• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
457
டெல்லி-கோர்ட்:

பிறகு அந்த பள்ளத்திலிருந்து ஒரு வழியா குழந்தைகளோடு மேலே ஏறி வந்து பாயல் எங்கே என்று பார்க்கும் போது தான் சற்று தூரத்தில் கிடப்பது தெரிந்தது.

பின் மண்டையில் அடிபட்டு மயங்கி கிடந்த அவங்களை தூக்கிட்டு ரோட்டிற்கு வரும் போது,அந்த வழியாக வந்த வேன் முன்னால் கையை நீட்ட அவர்களும் நிறுத்தினார்கள்.

அதிலிருந்த கிறிஸ்தவ பாதர்கள்
எங்கள் நிலையை பார்த்து வேனில் ஏத்திக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போனாங்க.அங்கு ட்ரீட்மென்ட் பண்ணும் போது தான் பாயல் கோமாவுக்கு போயிட்டாங்கன்னு டாக்டர் சொன்னார்.

பிறகு அவங்க யாரென்று சொல்லி டாக்டர் கர்ணன் கிட்ட இன்ஃபார்ம் பண்ண சொல்லிட்டு சற்று முன்பு நடந்த விஷயத்தை சொல்லவும் இனி இங்கு இருக்க வேண்டாம்னு குழைந்தைகளோடு நானும் அவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.

கோயம்புத்தூரில் இருக்கும் பவுல் ஆசிரமத்தில் தான் குழந்தைகளோட நானும் இருந்தேன்.பாதர் ஜேக்கப் தான் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

நான் செய்த தப்பெல்லாம் பாதர் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்ட அவர் எனக்கு பாவமன்னிப்பு கொடுத்தார்.மனம் திருந்தி அவர்களோடு ஊழியத்துக்கு போக ஆரம்பிச்சேன்.

பிறகு அவர் மூலயமாக பைபிள் காலேஜ் படித்து நானும் ஊழியம் பண்ண தொடங்கினேன்.குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வேணும்ங்கிறதுக்காக தான் அவர் மூலமா டெல்லியில் இருக்கும் பெத்தேல் ஆசிரமத்துக்கு அனுப்பி வச்சேன்.

16 வருஷம் ஓடியது ஆனாலும் பாயலுக்கு நினைவு வரவில்லை.கடந்த நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் நான் தூங்கிட்டு இருக்கும்போது எனக்கு கால் வந்துச்சு.

டெல்லியில் இருக்கிற மருத்துவமனையில் இருந்து பேசுறோம்னு சொன்னாங்க,குரல் வேறாக இருக்க கொஞ்சம் பயம் வந்துருச்சி.

சந்துரு தானே என்று கேட்கும் போது தான் அவர்களை நம்பி ம்ம் சொல்லுங்க என்கும் போது பாயலுக்கு நினைவு வந்துருச்சுன்னு சொன்னாங்க..

மறுநாள் நான் டெல்லியில் போய் பாயலை பார்த்தேன்.நல்லவேளை ஆண்டவர் கிருபையால் என்னை நினைவு இருந்தது.

தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தானே தைரியமாக இறங்க முடியும்?இந்த இருபது வருஷத்தில் எதோதோ பண்ணி அமர்நாத் மினிஸ்டர் ஆகிட்டான்னு தெரிஞ்சது.

அந்த வீடியோ மட்டும் இருந்திருந்தால் இந்த நிமிஷமே அவனுக்கு தண்டனை வாங்கி தந்திருக்கலாம்.அது தான் ஜுப்பில் எரிந்து போயிடுச்சேனு நான் வருத்தமாக சொல்லும் போது,இல்லை ணா என்று பாயல் சொல்லியது.

என்ன மா சொல்றனு நான் அதிர, அன்றைக்கு என்னை ரூமில் அடைத்து வைக்கும் போது வீடியோ கேமராவை அங்கிருந்த டேபிள் மேல் வச்சிட்டு வெளியே பூட்டிட்டு போய்ட்டான்.

கொஞ்ச நேரம் போய் அந்த ரூமிலிருந்து வெளியே போக வழி இருக்கானு நான் செக் பண்ணும் போது இன்னொரு கதவு இருப்பது தெரிந்து,அதை திறந்து பார்க்க தோட்டமென்று தெரிந்தது.

