• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
459
டெல்லி:

எதிரே உள்ள கூண்டில் நின்று கொண்டிருந்த அமர்நாத் அய்யோ சார் இவங்க யாருன்னு தெரியலை.எதற்காக என் மேல இப்படி ஒரு பொய்யான வழக்கை போடுறாங்களோ??அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

நான் ஒரு மினிஸ்டர் என் மேலே இப்படி அபாண்டமாக பழி போடுகிறார்களே,அப்போ அப்பாவி மக்களை என்னென்ன பண்ணுவார்கள் என்று நாடகமாடினான்.

அவன் பேசியதை கேட்ட ஜட்ஜ் அமைதி அமைதி,உங்கள் தரப்பை விசாரிக்கும் போது அப்பொழுது நீங்க சொல்லுங்கள் இப்பொழுது உமாவை விசாரிக்கும்படி அனுமதி தந்தார்.

தேங்க்யூ மை லார்ட், ஹம் சொல்லுங்க மிசஸ் பாயல் உங்களுக்கும் இந்த கேஸிற்கும் என்ன சம்பந்தம்?

எதை வைத்து இது திட்டமிட்ட சதி என்று பிரதமருக்கு லெட்டர் போட்டுருக்கீங்க என்க,அழுது கொண்டிருந்த பாயல் தனது கண்ணீரை கூட துடைக்காமல் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவர் 20 வருடங்களுக்கு முன்பு தீ விபத்தில் இறந்து போனாரே கமிஷனர் வம்சிகன்,அவருடைய கசின் நான் என்கவும் அதைக் கேட்ட அமர்நாத் இருக்கும் இடத்தை மறந்தவன்,இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா என்றவனோ அவள் யாரென்று தெரிந்து கொண்டு அதிர்வதை எல்லாருமே பார்த்தனர்.

மிஸஸ் பாயல் நீங்க சொல்ற விஷயம் சாதாரணமானது கிடையாது.அன்று நடந்த தீ விபத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் உடல் கருகி இறந்துவிட்டதாக ரிப்போர்ட் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி உயிரோடு இருந்தீங்க?

அடுத்து நீங்கள் தான் முன்னால் கமிஷனர் வம்சீகனின் கசின் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என்று அமர்நாத்தின் வக்கீல் கேட்க,எஸ் மை லார்ட் என்ற உமாமகேஸ்வரி தான் எடுத்து வந்த பைலை கொண்டு போய் ரைட்டரிடம் கொடுக்க அவரும் அதை வாங்கி ஜட்ஜிடம் கொடுத்தார்.

அந்த வீடியோவை கோர்ட்டில் பிளே பண்ண,முதலாவதாக இருந்த போட்டோவை காட்டியவர் 1992 ஆம் வருடம் பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாட்டின் விவசாய துறை அமைச்சராக இருந்த சாந்தப்பனின் மகன் குடி போதையில் கார் ஓட்டி போய், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை கொன்றதையும் எந்த அச்சுறுதலுக்கும் பயப்படாமல் முன்னால் வக்கீலாக இருந்த வேதாச்சலம் அவர்கள் வாதாடி வெற்றி பெற்றதற்கு அன்றைய முதல்வராக இருந்த கனியன் அவர்கள் வேதாச்சலத்தையும் அவரது ஜூனியரையும் முதல்வர் அலுவலகத்தில் வர வைத்து பாராட்டிய புகைப்படம்.

அதில் வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக இருக்கும் பெண் தான் இந்த பாயல் அப்பொழுது பிரபலமாக இருந்த வேதாச்சலம் அவரிடம் இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் வக்கீலாக இருந்திருக்கிறார்.

அடுத்த புகைப்படத்தை காட்டியவர் இது டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் பாயலுக்கு கொடுத்த பர்த் சர்டிபிகேட்.இது சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் தனது இளநிலை படிப்பை முடித்த பாயல் கோல்டு மெடல் வாங்கியதற்காக பட்டமளிப்பு விழாவின் போது கவர்னர் அவர்கள் கையால் பாராட்டு மடலை வாங்கிய புகைப்படம்.

