• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
டெல்லி:

எங்கே சம்பந்தி வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஷமீயும் மாப்பிள்ளையையும் ஆளையே காணுமென்றார்.

மருமகள் மாசமா இருக்குங்க அதனால் தான் கூப்பிட்டு வரலையென்று செல்லதுரை சொல்லவும்,அப்படியா என்று சந்தோஷப்பட்டவர் மாப்பிள்ளையோட நம்பரை கொஞ்சம் தாங்கங்கள் என்று பணிவாக கேட்கவும்,அதுக்கு என்னங்க,இதே சொல்லுறேன் என்று தனது மருமகளின் நம்பரை சொன்னார்.

உடனே அந்த நம்பருக்கு மகி கால் பண்ண,மலரோடு பேசிக் கொண்டிருந்த ஷமீராவோ புது நம்பராக இருக்கவும் அட்டென்ட் பண்ணவில்லை.இரண்டு மூன்று முறை கால் பண்ணவும் எடுக்காமல் போக,மாப்பிள்ளை எடுக்க மாட்டேங்கறார் என்கவும்,அது உங்க பொண்ணோட நம்பர் தான் என்று செல்லதுரை சிரித்துக்கொண்டே சொன்னார்.

அப்படிங்களா என்று ஆச்சரியப்பட, பெத்த உனக்கு உன் பொண்ணோட நம்பர் தெரியலையே நீ எல்லாம் ஒரு அப்பா என்று மனசாட்சியோ மகியை கேள்வி கேட்டது.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் போய் படுத்துவிட,பெண்களோ மறுநாள் கொடுக்க வேண்டிய வளையல் மஞ்சள் குங்குமம் அடங்கிய கிப்ட் பாக்ஸை ஆளுக்கு ஒரு வேலையாக பேக் பண்ணி கொண்டிருக்கு,ஜூலியிடம் சொல்லி விட்டு எஸ்தரும் தீபன் வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஒரு வார்த்தையாவது எஸ்தரிடம் பேசிடணுமென நினைத்துக் கொண்டிருந்த மகி திரும்பி மானசாவை பார்க்க அவர் தூங்கி விட்டது தெரிந்தது.

பொறுமையாக கதவை திறந்து வெளியே வந்து பார்க்க இரவு விளக்குகள் மட்டும் ஹாலில் எரிந்து கொண்டிருந்தது.

மற்ற மூன்று ரூம் கதவுகளும் சாத்திருப்பதை பார்த்தவர் யார் எந்த ரூமில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி தட்டுவது என்று யோசித்து விட்டு பின்னர் ரூமிற்குள் படுத்துவிட்டார்.

விடியலும் தொடங்க,பெண்கள் முதலில் எழுந்து குளித்து தயாராகி விட,வீட்டில் பூஜை பண்ண வேண்டும் என்று வீராயி பாட்டி சொல்ல,இங்கு பூஜை ரூம் இல்லையே பாட்டி என்று ரூபா சொல்லவும்,அப்பொழுது எஸ்தரோ கீழ விநாயகர் கோவில் இருக்குங்கமா என்றார்.

அது போதும் தாயி என்றவர் வளையல் மற்றும் பூஜை பண்ண வேண்டிய பொருட்களோடு வானதி புவனாவுடன் அப்பார்ட்மெண்டின் தரை தளத்திலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு செல்ல அந்த நேரம் ஐயரும் அங்கு காலை நேர பூஜை செய்து கொண்டிருந்தார்.

பூஜை முடித்து வந்தவரிடம் தட்டுகளை கொடுத்து அர்ச்சனை பண்ணி தருமாறு சொல்ல,அவரும் அர்ச்சனை பண்ணி சிறிது நிமிடத்திலே கொடுத்தார்.

பின்னர் அதை எடுத்துக் கொண்டு மேலே வர மற்றவர்கள் எல்லாம் தயாராகியதும்,அந்த வில்லாவுக்கு சொந்தமான சிறிய ஹாலில் பங்க்ஷனுக்கான அரேஞ்மெண்ட் நடந்திருக்கவும் அங்கு வந்தனர்.

