• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
திருச்சி:

இது என்னுடைய அப்பாவா?

ஊர் உலகத்துல இல்லாத பெஸ்ட் அப்பா எனக்கு கிடைச்சிருக்கார்னு இத்தனை வருஷம் கர்வமா இருந்தனே அது உண்மை இல்லையா???

கடவுளேஏஏஏ.....!!!

இப்படி ஒரு இடியை இறக்கறதுக்காக தான் என்னை இங்கு வரவைச்சாரா என்று புலம்பி கொண்டிருப்பவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது.


அவர்கள் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வேறு பக்கம் திரும்பியவன் சொல்லுங்க???

இன்னும் ஏதாச்சும் சொல்லனுமா என்கவும் கண்ணா அது வந்து என்று மானசா சொல்ல வர,நீ வாய மூடு என்றவர் அருண் உன்னோட அக்கா ஜூலி கன்சிவா இருக்கிறாள்.

இது ஏழாவது மாசம்...அவளுக்கு வளையல் போடணும்னு உங்க மாமா இப்பதான் டெல்லியில் இருந்து போன் பண்ணி பேசினாங்க என்க,இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவனோ தற்போது தனது கூட பிறந்தவள் கர்ப்பிணி பெண் என்பதை கேட்டு திடுக்கெட்டு திரும்பியவன் அப்பா நீங்க சொல்றது உண்மையா?.

ஆமாம் பா..

ஜூலி-ஷமீரா பற்றி உன்கிட்ட எதுவுமே சொல்லலை.விஷயத்தை மட்டும் தானே சொன்னேன்.நீ தான் அதுக்குள்ள கோபப்பட்டு எந்திரிச்சு வந்துட்டியே என்று மகனை கண்டனத்தோடு பார்க்க,ஆமா அப்படியே பொள்ளாத சாகசம் பண்ணிருக்கீங்க.அதை ஆர அமர சோபாவில் உட்கார்ந்து கேட்கணுமா என்று முதல் முறையாக தந்தையை எதிர்த்து பேசினான்.

மகனின் வார்த்தைகளோ அம்பு போல் இருவது நெஞ்சில் பாய்ந்தது.அருண் என்று மானசா கூப்பிட,ஒழுங்கு மரியாதையா வாய மூடு..

நீ எல்லாம் பொம்பளையா?

உன்னால எத்தனை பேரு வாழ்க்கை கெட்டு போயிருக்கு??தைரியமா முடிவெடுக்க தெரியாத நீங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க?.

உனக்கு ரெண்டு பொண்டாட்டி போல நீ இரண்டு புருஷனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று தனது தாயை பார்த்து கேட்க, அருண் என்று இருவரும் அதிர்ந்து போயினர்.

உங்க வயித்துல பிறந்ததுக்கு இப்படி நல்ல வார்த்தை எல்லாம் நானும் காதில் வாங்கி தான் ஆகணும்.சரி நீங்க எப்படியோ எக்கேடு கெட்டு போங்க உங்கள பத்தி இனிமே நான் எதுவும் நினைக்க போறதில்லை.

எனக்கு தெரிய வேண்டிய விஷயம் இரண்டே இரண்டு தான்.நாளைக்கு இதே சூழலில் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன்,உங்க ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்துருக்கீங்களே அந்த மாப்பிள்ளைங்க அப்படி செஞ்சா நீங்க அமைதியா இருப்பீங்களா? என்று வார்த்தைகளில் இருவரையும் பந்தாடினான்.

மகனின் ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிப்பது போல் இருக்க, இருவரும் கூனி குறுகி போனார்கள்.


சரி உங்கம்மா செத்துட்டு போகட்டுமே அதுக்காக உலகம் அழிஞ்சிடுமா?

தம்பி...இது தவறுதான்.அதை நியாயப்படுத்த நாங்க வரலை என்கும் மகியை பார்த்தவன் இப்ப நீங்க அதுதான் பண்ணிட்டு இருக்கீங்க..இதுவரைக்கும் நீங்க பேசினதுக்கு நீங்க செஞ்சதுக்கு ஒரு வார்த்தை எதிர்த்து பேசிருப்பேனா?

