Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 439
- Thread Author
- #1
ஷமீரா நினைவுகள்:
காலேஜ் முடிந்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்த ஷமீராவிற்கு யாரோ அவள் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் கேட்கவும் திரும்பிப் பார்க்க அவளின் முன்னால் வந்தவன் ஹலோ ஷமீரா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.
ராஜியும் அவளும் அவனை விசித்திரமாக பார்க்க பிளீஸ் சிஸ்டர் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன் என்றான்.
ஓஓஓஓ என்ற ராஜியும் சரி பேசிட்டு வாடி நான் அங்கு நிற்கிறேன் என்றவாறு சற்று தள்ளி போய் மாடி படியின் அருகே நின்று வேடிக்கை பார்த்தாள்.
ஹம் சொல்லுங்க...
ம்கும்..என் பெயர் சதீஷ் நான் உங்க கூட தான் பஸ்ல வருகிறேன் என்றான்.
ஓஓஓஓ...உங்கள் பெயர் தெரியாது. பட் உங்களை பஸ்ஸில் பார்த்துருக்கேன் சொல்லுங்க என்ன விஷயம்?
அதாவது என்று ஒரு நொடி அமைதியானவன் ரெண்டு வருஷமா நான் உங்களை காதலிக்கிறேன்.இந்த வருஷம் கோர்ஸ் முடிய போகுது அதான் உங்ககிட்ட என் மனசுல இருக்குறதை சொல்ல வந்தேன்...
அதைக் கேட்டவள் அப்படிங்களா,மிஸ்டர் சதீஷ் நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன்.இன்னும் கொஞ்ச நாளில் ஷமீரா இளஞ்செழியனாகிடுவேன்.
என்றவளோ அங்கிருந்து போக இதை எல்லாம் அவனோடு பின்னாடி இருந்த இரண்டு பையன்களும் காதில் வாங்கினார்கள்
அதில் ஒருவனோ என்னாஆஆஆ ஷமீரா அக்கா லவ் பண்றாங்களா?என்று அதிர,அவன் பக்கத்தில் இருந்த நண்பனோ அந்த பொண்ணை உனக்கு தெரியுமாடா எஎன்றான்.
தெரியுமாவா...எங்க ஊரு தாண்டா.அவங்க வீட்ல இருந்து நாலாவது வீடு தான் எங்க வீடு.அந்த அக்காவோட அப்பா பொல்லாதவருடா.
இந்தக்கா லவ் பண்றாங்களே அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்குடா.ஆனா அவங்க சொன்ன பேர்ல எங்க ஊர்ல யாருமே இல்லையேடா என்றவாறு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
அப்பொழுது இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அம்மா ஒரு விஷயம் என்றான்.அவரோ என்னடா சொல்லு?.நம்ப ஊரில் இளஞ்செழியன்னு யாராவது இருக்காங்களா?
சிறிது நிமிடம் யோசித்தவர் அப்படி யாரும் இல்லையே பா...ம்ம் மா நம்ப ஷமீரா அக்கா யாரோ ஒருத்தவங்களை லவ் பண்றாங்களாம் மா. இன்னைக்கு எங்க காலேஜ்ல ஒரு பையன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க நான் கேட்டேன்...
அந்த பெண்மணியோ அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஷமீராவிற்கு நல்லது பண்ணுவதாக நினைத்து மறுநாள் காலை பையனை கல்லூரிக்கு அனுப்பி விட்டவர் நேராக வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்த, அவர் நேரமோ என்னவோ தெரியவில்லை மகியும் அன்று வீட்டிலிருந்தார்.
கதவை திறந்த எஸ்தர் வாங்கண்ணி என்க, ஒரு முக்கியமான விஷயம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். உன் சின்ன மருமகன் ஒரு விஷயம் சொன்னா அதைக் கேட்டு ரொம்ப பதறிப் போயிட்டேன் எஸ்தரு.
எங்க அண்ணனுக்கு இது தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகுமே என்கும் போது ரூமில் இருந்து வெளியே வந்த மகியை பார்த்தவர் அண்ணா என்று அதிர...
வா லீலா... என்ன பிரச்சனை என்க அது வந்து ணா என்று அவர் சொல்ல தயங்க பரவால்ல சொல்லு என்கவும், தனது மகன் சொன்ன விஷயத்தை சொல்லவும் அப்படியா என்று அதிர்ந்து போனார்கள்.சரி லீலா நான் பாத்துக்குறேன் என்றார். எஸ்தருக்கு இன்னும் நம்பவே முடியவில்லை.
நமது மகளா இது?
