• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
செழியன் நினைவுகள்:


காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாதது கூட அவனுக்கு தெரியவில்லை.செழியனின் சிந்தனை முழுவதும் தன்னவளை நல்லபடியாக அழைத்து வந்து,எந்த தடையும் இல்லாமல் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது மட்டுமே இருக்கவும், எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக சோழனூருக்கு வந்து சேரும்போது நள்ளிரவு 11 மணியானது.

எப்படியும் தன்னவன் வந்துவிடுவானென்று நம்பிக்கை இருந்ததால் தூங்காமல் ஜன்னல் அருகே நின்று கொண்டு ரோட்டை பார்த்துக் கொண்டிருக்க தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது..

அந்நேரம் அவளது போன் வைப்ரேஷனாக வேகமாக போய் பெட்டின் மேலிருந்த போனை எடுத்து பார்க்க இளா என்று வந்தது.

உடனே அட்டென்ட் பண்ணியவள் எங்க இருக்கீங்க என்க,உங்க தெருவுக்குள் தான் டி வந்துட்டு இருக்கேன் பால்கனியில் இருந்து உன்னால இறங்கிட முடியுமா?

"ஹம் முயற்சி பண்ணுகிறேன்"

சரி என்று அழைப்பை துண்டித்தான்.

அதற்குள் ஷமீராவோ அவளது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தோடு கீழே போனவள் பொறுமையாக ஷோகேஸ் திறந்து ஃபோனையும் லெட்டரையும் வைத்துவிட்டு மாடிக்கு வந்தவள் கதவை சாற்றி விட்டு பால்கனியில் போய் நிற்க செழியன் கீழே நிற்பது தெரிந்தது.

கொஞ்சம் தள்ளிப்போ என்று சைகையில் சொன்னவன் கையில் இருந்த கவரை தூக்கி பால்கனியில் எறிந்தான்.என்னவென எடுத்துப் பார்க்க அதில் டிரஸ் இருந்தது.

அதை வைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக உள்ளே போய் கதவை சாற்றிக் கொண்டு அதிலிருந்த ட்ரெஸ்ஸை மாற்றியவள் தான் போட்டிருந்த நகையெல்லாம் கழட்டி அங்கிருந்த கபோர்டில் வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தவள் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டாள்.

பின்னர்,அவளது சர்டிபிகேட் ஆதார் கார்டு ஓட்டர் ஐடி உள்ள பைலை மட்டும் தூக்கி எறிய,அதை செழியனும் கேட்ச் பிடித்துக் கொண்டான்.

பின்னர் பொறுமையாக கம்பியின் மேல் ஏறி பக்கத்தில் இருந்த மரக்கிளையில் கால் வைத்து கீழே இறங்க முயல, காம்பவுண்ட் சுவருக்கு இன்னும் சில அடி தூரமிருந்தது.

பயந்து கொண்டே இறங்க அதற்குள் செழியனோ அதன் மேலே ஏறியவன் தன்னவளை எட்டி பிடிக்க,அவனின் தோளை பிடித்துக் கொண்டு காம்பவுண்ட் சுவரில் இறங்கி விட்டாள்.

அதிலிருந்து தரைக்கு ஏழு அடி தூரம் என்பதால் குதிக்க பயம் வர கீழே குதித்தவன் இரு கைகளை நீட்ட குழந்தை போல தாவியவளை இறுக அணைத்தவாறு கீழே இறக்கி விட்டான்.

யாராவது பார்க்கிறார்களா என்று ஒருமுறை இருவரும் பார்த்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தெருவை தாண்டி வந்தவர்கள் காரில் உட்கார்ந்த பிறகு தான் பெருமூச்சு விட்டனர்.

எதுவும் பேசாமல் காரை எடுத்தவன் வேகமாக அங்கிருந்து மதுரையை நோக்கி புறப்பட்டான்.சோழனூரை தாண்டி ரொம்ப தூரம் வந்தவனோ காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஊப் என்ற ஊதினான்.

சாப்டிங்களா என்க,அதன் பிறகே காலையிலிருந்து அவன் எதுவும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது.

நீ சாப்டியா டி?