இன்னும் பல விதமான போட்டோக்களை காட்டி அது எப்பொழுது எடுத்தது என்று சொல்லும் உமா மகேஸ்வரியை பார்த்த அமர்நாத்தின் வக்கீல் அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.இப்பொழுது இருக்கும் நிலவரப்படி யார் யார் கூட வேணாலும் போட்டோவை ஒன்றாக இருந்தது போல் தயாரிக்க முடியும்.டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்து விட்டது.

எனது கட்சிக்காரர் மேல் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படி வீண் பழியை சுமத்துகிறார்கள்.அதற்காக அவரோடு சேர்ந்து எதிர்க்கட்சி வக்கிலும் பிரமாதமாக கதையை ஜோடித்துக் கொண்டிருக்கிறார் என்று சிரிக்க...

சைலண்ட் என்று கோவமான ஜட்ஜ் மிஸ்டர் பரசுராம் இவர்கள் கொடுத்த சில போட்டோக்களை இப்போதைய முதல்வர் சக்திவேல் அவர்கள் அனுமதியோடு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாங்கியிருப்பதற்கான ஆதாரம் இதில் உள்ளது என்க சாரி மை லார்ட் என்று உட்கார்ந்து கொண்டான்.

உமா மகேஸ்வரி இந்த போட்டோவில் இருக்கும் மிஸ்டர் வேதாச்சலம் உங்களுடைய தந்தை தானே என்று ஜட்ஜ் கேட்க எஸ் அவர் ஆனர்.

அவரின் இரண்டாவது மகள் உமாமகேஸ்வரி சுரேந்திர குமார் நான் தான்.அப்போ பாயலை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்க..

எனது தந்தை பிரபலமான வக்கீலாக இருந்தாலும் அவரிடம் நான் ஜூனியர் ஆக சேரவில்லை.சென்னையில் இருக்கும் ரிட்டையர்டு நீதிபதி தீனதயாளனிடம் தான் ஜூனியராக சேர்ந்து இருந்தேன்.

இரண்டொரு முறை கோர்ட்டுக்கு வரும்போது எனது தந்தையோடு பாயலை பார்த்திருக்கிறேன்.

ஆனால் நான் பேசியது இல்லை.

எனது தந்தையோ 2005 வருடம் ஜனவரி 20 ஆம் தேதி டெல்லியில் சாந்தி சௌவுக் என்ற இடத்தில் நடந்த தீ விபத்தில் அவரது ஜூனியர் பாயலும் அவரது குடும்பமும் இறந்து விட்டதாக சொல்ல அதைக் கேட்டு நான் வருத்தப்பட்டேன்.

பிறகு பாயல் உயிரோடு இருக்கும் விஷயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியுமென்றார்.

ஓஓஓ என்று தலையசைத்தவர் கண்டினியூ என்க...

மை லார்ட் இன்னொரு முக்கியமான சாட்சியையும் கூண்டுக்குள் வர வைக்கிறேன்.அவரும் இந்த கேஸிற்கு முக்கியமானவர்...ஹம் பர்மிஷன் கிராண்டட் என்றார்.

அங்கிருந்த கூட்டத்தினரில் ஒருவரை பார்த்து உமா தலையசைக்க,பாதர் உடையில் 55 வயது தக்க ஒருவர் வருபவரை பார்த்து யார் இவர் என்று அங்கே சலசலப்பு எழுந்தது.

கூட்டிற்குள் வந்து நிற்கும் பாதரை பார்த்தவன் இவர் யார் என்று அமர்நாத் யோசனையானான்.ஜட்ஜை பார்த்து ப்ரைஸ் த லார்ட் என்றார் பாதர்.

கண்டினியூ மிஸ்சஸ் உமா என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் இங்கே கூண்டில் இருக்கும் பாதர் அகஸ்டினிற்கும் எதிர் கூண்டில் இருக்கும் அமர்நாத் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒரு காலத்தில் இருந்தது என்பதை இருவராலும் மறுக்க முடியாது என்க..

ஜட்ஜ் அய்யா அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த பாதரை இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்நாத் கத்த அமைதி அமைதி என்று ஜட்ஜ் சொல்ல வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டான்.

