• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
485
டெல்லி:

நேரமும் கடந்து செல்ல மானசா வட இந்தியாவில் பிறந்தவர் என்பதால் அங்கு உள்ள முறைப்படி தான் அவரை அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தனர்.

தீபனோ அந்தோணிக்காக மாற்று டிரஸ்ஸை வாங்கிட்டு வந்து வைத்திருந்தான்.எல்லாரும் குளித்துவிட்டு வேறு உடைமாற்றிக் கொள்ள,ஹோட்டலில் இருந்து
உணவும் வந்தது.

சாப்பிட்டு முடித்து எல்லாரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது எங்க அம்மா இறந்து போயிருக்காங்க.இதற்கு உங்களுடைய இரண்டாவது பொண்டாட்டிக்கும் மகளுக்கும் வரணும்னு மனசு வரலையா டேடி என்று அருண் கோபமாக கேட்டான்..

அப்பொழுதுதான் அந்தோணிக்கும் தான் டெல்லிக்கு வந்து சேர்ந்துவிட்ட விஷயத்தை வீட்டிற்கு செல்லவில்லை என்பது புரிந்து,ஐயோ என்று தலையில் கையை வைத்தவர்,சார்ஜ் போட சொல்லியிருந்த தனது போனை எடுத்துட்டு வந்து கொடுக்குமாறு ரூபாவிடம் கேட்க,இதோ பா என்றவளும் போனை கொண்டு வந்து கொடுக்க, அருணை பார்த்துக் கொண்டே தனது தங்கையின் நம்பருக்கு கால் பண்ணியவர் ஸ்பீக்கரில் போட்டார்.

கால் கட்டாகுவதற்குள் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் சொல்லுண்ணா நல்லபடியா போய் சேர்ந்துட்டியா?

இப்போ ஜூலியோட அம்மா எப்படி ணா இருக்குறாங்க?

என்ன ஆச்சு ணா?

நல்லா தானே இருந்தாங்க,அவங்களுக்கு ரொம்ப உடம்பு முடியலையா ணா?

அவர் எப்படி ணா இருக்கிறார்?

ஜூலி புள்ளைய வச்சுக்கிட்டு ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டாம்,ரூபா தைரியமானவள்.அவள் அங்கு இருக்கட்டும் என்று எஸ்தர் சொல்லிக் கொண்டே போக,இதைக் கேட்டவர்கள் அருணை குற்றப் பார்வையில் பார்க்க,
அவனோ அதிர்ந்து போய் நின்றான்.

ஐயோ அண்ணா நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன அண்ணா எதுவுமே சொல்லாம இருக்கீங்கனு எஸ்தர் கத்திய பிறகே வாயை திறந்த அந்தோணி,மானசா நேற்றே இறந்துவிட்டது மா என்கவும்,என்ன ணா சொல்றீங்க என்று எஸ்தரும் அதிர்ந்து போனார்.

ஆமா டா என்றவர் நடந்ததை சொல்ல, அப்ப நாங்க கிளம்பி வரட்டுமா ணா? தெரிஞ்சிருந்தா நானும் உன் கூட வந்துருப்பேனே என்று எஸ்தர் அழ, எனக்கே தெரியாது டா.மனசுக்கு ஏதோ தோணுச்சு அதனாலதான் நான் வந்தேன் என்றவாறு போனை வைத்து விட்டு அங்கு நின்ற அருணை பார்த்தவர்,என் தங்கச்சியை பற்றி உனக்கு என்ன தெரியும்?

உன் அப்பனும் சொந்த பந்தங்கள் இருக்கிறார்களென்று பார்க்க மாட்டேன், அடிச்சு பல்லை எல்லாம் ஒடச்சிடுவேன்.நியாயமாக கோவப்பட வேண்டியது நானும் என் தங்கச்சியும் தான் டா..

பச்சை துரோகினு தெரிந்தும் என் கூடப் பிறந்தவள் பதறினாளே அது தான் என் தங்கச்சி.

நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே மகி,இதே மானசா இடத்தில் என் தங்கச்சிக்கு அப்படி எதாவது நடந்திருந்தால்,முதலில் சந்தோஷப்படுவது யார் தெரியுமா உன் அம்மா தான் என்று அருணை நோக்கி விரல் நீட்டி சொன்னவர்,டீசண்டா இருக்கிறானேனு நினைச்சுறாதீங்க சுத்த கிராமத்தான் தான்.