பின்னர் நல்ல நேரத்தில் ருத்ரன் ஜூலியை அங்கே அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார வைத்த வீராயி பாட்டியும் சுமதி பாட்டியும் அவர்கள் குலதெய்வத்தை வேண்டி விட்டு இருவரும் ஆளுக்கொரு கையில் வளையல் போட்டுவிட்டு அங்கிருந்த ஏழு வகை சாதத்தில் கொஞ்சம் கொஞ்சம் அள்ளி இருவருக்கும் ஊட்டிவிட்டவர்கள் பின்னர் பூக்கள் மஞ்சள் கலந்த அரிசியை தூவி ஆசீர்வாதம் பண்ணினார்கள்.


அப்பார்ட்மெண்டில் இருந்து வந்தவர்களும் இவர்கள் செய்வதை பார்த்து செய்தனர்.

நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் சூழ நல்லபடியாக வளைகாப்பு பங்க்ஷன் முடிந்தது.

எஸ்தர் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டிருந்ததால் நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட,எங்கே போகிறாளென்று மகி யோசனையோடு பார்க்க,அந்த நேரம் வானதியோ சம்மந்தி அம்மா எங்க போறாங்க ரூபா?

ஏதாச்சும் வாங்கணுமா என்கவும் இல்லங்கம்மா.அத்தை இங்கே ஒரு பெரிய கம்பெனில டிசைனராக வேலை பார்க்கிறார்கள் என்கவும்,அப்படியா என்று அவர் ஆச்சரியப்பட,மகியோ அதிர்ந்து போனார்.

ஆமாம் மா என்றவள் தனது ஃபோனில் கூகுளை ஓபன் பண்ணி அதில் ரோஷி பிராண்டு டிரஸ்களை எடுத்துக் காட்டியவள் மிகப்பெரிய கம்பெனி என்றும் இங்கு தான் வேலை பார்க்கிறார்கள் என்றாள்.

அப்படியாயென மற்றவர்களும் அதை பார்த்து சந்தோஷப்பட,மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பது தெரியாமல் இத்தனை வருஷமாக இருக்கிறோமே என்ற மகியோ உள்ளுக்குள் நொந்து போனார்.

ரூபா சொல்லிய பெயரை வைத்து அவரும் போனில் செக் பண்ண,அதில் அந்த கம்பெனி டிசைனர் லிஸ்டில் எஸ்தர் சாமுவேல் என்ற பெயர் இருக்கவும் இதில் கூட கணவனாக என் பெயரை போடவில்லையே,என்னை தலைமுழுகி விட்டாயா டி...

எப்படி உன்னால முடிஞ்சது?.

நான் எவ்வளவு பேசினாலும் அவ்வளவு அன்போடு என்னை தானே சுத்தி வருவ,அந்த அளவுக்கு என் மேல உனக்கு வெறுப்பு வந்துட்டா என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட மகிக்கு எஸ்தரின் விலகளை மட்டும் தாங்கிக்க முடியவில்லை

எப்படியாவது மனைவியை சமாதானம் பண்ணி ஊருக்கு அழைச்சிட்டு போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மாலை 6 மணிக்கு எல்லாம் கார் வந்து பிருந்தாவனம் வில்லாவில் நிற்க அதிலிருந்து இறங்கி வரும் எஸ்தரை அங்கிருக்கும் பார்க்கிலிருந்து பார்த்த மகி எஸ்தர் என்று கூப்பிட,அவரின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் போனவர் லிப்டில் ஏறி மேலே வந்துவிட்டார்.

கடைசி வரை பேச வாய்ப்பு கொடுக்காத மனைவியை நினைத்து நொந்து போய் அன்று இரவே மானசாவோடு அங்கிருந்து திருச்சிக்கு கிளம்பிவிட்டார்.

வனிச்சூர்:

தூக்கத்திலே மனைவியை அணைப்பதற்காக கையை தூக்கி போட அங்கே பெட் வெறுமையாக இருப்பதை உணர்ந்தவன் எங்கடி போன என்று கண்ணை திறக்காமல் கேட்க எந்த சத்தமும் இல்லை.

அதற்குள்ளே விடிஞ்சிடுச்சா என்றவாறு எட்டி போனை எடுத்து மணியை பார்க்க காலை 7:00 மணி என்று காட்டியது.

என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் என்றவாறு எழுந்தவன் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்தவன் வேறு டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு கீழே வர அங்கே ஷமீராவோ வழக்கமாக செய்யும் வேலைகளை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

ஏன் டி இவ்ளோ சீக்கிரம் எழுந்த என்றவாறு சோபாவில் வந்து உட்கார்ந்தான்.

