• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
471
ஸ்கேன் முடிந்து வந்தவளிடம் என்னாச்சு டி என்பவனுக்கு குழந்தை நல்லாருக்காம் என்றவள் டாக்டர் சொன்னதை சொல்ல சரி டி என்றவன் மனைவியோடு கீழே வந்து காத்திருந்தான்.

அரை மணி நேரம் கடந்திருக்க டாக்டர் வரவும் இப்போது ஒவ்வொரு பேஷண்டாக பார்த்துக் கொண்டே வர, இவர்கள் நம்பர் வந்ததும் செழியனும் ஷமீராவும் உள்ளே போகவும் வாடா திருட்டு போலீஸ்..உனக்கு ஒன்னும் வேலை இல்லையா??இங்கு சுத்திட்டு இருக்கயென்று காஞ்சனா சிரிக்க,சித்தி என்று பல்லை கடித்தான்.

ஆமாடா நீ திருட்டு போலீஸ் தானே டா பின்ன உண்மைய தானே சொல்லுகிறேன் என்றவர் மீண்டும் சிரிக்க,இருங்க என் புள்ள வரட்டும் உங்க மேல கேஸ் போடறேனென்று செழியனும் சிரித்துக் கொண்டே சொல்ல,போடா போடா போக்கிரி.

உன்னை மேய்ச்ச எனக்கு பேரனை சமாளிக்க தெரியாதா என்றவர்,உன் வாரிசு செமையா இருக்காங்க டா.எந்த பிரச்சனையும் இல்லை.என்ன உன் பொண்டாட்டிக்கு வெயிட் போதாது. இன்னும் கொஞ்சம் சாப்பிடணுமென்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவன் இவ எங்க சித்தி சாப்பிடுறாள்?இரண்டு தோசை இவ்ளோ அளவு சாப்பாடு மிச்சபடி காய்கறி கீரையெல்லாம் சாப்பிடுறாள்.

ஆனால் உன் மருமகளுக்கு மூணு வேலையும் மூணு குண்டான் பால் கொடுத்தா போதும் அதுலையே உயிர் வாழ்ந்திடுவான்னு சொல்லியவாறு மனைவியை பார்த்து பல்லை கடிக்க,ஷமீராவோ எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து கொண்டாள்.

அடேய் போலீஸ் அப்படிலாம் சாப்பிட முடியாதுடா.நம்ம வாய் இருக்குனு சொல்றோம் அந்த சூழ்நிலையில் இருந்து பார்த்தால் தெரியும் டா.

அடுத்த பிறவியில நீ பொம்பளையா பொறந்து இதுபோல குழந்தையை சுமந்து பாரு அப்போ உனக்கு சாப்பிட முடியுதா? முடியாதான்னு பாக்கலாமென்றார்..

ஓஓஓ..அடுத்த பிறவியில நான் பிறப்பேன் அதேபோல நீங்க பிறக்கணுமே என்று செழியன் சிரிக்க படவா ராஸ்கல் என்றவரோ அங்கிருந்த ஸ்டெதஸ்கோப்பால் எட்டி செழியனை அடித்தார்..

ஹலோ நீங்க டாக்டர் தான் ரவுடி கிடையாது என்றவன் அப்புறம் சித்தி எனக்கு ஒரு சந்தேகம் என்கவும்,சொல்லு கண்ணு என்னவென்று சீரியசாக காஞ்சனா கேட்க,இவளுக்கு அஞ்சு மாசம் தான் ஆகுது.

ஆனா வயிறு இப்பையே இவ்வளவு பெருசா இருக்கே?ஒருவேளை எனக்கு ரெட்டை குழந்தையா?.

மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொண்டு ஏதாச்சும் மறைக்கிறிங்களா என்று இருவரையும் பார்த்துக் கொண்டே கேட்க,அடப்பாவி...!!

இங்க நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா டா என்று இப்பொழுது காஞ்சனா அவனை பார்த்து முறைக்க, நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப இருக்குது.

நானும் பலமுறை சித்தப்பா கிட்ட கேட்டேன் உண்மையிலேயே இவங்க டாக்டர் தானா?