இன்னொரு முறை என் தங்கச்சியையும் என் மருமகளையும் பற்றி யார் வாயிலையாவது தவறாக வந்துச்சு அருவாளை எடுத்து பொளந்துருவேன்.

உன்னைப் போலவே உன் மகனையும் அற்புதமா வளர்த்திருக்க மகி என்றவர், எலேய் தீபா என்ன கொண்டு வந்து ஏர்போர்ட்ல விடு.ஒன்பது மணிக்கு எனக்கு திருச்சிக்கு பிளைட் என்கவும், அதைக்கேட்ட மகி,மன்னிச்சிடுங்க மாமா.

அவன் விவரமில்லாமல் பேசிட்டாடென்று அந்தோணியின் கையை பிடித்தவர்,உங்களுடைய அருமை அவனுக்கு தெரியாது மாமா.போகப்போக புரிந்து கொள்ளுவானென்று கண்ணீரோடு சொன்னார்.

பின்னர் ஒரு வாரம் கடந்து செல்ல மானசாவிற்கு அவர்கள் குல வழக்கப்படி காரியம் செய்துவிட்டு தனது தந்தையை அழைத்துக் கொண்டு நேராக திருச்சிக்கு வந்த அருண்,உங்க பிறந்த ஊருக்கு போகலாம் பா என்கவும் மகியோ தனது மகனை ஒரு பார்வை பார்த்தவர்,பின்னர் டிரைவரிடம் அட்ரஸை சொல்லிவிட்டு அமைதியாக உட்கார ஒன்றரை மணி நேர பயணத்தில் சோழனூருக்கு வந்து சேர்ந்தனர்..

சோழனூர்:

சிறிது நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவள் என்னங்க என்று செழியனின் முதுகை சொரிய என்ன டி, என்ன வேணும்?

"ம்ம் நீங்க தான் வேணும்"

மனைவி சொன்னதைக் கேட்டு மனதிற்குள் குளு குளுன்னு இருந்தாலும், அதான் ஆசைப்பட்ட போல உன் அப்பன் வீட்டுக்கு வந்துட்டல்ல வேற என்ன டி என்றவாறு லேப்டாப்பை ஆஃப் பண்ணி மூடினான்.

எதுக்கு தான் வந்ததிலிருந்து இப்படி என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுறீங்களென பாவமாக ஷமீரா கேட்க, நான் எங்கே டி உன் மேல விழுந்தேன்.

எனக்கும் விழனும் போல தான் நாடி நரம்பெல்லாம் புடைக்குது,என்ன செய்ய,விழுற போலயா இருக்கயென மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டவாறு செழியன் சொல்ல,இளா என்று பல்லை கடித்தாள்.

அப்புறம் செல்லம் என்றவன் மனைவியை பொறுமையாக இழுத்து தனது மடியில் உட்கார வைத்தவன், நேரத்துக்கு சரியா சாப்பிடு.உடம்ப கவனிச்சுக்க,கார் ஷெட்டில் வாக்கிங் பண்ணு..

பார்த்து கவனமா இரு சரியா?.

டெலிவரிக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே மாமா வந்துடுறேன் சரியா டா என்று மனைவியை இறுக்கமாக நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவள் தலையில் முத்தம் வைத்தபடி சொல்ல ம்ம் என்று தலையசைத்தவளுக்கு அழுகை வந்தது.

அவள் விசும்பலை உணர்ந்தவன் எதுக்கு டி அழுகிற என்கவும் சும்மா கண்ணு வேர்த்தது என்க,வேர்க்கும் டி வேர்க்கும் என்றவன் மனைவியிடம் சில பல சேட்டைகளை செய்து கொஞ்சி குலாவி முடித்தவன் சரி வா ரொம்ப நேரம் ஆயிடுச்சு,நம்ப குட்டிக்கு பசிக்கும் என்றவாறு மனைவியோடு கீழே வர, அங்கே மதிய உணவும் தயாராக இருந்தது.

