Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 473
- Thread Author
- #1
வனிச்சூர்:
கல்யாண புடவை எடுக்க போனவர்கள் அதிகாலை நான்கு மணிக்கு ஊருக்குள் வந்தனர்.
வரும் போதே கண்மணிக்கு போன் பண்ணியதால் அவளும் கதவை திறந்து வைத்திருந்ததோடு அனைவருக்கும் சூடாக டீ யும் தயாராக வைத்திருந்தாள்.
உன் உடன்பிறப்பு என்ன டி பண்றா என்று செழியன் கேட்க,ம் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறாள் என்றபடி கண்மணி பல்லை கடிக்க,பாவம் டி என் பங்காளி உன்னை கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறானோ போ, அவன் தலையெழுத்து என்றவாறு படியில் ஏறி மேலே போனவன் எந்த ரூமில் இருக்கிறாள்னு தெரியலையேனு புலம்பியவன்,நாம் வந்தால் தங்குமறையில் சென்று பார்க்கலாமென்று இடது பக்கமிருக்கும் மூன்றாவது அறைக் கதவை திறக்க,அங்கே கவிதாவும் மலரும் தரையிலும் ஷமீரா கட்டிலில் படித்திருப்பதும் தெரிந்தது.
சரி தூங்குவா எழுப்ப வேண்டாம் என்று கதவை சாத்தும் போது தூக்கத்தில் இருந்தவள் திரும்பி என்னங்க என்கவும் அந்த சத்தத்தில் கதவை திறந்தவன் டிஸ்டப் பண்ணிட்டேனா டி என்றான்..
அது இருக்கட்டும் நீங்கள் எப்ப வந்தீங்க என்று வேகமாக எழ,அறிவு கெட்டவளே எதுக்குடி இப்படி எந்திரிச்சு வர, பொறுமையா டி.
கீழ மலரும் கவியும் படுத்துருக்காங்க பார்த்து வா என்கவும் இந்த அறிவு வெங்காயம் படாரென்று கதவை திறக்கும் போது இருக்கணும் மாமாயென்று கவிதா சொல்ல..
அடியேய் நீ தூங்கலையா டி?
என் வாயில நல்லா வந்துரும்,உள்ளே தூங்குவாங்கனு கூறு வேண்டாம்?
இந்த லட்சணத்தில் இந்த கொய்யா போலீசாம்,வீட்டுக்கு வந்தால் இப்படித்தான் மைக்கில பேசுற போல எல்லாரும் கத்துவீங்களா?மனுஷன் தூங்க வேண்டாமா என்றவாறு திரும்பிப் படுத்தாள்.
ஏய் வேகமாக வாடி அவளுக்கு இருக்கிற காண்டுக்கு எந்திரிச்சு அடிச்சாலும் அடிச்சிடுவாள் போலனு செழியன் சொல்லவும்,இன்னும் ஒரு நிமிஷம் இங்கு நீ இருந்தால் கண்டிப்பாக அது தான் நடக்கும் மாமா.
அடியேய் ஆட்டக்காரி எனக்கும் நேரம் வரும் டி அப்போ உன்ன வச்சிக்கிறேன் இரு டி என்கவும்,ம்கூம்..முதலில் கட்டிய எங்க அக்கா கூட ஒழுங்கா குடும்பம் பண்ண பாருயா அதுக்கப்புறம் என்ன வச்சுக்கலாம்...
யாத்தேஏஏஏ...எவ்வளவு வாய் பாரு இவளுக்கு என்றவாறு செழியன் முறைக்க,கதவை சாத்திவிட்டு வெளியே இருங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சைகையில் ஷமீரா சொல்ல ஓகே என்று வெளியில் வந்து நின்றான்.
அவளும் பாத்ரூம் போயிட்டு முகத்தை கழுவிக் கொண்டு கதவை மெதுவாக திறந்து வெளியே வந்தவள் அதே போல் பொறுமையாக சாத்த,ஏன் டி தூங்கலையா என்றவாறு மனைவியின் தோளோடு அணைத்தான்.
சரி நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் என்று சொல்லிக் கொண்டு செல்லதுரையும் வானதியும் எந்திரிக்க,ஷமி இந்தா என்று மிதமாக ஆற்றிய பாலை எடுத்து வந்து கண்மணி நீட்ட,சிரித்தவாறு அவளும் குடித்துவிட்டு தங்களது வீட்டுக்கு சென்றனர்.
மணி 5 கூட ஆகலை நீ போய் படு வேலையை பொறுமையாக செஞ்சிக்கலாம் என்றவாறு வானதியும் கையை மடக்கி தலையில் வைத்துக்கொண்டு தரையிலே படுத்து விட்டார்.
பின்னர் இருவரும் மேலே இருக்கும் ரூமிற்குள் போக,செழியனோ கைலியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போகவும்,ஷமீராவோ பெட்டில் ஏறி படுத்து விட்டாள்.