கிச்சனில் சமையல் வேலையாக இருந்தவள் கணவனுக்கான டீயை எடுத்துட்டு வந்து கொடுக்க,நீ ஏதாவது குடிச்சியா என்றவாறு கப்பை வாங்கி டீபாய் மேல் வைக்க,ஷமீராவோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்க,ஓஓஓ கோவமா இருக்கிங்களோ பொண்டாட்டி என்றவனோ எட்டி அவள் கையை பிடித்து இழுக்க செழியனின் மேலே வந்து விழுந்தாள்.

என்ன பண்றீங்க என்ற பல்லை கடித்துக் கொண்டு கேட்க,சோபாவில் நன்கு கால் நீட்டி படுத்தவன் அவளின் கால்களை பிண்ணிக் கொண்டு நெஞ்சில் மேல் படுக்க வைத்தவன் கோவம் கீவமெல்லாம் அந்த நிமிஷத்தோட போயிடனும் புரியுதா?

ஏதோ ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன்.தப்புதான்.இனிமே அப்படி பேச மாட்டேன் அதுக்காக இப்படி பேசாமல் இருக்கலாமென்று நினைக்காத..

ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன் எந்த மனஸ்தாபமாக இருந்தாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல தான், அதுக்கப்புறம் அது தொடரவே கூடாது அது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை டி.

கணவன் சொன்னதை கேட்டவள் அது எப்படி நீங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க எல்லாத்தையும் காதுல வாங்கிட்டு அஞ்சு நிமிஷம் மட்டும் தான் நான் சூடு சொரணையோட இருக்கணும்,மத்த நேரம் எனக்கு எதுவுமே இருக்க கூடாது அப்படித்தானே என்று மூக்கு விடைக்க கேட்கும் மனைவியை ஒரு நொடி பார்த்தவன் பெட்ரூமில் இருக்கும் போது மட்டும் நீ துணி இல்லாம இருந்தா போதும்.

மத்த நேரத்தில் உனக்கு வசதியாக இருக்கும் டிரஸை போட்டுக்கலாமென ஒரு மார்க்கமாக கணவன் சொன்னதை கேட்டவள்,கோபத்தை விட்டு அதிர்ந்து போய் பார்க்க,அதே தாண்டி என்று மனைவியின் கழுத்தை இழுத்தவன் அதிர்ந்து போயிருப்பவளின் உதடுகளை சிறை பிடித்தான்.

நீண்ட முத்த போரை முடித்துக் கொண்டவன் இவ்வளவு ஸ்ட்ராங்கான பூஸ்ட் இருக்கும்போது இப்படி டீ கொண்டு வந்து மாமாவுக்கு கொடுக்கிறியே இதெல்லாம் நல்லாவா இருக்குங்க பொண்டாட்டி என்று கண்ணடித்தான்.

சரியான கேடி நீங்களென்ற ஷமீராவோ அவன் மேலிருந்து எழ முயல,ஹப்பாடா என் பொண்டாட்டிக்கு கோவம் போயிடுச்சு சூப்பர் சூப்பர்.

உன்னை சமாதானப்படுத்த இறுக்கி அணைத்து ஒரு முத்தம் போதும் டி என்று கர்வத்தோடு செழியன் சிரிக்க, ஷமீராவோ கோபமாக கணவனை முறைக்க முயற்சி பண்ணி பிராடு பிராடு என்று வெட்கத்தோடு நெஞ்சில் சாய்ந்து கொண்டு சிரித்து விட்டாள்.

செல்லம் தனியா வீட்ல இருப்பியா டி?

கம்பெனியில் இருந்து மாமா சீக்கிரமா வந்துடுறேன் என்கவும் சரிங்க என்றாள். ஹம், அப்படி ஏதாச்சும்னா பத்மா அத்தை வீட்டுக்கு போயிடுறேன் என்க சரி டி என்றான்.

அதன் பின்னர் செழியனும் கம்பெனிக்கு ரெடியா வர கணவனுக்கு டிபனை பரிமாற,வழக்கம் போல் மனைவியை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு அவளுக்கு ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிட்டவன் பத்திரமா இரு டி என்று சொல்லிவிட்டு வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்

நீட் எக்ஸாம் எழுதுவதற்கான சென்டர் கவிதாவிற்கு மதுரையில் கிடைத்திருக்க,கவிதாவோடு கண்மணியும் மாறன் தீரன் வீட்டிற்கு வந்து விட்டனர்.