இல்லைங்க என்றவாறு கீழே குனிந்து கொண்டாள்.ம்ம்...அப்போ நான் மட்டும் சாப்பிடுவேனா டி???அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் பார்க்க,உன்னை பாக்குற வரைக்கும் நான் நானா இல்லை.

டீ மட்டும் திருச்சி வந்து குடிச்சேன். நாளைக்கு காலையில ரிஜிஸ்டர் மேரேஜ்.அது முடிஞ்ச பிறகு கோயில்ல கல்யாணம்.உனக்கு தேவையானது எல்லாமே வாங்கி வைத்திருக்கிறேன்.

இப்பொழுது நேரா மாமா வீட்டுக்கு தான் போறோம் சரியா என்கவும் ஷமீராவோ எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

ஏண்டி ஒன்றரை வருஷம் கழிச்சு பார்த்திருக்கிறோமே புருஷன்காரனை கட்டி பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு அந்த இதெல்லாம் எதுவும் கிடையாதா?

அப்படியே கருங்கல் போல உட்கார்ந்திருக்கிறியே டி என்று செழியன் திட்ட,இப்போ இருக்கிற நிலைமையில் இது ரொம்ப முக்கியமா என்று ஷமீரா கேட்க,இதுவும் முக்கியம் தாண்டி என்று அவள் கழுத்தை வளைக்க கையை நீட்ட,அவளோ கதவின் வேறு ஓரம் ஒண்டி போனாள்..

ஓஓஓஓ....!!!

தொட விட மாட்டீங்களோ?

எனக்கு சொந்தமானது டி.இரவு நேரம் சில்லுனு காத்து கைக்கு எட்டும் தூரத்தில் நீ...மனசும் உடம்பும் உன்னை அணைக்க தவிக்குது டி.முடியலை என்க..

அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.சிறிது நொடி அவளை பார்த்தவன் சரி எப்படி இருக்க சொல்லு?

அதற்கு பதில் சொல்லாமல் நீங்க எப்படி இருக்கீங்க என்றாள்..பார்த்தா தெரியலையா டி ராஜா போல இருக்கிறேன் டி..

ஆமா ஆமா...அதுதான் நல்லா தெரியுதே என்று ஷமீரா பல்லை கடிக்க,அதில் சிரித்தவன் உன்னை நினைத்து தாண்டி வாழ்ந்துட்டு இருக்கேன்.பின்ன நல்லா இல்லாம எப்படி இருப்பேன்? என்றான்.

அதிகாலையில் மதுரைக்கு வந்தவன் ஷமீராவோடு வீட்டுக்கு வர அங்கே அவர்கள் நால்வரும் விழித்திருந்தனர்.அவளுக்கு வாங்கிய டிரஸ் நகைகள் அடங்கிய பேகை கொடுத்தவன் போய் அந்த ரூம்ல குளிச்சிட்டு ரெடியாகு என்று சொல்ல சரி என்றாள்..ஷமீராவும் குளித்து தயாராகி முடிக்க, அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

செழியன் தான் என்று நினைத்தவள் கதவை திறக்க அங்கே பானுவும் நசீராவும் நின்றார்கள்.போலமா மா என்க, ஹம் கா என்றாள்.

ஷமீரா நாங்க உனக்கு அக்கா இல்லை அண்ணி என்று இருவரும் சொல்ல சரிங்கண்ணி என்று சிரித்தாள்.

டேய் எருமை மாடு என்ற சத்தம் கேட்கவும் இவ்வளவு நேரம் தனது நினைவுகளில் மூழ்கியிருந்த செழியன் என்னடா என்றான்.

பைத்தியக்காரா ஏர்போர்ட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது, என்ன தாண்டா நெனச்சிட்டு இருக்க?செவுட்டு முண்டம்..இன்னும் ஒரு மணி நேரத்தில் நமக்கு பிளைட்.

கீழ இறங்கி தொலைடா பன்னியென்று வெற்றி திட்டவும் அதுக்குள்ள ஏர்போர்ட் வந்துட்டோமா என்றவாறு செழியன் இறங்க,கபியும்,வெற்றியும் கொலை வெறியில் பார்த்தனர்.

பின்னர் லக்கேஜோடு உள்ளே போனவர்கள் மற்ற பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு அவர்களுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறினர்.

