• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
459
ருத்ரன் வீடு-டெல்லி:


தனது தாயின் சாயலில் இருக்கும் உடன் பிறந்தவளை பார்த்த அருண்,அக்கா என்றான்.

அதில் ஒரு நிமிடம் தடுமாறியவள் வாடா என்று சொல்ல எதுவும் சொல்லாமல் அக்காவை தோளோடு வந்து அணைத்துக் கொண்டவன்,எனக்கு தெரிந்திருந்தால் முன்னாடியே நான் பார்க்க வந்திருப்பேன்.

இன்னைக்கு காலையில் தான் தெரியும்.அதும் நான் மாமாவாக போகிறேன் என்று தெரிஞ்ச உடனே இங்கு கிளம்பி வந்துட்டேன்.

நீ என்ன சாப்பிடுவனு தெரியாது ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்றவன்,வெளியே இருந்த லக்கேஜை எடுத்து வந்து ஜூலியிடம் நீட்ட,கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டாள்.

பெற்றவர்களை ஒதுக்க முடிந்த அவளால் இவனை ஒதுக்க முடியாமல் உள்ளுக்குள் தடுமாறியவாறு பரிதாபமாக எஸ்தரை பார்க்க,அவரோ இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றவாறு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

பின்னர் அவர்களை இயல்பாக்கும் பொருட்டு எதுக்கு எல்லாரும் நின்னுட்டே பேசிட்டு இருக்கீங்க ?

உட்காருங்கப்பா என்று பாயல் சொல்லவும் வாடா வந்து உட்காரு என்று அங்கிருந்த ஷோபாவை காட்டி ஜூலி சொல்ல,ஹம் என்றவாறு அதில் போய் உட்கார்ந்தவனுக்கு எஸ்தர் யார் என்பது தெரியவில்லை.

டீயா காபியா என்று ஜூலி கேட்கவும் ஒன்னும் வேண்டாம்,ஏர்போர்ட்டில் குடிச்சிட்டு தான் வரேன் என்றவன் எல்லாரையும் பார்க்க,பிறகு தான் அவர்கள் யாரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தாததை புரிந்து கொண்டவள் தனது தலையில் லேசாக தட்டி விட்டு அவங்க தான் என்னுடைய அம்மா எஸ்தர் என்கவும், உன்னுடைய அம்மாவா என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் எஸ்தரை பார்க்க,அவரோ தனது முக மாற்றத்தை மாற்றாமல் இயல்பாகவே நின்றார்.

பிறகு பாயலை ருத்ரன் சித்தி என்றவள் தீபன் ரூபாவை யார் என்று அறிமுகப்படுத்தி வைக்க அவர்களோடு சிரித்த முகமாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வப்போது பார்வை எஸ்தரின் மேல் தான் சென்று வந்தது.

அவரும் அவனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை,.அவனும் அவரிடம் பேச முன் வரவில்லை.

இப்படியே நிமிடங்கள் கடக்க,சரி சாப்பிட்டுக்கலாம் என்க,கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்தவர்களுக்கு எஸ்தர் பரிமாற,மற்றவர்கள் பேசிக்கொண்டே சாப்பிட,அருணோ அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.

வெளியில பார்க் இருக்கிறதை வரும்போது பார்த்துட்டு வந்தேன்.கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா அக்கா என்று ஜூலியை கூப்பிட,அவளிடம் ஏதோ தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறான் என்பது மற்றவர்களுக்கும் புரிந்தது.

ஜூலியும் அதை உணர்ந்தவள் சரி வா என்று அவனோடு லிப்ட்டில் ஏறி கீழே வந்தவள் சொல்லு அருண் உன்னோட வொய்ப் எப்படி இருக்காங்க?

குழந்தைகள் இருக்கா?

அவளுக்கும் இது ஏழாவது மாசம் கா.

கொஞ்சம் கூட இப்படி ஒரு விஷயம் நம்ம வாழ்க்கையில நடந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கேட்ட எனக்கு பயங்கர அதிர்ச்சி கா.

நம்ம அப்பா அம்மாவா இப்படின்னு அவ்வளவு வெறுப்பு வருது என்கவும் ஏன்டா இப்படி சொல்ற?

