• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
473
வனிச்சூர்:

கல்யாண புடவை எடுக்க போனவர்கள் அதிகாலை நான்கு மணிக்கு ஊருக்குள் வந்தனர்.

வரும் போதே கண்மணிக்கு போன் பண்ணியதால் அவளும் கதவை திறந்து வைத்திருந்ததோடு அனைவருக்கும் சூடாக டீ யும் தயாராக வைத்திருந்தாள்.

உன் உடன்பிறப்பு என்ன டி பண்றா என்று செழியன் கேட்க,ம் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறாள் என்றபடி கண்மணி பல்லை கடிக்க,பாவம் டி என் பங்காளி உன்னை கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறானோ போ, அவன் தலையெழுத்து என்றவாறு படியில் ஏறி மேலே போனவன் எந்த ரூமில் இருக்கிறாள்னு தெரியலையேனு புலம்பியவன்,நாம் வந்தால் தங்குமறையில் சென்று பார்க்கலாமென்று இடது பக்கமிருக்கும் மூன்றாவது அறைக் கதவை திறக்க,அங்கே கவிதாவும் மலரும் தரையிலும் ஷமீரா கட்டிலில் படித்திருப்பதும் தெரிந்தது.

சரி தூங்குவா எழுப்ப வேண்டாம் என்று கதவை சாத்தும் போது தூக்கத்தில் இருந்தவள் திரும்பி என்னங்க என்கவும் அந்த சத்தத்தில் கதவை திறந்தவன் டிஸ்டப் பண்ணிட்டேனா டி என்றான்..

அது இருக்கட்டும் நீங்கள் எப்ப வந்தீங்க என்று வேகமாக எழ,அறிவு கெட்டவளே எதுக்குடி இப்படி எந்திரிச்சு வர, பொறுமையா டி.

கீழ மலரும் கவியும் படுத்துருக்காங்க பார்த்து வா என்கவும் இந்த அறிவு வெங்காயம் படாரென்று கதவை திறக்கும் போது இருக்கணும் மாமாயென்று கவிதா சொல்ல..

அடியேய் நீ தூங்கலையா டி?

என் வாயில நல்லா வந்துரும்,உள்ளே தூங்குவாங்கனு கூறு வேண்டாம்?

இந்த லட்சணத்தில் இந்த கொய்யா போலீசாம்,வீட்டுக்கு வந்தால் இப்படித்தான் மைக்கில பேசுற போல எல்லாரும் கத்துவீங்களா?மனுஷன் தூங்க வேண்டாமா என்றவாறு திரும்பிப் படுத்தாள்.

ஏய் வேகமாக வாடி அவளுக்கு இருக்கிற காண்டுக்கு எந்திரிச்சு அடிச்சாலும் அடிச்சிடுவாள் போலனு செழியன் சொல்லவும்,இன்னும் ஒரு நிமிஷம் இங்கு நீ இருந்தால் கண்டிப்பாக அது தான் நடக்கும் மாமா.

அடியேய் ஆட்டக்காரி எனக்கும் நேரம் வரும் டி அப்போ உன்ன வச்சிக்கிறேன் இரு டி என்கவும்,ம்கூம்..முதலில் கட்டிய எங்க அக்கா கூட ஒழுங்கா குடும்பம் பண்ண பாருயா அதுக்கப்புறம் என்ன வச்சுக்கலாம்...

யாத்தேஏஏஏ...எவ்வளவு வாய் பாரு இவளுக்கு என்றவாறு செழியன் முறைக்க,கதவை சாத்திவிட்டு வெளியே இருங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சைகையில் ஷமீரா சொல்ல ஓகே என்று வெளியில் வந்து நின்றான்.

அவளும் பாத்ரூம் போயிட்டு முகத்தை கழுவிக் கொண்டு கதவை மெதுவாக திறந்து வெளியே வந்தவள் அதே போல் பொறுமையாக சாத்த,ஏன் டி தூங்கலையா என்றவாறு மனைவியின் தோளோடு அணைத்தான்.

சரி நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் என்று சொல்லிக் கொண்டு செல்லதுரையும் வானதியும் எந்திரிக்க,ஷமி இந்தா என்று மிதமாக ஆற்றிய பாலை எடுத்து வந்து கண்மணி நீட்ட,சிரித்தவாறு அவளும் குடித்துவிட்டு தங்களது வீட்டுக்கு சென்றனர்.