பாதர் அகஸ்டின் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்கவும் ஜீசஸ் என்றவர் என்னுடைய ஹிந்து பெயர் சத்துரு என்க, இதைக் கேட்ட அமர்நாத் நீயாஆஆஆஆஆ அப்போ நீயும் உயிரோடதான் இருக்கிறியாடா என்று மீண்டும் அவன் அதிர்வதை ஜட்ஜோடு மற்றவர்களும் பார்த்தனர்.

சரி நடந்ததை நீங்கள் சொல்லுங்கள். கண்டிப்பாக என்றவர் 20 வருடங்களுக்கு முன்பு நடந்ததை சொல்லத் தொடங்கினார். .

இருபது வருடங்களுக்கு முன்ப-டெல்லி:

இந்த வாட்டி வந்த கமிஷனர் ரொம்ப ஓவரா தான் பண்றான்.அவனுக்கு ஒரு பாடம் பண்ணா தான் சரியா வரும் என்று அங்கிருந்த அடியாள்கள் கூட்டத்தின் தலைவன் சொல்ல, ஆமா அண்ணா எனக்கு அந்த சான்ஸ் கொடு ணா என்றான் அவனிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத்.

கண்டிப்பா உனக்கு தான் கொடுப்பேன் நீ கவலையே படாதே என்றவன் சரி இப்பொழுது நமது சரக்கு வரும் அதை போய் எடுத்துட்டு வாங்க என்று சொல்லவும் தலைவனின் உத்தரவை கேட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றனர்.


வம்சிகன் டெல்லிக்கு வந்து இரண்டு வருடங்களில் பெரும் அளவுக்கு குற்றங்களும் குறைந்து இருக்க இவர்களுக்கு நான் பெரும் திண்டாட்டமாக இருந்தது.

ஏதாவது ஒரு பொய் வழக்கில் வம்சிகனை மாட்டி விட வேண்டும் என்று இவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது பிரபலமான வைர வியாபாரியை கொல்வதற்கான ஒரு அசைன்மென்ட் இவர்களை தேடி வந்தது.

பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள அதேபோல் பிசினஸ் மீட்டிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும் போது ஆள் இல்லாத இடத்தில் அவரை வெட்டி கொலை செய்ய இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.பவன் குமாரின் தலமையில் கொலை நடந்திருப்பதை கண்டுபிடித்த வம்சிகனின் குழு ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு பண்ணியது.

அவன் கோர்ட்டுக்கு போகக்கூடாது.
இந்த கேசை யார் வெற்றிகரமாக முடித்துவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய பரிசை தருவேன் என்று சொல்லவும், கோடிக்கணக்கு சொத்துக்கு பவன்குமார் முதலாளியாக இருக்க தானும் அதைப்போல் முதலாளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அமர்நாத் நான் போறேன் என்றான்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போவதை பற்றி சந்துருக்கு தெரியாது.ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனது தங்கை தற்கொலை பண்ணிக் கொண்டதால் மனம் உடைந்து போனவன் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

நாட்கள் சென்று அவனாக வருவான் என்று பவன்குமார் சொல்லிவிட மற்றவர்களும் சந்துருவை போய் தொந்தரவு பண்ணவில்லை.

ஏதோ ஒரு எண்ணத்தில் வீட்டில் படுத்து இருந்த சந்துரு தங்கையின் அறைக்கு போனவன் அவள் தற்கொலை பண்ணுவதற்கு ஏதாச்சும் காரணம் இருக்குமா என்று அவள் ரூமில் இருக்கும் பொருட்களை தேடும்போது அதில் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த சில கிரீட்டிங் கார்டு கிடைத்தது.

அதைப் பார்த்தவன் ஏதாவது காதல் விவகாரமாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதை எடுத்து திறந்து பார்க்க அதில் அன்பு காதலிக்கு உன்னுடைய உயரி என்ற பெயர் இருக்க, யார் இது என யோசனையானான்

ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போது அதில் நான்காக மதிக்கப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.

கைகள் நடுங்க அதை எடுத்து பிரித்து படிக்கலானான்..