ஏன்னா எங்க அப்பா கிட்ட நீதி நேர்மை நியாயம் இருக்குன்னு.என் நண்பர்கள் கிட்ட எங்க அப்பா ஒரு ஜெம்னு சொல்லுவேன்,ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று சொல்லும்போது எப்படி இருக்கு தெரியுமா?

மனசுல இவ்வளவு அழுக்கை வச்சுக்கிட்டு பெரிய நியாயஸ்தர் போல நீங்க எப்படி இருக்கீங்க,எனக்கு அது புரியலை?

அரசியலுக்கு போங்க,அத்தனை தகுதியும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது என மனதில் உள்ள ஆத்திரத்தை எல்லாம் வார்த்தைகளாக கொட்டி தீர்த்தவன்,இனி இதை பற்றி பேசி என்ன ஆக போகுது?

என் அக்கா இருக்கான்னு சொன்னீங்களே அவங்க கிட்ட பேசணும் போன் நம்பர் இருந்தா குடுங்க என்றவாறு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தான்.

சரி பா என்ற மகி தனது போனில் இருக்கும் ருத்ரனின் நம்பரை சொல்ல, பாக்கெட்டில் இருக்கும் தனது போனை எடுத்தவன் அந்த நம்பருக்கு டயல் பண்ணினான்.

வனிச்சூர்:

அம்மாவுக்கு எங்க தெரியுமா வேலை கிடைச்சிருக்கு,டிசைனர் ஹிரோஷி கிட்ட டா.ரோஷி டிசைன் கேள்விப்பட்டிருக்கியா?

ஆமாம் என்று அவள் தலையசைக்கவும் அவங்க கிட்ட தான்.வரும் மன்டே ஜாயின்ட் பண்ணனுமென ருத்ரன் சொல்ல வாவ் சூப்பரூஊஊஊ...

"ரொம்ப சந்தோஷமா இருக்குமா"

எனக்கு எப்படி வித விதமா தைச்சு கொடுப்பீங்களோ அதே போல அசந்துங்கம்மா என்று கண்ணீரோடு ஷமீரா சொல்ல,எஸ்தரும் வந்த அழுகையோடு சரி டி ஷமி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ??

இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க மா என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவளுக்கு தனது அம்மாவை நினைத்து பெருமையாக இருந்தது.

இனியாவது அவருக்கு பிடித்ததை அவர் சுதந்திரமாக செய்யட்டும்.அதற்கு எந்த வித தடையும் வராமல் இருந்தால் போதும் ஆண்டவரே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள், கண்ணை மூடி படுக்க, கணவன் இல்லாத அந்த மெத்தையோ முள் படுக்கைப் போல இருந்தது. .

தாமதமாக தூங்கினாலும் வழக்கம் போல் எழுந்த ஷமீராவும் குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் அவள் எப்பொழுதும் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது தலை சுற்றுவது போல இருந்தது.

வெறும் வயித்தோடு இருக்கிறதால் தான் இப்படி இருக்கின்றது என்று நினைத்தவாறு கிச்சனிற்குள் போனவள் அவளுக்கான காபியை கலந்து இரண்டு வாய் குடிக்கவும் வாந்தி வருவது போல் இருக்க வாயை பொத்திக் கொண்டே வாஷ்பேஷனுக்கு வந்தவள் கடகடவென்று வாந்தி எடுத்தாள்.

அந்த நேரம் மாட்டுக்கு கஞ்சி தண்ணி வைத்து விட்டு வீட்டிற்குள் வந்த வானதி மருமகள் வாந்தி எடுப்பதை பார்த்தவர் அம்மாடி என்ன ஆச்சு என்று பதட்டமாய் வர,வாயை கொப்பளித்து விட்டு முகத்தை துடைத்தவள் என்னன்னு தெரியலங்கத்தை, நல்லா தான் இருந்தேன்..

திடீர்னு வயிற்ற புரட்டி மயக்கம் வர போல இருக்கு அதான் என்க, மருமகள் சொன்னதை கேட்டவர் ஏத்தா நாள் எதாவது தள்ளி போயிருக்க என்று ஆர்வமாக கேட்க தனது மாமியார் சொன்னதை கேட்டு யோசித்துப் பார்த்தாள்.

