• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
485
வனிச்சூர்:

நல்ல நேரம் வந்ததும் ஷமீரா-செழியன் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் உட்கார வைத்தனர்.

வீட்டின் மூத்த சுமங்கலி பெண்களான வீராயி-சுமதி பாட்டி இருவரும் முதல் வளையலை எடுத்து பேத்திக்கு போட்டுவிட அதன் பின்னர் வரிசையாக எல்லாம் ஒற்றப்படையில் வளையல் போட்டுவிட்டு தட்டில் இருந்த சாதத்தை அவளுக்கும் செழியனுக்கும் ஊட்டியவர்கள் மஞ்சள் பூக்கள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்..

மதிய விருந்தை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்ற பேச்சு வந்தது...

பரவால்ல டெலிவரி இங்கேயே ஆகட்டும்.இங்க தானே அவளை செக்கப்பிற்கு கூப்பிட்டு போகிறேனென்று எல்லாருக்கும் முன்பு செழியன் சொல்ல,இல்லைங்க தம்பி முதல் பிரசவம் அம்மா வீட்ல தான் பார்க்கணும்.

அதுதான் உலக வழக்கம் என்று எஸ்தரும் மகியும் சொல்லவும், பரவாயில்லை இதெல்லாம் ஊர் உலகத்துக்கு,நமக்கு எதுக்குங்க அத்தை இந்த சம்பிரதாயமெல்லாம் என்றான்.

கீழே இந்த வாக்குவாதம் போவது தெரியாமல் ரூமில் இருந்த ஷமீராவோ ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊருக்கு போவதற்காக துணிகள் எல்லாம் பேக்கிங் பண்ணி தயாராக வைத்திருந்த சூட்கேஸை எடுத்து வெளியே வைத்தவள்,போட்டிருந்த பட்டுப்புடவை நகைகளை கழட்டி அங்கிருந்த கபோர்ட்டில் வைத்துவிட்டு இலகுவான புடவையை கட்டிக் கொண்டிருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

யாரு என்கவும் நான் தான் டி கதவை திற டி என கடுப்பாக செழியனின் குரல் கேட்கவும்,இதோ வரேங்கள் என்றவாறு போய் கதவு திறக்க,உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் கன்னத்திலும் கைகளிலும் மஞ்சள் குங்குமம் பூசி தாய்மையின் பூரிப்பில் பேரழகாக இருக்கும் மனைவியை அணைத்தவன் என்ன டி உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க?

இந்த மண்ணாங்கட்டிலாம் வேணாம் புரியுதா,டெலிவரியை எனக்கு பார்க்க முடியாதா?

"கணவன் சொன்னதை கேட்டவள் அன்னைக்கு தான் என்னமோ சொன்னீங்க மூணு மாசம் நிம்மதியா இருப்பேன்னு"

ஏய் அது விளையாட்டுக்கு சொன்னேன் டி என்றவாறு திரும்பியவனுக்கு அங்கே சூட்கேஸ் இருப்பது தெரிந்து ஓஓஓ,நீ ரெடியா தான் இருக்கியா என்று பல்லை கடித்தான்.

ஒவ்வொரு புருஷனுக்கும் கிடைக்கிற அற்புதமான வாய்ப்புன்னு சொன்னீங்க இப்போ உங்களுக்கும் அது கிடைச்சிருக்கு.நான் இல்லாம நல்லா நிம்மதியா இருங்க என்றாள்.

"அடியேய்..."

ஒரு நிமிஷம் கூட நீ இல்லாம இந்த ரூம்ல என்னால் இருக்க முடியாது.சொல்றதை கேளு டி.நீ ஒன்னும் போக வேண்டாம்.நம்ப இங்கேயே டெலிவரி பாத்துக்கலாம் என்று மனைவியிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது..

ஆஆஆஆ என்று கத்தியவன் கதவை திறக்க அங்கே கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.

என்ன டி என்கவும் நல்ல நேரம் முடிய போகுது.அதுக்குள்ள இங்க இருந்து கிளம்பணுமாம்.ஷமீய கூப்பிட்டு வரச் சொல்றாங்க.

மாமன் மகள் சொன்னதை கேட்டு இதெல்லாம் எவன் டி கண்டுபிடிச்சான்?அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை போடி என்றான்.