வானில் பறந்து வந்த விமானமோ மாலை 4 மணிக்கு எல்லாம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கிருந்து வெளியே வந்தவர்கள் டாக்ஸியில் ஏறி அவர்கள் வீட்டிற்கு செல்ல வசுந்தராவும் சத்தியமூர்த்தியும் கார்டனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

பாருங்களேன் டா இந்த இளஞ் ஜோடிகள் சேட்டையை என்றவாறு கீழே இறங்கிய வெற்றி ஹலோ காய்ஸ் என்று குரல் கொடுக்க இருவரும் திரும்பி பார்த்து ஹாய் சொன்னார்கள்.

அதை பார்த்த வெற்றிக்கு மேலும் வெறி வர இந்த லவ்வர்ஸை என்று பல்லை கடித்தவன், அம்மா என்று வேகமாக கத்த வசுந்தராவும் சுந்தரமூர்த்தியும் அங்கிருந்து எழுந்து வந்தவர்கள் வாங்க பா எப்படி இருக்கீங்க என்க...

நல்லாயில்லன்னு சொன்னால் திரும்ப கூட்டிட்டு போயிட்டு வருவீங்களா என்று வெற்றி முறைக்க ஹி ஹி ஹி ஹி என்று சத்தியமூர்த்தி சிரிக்கவும் கடுப்பேத்தாதப்பா...

இங்க ரெண்டு பேரும் என்னமோ புது லவ்வர்ஸ் போல கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்க.ஆனால் உங்க பொண்டாட்டி எங்களுக்கு லீவ் தர மாட்டாங்க.இதற்கு தான் எங்களை ஊருக்கு அனுப்புனீங்களா என்கவும் அடேய் வாய மூடுடா என்ற சத்தியமூர்த்திக்கு அந்த வயதிலும் வெட்கம் வந்தது.

பின்னர் வீட்டிற்குள் சென்றவர்கள் அவரவர் அறையில் பிரஷ் ஆகிவிட்டு வர, சூடாக டிபனும் தயாராக இருக்கவும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் சரி காலைல பாக்கலாம் என்கவும் சரி என்று ரூமிற்குள் சென்றுவிட்டனர்.

பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தவனோ
போனை எடுத்து தனது மனைவிக்கு கால் பண்ணினான்.

வனிச்சூர்:

இரு விழியின் வழியே நீயா வந்து போனது என்ற ரிங்டோன் சத்தத்தில் இதுவரை கடந்த காலத்தில் மூழ்கியிருந்த ஷமீராவோ திடுக்கிட்டு எழுந்து போய் போனை பார்க்க அதில் இளா என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவள் ஹலோ நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா?

இப்ப எங்க இருக்கீங்க?

சாப்டீங்களா?என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்க, ஏய் சண்டிராணி கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசு டி. என்னை எங்கே பதில் சொல்ல விடுற?நீயே எல்லா கேள்வி கேட்டுகிட்டு இருக்கியே...

சரி சரி சொல்லுங்க என்கவும் நான் டெல்லிக்கு வந்துட்டேன் டி.இங்கு அத்தை வீட்ல தான் இருக்கிறேன். அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க?

ஒன்னும் பண்ணலையே என்று ஷமீரா சொல்லவும் அதுதான் தெரியுமே நீ தான் எதுவும் பண்ண மாட்டேங்கறியே டி. எல்லாம் நானே தான் பண்றேன் என்கவும் அய்யோ என்ன பேசுறீங்க என்று ஷமீரா வெட்கப்படுவது அவன் மன கண்ணில் தெரிந்தது.

சரி ஆன்லைன்ல வா என்று சொல்லி உடனே அழைப்பை துண்டித்தவன் மனைவிக்கு வீடியோ கால் பண்ண அந்தப் பக்கம் அட்டென்ட் பண்ணியவள் கணவனை பார்க்க எண்ணற்ற முத்தங்களை அங்கிருந்து மனைவிக்கு வழங்க,ஷமீராவும் பதிலுக்கு ஃபோனில் கொடுக்க இதெல்லாம் நேரில் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்???என்று ஏக்கமாக சொன்னான்.

உங்களை யார் அங்க போ சொன்னா?