கையை கழுவிட்டு வந்து எல்லாரும் உட்கார ராணியும் எஸ்தரும் பரிமாறினார்கள்.பேசிக் கொண்டே சாப்பிடும் போது நாளைக்கு கண்மணியோடு நான் துபாய்க்கு கிளம்புறேன்னு பாபு சொல்ல,கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் கிளம்பி விடுவான் என்று முன்பே சொல்லியிருந்தான்.சரி பா பார்த்து போங்களென்றனர்.

நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேனு கண்மணி தனது கணவனை பார்க்க,அவனோ சாப்பிட்டு எழுந்து போய் கையை கழுவினான்.

பாபுவிடம் செழியன் பேசிக் கொண்டிருக்க கண்மணியோ வீட்டுக்கு போய் பேக்கிங் பண்ணுவதாக சொல்லிக் கொண்டு போனவளுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாபு சொன்ன விஷயங்கள் தான் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது .

ஏன் துபாய்க்கு போற விஷயத்தை நம்ம கிட்ட சொல்லவே இல்லை?

ஒருவேளை சர்ப்ரைஸா இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்து உள்ளே வந்தவள் அவளுடைய துணிகளை பேக்கிங் பண்ண தொடங்கினாள்.

அரை மணி நேரம் கடந்திருக்க காலிங் பெல் சத்தம் கேட்டு அத்தை வந்துட்டாங்க போலனு கதவை திறக்க அங்கு பாபு தான் நின்று கொண்டிருந்தான்.

கணவனை பார்த்து முறைத்தவள் யோவ் உன் திருட்டு புத்தியை என்கிட்ட காமிக்கிறியா??

ஏன் துபாய்கு டிக்கெட் போட்ட விஷயத்தை என்கிட்ட சொல்லவில்லை???

உள்ளே வந்து கதவை சாத்தியவன் மனைவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு அது சர்ப்ரைஸ் டி செல்லம்.

ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு என்ன சொன்னேன்?,நம்ம வாழ்க்கையை துபாயில் போயிட்டு நம்ப ரூம்ல கொண்டான்னு சொல்லியிருந்தேன் இல்லையா.எத்தனை நாளைக்கு தாண்டி இந்த கன்னி பையன் காத்திருக்கிறது சொல்லு?

கல்யாணம் பண்ணி ரெண்டு மாசம் ஆகப் போகுது டி முத்தத்தை தவிர அடுத்த படிக்கு நான் தாண்டவே இல்லை டி.என் கற்பை இனியும் காப்பாத்த முடியாது.

அதை உன்னிடம் தொலைக்க முடிவு பண்ணிட்டேன் என்கவும் அதைக் கேட்ட கண்மணிக்கு வெட்கமும் சிரிப்பும் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.

மனைவியை அணைத்தவாறு உள்ளே போக அவள் பேக்கிங் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்து அவனும் உதவி பண்ணினான்.

நேரமும் கடந்து சென்றது..

மகளுக்கு பாலை காய்ச்சி தனியாக வைத்துவிட்டு டீ போட்டவர் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு இரவு உணவுக்காக காய்கறி நறுக்கி கொண்டிருக்கும் போது அவரது போனிற்கு கால் வரும் சத்தம் கேட்க, அங்கே செல்ஃபில் இருந்ததை எடுத்து பார்க்க அதில் அவரது அண்ணன் என்று தெரிந்து அட்டென்ட் பண்ணினார்..

அந்த பக்கம் அந்தோணி சொல்லிய விஷயத்தை கேட்டு அதிர்ந்து போனவர் சித்தி என்று வேகமாக வந்தவர், அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சாரதா பாட்டியிடம் விஷயத்தை சொல்லவும் ஆண்டவரே என்று அதிர்ந்து போனார்கள்.

செழியனோ தனது போனை எடுத்து அண்ணனுக்கு கால் பண்ணியவன் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவனிடம்,ஏன் இதை பற்றி சொல்லவில்லை என்று வாய்க்கு வந்தபடி சண்டை போட,ஒருவழியாக தம்பியை சமாதானப்படுத்திய பிறகே ருத்ரன் போனை வைத்தான்..