இந்த ஈரவெங்காய கதையை போய் உன் தாத்தனுங்க இருக்காங்களே அவங்க கிட்ட சொல்லு,என்கிட்ட சொல்லாத என்ற கண்மணி,ஷமீ மாமா வர சொல்றாங்க டி என்கவும்,இதோ 2 மினிட்ஸில் நான் வரேன் என்றவள் சூட்கேஸை எடுக்க,ஏய்...

நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற,நீ இல்லாம நான் எப்படி டி இங்கு இருப்பேன் என்கவும்,யாரு நீ இருக்க மாட்ட?

சும்மா நடிக்காத என்று கண்மணி சொல்லவும்,அடியேய்,அடிச்சி பல்லை ஒடச்சிடுவேன் நீ போடி முதல்ல..என் பொண்டாட்டி கிட்ட பேச விடு டி என்றான்...

அந்த நேரம் எலே அப்பு என்று வீரையன் தாத்தா குரல் கொடுக்க,அப்புச்சி வேற என்று பல்லை கடித்தவன்,உன் இஷ்டத்திற்கு ஊருக்கு கிளம்பிட்டல்ல சரி நல்லபடியா போயிட்டு வா என்றவன்,சூட்கேஸோடு கீழே இறங்கி செல்ல,ஷமீராவும் கண்மணியும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

பின்னர் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சோழனூருக்கு புறப்பட்டனர்.

கார் ஓட்டிக் கொண்டிருந்த பாபுவிற்கு பின்னாடி சீட்டில் இருக்கும் ஷமீயின் மேல் தான் அவ்வப்போது பார்வை இருந்தது.

இதோ பத்து மாதம் ஆகிவிட்டது இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளும் அதன் பிறகு அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் தனது மாமன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட உடனே கோபம் பாதி குறைந்தது. இருந்தும் இப்பொழுது அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு தோணவில்லை. .

ஷமீராவின் அருகில் உட்கார்ந்திருந்த செழியனோ மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அந்த கையின் அழுத்தமே அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

எவ்வளவு பொறுமையாக பேசினாலும் காரில் இருக்கும் பாபுவுக்கும் கண்மணிக்கும் இவர்கள் பேசுவது கேட்கும் என்பதால்,தனது கணவனின் வலது கையை பிடித்தவள் வயிற்று மேல் வைத்துக்கொள்ள அதில் திரும்பி பார்த்தவனிடம் கண்களால் இறஞ்சினாள்.

வீட்ல போய் உனக்கு இருக்கு டி என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல, அவன் உதட்டின் அசைவை வைத்து அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்,பாவமாக அவனைப் பார்க்கவும் செழியனோ அவளிடமிருந்து கையை உருவி கொண்டு வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டான்..

கடவுளே இந்த மனுஷனை என்னதான் பண்றதுன்னு தெரியலையே??

என்னமோ அதிசயமா நான் மட்டும் தான் அம்மா வீட்டுக்கு பிரசவத்துக்கு போற போல இப்படி முறுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாரே என தனக்குள்ள புலம்பிக் கொண்டாள்.

டெல்லி::

அங்கு என்ன நடக்குதுன்னு தெரியலையே?

அந்த மனுஷனுக்கு என்னையும் என் பிள்ளைகளை விட இரண்டாவது பொண்டாட்டி குடும்பத்தை தான் ரொம்ப பிடிக்கும்.

"இது எனக்கு நல்லாவே தெரியும்"

இந்த மகளுக்கு என்னென்ன சீர் செய்கிறார்னு தெரியவில்லையே என்று புலம்பு கொண்டே கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார்.

தனது மகனை தூங்க வைத்த ஜூலி சாப்பிடுவதற்காக கிச்சனிற்கு வர அங்கே மானசா எதோ தானாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டவள்,என்னம்மா தானா பேசிட்டு இருக்கீங்க?

அதைக் கேட்டு என்னத்த டி சொல்லுவேன்,எல்லாம் நம்ம தலையெழுத்து.

அன்னைக்கு அந்த கிழவி உசுரு போய்ட கூடாதுன்னு என்பதை விட,அவளுக்கு நான் நல்லவளாக தெரிந்தால் தான் என்னை வாழ விடுவாள்னு, உங்கப்பனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன்.