வேலையவே கட்டிட்டு அழுக வேண்டியது தானே? உனக்கு எதுக்கு டா குடும்பம் பொண்டாட்டி என்று ஷமீரா திட்ட அடிப்பாவி என்ன டி இப்படி பேசுற என்றான்.

பின்ன வேற என்ன சொல்ல?

போலீஸ்காரனாக இருந்தால் 24 மணி நேரமும் இப்படி தான் சுத்திக்கிட்டு இருக்கணும்.இதுல காதல் வேற உனக்கு கேடு என்றாள்.

என்ன செல்லம் பண்றது..மாமா விரும்பியே இந்த வேலையில் சேர்ந்துருக்கிறேன் டி. இதை விட முடியாது தான???

இந்த கேஸ் மட்டும் முடிச்சிட்டு கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு இருக்கிறேன் டி என்கவும்,நிஜமாவா என்று ஷமீராவும் ஆர்வமாக கேட்க ஆமாண்டி...

"இன்னும் நம்ம ஹனிமூனே போகலை"அது உனக்கு ஞாபகம் இல்லையா என்கவும் எதேஏஏ என்றவள் அதிர, அதேதான் அதேதான்.

பெரிய பிளான் வச்சிருக்கிறேன் அதை கொண்டாடி தீர்த்துட்டு தான் ஊர் பக்கமே வருவோம்.எல்லாத்துக்கும் நீ தயாராக இரு என்க, ச்சீ போங்கள் என்றாள்..

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
டெல்லி:

இன்றைக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்திருக்கு என்கவும் எல்லாரும் என்ன என்று கேட்கவும்,இந்த முறை இரண்டு டிசைனரை செலக்ட் பண்ணிருக்கேன்..வாவ் என்று ஒரே கரகோஷமாக இருந்தது..

எல்லாரும் அவங்களால் முடிந்ததை பெஸ்ட்டா தான் கொடுத்துருக்கீங்க. அதில் இரண்டு பேர் எல்லாரையும் பீட் பண்ணிட்டு முன்னாடி வந்துட்டாங்க.

முதலாமவர் அஜய் என்று மைக்கில் சொல்லவும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் மேடைக்கு வந்தான். சந்தோஷத்தில் அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

வெற்றி பெற்றதற்கான சர்டிபிகேட் வேலையில் ஜாயின் பண்ணுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரையும் ஹிரோஷி கொடுக்க, சிரித்த முகத்தோடு வாங்கியவன் அவர் காலில் விழ,காட் பிளஸ் யூ பா என்றார்.

அடுத்தது என்று அந்த கூட்டத்தினரை பார்க்க,சொல்லுங்க சொல்லுங்கள் என்று மேடைக்கு கீழே இருந்தவர்கள் கத்தினார்கள்.

எஸ்தர் என்கவும் யாகூ என்று ருத்ரனும் தீபனும் கத்த,கண்ணை மூடியிருந்த எஸ்தருக்கு தான் கேட்டது கனவா இல்லை நினைவா என்பது குழப்பமாக..

எஸ்தர் மேடைக்கு வாங்க என்று ஹிரோஷி கூப்பிடவும்,அம்மாஆஆஆ உங்களை தான் கூப்பிடுறாங்க போங்க என்று ஜூலியும் ரூபாவும் அவரின் தோளில் தட்ட,அதில் நிகழ்வுக்கு வந்தவர் கண்ணீரை கூட துடைக்காமல் மேடைக்கு போனார்.

அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வேலைக்கான கடிதத்தையும் சர்டிபிகேட்டும் கொடுக்க கைகள் நடுக வாங்கி கொண்டு கீழே வந்தவருக்கு வார்த்தையே வரவில்லை.

பின்னர் அனைவருக்கும் அங்கையே டின்னர் ஏற்பாடு பண்ணிருந்ததால் சந்தோஷமாக சாப்பிட்டு வீட்டுக்கு வந்தனர்.

பொங்கி வந்த அழுகையால் வாயை மூடிக்கொண்டு ரூமிற்குள் போக, மற்றவர்களை பார்த்த தீபன், அமைதியாக இருங்கள்.கொஞ்ச நேரத்திலே அம்மா சரியாகிடுவாங்க என்கவும்,சரி என்று அவரவரவர் ரூமிற்குள் போனார்கள்.