அவங்க சூழ்நிலை என்னவோ நமக்கு அது தெரியாது..என்ன பொல்லாத சூழ்நிலை கா.இரண்டு பேரும் நினைச்சிருந்தா இதெல்லாம் தடுத்திருக்கலாம்.

தேவை இல்லாத மனஸ்தாபங்கள் வராமல் இருந்திருக்குமே என்றவன்,ஆமா,அவர்களுக்கு ஒரு பொண்ணு மட்டும் தானா இல்ல பையனும் உண்டா??

அவன் கேட்பது புரியாமல் யாருக்குடா என்க,அதுதான் அப்பாவுடைய இன்னொரு வைஃப் என்றான்.

அப்பாவுக்கு இன்னொரு வொய்ப் என்றால் அப்போ நமக்கு யார்?

நமக்கும் அவங்களுக்கும் என்னக்கா இருக்கு??

என்னடா இப்படி பேசுற என்று ஜூலி அதிர,ஆமா கா அவங்களுக்கும் நமக்கு என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு??

நீ ஏன் இப்படி பேசுற?

வேற எப்படி பேச சொல்லுற??

ஆயிரம் குடும்பம் திருட்டுத்தனமாக அப்பா வச்சிருப்பாரு அத்தனை பேரும் அம்மாவாக ஆயிட முடியுமா??

எனக்கு அப்பா அம்மா மேல கோபம் இருக்கு ஒத்துக்கிறேன்.அதுக்காக கண்டவர்களை எல்லாம் அம்மாவாக என்னால ஏத்துக்க முடியாது கா..

அதைக் கேட்டு வெகுண்டவள் இனி எஸ்தர் அம்மாவை பற்றி ஒரு வார்த்தை பேசின நல்லாருக்காது.தம்பின்னு கூட பார்க்க மாட்டேன்

அவங்களை பற்றி உனக்கு என்னடா தெரியும்?


உங்க யாருக்கு அவங்க வேண்டுமோ, வேண்டாமா அது எனக்கு தேவையில்லை.எனக்கு எஸ்தர் அம்மா ரொம்ப முக்கியம்.

அவர்களை ஒருபோதும் என்னால கைவிட முடியாது.அதேபோல் ஷமீரா என் தங்கச்சி..இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்றவாறு ஜூலி எழுந்திருக்க, இதற்கு அப்புறம் இதை பற்றி பேசினால் தேவையில்லாத வாக்குவாதம் தான் வரும் என்பதை புரிந்து கொண்டான்.

இருவரின் முகத்தை வைத்து ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது என்பதை மற்றவர்களும் புரிந்து கொண்டு,அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.

எஸ்தரோ என்ன டிசைன் பண்ணலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கும் போது அந்தோணியிடமிருந்து அவருக்கு கால் வந்தது.

அட்டென்ட் பண்ணியவர் சொல்லு ணா எப்படி இருக்க?பாபு நல்லாருக்கானா சித்தி நல்லா இருக்காங்களா என்றவர் மறந்தும் ராணியை பற்றி விசாரிக்கவில்லை.

நல்லாருக்கோம் டா. முதல் நாள் வேலைக்கு போனது எப்படி இருந்தது??

எனக்கு புடிச்ச வேலை தானே ணா. ஏதோ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு அதை சிறப்பாக செய்யணும் ணா.

ஆமா மா...கண்டிப்பாக..உன் முழு திறமையை இதில் காட்டு.மேலும் மேலும் இதில் நீ முன்னேறனும் அதை பார்த்து தான் இந்த அண்ணனோட மனச சந்தோஷப்படணும்.

என்னாலதானே உன் வாழ்க்கை இப்படி போனதே என்பதை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ரண வேதனையா இருக்குமா என்று அந்தோணி வருத்தமாக சொன்னார்.

அய்யோ அண்ணா...நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ணா.கை நிறைய சம்பாதிக்கிறேன் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனு சொன்னாங்க.