இன்னைக்கு பாரு நம்ம அல்லோலப் பட்டுக்கிட்டு கிடக்கிறோம் என்க,அய்யோ அம்மா,நீங்கள் சொல்றது ஒண்ணுமே புரியலையே என்கும் மகளை பார்த்தவர் உனக்கு என்னதான் புரியுது..

இன்னைக்கு உங்க அப்பாவோட இரண்டாவது மகளுக்கு வளையல்காப்பு டி.குழந்தைக்கு உடம்பு முடியலைனு நீ போகல.மாப்பிள்ளை போயிருக்காரு அவர் வந்த பிறகு தான் எல்லாம் கேட்கணும்.

உனக்கு செஞ்ச அதே அளவுக்கு அங்கு செஞ்சாரா இல்லை எக்ஸ்ட்ரா செஞ்சிருக்காரானு என்கவும்,அதைக் கேட்ட ஜூலியோ தாயை முறைத்துப் பார்க்க,என்னை எதுக்கு டி முறைக்கிற, நான் ஒன்னும் கண்டவன் கிட்ட எல்லாம் கேட்கலையே??

உன்ன பெத்த அப்பன் கிட்ட தானே கேட்கிறேன்.என்னமோ பெருசா சொன்னாரு இருக்கிற சொத்தெல்லாம் பிள்ளைகளுக்கு சமமா பிரிச்சு கொடுப்பேன்னு..

நாள் போகுது ஒண்ணுத்துமே காணோமே என்ற புலம்பிக் கொண்டே மகளுக்கான டிபனை தட்டில் வைத்து கொடுத்தவர் இவ வேற போயிட்டாள்.

ரெண்டாவது பொண்டாட்டிய இந்த மனுஷன் விட மாட்டாரு.என்னை விட அந்த மனைவியை தான் அவருக்கு உசுரு.அப்போ திரும்ப இவர்கள் உறவு தொடருமோ?

அப்ப நம்ம வாழ்க்கை டெல்லியில் தான் முடிஞ்சிடுமா??

நம்ம பிள்ளைகளை அந்த மனுஷன் ஏமாத்திடுவிரோ என்று பைத்தியம் போல மனசுக்குள் பேசிக் கொண்ட மானசாவிற்கு திடீரென்று நெஞ்சு வலி வரவும் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.

ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஜூலிக்கு,பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு என்னாச்சு மா என்றவாறு கிச்சனிற்குள் வந்து பார்க்க அங்கே மானசா மயங்கி கிடப்பது தெரிந்தது.

அம்மா அம்மா என்று கத்தியவள் அவர் எழாததால் தனது நாத்தனாரை கூப்பிட்டு வர அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்.

பின்னர் அவர்கள் காரில் மானசாவை அழைத்துக் கொண்டு ருத்ரன் தீபன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு போய் அட்மிட் பண்ண,ட்ரீட்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போதே மானசாவின் உயிர் பிரிந்தது.

ஜூலியோ தனது தாயை நினைத்து அழ,குழத்தையை தோளில் போட்டுக் தட்டிக் கொண்டிருந்த ரூபாவும் பக்கத்து வீட்டு பெண்மணியும் ஆறுதலாக தேற்றிக் கொண்டிருக்கும் போது,கதவை திறந்து வெளியே வந்த டாக்டர் அவங்க இறந்துட்டாங்க என்கவும் அம்மா என்று கத்தி கதறினாள்..

ஒரு நிமிடம் ரூபாவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

பின்னர் அவர்கள் வர வரைக்கும் தான் சமாளிக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொண்டவள், தனது போனிலிருந்து அவளது அண்ணனுக்கு கால் பண்ணினாள்.

ஏர்போர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த ருத்ரன் கால் வரும் சத்தம் கேட்டு போனை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவன் சொல்லு டா?

நாங்கள் கிளம்பிட்டோம் என்க,அண்ணா என்றவள் அழுது கொண்டே மானசா இறந்து போன விஷயத்தை சொல்ல என்ன என்று அதிர்ந்து போனவன், கொஞ்ச நேரம் சமாளி டா நாங்க வந்து விடுகிறோம் என்றவாறு போனை வைத்தவன் தீபனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மகிக்கும் ப்ளைட்டில் டிக்கெட் புக் பண்ண சொல்லியவன் உடனே தனது மாமனாருக்கு கால் பண்ணினான்...