என்னங்க...ஜூலிக்கு இப்ப ஏழாவது மாசம் நடக்குது.அவளுக்கு வளையல் போடணுமே?அதை பத்தி யாரும் யோசிக்கவே இல்லையே என்றவாறு கபோர்ட்டில் இருந்த துணியை எடுத்து மாற்றிக் கொண்டிருந்த மனைவியை பார்த்த தீபன், ஆமா ரூபா...

அதை பற்றி மாமா கிட்ட பேசணும்..

ஏங்க..அதுக்கு ஏன் நாளைனு தள்ளி போடணும்?கையோடு பேசிடலாமா என்கவும் சரி டி என்றான்.

இந்த நேரத்தில் தூங்கிருப்பாங்களாங்க?.

ஏண்டி ஒன்பது மணிக்கு யாரு டி தூங்கிருப்பாங்க? என்றவன் செல்லதுரை நம்பருக்கு கால் பண்ண, சொல்லுங்கப்பா எல்லாரும் நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களா?

வேலை எல்லாம் எப்படி போகுது என்று பரஸ்பரம் நலம் விசாரித்தார்.அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னவன் அப்புறம் மாமா ஜூலிக்கு ஏழாவது மாசம் நடக்குது.

அதுதான் வளைகாப்பு பண்ணலாம்னு ரூபாவும் நானும் நினைக்கிறோம்.நீங்க என்ன சொல்றீங்க?

ரொம்ப நல்ல விஷயம் பா.இதை பற்றி சம்பந்தி வீட்டில் சொல்லனுமே பா என்றார்.

எனக்கு அவங்க கிட்ட பேச விருப்பம் இல்லைங்க மாமா.வேண்டுமென்றால் அங்கிள் கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்று தீபன் சொல்லவும் அதுதான் முறை.

வராங்களோ வரலையோ அது அடுத்த பிரச்சினை.சொல்ல வேண்டியது நம்மளது கடமையாச்சே.நான் நினைச்சேன் ஒன்பதாவதாக மாதத்தில் வளையல் போட்டு நம்ப வீட்டுக்கு கூப்பிட்டு வந்துடலாம்னு...

சரி எப்போ பண்ணினாலும் நம்ப புள்ளை தானே என்றவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தான்.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டு ரூபா போய் கதவை திறக்க ருத்ரன் அங்கு நிற்கவும்,வா ணா என்று வழியை விட்டாள்.

அஞ்சு நிமிஷம் கூட என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடியலையே டா?அவ்வளவு பாசமா டா மாப்பி என் மேல? என்றவாறு தீபன் சிரிக்க,செருப்பு பிஞ்சிடும் டா என்றான்..

ம்ம் சொல்லு மாப்பி...

அது வந்து டா...

அதான் வந்துட்டியே அடுத்ததை சொல்லு எருமை...

எங்க சொல்ல விடுற? நீ தான் உயிரை வாங்கிட்டு இருக்கியே என்று ரூபா திட்ட,அதானே அண்ணன் தங்கச்சிக்கு என்னை திட்டுனாக்க அப்படியே அல்வா திங்கற போல இனிக்குமே..

சரி நான் எதுவுமே வாய் திறக்கலை நீங்க ரெண்டு பேரும் சொல்லுங்கடா என்று வாயில் கையை வைத்துக்கொண்டு அங்கிருந்த பெட்டின் மேல் போய் தீபன் உட்கார,அதை பார்த்த இருவருக்கும் சிரிப்பு வந்தது.

அட லூசு பயலே தூங்குற நேரத்துல இங்க வந்து சிரிச்சிட்டு நிக்கிறியே, எதுக்குடா வந்த சொல்லு இல்லை ஓரமா வந்து படு என்கவும்,நான் என்ன சொல்ல வந்தேனா ஜூலிக்கு வளையல் காப்பு பண்ணலாமா டா?

கன்சிவாக இருக்கிற எல்லாருக்கும் இந்த ஆசைகள் இருக்கும் இல்லையா? அவ கோவத்துல தான் அவங்க அப்பா அம்மா விட்டு இப்ப விலகி இருக்கிறாள்.அதனால் நம்ம அப்படியே விட முடியாதே..