இனி கௌரவமாக சம்பாதிக்க போகிறேன் என் சொந்தக்கால்ல நிற்க போறேன்.யாரும் எனக்கு ஓசி சோறு போடுறேன்னு சொல்லிக் காட்ட முடியாது என்கும் போது எஸ்தருக்கும் அழுகை வந்தது.

இதையெல்லாம் சற்று ஓரமாக நின்று காதில் வாங்கிய ராணி, என்னாஆஆ அண்ணி வேலைக்கு போறாங்களா என்று அதிர்ந்தவள், இந்த விஷயம் அண்ணனுக்கு தெரியுமா தெரியாதாயென யோசைனையாக,வெளியே போயிருந்த பாபுவும் வீட்டிற்கு வந்தான்.

அப்பாவிடமிருந்து போனை வாங்கியவன் அப்புறம் மேடம், டிசைனர் எஸ்தரின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கவும் என்றவாறு சிரிக்க, கிண்டலா கண்ணாயென எஸ்தர் சிரிக்க,இந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு எத்தனை நாட்கள் ஆகுதுங்கத்தை..

எப்போதும் நீங்கள் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என்றான்.

கோர்ட்:

மறுநாள் கோர்ட் வளாகமே ஒரே பரபரப்பாக இருந்தது.அமர்நாத்துக்கும் அவன் கூட இருந்த மற்ற ஏழு பேருக்கும் என்ன தண்டனை கிடைக்கப் போகுது என்பதை தெரிந்து கொள்ள பத்திரிக்கையாளர்களும் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளின் உறவினர்களும் காத்திருந்தனர்.

எப்படியோ இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அமர்நாத்தின் குடும்பமும் பதறி அடித்து டெல்லிக்கு வந்தார்கள்.

நடந்த விஷயத்தை எல்லாம் அவர்களும் கேள்விப்பட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஆயிரம் தான் குற்றவாளியா இருந்தாலும், எப்படியாவது போராடி அமர்நாத்தை வெளியே கொண்டு வருவதற்கான அத்தனை ஏற்பாடும் அமர்நாத்தின் பையன் பண்ண,அதற்கு எந்த பலனுமில்லாமல் போனது.

இது நேரடியாக பிரதமர் மூலமாக வந்து புகார் என்பதால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் கைவிரித்தார்கள்

எப்படியாவது என் மகன் என்னை வெளியே எடுத்திடுவான்.இல்லையே அவன் தான் யாத்திரை போயிருக்கானானே...

அப்போ என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக எவ்வளவோ விஷயம் பண்ணிருக்கிறேன்.அதில் ஒருவர் நிச்சயமாக என்னை பெயிலில் எடுப்பார்கள்.பிறகு இருக்குடா உங்களுக்கு...

அடியேய்...

அன்றைக்கு என் கையில் இருந்தும் தப்பிச்சிட்ட.இப்போ வசமா சிக்கிட்ட.வயசு போனாலும் இன்னும் தளதளனு தான் டி இருக்க.உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் டி என ஜெயிலுக்கள் இருந்த அமர்நாத் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறான்.

ஆனால் இந்த விஷயம் கேள்வி பட்டதிலிருந்து அவனது நண்பர்கள் மொத்தமாக அவனை விட்டு விலகினர் என்பது இவனுக்கு தெரியவில்லை.

மூன்றாவது வழக்காக அமர்நாத்துடையது கோர்ட்டிற்கு வந்தது.

மரியாதை நிமித்தமாக ஜட்ஜிற்கு வணக்கம் சொன்னார்கள்.

உங்கள் தரப்பிலிருந்து எதாவது சொல்ல விரும்புகிறீர்களா என அமர்நாத்தை கேட்க...எனக்கும் இந்த குற்றத்திற்கும் சம்பந்தம் இல்லைங்க சார்.

நான் இதை பண்ணவில்லை..எனது புகழுக்கு கலங்கம் வர வைப்பதற்காக எதிர்கட்சி ஆட்களோடு சேர்ந்து கொண்டு இவர்கள் செய்த சதியென்றான்.

எஸ் மை லார்ட்...

இவங்க சொல்ற தேதியில் எனது கட்சி காரர் அன்று டெல்லியிலே இல்லை.இதோ அதற்கான சான்று என்று அமர்நாத்தின் வக்கீலும் ஆதாரத்தை நீட்டினான்.