காரில் வந்து கொண்டிருந்த மகிக்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,கையில் இருந்த போனில் பெயரை பார்த்தவர் பெரிய மாப்பிள்ளை தான் என்றவாறு அட்டென்ட் பண்ணியவர் சொல்லுங்க மாப்பிள்ளை,பின்னாடி தானே வரீங்க என்றார்.

அது வந்துங்க மாமா என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற,சொல்லுங்க மாப்பிள்ளை என்ன ஆச்சு என்று மகி கேட்க,உடனே நீங்க எங்க கூட டெல்லிக்கு வரணும்.

"உங்களுக்கும் டிக்கெட் போட்டுட்டேன் மாமா"

அத்தைக்கு உடம்பு சரி இல்லையாம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள் என்று விஷயத்தை மாற்றி சொன்னான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
485
சோழனூர்:

அப்படியா என்று பதறியவர் சரிங்க மாப்ளை என்றவாறு அழைப்பை துண்டித்து விட்டு பின்பக்கம் திரும்பியவர்,மாமா...மானசாவுக்கு உடம்பு சரியில்லையாம்.ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.
நான் திருச்சில இறங்கிடுறேன் நீங்க நல்லபடியா வீட்டுக்கு போய் சேருங்கள் என்கவும்,அதைக் கேட்ட அந்தோணி நானும் வரட்டுமா டா என்றார்.

"இதுதான் தனது மாமாவின் நற்குணம் என்பது புரிந்த மகி பரவால்ல மாமா நான் பாத்துட்டு சொல்றேன் என்றார்"

பின்னர் அவரை ஏர்போர்ட்டில் விட்டு விட்டு இவர்கள் அங்கிருந்து சென்றனர்.காரில் வந்து கொண்டிருந்த அந்தோணிக்கு மகி டெல்லிக்கு போறதை பற்றிய சிந்தனையாகவே இருந்தது.

அவரின் முகத்தை பார்த்த ராணி என்னாச்சுங்க என்க, உன் அண்ணன் போறது ஏதோ எனக்கு சங்கடமா இருக்கு.நானும் போய் பாத்துட்டு வரலாம்னு நினைக்கிறேன் என்றவர் ஜேம்ஸ் நீங்கள் வீட்டுக்கு கிளம்புங்கள்
மீண்டும் திருச்சிக்கு போனால் எப்படியும் மூணு மணி நேரம் ஆகும் என்பதால் இங்கிருந்து சென்னை போயிட்டு அங்கேயிருந்து போய்கலாமென்று முடிவு பண்ணினார்.

அதன்படியே போகும் வழியில் இருந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிய அந்தோணி அந்த வழியாக வந்த சென்னை பஸ்ஸில் ஏறியதும்,இவர்கள் பயணத்தை தொடர்ந்தவர்கள்
இரவு 11 மணிக்கெல்லாம் சோழனூருக்கு வந்து சேர்ந்தனர்.

நேரமும் கடந்து விட அந்தோணியும் மகியும் பின்னாடி வருகிறார்கள் போலயென நினைத்து படுத்து விட்டனர்.

வழக்கம் போல் செழியனுக்கு விழிப்பு வர,ரெஸ்ட் ரூம் போயிட்டு வெளியே வர,அங்கு சாரதா பாட்டியும் எஸ்தரும் பேசிக் கொண்டிருக்க மருமகனைப் பார்த்தவர் டீ எடுத்துட்டு வரேன் என்க,கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கிறேனுங்கத்தை என்றவாறு மாடிக்கு போனவன் வழக்கமாக செய்யும் எக்சர்சைஸ் முடித்துவிட்டு கீழே வர அவனுக்காக டீ போட எஸ்தர் போனார்.

ரூமிற்குள் வந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்துவிட்டு குளித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வெளியே வர மருமகனுக்கு சூடான டீயை கொடுத்தார்.

மாமா ஊருக்கு போய்ட்டாங்களா என்கவும்,லேட்டா வந்தாங்க போல பா. அவங்க தங்கச்சி வீட்டில் இருப்பாங்கனு சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த ராணி,அத்தை என்றவரோ போன் வந்ததையும் மகியும் அந்தோணியும் டெல்லிக்கு போனதை சொல்ல அப்படியா என்று அதிர்ந்தனர்.

