Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 477
- Thread Author
- #1
வனிச்சூர்:
நல்ல நேரத்தில் சொந்த பந்தங்கள் சூழ பந்தல்காலும் நட்டதும் பந்தல் போடுவதற்கான ஆட்களும் அவரவர் வேலையை தொடங்கினார்கள்.இன்று முதலாவதாக தாய்மாமன் நலங்கு என்று சொல்லி இருந்ததால், வீரையன் தாத்தா குடும்பமும் பரமு வீடும் தான் தம்புசாமி தாத்தா வீட்டிற்கு தாய் மாமன் வீடு என்பதால் இரண்டு குடும்பமும் சேர்ந்து மூன்று கிடாக்களோடு நலங்குக்கு ஊர்வலமாக வந்தார்கள்..
வந்தவர்களை கல்யாண வீட்டினர் வரவேற்து உள்ளே அழைத்தபோக ஒரு பக்கம் மதிய கிடா விருந்து ஊருக்கே தயாரானது..
பின்னர் கண்மணியை கிழக்குப் பார்க்க உட்கார வைத்துவிட்டு,நலுங்கை வீராயி பாட்டி ஆரம்பித்து வைக்க மற்றவர்களும் வரிசையாக ஒற்றைப்படையில் வந்து எண்ணெய் தொட்டு அவள் தலையில் வைத்தவர்கள்,பூக்களை தூவி ஆசீர்வாதம் பண்ணியதும் அவளை மலரோடு குளிக்க அனுப்பி வைத்தார்கள்.
அரை மணி நேரத்தில் குளித்து முடித்தவள் தாய் மாமன் வீட்டில் எடுத்து வந்த புடவையை கட்டிக்கொண்டு வர அவளுக்கு மாலையை போட்ட வீரையன் தாத்தா பின்னர் செல்லதுரை அவர் பரம மூவரும் மாமன் சீராக சேர்ந்து வாங்கிய செயினை கண்மணிக்கு போட்டு விட்டனர்.
பின்னர் மதிய உணவும் தயாராக சாமிக்கு படைத்துவிட்டு உணவை பரிமாறினர்.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் சொந்த பந்தங்கள் சேர்ந்து நலுங்கு வைக்க அதோ இதோ என்று நான்கு நாட்கள் ஓடியது.
மறுநாள் பொழுதும் வந்தது.அன்று பொண்ணழைப்பு என்பதால் மாப்பிள்ளை வீட்டினர் மதிய உணவுக்கெல்லாம் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்லியிருக்க அதற்கான விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
நேரமும் கடந்து செல்ல மதியம் 12:30 மணிக்கு எல்லாம் சோழனூரில் இருந்து பாபுவின் சித்தப்பா முறை உள்ளவர் அவர் மனைவி ஊர்க்காரர்கள் சிலரோடு பொண்ணழைப்பிற்காக பெரிய பஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.
வனிச்சூரின் சம்பரதாயபடி பொண்ணுக்கு பரிசம் போட வேண்டும் என்பதால் அதற்காக அவர்கள் எடுத்து வந்த பொருட்களை வைத்து ஹிந்து முறைப்படி சடங்குகள் நடந்தது.
நல்ல நேரம் மதியம் 3.30 மணிக்கு முடிகிறது அந்த நேரத்திற்குள் பெண்ணோடு கிளம்பளாமென மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்ல அவர்களோ உங்கள் விருப்பமென்றனர்.
பொண்ணழைப்பிற்காக எடுத்து வந்த புடவையை ப்யூட்டிஷியனும் கண்மணிக்கு கட்டி விட்டதும் அவளை பந்தலுக்கு அழைத்து வந்தார்கள்.
பின்னர் பாபுவின் சித்தியும் அவளுக்கு மாலை போட்டு விட்டு ஆசீர்வாதம் பண்ணியதும் சரிங்க கிளம்பலாம் என்க, இவ்வளவு நேரம் தனக்குள் பொத்தி வைத்த அழுகையை தனது வீட்டினரை கட்டிக்கொண்டு கத்தி கதறி வெளியேற்றினாள்.
ஒரு வழியாக அவளை சமாதானம் படுத்தி இவர்களும் சொந்த பந்தங்களுக்காக இன்னொரு பஸ் ஏற்பாடு பண்ணியிருந்ததால் இரண்டு பஸ்ஸில் ஏறி சோழனூரை நோக்கி புறப்பட்டனர்.
ஷமீராவை காரில் அழைத்து வருவதாக செழியனும் சொல்லியதால் வீட்டு சாவியை அவனிடம் கொடுத்து சென்றனர்.
இரண்டு பொழுது யாரும் இல்லாத வீட்டை பாதுக்காக்க தெரிந்த இருவரை வர வைத்திருந்தவன் அவர்கள் செலவுக்கு பணத்தை கொடுக்கவும், வேண்டாம் தம்பியென்க,இருக்கட்டும் ணா என்றவன் ஆளுக்கு 200 ரூபாய் தனித்தனியாக இருவருக்கும் கொடுத்துவிட்டு மனைவியோடு தங்களது வீட்டிற்கு வந்தான்.