மணி 5 கூட ஆகலை நீ போய் படு வேலையை பொறுமையாக செஞ்சிக்கலாம் என்றவாறு வானதியும் கையை மடக்கி தலையில் வைத்துக்கொண்டு தரையிலே படுத்து விட்டார்.

பின்னர் இருவரும் மேலே இருக்கும் ரூமிற்குள் போக,செழியனோ கைலியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போகவும்,ஷமீராவோ பெட்டில் ஏறி படுத்து விட்டாள்.

அந்த அதிகாலையிலும் ஒரு குளியலை போட்டுவிட்டு வெளியே வந்தவனுக்கு மனைவி படுத்து விட்டது தெரியவும், சிரித்துக் கொண்டே தலையை துவட்டியவன் டி-ஷர்ட் எடுத்து போட்டுக் கொண்டு அவளின் பக்கத்தில் படுத்தவனோ மனைவியை அணைக்கும் போது வயிற்றிலிருந்த குழந்தையின் அசைவு தெரிய...

என்ன டா மவனே உங்கம்மாவை தொடக்கூடாதுனு உதைக்கிறியோ.

முதலில் அவள் எனக்கு பொண்டாட்டி பிறகு தான் டா உனக்கு அம்மாயென வயிற்றிலிருக்கும் குழந்தையோடு வாக்குவாதம் பண்ண, வெளியில் வருவதற்கு முன்னாடி இவ்வளவு அக்கப்போரு..

இன்னும் அவங்க வந்துட்டாக்க உங்க ரெண்டு பேரு கிட்ட மாட்டிகிட்டு நான் என்ன பாடுபட போறனோ என்று ஷமீரா சொல்ல,ஓய் நீ தூங்கலையாடி?

முழிச்சிட்டு தான் இருக்கிறியா என்று மனைவியின் முகத்தின் மேல் தனது முகத்தை வைக்க,தாடி குத்துது என்றாள்.

ம்ம் குத்தட்டும் நல்லா குத்தட்டும் என்று அப்படி இப்படி முகத்தை உரசு அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல இருக்கவும் அய்யோஓஓ...

கொஞ்ச நேரம் தூங்க விடுங்கள்.நீங்கள் பக்கத்தில் இல்லாமல் அங்கு எனக்கு தூக்கமே வரலையென்று ஒரு ப்ளோவில் உண்மையை ஷமீரா உளர,ஹா ஹா ஹா..

என் பொண்டாட்டிய பற்றி எனக்கு தெரியாமல் இருக்குமா?

நான் தான் சொன்னனேடி என்றவாறு மனைவியின் கழுத்தில் புதைந்தவன் இதற்கு பிறகு நீ தூங்கி என்ன பண்ண போறடி என்றபடி அவளின் தலையிலிருந்து ஒற்றை விரலால் கோடுகள் இழுத்துக் கொண்டே வர,ஷமீராவிற்கு கணவனின் தீண்டல்கள் சிலிர்க்க வைக்க ஹலோ போலீஸ் சும்மா இரு டா என்க...

"எதேஏஏஏஏ டா வாஆஆஆஆ"

அடிங் கொய்யால,உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் புருஷனை டா சொல்லுவ என்றவன் மனைவியின் கழுத்து வளைவில் கடித்து வைக்க...

அய்யோ இளாஆஆஆ...

"சும்மா இருங்க"

நான் பேர் சொல்லாமல் வேற யார் சொல்லணும்?

கல்யாண பண்ணிட்டு வந்த அன்று என்னமோ பெரிய இவராட்டம் சொன்னிங்களே உனக்கு எப்படி வேணாலும் கூப்பிட்டுக்க டி .அது இந்த ரூம்ல தான் இருக்கணும்னு..

இப்ப மட்டும் என்ன நொய்யாவுக்கு கொடையுதென ஷமீ கேட்க,ஓ அப்ப மனசுல இதெல்லாம் வச்சுட்டு தான் இருக்கிறாயென்று செழியன் சிரிக்கவும் அதிலென்ன சந்தேகமென்றாள்.

ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு..உன் புருஷனுக்கு கொஞ்சம் மரியாதை இருக்குடி வெளியில டா கூப்பிடாதே எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் என்கவும் யோசித்து முடிவு பண்றேன் என்கும் போது கால் வரும் சத்தம் கேட்டது.

இந்த அதிகாலையில் யாரு என்றவாறு போனை எடுத்து பார்த்தவனுக்கு வெற்றியின் பெயர் தெரிய,வேகமாக அட்டென் பண்ணியவன் சொல்லு டா?

என்ன இந்த நேரத்திலென்க எனக்கு தூக்கம் வரலை அதான் உனக்கு மட்டும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கென்று வெற்றி சிரிக்க,அட நாதாரி பயலே..

நீயெல்லாம் மனுசனாடா?.

என்னவோ ஏதோவென நானும் பதறியடித்து அட்டென் பண்ணினேனே கையில கிடைச்ச குறுத்தெலும்பிலே மிதிப்பேனென்று திட்டி விட்டு அழைப்பை துண்டிக்க ஷமீராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது..

சோழனூர்:

சோபாவில் உட்கார்ந்திருந்த மகியை பார்க்க பார்க்க அந்தோணிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

என்னங்கத்தை நான் சொன்னதுக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கீங்களே?.

மன்னிக்கும் அளவிற்கு என் செயல் இல்லை தான்.இரண்டு அடியாவது நீங்கள் அடித்திடுங்கள் இப்படி யாரோ போல ஒதுக்கி வைத்ததை தான் என்னால தாங்கிக்க முடியவில்லை.

எனக்கு உங்களை விட்டால் வேற யாரு இருக்கா சொல்லுங்க?.

இப்படி எல்லாருமே ஒரேடியாக என்னை தலை முழுகினால் என்னதான் அர்த்தம் என்று வருத்தமாக மகி பேச தனது மருமகனை நிமிர்ந்து பார்த்தவர் மன்னிக்கவும் மறக்கவும் அளவுக்கு நீங்க எல்லாம் எதையுமே பண்ணலை.

என் பொண்ணே வேண்டாம்னு தூக்கி எறிந்த பிறகு இதை பத்தி பேச ஒன்னும் ஆகறதுக்கு இல்லை.உனக்கு பிறந்த பாவத்துக்கு ஒரு நல்ல இடத்துல என் பேத்தி வாக்கப்பட்டுருக்கா.

நீ கொடுக்கிற சீர் எல்லாம் அவள் வாங்கிப்பான்னு நீ நினைக்கிறாயா?என்று குற்ற பார்வையோடு மகியை பார்க்க,நிச்சயமா வாங்கிக்கமாட்டாள்.
அது எனக்கு நல்லா தெரியும்.

கல்யாணத்துக்கு எதுவுமே செய்ய முடியல இப்ப மாசமா இருக்கும்போது வளைகாப்பு பண்ணுவாங்களே அப்ப போயி என்னோட கடமையை இரண்டு பொண்ணுக்கு செய்யணும்னு நான் ஆசைப்படுறேன்.

எந்த நேரத்துல என்ன நடக்கும்னு தெரியாது திடீர்னு நாளைக்கு எனக்கு ஏதாச்சும் ஒன்னு ஆயிடுச்சென்றால் இவங்களுக்கு எதுவுமே செய்யாம போனா ஆண்டவர் என்னை மன்னிக்கவே மாட்டார் என்கவும்,உன் வாயால் ஆண்டவரை பத்தி நீ பேசாதப்பா...

தெரியாமல் செய்த தவறுகளுக்கு தான் கடவுள் மன்னிப்பு கொடுப்பாரு தெரிஞ்சே எல்லாரும் கூத்தடிச்சிருக்கிறீங்க இதுக்கு என்ன சொல்ல...

உன் கடமையை செய்யணும்னு நினைக்கிற தானே,உன் இஷ்டம் போல செய் ஏத்துக்கிட்டா பாரு ஏத்துக்கலைன்னா இதை பத்தி நான் ஒன்னும் பேச முடியாது என்று சாரதா பாட்டி சொல்லவும்,மாமா நீங்களாவது ஒரு வார்த்தை உங்க மருமகிட்ட சொல்லுங்களென்றார்.