தீரனோ தங்கையை அழைத்து போய் சென்டரில் விட்டவன் நல்லபடியா எழுதிட்டு வாடா பாப்பா என்க,சரி ணா என்றாள்.

அதேபோல் எக்ஸாம் எழுதிவிட்டு வெளியே வரவும் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

பின்னர் அங்கே தெரிந்த இடத்திற்கெல்லாம் மாறனும் தீரனும் அவர்கள் மனைவிகளோடு தங்கைகளுக்கு சுற்றி காட்டியவர்கள் அவர்கள் வேண்டாம் என்று சொல்வதைக் கேட்காமல் இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.

டெல்லியில் இருந்தவர்கள் ஒரு வாரம் அங்கு தங்கி சில இடங்களையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.

மதுரை ஏர்போர்ட்டிற்கு மாலை 4 மணிக்கு அவர்கள் வந்து இறங்க, அவர்களை அழைத்து போக கண்ணனும் வந்திருந்தான்.பின்னர் அவர்களோடு கவிதா கண்மணியையும் அழைத்துக்கொண்டு வனிச்சூருக்கு புறப்பட்டார்கள்.

நாட்களும் யாருக்கும் காத்திடாமல் போக பத்தாவது மாத இறுதியில் ஜூலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பதினாறாம் நாள் வழக்கமாக செய்யும் மற்ற சடங்குகளை செய்து குழந்தைக்கு வம்சிகிருஷ்ணன் என்று பெயரை சூட்டினார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
வனிச்சூர்:

ஜூலிக்கு திருச்சிக்கு போக விருப்பமில்லை என்று சொல்லும் போது எப்படி தாங்கள் இந்த விஷயத்தில் பிடிவாதம் பண்ணுவதென சங்கடமாக அவர்களிருக்க,மருமகளின் மனநிலையை புரிந்து கொண்ட வீராயி பாட்டி ஜூலி இருக்கும் ரூம் கதவை திறந்து உள்ளே போக,அவளோ குழந்தையை தொட்டில் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

உட்காருத்தா என்று கட்டிலை காட்ட, அவளும் உட்காரவும் மனசை குப்பை தொட்டி போல வச்சுக்க கூடாது.நீங்களாம் நிறைய படிச்சவங்க நாங்க எல்லாம் படிக்காதவங்க அனுபவம் தான் எங்களுக்கு பாடம்.

நல்ல விஷயத்தை மனசுல வச்சுக்கணும் கெட்டது தூக்கி தூர போட்டுட்டு கடந்து வந்துரனும்.வருஷம் போயிடுச்சு இதுக்கு அப்புறமும் மனசுல அது பெருசா வச்சுக்கிட்டு இருந்தா அது நோயாதான் போய் முடியும்.

குடும்ப வாழ்க்கைக்கு இது நல்லது இல்லை.எல்லாருக்கும் கோபம் தான் வரும் தாய் தகப்பன் இப்படி ஒரு வேலை பண்ணுனதுக்கு,ஆனா அவங்க என்ன சூழ்நிலையில் பண்ணிருக்காங்கன்னு நீயும் நானும் போய் பார்த்தோமா சொல்லு??? என்க,இல்லை என்று தலையாட்டினாள்.

நியமா கோபப்பட வேண்டியது உங்க அம்மா எஸ்தர் தான்.ஆனா அந்த பொண்ணு எவ்வளவு பெருந்தன்மையா இதுவரைக்கும் ஏதாச்சும் அவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணி சண்டை போட்டுருக்கா சொல்லு?

தனக்குன்னு ஒரு பாதையை தேடி ஓடிக்கிட்டு இருக்கா பாரு அதுதான் நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணுக்கு அழகு.

பெத்தவளோட மனசை நீயும் கொஞ்சம் புரிஞ்சிக்க.கோபத்தை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அவங்க அன்பை மட்டும் பாரு கண்ணு.ஒரு பத்து நாள் வச்சி அழகு பாக்கணும்னு எல்லா தாய்க்கும் விருப்பம் இருக்கும் புரியுதா.