ருத்ரன் சொன்னதைக் கேட்டவர்கள் நீ ரொம்ப லேட் மாப்பி..நான் இப்பதான் மாமா கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசிட்டேன்.உன்னோட மாமனாருக்கு தான் போன் பண்ணி விஷயத்தை சொல்லணும்.

அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்..நீ என்ன பண்ற நாளைக்கு காலைல போன் பண்ணி அவர்கிட்ட சொல்லு சரியா என்க,அப்படியாடா என்று ருத்ரன் அதிரவும் ஆமா டா.உன்னை போல நாங்க ஒன்னும் கூமுட்டை கிடையாது என்றான்.

யோவ் டாக்டர் என்ன திமிரா?வாய் இருக்குனு ஓவரா என் அண்ணனை பேசுறியோ என்றவள் அங்கிருந்த புக்கை தூக்கி தீபனின் மேல் எறிய...அய்யோ கொலை கொலை...

இப்படி குங்ஃபூ கராத்தே தெரிஞ்ச தங்கச்சியை என் தலையில கட்டி வச்சிருக்கியே டா சண்டாளா நீ நல்லா இருப்பியா டா உன் கனவுல பேய் பிசாசு வரட்டும் டா என்று சாபம் விட்டான்.

அப்பொழுது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு ருத்ரன் போய் கதவை திறக்கவும் ஜூலி நின்று கொண்டிருந்தாள்.

என்ன டி என்கவும் சமி போன் பண்ணிருக்கிறாள்.அவளுக்கு வீடியோ கால் பண்ணலாம்.அம்மா இந்த போட்டியில் வின் பண்ணியிருக்காங்க இதை சொன்னால் அவளும் சந்தோஷப்படுவாளே என்க...

அட இதை நாம யோசிக்கலையே என்று ரூபா சொல்ல,அந்த அளவுக்கு உனக்கு எங்கே டி அறிவு இருக்கு???என் தங்கச்சிக்கு அறிவு இருக்கே என்று தீபன் சிரிக்கவும் உங்களை என்று பல்லை கடித்தவள் போன் பேசி முடித்த பிறகு உங்களுக்கு இருக்குங்க கச்சேரி என்றாள்.

சரி வாங்க அம்மா ரூமுக்கு போகலாம் அவங்க எப்படியும் அழுதுட்டு தான் இருப்பாங்க.முகத்தை கழுவிட்டு கொஞ்சம் சிரிச்ச போல இருக்க சொல்லு அப்பதான் அவளும் அங்க சந்தோஷமா இருப்பாள் என்று ருத்ரன் சொல்ல,பார்ராஆஆஆ...

மச்சினிச்சி மேல எம்புட்டு கரிசனம் டா உனக்கு?கேட்கவே எனக்கு நெஞ்செல்லாம் புல்லரிக்குதுடா என்று தீபன் சிரிக்க,இப்ப உன்னை உதைக்கிற மூடுல நான் இல்ல மரியாதையா வாடா என்ற ருத்ரன் அங்கிருந்து வெளியே போனான்.

வனிச்சூர்:

ஹா ஹா என்ற சிரித்தவன் மேலும் சிறிது நேரம் மனைவியிடம் பேசி சிரிக்க வைத்து சில சேட்டைகளையும் செய்தவன் சரி டி படுத்து நிம்மதியா தூங்கு.நாளையிலிருந்து கொஞ்சம் வேலையில் பிஸியாகியிடுவேன்..

நேரம் கிடைக்கும்போது கால் பண்றேன் சரியா என்கவும்,சரிங்க என்று சுரத்தே இல்லாமல் ஷமீரா சொல்ல,இப்படி சொன்னா என்ன டி அர்த்தம்?சிரிச்சிட்டே சொல்லு டி...

சரிங்க என்று சிரித்துக் கொண்டே சொல்ல பை லவ் யூ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் படுத்த சிறிது நிமிடத்திலேயே தூங்கிவிட்டான்.