அதை வாங்கி படித்து பார்த்து சிரித்தவர் தனது போனில் எதையோ செக் பண்ணி விட்டு நிமிர்ந்தவர் ஆஹ அன்றைய தினத்தில் உங்கள் கட்சிகாரர் பெங்களூரில் அவருடைய அக்கா வீட்டில் இருந்திருக்கிறார் அப்படி தானே?

"எஸ் மை லார்ட்"

அவரை ஒரு பார்வை பார்த்த ஜட்ஜ்,நீங்கள் சொன்ன தேதியில் எந்த டிராவல்ஸில் இருந்து டிக்கெட் புக் பண்ணுனீங்க?

அதை சொல்லுங்கள்....?

மை லார்ட் 2005 பிப்ரவரி 5 ஆம் தேதி,மிதுன் டிராவல்ஸ்..

ஓஓஓஓஓ...விபத்து நடந்த டேட் என்ன?

அது வந்துங்க லார்ட் என்று அமர்நாத்தின் வக்கீல் தடுமாறியவர், ஹம் விபத்து நடந்த தேதி ஜனவரி 20, 2005 வது வருஷம்

இஸ் ஈட்... பட் நீங்கள் கொடுத்த ஆதாரம் பிப்ரவரி 5.

என்னங்க இதெல்லாம்?

அது வந்துங்க மை லார்ட் ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக் அதான் என்று பரசுராமன் சொல்ல,ஓஹோ..மிஸ்டர் பரசுராமன் நீங்கள் சொன்ன டிராவல்ஸ் ஓபன் பண்ணியதே 2006 ல்.பிறகு எப்படி 2005 ல் இவர் டிராவல்ஸில் புக் பண்ணியிருக்க முடியுமென்று ஜட்ஜ் கேட்க அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை...

வீழ்ந்தேனடி
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
459
வனிச்சூர்:

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கண்ணனுக்கு,சற்று தூரத்தில் மலர் மட்டும் தனியாக நடந்து போவது தெரிந்தது.

என்ன நம்ப ஆளு மட்டும் போறாள் என்று யோசனை செய்து கொண்டே வந்தவனுக்கு,இன்று கண்மணி ஸ்கூலுக்கு போகாதது தெரிந்தது.

ஓய் பொண்டாட்டி என்றவாறு அவளின் அருகில் வந்து பைக்கை நிறுத்தியவன்,ஏன் டி ஒரு வார்த்தை சொன்னால் உன் வாயில இருக்கும் வைரங்கள் கொட்டிடுமா?

வத்து பிக்கப் பண்ணிருப்பனே?

அவ்வளவு தல கணம் இல்லையா?

ம்கும்..இந்த தொரைய பற்றி நல்லா தெரிந்ததால் தானே சொல்லலை என்று முணவிக் கொண்டாள்.

ஏய்...

என்ன டி வாய்க்குள்ளே முணவுர?

சரி உட்காரு வீட்டில் விட்டுட்டு போறேன் என்றவன் ம்ம் என்க,இல்லை நான் நடந்தே வரேன் என்பவளை எட்டி இழுத்தவன் சொன்னா கேட்க மாட்டியா டி என்றவாறு ஒரு கையால் தூக்கி முன் பக்கமிருந்த பெட்ரோல் டேங்கின் மேல் உட்கார வைத்தவனோ வண்டியை வேகமாக ஓட்டினான்...

அய்யோஓஓஓஓ

என்ன பண்றீங்க?

யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று மலர் கத்த, இந்த அறிவு மயிறு நான் கூப்பிட்ட அப்பவே வந்துருக்கணும்.