உன்ன ஒன்னும் அவங்க கூடயே தங்க சொல்லலையே அவங்க ஆசைக்காக ஒரு பத்து நாள் அதுக்கப்புறம் உன் புருஷன் காரன் வந்து கூட்டிட்டு வந்துடுவான் பிறகு நீ போய் உன் குடும்பத்தை பாரு.

ஆனால் தாய் மனசை வேதனைப்படுத்தாதே.உலகத்திலேயே பெத்தவங்க சாபம் தான் பொல்லாதது. தாய் என்னைக்குமே பிள்ளைகள் விஷயத்தில் சுயநலமாக தான் இருப்பாங்க.இதில் உன் அம்மா மட்டும் ஒன்னும் விதிவிலக்கில்லை.

நீர் அடிச்சு நீர் என்னைக்கும் விலகிடாது கண்ணு சந்தோஷமா போயிட்டு வா. அங்கு இருக்க பிடிக்கலைன்னா சொல்லு அடுத்த நிமிஷம் உன் மாமனார கார் எடுத்துட்டு வர சொல்றேன்.

இப்ப நீயும் ஒரு தாய் உன் பிள்ளைக்கு ஒன்னுனா பதராம இருப்பியா சொல்லு என்க,ஆமாம் பாட்டி என்றவள்.

அவர் சொல்வது எல்லாம் வாஸ்தவமாக இருக்கவும் சரிங்க பாட்டி நான் அப்பா அம்மா கூட ஊருக்கு போறேன்.ஆனா ஒன்னு எனக்கு புடிச்சா தான் அங்கு இருப்பேன் இல்லை நான் கிளம்பி வந்துடுவேன்.

தாராளமா தாயி...

பிடிக்காத இடத்துல இருக்கக்கூடாது ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்காம பிடிக்கல பிடிக்கல நாம சொல்லிட்டு இருக்க கூடாது புரியுதா.

நீங்கள் வக்கீலுக்கு படிக்க வேண்டிய ஆள் தெரியுமா பாட்டியென ஜூலி சிரிக்க,யாரு நானா என்று வீராயி பாட்டியும் சிரித்தார்.

பின்னர் நல்ல நேரத்தில் மகளையும் பேரனையும் மகி-மானசா இருவரும் வனிச்சூரிருந்து திருச்சியில் இருக்கும் அவர்களை வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்.

நேற்று 16 படைக்க வந்தபோது பார்த்தது தான் இதுவரைக்கும் ஷமீரா அவர்கள் கண்ணிலே படவில்லை.

மகள் மாசமாக இருக்கிறாள் என்பது தெரிந்து அவளுக்காக எண்ணற்ற பொருட்களை பார்த்து பார்த்து மகி வாங்கி எடுத்துட்டு வர அவளோ அப்படி ஒரு மனுஷன் இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை.

இப்படி ஒரேடியாக எஸ்தரும் ஷமீராவும் ஒதுக்கி தள்ளுவார்கள் என்பதை கனவில் கூட எதிர்பார்க்காத மகிக்கு பேரிடியாக இருந்தது.

ஏய்...இன்னும் என்ன தான் டி பண்ற??

நான் தான் உதவி பண்றேன்னு சொல்றேன் கொஞ்சம் கூட காதுல வாங்க மாட்டேங்கற என்று தலை சீவிக் கொண்டே செழியன் சொல்ல,அய்யோ ராசா உங்க உதவி எப்படி இருக்குன்னு தெரியும் என்று ஸ்கிரீனுக்கு பின்னாடி நின்று கொண்டு ஷமீராவும் சொன்னாள்.

மனைவி சொன்னதைக் கேட்டு ஹாஹா என்று சிரித்தவன் உனக்கு சேவை செய்ய தாண்டி இந்த அடியேனே இந்த உலகத்துல பிறந்துருக்கிறேன்.

அஞ்சு மணிக்கு ஸ்கேன் எடுக்கணும்னு சொன்ன இப்பவே மணி நாலாகுது இன்னும் ரெடி ஆயிட்டு இருக்க..அப்படி என்னதான் புடவை கட்டுற என்று வேகமாக ஸ்கிரீனை விலக்கி பார்க்க அப்போதுதான் முந்தானைக்கி ப்ளீட் எடுத்துக் கொண்டிருந்தவளோ அய்யோ என்றவாறு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

ஆகா ஆகா எவ்வளவு அழகான காட்சி என்று மனைவியின் பின்பக்கமாக இறுக்கமாக அணைத்தவன் வர வர ரொம்ப அழகா இருக்க டி.மாசமா இருக்கும்போது எல்லாம் பொண்ணும் அழகா இருப்பாங்கன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ என்று மனைவியின் காதோரம் மீசையை முடிகள் குத்த முத்தமிட்டான்.