எதுவும் பேசாமல் அமைதியாக அந்தோணி பார்க்கவும் அவரின் பார்வையை தாங்க முடியாமல் மகியோ கீழே குனிந்து கொண்டார்.

அப்பொழுது வெளியே போயிருந்த பாபு வீட்டுக்கு வந்தவன் அங்கிருந்த தனது தாய் மாமனை பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான்.

எல்லாம் கேட்டுக்கொண்டே கிச்சனில் சமைத்து முடித்த ராணியோ ஹாலுக்கு வந்தவர் அத்தை சாப்பாடு ரெடி வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்க,உன் அண்ணனுக்கு விருந்து பரிமாறு எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் என்று அந்தோணி சொல்லவும்,எப்பா அந்தோணி இவங்களை எல்லாம் பேசி ஒன்னும் ஆகப் போறது கிடையாது.

நம்ம காரியம் நல்லபடியா நடக்கணும் அதுக்கு நடுவுல எந்த குழப்பமும் வர கூடாது.அது மட்டும் பாரென பாட்டி சொல்லவும், அமைதியாக போய் டைனிங் டேபிள் உக்கார எல்லாருக்கும் ராணி பரிமாறினார்..

மேலும் சிறிது நேரம் அங்கிருந்த மகி பின்னர் திருச்சிக்கு கிளம்பி விட இவதான் சித்தி அவள் அண்ணனை வர சொல்லி சமாதானம் பேச சொல்லிருப்பாள்..

இந்த திருட்டு வேலையெல்லாம் இவளை தவிர வேற யாருமே பண்ண மாட்டாங்க என்று சொல்லிக்கொண்டு அந்தோணி உள்ளே போக திருடனுக்கு தேள் கொட்டியது போல ராணியும் திரு திருவென்று முழிப்பதை பார்த்த சாரதாவிற்கு மகன் சொன்ன விஷயம் உண்மை தான் என்பது புரிந்து விட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
473
வனிச்சூர்:

இதற்கு மேல் உங்க கிட்ட தூங்கிய போல தான் என்றவள் கணவனின் பிடியிலிருந்து எழ,ஏய் செல்லம் வா வா.

"ஒன்னும் பண்ண மாட்டேன் டி"

உன் அண்ணன் காலையிலேயே டென்ஷன் படுத்திட்டான்.சோ எனக்கு இப்போ வேற ஒன்னும் பண்றதுக்கு மூடு இல்ல என்கவும்,என்ன என்று அவள் முறைக்க,சும்மா சொன்னேன் டி சும்மா சொன்னேன் டி என்றவாறு மனைவியை பொறுமையாக இழுத்து தனது நெஞ்சில் மேல் படுக்க வைத்தவன் செல்லம் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..

ஹம் கேளுங்கள்...உனக்கு ஒன்பதாவது மாதம் வளையல் போடணும்னு அப்பா அம்மா முடிவு பண்ணியிருக்காங்க.

அத்தை என்ன சொல்றாங்க என்றால் டெல்லிக்கு கூப்பிட்டு போறேனு,அந்தோணி அப்பாவும் ராணி அம்மாவும் சோழனூருக்கு கூப்பிட்டு போறோம்னு சொல்லிட்டு இருக்காங்க.

உங்க அப்பாவிற்கு இன்னும் இந்த விஷயத்தை பற்றி சொல்லலை.ஆனால் கண்டிப்பாக எங்கப்பா சொல்லுவார்கள்.

சோ நீ என்ன சொல்ற?

உனக்கு தோணுவதை சொல்லு டி என்றவாறு மனைவியின் முதுகில் கோடுகளிழுத்தான்.

இப்படி ஒரு பேச்சு வார்த்தை வரும் என்று ஷமீராவுக்கு நன்கு தெரியும் என்பதால் சில நாட்களாக அவளுக்கும் இந்த யோசனை இருக்க,நன்கு யோசித்து ஒரு முடிவை எடுத்திருந்தாள்.

முதலில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பியவள்,இதைப்பற்றி சார் என்ன முடிவு பண்ணிருக்கீங்க என்றவாறு அன்னார்ந்து பார்த்தாள்..