அட ஆமாம் இரண்டு மாதமாக இன்னும் பீரியட்ஸ் வரவில்லை என்பது புரிந்து ஆமாங்கத்தை என்றவாறு கீழே குனிந்து கொண்டே சொல்லவும் மலையாத்த என் குடும்பத்தை தழைக்க வச்சிட்டியா என்று மருமகளை நெற்றி வழித்து திருஷ்ட்டி முறித்தவர் இதோ வந்துடறேன் என்று வேகமாக வெளியே போனவரோ நான்காவது வீட்டில் இருக்கும் வைத்தியர் அம்மாவை கூப்பிட்டு வந்தார்.

ஷமீராவோ நமக்கு குழந்தையா? உண்மையிலே கன்சிவா இருக்கிறோமா என்று உள்ளுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் கணவனிடம் செல்ல வேண்டுமே என்று தவிப்போடு இருந்தாள்.

ஒருவேளை உடம்பு சரி இல்லாம இப்படி இருக்குமா, நம்மளே ஓவரா கற்பனை பண்ணிக்க கூடாது என்று இன்னொரு பக்கம் யோசனையோடு இருக்கும் போது அந்த ஊரின் பரம்பரை வழியாக வரும் வைத்தியரான காசியம்மாளும் உள்ளே வந்தார்.

என்ன கண்ணு பண்ணுது என்றவாறு அவளின் கையை பிடித்து நாடி பார்த்தவர்,வம்சம் தழைச்சிட்டு வானதி என்கவும்,நெசமாக தானே அண்ணி என்று சந்தோஷத்தில் வானதி கேட்க,ஏ புள்ள...நீ எனக்கு நாத்தனாராக இருந்தாலும் இந்த விஷயத்துல போய் நான் விளையாடுவேனா?

மெய்யாலுமே நம்ம மலையாத்தா புண்ணியத்துல புள்ள உண்டாயிருக்குது.போ வாய்க்கு சர்க்கரை கொண்டு வந்து போடு என்றவர் அங்கிருந்த பூஜை அறையில் இருக்கும் சாமியை பார்த்து அம்மா தாயே நீ தான் துணையாக இருக்க வேண்டும் என்க...

உங்க கையாலே விபூதி எடுத்து வந்து உங்க மகளுக்கு பூசி விடுங்க அண்ணி என்கவும்,அதைவிட எனக்கு வேற வேலை என்ன புள்ள என்றவர் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்துட்டு வந்து ஷமீராவுக்கு பூசி விட்டவர் ஒரு பொண்ணு நெசமாவே பொண்ணா பூப்பது இரண்டு விஷயத்துல ஆத்தா.

ஒன்னும் பூப்படையுரதும்,அடுத்து அவள் தாயாகிறதிலையும் இருக்கிறது.அனேகமாக உன் மாமியார் ஊருக்கே விருந்து வச்சாலும் வைக்குமென அவர் கிண்டல் பண்ண என் பேரப்பிள்ளை வரப்போகுதே விருந்து போடாம இருப்பானா என்று வானதியும் சிரித்தார்.

எங்க மருமகனையும் அண்ணனையும் காணும் என்றவாறு காசியம்மாள் அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார, வேலை விஷயமா உன் மருமவன் வெளி ஊருக்கு போயிருக்கிறான்.

உங்கண்ணன் வயலுக்கு என்கும் போது,அத்தை என்று தயங்கியவளை பார்த்தவர் என்னத்தா என்க, அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம், இதால அவரு கவனம் சிதற கூடாது...

அப்படி போடு...என் சித்தப்பன் வூட்டுக்கு ஏத்த மருமகளாக தான் வந்திருக்க ஆத்தா என்ற காசியம்மாள் ஷமீராவின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தவர் நல்ல மனசு ஆத்தா உனக்கு...