அங்கிருந்த செழியனோ தனது அண்ணனுக்கு கால் பண்ணு ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. தீபனுக்கு கால் பண்ண நாட் ரீச்சபிள் என்று வரவும் ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள் போல பிறகு பேசிக்கலாம் என்று விட்டுவிட்டான். பேகிலிருந்த தனது லேப்டாப் எடுத்துக் கொண்டு மேலே வந்தவன் புது கேஸ் விஷயமாக வசுவிற்கு மெயில் அனுப்ப சிறிது நிமிடத்தில் அவரும் பதில் அனுப்பியிருந்தார்.

அதில் இருந்த டீடைல்ஸை படித்துக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க,யாரு வந்துருக்கா என்றவாறு மெயிலை மினிமைஸ் பண்ணி விட்டு கதவை திறக்க அங்கே ஷமீரா தான் நின்று கொண்டிருந்தாள்.

செழியனோ எதுவும் சொல்லாமல் வழியை விட உள்ளே வந்தவள் அங்கிருக்கும் பெட்டில் உட்கார,கதவை தாழிட்டவன்,டேய் உன் பொண்டாட்டி உன்னை சமாதானப்படுத்த வந்திருக்கிறாள்.

அவளை பார்த்து மயங்காமல் கொஞ்சம் சொரணையோடு இருனு தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை கண்டுகொள்ளாமல் பெட்டின் இன்னொரு பக்கம் போய் உட்கார்ந்து லேப்டாபில் வேலையை பார்க்கலானான்.

பாபு வீடு:

மதிய உணவு எல்லாருக்கும் எஸ்தரும் ராணியும் அங்கே சமைப்பதாக சொன்னதால் பங்ஷனுக்காக எடுத்திட்டு போன துணிகளை துவைத்த கண்மணி மேலே இருக்கும் கொடியில் காய வைத்துக் கொண்டிருக்கும் போது
எதோ எடுப்பதற்காக ராணி வருவது தெரிந்தது..

அப்பொழுது பக்கத்து தெருவில் உள்ள பெண்மணி அந்த வழியாக வந்தவர் என்ன ராணி மகனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகுது மருமகள் உண்டாயிருக்கா என்க..

"இன்னும் இல்ல அக்கா"

சின்ன சிறுசுக தானே இப்ப என்ன அவசரம்,வயசாக ஓடிப் போயிடுச்சு என்கவும்,அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ராணி. முதல் பிள்ளையை பெத்துக்கிட்டு இரண்டாவது பிள்ளைக்கு வேணாலும் நேரத்தை கொடுக்கலாம்.மருமகள்கிட்ட அரசல் புரசலாக இந்த விஷயத்தை காதுல போட்டு வை.

காலத்தே பயிர் செய்னு நம்ப முப்பாட்டனுங்க சும்மா ஒன்னும் சொல்லவில்லை என்றவாறு அவர் சென்றது மாடியில் இருந்தவளுக்கு மட்டுமில்லாமல் ரூமிற்குள் இருந்த பாவுவிற்கும் கேட்டது.

டெல்லி பயணம்:

"அரை மணி நேரத்தில் ருத்ரன்-தீபனும் அங்கு வந்து சேர்ந்தனர்" இரவு ஏழு மணிக்கு இவர்கள் செல்வதற்கான ப்ளைடின் அறிவிப்பு வரவும் அதில் ஏறி டெல்லிக்கு சென்றனர்.

வானில் பறந்து வந்த விமானமும் டெல்லிக்கு வந்து சேர பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வர அவர்களின் நண்பன் மிலன் காரில் காத்திருக்கவும் அதில் ஏறி ஹாஸ்பிடலுக்கு சென்றனர்..

மானசா நல்லா ஆக்டீவாக தானே இருப்பாள்,அப்படி என்னவாக இருக்கும்?

"காலையில் கூட நல்லா பேசுனாளே"

மகள் கூட இருந்துட்டு வரேனு அடம் பிடித்து போனவள் என்னத்தை உடம்புக்கு இழுத்து வச்சிருக்கானு தெரியலையேனு மகி புலம்பிக் கொண்டே வந்தார்.