அன்புள்ள அண்ணா அம்மா என்னை மன்னித்து விடுங்கள் காதல் என்ற பெயரில் மோசமான ஒருவன் கூறுவதை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன்.தற்போது இரண்டு மாத குழந்தை எனது வயிற்றில் வளர என்னை அவன் பொழுதுபோக்கிற்கு பழகினதாக சொல்லியது இல்லாமல் பணத்தை கொடுத்து அதை அழிக்க சொன்னதோடு இன்னும் சில கேவலமான வார்த்தைகளை சொன்னதால் மனம் உடைந்து போய் விட்டேன்.இதற்கு மேல் உயிரோடு இருந்து எந்த பலனும் இல்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு நான் போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள்.

அந்த அயோக்கியன் வேறு யாரும் இல்லை ணா.உன்னுடைய நண்பன் அமர்நாத் தான் அந்த துரோகி என்று எழுதியிருந்தது...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
459
அடப்பாவி நீ தான் என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்தியாடா என்று தனது தலையில் அடித்துக் கொண்டு அழுத சந்துரு,அமர்நாத்திடம் ஏண்டா இப்படி பண்ணுன என்று கேட்பதற்காக அவன் இருக்கும் வீட்டை தேடி வந்தான்.

அரை மணி நேரத்தில் வந்தவனுக்கு வீடு பூட்டி இருப்பது தெரிந்தது.இங்கு இல்லை என்றால் அப்போ அவன் அங்கு தான் இருப்பான் என்பதை புரிந்து கொண்டு பவன்குமாரின் பங்களாவை நோக்கி சென்றான்.

வேகமாக வந்து சேர்ந்தவன் வண்டியை கூட நிறுத்தாமல் அப்படியே போட்டுவிட்டு டேய் அமர் அமர் என்று கத்திக் கொண்டு போக,அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த இரண்டு அடியாளுங்கள்,சந்துரு...வாடா வா..

எப்படி இருக்க என்று நலம் விசாரிக்க டேய் நான் குசலம் விசாரிக்க வரலடா அந்த துரோகி பய எங்கடா போயிருக்கிறான் என்கவும்,உனக்கு செய்தி தெரியாதா?

பவன் அண்ணனுக்கு அடுத்த இடம் அமருக்கு தான் கிடைக்கும் போல.அந்த கமிஷ்னரை பார்க்க சாந்தினி சௌவுக்குக்கு போயிருக்கிறார்.

பெரிய சம்பவம் இருக்கிறது டா. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் ஒரு சிட்டை புடிச்சுட்டு வந்து அந்த ரூம்ல அடைச்சு வச்சிருக்காருடா.பொண்ணு என்னா சோக்கா இருக்குது தெரியுமா என்கவும் அதைக் கேட்ட சந்துருக்கு ஆத்திரம் வர,அங்கிருந்த கட்டையை எடுத்தவன் நண்பர்கள் இருவரின் மண்டையிலே அடிக்க,அவர்களோ மயக்கம் போட்டு விழுந்தார்கள்.

பின்னர் கதவை திறந்து உள்ளே போனவன் நண்பர்கள் சொன்னபோல அந்த பொண்ணை எந்த அறையில் அடைத்திருக்கிறான் என்று ஒவ்வொரு ரூமாக தேடிக் கொண்டே வந்தான்.

கடைசியாக பவன் குமாரின் பெட்ரூம் மட்டும்தான் இருக்கவும்,ஒரு நொடி யோசித்தவன் பின்னர் வெளியே தாழ்ப்பாள் போட்டிருக்கும் கதவை திறந்து உள்ளே போக அங்கே கட்டிலின் மேல் கை கால் கட்டப்பட்டு ஒரு இளம் பெண் படுத்திருப்பதை கண்டான்.

கடவுளே என்றவாறு வேகமாக போய் அவள் கை கால் கட்டை அவிழ்த்து விட அவளோ பிளீஸ் அண்ணா என்னை காப்பாத்துங்க என்கவும்,சீக்கிரமாக வாம்மா என்று அவளை அழைதுக் கொண்டு வெளியே வந்தவன் தனது வண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு சாந்தினி சௌவுக் என்னும் இடத்திற்கு போனார்கள்...