எல்லாம் பொம்பளைங்களும் உண்டான உடனே புருஷன் கிட்ட சொல்லி அது வேணும் இது வேணும்னு ஆசைப்படுவார்கள் என்றவர் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசி இருந்து விட்டு செல்ல வா, வா புள்ள என்றவாறு மருமகளை கூப்பிட்டு போய் அங்கிருந்து சோபாவில் உட்கார வைத்தவர்,29 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீட்டுல புள்ள சத்தம் கேட்க போகுது.

நல்லபடியா பெற்று எடுக்க நீயும் சந்தோசமா இருக்கணும். மனசுல எந்த குறையும் வச்சுக்காத.அத்தை என்னடா இப்படி சொல்றனு நினைக்காத உங்க அப்பாகிட்ட போன்ல பேசு அவருக்கு விஷயத்தை முதல்ல சொல்லு..

மாமியார் சொன்னதை கேட்டவள் முதல்ல அவர் வரட்டும்.அவர்கிட்ட சொல்லிக்கிறேன் பிறகு அம்மா அப்பா கிட்ட சொல்றேன்.

ம்ம் அதுவும் சரிதான் என்றவர் நீ இரு நான் வரேன் என்றவரோ கிச்சனுக்குள் போய் வேகவேகமாக சக்கரை பொங்கல் செய்து சாமிக்கு வைத்து விட்டு ஒரு தட்டில் வைத்து மருமகளுக்கு கொண்டு வந்தவர் வாயை திறத்தா என்றவாறு ஒரு வாய் ஊட்டி விட ஷமீராவுக்கோ சந்தோஷத்தில் அழுகை வந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
வனிச்சூர்:

எப்பொழுது தனது கணவர் வீட்டுக்கு வருவார் என்று வானதியும் காத்துக் கொண்டிருக்க,வயலுக்கு போன செல்லதுரை ஒருமுறை எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பறித்துக்கொண்டு வர,ஹப்பாடி வந்துட்டீங்களா?

உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திட்டு இருக்குறது.ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் என்க, மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்தவர்,என்ன டி பத்து வயசு குறைந்த போல இருக்கிற?

உனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று என்னுடைய ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துருக்கியா என்று செல்லதுரை சொல்ல,அதைக் கேட்டு கணவரை முறைத்த வானதி மீசை நரைத்தாலும் கிழவனுக்கு ஆசை போகலை பாரேன் என்றவர் மருமக மாசமா இருக்குயா..

ரெண்டு மாசம் நாலு தள்ளி போயிருக்காம்.இன்னைக்கு புதன்கிழமை பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். சாயந்தரம் நம்ம காஞ்சனா ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போயிட்டு வரேன்..

ஹம்...சரி சரி நல்லபடியா போய்ட்டு வாங்க.தம்பிக்கு இந்த விஷயத்தை சொல்லியாச்சா என்க,இல்லைங்க மருமகள் என்ன சொல்லுதுனா,அவன் வேலையில இருக்கிறான் இந்த நேரத்துல இத பத்தி சொன்னாக்க சிந்தனை எல்லாம் இங்க தான் இருக்கும்.வேலையெல்லாம் முடிச்சுட்டு வரட்டும் நேர்ல சொல்லிக்கிறேன்னு சொல்லுது என்றார்.

மருமகளை நினைத்து பூரித்தவர் கால் வரும் சத்தம் கேட்டு போனை எடுத்து பார்க்கவும் அதில் செழியனின் நம்பர் வந்தது.உன் மகனுக்கு ஆயுசு நூறு என்றவாறு அட்டென்ட் பண்ணியவர் சொல்லு தம்பி..

அப்பா,இன்னும் கொஞ்ச நேரத்துல டிவி பாருங்க என்கவும் அப்படியா என்று இவர் ஆர்வமாக கேட்க,பர்மிஷன் லெட்டரோட ஏர்போர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன்.செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடுவதற்காக அந்த ஆள் ராமேஸ்வரத்துக்கு வரான் பா.

அதைக் கேட்டு ஓஓஓ என்றவர் எங்கு போனாலும் அவனுக்கு புண்ணியம் கிடைக்காது.செழியா நீ தொட்டது எல்லாம் வெற்றியா முடிச்சுட்டு வா பா என்க சரிங்கப்பா என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

பின்னர் வானதியோ தனது வீட்டுக்கு போய் விஷயத்தை சொல்ல அவர்களும் ஷமீராவை பார்ப்பதற்காக வந்துவிட்டனர்.எல்லாரும் வரவும் ஒரு பக்கம் அவளுக்கு கூச்சமாக இருந்தது.