ஐயோ போதும்..முதல்ல என்னை கிளம்ப விடுங்க.உங்களை பற்றி எனக்கு தெரியும் தயவுசெய்து நீங்க வெளியில போங்க .

இதுக்கு தான் சொன்னேன் நீங்க கீழே இருங்க ரெடி ஆயிட்டு வரேன்னு எங்க நான் சொல்றதை கேக்குறீங்களென்று ஷமீரா சிணுங்க,உனக்கு உதவி செய்யாததற்கு நான் எதுக்கு புருஷன் இருக்கிறேன் என்று செழியன் சிரிக்க..

தெய்வமேஏஏஏ... உங்கள் உதவியோட லட்சணம் எனக்கு தெரியும் சாமி.நீங்கள் எட்ட போவதே எனக்கு மாபெரும் உதவியென்கவும்,ரொம்ப தான் டி சிலுத்துக்குர..

என் செல்லம் உன் வயிற்றில் இருக்கேனு சும்மா விடுறேன் இல்லை என்க,அதில் வெகுண்டு போய் கணவனின் அணைப்பிலிருந்து விலகி திரும்பியவள் எது நீங்க சும்மா இருக்கீங்களா என்று பல்லை கடிக்க, ஆமாம்..

சும்மா தாண்டி இருக்கிறேன் என்று மனைவியைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே செழியன் சிரிக்க,கணவனின் சேட்டைகள் எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மேலும் மனைவியை சோதிக்காமல் அவள் கன்னத்தை மட்டும் கடித்து முத்தமிட்டவன் சரி என் பொண்டாட்டி சந்திரமுகி மாறுவதற்குள் நான் இங்கிருந்து தப்பித்துக் கீழே போவது தான் நல்லது என்க...

என்னாஆஆ என்று அவள் முறைக்க சும்மா சொன்னேன் டி ராட்சசி என்றவன் ரெடியாகி பொறுமையாக படியில் இறங்கி வா நான் கீழே போறேன் என்று அங்கிருந்து சென்றான்.

அழுகிற பிள்ளையை கூட சமாளித்து விடலாம் போல,ஆனால் இந்த மீசை வச்ச குழந்தையை சத்தியமா சமாளிக்க முடியலையே ஆண்டவரே என்றவாறு ஸ்க்ரீனை விட்டு வெளியே வந்தவள் வேகமாக போய் முதலில் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு பின்னர் புடவை கட்டி ரெடியானவள் ஹாஸ்பிடல் செல்வதற்கான பைலை எடுத்துக் கொண்டு படியிலிறங்கி கீழே வர மனைவியுடைய தாய்மையின் அழகை சோபாவில் உட்கார்ந்து கொண்டு இமைக்காமல் செழியனும் ரசித்துக் கொண்டிருந்தான்.

கணவனின் பார்வையை உணர்ந்தாலும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டே வந்தாள்.

பார்த்தியா எவ்வளவு திமிரு இவளுக்கு, கொஞ்சம் கூட கண்டுக்காம வராளே என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

பின்னர் இருவரும் சொல்லிக்கொண்டு வெளியே இருக்கும் பைக்கில் ஏறி டவுனில் இருக்கும் காஞ்சனா ஹாஸ்பிடல் நோக்கி சென்றார்கள்.

நம்ப வீட்டில் தான் கார் இருக்கே அதில் போக வேண்டிய தானே என்று ஆரம்பத்தில் செலகணவனோட-வானதி கேட்க,ஷமீராவிற்கு கணவனோடு பைக்கில் போவது தான் பிடித்திருந்தது.

மனைவியின் மனதை உணர்ந்தவன் உன் மருமகளை பத்ரமாக கூப்பிட்டு போவேன் மா என்றதால் அவர்களும் சரியென்றனர்.

இதோ 5 மாதத்திற்கான அனாடமி ஸ்கேனிற்காக மனைவியோடு சென்று கொண்டிருந்தவன் ஓய் சண்டிராணி என்க, ம்ம் என்றாள்.

எனக்கு ஒரு சந்தேகம் டி??

அப்படியா?

உங்களுக்கா?