கேமராவை அங்கிருந்த பாலிதீன் கவரில் வைத்து கட்டி எடுத்து போய் தோட்டத்தில் இருந்த மாமரத்தின் கீழ் குழி தோண்டி புதைத்து விட்டு உள்ளே வரும் போது தான் அமர்நாத் வந்துட்டான்.

பிறகு தான் கை கால் கட்டி போட்டுட்டு போயிட்டான்னு பாயல் சொல்லுச்சு.
நாங்கள் ரெண்டு பேரும் மாறு வேடத்தில் அந்த பங்களாவை தேடி போனோம்.

இருபது வருஷத்தில் ஏகப்பட்ட மாற்றம்...அதும் இல்லாமல் பழைய வீடு இல்லை புது பில்டிங்காக இருந்தாலும் அப்போது உள்ள மரங்கள் அப்படியே இருக்க,அதோட பக்கத்தில் இருந்த இடத்தையும் வளைத்து இன்னும் சில மாமரங்கள் தோட்டத்தில் இருப்பதையும்,இப்போது அந்த வீடு அமர்நாத்துக்கு சொந்தமானதுனு வாட்ச்மேன் மூலமாக தெரிந்து கொண்டோம்.

யாரும் இல்லாத நேரத்தில் அங்கு போய் தேடலாமென்று முடிவு பண்ணி கண்காணிச்சுக்கிட்டே இருக்க, நாட்களும் வாரங்களா போய் மாதங்களா ஓடுனதே தவிர எதுவும் நடக்கவில்லை.

இப்படியே ஆறு மாதம் கடந்து போயிடுச்சு அப்பதான் பாதர் ஜேக்கப் இறந்து விட்டதாக எனக்கு செய்தி வந்தது.உடனே நான் பாயல் கிட்ட சொல்லிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியலை.கடந்த வாரத்தில் சிபிஐ ஆபிசருங்கள் இரண்டு பேர் என்னை பார்க்க ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

அத்தனை அப்பாவி உயிர்களை அநியாயமாக எடுத்து விட்டு ஊருக்குள் நல்லவனாக சுத்திட்டு இருக்கானே என்று அமர்நாத்தின் மேல் அவ்வளவு கோபம் வந்தது.

நமது குற்றம் வெளியே வந்துவிட்டதே, இதுவரைக்கும் எந்த சாட்சியும் இல்லை என்று இதைப் பற்றி மறந்து போய் நிம்மதியாக இருந்தேனே,இப்படி இருவரும் வந்து நமது அரசியல் வாழ்க்கைக்கு மொத்தமாக சமாதி கட்டி விட்டனரே என்று இருவரையும் கொலை வெறியில் அமர்நாத் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி நீங்க போங்க என்று ஃபாதரை போக சொல்லவும் தேங்க்யூ சார் என்றவாறு அவர் வந்து உட்கார்ந்து கொள்ள வழக்கை விசாரித்த ஆபிசர் யார் என்று கேட்க செழியன் வெற்றி கபிலன் மூவரும் கூண்டிற்குள் ஏறினார்கள்.

மூவரையும் பார்த்தவர் சொல்லுங்க ஆபிசர்ஸ்.உங்களுக்கு எப்படி இந்த கேஸ் பற்றி புகார் வந்தது?

பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக சிபிஐக்கு இந்த கேசை பற்றி விசாரிக்க சொல்லி உத்தரவு வந்தது. எங்களுடைய தலைமை அதிகாரி தான் இந்த கேஸை எங்கள் மூவரிடம் ஒப்படைத்தார்கள் என்றனர்.

ஓகே புகார் கொடுத்தது யார்?

கூண்டை விட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாயல் நான் தான் சார் என்கவும் அப்படியா என்றவர் மீதி நடந்த விஷயம் உங்களுக்கு தான் தெரியும்.ஹம் என்ன நடந்தது சொல்லுங்கள் என்றார்.

எஸ் சார் என்றவர் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த வசந்தரா சுந்தரபாண்டியன் எனக்கு நெருங்கிய சிநேகிதி.அவருடைய சொந்த ஊர் கேரளா என்பதும் அவங்க அப்பாவும் முன்னால் கமிஷனர் என்பதும், அவர்கள் வீட்டிற்கு நான் போயிருக்கிறேன் என்பதும் அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது.