நேரமும் கடந்து செல்ல சீதாவும் வானதியும் ஷமீராவை அழைத்துக் கொண்டு வனிச்சூர் டவுனில் இருக்கும் காஞ்சனா மருத்துவமனைக்கு வந்தவர்கள்,டோக்கன் போட்டுவிட்டு காத்திருந்தனர்.

இவர்களுக்கு 11 ஆவது டோக்கன் என்பதால் அதற்குரிய நேரம் வந்தபோது டோக்கன் நம்பர் 11 என்று கூப்பிடவும் இரண்டு பெண்மணியோடு உள்ளே போக,அங்கிருந்த 60 வயது மதிக்கத்தக்க டாக்டர் காஞ்சனாவோ இவர்களை பார்த்தவர் வாங்க வாங்க என்ன இவ்வளவு தூரம் என்று சிரித்தார்.

அமைச்சர் கைது:

சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி ஷூ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, நண்பர்கள் மூவரும் பார்மல் டிரஸில் வருவதை பார்த்தவர் எழுந்து நின்று சல்யூட் வைக்க, மிஸ்டர் மாமா இந்த மரியாதை மனதில் இருக்கட்டும் அது போதுமென செழியன் சொல்லவும் நக்கலா டா...

போய் பொழப்பை பாருங்கடா பிஸ்கோத்துங்களா என்றவர் மீண்டும் பேப்பரை படிக்க, பெருசுக்கு எவ்வளவு குசும்பு பாரேன் டா என்ற வெற்றி, இவர் கிட்ட பேச நேரம் இல்லை.

டேய் வேகமா ஓட்டு டா இல்லைனா அந்த ஆள் ப்ளைட்டில் ஏறிடுவான்,பிறகு சென்னைக்கு போய் தான் இழுத்துட்டு வரணுமேன்று வெற்றி திட்ட,அறிவு கெட்ட முண்டம்...இது என நம்ப அப்பன் வீட்டு ரோடா?

எவ்வளவு டிராபிக் இருக்குனு கண்ணை திறந்து பாருடா பேயே என்று கபிலன் திட்ட, விடு டா விடு.. ஆயிரம் தான் இருந்தாலும் நம்ப தங்கச்சி புருஷன்.ரோசப்பட்டு கார்ல இருந்து குதிச்சிட போறானென்று செழியன் சிரிக்க,வெற்றியோ இருவரையும் கொலை வெறியில் முறைக்க, பின்னர் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

வண்டியை நிறுத்திட்டு வரேன் நீங்க உள்ளே போங்கடா என்று கபிலன் சொல்லவும்,வெற்றியும் செழியனும் வேகமாக உள்ளே போனவர்கள் மினிஸ்டர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அங்கே போக இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்போடு அங்கிருந்து சேரில் ஹாயாக அமர்நாத் உட்கார்ந்திருந்தான்.

இருவரில் ஒரு போலீஸ்காரர் தற்செயலாக திரும்பும் போது அங்கு வரும் வெற்றியைப் பார்த்து சல்யூட் அடிக்க ம்ம் என்று தலை அசைத்தவாரு அங்கு வந்தான்.

மிஸ்டர் அமர்நாத் உங்களை அரெஸ்ட் பண்றோம் என்று செழியன் சொல்ல என்ன என்று பதறி அடித்து எழுந்தவன் என்ன தம்பி விளையாடுறீங்களா என்கவும் உங்க கூட விளையாட நான் வரல.

நீங்களே அமைதியாக எங்க கூட வந்தா நல்லது இல்லனாக்க நான் என்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்க ஹலோ மிஸ்டர் யார் நீ??என்ன பேசிட்டு இருக்க என்று இன்னொரு போலீஸ்காரன் கேட்க,அவனைப் பார்த்து முறைத்த வெற்றி மிஸ்டர் சதாசிவம் அவர் சிபிஐ ஆபிசர்.