இவர்கள் போவதற்குள் அங்க எல்லாமே நடந்து முடிந்திருந்தது... தனது குடும்பத்தினரோடு அந்த காம்ப்ளக்ஸில் இருந்த அத்தனை வீடுகளும் தரைமட்டமாகிருகாக அதில் இருந்த எல்லாரும் உடல் கருகி இறந்து போனதை பார்த்த பாயலோ கத்தி கதறி அழுவதை அங்கு மறைந்திருந்து கண்காணித்த அமர்நாத் பார்த்து விட்டான்.

இவள் எப்படி தப்பித்தாள் என்று வேகமாக வந்தவன் அவளின் கையை பிடித்து இழுத்துப் போய் ஜீப்பில் தள்ள, மற்றவர்களோ அங்கு நடந்த விபத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பதால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை.

அந்த கூட்டத்தில் அமர்நாத் எங்கே என்று சந்துரு தேடிக்கொண்டே வர ஜீப்பில் ஒரு பெண்ணை தள்ளுவதை பார்த்தவன் துரோகி பயலே இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க விட மாட்டான் இதோ வரேன் டா என்றவாறு அங்கு வர,அதற்குள் பாயலோ அவன் கையை நன்கு கடித்து விட்டு கூட்டத்தில் கலந்தாள்.

அவன் கையில் மாட்டாமல் இங்கிருந்து தப்பிக்கனுமென இடித்து பிடித்து போக அவளுக்கு எதிரில் சந்துரும் வந்ததால் இங்கு வாமா என்று முன்னேர அமர்நாத்தும் அவனோடு வந்திருந்த ஆட்களும் கூட்டத்தில் தேட,சுற்றி சுற்றி வந்தவனோ ஒருவழியாக அமர்நாத்தின் ஜீப் நிற்கும் இடத்த்திற்கு வந்தான்.

கடவுளே என்று பொறுமையாக அதில் ஏறி உட்கார்ந்தனர்.அவன் நேரமோ என்னவோ அதில் சாவி இருக்கவும் வண்டியை அங்கிருந்து ஸ்டார்ட் பண்ண சற்று தூரத்தில் இருந்து பார்த்த அமர்நாத்தோ அதிர்ந்து போய் கத்தினான்.

டேய் சீக்கிரம் காரை எடுங்கள் டா. அதற்குள் ஒருவன் காரை கொண்டு வர அதில் ஏறி அவர்களை விரட்டினார்கள்.

ஏமா நீ யாரு?

உன்னை எதுக்கு இவன் கடத்தி வைத்திருக்கிறான் என்று சந்துரு கேட்க,நான் தான் கமிஷனர் மனைவியியுடைய தங்கை என்கவும் அப்படியா..!!!

ஆமா ணா..

அக்கா மாமாவுக்கு இன்று கல்யாண நாள்.அவங்களுக்காக சின்ன சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணுறதுக்காக நான் சென்னையில் இருந்து இங்கு வந்திருந்தேன்.

பசங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல டூர் போயிருக்காங்க.சரி அவங்களுக்கு காட்டுவதற்காக வீடியோ ரெக்கார்டிங்கை ஆன் பண்ணி ஷெல்பில் வச்சிட்டு என் ரூமிற்கு போயிட்டேன்.

அந்த நேரத்தில் தான் அமர்நாத்தும் அவனோட ஆட்களும் வந்து மாமா கிட்ட ஏதோ ஒரு கேஸ் விஷயமா கேட்டு மிரட்டிருக்காங்க.அவர் கொடுக்க முடியாதுன்னு சொன்னதால எங்க அக்கா மாமாவை கத்தியால் குத்தி கொன்னுட்டான்.

நான் வெளியே வந்து பார்த்துட்டு கத்த உடனே என் வாயை பொத்திட்டான்.அவன் பண்ணிய கொலைக்கு எதாவது தடயம் இருக்குமானு செக் பண்ணும் போது தான் அங்கிருந்த வீடியோவை பார்த்துட்டான்.