அந்த அதிகாலையிலும் ஒரு குளியலை போட்டுவிட்டு வெளியே வந்தவனுக்கு மனைவி படுத்து விட்டது தெரியவும், சிரித்துக் கொண்டே தலையை துவட்டியவன் டி-ஷர்ட் எடுத்து போட்டுக் கொண்டு அவளின் பக்கத்தில் படுத்தவனோ மனைவியை அணைக்கும் போது வயிற்றிலிருந்த குழந்தையின் அசைவு தெரிய...
என்ன டா மவனே உங்கம்மாவை தொடக்கூடாதுனு உதைக்கிறியோ.
முதலில் அவள் எனக்கு பொண்டாட்டி பிறகு தான் டா உனக்கு அம்மாயென வயிற்றிலிருக்கும் குழந்தையோடு வாக்குவாதம் பண்ண, வெளியில் வருவதற்கு முன்னாடி இவ்வளவு அக்கப்போரு..
இன்னும் அவங்க வந்துட்டாக்க உங்க ரெண்டு பேரு கிட்ட மாட்டிகிட்டு நான் என்ன பாடுபட போறனோ என்று ஷமீரா சொல்ல,ஓய் நீ தூங்கலையாடி?
முழிச்சிட்டு தான் இருக்கிறியா என்று மனைவியின் முகத்தின் மேல் தனது முகத்தை வைக்க,தாடி குத்துது என்றாள்.
ம்ம் குத்தட்டும் நல்லா குத்தட்டும் என்று அப்படி இப்படி முகத்தை உரசு அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல இருக்கவும் அய்யோஓஓ...
கொஞ்ச நேரம் தூங்க விடுங்கள்.நீங்கள் பக்கத்தில் இல்லாமல் அங்கு எனக்கு தூக்கமே வரலையென்று ஒரு ப்ளோவில் உண்மையை ஷமீரா உளர,ஹா ஹா ஹா..
என் பொண்டாட்டிய பற்றி எனக்கு தெரியாமல் இருக்குமா?
நான் தான் சொன்னனேடி என்றவாறு மனைவியின் கழுத்தில் புதைந்தவன் இதற்கு பிறகு நீ தூங்கி என்ன பண்ண போறடி என்றபடி அவளின் தலையிலிருந்து ஒற்றை விரலால் கோடுகள் இழுத்துக் கொண்டே வர,ஷமீராவிற்கு கணவனின் தீண்டல்கள் சிலிர்க்க வைக்க ஹலோ போலீஸ் சும்மா இரு டா என்க...
"எதேஏஏஏஏ டா வாஆஆஆஆ"
அடிங் கொய்யால,உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் புருஷனை டா சொல்லுவ என்றவன் மனைவியின் கழுத்து வளைவில் கடித்து வைக்க...
அய்யோ இளாஆஆஆ...
"சும்மா இருங்க"
நான் பேர் சொல்லாமல் வேற யார் சொல்லணும்?
கல்யாண பண்ணிட்டு வந்த அன்று என்னமோ பெரிய இவராட்டம் சொன்னிங்களே உனக்கு எப்படி வேணாலும் கூப்பிட்டுக்க டி .அது இந்த ரூம்ல தான் இருக்கணும்னு..
இப்ப மட்டும் என்ன நொய்யாவுக்கு கொடையுதென ஷமீ கேட்க,ஓ அப்ப மனசுல இதெல்லாம் வச்சுட்டு தான் இருக்கிறாயென்று செழியன் சிரிக்கவும் அதிலென்ன சந்தேகமென்றாள்.
ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு..உன் புருஷனுக்கு கொஞ்சம் மரியாதை இருக்குடி வெளியில டா கூப்பிடாதே எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் என்கவும் யோசித்து முடிவு பண்றேன் என்கும் போது கால் வரும் சத்தம் கேட்டது.
இந்த அதிகாலையில் யாரு என்றவாறு போனை எடுத்து பார்த்தவனுக்கு வெற்றியின் பெயர் தெரிய,வேகமாக அட்டென் பண்ணியவன் சொல்லு டா?
என்ன இந்த நேரத்திலென்க எனக்கு தூக்கம் வரலை அதான் உனக்கு மட்டும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கென்று வெற்றி சிரிக்க,அட நாதாரி பயலே..
நீயெல்லாம் மனுசனாடா?.
என்னவோ ஏதோவென நானும் பதறியடித்து அட்டென் பண்ணினேனே கையில கிடைச்ச குறுத்தெலும்பிலே மிதிப்பேனென்று திட்டி விட்டு அழைப்பை துண்டிக்க ஷமீராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது..
சோழனூர்:
சோபாவில் உட்கார்ந்திருந்த மகியை பார்க்க பார்க்க அந்தோணிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.இருந்தும் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
என்னங்கத்தை நான் சொன்னதுக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கீங்களே?.