உங்க காலேஜ்ல படிச்சது உண்மை தானானு,அவரும் ஆதாரம் எல்லாம் காட்டுனாரு.அத வச்சு நம்புறேன் என்கவும் அடேய் படவா ஏன்டா இப்படி என்றவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

ஒவ்வொருத்தவங்க உடல்வாகு அப்படி கண்ணா.சிலர் கர்ப்பமா இருக்கும் நேரத்தில் ரொம்ப ஒல்லியாகுவாங்க.
சிலர் குண்டாவார்கள் இதெல்லாம் கணக்கு பண்ணக்கூடாது புரியுதா..

அம்மாடி முதல்ல வீட்டுக்கு போயிட்டு வானதி கிட்ட சொல்லி இவன் காலடி மண்ணை எடுத்து சுத்தி போட சொல்லு பொறாமை புடிச்சவன். .

இப்படி கண்ணு வைக்கிறான் பாரு உன் கண்ணுல கொல்லி வைக்கணும் டா என்கவும்,அடப்பாவி சித்தி..மருமகளுக்காக இப்படி மகனுக்கு சாபம் கொடுக்கிறியே என்ன கொடுமை இதெல்லாமென்றான்.

அதெல்லாம் அப்படித்தாண்டா என்றவர் பின்னர் ஷமீராவுக்கு விட்டமின் மாத்திரைகளை எழுதி கொடுத்தவர் அஞ்சாவது மாசத்துக்கு டிடி மட்டும் போட்டுக்க..

இதோட செவன் மன்தில் தான் ஸ்கேன். நடுவுல ஒன்னும் வர வேண்டாம்.இப்போ வாமிட் எதாச்சி இருக்கா என்க,இல்லைங்கத்தை ஓரளவுக்கு பரவால்ல என்றாள்.

சரி மா வாந்தி எடுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு புரியுதா.

இப்பொழுது நீ உனக்காக மட்டும் சாப்பிடவில்லை உன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சாப்பிடுற அதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள் என்று அழுத்தமாக சொல்லவும் சரிங்கத்தை என்று தலையசைத்தாள்.

சரி சித்தி நாங்கள் கிளம்புறோம் என்றவன் மனைவியோடு வெளியே வந்தவன் ஸ்கேனுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டு அவர் எழுதியிருந்த மாத்திரை வாங்கிக் கொண்டு ஷமீராவுக்கு மெடிக்கலில் டிடி இன்ஜெக்ஷன் போட்டுக்கொண்டு வெளியே வந்தவன் ஏதாவது குடிக்கிறியாடி என்க,காபி குடிக்கணும் என்றவளை முறைத்தவன் டெலிவரி ஆகுற வரைக்கும் காபி கீபினு வாயைத் திறந்த அப்புறம் தினமும் கச்சேரி என்கவும்,ஐயோ எனக்கு வேண்டாம் சாமி என்று அவள் பதட்டமாக சொல்லவும் அந்த பயம் இருக்கட்டும் என்று சிரித்தான்.

சரி வா இங்கு ஒரு கடையில் பாதாம் பால் நல்லாருக்கும்,இந்த நேரத்தில் சூடாக கிடைக்கும் குடிக்கலாம் என்றவாறு மனைவியோடு டவுனில் இருக்கும் கடைக்கு வந்தவன் இரண்டு கிளாஸ் வாங்கி அவளுக்கு ஒன்று கொடுத்துவிட்டு அவனும் குடித்தான்.

பின்னர் வீட்டுக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு பொறுமையாக ஊருக்குள் வர இரவு எட்டு மணியானது.

செழியன் வீடு:

ஏன் வானதி நாலு தலைமுறையாக நம்ப குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு ரெட்டை புள்ள பொறக்குது.

நமக்கு அடுத்து நெடுஞ்செழியனுக்கு பொறக்கும்னு இருந்தோம் ஆனால் கஸ்தூரி ஒத்த மகனை தான் பெத்துச்சு.அடுத்தது பார்த்தால் நம்ப செழியன் பொண்டாட்டி..

ஒருவேளை நம்ப வீட்டில் பொறக்குமோ?

கொஞ்ச நாளாக என் மனதில் இப்படி தான் தோணுது.இதை பற்றி நீ என்ன நினைக்கிற?

இவ்வளவு நேரம் தனது கணவர் சொன்னதை கேட்டவர் ஆமாங்க எனக்கும் செழியன் பொண்டாட்டி மாசமானதிலிருந்து இந்த எண்ணம் தான்.

அந்த பொண்ணுகாரி வயிறும் கொஞ்சம் பெருசாக தான் இருக்கு.அதிலும் பொட்டபுள்ள வயிற்றில் இருந்தாலும் புள்ளதாச்சி வயிறு பெருசா இருக்கும்ங்க.