ஒழுங்கா கம்முனு வந்து உட்கார்ந்திருந்தால் நானும் கொண்டு போய் விட்டுருப்பேன் என்றவாறு இன்னும் வேகத்தை கூட்ட,அதில் பயந்தவளோ அய்யோ பயமா இருக்கு மாமா என்றவாறு கண்ணனின் மேல் சாய்ந்து கொள்ள,அதில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தியவன் வண்டியை ஆப் பண்ணி விட்டு தன்னவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

நடுரோடு என்று பாராமல் தன் நெஞ்சில் புதைந்திருப்பவளை நிமிர்த்தியவன் அவள் சுதாரிப்பதற்குள் அவள் இதழ்களை சிறை பிடித்தவனோ பற்கள் பதிய காயப்படுத்தி விட்டு மனம் இல்லாமல் தன்னிடம் இருந்து விலக்கியவன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்றவாறு தன்னவளின் கன்னங்களை பிடித்தபடி கேட்க,கண்களை மூடி இருந்தவளோ பட்டென்று திறந்து ஹம் என்று தலையசைத்தவளோ வெட்கத்தில் அவன் நெஞ்சில் புதைத்து கொண்டாள்..

தன்னவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவனோ மல்லி பூ வாசனை..நெருக்கத்தில் நீ..யாரும் இல்லாத மாலை நேரம்,மனுஷனுக்கு என்னென்னவோ தோணுது டி செல்லம்...

அதைக் கேட்டவளோ அய்யோ என்றவாறு வண்டியில் இருந்து கீழே குதிக்க,ஹா ஹா என்று சிரித்தவன் பயப்படாமல் வாடி என்க,ம்கூம் யாராவது பார்த்தால் கிண்டல் பண்ணுவாங்க மாமா என்றாள்...அதெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டாங்க வா...

பின்னர் சிறிது இடைவெளி விட்டு மலர் உட்கார ஏன் நடுவுல உன் தங்கச்சிகாரி உட்கார போறாளோ?என்பவனின் தோளில் அடித்தவள் உங்களுக்கு நானே பெருசு என்றாள்.பின்னர் இருவரும் அந்த சூழலை ரசித்துக் கொண்டே ஊருக்குள் வர அவர்களை பார்த்து சிலர் சிரித்து தலையசைத்தனர்.

மலர் வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தியவன் அவள் பின்னால் அவனும் இறங்கி வர,இப்ப எதுக்கு நீங்க வரிங்க என்று பதட்டமாக மலர் கேட்க ஏண்டி இப்படி உன்ன வாசல்ல இறக்கிவிட்டுட்டு போனா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?

வீட்டுக்கு வந்து அத்தை மாமா கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போறேன் டி என்க,அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் சொல்லிக்கிறேன் நீங்க போங்க என்றாள்.

அவள் பதட்டத்தை கண்டவன் எதுக்கு டி நீ இப்படி பதறுர?என்ன நடந்துச்சு சொல் என்று முறைக்க,அப்பாவும் அம்மாவும் மதுரைக்கு போயிருக்காங்க என்று பொறுமையாக சொல்ல,என்ன சொன்ன என்றவாறு வேகமாக அவளிடம் வந்தவன் அப்ப வீட்டில் நீ மட்டும் தான் இருக்கிறியா..!!!

சூப்பர் சூப்பர் என்றவன் சுற்றி யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவளை வளைத்து பிடித்து அங்கிருந்த காம்பவுண்ட் சுவற்றின் மேல் தன்னவளை சாய்த்து அவளோடு நெருங்கி நின்றவனோ விட்ட முத்தத்தை இப்பொழுது பொறுமையாக தொடர்ந்தான்.

அவனை விலக்க முயன்று தோற்றவள் தன்னவனின் இரும்பு கரங்கள் புடவையின் இடைவெளியில் தெரியும் வெறுமையான இடுப்பு பிரதேசத்தில் அழுத்தமாக பதிவதை உணர்ந்து அதில் சொக்கியவளோ கண்ணனின் முதுகு பகுதியின் சட்டையை இறுக்கி பிடித்தாள்.

அவளின் அவஸ்தையை உணர்ந்தவன் பொறுமையாக தன்னவளின் உதடுகளை விட்டு பிரிந்து சிவந்து போயிருக்கும் அவள் முகத்தோடு இழைத்தான்.

கண்களை மூடியவாறு அந்த சூழலை மலரும் ரசிக்க,அந்த நேரம் எதோ வண்டியின் ஹாரன் சத்தம் கேட்க,மனமின்றி விலகியவன் வீட்டை பூட்டிட்டு பத்ரமா இரு கண்மணியை வர சொல்லுறேன் டி..