நான் என்ன பண்ணுவேன்னா எங்கே நீ தங்க விரும்புறியோ அங்கு போய் உன்னை பத்திரமா விட்டுட்டு வந்து நாலு மாசம் ஃப்ரீ பேட் போல அய்யா ஜாலியா இருப்பேன் டி..

ஒவ்வொரு கணவனுங்களுக்கும் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு டி.இதை போய் எந்த கூமுட்டை பயலாவது மிஸ் பண்ணுவானா?

"நெவர்"

இதில் நான் மட்டும் என்ன விதி விலக்கா செல்லமென்று செழியன் சிரிக்க,கணவனின் வார்த்தைகள் கேட்டு அப்படியா என்று சாதாரணமாக சொல்லியவள் எதுக்கு அந்த சந்தோஷத்தை நான் கெடுக்கணும் எனது சிரித்துக் கொண்டே சொன்னாலும்,இப்படி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வரும் என்பதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

ஓகே செல்லம் நீ சொல்லிட்ட இல்ல மாமா என்ஜாய் பண்ணாமல் இருப்பேனா என்றவன் லெட்சுமி(பசுமாடு) தோட்டத்தில் கத்துதே,அம்மா பால் கறக்க போயாச்சு என்றவாறு எழுந்தவன் இன்று சீக்கிரமாகவே நான் கம்பெனிக்கு போகணும் டி.

என் சின்ன மாமனார் மாலுக்கு தான் மசாலா அனுப்பனும் என்றவன் கண்ணை மூடு என்க,என்னவாமென்றாள்.

நீ கண்ணை மூடியே இரு டி.

நான் சொல்லும் போது தான் திறக்கணுமென்று மனைவிக்காக வாங்கிய புடவையை அவள் ரெஸ்ட் ரூம் போன நேரத்தில் கபோர்டில் ஒளிய வைத்திருந்ததை எடுத்தவன் சர்ப்ரைஸ் என்று செழியன் சொல்ல,என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு கண்களைத் திறந்தவளோ கணவன் கையில் இருந்த புடவையை பார்த்து கண்கள் விரிய ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனாள்.

உன்கிட்ட இந்த கலர்ல புடவை இல்ல தானே என்கவும் ஆமாம் என்று ஷமீரா தலையசைக்க,பார்த்தவுடனே எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு.அதுக்கு எல்லாரும் கிண்டல் பண்ணுனாங்க தெரியுமா டி.

ஓஓஓ..

அதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா என்று ஷமீரா கேட்க என்னடி என்றவனிடம் கல்யாணம் ஆகி இதோ ஒன்பது மாசம் ஆகப்போகுது இன்னைக்கு தான் நீங்க எனக்கு புடவை வாங்கி கொடுத்துருக்கீங்க.

கல்யாணத்துக்கு வாங்குனதோடு சரி என்கும் மனைவி முறைத்தவன்,என் மாமா வாங்கி கொடுத்தான் மண்ணாங்கட்டி வாங்கி கொடுத்தான்னு சொன்னாயே இப்ப இப்படி சொன்னா என்ன டி அர்த்தமென்று மனைவியை பார்த்தான்.

இந்த வியாக்கண பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை..ஏன் நான் வேண்டாம்னு சொன்னா நீங்க அப்படியே விட்டுடுவீங்களா?

எத்தனையோ விஷயத்தில் கூடத்தான் நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்றேன் நீங்கதான் கேட்டுட்டு தான் மறு வேலை பார்க்கிறீர்களா என்று ஷமீராவும் கோவமாக கேட்டாள்.

அதைக் கேட்டு சிரித்தவன் கேட்க வேண்டியதை மட்டும் தான் கேட்க முடியும்.கணவனா என் உரிமையை எடுத்துக் கொள்வதற்கு எல்லாம் உன்கிட்ட பர்மிஷன் கேட்க முடியாது புரியுதா என்று மனைவியின் கன்னத்தை தட்டியவன் கலா அக்கா கிட்ட கொடுத்து இதற்கு பிளவுஸ் தச்சுக்க..

கண்மணிக்கு முதல் நாள் நலுங்க வைக்கிறதுக்காக சொந்த பந்தங்கள் எல்லாரும் வருவாங்கல்ல அப்ப கட்டிக்கு என்க, ம்ம் என்றாள்.