அந்த மலையாத்தா புண்ணியத்தில் நல்லபடியாக நம்ப வாரிசை பெற்றெடுக்கட்டும்.அது எந்த புள்ளையா இருந்தா என்ன சந்தோஷம் தானுங்க.

செழியனுக்கு பிறகு இந்த வீட்டுக்கு வாரிசு வருவதற்கு 29 வருஷம் காத்திருக்க வேண்டியிருக்கே என்று வானதி சிரிக்க,இப்பையும் ஒன்னும் கெட்டு போகல நான் ரெடி தான் என்றவாறு தனது மீசையை தடவிக் கொண்டு செல்லதுரை சிரிக்க,எதேஏஏ..!!

மீசை நரைத்தாலும் கிழவனுக்கு ஆசை போகலையோ என்றவாறு வானதி முறைக்க,யாரை பார்த்து கிழவன்னு சொல்ற டி..

இப்போ என்ன பண்ணனும்னு சொல் டி உன் மாமன் எப்படி பண்ணுறேனென்று பாரு டி என்கவும்,ம்கும் இந்த வாய் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று தனது தாவங்கட்டையில் இடித்துக் கொண்டு வானதி சொல்ல, இப்ப நீ சொல்லுடி இந்த நிமிசமே நான் செய்து காட்டுகிறேன் என்று செல்லத்துரையும் மல்லுக்கு நின்றார்.

அப்படியா சங்கதி!!!

எங்கே என்னை தூக்கி மூணு சுத்து சுத்துங்க என்கவும்,ப்பூ இவ்வளவுதானே என்று எழுந்தவர் வேஷ்டியை மடிச்சு கட்டி விட்டு எட்டி மனைவியின் கையை பிடித்து இழுக்க அய்யோ என்றவாறு கணவரின் நெஞ்சில் மேல் வானதி மோதி நிற்க...

குனிந்து மனைவியை தூக்கியர் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாடிக்கொண்டே அந்த முற்றத்தை சுத்தி வர அய்யோ மாமாஆஆ...

என்ன வேலை பண்ணுறீங்க?

கீழே இறக்கி விடுங்களேன்று வானதி சத்தம் போட,ஆஹா ஆஹா இங்கு பயங்கரமான படம் ஓடுதே என்கும் கவிதாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்த செல்லதுரை ஹாஹா என்று சிரித்தவர்,சின்ன குட்டி இப்படியே ஒரு போட்டோ எடு என்க,அய்யோ மாமா சின்னவள் இருக்கும் போது இது என்ன வேலையென்று வானதியும் வெட்கப்பட்டார்.

கவிதாவும் தனது அத்தை மாமாவை விதவிதமாக போட்டோ எடுத்தவள்,ஆக அந்த விருமாண்டி இல்லாத நேரத்தில் சிவாஜியும் பத்மினியும் இப்படி தான் படம் ஓட்டுறீங்களோ என்று சிரிக்க,அடியேய் வாய மூடு டி.

இந்த கூறு கெட்ட மனுஷனுக்கு இப்போது தான் இளமை ஊஞ்சலாடுகிறதுனு இல்லாத வேலை காட்டுறார்.

எங்கேயாவது எசக்கு பிசக்கா சதை பிரளட்டும் பிறகு பாரு என்றவர்,யோவ் தலை சுத்துர போல இருக்கு கீழே இறக்கி விடுயா என்க,ம்ம் என்றவாறு சிரித்துக் கொண்டே மனைவியை கீழே இறக்கி விட்டார்.

இந்தாத்தை என்று கையில் இருந்த தூக்குவாளியை கவிதா நீட்ட என்னடி குட்டி இது என்றவாறு வாங்கி திறந்து பார்க்க அதில் நல்லெண்ணெய் மிதக்க நாட்டுக்கோழி குழம்பு சுட சுட இருந்தது.

அம்மா குடுத்துட்டு வர சொல்லிச்சுன்னு எடுத்துட்டு வந்தா இங்க பயங்கரமான காதல் படம் ஓடுது என்று இருவரையும் பார்த்து சிரிக்க,என்னடி ரொம்ப கிண்டல் பண்ற என்று எட்டி அண்ணன் மகளின் காதை செல்லமாக திருவியவருக்கும் சிரிப்பு வந்தது.