"அதற்கு ஹம் என்று தலையசைத்தாள்"

சரி கிளம்பட்டுமா?

அவனை போக சொல்ல காதல் கொண்ட மனம் இடம் தரவில்லை தான்.இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தான் மொத்தமாக தன்னை கொள்ளையிடுவான் என்னும் உண்மை புரிந்து,வெட்கத்தோடே வேகமாக போய் கதவை திறந்து உள்ளே போனவள் இன்னொரு கதவின் பின்புறம் சாய்ந்து நிற்க..

பைக் ஸ்டார்ட் பண்ணும் சத்தம் கேட்டு எட்டி பார்க்க கண்ணன் போவது தெரிந்தது.

ஏய் மலரு இனி இந்த மனுஷன் கண்ணில் சிக்குன உன் பாடு அதோ கதிதான் என்றவாறு கதவை தாழிட்டு ரூமிற்குள் வந்தவள் கண்ணாடியில் முகத்தை பார்க்க ரசாயனம் பூசாமலே உதடுகள் கோவை பழமாய் சிவந்திருந்தது.

டெல்லி-கோர்ட்:

கதை ஜோடிக்க தெரிந்த உங்களுக்கு, அதை தெளிவாக செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்..

சரி...

இதுவரை நடந்த இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்திடம் ஒப்படைத்த சிபிஐ ஆபிசர்களை இந்த நீதிமன்றம் பாராட்டுகின்றது.

அடுத்தது,எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் நியாயத்திற்காக தொடர்ந்து போராடும் பெண் புலி உமா மகேஸ்வரியை பாராட்டுவதில் பெருமை படுகிறோம்.

குற்றம் செய்தவரென்று நன்கு தெரிந்தும் பொய்யான ஆதாரங்களை காட்டி கோர்டின் நேரத்தை வீணடித்தது இல்லாமல்,இத்தனை உயிர்கள் பலியானதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல்,குற்றவாளியை காப்பாற்றும் நோக்கில்,சாட்சிகள் ஒப்படைத்த ஆதாரங்களை பொய்யென எள்ளி நகையாடிய வக்கீல் பரசுராமனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு,பார் கவுன்சிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்.

இந்த வழக்கை நன்கு விசாரித்ததில் ஜனவரி 20 ஆம் தேதி, 2005 ஆம் ஆண்டில் சாந்தினி சௌவுக் என்னும் இடத்தில் நடந்தது தீ விபத்து இல்லை என்றும்,அது திட்ட மிட்ட செயல் என்பது தக்க ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்தனை அப்பாவி உயிர்களை பரித்த அமர்நாத் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப் படுகின்றது.

1579 பேர் இறந்த இடமோ இன்னும் அந்த கோர சம்பவத்தை மறக்க முடியாத அளவிற்கு எதிரொளித்துக் கொண்டிருப்பதால்,குற்றவாளிகள் அத்தனை பேரும் அந்த இடத்தை சுற்றம் செய்து,1579 மரக் கன்றுகளை அவர்களின் சொந்த பணத்தில் நட்டு வைத்து அந்த இடத்தை செழிப்பாக்கி காட்ட வேண்டும்.

அதற்கான வேலைகள் நடப்பதை மாதம் தவறாமல் நீதிமன்றத்தில் வந்து ஆதாரங்களை காட்ட வேண்டும் என்பதை காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.

இனி எந்த காரணத்தை கொண்டும் இவர்களுக்கு பரோல் கிடையாது.

சாகும் வரை தண்டனையை அனுபவித்து வரவேண்டும்.இடைப்பட்ட நாட்களில் நன்னடக்கத்தில் கிடைக்கும் சலுகைகள் எதுவும் இவர்களுக்கு கிடையாது.

பாதிக்கப்பட்டவரின் வேண்டுதலின் போல் இவர்களிடம் இருக்கும் 75% சொத்தை,நலிவு நிலையிலிருக்கும் குழந்தைகள் காப்பகத்திற்கு காவல் துறையினர் ஒப்படைக்க வேண்டும்.