இதுவரை விஷயத்தை சொல்லாமல் அழைத்து வந்தாச்சு.உண்மை தெரியும் போது என்ன நடக்க போகிறதோ என அவனுங்கள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாடுங்கள்.

1:30 மணி நேரம் பயணத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.

நீங்க போங்கடா நான் காரை பார்க்கிங் பண்ணிட்டு வரேன் என்று மிலன் சொல்லவும் சரிடா என நண்பர்கள் இருவரும் மகியோடு உள்ளே போக அங்கே தெரிந்த டாக்டர்களோ அவர்களை பார்த்து வருத்தமாக தலையசைத்து சென்றனர்..

ஏனோ இதுவரை இல்லாத பதற்றம் இப்போது மகிக்கு வந்தது.நடக்கும் போது தடுமாறியவர் பின்னர் சமாளித்து அவர்களோடு போனார்.

உள்ளே போய் வலது பக்கம் திரும்ப அங்கே மார்ச்சுவரி என்ற பெயர் பெரிதாக எழுதபட்டிருந்தது.மனைவியை பார்க்க வேண்டிய துடிப்பில் மகி அதை கவனிக்கவில்லை.

சில அடி தூரத்தில் ஜூலியை அணைத்தவாறு டாக்டர் கர்ணனின் மனைவி ஹீரல் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

காலடி சத்தம் கேட்டு திரும்பியவர் பேட்டா என்கவும்,விலுக்கென்று எழுந்த ஜூலியோ வேகமாக திரும்பி பார்த்தவள் டாடி என்று கத்திக் கொண்டே போய் மகியை அணைத்துக் கொண்டு அழ,ஒன்னும் இல்லடா பாப்பா.அம்மா சீக்கிரம் சரியாயிடுவா. .

நல்லா இருந்தாளே,திடீர்னு எப்படி அவளுக்கு உடம்பு சரியில்லாம போச்சு?

என்ன சாப்பிட்டா?

வாமிட் ஏதாவது எடுத்தாளா??

உங்க அம்மா ஹெல்த்தியா தான இருப்பாள்,ட்ரீட்மென்ட் பண்ணினால் சரியாயிகிடுவா டா என்று,மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் மகள் அழுகிறாளென நினைத்து மகி பேசிக் கொண்டிருக்க, அய்யோ டேட்...

அம்மா நம்மளை விட்டுட்டு போயிட்டாங்களென்று ஜூலி அழ என்னாஆஆஆ என்று அதிர்ந்து போன மகி அப்படியே மயங்கி சரிய,பின்னால் நின்ற மிலனோ அவரை தாங்கி பிடிக்கவும்,வேகமாய் ஓடிவந்த ருத்ரனும் தீபனும் அவரை தூக்கி கொண்டு பக்கத்தில் இருக்கும் ரூமிற்குள் போனார்கள்..

நேரமும் கடந்து செல்ல,மானசாவின் பாடியோடு வீட்டிற்கு வந்தனர்..

விஷயத்தை கேள்வி பட்ட அருண் அவனது மனைவி மாமனார்,மாமியாரோடு டெல்லிக்கு வர நள்ளிரவு ஒரு மணியானது..வீட்டிற்கு வந்தவன் தாயின் உடலை பார்த்து கத்தி கதறினான்.

விடியலும் தொடங்கியது..

மானசாவின் இறப்பை பற்றி வனிச்சூரிலிருக்கும் தனது வீட்டினருக்கும் பாயலுக்கும் ருத்ரன் சொல்ல,அவர்கள் வந்து சேர காலை பத்து மணிக்கு மேலானது..

இரவு வீட்டிற்கு வந்த போது மனைவியின் உடலை பார்த்து உட்கார்ந்த மகியோ அதன் பின்னர் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.

அவரின் எண்ணங்கள் எல்லாம் மானசாவை சந்தித்த நாளிலிருந்து நேற்று காலை போனில் பேசியது வரை அசை போட கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடியது.