எங்கத்தை அக்காவையே காணோமென்று அந்த ஹாலை சுற்றி பார்த்தவாறு கவிதா கேட்க,உன் அக்காவும் மாமனும் ஸ்கேன் பண்ணனும்னு போயிருக்காங்க,வர எப்படியும் ஏழு மணி ஆகும்னு நினைக்கிறேன்.

இருடியம்மா டீ எடுத்துட்டு வரேன் உடனே பெரிய வீட்டுல டீ கொடுக்க கூட ஒரு ஆள் இல்லையென ஊர் சிரிக்க வைப்ப என்றவாறு வானதி கிச்சனுக்கு போக அந்த பயம் இருந்தால் சரி தானென்று கவிதா சிரித்தாள்.

அப்போது சின்ன குட்டி நானும் அத்தையும் இருக்கிற போட்டோவை எனக்கு இந்த வாட்ஸ்அப்ல வச்சு கொடுடா என்று செல்லதுரை கேட்க, சரிங்க மாமா என்றவள் அதேபோல் வைத்துவிட்டு அதை எப்படி பண்ணனும் என்று செல்லதுரைக்கு சொல்லிக் கொடுக்க...

இதெல்லாம் நமக்கு வசதிப்படாது. இவ்வளவு விலை உள்ள போன் வேண்டானு சொல்லியும் கேட்காம உன் மாமன் வாங்கி கொடுத்துட்டான் டா. இது நமக்கு எம்ஜிஆர்,சிவாஜி படம் பாக்க தான் தோதாக இருக்கென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
471
சோழனுர்:

எப்பா அந்தோணி பாபு-கண்மணி கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு.பத்திரிக்கை எல்லாம் அடிக்க கொடுக்கவில்லையா என்று சாரதா பாட்டி தனது அக்கா மகனிடம் கேட்க,கொடுக்கணும் சித்தி.

அவங்க பக்கத்துல இருந்து யார் யார் பேர் போடணும்னு லிஸ்ட் கேட்டுருக்கேன் சம்பந்தி இன்னைக்கு அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க என்றார்.

ஒரு வாரம் கடந்திருக்க பத்திரிகையும் தயாராகி விட்டதாக கால் வரவும் மீதி பணத்தை கொடுத்து வாங்கி வந்தவர் சர்ச்சில் வைத்து ஜெபம் பண்ணியவர்கள் பொண்ணு வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பத்திரிகை தனியாக எடுத்து வைத்தார்..

பின்னர் அதிகாலையில் மனைவியோடு கிளம்பியவர் காலை 11 மணிக்கெல்லாம் வனிச்சூருக்கு வந்து சேர்ந்தனர்.

பத்திரிகை பேகை சாமி ரூமில் வைத்து விட்டு வந்தவர் வாங்க சாப்பிடலாம் என்கவும்,எங்கே மருமகளை காணுமென்று கேட்க,எக்ஸாம் டூட்டிக்கு போயிருப்பதாக சொல்ல சரி என்று பேசிக்கொண்டே சாப்பிட்டவர்கள் ஷமீராவை பார்க்க சென்றனர்.

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு யாரு என்றவாறு வெளியே வந்த வானதிக்கு அந்தோணியும் ராணியும் காரிலிருந்து இறங்கி வருவது தெரிய, வாங்க வாங்க என்றவாறு உள்ளே அழைத்து போய் உட்கார சொல்லி விட்டு அம்மாடி யாரு வந்துருக்கானு பாருத்தா என்று மருமகளுக்கு குரல் கொடுத்தார்.

பக்கத்து ரூமில் பூ தொடுத்துக் கொண்டிருந்தவளோ யாரா இருக்கும் என்றவாறு ஹாலுக்கு வந்தவள் தனது அத்தை மாமாவை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் அதிர்ந்து போனாள்.

பிறகு வாங்கிட்டு வந்த பொருட்களை வானதியிடம் கொடுத்தவர்கள் பத்திரிக்கை எடுத்துட்டு வந்த விஷயத்தை சொல்லிவிட்டு எங்கே செல்லதுரையும் செழியனையும் காணுமென்றார்.

வயலில் கம்பு அறுத்துக் கொண்டிருப்பதால் அவர் அங்கு இருப்பதாகவும் மதிய சாப்பாடை எடுத்துக் கொண்டு இப்போது தான் செழியன் போனான் என்று வானதி சொல்ல சரி என்று பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது செழியனும் வந்து விட்டான்.