பிறகு தோழியின் தந்தையிடம் உதவி கேட்கலாமென்று நானே கேரளாவுக்கு அவர்களை தேடி போக,எல்லாரையும் போல் அங்கிள் ஆன்ட்டியும் எங்கள் குடும்பம் அந்த விபத்தில் இறந்து போயிட்டதாக நினைச்சுட்டு இருந்தவர்கள்,என்னை பார்த்து அதிர்ந்து போயிட்டாங்க.

அவங்க கிட்ட நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி நான் அழும் போதுதான் வசுந்தரா தற்பொழுது கோவை மாவட்டத்தில் கலெக்டராக இருக்கிற விஷயத்தை சொன்னவர்கள் வசு மூலமா இந்த கேசை பற்றி கம்ப்ளைண்ட் கொடுக்கலானு அங்கிள் சொன்னாங்க.

சரி என்று நாங்கள் மூவரும் வசுந்தராவை பார்க்க வந்தோம்.20 வருஷத்துக்கு பிறகு உயிரோடு இருக்கிற என்னை பார்த்து வசுவும் அதிர்ந்து போனாள். பிறகு வசுவின் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு நேர்ல போய் புகார் கொடுத்தோம்.

எந்த ஆதாரமும் இல்லாமல் அமர்நாத்தை விசாரிக்க பர்மிஷன் தர முடியாதுன்னு பிரதமரும் சொல்லிட்டாரு.

என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசிக்கும் போது தான் வசுவோட பையன் வெற்றியும் அவரது நண்பர்களான இன்னும் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

வசுவின் முகத்தை வைத்து எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்ட வெற்றி என்னம்மா பிரச்சினை என்க சுருக்கமாக விஷயத்தை சொன்னோம்.

சரி நாங்கள் பார்த்துக்குறோம் என்றார்கள்.இப்படியே 3 மாதம் கடந்திருக்க,அந்த நேரத்தில் தான் அமர்நாத் பையனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடந்துச்சு.

பிரபலமான ஹோட்டல்ல வரவேற்பு பங்க்ஷன் வைத்திருக்க வாட்ச்மெனை தவிர வீட்ல யாருமே இல்லை என்பது தெரிந்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு,வாட்ச்மென் கிட்ட போய் தோட்டத்தில் இருக்கும் மூலிகை செடிகளில் எங்கள் அப்பாவுடைய வைத்தியத்திற்கு கொஞ்சம் தேவைப்படுதுனு
அவனை நம்ப வைத்து விட்டு நான் வெற்றி செழியன் மூவரும் அங்க போய் ஒவ்வொரு மரமாக தோண்டிக் கொண்டே வர,நேரம் கடந்ததே தவிர கேமரா கிடைக்கவில்லை.

இன்னும் இரண்டு மரம் தான் மீதமிருக்க அதில் போய் தேடும் போது தான் ஒரு மரத்தின் கீழே கவர் இருப்பதை கண்டு பிடித்தோம்.

அதை பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சு.பாலித்தின் கவருக்குள் இருந்ததால் கேமராவிற்கு எதுவும் ஆகலை.

கேமராவை எடுத்து ஆன் பண்ணி பார்த்தோம் ஆன் ஆகலை.20 வருஷமாக மண்ணுக்குள் இருந்ததாச்சே...பிறகு ஒரு வழியா அதை எடுத்து போய் நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து இதை சரி பண்ணி தரச் சொல்லி கேட்டோம்.

ஒரு வாரத்தில் ரெடியானதாக வீட்டு நம்பருக்கு கால் வந்தது.அதை ஆன் பண்ணி வீடியோவை நாங்கள் பார்த்து விட்டு பிரதமர் கிட்ட எடுத்துட்டு போய் காட்டினோம்.

பிறகு தான் அவர் சிபிஐ கிட்ட என்னுடைய புகாரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டார் என்று தனக்கு தெரிந்ததை எல்லாம் பாயல் சொல்லி முடிக்க,இனி நாம தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பது அமர்நாத்திற்கு புரிந்து விட்டது.

ஓகே நீங்க போங்க என்றவர் அங்கிருக்கும் மூன்று அதிகாரிகளையும் பார்த்து சொல்லுங்க இன்வெஸ்டிகேஷன் எங்கிருந்து ஆரம்பித்தீர்கள்?