எஸ்தர்,அந்தோணி வரலையாயென வீரையன் தாத்தா கேட்க,அப்பொழுது தான் அவர்களுக்கு விஷயம் சொல்லவில்லை என்பது தெரிந்து,அது வந்துங்க தாத்தாயென ருத்ரன் சங்கடமாக பார்க்க,வருவதும் வராமல் போவதும் அடுத்த விஷயம். சொல்ல வேண்டியது நமது கடமை என்கும் போது ருத்ரன் நம்பருக்கு கால் வந்தது..

ஒரு நிமிஷம் தாத்தா என்றவாறு போனை அட்டென் பண்ணியவன் சொல்லுங்கள் பா என்க,அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவன் அப்படிங்களாயென அதிர்ந்து விட்டு டிரைவரிடம் போனை கொடுக்க சொல்லி தங்கள் வில்லாவின் அட்ரஸை சொல்லி அழைப்பை துண்டித்தவன்,அந்தோணி அப்பா டெல்லிக்கு வந்துட்டாங்களாம்..

வீட்டு அட்ரஸ் கேட்டு தான் கால் பண்ணிருக்காங்களென்க,அப்படியா என்று அதிர்ந்தவர்கள் விஷயம் தெரிந்திருக்குமா என்க,அது தெரியலையே என்றான்.

சரி அந்தோணி இங்க வரட்டும் பிறகு எதா இருந்தாலும் பேசிக் கொள்ளலாமென தம்புசாமி தாத்தாவும் சொன்னார்.

ருத்ரன்- தீபனுக்கு தெரிந்தவர்கள் எல்லாம் வந்து துக்கம் விசாரித்து சிறிது நேரம் இருந்து விட்டு சென்று கொண்டிருந்தனர்...

முக்கால் மணி நேரம் கடந்திருக்க அந்தோணியும் பிருந்தாவனம் வில்லாவிற்கு வந்து சேர்ந்தவர், அங்கிருந்து எப்படி போகணும் என்பது தெரியாமல் கேட்டிலேயே இறங்கி கொண்டு டாக்ஸிக்கான பணத்தை கொடுத்தவர் ருத்ரனுக்கு கால் பண்ணும் போது மாமா என்ற தீபனின் குரல் கேட்டு கட் பண்ணினார்.

அடேய் மானசா எப்படி இருக்குது?

பெருசா ஒன்னும் இல்லையே என்க,ஆன்ட்டி நேற்றே இறந்துட்டாங்க என்கவும்,என்ன டா சொல்ற என்று அந்தோணி அதிர,ஆமா மாமா என்றவன் பின்னர் ருத்ரனுக்கு போனில் சொல்லிய விஷயத்தை சொல்ல,எனக்கு மனசு அப்பயே ஒரு மாதிரியாக இருந்துச்சு டா..

அதனால்தான் பாதி வழியில் இறங்கி நான் சென்னைக்கு போய் அங்கிருந்து டெல்லி வந்தேன் என்றவர் மாலை கூட வாங்கலையே டா?

அந்த பொண்ணு உடம்பு முடியாம தானே இருக்கும் சரி பார்த்துட்டு போலாம்னு தான் நினைச்சு நான் வந்தேன் என்று வருத்தமாக சொன்னவர்,ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் எஸ்தர், ராணியையும் கூப்பிட்டு வந்துருப்பனே என்று கோவமாக கேட்க,அந்த சூழ்நிலையில் அங்கிள் கிட்டயும் விஷயத்தை சொல்லலை,இங்கு வந்த பிறகுதான் தெரியும் மாமா..

தீபன் சொன்னதை கேட்டவர் பின்னர் சூழ்நிலை புரிந்துகொண்டு அவனோடு மேலே உள்ள பிளாட்டிற்கு வந்தவர் மானசாவின் பாடிக்கு முன்னால் கையை கூப்பி வணங்கி விட்டு மகியை தேட, கண்ணில் உயிரே இல்லாமல் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது தெரிந்தது...

மகி என்றவாறு தனது அத்தை மகனின் கையைப் பிடிக்க,தனது மாமாவின் குரலை கேட்டு நிகழ்விற்கு வந்து மாமா என்று அவரை பிடித்துக் கொண்டு கத்தி கதறினார்.

நேற்றிலிருந்து இதுவரை யாரிடமும் ஒரு வார்த்தை பேசாத மகி இப்பயாவது மனம் விட்டு அழுகிறாரே என்று மற்றவர்களும் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்..

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top