அவனிடம் நலம் விசாரித்தவர்கள் அவன் வேலையை பற்றி விசாரித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டு சோழனூருக்கு புறப்பட்டார்கள்.

திருச்சி:

பேரக் குழந்தையோடு வந்திருக்கும் மகளை மானசாவும் மகியும் தாங்கு தாங்கென்று தாங்கினார்கள்.வந்த ஓரிரு நாளிலே அவர்களின் முழுமையான அன்பை ஜூலியாலும் உணர முடிந்தது.

இருந்தாலும் மனதில் ஒரு பக்கம் எஸ்தருக்கு இவர்கள் செய்த விஷயத்தை மட்டும் அவளால் மன்னிக்க முடியவில்லை.

தினமும் ருத்ரனும் மனைவியிடம் வீடியோ காலில் பேச மறக்கவில்லை.

ஒவ்வொரு முறை அவனிடமிருந்து கால் வரும் போதெல்லாம் எப்போ வருவீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கவும் வரேன் டி வரேன் டி என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

முக்கியமான மூன்று ஆப்ரேஷனுக்காக அந்த மாதத்தில் டேட் கொடுத்திருப்பதால் ருத்திரனாலும் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வர முடியாமல் போனது.

அன்று குழந்தைக்கு தலை குளிக்க வைத்து சுத்தம் பண்ணி டிரஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்கவும் நான் போய் பார்க்கிறேன் என்று மகி போய் கதவை திறக்க அங்கே அருணும் அவன் மனைவி ஷீலாவும் நின்றார்கள்.

எப்படி இருக்க மா உடம்பு நல்லாருக்கா என்பவரிடம் நல்லாருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க மாமா என்றவாறு உள்ளே வந்தவள், அங்கிருந்த நாத்தனார் மாமியாரையும் பார்த்து சிரித்தவள் அவர்களிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு அண்ணி என்று போய் ஜூலியின் கையைப் பிடித்தவள் நேற்று தான் இவரு உங்களைப் பற்றி சொன்னாரு..

25 வருஷத்துக்கு முன்பு தொலைந்து போனவர்கள் இப்பதான் கிடைத்திருக்கிறீர்கள் என்று சொன்னவுடனே எனக்கு அங்க இருக்கவே முடியலை.உடனே பார்க்கணும்னு வந்துட்டேங்கண்ணி என்று ஷீலா சிரிக்க சரிமா என்றாள்.

இரண்டு நாள் நாத்தனாரோடு தங்கியிருந்த ஷீலா கணவனோடு சென்னைக்கு புறப்பட்டாள்.

ஒரு மாதம் கடந்திருக்க அருணிடம் வீட்டு அட்ரஸை வாங்கிக் கொண்டு சர்ப்ரைஸாக கிளம்பி திருச்சிக்கு வந்த ருத்ரன்,மனைவியையும் பிள்ளையையும் பார்க்க ஆவலோடு காலிங் பெல்லை அழுத்தினான்.

பேரனுக்கு துணையாக படுத்திருந்த மானசா,சத்தம் கேட்டு எங்கே குழந்தை அழுவுமோ என்று வேகமாக எழுந்து போய் கதவை திறந்தவர் அங்கிருந்த மருமகனை பார்த்து சந்தோஷப்பட்டு வாங்க மாப்பிள்ளை..

நல்லாருக்கிங்களா?.

நான் நல்லாருக்கேன் ஆன்ட்டி.

நீங்கள் அங்கிள் நலமா என்றவாறு உள்ளே வந்தான்..

நல்லாருக்கோம் பா.குட்டியான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் தூங்கினானு ஜூலி குளிக்க போனாளென்றவள் வா பா சாப்பிடலாமென்றவர் கிச்சனிற்கு போக,பேகை சோபாவில் வைத்து விட்டு ஊஞ்சலில் தூங்கும் மகனை பொறுமையாக முத்தமிட்டு கையை கழுவிட்டு வந்து ருத்ரன் உட்கார மானசாவும் பரிமாறினார்.

நீங்களாம் சாப்டீங்களா என்க ஆச்சு பா.மாமா தான் வரலை.பேரன் வந்ததிலிருந்து மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடுவாரென்று சிரித்தார்.

அவனும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்தவன் பேகோடு மனைவி இருக்கும் ரூமிற்குள் போக,ரெஸ்ட் ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டது.