கேஸ் எங்க கிட்ட வந்ததும் நாங்க முதல்ல அந்த வீடியோவில் இருக்கும் மற்ற ஆட்களை தான் தேடி போனோம். அவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு அழைச்சுட்டு வந்து ஒரு இடத்துல வச்சு அவங்க வாயிலிருந்து உண்மையை வரவைக்கிறதுக்கே எங்களுக்கு ஒன்றரை வருஷத்துக்கு மேல தேவைப்பட்டது.

பிறகுதான் அரெஸ்ட் வாரண்ட்டு பர்மிஷன் கொடுத்தார்கள் என்றவர்கள் அவர்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்படைத்தார்கள்.

முதலில் மற்ற குற்றவாளிகளுடைய வாக்குமூலங்கள் பதிவாகிய வீடியோவை பார்த்த ஜட்ஜ்,அடுத்ததாக இருந்த வீடியோ கேமராவை ஆன் பண்ணி வீடியோவை பார்க்க அதில் வம்சீகனையம் அவர் மனைவியும் அடியாட்கள் பிடித்துக் கொள்ள தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்த அமர்நாத் இருவரின் உயிர் போகும் வரை குத்தினான்.

அப்போது கதவைத் திறந்து வெளியே வந்து இளம் வயது பாயலோ இதை பார்த்து அதிர்ந்து கத்தியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன் இவள் மூலமாக விஷயம் வெளியில சென்றால் நம்ப எல்லாருக்கும் தூக்குதான் என்றவன் ஆளு சோக்கா இருக்கிறாள்.

இனிமே இவள் தான் நமக்கு விருந்து என்றவாறு குத்திய கத்தியை கீழே போட்டவன் எட்டி பாயலை பிடித்து இழுத்து அவள் வாயை பொத்தினான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
457
திருச்சி:

ஒருவித தடுமாற்றத்தோடு அருண் கால் பண்ண,கடைசி ரிங்கிள் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணிய ருத்ரன் ஹலோ என்க...ஹலோ நான் திருச்சியிலிருந்து அருண் பேசுகிறேன்.

"ஜூலியோட தம்பி"

இதைக் கேட்ட ருத்ரன் அப்படியா என்று அதிர்ந்தவன்,எப்படி இருக்கீங்க மாப்பி? வொய்ப் கன்சீவாக இருக்காங்கனு கேள்வி பட்டேன்..

மாமா என்று தயக்கமாக அருண் கூப்பிட,சில் மாப்பி... உங்கக்காவை ஸ்கேன் பண்ண ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு வந்திருக்கேன்.ப்ரி ஆகிட்டு பேசட்டுமா?

அச்சோ மாமா..!!

அக்காக்கு என்னாச்சு என்று அருண் பதற, ஒன்னும் இல்லை.உங்கக்காக்கு செவன் மந்த் ஸ்கேன் எடுக்க தான் வந்திருக்கிறேன்.. ஓஓஓ...நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் அட்ரஸ் சொல்லுங்க மாமா..

ஓகே மாப்பி என்றவாறு அழைப்பை துண்டித்தவன் அருண் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் அட்ரஸை அனுப்பினான்.

சரி நான் டெல்லிக்கு கிளம்புறேன் நேர்ல போய் ஜூலிய பார்த்துட்டு அப்படியே நான் சென்னைக்கு போயிடுவேன்.வேற ஏதாச்சும் நீங்க ரெண்டு பேரும் சொல்றதுக்கு இருக்கா என்று பெற்றோர்களை பார்த்தான்.

நாங்களும் வரோம் என்று மானசா சொல்லவும், ஏன் மானசா மாசமா இருக்குற பொண்ணுக்கு தேவை இல்லாமல் போய் டென்ஷன் படுத்தாத..

என்றைக்கு இருந்தாலும் அப்பா அம்மானு நம்ப பொண்ணு நம்மள தேடி வரும்.அதுவரைக்கும் நீ அமைதியா இருக்கிறது தான் நல்லது என்று மகி கோவமாக சொல்லவும்,அது எப்படிங்க?

அவ சின்னவள் அவளுக்கு ஊர் உலகம் பற்றி தெரியாது.பெத்த மகளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போட எனக்கு ஆசை இருக்காதா?? அதெல்லாம் முடியாது நானும் தான் வருவேன்.

