டா இருக்கிறேன்னு பரத்தின் குரல் கேட்டது.
வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?,நலம் டா என்ற பரத்தும் அவனிடம் பேசிக்கொண்டே தனது வீட்டிற்கு அழைத்து போனான்.
ஏற்கனவே பரத் வீட்டிற்கு பாபு வந்திருப்பதால் அவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் இரவு உணவை சாப்பிட்டு விட்டு நண்பர்கள் இருவரும் ரூமிற்குள் வந்தனர்.
ம்ம் என்ன விஷயமென்று பரத் கேட்க,ஷமீராவை பற்றி பாபுவும் சொல்ல,என்னடா சொல்றனு அதிர்ந்தவன்,அது மலை கிராமம் டா.இங்கிருந்து எட்டு மணி நேரம் ஆகும் டா என்க,பாபுவோ அப்படியா என்றான்.
ஆமாடா...விவசாயம் தான் குல தொழில்..பெரிய பெரிய பணக்காரவங்களா இருப்பாங்கடா. ஆனால் பார்க்க அப்படி தெரியாது.
படிப்பறிவு அந்த அளவுக்கு இல்லை... அவங்களாம் காலேஜ் படிக்கணும்னாக்க முன்னாடிலாம் நம்ம மதுரைக்கு தான் வரணும்.இப்போ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் அங்கு ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் கட்டியிருக்கிறார்கள்.
நான் அந்த ஊருக்கு போய் 7 வருஷம் இருக்கும் டா.எப்படி இவ்வளவு தூரத்திலுலிருக்கும் இருவருக்கும் பழக்கமாகிருக்குமென்று யோசனையோடு பரத் கேட்க, அதுதாண்டா எனக்கும் புரியலை.
இது எத்தனை வருஷ பழக்கமென்று தெரியலைடா.எந்த தைரியத்துல கிளம்பி வந்து இருக்கா பாரேன். சட்டப்படி கல்யாணத்தையும் பண்ணிருக்கிறாள் டா.அது மட்டும் இல்லாம இன்னும் மூணு வாரத்துல எனக்கும் அவளுக்கும் வீட்டில் கல்யாணம் ஏற்பாடு வேற பண்ணிருக்காங்க டா.
என்னடா சொல்ற நீ?தங்கச்சினு தானடா சொல்லிக்கிட்டு இருப்பனு பரத் கேட்க...ஆமாடா...இதுங்க என்ன வேலை பண்ணி வச்சிருக்காங்க பாரென்ற பாபுவோ தனது வீட்டினரை திட்டினான்.
சரி சரி படு...காலையில நம்ம கிளம்பிடலாம் என்க,சரிடா என்று மேலும் சிறிது நேரம் இருவரும் பேசி விட்டு படுத்தனர்.
அடுத்த நாள் விடியலும் வழக்கம் போல் உதயமாக பரத்தும் பாபுவும் அவனது அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டு காரை எடுத்தவர்கள் வனிச்சூரை நோக்கி பயணமானார்கள்.
மச்சான் நீ ரூட் சொல்லு நான் கார் ஓட்டுகிறேனென்று பாபு சொல்ல இருக்கட்டும் டா.இது மலைப்பாதை டா.
முன்ன பின்ன இந்த வழியில் ஓட்டி பழக்கம் இருந்தால் தான் பிரச்சினை இல்லாமல் போக முடியும்.போகும் போது நீ பார்த்துட்டு வா.வரும் போது ஓட்டலாம் என்கவும் பாபுவும் அதற்கு சரியென்றான்.
இருவரும் பேசிக்கொண்டே காலை 11 மணிக்கெல்லாம் வனிச்சூருக்கு வந்து சேர்ந்தனர்.இதுதாண்டா சுத்தி இருக்கிற கிராமத்துக்கு பெரிய டவுன்.
இங்கிருந்து ஊருக்குள் போக ஷேர் ஆட்டோவில் போகணும் இல்ல மினி பஸ்ல போகணும்.எப்படியும் போக அரை மணி நேரம் ஆகுமென்றான்.
சரி வா ஜில்லுனு குடிச்சுக்கலாம் என்க...பாபுவோ அங்கிருந்த சூழலைப் சுற்றி பார்க்க மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
இருவரும் அங்கிருந்த ஜூஸ் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு ஜூஸை ஆர்டர் பண்ணி குடித்தனர்.
சரிடா மச்சான் பர்ஸ்ட் டைம் தங்கச்சி வீட்டுக்கு போறோம் ஏதாச்சு வாங்கிட்டு போகலாமே எங்கவும்,ஏண்டா அவ பண்ணிட்டு போன காரியத்துக்கு ஃபார்மாலிட்டிஸ் ரொம்ப முக்கியமா என்று பாபு கேட்க,டேய் அதுக்குன்னு வெறும் கையை வீசிக் கொண்டா போவது..