அதை வாயை திறந்து சொல்ல வேண்டிய தானே டி என்றவாறு மனைவியின் கன்னத்தை இரண்டு பக்கமும் பிடித்த ஆட்ட,அய்யோ இளா வலிக்குது விடுங்க..

இது கையா இல்லை இரும்பான்னு தெரியல லேசாக பிடிச்சா கூட ரொம்ப வலிக்குது என்று ஷமீரா முகத்தை சுளிக்க நான் என்ன டி பண்றது தொட்டாவே சீனி பாகில் ஊற வச்ச குலோப் ஜாமுன் போல இருக்க அதுதான் என்றவாறு செழியன் சிரிக்கவும் போயா என்று கணவனின் கையை தட்டி விட்டவள் டவலை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு குளிக்க போனாள்.

செழியனும் எக்சர்சைஸ் பண்ணுவதற்காக மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.

அதன் பின்னர் நாட்களும் வேகமாக ஓடியது...

கண்மணி பாபுவின் திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே இருந்தது.கல்யாண சீராக கொடுக்க வேண்டிய பொருட்களும் வீட்டிற்கு வந்து சேர,அவைகளை வெளியே இருக்கும் ஷெட்டில் வைத்து பூட்டினர்.

விடிந்தால் திருமண பந்தக்கால் ஊன்ற வேண்டும் என்பதால் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் முதல் நாளே சொல்லிட்டு வந்தார்கள்..

திருச்சி:

"ராணி,ரெண்டு பேருக்கும் சமமாக எடு"

இருவரும் என்னுடைய மகள்கள் தான் என்றவாறு அருகிலிருக்கும் மானசாவை பார்த்துக் கொண்டே மகி சொல்லவும் சரி ணா என்கும் போது, அர்சனாவிற்கு(ஜூலி) நானே செலக்ட் பண்ணுறேனென்று ராணியிடம் சொல்லிய மானசா தனது மகளுக்கான நகைகளை பார்க்கத் தொடங்கினார்.

மானசாவை பார்த்து பல்லை கடித்த மகி நகைக்கடையில் எந்த வாக்குவாதம் வேண்டாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,ஷமிக்கு தேவையானதை நீ எடு மா என்று ராணியிடம் சொல்ல,அதே போல் மருமகளுக்கு ஏற்ற நகைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார்.

"அவ்வப்போது அந்த நகைகளை எல்லாம் பார்த்து பெருமூச்சு விடாமல் மானசாவால் இருக்க முடியவில்லை"

நேரமும் கடந்திருக்க அண்ணா நீ சொன்ன போல ஷமீக்கும் செழியனுக்கும் நகை எடுத்துட்டேன் என்க,சரிம்மா அப்படியே இன்னும் ஒரு அஞ்சு பவுன்ல வளையல் எடு என்க..

எதேஏஏஏஏ.. அதான் 30 பவுன் எடுக்கும்போது அது என்ன இவளுக்கு மட்டும் இன்னொரு அஞ்சு பவுன் எக்ஸ்ட்ரானு கடை என்று பாராமல் கோவமா மானசா கேட்க அங்கிருந்தவர்களோ அவர்களை தான் பார்த்தனர்.

மானசா என்று கோபமாகவும் அதே நேரம் பொறுமையாக கூப்பிட்ட மகி முட்டாள் முட்டாள் உன் பொண்ணுக்கு வளையல்காப்புக்கு அஞ்சி பவுன் நகை வாங்கினேனே,இவளுக்கு அஞ்சு பவுனு போட வேண்டாமா?.

இவ்வளவு மட்டமான ஜென்மமா இருப்பனு சத்தியமா எனக்கு தெரியவே இல்லை.எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்போ ஒரேடியா உன்னை தலை மூழ்கலானு இருக்கிறேன்.

அதற்கான நேரம் சீக்கிரம் வரப்போகுது என்று சொல்லவும் என்ன என்று மானசா அதிர,மகியோ மொத்த நகைக்கும் பில் போட சொன்னார்.