பெத்தவ நான் இருக்கும்போது அவ என்னவென்றால் மூச்சிக்கு 300 முறை அந்த எஸ்தரை போய் அம்மா அம்மான்னு கூப்பிடுறாள்.

இதெல்லாம் காதுல வாங்கிட்டு நான் எப்படி அமைதியா விட முடியும் சொல்லுங்க??

புருஷனை தான் பங்கு போட்டா பிள்ளையும் அவ கூட பங்கு போட முடியாது.நம்ப மேல உள்ள கோவத்தில் புள்ளைக்கு எதையாவது கலந்து கொடுத்துவிட்டால் என்ன ஆவது?

மானசாஆஆஆ என்று ஓங்கி அறைந்த மகி ஒழுங்கு மரியாதையா வாலை சுருட்டிக்கிட்டு இந்த வீட்ல இருந்தா இரு இல்லைனா கை கால் ஒடச்சி ஆஸ்பத்திரில தள்ளிடுவேன்.

ராஸ்கல்..என்ன விட்டா உன் இஷ்டத்துக்கு நீ பேசிக்கிட்டே இருக்குற?

அந்த வேலையை நீ செய்தாலும் செய்வியே தவிர ஒரு காலமும் எஸ்தர் பண்ண மாட்டாள்.நானும் மேல கை வைக்க கூடாது கை வைக்க கூடாதுன்னு பாத்துட்டு இருக்கேன்,தொலைத்து கட்டிடுவேன்.

அருணை பார்த்தவர் சரிப்பா நீ போய் உன் அக்கா மாமாவை பார்த்துட்டு வா எஸ்தர் அங்குதான் இருக்கிறாள் என்கவும்,அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தனது ரூமிற்குள் போனவன் சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் அவர்களிடம் சொல்லிக்க கூட இஷ்டம் இல்லாமல் வெளியே போக அவன் புக் பண்ணி இருந்த டாக்ஸி வந்தது.அதில் ஏறி ஏர்போர்ட்டுக்கு போனான்.

அவனுக்கான பிளைட் மதியம் 12 மணிக்கு என்பதால் ஏர்போர்ட்டிலே காத்திருந்தவனுக்கு இவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது அவன் மனைவி ஷீலாவிடமிருந்து அழைப்பு வர அட்டென்ட் பண்ணியவனிடம் நல்லபடியா போயிட்டீங்களா?

ஹம் டா.. ஒரு முக்கியமான விஷயமா டெல்லி வரைக்கும் போறேன் டி.அதைக் கேட்டவள் என்னாச்சுங்க?ஏதாச்சு பிரச்சனையா என்று அந்த பக்கம் ஷீலா அதிர,ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லை டி.

ஒரு சந்தோஷமான விஷயமாக தான் போறேன் நேர்ல வந்து சொல்றேன் என்று ஃபோனை வைக்கவும் அவன் செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்தது.

வானில் பறந்து வந்த விமானமோ டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியது.அங்கிருந்து வெளியே வந்தவன் பிருந்தாவனம் வில்லாவிற்கு போகணும் என்று டாக்ஸி டிரைவரிடம் சொல்ல,வாங்க சார் என்று காரை ஓட்டலானான்.

டெல்லி கோர்ட்:

டேய் இவளை நான் பார்த்துக்குறேன்.. சீக்கிரம் போய் சிலிண்டரை ஆன் பண்ணுங்க டா.அப்போது தான் சிலிண்டர் வெடிச்சு இறந்து போனதாக இருக்கும் என்க,அய்யோ அண்ணாஆஆ
இது பெரிய காம்ப்ளக்ஸ்.

எப்படியும் ஐநூறு வீடுகளுக்கு மேல் இருக்கும் போல,எதற்காக அவங்க உயிரையும் எடுக்கணும் என்று ஒருத்தன் பாவமாக கேட்க,அடேய் அறிவுகெட்டவனே..

நாம தான் கொலை பண்ணினோம் என்பது யார் மூலமாக தெரிஞ்சால் அத்தனை பேரும் உள்ள போய் களி திங்கணும் டா.

நாம கைய வச்ச ஆள் ஒன்னும் சாதாரணமான ஆளில்லை. இந்த டெல்லி சிட்டியோட கமிஷனர்.கையில சிக்கினோம் நம்பள தூக்கில் தொங்க விட்டுருவானுங்க.