எந்த ஒரு விஷயத்தையும் தன்னிடம் மறைக்க மாட்டாளே என்று உள்ளுக்குள் அங்கலாய்ப்பாக இருக்க, மகியின் முகத்தை பார்க்கவே ஒரு பக்கம் அவருக்கு பயமாக இருந்தது.
மதியம் சாப்பிடும் நேரத்தில் ஆரம்பித்த மகியோ வார்த்தையாலே எஸ்தரை கொன்றுக் கொண்டிருந்தார். நேரமும் கடக்க மகளின் வருகைக்காக காத்திருந்தனர்.
இன்று நேரமாகவே வகுப்புகள் முடியவும் வீட்டிற்கு வந்த ஷமீராவோ அங்கிருந்த தனது தந்தையை பார்த்து கீழே குனிந்து கொண்டு உள்ளே போக,ஷமீரா என்ற குரலைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள்.
வேகமாக வந்தவர் மகளை பளார் பளாறென்று அறைய எதற்காக அடிக்கிறார் என்று தெரியாமல் ஷமீராவும் கண்ணீரோடு நிற்க,உனக்கும் பாபுவிற்கும் கல்யாண பேச்சு வார்த்தை போயிட்டிருக்கே இந்த சூழலில் எவனையோ காதலிக்கிறியாமே என்று கண் மண் தெரியாமல் அடிக்க,வாங்கிய அடியும் கேட்ட செய்தியிலும் அதிர்ந்தவளோ அப்படியே மயங்கி விழுந்தாள்.
மாடியில் காய வைத்த துணியை எடுக்க போயிருந்த எஸ்தரோ அப்போதுதான் கீழே வந்தவர் மயங்கி கிடக்கும் மகளை பார்த்து ஷமி என்றவாறு வேகமாக படியில் இறங்கி வந்தவர் மகளை தூக்க...
ஆமா உன் மகளுக்கு ஆரத்தி எடுத்து கொஞ்சுடி ஊர் மேஞ்சிட்டு வராள் அது தெரியாமல் நீ என்னடி பண்ற என்கவும், இதை பொறுமையாக கேட்டுருக்கலாமே என்க...
என்னடி பொறுமை வேண்டி கிடக்கு. அப்ப நீயும் இதுக்கு உடந்தையா என்று எஸ்தருக்கும் இரண்டு அறையை கொடுத்தார்.
நிறுத்துங்க...
சும்மா இப்படி எல்லாம் பேசாதீங்க என்று அழுது கொண்டே கிச்சனிலிருந்து தண்ணி எடுத்துட்டு வந்து மகள் முகத்தில் தெறிக்க கண்கள் திறந்து பார்த்தவள் அம்மா என்று எஸ்தரை கட்டிக்கொண்டு மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் அழுது கொண்டே இருக்க..
ஏங்க வர முகூர்த்தத்தில் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடுங்க அப்பதான் நானும் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும் உங்ககிட்ட என்று எஸ்தர் சொல்ல...என்னடி ஆத்தாளும் மகளும் விளையாடுறீங்களா?.
இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு டி. திடீர்னு படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணினால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?
என் மூஞ்சில காரி துப்ப மாட்டாங்களா?
படிப்பு முடிக்கட்டும் முடிந்த உடனே கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறேன் என்று அதோடு பேச்சை முடித்தாலும் அதற்கு பிறகு வந்த நாட்களோ ஷமீராவுக்கு மிகவும் கெடுபிடியானது.
அதுவரை பாசமாக இருந்த எஸ்தரோ மகளை ஒவ்வொரு விஷயத்துக்கும் சந்தேகப்பட ஆரம்பித்தார்.
ஷமீராவோ பல்லை கடித்துக் கொண்டு நாட்களை ஒட்டினாள்.பாபு இங்கு வந்த பிறகு அவனிடம் நேரடியாக விஷயத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்க,செழியனிடம் இருந்தும் அவளுக்கு எந்த போன் மெசேஜும் வரவில்லை ...இதை நினைக்க இன்னொரு பக்கம் கவலையாக இருந்தது.
திருச்சி:
காலிங் பெல் சத்தம் கேட்டு மானசா போய் கதவை திறக்க அங்கே நிற்கும் மகனை பார்த்தவர் அருண் என்று அதிர..
நானே மா..
எப்படி மா இருக்க என்றவாறு உள்ளே வந்தவனோ அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவன் அப்பா எங்கே என்கும் போது தோட்டத்தில் இருந்த மகியும் வீட்டிற்குள் வந்தவரோ மகனை பார்த்து வா பா..
நல்லாருக்கியா?