குளித்து முடித்தவள் யார் ரூமிற்குள் வர போறாங்க என்ற எண்ணத்தோடு டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்தவள் அங்கே கட்டிலின் மேலே படுத்திருப்பவனை பார்த்து யோவ் டாக்டரூஊஊஊ என்று அதிர,இட்ஸ் மீ டி என்றவாறு எழுந்தவன் மனைவியை இறுக்கமாக அணைத்துக்கொண்டு மெத்தையில் சரிந்தான்.

ஒரு மாத பிரிவுகளுக்கான தேடலை மனைவியிடம் பெற்றுக் கொண்டவன் மீதி நைட் என்றவாறு சிரிக்க,ஜூலியோ கணவனை முறைத்துக்கொண்டு மீண்டும் குளித்து வந்தவள் பின்னர் ரெடியாகி வெளியே வர மானசாவும் மருமகனுக்காக பஜ்ஜி டீ போட்டு தயாராக எடுத்து வந்தார்.

மூன்று பேரும் பேசிக்கொண்டே டீ குடிக்கும் போது மகியும் வந்து விட்டார்.

இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் தங்கியவன் மூன்றாம் நாள் மனைவி குழந்தையோடு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றான்.

வனிச்சூர்:

நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓட பாபு-கண்மணி
வீட்டில் கல்யாண வேலையில் தீவிரமாக இறங்கினர்.

குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பத்திரிக்கை படைத்தவர்கள் முதல் பத்திரிக்கை தாய் மாமன் வீட்டிற்கு தர வேண்டும் என்பதால் நல்ல நேரம் பார்த்து குடும்பத்தோடு வீரையன் தாத்தா வீட்டிற்கு வந்தனர்.

தம்புசாமி-சுமதி இணைந்து தாம்பாளத்தில் பழம் வெற்றிலை பாக்கு பூ அதோடு பணம் வைத்து முறைப்படி திருமணத்திற்கு வருமாறு மாமன் மகனிடம் சொல்ல சிரித்துக்கொண்டே வாங்கியவர் நான் இல்லாமலா மச்சான்,அதெல்லாம் ஜமாய்த்திடலாமென்றார்.

சரி மச்சான்,துரை வீட்டுக்கு போயிட்டு வரோமென்று சொல்லிக் கொண்டு மூன்று வீடு தள்ளியிருக்கும் செழியன் வீட்டிற்கு வந்தவர்கள் சம்பிரதாயப்படி பத்திரிக்கை வைத்தவர்கள் சிறிது நிமிடங்கள் பேசியிருந்து விட்டு கிளம்பினர்.

தூரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு கண்ணன் செழியன் போய் பத்திரிக்கை வைக்க,மற்றவர்களுக்கு அன்பரசன் கனலரசன் பார்த்துக் கொண்டார்கள்.

முதலில் மாப்பிள்ளை வீட்டில் சட்டப்படி ரிஜிஸ்டர் மேரேஜோடு ரிசப்ஷனும் அதன் பின்னர் வனிச்சூரில் பெண் வீட்டின் சார்பாக குல தெய்வத்தின் முன்பு தாலி கட்ட வேண்டும் என்று முன்பே பேசி முடித்திருந்ததால் அதற்காக டிரஸ் வாங்க இரண்டு வீட்டிலிருந்தும் நெருங்கிய சொந்தங்களோடு மதுரைக்கு போனவர்கள் கண்மணிக்கு புடவை வாங்கவே பாதி பொழுது போனது.

இந்த பொம்பளைங்களை விட்டால் இப்படி தான் நேரத்தை ஓட்டுவார்களென்று ஆண்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

அங்கே மலைபோல் குவிந்து கிடக்கும் புடவைகளை பார்த்தவனுக்கு ஒரு புடவை கண்களை உறுத்த அதை மட்டும் தனியாக எடுத்து பிரித்து காட்ட சொல்லவும் மற்றவர்களோ செழியனை கிண்டல் பண்ணினர்.

நீயே சொல்லு சித்தி இது என் பொண்டாட்டிக்கு நல்லாருக்காதா என்று புடவையை காட்டி செழியன் கேட்க,கல்யாணம் ஆகி 27 வருஷம் ஆகுது கண்ணு,உன் நொத்தப்பன் ஒரு கட்சிப் கூட தனியாக வாங்கிட்டு வந்து கொடுத்ததில்லை என்று பத்மா சொல்ல,அதான..