நாம நல்லா இருக்கணும்னு நாலு பேர் சாகிறது தப்பே இல்ல சீக்கிரம் வாங்கடா என்று பாயலோடு வெளியே போனவன் ஒரு முறை அந்த வீட்டை சுற்றி பார்க்கும் போது தான் கேமராவை கண்டுபிடித்தவன் டேய் அந்த சாமி செல்பில் கேமரா ஆன்ல இருக்கு சீக்கிரம் எடுங்கடா என்றான்.

அதேபோல் ஒருத்தன் எடுக்க,நாம் வருவோம்னு முன்னரே இவனுக்கு தெரிஞ்சிருக்கு போல என்றவாறு இறந்து கிடக்கும் வம்சீகன் அவர் மனைவி ஷீத்தலையும் விதவிதமாக வீடியோ எடுத்து சிரிக்க இன்னோருத்தன் சிலிண்டர் கழட்டிவிட்டது வரை எல்லாம் பதிவாகியிருந்தது.

அதை பார்த்து விட்டு நிமிர்ந்த ஜட்ஜ் அமர்நாத்தை ஒரு பார்வை பார்த்தவர் வழக்கின் தீர்ப்பை நாளைக்கு அறிவிக்கிறேன் என்று அங்கிருந்து எழுந்து செல்ல,கையறு நிலையில் இருந்த அமர்நாத் இவர்களை கொலை வெறியில் பார்த்துக் கொண்டே போலீஸ் பாதுகாப்போடு ஜெயிலுக்கு சென்றான்.

இதுவரை எந்த பத்திரிகையாளர்களையும் கோர்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. எதற்காக அமர்நாத்தை அரஸ்ட் பண்ணிருக்கிறார்கள் என்ன கேஸ் என்பது புரியாமல் வெளியே காத்துக் கொண்டிருக்க..

அவர்கள் வெளியே வருவதை தெரிந்து வேகமாக போனவர்கள் சார் எதற்காக மினிஷ்டரை அரெஸ்ட் பண்ணியது என்று சொல்ல முடியுமா இதுவரைக்கும் எதுவும் தெரியவில்லையே என்க, கண்டிப்பாக..

இந்த உலகத்துல இருக்கிற எல்லாருக்குமே இது அவசியமா தெரிந்து கொள்ள வேண்டிய கேஸ் தான் என்ற வெற்றி அதைப் பற்றி இவர் சொல்வாரென்று செழியனை காட்டினான்.

செழியன் சொல்ல கேட்ட பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அவர்களும் துருவி துருவி கேள்வி கேட்க அனைத்திற்கும் கோவப்படாமல் நிதானமாக பதில் சொல்லியவன் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது நாளைக்கு வாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் சென்றான்.

ருத்ரன் வீடு:

காலிங் பெல் சத்தம் கேட்டு எஸ்தர் போய் கதவை திறக்க அங்கே பாயலும் தன்ராஜும் நின்றனர்.

என்னாச்சு பாயல்?

அவனுக்கு தண்டனை குடுத்தாச்சா?

நாளைக்கு தான் எஸ்தர்...

அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போன அத்தனை உயிரும் திரும்ப வந்துவிடுமா என்ற பாயலுக்கு அழுகை வர,காலிங் பெல் சத்தம் கேட்டு யார் என்று பார்க்க பாதர் அகஸ்டின் தான் அங்கே நின்று கொண்டிருந்தார்.

வாங்க பாதர் என்று மரியாதை நிமித்தமாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்க,ஸ்தோத்திரம் என்றவாறு உள்ளே வந்தவர் ஜூலியையும் தீபனையும் பார்த்துட்டு போகலாம் தான் வந்தேன் என்றார்.

ஜூலிக்கு ஏதாவது மாச ஸ்கேன் எடுக்கறதுக்காக போயிருக்காங்க வந்து கொண்டுதான் இருப்பாங்க இதோ டீ எடுத்து வரேனென்று சிறிது நிமிடத்தில் டீயோடு வர,இப்ப இருக்கும் நிலைமைக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை என்றனர்.

கொஞ்சமாக என்று எஸ்தரும் வற்புறுத்த வேறு வழியின்றி மூவரும் எடுத்துக் குடித்து விட்டு பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது ஜூலியோடு ருத்ரனும் வீட்டுக்கு வர பத்து வயது சிறுமியாக பார்த்தவளோ இன்று 27 வயது பெண்ணாக இருப்பதை பார்த்த அகஸ்டின் ஆச்சர்யப்பட்டார்.