அதும் இல்லாம மத்தவங்களுக்கு மரியாதை கொடுத்து பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று கண்டிப்போடு சொல்ல சாரி சார் என்ற இருவரும் சல்யூட் அடித்தானுங்கள்.

நான் என்னுடைய வக்கீல் கிட்ட பேசணும் என்று அமர்நாத் சொல்ல மிஸ்டர் அமர்நாத் நீங்க எதா இருந்தாலும் கோர்ட்ல வந்து பேசுங்க. இதுக்கு அப்புறம் ஒரு நிமிஷம் கூட என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாது.

சோ வாங்கள் என்கவும் அவனின் குரலை கேட்ட அமர்நாத்துக்கு திக்கென்று இருக்க ,ஒரு நொடி அவனை பார்த்தவன் நெஞ்சு வலிக்கிற போல இருக்கு மயக்கம் வருது இந்த சீன் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் என்றவனோ ம் வாங்க என்க..

நம்ப ஏதாவது முரண்டு பண்ணினால் இவன் அடித்தே இழுத்துட்டு போவான் போல,இரு டா...உன்னை என்ன பண்றேன்னு பாரு டா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், நான் சட்டத்தை ரொம்ப மதிக்கிறவன்.

அதனால் உங்களோடு வரேன் என்க,நல்லது என்று அமர்நாத்தோடு இரண்டு போலீஸ்காரர்களும் பின்னாடி வர, அப்போது கபிலனும் இவர்கள் எதிரில் வந்தான்.

ஏர்போர்ட்டில் இருந்தவர்களோ மினிஸ்டர் போலீஸோட போவதை வைத்து அவர் அரெஸ்ட் பண்ணப் பட்டிருக்கிறார் என்கும் விஷயம் தெரியாமல் பாதுகாப்பு போல என்று நினைத்துக் கொண்டனர்.

பின்னர் அமர்நாத்தை காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் கஸ்டடிக்கு வந்தனர்.

இந்த விஷயம் எப்படியோ பிரஸ்கு தெரிய அத்தனை சேனல்களிலும் ஃப்ளாஷ் நியூஸாக மினிஸ்டர் அமர்நாத் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்ன காரணம் என்று போலீஸ் தரப்பிலிருந்து செய்திகள் வரவில்லை என்ற செய்திதான் ஒளி பரப்பானது.

விஷயத்தை கேள்விப்பட்ட நாதன் காலதாமதமாக நல்லது நடந்திருக்கிறது என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனது வக்கீலோடு அமர்நாத் இருக்கும் சிபிஐ அலுவலகத்துக்கு வர அவனை செழியன் இருக்கும் ரூமிற்குள் அனுமதித்தனர்.

வக்கீலோ எந்த முகாந்திரத்தில் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க எனக்கு தெரியணும்.இல்லை உங்கள் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்.

உங்களிடம் அரெஸ்ட் வாரண்ட் இருக்கா?எனக்கு தெரியாமல் சட்டத்தில் இல்லாத ஓட்டைகளா என்று இஷ்டத்திற்கு பேச,கையை கட்டி பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த செழியனோ ஒரு கட்டத்தில் டேபிளின் மேல் ஓங்கி தட்டினான்.

அதில் திடுக்கிட்ட வக்கீல் என்ன சார் மிரட்டுறீங்களா என்று உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்க..

இவ்வளவு நேரம் நீங்க என்ன பேசுனீங்கனு அங்கு இருக்குற கேமராவில் ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கிறது.

அப்புறம் என்ன சொன்னீங்க பிரதமர் கிட்ட சொல்லி ஐந்து நிமிடத்தில் வெளியில எடுப்பீங்களா...ஓகே நீங்க போய் லெட்டர் வாங்கிட்டு வாங்க..

அப்புறம் எதா இருந்தாலும் நீங்க கோர்ட்ல வந்து பேசிக் கொள்ளுங்கள் என்கவும்,சார் இதெல்லாம் அநியாயம்.