யாருக்கும் சந்தேகம் வராமல் என்னை தூக்கிட்டு வந்து இங்கு அடைச்சுட்டான் என்று அழுது கொண்டே சொல்லும்போது சிறுவயது தீபனும் ஜூலியும் ஓடி வருவதை பார்த்த பாயல் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று கத்தினாள்.

பின்னர் குழந்தைகள் இருவரும் ஆண்ட்டி என்று பாயலை அணைத்துக் கொண்டு அழுதார்கள்.இப்போதைக்கு ஏதும் பேச வேண்டாம் வாங்க என்று குழந்தைகளையும் ஜூப்பில் ஏற்றிக்கொண்டு போக அதற்குள் சற்று தூரத்தில் இவர்கள் ஜீப் போவதை பின்னாடி வந்த அமர்நாத்தும் பார்த்துவிட்டு விரட்ட ஆரம்பிச்சான்.

எவ்வளவு வேகம் முடியுமோ அவ்வளவு வேகமாக ஜீப் ஒட்டிக்கொண்டே வர அது ஆள் இல்லாத ரோடு என்பதால் காரில் இருந்த துப்பாக்கி எடுத்த அமர்நாத், எங்கள் ஜீப்பின் பின் டயரில் சூட் பண்ணிட்டான்.

அந்த நேரம் வளைவும் வர ஆளுக்கொரு குழந்தைகளோடு இருவரும் வெளியே குதித்து விட,தறிகெட்டு ஓடியதோ பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்ததால் அதிலிருந்த நாங்கள் இருவரும் இறந்து விட்டதாக பின்னாடி காரில் வந்த அமர்நாத் நினைத்து விட்டான்.

கால் மணி நேரம் சென்று எனக்கு மயக்கம் தெளிஞ்சது,புல் மண்டியிருந்த புதரில் விழுந்ததால் அந்தளவுக்கு எனக்கு காயங்கள் பெரிதாக இல்லை.

பிறகு தான் பிள்ளைகளும் பாயல் நினைவு வர பதறியடித்து நான் எழுந்து பார்க்கும்போது குழந்தைகள் இருவரும் சற்று தூரத்தில் அடிபட்டு மயங்கி கிடந்தாங்க.ஓடிப்போய் அவங்களை தூக்கி பார்க்கும்போது உயிர் இருப்பது தெரிஞ்சி எனக்கு நிம்மதியானது....

வனிச்சூர்:

செழியன் பொண்டாட்டியை கூப்பிட்டு வந்திருக்க ஏதாவது நல்ல சங்கதியா இருக்கும் என்க,அதுக்குதான் காஞ்சனா உன் கிட்ட கூப்பிட்டு வந்துருக்கேன்.என்னன்னு கொஞ்சம் சோதிச்சு சொல்லு.

உங்க அண்ணன் வேற அங்க தைய தக்கானு குதிச்சிட்டு கிடக்கிறார். .

அப்படியா சங்கதி...சரி கொஞ்ச நேரம் இரு என்றவர் அங்கிருந்த பெல்லை அழுத்து சிறிது நொடியில் கதவை திறந்து கொண்டு ஒரு நர்ஸ் பெண்ணும் உள்ளே வந்தாள்.

பிரக்னன்சி டெஸ்ட் கிட் எடுத்துட்டு வாங்க என்று சொல்லவும்,ஓகே டாக்டர் என்றவாறு அங்கிருந்து போனவள் சிறிது நிமிடத்தில் எடுத்துட்டு வந்து கொடுக்க இந்தா மா.போய் டெஸ்ட் எடுத்துட்டு வா.

வெளியில போயிட்டு லெஃப்ட் சைடு திரும்பினால் அங்க ரெஸ்ட் ரூம் இருக்கு என்கவும்,ஓகே டாக்டர் என்ற ஷமீராவும் பாத்ரூமுக்கு போனவள் அதேபோல் டெஸ்ட் எடுக்க இரண்டு கோடு வரவும் அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இவளும் கதவைத் தட்டிட்டு உள்ளே வந்தவள் அவரிடம் கிட் டை காட்டவும் சூப்பர் சூப்பர் என்றவர் எத்தனை நாள் தள்ளி போயிருக்கிறது என்று கேட்டுக் கொண்டார்.