மறுநாள் வேலைக்கு போக வேண்டும் என்பதால் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தயாராகியவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் மனைவியின் வயிற்றில் எண்ணற்ற முத்தங்களை கொடுத்தவன்,மாமா வந்துடுறேன் செல்லம் உடம்ப பார்த்துக்கடினு மீண்டும் பல அறிவுரைகளை சொல்லிவிட்டு வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லிக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வர,சிறிது நிமிடத்தில் அவனுக்கான பேருந்து வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்தான்.

விடியலும் வர எல்லாரிடம் சொல்லிக் கொண்டு மனைவியோடு திருச்சி ஏர்போர்ட்டுக்கு பாபு வர அங்கே பரத் தனது நண்பனை வழி அனுப்ப வந்திருந்தான்.

நீ எப்பதான் நாயே வரப்போறனு பாபு கேட்க,இன்னும் ரெண்டு மாசம் போனதும் வரேன் டா.அது வரைக்கும் தங்கச்சிக்கு அங்கிருக்கிற எல்லா இடத்தையும் சுத்தி காட்டு.

தங்கச்சி பத்திரம் என்க,என்னை பத்திரம் என்று சொன்னாலும் வாஸ்தவம் அவளை சொல்றியேடா என்றான்..

கொஞ்சம் வாயை குறைச்சுக்கிறது உன் உடம்புக்கு ரொம்ப நல்லது.என் தங்கச்சி டீச்சர்.ஒரு கேள்வி கேட்டதுனாக்க அதுக்கு பதில் வாங்காம விடாது.

அப்புறம் சேதாரம் இல்லாம நீ வெளியில போக முடியாது
இது நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா மச்சி...

ஆமா டா...நல்லா சொன்னடா மச்சியென்று சிரித்தான்.சிறிது நிமிடத்தில் அவர்களுக்கான பிளைட் அறிவிப்பு வந்ததும்,கண்மணியும் பாபுவும் அவர்களுக்கான புது வாழ்க்கையை தொடங்க துபாயை நோக்கி சென்றனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
485
சோழனூர்:

நீலக்கலர் பெயிண்ட் அடித்திருக்கும் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்க,கதவைத் திறந்து கீழே இறங்கிய அருண்,லக்கேஜை எடுத்துக்கொண்டு டாக்ஸிக்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்தவன்,ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு நடுவில் இருக்கும் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை பார்த்துக் கொண்டே தந்தையோடு வந்தவன் அங்கே சுவற்றில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்..

எஸ்தரும் கதவைத் திறக்க,அங்கே மகியும் அருணும் நிற்பதை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவர் வா பா என்க,ஹம் என தந்தையோடு உள்ளே வந்தான்.

உடைந்து போய் வந்திருக்கும் கணவரை பார்த்த உடனே எஸ்தருக்கு அழுகை வந்தது.

யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவரவர் யோசனையில் இருக்கும்போது அப்பா ஒரு நிமிஷம் என்றவாறு எழுந்தவன் தனது தந்தையின் கையைப் பிடிக்க, மகியோ என்னப்பா என்றபடி எந்திரிக்க அவரின் கையை பிடித்து அங்கிருந்த எஸ்தரின் கையில் ஒப்படைத்தவன், இனிமேல் அப்பா உங்களுடைய பொறுப்பு.

நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு என் மனசுக்கு தோணுது.இருந்தாலும் மகனா அப்பாவை பார்த்துக்குங்கன்னு சொல்ல வேண்டியது நிலமையில் நான் இருக்கேன் என்கும் போது மூவருக்கும் அழுகை வந்தது

என்னோட வேலை விஷயமா நான் ஜெர்மனி போகிறேன்.திரும்ப வர குறைந்தது இரண்டு இல்லை மூன்று வருஷமாகும்.வைப்புக்கு அடுத்த மாதம் தான் டெலிவரி,குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் சென்று அவளும் ஜெர்மனிக்கு வராள்.

நம்ப குடும்ப ரகசியம் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் என் வைப்புக்கும் மாமியார் வீட்டுக்கு தெரிந்தது.எல்லாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஷமீரா கன்சிவாக இருக்குதுன்னு கேள்விப்பட்டேன்,வீட்ல இல்லைங்களா?

அவன் எந்த உறவு முறையும் சொல்லி கூப்பிடாமல் வாங்கள் போங்களென்று பேசுவதிலே இடைவெளியை கடைபிடிக்கிறான் என்பதை எஸ்தரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ற போல சரிங்க தம்பி என்றார்.