அடுத்ததாக இந்திய அரசாங்கத்தில் அமர்நாத்தின் பதவியை பரித்து,கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமேன கட்சி தலமைக்கு உத்தரவிடுகிறேன்.

தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யான உடல்நிலை நலிவென காட்ட முயன்றால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனைக்கும் பரிந்துரைக்கிறேன்
என்பதாக தீர்ப்பளிக்கிறேன்....

ஜட்ஜ் தனது தீர்ப்பை வாசித்து முடித்ததும் அவ்வளவு கரகோஷம் கோர்டிற்குள் ஒலித்தது.

பல் பிடுங்கிய பாம்பு போல நொந்து போன அமர்நாத் தனது குடும்பத்தினரை மட்டும் ஒரு முறை சந்தித்து பேசிட்டு வரேனென்று போலீஸிடம் கேட்க,எதாக இருந்தாலும் ஜெயிலுக்குள் பெட்டிசன் கொடுத்து அதற்கு அனுமதி கிடைத்தால் பேசிக்கலாம் என்றவாறு கைகளில் விலங்கை மாட்டி ஜெயிலுக்கு அழைத்து போனார்கள்.

இந்த தீர்ப்பு பற்றி விவாதம் தான் எங்கு பார்த்தாலும் பேச்சு பொருளாக இருந்தது.

சார் இந்த தீர்ப்பு பற்றி உங்களின் கருத்து என்று பிரதமரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்க,தூக்கு தண்டனை கொடுத்திருந்தாலும் ஒரேயடியாக உயிர் போயிருக்கும்.

பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில்,இடிந்த கட்டிடங்கள் மட்டுமல்ல அதில் புதற் மண்டியிருக்கும் இடத்தை சுத்தம் செய்வது என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவது போல,இது சாதாரண விஷயமில்லை.

அழிப்பது ஒரு நொடியில் நடந்து விடும்.ஆனால் ஆக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல.அதுவும் இந்த தீர்ப்பை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகளை உலகிற்கு காட்டிய சிபிஐ அதிகாரிகளை மனமாற பாராட்டுகிறேன்.தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறேன்... ஜெய் ஹிந்த்...

கோர்ட்டில் ஜட்ஜ் சொல்லிய தீர்ப்பு மட்டும் இல்லாமல் பிரதமர் பேசிய வீடியோவும் எல்லா சேனலிலும் ஒளிபரப்பாகியது..

மற்ற பார்மாலிட்டிஸையும் முடித்துவிட்டு நண்பர்கள் மூவரும் வீட்டிற்கு வரவு இரவு 8 மணி ஆனது..

செழியனுக்கு மதுரைக்கு செல்வதற்கான பிளைட் இரவு 12 மணிக்கு என்பதால் ரூமிற்குள் போய் ஒரு குளியலை போட்டுக் கொண்டு ரெடியாகி வெளியே வர இரவு உணவும் தயாராக இருந்தது.

பின்னர் பேசிக்கொண்டே சாப்பிடும்போது செழியா என்று வசு கூப்பிட, எதிரில் உட்கார்ந்திருந்தவனோ நிமிர்த்து பார்த்து சொல்லுங்கத்தை என்க...

த்ரீ மன்த் உனக்கு லீவ் சேங்ஷன் பண்ணிருக்கிறேன்.என் பொண்ணு கூட நாலு இடத்திற்கு போயிட்டு வா.இன்னும் ரெண்டு வாரத்தில் நானும் மாமாவும் பொள்ளாச்சிக்கு வந்திடுவோம் ஷமீயோடு அங்கு நம்ப வீட்டிற்கு வரணும் கண்ணு..

அதைக் கேட்டு சிரித்தவன் சரிங்கத்தை என்றவாறு சாப்பிட்டு எழுந்தவன் நண்பர்களிடம் மற்ற விஷயங்களை பற்றி பர்சனலாக பேசிவிட்டு,மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு வந்தான்.

நண்பனை பிளைட் ஏற்றி விட்டு அவர்கள் வீட்டிற்க செல்ல,செழியனும் மதுரையை நோக்கி விமானத்தில் பறந்து போனான்...

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top