இத்தனை வருடங்கள் மானசாவின் மேல் பெரிய மதிப்பு வைத்திருந்த ராணிக்கு கடந்த நான்கு மணி நேரத்தில் அவர் நடந்து கொண்டு முறையை பார்க்கும்போது எஸ்தர் தான் தனது அண்ணனுக்கு ஏற்ற மனைவி என்கும் உண்மையை புரிந்தவர் அநியாயமா எஸ்தருக்கு நாமளும் சேர்ந்து துரோகம் பண்ணிட்டோம் என்று பெறுத்த குற்ற உணர்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு விஷயத்திற்கும் மானசா ஜூலிக்காக மட்டுமே நினைக்க ஷமீரா ஒருத்தியை அவள் கண்டு கொள்ளாததை பார்க்க பார்க்க ராணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மானசாவின் மேல் வெறுப்பு வந்தது.

பின்னர் மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் சரி ராணி வா உன்னை நான் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்றவர் மானசாவை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு தங்கையோடு சோழனுக்கு புறப்பட்டார்.

சிறுது நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த ராணி அண்ணா நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்க மாட்டியே என்க,நீ என்ன கேட்க வரேன்னு எனக்கு புரியுது ராணி.

மானசாவுடைய குணமே எனக்கு இப்பதான் தெரியுது என்று வருத்தமாக மகி சொல்லவும்,ஆமாம் அண்ணா நான் அதைப் பற்றி தான் பேச நினைத்தேன்.

"நம்ம எஸ்தர் எவ்வளவோ மேல் ணா"

ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம அத்த பொண்ணு இல்லையா என்று ராணி சொல்ல,ம்ம் மா.கையில் இருக்கும் போது அதோட அருமை நமக்கு தெரிய மாட்டேங்குது.

கைய விட்டு போன பிறகுதான் புலம்பி அழுவுறோம் என்கவும்,
நீ வருத்தப்படாத ணா.எஸ்தருக்கு இப்போது கோவம் தான்.கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும் ணா.

தங்கை சொன்னதை கேட்டவர் நானும் அந்த நம்பிக்கையோடு தான் காத்துட்டு இருக்கேன் மா.எப்படியும் நம்ம ஷமி வளைகாப்புக்கு உன் அண்ணி வருவாள்.எப்படியாவது கெஞ்சி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருக்கிறேன்..

நம்ப ஷமீக்கும் நாளைக்கு அப்பா வீடுனு வேணும் டா.என்னதான் ஜூலியோட போய் எஸ்தர் இருந்தாலும் அதில் கௌரவம் கிடையாது.இதுவும் உன் அண்ணிக்கு கண்டிப்பாக தெரியும்.

இத்தனை நாள்ல இதை பற்றி யோசிக்காமல் இருக்கமாட்டா,ஏதோ ஒரு திட்டத்தோட தான் இருக்கிறாள் அது எனக்கு நல்லா தெரியுது என்றார்.

தனது அண்ணியை இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருந்த அண்ணன் எதற்கு இத்தனை வருஷமும் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்று மனதிற்குள் நினைத்த ராணியும் அதை கேட்க நினைத்து,சரி வேண்டாம் என்று மனதிற்குள் வைத்துக் கொண்டார்.

உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி இருக்கும்...

இந்த வாழ்க்கை பற்றி தெரிந்தால் எஸ்தர் வருத்தப்படுவாள்.நிச்சயமாக என் கூட வாழ மாட்டா,அவள் வருத்தப்படுவதை என்னால் தாங்கிக்க முடியாதுடா அதுக்காக தான் நான் எப்பவுமே அவ கிட்ட கோவமா இருக்குற போலயே இருந்தேன்.

அதும் இல்லாம அம்மாவும் புருஷன் பக்கத்துல இல்லனாக்க பெண்கள் தவறான பாதைக்கு போயிடுவாங்கணு சும்மா என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தாங்க. எங்கே எஸ்தரும் அப்படி போயிடுவாள்ன்னு எனக்குள்ளே ஒரு பயம் என்க...

அண்ணாஆஆஆ...நம்ப எஸ்தரை போய் இப்படி நினைச்சியா என்று ராணி அதிர,அது தப்புதான் மா.காலம் கடந்த பிறகு தான் எனக்கு இந்த விஷயம் புரிந்தது என்று வருத்தமாக சொன்னார்..

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top