ஓய்...
கிளம்பலாமா டி??
எல்லா எடுத்து வச்சிட்ட தானே??
எதற்கும் ஒரு முறை நல்லா செக் பண்ணிக்க.உன் ஊரு பட்டிக்காடு அங்க ஒண்ணுமே கிடைக்காது என்று மனைவி வம்பு இழுப்பதற்காக சொல்லிக் கொண்டே அங்கிருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
மாடிப்படியில் ஏறியவளோ இதைக் கேட்டு திரும்பி கணவனை பார்த்து முறைத்தவள் ஆமா நான் பட்டிக்காட்டில் இருந்தேன்.ஐயா பாரின்ல வளர்ந்தார் பாருங்களேன்..
கூகுள் மேப்பில் இல்லாத நம்பர் ஒன் பட்டிக்காடு உங்கள் ஊரு.அவசரத்துக்கு இந்த ஊர்ல இருந்து வெளியில போக முடியுதா?
வண்டியில் வேகமாக போனால் தான் அரைமணி நேரத்தில் போக முடியும்.இல்லைனா உயிர் ஊஞ்சலாடும்,ஆனா என் ஊரில் நடந்து போற தூரம் தான் பஸ் ஸ்டாண்ட்.
அதே தூரம் தான் ஹாஸ்பிடல் மார்க்கெட்னு இன்னும் அத்தியாவசிய தேவைகள் எல்லாம் பத்து நிமிஷ தூரத்தில் இருப்பது பட்டிக்காடா தெரியுது,இந்த கிராமத்து காட்டாணுக்கு என்றவாறு படியில் ஏறி மேலே போனாள்.
மனைவி சொன்னதைக் கேட்டவன் எதே காட்டாணாஆஆ இரு டி வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கிறேன் என்றவாறு கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு படியில் ஏறி மேல வந்தவன் கதவை திறக்க அது உள் பக்கமாக லாக் பண்ணியிருப்பது தெரிந்தது.
அடிங்கொய்யால முன்னெச்சரிக்கையா டி என்று கதவை தட்டவும் 2 நிமிஷம் இருங்க வந்துடுறேன் என்று அங்கிருந்து குரல் கொடுத்தாள்.
முடியாது டி இப்ப நான் உள்ளே வந்து தான் ஆக வேண்டும் என்று செழியன் பிடிவாதமாக சொல்ல,உங்க அவசரத்திற்கு எல்லாம் கதவை திறக்க முடியாது.
நீங்க ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் என்றவள் கட்டியிருந்த புடவையை அவிழ்த்து அங்கிருந்து கொடியில் போட்டு விட்டு இலகுவான சுடிதார் மாற்றி விட்டு வந்து கதவை திறந்தாள்.
மனைவியை பார்த்து முறைத்தவன் யாரை பார்த்து டி காட்டாண்ணு சொல்ற என்றவாறு மனைவியின் கன்னத்தை பிடித்து கேட்க,உங்களை தான் சொன்னேன் அதிலென்ன சந்தேகமென்றவாறு கணவனின் கையை தட்டி விட்டவள் அங்கிருந்த டிராலி பேகை இழுக்க போக..
எட்டி மனைவியின் கையை பிடித்து இழுத்து நெஞ்சோடு அணைத்தவன் இந்த காட்டன் மேல தாண்டி மயங்கி பித்து பிடித்து போய் நிற்கிற..
"உன் ஆயுசுக்கும் தீராத மயக்கம் டி"
அதற்கு சாட்சியாக தான் உன் கழுத்துலையும் வயிற்றிலும் எனக்கு சொந்தமானது இருக்கே என்றவரே மனைவியின் கழுத்தில் முத்தமிட,நோ என்றவாறு விலக முயன்றாள்.
அவளின் முயற்சி எதனால் என்பது புரிந்து,அவள் காதோடு மீசை முடிகள் குத்துமாறு முகத்தை அசைக்க அய்யோ இளா போதும்... இது போங்கு என்று சிணுங்கினாள்.
சரி சரி கிளம்பலாமா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் உன் அண்ணன் கரடி பயல் போன் பண்ணுவான் என்கும் போதே செழியன் நம்பருக்கு கால் வரும் சத்தம் கேட்க நான் தான் சொன்னேன் இல்லையா..
எப்படி தான் இந்த கரடி பயலுக்கு வேர்க்குதுன்னு தெரியல என்றவாறு பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் வெற்றியின் நம்பர் வந்தது..
அட்டென் பண்ணியவன் அந்த பக்கம் அவன் சொன்னதை கேட்டு சரி சரி வா வா என்க,எப்படியும் ஏழு மணிக்கெல்லாம் திருச்சிக்கு வந்துவிடுவேன் என்கவும்,நான் ஏர்போர்ட்டுக்கு வந்துடுறேன் டா என்று சொல்லி போனை வைத்தான்.
பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே நிற்கும் இனோவா காரில் ஏறி உட்கார்ந்தவன் போகலாமா என்று பக்கத்தில் இருக்கும் மனைவியை கேட்க,எஸ் டிரைவர் என்றவாறு ஷமீரா சிரிக்க,கொஞ்சம் நஞ்சம் கொழுப்பு இல்லை டி.டெலிவரி ஆகட்டும் பிறகு இருக்கு டி உனக்கு என்கவும் போயா போயா என்றாள்.
சோழனூர்:
சொந்த பந்தங்கள் வெளி ஊரிலிருந்து வந்து கொண்டிருக்க,எஸ்தரின் வருகைக்காக தான் பாபு வீட்டினர் ஆவலாக வழியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மகி இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட எஸ்தர் ஏன் இன்னும் வரவில்லை என்று தெரிந்தவர்கள் கேட்டனர்.
யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக எஸ்தர் டெல்லியில் வேலை பார்பதை பற்றி சிலரிடம் சொல்லியிருக்க,அதுவும் விஷம் போல எல்லாரிடமும் பரவியது.
அதிகாலையிலே பொண்ணழைப்பிற்காக சிலரை பஸ்ஸில் அனுப்பி வைத்தவர் அடிக்கடி அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க தவறவில்லை.
காலை போய் மதியமும் வர ஒரு பக்கம் சொந்தங்களுக்கு மதிய பந்தி நடந்து கொண்டிருக்கும் போது கார் ஒன்று பந்தலுக்கு சற்று தள்ளி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய எஸ்தர் கம்பீர தோரணையோடு வலது பக்க தோளில் ஹேண்ட் பேகும்,இன்னொரு கையில் டிராலியோடு வருவதை பார்த்த மகி அதிர்ந்து போனார்.
அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே போனவர் ராணியை தவிர எல்லாரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு அவர் வாழ்ந்த வீட்டின் சாவி எங்கே ணா என்க,ராணியும் வீட்டு சாவியை எடுத்து வந்து கொடுத்தார்.
அண்ணா...
ஆயிரம் இருந்தாலும் என் பொண்ணு மருமகன் வந்து போவதற்கு வீடு வேண்டும்.அது நம் மாமனார் உழைப்பில் கட்டியதால் சட்டப்படி எனது மகளுக்கு உரிமையானது.
அதனால் நான் எனது வீட்டில் வாழ போகிறேன் எந்த உரிமையும் கொண்டாடி கொண்டு என் கிட்ட வரக்கூடாது என்றவர்,தனது வீட்டை நோக்கி போக அந்தோணிக்கும் சாரதா பாட்டிக்கும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
மனைவி வீட்டுக்கு வந்துட்டாளே அது போதும் என்ற சந்தோஷமே மகிக்கு பெரிதாக இருந்தது...
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,தான் திருமணம் செய்துட்டு வந்த வீட்டிற்கு கால் எடுத்து வைத்த எஸ்ருக்கு கடந்து சென்ற நினைவுகள் வர,தலையை உலுக்கி அதையெல்லாம் உதறித் தள்ளியவர் அறைக்குள் போய் தனது லக்கேஜை வைத்துவிட்டு ருத்ரன் தீபனுக்கு ஊருக்கு வந்து சேர்ந்து விட்டதாக கால் பண்ணி சொன்னார்.
பின்னர் தனது பேகில் இருந்த லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஹாலில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்தவர் விட்ட வேலையை தொடங்கலானார்.
நேரமும் கடந்து செல்ல கதவு திறக்கும் சத்தம் கேட்டது ..யார் வருகிறார் என்று அவரின் உள்ளுணர்வு உணர்த்தினாலும் சிறிதும் கண்டு கொள்ளவில்லை..
வீட்டிற்குள் வந்த மகி அங்கிருந்த எஸ்தரை பார்த்து எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றவர்,ஷமீராவுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள் இருந்த பெட்டியை எடுத்துட்டு வந்து எஸ்தரின் பக்கத்தில் வைத்தவர்,இது நம்ம பொண்ணுக்கு செய்ய வேண்டிய சீருக்காக வாங்கியிருக்கேன்.
இன்னும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் தான் வாங்கணும்.அவங்க வீடு அரண்மனை போல இருக்கு. அதனால காருக்கும் அதுக்கும் சேர்த்து பணமாக கொடுத்து விடலாம் என்று எனக்கு தோணுது.
நீ என்ன சொல்கிறாய்?
லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர் பெத்த அப்பாவாக உங்க கடமையை நீங்க செய்றீங்க. இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கின்றது என்றவர் ,இவ்வளவு நேரம் வரைந்த டிசைனை ஹிரோஷி நம்பருக்கு அனுப்பிவிட்டு லேப்டாப்பை மூடி வைத்தார்.