ரூமிற்கு போய் அங்கிருந்த கட்டிலில் படுத்த மகி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகள் ஜூலி சொல்லியதை நினைத்துப் பார்த்தார்..

மானசாவை நினைத்து வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கும் மகிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்க,எழுந்து போய் கதவை திறக்க அங்கே ஜூலி தான் நின்று கொண்டிருந்தாள்.

சொல்லுடா மா என்க,டேடி என்றவாறு உள்ளே வந்தவள் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமென்று அன்று நடந்ததை சொல்லி ஜூலி அழு,கடைசி வரைக்கும் இப்படியே இருந்துட்டு போயிட்டியா மானசா?

இப்படி ஒரு குணம் உன்னிடம் இருக்கும்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவே இல்லை.அது எப்படி ஒரு பிள்ளைக்கு பாலும் ஒரு பிள்ளைக்கு கள்ளியையும் கொடுப்பேன்?

மூன்று பேரும் எனது குழந்தைகளாச்சே,ஏன் உனக்கு என் மேல இப்படி நம்பிக்கை இல்லாமல் போனது என்று வருத்தப்பட்டவர், பின்னர் நிதர்சனம் இதுதான் என்று புரிந்து கொண்டு தன்னை தானே தேற்றிக்கொண்டார்.

ஹாஸ்பிடல் போனவர்கள் இரவு 7:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.கதவு திறக்கவும் யார் என்றவாறு பார்த்தவர் மகளும் தங்கையும் வருவது கண்டு வா ஷமீ எப்படி இருக்க என்க,அவரின் குரலைக் கேட்டு அண்ணா என்றவாறு வந்த ராணியோ மகியின் கையை பிடித்துக்கொண்டு அழுதார்.

பின்னர் அண்ணன் தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடல் போன விஷயத்தைப் பற்றி விசாரிக்க டெலிவரி இன்னும் இரண்டு வாரத்தில் ஆகிடுமென்று டாக்டர் சொன்னதாக சொன்னார்.

எதுவும் சொல்லாமல் தனது அறைக்குள் போனவளுக்கு தந்தையின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து வருத்தமாக தான் இருந்தது....

அதன் பின்னர் நாட்களும் வேகமாக ஓட நேரம் கிடைக்கும் போதெல்லாம் செழியனும் மனைவி கூட போனில் பேசிக் கொண்டிருந்தான்

மகியும் சோழனூரிலிருந்து தினமும் திருச்சிக்கு வேலைக்கு சென்று வர, கணவருக்காக மதிய உணவை காலையிலே எஸ்தரும் தயார் பண்ணிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அவரிடம் வாய் திறந்து பேசவில்லை என்றாலும் மனைவியாக அவரது கடமையிலிருந்து தவறவில்லை.

ஷமீராவோ போனில் பேசும் போதெல்லாம் எப்போ வரீங்கள் வரீங்களென்று கேட்க,வரேன் டி வரேனென்று செழியனும் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

புதிதாக இரண்டு ஊர்களுக்கு மசாலாக்கள் அனுப்ப வேண்டிய பெரிய ஆர்டர் வந்திருப்பதால் வேலையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

செழியனும் கண்ணனும் சூப்பர்வைசராக இருப்பதால் பொருட்களின் பேக்கிங் தரத்தை நன்கு செக் பண்ணிய பிறகே லோடு ஏற்ற அனுப்புவதால் வேலையை முடித்து வீட்டிற்கு வரவே இரவு 9,10 மணி ஆகும் .

வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு மாடிக்கு வந்ததும் முதலில் மனைவிக்கு வீடியோ கால் பண்ணி பேசி விட்டு தான் தூங்குவான்.

கடந்த ஒரு வாரமாக கணவனின் முகத்தில் இருக்கும் சோர்வை ஷமீராவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்..

டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. ..

அன்று காலையில் வழக்கம் போல் தூங்கி எழுந்தவளுக்கு இடுப்பு வலிப்பது போல் இருக்கவும் தனது தாயிடம் சொல்ல டெலிவரிக்கு ஒரு வாரம் இருப்பதால் சில நேரத்தில் சூட்டு வலி வருமென்று அதற்கான கை வைத்தியத்தை பண்ணினார்.