அவர் ஒரு ஹார்ட் பேஷண்ட்.கொஞ்சம் யோசிங்களென்று இப்போது தாழ்மையாக அவன் பேச,எனக்கு டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது.அதான் சொன்னீங்களே பிரதமர் கிட்ட சொல்லுவேன்னு...

பிறகென்ன சார்...

அப்புறம் சார் உங்க கட்சிகாரரை அரெஸ்ட் பண்ண சொல்லி எங்களுக்கு பர்மிஷன் கொடுத்ததே நம்ப பிரதமர் தான்.இதை பற்றி நீங்களே அவர்கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்களுக்கும் பிரதமருக்கும் அவ்வளவு நெருங்கிய நட்பு இருக்கே என்க...அவன் சொன்னதை கேட்டு அமர்நாத்தோட வக்கீலும்,நாதனும் அதிர்ந்து போனானுங்கள்.

அமர்நாத்தின் மகன்,மனைவி, மருமகள் பேத்தியோடு புனித யாத்திரை சென்றிருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியவில்லை.

நாளைக்கு கோர்ட்ல ஒப்படைக்கிறேன் நீங்க வந்து பேசிக் கொள்ளுங்கள் என்றவாறு எழுந்து போக சிறிது நிமிடங்கள் நின்று பார்த்த இருவரும் எதுவும் பண்ண முடியாமல் வெளியேறினார்கள்.

மறுநாள் காலையில் அமர்நாத்தை பலத்த பாதுகாப்போடு கோர்ட்டுக்கு அழைத்துப் போனார்கள்.அங்கே இரண்டாவது கேஸாக அமர்நாத்தின் கேஸ் வந்தது.

சொல்லுங்கள்...

எதற்காக மினிஸ்டரை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க என்று ஜட்ஜ் கேட்க,25 வருடங்களுக்கு முன்பு சாந்தினி சௌக்கில் நடந்த தீ விபத்துக்கு மூல காரணமான குற்றவாளியை தகுந்த ஆதாரங்களோடு கைது பண்ணியிருக்கிறதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது என்று இன்னொரு அரசாங்க வக்கீல் சொல்லவும் என்ன என்று அவரோடு அமர்நாத்தும் அதிர்ந்து போனான்.

பின்னர் சுதாரித்த ஜட்ஜ், அப்படியா?

இதை பற்றி யார் கம்பளைண்ட் கொடுத்தார்கள்?கேஸை விசாரித்த போலீஸ்காரர் யார்?

மை லார்ட் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து நேரடியாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

சரி அதற்கான ஆதாரத்தை கொடுங்கள்?

அடுத்தது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக யார் இந்த கேசில் வாதாட போகிறது அதை சொல்லுங்கள் என்கும் போது, நான் தான் மை லார்ட் என்கும் கணீர் குரல் கேட்டு வாசல் பக்கம் பார்க்க...

அங்கே கம்பீரமாக கருப்பு கோட் போட்டுக் கொண்டு பெண் புலியான உமா மகேஸ்வரி கோர்ட்டின் உள்ளே வந்தவர் ஜட்ஜை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்லிவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்காக நான் தான் வாதாட வந்திருக்கிறேன் என்றார்.

ஓகே என்றவர் கம்ப்ளைன்ட் கொடுத்தவங்களை வர சொல்லுங்கள் என்கவும் அங்கே தனது கணவரோடு உட்கார்ந்திருந்த பாயல் கூண்டுக்குள் வந்து நிற்க அவர் யார் என்பது அமர்நாத்துக்கு அடையாளம் தெரியவில்லை .

அவரிடம் வந்த உமா மகேஸ்வரி உங்களுடைய பெயர் என்ன என்கவும்,பாயல் தன்ராஜ் என்றார்.அந்த பெயரை கேட்டும் அமர்நாத்துக்கு யார் என்ற உண்மை தெரியவில்லை.

சொல்லுங்கள்,எதற்காக பிரதமர் அலுவலகத்தில் கம்பளைண்ட் கொடுத்தீங்க அதும் இல்லாமல் இது திட்டமிட்ட சதி என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்றார்.

அங்கு நடந்த கோர சம்பவத்துக்கு ஒரே சாட்சி நான் தான் என்ற பாயலுக்கு அழுகை வந்தது.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top