ஷமிராவோ போனில் மணியை பார்க்க இரவு 9 என்று காட்டியது ஐயோ கடவுளே....அத்தை மாமா என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லையே என்று பதறி அடித்துக் கொண்டு கீழே வர,அங்கே வானதியும் செல்லதுரையும் டிவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

சங்கடமாக கையை பிசைந்து கொண்டே அவர்களிடம் வந்தவள் அத்தை என்க..அந்த சத்தத்தில் இருவரும் திரும்பி பார்த்தனர்.தெரியாமல் தூங்கிட்டேன் என்றாள்.

அட...இது உன் வீடு எப்ப வேணாலும் தூங்கி எழு.நாம மூணு பேரும் தானே இருக்கிறோம்.சாதம் சாப்பாடு குழம்பு எல்லாம் இருக்குன்னு தான் அப்பவே சொன்னேன்ல. ..

நானும் மாமாவும் இப்பதான் சாப்பிட்டோம்.உன்னை வந்து பார்த்தேனா நீ படுத்திருந்த சரி தூங்கி எழுந்து வரட்டும் என்று தான் திரும்ப வந்துட்டேன்.

போ...

போய் தோசை போட்டு சாப்பிட்டு வா என்க..சரிங்க அத்தை என்றவாறு கிச்சனுக்கு போனவள் அவளுக்காக தோசையை போட்டு அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டாள்.

பின்னர் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டு மூவருக்கும் பால் சுட வைத்து கருப்பட்டியை கலந்து எடுத்துட்டு வந்தவள் ஆளுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு அவளும் குடிக்கும் போது அம்மாடி உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்க,சொல்லுங்க மாமா என்றாள்.

நம்ப ஜூலிக்கு இது ஏழாவது மாசம். வளையல் போடணும்னு தீபன் போன் பண்ணினான்

இத பத்தி உங்க அப்பாவும் அவங்களும் எதுவும் சொல்லலை.அது தான் என்ன பண்றதுன்னு யோசனையாக இருக்கு என்கவும் எனக்கு அவங்கள பத்தி தெரியாது மாமா.

ஆனா அக்காவுக்காக எல்லாமும் நான் பண்ணுவேன் என்று ஷமீரா சொல்லவும் சரி மா என்றவர் அதை பற்றிய யோசனையோடு டிவி பார்க்கலானார்.

சிறிது நேரம் வானதியோடு பேசிவிட்டு மாடிக்கு வந்தவள் எஸ்தருக்கு கால் பண்ண அதுவோ ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுக்கவே இல்லை.

இந்த அம்மா எங்கே போய்ட்டாங்க என்று ஜூலிக்கு கால் பண்ண, அப்பொழுதுதான் சாப்பிட்டு ரூமிற்கு வந்தவள் கால் வரும் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தவள் அட்டென் பண்ணி சொல்லு ஷமி, எப்படி டி இருக்க?அத்தை மாமா எல்லாம் நல்லா இருக்காங்களா??

அதைக் கேட்டவள் எல்லாரும் நல்லாருக்காங்க கா.நீ எப்படி இருக்க??நல்லாருக்கோம் டி.ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் டி...ஓஓஓ என்னக்கா???

வெயிட் அம்மாவே சொல்லட்டும் என்றாள்.சரி என்று அழைப்பை துண்டித்து சிறிது நிமிடத்திலே ஷமீராவுக்கு ஜூலியின் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தது.

உடனே அட்டென்ட் பண்ணவும் ஹாய் என்று கோரசாக சத்தம் கேட்க எல்லாரையும் பார்த்தவள் கையை அசைத்து எப்படி இருக்கீங்க என்க,நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

அப்பொழுது ஷமி ஒரு குட் நியூஸ் டி என்று ஜூலி சொல்ல,என்னக்கா சொல்லுங்க என்கவும்,நீ கண்ணை மூடு என்க...ம்ம் என்றவள் அதே போல் மூட,டொன்டொடைன் இங்கு பார் என்று எஸ்தர் வாங்கிய சர்டிபிகேட்டையும் வேலைக்கான அப்பாயின்மென்ட் லெட்டரையும் ரூபன் காட்ட, கண்ணை திறந்தவளே அதிலிருந்த விஷயத்தை படித்து பார்க்க சந்தோஷத்தில் அழுகை வந்தது.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top