வயிறு வேற கொஞ்சம் பெரிதாக இருப்பதால் ஷமீராவிற்கு நடக்க சிரமமாகவே இருந்தது.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருந்தது...

டெலிவரிக்கு திடீரென்று போக வேண்டிய சூழல் வந்தால் தேவை படுமென,அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமென்று ஒரு வாரத்திற்கு முன்னரே எஸ்தரும் ஒரு பேக்கில் தனியாக எடுத்து வைத்திருந்தார்.

வழக்கம்போல் மதிய உணவை சாப்பிட்டு சிறிது நேரம் படுத்தவளுக்கு வலிப்பது போல் இருந்தது.அம்மா சொல்லிய சூட்டு வலியாக இருக்குமென்று ஷமீராவும் பொறுமையாக திரும்பி படுக்க,வலி ஒன்னும் குறைவது போல் தெரியவில்லை.

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவள் பின்னர் பல்லை கடித்துக் கொண்டு எழுந்து போய் கதவை திறக்க,அங்கே எஸ்தரோ பைபிள் படிப்பது தெரிந்தது.

அம்மா என்க,மகளின் குரல் கேட்ட வேகமாக எழுந்தவர் அவள் முகத்தை பார்த்துவிட்டு என்ன ஷமி?

வயிறு வலிக்குது மா என்கவும் இதை ரூமிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மகியோ வேகமாக வந்தவர் ஹாஸ்பிடல் போகலாமா டா என்க ஹம் என்று தலையசைத்தாள்.

எஸ்தரும் அந்த பேகை எடுத்துட்டு வர்றதுக்குள் மகி தனது மாமாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல இதோ வரோமென்றார்.

அவருக்கும் போன் பண்ணி சொல்லிடு மா என்று வலியை பொறுத்துக் கொண்டு ஷமீ சொல்ல,மாப்பிள்ளைக்கு தான் போன் பண்றேன் என்ற மகியோ செழியனுக்கு கால் பண்ண,அந்த பக்கம் அட்டென் பண்ணியவனிடம் விஷயத்தை சொல்லிட்டு போனை வைத்தவர் ஷெட்டில் இருக்கும் காரை எடுக்க அந்தோணியும் ராணியும் பைக்கில் அங்கு வந்தனர்.

டாக்டர் சாந்தியிடம் தான் செக்கப்பிற்கு கூப்பிட்டு போவதால் நேராக அங்கு வந்து சேர்ந்தனர்.ரிஷப்ஷன்ல உள்ளவளிடம் ஷமீயின் நிலையை சொல்லியதும்,அங்கிருந்த பெண்ணும் டாக்டரிடம் போய் சொல்ல உடனே ஷமீராவை உள்ளே அனுப்ப சொன்னார்.

ஊசி போல குத்தும் வலியை தாங்கிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே போனாள்.அவள் முகத்தைப் பார்த்தவுடனே அனுபவம் வாய்ந்த டாக்டருக்கு புரிந்து விட்டது.பின்னர் பெட்டில் படுக்க வைத்து செக்கப் பண்ணியவர் அட்மிஷன் போட்டுவிடலாம்.

டெலிவரி எப்படியும் நைட் இல்லை விடியற்காலையில் ஆகிடும் என்றார்.

பின்னர் ஷமீராவுக்கு அட்மிஷன் போட்டு கீழே ஒரு ரூமை அவர்களுக்கு கொடுக்க அவளோடு ராணியும் எஸ்தரும் அங்கு போக அந்தோணியும் மகியும் வெளியே காத்திருந்தனர்.

நேரமும் கடந்து செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வலி விட்டு விட்டு வந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு அந்த வராண்டாவில் நடந்தவளோ கணவன் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்தாள்.

மகி விஷயத்தை சொல்லியதும் பதறி அடித்து எழுந்தவன் வேக வேகமாக டிரஸ் போட்டுக் கொண்டு கீழே வந்தவன் தனது அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்ல உடனே கிளம்பலாம் என்றனர்.

அப்படியே தனது மாமா வீட்டிற்கும் விஷயத்தை சொல்ல சுமதி பாட்டியை கவிதாவுக்கு துணையாக வைத்துவிட்டு அவர்களும் அவர்கள் காரில் புறப்பட்டனர். .