என் அண்ணனை குறை சொல்லலைனா உனக்கு சோறு இறங்காதேயென புவனா ரஞ்சனி கேட்கவும்,யாத்தா நாத்தனாருங்களே தெரியாமல் சொல்லிட்டேன் விடுங்கத்தா என்றவாறு பத்மா கையை கூப்ப,மற்றவர்களோ என்னடியம்மா நாத்தனாருங்களுக்கு அம்புட்டு பயமானு சிரித்து விட்டனர்.

அய்யைய்யோ நான் வரலைகா இந்த விளையாட்டுக்கென்று பத்மாவும் சிரிக்க,நீங்க பேசுகிறதை பார்த்தால் பெருசா ஏதோ சம்பவம் நடந்திருக்கு போலயே என்று கண்ணனும் செழியனும் கேட்க,ஆமாம்பா ஆமாம் என்ற வானதி பத்மாவின் கல்யாணத்தப்போ நடந்த விஷயத்தை சொல்லத் தொடங்கினார்..

ஒரே வீட்டில் இரண்டு பொண்ணு எடுக்க வேண்டாம் என்பதால் பரமுக்கு பத்துமாவை பொண்ணு பார்க்க போக, எல்லாரும் வெளியே தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பனை மரத்தில் பாதி வளர்ந்த போல இந்த மாமா இருக்கிறார் என்று பத்மா கிண்டல் பண்ணவும்,இதுவோ அந்த வழியாக வந்த புவனா ரஞ்சனி காதில் விழுந்து விட்டது.

அன்றே பூ வைக்கும் நிகழ்வும் இருந்ததால் பொண்ணு மாப்பிள்ளையை மாலை மாற்றிக்க சொல்லும் போது பத்மாவின் கழுத்தில் பரசு மாமா மாலை போட்டதும் இப்போது பத்மாவை போட சொல்ல..

அண்ணா நீ குனியாதே இந்த அம்மா உன் கழுத்தில் மாலை போடட்டும் என்றவாறு புவனா ரஞ்சனி முன்னால் வர எதேஏஏஏஏ என்று பத்மா அதிர மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

சிறிது நிமிடங்கள் செல்ல ஏத்தா எவ்வளவு நேரம் தான் புள்ள மாலையை வைத்துக்கொண்டு நிற்கிறது விடுங்க தாயே என்று தம்புசாமி தாத்தா சொல்லவும்,எங்க அண்ணன்தான் பன மரத்தில் பாதி வளர்ந்து இருக்கு உங்க பொண்ணை எட்டி போட சொல்லுங்க என்றனர்..

பிறகுதான் தான் பேசியதை நாத்தனார்கள் காதில் வாங்கிவிட்டதை உணர்ந்த பத்மா ஐயையோ தெரியாம பேசிட்டேன் அண்ணி மன்னிச்சிடுங்க என்று எல்லாருக்கும் முன்னாடி அழுதுகொண்டே கையை கூப்ப,அந்த பயம் இருக்கட்டும் என்றவர்கள் பிறகு கீழு குனினு அவங்க அண்ணன் கிட்ட சொன்ன பிறகுதான் பரசு மாமா தலை குனிந்து மாலை வாங்கிக் கொண்டார் பா என அன்று நடந்ததை சொல்லி வானதி சிரித்தார்..

யாத்தேஏஏஏ...

ஆளுங்களைப் பார்த்தால் அக்கா தங்கை இருவரும் ஊமை போல இருக்காங்க.ஆனால் உள்ளுக்குள் இப்படி ரவுடி கும்பலா இருக்கிறார்களே!!!

இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சேயென்று செழியன் சிரிக்க, என்ன மருமகனே உங்களுக்கும் ஒரு பாடம் பண்ணனுமா என்ற ரஞ்சனி நம்பியார் போல் இரண்டு கைகளும் உரசிக்கொண்டே கேட்கவும்,அய்யய்யோ என்ன விட்டுடுங்க அத்தை என்றவாறு அங்கிருந்து வேகமாக போனான் .

பின்னர் ஒரு வழியாக கண்மணிக்கு கல்யாணப் புடவை பொண்ணழைப்பிற்கு ரிசப்ஷனுக்கானதென எல்லாம் எடுத்து முடித்து வீட்டிற்கு கிளம்பவே இரவு எட்டு மணி ஆனது...

வீழ்ந்தேனடி...
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top