மருமகள் எப்படி இருக்கு?
ரெண்டு பேரும் நல்லாருக்கோம் பா.
சொல்லுங்கப்பா எதுக்கு இவ்ளோ அர்ஜெண்டா வரச் சொன்னீங்க?
ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு தான் வர சொன்னேன் என்கும்போது இரண்டு கப்பில் காபி எடுத்துட்டு வந்த மானசா,கணவருக்கும் மகனுக்கும் கொடுத்து விட்டு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.
அருணோ இருவரின் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்டான்.
மகன் காபியை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த மகி தம்பி சில விஷயங்கள் உன் கிட்ட சொல்லணும் அது கேட்ட பிறகு நீ எப்படி எடுத்துக்கிறியோனு தெரியலை.
ஆனா உனக்கு தெரிய வேண்டியது அவசியமும் கட்டாயமும் இருக்கு...
ஹம் சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சனையா என்று பதட்டமாக கேட்க, நான் முதல்ல சொல்றேன் பிறகு உனக்கு என்ன கேள்விக்கு தோணுதோ அதை நீ கேளு என்றவர் தனது வாழ்க்கையில் நடந்த அத்தனையும் சொல்லி முடிக்க கேட்டவனோ அதிர்ந்து போனான்.
மகனின் முகத்தை பார்த்தவர் சொல்லு தம்பி நீ என்ன நினைக்கிற?இந்த அப்பா அம்மாவை பற்றி தப்பா தான் நினைச்சுட்டு இருப்ப எனக்கு தெரியும்.இனி இதை மாற்ற முடியாது பா...
அவனோ எதுவும் சொல்லாமல் எழுந்தவன் நேராக தனது அறைக்குள் போய் கதவை பூட்டி கொண்டவன்.
மகன் கோவமாக எதாவது பேசியிருந்தால் கூட பெரிதாக வலியிருந்திருக்காது போல.அவனோ இருவர் முகத்தை கூட பார்க்காமல் முகத்தில் அறைந்த போல் சென்றதோ ஆயிரம் சவுக்கால் அடித்தது போன்று இருந்தது.
சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்த மானசா, ஆமாம் எதுக்கு அருணை வர சொன்னீங்க?
யாருக்கு எப்போ என்ன நடக்குமென்று தெரியவில்லை.அதனால் நான் சுயமாக சம்பாதித்ததை என்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்க முடிவு பண்ணிட்டேன்.அதற்காக தான் அருணை வரச் சொல்லிருக்கிறேன்
ஓஓஓஓ...
என் புள்ளைங்களுக்கும் ஷமீராவுக்கும் எப்படி சமமாக பிரிப்பீங்க?
அவளுக்கு ஆண் வாரிசு இல்லை.அப்போ உரிமை என் பையனுக்கு தானே?
அவனாக பார்த்து எதாவது குடுத்தால் வாங்கிக்க சொல்லுங்கள் என்க, வாயை மூடு டி... இன்னொரு வார்த்தை இதை பற்றி நீ பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
பணத்தாசை பிடித்த பேயென்று தெரியாமல் உன்னோடு இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கனே ச்சை.
இது ஒன்னும் நீ சம்பாதித்ததோ இல்லை உங்கப்பன் வீட்டிலிருந்து எடுத்து வந்த சீதனமோ இல்லை.நம்ப கல்யாணத்திற்கு உங்க வீட்டில் என்ன செலவு பண்ணுனாங்கனு கொஞ்சம் நினைத்து பாரு?.
ஆனால்....
எஸ்தர் அப்படியில்லை..
சீர்வரிசை நகைகளோடு வந்தாள்.27 வருஷத்துக்கு முன்பு அவள் வீட்டில் போட்ட நகைகளை என்கிட்ட கொடுத்தவள் இதுவரை அதை பற்றி கேட்டதில்லை.இனியும் கேட்க மாட்டாள்.
அவள் மனைவியா?
இல்லை பணம் நகை சொத்துனு சுயநலமாக வாழும் நீ மனைவியா?
காதலுக்கு கண்ணு தெரியாதுனு சொல்வாங்களே அதே நிலை தான் நான்.உன் வெள்ளை தோலை பார்த்த எனக்கு உன்னுடைய முழு குணமும் தெரியாமல் போயிற்று.கட்டுன பாவத்துக்கு கடைசிவரை கஞ்சி ஊற்றுவேன்.
நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுனு சொல்ற வேலையை இனி வச்சிக்காதே,மூன்று பேரும் என் பிள்ளைகள் தான் புரியுதா என்றவாறு தனது ரூமிற்குள் சென்று விட்டார்.