நேரம் கடந்து செல்ல வலியும் நிரந்தரமாக இல்லாமல் விட்டு விட்டு வருவதால் விடியற்காலை வரை பார்த்து விட்டு இன்ஜெக்ஷன் போடலாம் என்ற டாக்டர் ஹாஸ்பிடலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றார்.

இரவெல்லாம் தூங்காமல் ராணியும் எஸ்தரும் ஷமீராவை பார்த்துக் கொண்டிருக்க,வனிச்சூரிலிருந்து புறப்பட்டவர்கள் நள்ளிரவு மூன்று மணிக்கெல்லாம் சோழனூருக்கு வந்து சேர்ந்தனர்.

மகியிடம் ஹாஸ்பிடல் அட்ரஸை கேட்டு பத்து நிமிடத்தில் வந்தவர்கள் நலம் விசாரித்து விட்டு ஐந்து மணிக்கு மேல் தான் கதவை திறப்பார்கள் என்பதால் வெளியேவே காத்திருந்தார்கள். ..

காலை நான்கு மணி இருக்கும் போது ஷமீராவுக்கு வலி கொஞ்சம் அதிகமாக ராணியோ பக்கத்து ரூமில் படுத்திருக்கும் நர்ஸை எழுப்பி விஷயத்தை சொல்ல அவர் உடனே டாக்டருக்கு போன் பண்ணவும்,பத்து நிமிஷத்தில் வரேன்.டெலிவரி வார்டுக்கு பேஷண்டை கூப்பிட்டு வந்துடுங்களென்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்..

நைட் லேம்ப் மட்டும் எரிந்த வரண்டாவில் டியூப்லைட்டை போட்ட நர்ஸ் வெளியே உட்கார்ந்திருந்தவர்களை பார்த்து ஷமீரா பேஷண்டோட ரிலேட்டிவா என்க, ஆமாம் என்றனர்.

டெலிவரி பெயின் வந்துடுச்சு.மேல கூட்டிட்டு போக போறாங்க என்றவாறு கதவை திறந்து விட..வேகமாக வந்த செழியன் ரூமிற்குள் போக,அங்கே ஷமீராவோ வலியில் அழுது கொண்டிருந்தாள்.

ஓய்...என்ற கணவனின் குரலை கேட்டு வேகமாக திரும்பிப் பார்த்தவளுக்கு வலியிலும் சிரிப்பு வந்தது..

பின்னர் அவளை அழைத்துக்கொண்டு முதல் மாடியில் இருக்கும் ஆபரேஷன் ரூமிற்குள் சென்று விட,மற்றவர்களோ வெளியே காத்திருக்க,வலியில் கத்திக் கொண்டிருக்கும் ஷமீராவின் குரலை கேட்டு நல்லபடியாக பிரசவம் ஆகணும் என்று அவரவர் மனதிற்குள் வேண்டிக் கொண்டனர்.

அதிகாலையில் 5:10க்கு எல்லாம் வீல்
என்ற பெருத்த அழுகுரலோடு குழந்தை சத்தமும் ஷமீராவின் கதறலும் தொடர்ந்து கேட்க,என்ன செழியா உன் புள்ள இப்படி கத்துது..

பொம்பள புள்ளை தான் இப்படி கத்தும்னு சொல்லிக் கொண்டனர்....

அரை மணி நேரத்துக்கு மேல் கடந்திருக்க கதவை திறந்து வெளியே வந்த நர்ஸ் பிரசவம் நல்லபடியாக ஆயிடுச்சு.குழந்தையை குளிக்க வைத்து தாய்ப்பால் கொடுத்துட்டு இருக்காங்க.

பத்து நிமிஷம் கழிச்சு உங்களை கீழே இருக்கும் ரூம்ல டாக்டர் வெயிட் பண்ண சொன்னாங்க என்று சொல்லி சொல்ல,கடவுளேயென அவரவர் சாமிக்கு நன்றி சொல்லினர்.

அதேபோல் 10 நிமிடங்கள் சென்று வேகமாக படியில் இறங்கி கீழே வந்த செழியன் தனது மனைவி தங்கியிருந்த ரூம் கதவை திறந்தவனோ யாத்தேஏஏ என்று அதிர்ந்தான்...!!!

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top