மன்னிக்கும் அளவிற்கு என் செயல் இல்லை தான்.இரண்டு அடியாவது நீங்கள் அடித்திடுங்கள் இப்படி யாரோ போல ஒதுக்கி வைத்ததை தான் என்னால தாங்கிக்க முடியவில்லை.
எனக்கு உங்களை விட்டால் வேற யாரு இருக்கா சொல்லுங்க?.
இப்படி எல்லாருமே ஒரேடியாக என்னை தலை முழுகினால் என்னதான் அர்த்தம் என்று வருத்தமாக மகி பேச தனது மருமகனை நிமிர்ந்து பார்த்தவர் மன்னிக்கவும் மறக்கவும் அளவுக்கு நீங்க எல்லாம் எதையுமே பண்ணலை.
என் பொண்ணே வேண்டாம்னு தூக்கி எறிந்த பிறகு இதை பத்தி பேச ஒன்னும் ஆகறதுக்கு இல்லை.உனக்கு பிறந்த பாவத்துக்கு ஒரு நல்ல இடத்துல என் பேத்தி வாக்கப்பட்டுருக்கா.
நீ கொடுக்கிற சீர் எல்லாம் அவள் வாங்கிப்பான்னு நீ நினைக்கிறாயா?என்று குற்ற பார்வையோடு மகியை பார்க்க,நிச்சயமா வாங்கிக்கமாட்டாள்.
அது எனக்கு நல்லா தெரியும்.
கல்யாணத்துக்கு எதுவுமே செய்ய முடியல இப்ப மாசமா இருக்கும்போது வளைகாப்பு பண்ணுவாங்களே அப்ப போயி என்னோட கடமையை இரண்டு பொண்ணுக்கு செய்யணும்னு நான் ஆசைப்படுறேன்.
எந்த நேரத்துல என்ன நடக்கும்னு தெரியாது திடீர்னு நாளைக்கு எனக்கு ஏதாச்சும் ஒன்னு ஆயிடுச்சென்றால் இவங்களுக்கு எதுவுமே செய்யாம போனா ஆண்டவர் என்னை மன்னிக்கவே மாட்டார் என்கவும்,உன் வாயால் ஆண்டவரை பத்தி நீ பேசாதப்பா...
தெரியாமல் செய்த தவறுகளுக்கு தான் கடவுள் மன்னிப்பு கொடுப்பாரு தெரிஞ்சே எல்லாரும் கூத்தடிச்சிருக்கிறீங்க இதுக்கு என்ன சொல்ல...
உன் கடமையை செய்யணும்னு நினைக்கிற தானே,உன் இஷ்டம் போல செய் ஏத்துக்கிட்டா பாரு ஏத்துக்கலைன்னா இதை பத்தி நான் ஒன்னும் பேச முடியாது என்று சாரதா பாட்டி சொல்லவும்,மாமா நீங்களாவது ஒரு வார்த்தை உங்க மருமகிட்ட சொல்லுங்களென்றார்.
எதுவும் பேசாமல் அமைதியாக அந்தோணி பார்க்கவும் அவரின் பார்வையை தாங்க முடியாமல் மகியோ கீழே குனிந்து கொண்டார்.
அப்பொழுது வெளியே போயிருந்த பாபு வீட்டுக்கு வந்தவன் அங்கிருந்த தனது தாய் மாமனை பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான்.
எல்லாம் கேட்டுக்கொண்டே கிச்சனில் சமைத்து முடித்த ராணியோ ஹாலுக்கு வந்தவர் அத்தை சாப்பாடு ரெடி வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்க,உன் அண்ணனுக்கு விருந்து பரிமாறு எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் என்று அந்தோணி சொல்லவும்,எப்பா அந்தோணி இவங்களை எல்லாம் பேசி ஒன்னும் ஆகப் போறது கிடையாது.
நம்ம காரியம் நல்லபடியா நடக்கணும் அதுக்கு நடுவுல எந்த குழப்பமும் வர கூடாது.அது மட்டும் பாரென பாட்டி சொல்லவும், அமைதியாக போய் டைனிங் டேபிள் உக்கார எல்லாருக்கும் ராணி பரிமாறினார்..
மேலும் சிறிது நேரம் அங்கிருந்த மகி பின்னர் திருச்சிக்கு கிளம்பி விட இவதான் சித்தி அவள் அண்ணனை வர சொல்லி சமாதானம் பேச சொல்லிருப்பாள்..
இந்த திருட்டு வேலையெல்லாம் இவளை தவிர வேற யாருமே பண்ண மாட்டாங்க என்று சொல்லிக்கொண்டு அந்தோணி உள்ளே போக திருடனுக்கு தேள் கொட்டியது போல ராணியும் திரு திருவென்று முழிப்பதை பார்த்த சாரதாவிற்கு மகன் சொன்ன விஷயம் உண்மை தான் என்பது புரிந்து விட்டது.