நீ சும்மா இரு தங்கச்சிக்கு நான் வாங்குகிறேன்டா என்க...உன் தங்கச்சியை பார்த்த உடனே குருத்தெலும்பிலே நல்லா மிதிக்கலாமென்று இருக்கிறேன்.நீ என்னவென்றால் பாசத்தை புழிஞ்சி தள்ளுறியா என்று பல்லை கடித்தான்.
ஏண்டி வந்ததிலிருந்து இப்படி உம்மென்று இருந்தால் என்ன தான் டி அர்த்தம்?.கேட்டு கேட்டு வாய் வலிக்குதுடி என்றாள் கண்மணியின் ஆருயிர் தோழி மலர்விழி....
கண்மணியோ எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாக தெரியும் தூரத்து வானத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்..
ம்கும்...
இது வேலைக்குச் ஆகாது.இப்போ பாருடி என மனதிற்குள் நினைத்தவள் டேபிளின் மேலிருந்த மர ஸ்கேலை எடுத்து கண்மணியின் தோள்பட்டையில் ஓங்கி ஒன்று வைக்க,அவளோ திரும்பி தோழியை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சுட்டெரிக்கும் வானத்தை பார்க்க தொடங்கினாள்..
எதேஏஏஏஏ!
அடியேய் பேய் எதாவது புடிச்சிட்டாடி?
வெளங்காதவளே எதையாவது வாயை திறந்து சொல்லி தொலைடி என்று மீண்டும் கோவமாக கத்த,மலரின் அம்மா பத்மாவோ முற்றத்தில் வடகம் பிழிந்து கொண்டிருக்கவும் மகளின் கத்தல் கேட்டு,என்னடி ஆச்சுயென்று வேகமாக அங்கு வர,தாயைப் பார்த்தவள் என்னன்னு தெரியலாமா, வந்ததுல இருந்து உம்மென்றே மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கா.எதையாச்சும் சொன்னாதானே தெரியும்.
ஏன் புள்ள கண்ணு என்னடி ஆச்சென்று பத்மா கேட்க ஒன்னும் இல்லங்கத்தை என்றாள்.
அடி சண்டாளி...
இவ்வளவு நேரம் கரடியா கத்துனேனடி ஒரு வார்த்தை வாயை திறந்து பதில் சொன்னியாடி என்று மலர் முறைக்க,கரடி கத்தினால் எனக்கு எப்படி கேட்கும் என்றவளோ அத்தை பசிக்குது என்கவும் வாடி கண்ணு சாப்பாடு ரெடியா தானிருக்கு...
உன் மாமா கதம்ப சட்னியும் இட்லியும் கேட்டாரு.சுட்டு வச்சிருக்கேன் வா வா என்று அவள் கையை பிடித்து இழுத்துப் போக,எம்மா குத்துக்கல்லு போல நானும் நிற்கிறேன் எனக்கு பசிக்கும். நானும் இன்னும் சாப்பிடவில்லை என்று மலர் சொல்ல உனக்கு பசிச்சா போய் போட்டு திங்க வேண்டியது தானே?.
நான் என்ன இட்லி சுட்ட குண்டானை தூக்கி இடுப்பில் வச்சிக்கிட்டா அலையுறேன்னு சொல்லிக் கொண்டு கண்மணியோடு வெளியே சென்றார்...
தாய் கிழவி என்று பல்லை கடித்த மலர் எனக்கும் நேரம் வரும் அப்போ உன்னை நான் பல்பு வாங்க வைக்கல என் பேரு மலர்விழி கிடையாதென்று சொல்லிக் கொண்டிருந்தாள்...
"ஏய் வந்து சாப்பிடுடி"
அப்புறம் மேல உன் வீணா போன சபதத்தை போடலாமென்று பத்மாவின் குரல் கேட், என்ன டேமேஜ் பண்றதுக்கு யாருமே வேண்டாம் .பெத்த தாய் நீ ஒரு ஆளு போதும் மா என்று சொல்லிக்கொண்டே அவளும் வந்து உட்கார இருவருக்கும் தட்டில் இட்லியை வைத்து சாம்பார் ஊத்தி கதம்ப சட்னியை வைத்தவர் சாப்பிடுங்க...
பாலு ஆறி போயிருக்கும் சுட வச்சிட்டு வரேன்...சூடா காபி குடிக்கலாம் என்றார்.
ம்மா எனக்கு பூஸ்ட் என்று மலர் சொல்ல அதான் தெரியுமேடி.மூன்று வேலையும் பூஸ்ட் குடிக்க தான் பிறந்திருக்கிறியேனு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார் ..
பெத்த தாய் கொஞ்சமாச்சும் என்ன மதிக்குதா பாரு?சொந்த வீட்டிலே என் நிலைமை இப்படி இருக்கிறதே ஆண்டவா என்று சொல்லிக் கொண்டே மலரும் சாப்பிட்டாள்...