சரி மா மூன்றாவது புதன்கிழமையில் ஸ்கேன் எடுத்து பார்த்துடலாம் குழந்தையோட ஹார்ட் பீட் மற்றதும் எப்படி இருக்குன்னு அதில் தான் தெரியும் என்றவர் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லியவர், மாத்திரை எல்லாம் எதுவும் வேண்டாம்.

ஆசை பட்டதை சாப்பிடு...அப்படியே உன் புருஷன் காட்டுல விளைய வைக்கிற மிளகாயில் கொஞ்சம் காரத்தை கம்மியா மகசூல் பண்ணி எனக்கு தனியா கொடுக்க சொல்லு என்க..அதைக் கேட்டு ஷமீராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

பின்னர் அவரிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர்கள் எவ்வளவு பீஸ் என்று கேட்டு கொடுத்துவிட்டு வெளியே வர,கண்ணனும் அங்கு காரோடு தயாராக இருந்தான்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஏங்கத்தை இந்த டாக்டரை உங்களுக்கு தெரியுமா என்றாள்.. ம்ம் நல்லாவே தெரியும்.

எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் ரொம்ப சிநேகிதர்கள் நம்ம வீட்டுக்குலாம் வருவாங்க.நல்ல பழக்கம்.உங்க ஃபங்ஷனுக்கு வந்தாங்க அப்ப கூட்டத்துல சரியா அறிமுகப்படுத்த முடியல.

நம்ப கிட்ட பணம் வாங்கக் கூடாதுனு ஆரம்பத்தில் ரொம்ப தகராறு.பிறகு தான் தொழில் வேற நட்பு வேறனு அதுக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணி எல்லாரையும் போல நமக்கும் பீஸ் வாங்குறாங்க என்று பழைய கதையை சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வந்தனர்.

செல்லதுரையிடம் டாக்டர் சொன்னதெல்லாம் சொல்ல,சரி சரி மருமகள ரொம்ப வேலை வாங்காதே, நல்ல சத்தானதெல்லாம் ஆக்கி போடு. புள்ளை நல்ல கொழு கொழுன்னு வரணும்...சரிங்க சரிங்க என்றார்.

மறுநாள் வழக்கம்போல் எழ நினைக்க அவளால் முடியவில்லை.பின்னர் எழுந்து குளித்து தயாராகி கீழே வர அங்கே வானதியோ வீட்டு வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அசதியா இருந்துங்கத்தை அதான் என்றாள்..

அட...இருக்கட்டும் அதெல்லாம் தாண்டி தானே நானும் வந்துருக்கிறேன்.இப்ப என்ன அவசரம் ஆயிடுச்சு? .குழந்தை பிறக்கிற வரைக்கும் காபி எல்லாம் குடிக்காத தாயி.

மாமாவ குங்குமப்பூ வாங்கிட்டு வர சொல்லிருக்கிறேன் தினமும் அது போட்டு பால் குடி.உனக்கு தான் ரொம்ப பிடிக்குமாமே உங்க பாட்டி சொன்னாங்க.

சுண்ட காய்ச்சின பாலாக இருந்தால் குண்டான் அளவுக்கு குடிப்பனு வானதி சிரிக்க,அட கடவுளே இப்படி மானத்தை வாங்கிருக்கியே என்று உள்ளுக்குள் பாட்டியை செல்லமாக திட்டிக்கொண்டாள்.

பின்னர் வழக்கமாக நாட்கள் செல்ல கணவனின் வருகைக்காக ஷமீராவும் ஏங்க தொடங்கினாள்.அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவளுக்கு மெசேஜ் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறான்.

இப்போது அமர்நாத் கேஸ் போய்க் கொண்டிருப்பதால் அதில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்று,வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்கிறதால் ஷமீராவிடம் பேசுவது குறைந்து போனது.

இதோடு கணவனிடமிருந்து கால் மெசேஜ் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.வேலையில் இருப்பவனை தொந்தரவு பண்ணக்கூடாது என்று நினைத்தாலும் உள்ளுக்குள் ஒரு பக்கம் அவனிடம் பேச வேண்டும் என்று மனது படுத்தி எடுத்தது.


வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top