நம்பமுடியலையே என்கும் மனைவியை கண்ணாடி வழியாக பார்த்து முறைத்தவன் ஆமா டி என்க, பார்ராஆஆஆ...

தி கிரேட் ஐபிஎஸ் ஆபிசர் இளஞ்செழியனுக்கு சந்தேகமாம் நம்ப முடியவில்லையே என்று ஷமீரா சொல்ல,அதைக் கேட்டு பைக்கை நிறுத்தியவன் உங்கொப்பன் மவளே பந்தயத்தில் நான் தான் டி ஜெயிச்சிட்டேனென் என்றவனோ யாகூஊஊ என்று கத்த ஷமீராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

கணவனின் அலப்பரையை பார்த்தவள் என்ன புருஸ் மண்டை குழம்பிட்டா என்க,நோ டி செல்லம்..

நமக்குள் ஒரு டீல் இருந்ததே அது ஞாபகமிருக்கா??

அதைக் கேட்டவள் என்ன என்று யோசிக்க நினைவிற்கு வரவில்லை.

இல்லையே அப்படி ஒன்னும் ஞாபகம் இருக்க போல தெரியவில்லை என்கவும் எனக்கு தெரியுமே உனக்கு தான் ஞாபகம் இருக்காதுனு..

இந்த முறை நான் தாண்டி வின் பண்ணினேன் என்று மீண்டும் அவன் சிரிக்க ஐயோ இளா முதல்ல விஷயத்தை சொல்லிட்டு சிரிங்கள் என்றாள்..

ம்ம்...கண்டிப்பாக சொல்ல தானே போறேன் என்றவன்,நீ கன்சீவாக இருக்கும் விஷயத்தை சொல்லும் போது ஒரு டீல் போட்டோமே என்கவும் அதன் பிறகே ஷமீராவிற்கு அந்த நாளில் நடந்தது நினைவுக்குள் வந்து அய்யோ என்றவாறு வாயை மூடினாள்.

இப்போது வாயை மூடி என்ன செல்லம் பண்ணுறது என்றவாறு வண்டியை ஸ்டார்ட் பண்ண இருவருக்கும் அந்த நாளின் நினைவுகள் வந்தது..

அன்று...

மனைவியின் வயிற்றிலிருக்கும் தனது வாரிசுக்கு எண்ணற்ற முந்தங்களை பரிசாக கொடுத்தவன்,ஒரு ஆள் ரெடி. அடுத்த செல்லத்தை எப்போ பிளான் பண்ணலாமென்க, இன்னும் 3 இயர்ஸ் போகட்டுமென்றாள்

ஓகே தான் பட் எனக்கு நான்கு குழந்தைகள் வேண்டும் என்க,எதேஏஏ... அதெல்லாம் முடியாது இரண்டு தானென்றாள்.

செல்லாது டி...

இந்த விஷயத்தில் நான் ஒரு முடிவோடு தான் இருக்கிறேனென்க, அவள் மறுக்க இப்படியே வாக்குவாதமானது..

சரி டி, நமக்குள் ஒரு டீல் வச்சிக்கலாம்.

முதல் குழந்தை பிறப்பதற்குள் உன் வாயிலிருந்து என்னுடைய முழு பெயரை நீ சொல்லிவிட்டால் நான் தான் வின்னர்.

அப்படி சொல்லவில்லை என்றால் நீ வின்னர்.உன் ஆசை போல இரண்டு குட்டிகள் ஓகே தானே என்கவும்,நாம எங்கே இந்த மனுஷன் பேரை சொல்லப் போகிறோம் என்ற எண்ணத்தில் டபுள் ஓகே என்றவள் எழுந்து போய் ரூமிலிருந்த காலண்டரில் தேதியை மார்க் பண்ணி இந்த நாளை உங்கள் மன டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் புருஷ்.

நான் தான் அந்த வின்னரென்க செழியனும் பாக்கலாம் டி என்றான்.

இதோ மூன்று மாதங்கள் கடந்துவிட்டது இன்று தன்னை மீறி ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டாள்...அதை சரியாக நினைவு வைத்துக் கொண்டவன் என்ன மேடம் பக்கம் பக்கமாக லா பேசுவீங்க இப்போது வாயவே திறக்க காணுமேயென்று சிரித்தவன் மனைவியை கிண்டல் பண்ணிக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தான்.



வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top