அங்கிள் என்றவாறு வேகமாக வந்தவள் சோபாவில் உட்கார்ந்திருந்த அகஸ்டினின் கையை பிடித்துக்கொண்டு கத்தி கதற,ஆண்டவரின் சித்தமின்றி எந்த அணுவும் அசையாது ஜூலி.

அழகான குடும்ப வாழ்கை கிடைத்திருக்கிறது.கடந்ததை மறந்து விட்டு இருக்கும் நாட்களை சந்தோமாக கடந்து போ...

தீபன் எங்கே என்கும் போது ரூபாவோடு உள்ளே வந்தவனும் அகஸ்டினை பார்த்து அதிர்ந்தவன் அங்கிள் என்றவாறு கலங்கினான்.

வா தீபன் என்று கையை நீட்ட மனைவியோடு அவரின் முன்பு மண்டியிட தூரத்திலிருந்து வரும் செய்தி விடாய்த்த ஆத்துமாவிற்கு குளிர்ந்த நீரோடை போல,இன்னும் சில நாளில் உங்கள் வாழ்க்கையில் இரட்டிப்பு சந்தோஷம் வரப்போகின்றது..

காட் பிளஸ் யூ மை சைல்ட் என்றவாறு நால்வரின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணியவர் எனக்கு எதாவது ஆகிவிட்டால் என் பிள்ளைகள் நீங்கள் வரணும்.

எனது ஆத்மா ஆண்டவரிடத்தில் அமைதியாக இளைப்பாறும் என்றவரின் கைகளை பிடித்த பாயல் ஊர் உலகத்திற்கு நீங்கள் பாதராக இருந்தாலும் எனக்கு கூடப் பிறந்த அண்ணன் தான்.

நீங்கள் மட்டும் அந்த நேரத்தில் வரவில்லை என்றால் அன்றைக்கே அந்த பாவிங்களால் என்று அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் பாயல் கதறி அழுதார்.

நடந்ததையெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டு சீக்கிரம் நல்ல செய்தியை சொல்லுமா என்க,அழுது கொண்டிருந்த பாயல் அய்யோஓஓ அண்ணா இந்த வயதில் எனக்கு குழந்தையா என்று அதிர்ச்சியும் வெட்கமும் கலந்து கேட்க...

உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றது.. இது ஒன்றும் பெரிதில்லை.50 வயதில் ஆரோக்கியமான குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் நம்ப நாட்டில் இருக்கிறார்கள்.

அடுத்த முறை நீ பேசும் போது அந்த நல்ல விஷயத்தை எனக்கு சொல்லணும் என்றவர்
மேலும் சிறிது நேரம் அவர்களோடு இருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு இது யாரு என்றவாறு கதவை திறக்க அங்கே மகியின் இளம் வயது ஜாடையில் நிற்பவன் தனது மச்சான் என்பதை கண்டுபிடித்து ஹலோ மாப்பி என்க...அவன் தான் ருத்ரன் என்பதை தெரிந்து கொண்டவன் ஹலோ மாமா என்றான்.

உள்ளே வா என்க,மற்றவர்கள் யாரென்று வாசலை பார்க்க, தன்னை எப்படி எதிர்கொள்வார்களோ என்று தயங்கியபடி வீட்டுக்குள் வந்தவனுக்கு ஜூலி ரூபா இருவரும் நிற்க அவர்களில் தன்னுடைய அக்கா ஜீலி என்பதை மானசாவின் முகஜாடையை வைத்து கண்டு கொண்டான்.

அவனின் முகத்தோட்டத்தை பார்த்த உடனே ஜூலிக்கு உள்ளுக்குள் திடுக்கிட்டு போக அதிர்ச்சியோடு தனது கணவனை பார்க்க,ருத்தரனோ கண்ணை மூடி திறந்தான்.

அத்தை என்று கிச்சனுக்குள்ள இருக்கும் எஸ்தருக்கு குரல் கொடுக்க வரேன் பா என்று ஹாலுக்கு வந்தவருக்கு அங்கே மகியின் சாயலில் இருப்பவனை பார்த்தவுடனே,அவன் யார் என்பதை புரிந்து கொண்டார்..

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top