Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்:
அம்மாடி எஸ்தரு...இப்ப என்ன நடந்து போச்சு இப்படி மூக்கை சிந்திக்கிட்டு இருக்குறனு அந்தோணி கேட்க,எதுக்குணா நீயும் இப்படி பண்ணினயென்றார்.
வேறு என்ன பண்ண சொல்ற நீயே சொல்லு?பாபு பேசினதை நீயும் கேட்ட தானே..அண்ணன் தங்கச்சியா நினைக்கிற பிள்ளைகளுக்கு போய் எப்படி கல்யாணத்தை பண்ணி வைக்க முடியும்??
நம்ம உறவை தான் பாக்குறோமே தவிர கடைசி வரைக்கும் வாழ போறது அவங்க..அதை பத்தி யோசிக்கலையே என்கவும் எஸ்தருக்கும் மகிக்கும் அவர் சொல்வது வஸ்தும்தானென்று மனதிற்குள் பட்டது.
ஆனாலும் மகளை ஏனோ அந்த கிராமத்து வீட்டில் வாழ மனம் அனுமதிக்கவில்லை.அதைவிட அவர்களோ இந்து குடும்பம்.இவர்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள்.
இப்படி இந்து குடும்பத்தில் போய் தனது மகள் திருமணம் பண்ணிக் கொண்டாளென்று சொந்த பந்தங்களுக்கு தெரிந்தால்,அவர்களெல்லாம் தன்னை பற்றி எப்படி நினைப்பார்கள் என்பதே மகிக்கு யோசனையானது.
தனது தங்கை கணவரின் முகத்தை வைத்து சூழலை உணர்ந்து கொண்ட அந்தோணி,ஊருக்காக ஒன்னும் நம்ப வாழலை..யாரு வீட்டுலயும் நடக்காத விஷயம் ஒன்னும் நம்ம வீட்ல நடக்கலையே..
அதான் மகளே வேணாம்னு ரெண்டு பேரும் சொல்லிட்டீங்களே இப்ப மட்டும் எதுக்கு அத பத்தி யோசிக்கிறீங்களென்று கொஞ்சம் கடுப்பாக கேட்க,ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் மாமா, அப்படியாவது வந்துடுவாள்னு..
ஆனா இவ்வளவு உறுதியாக நிற்கிறாளே...ம்ம் ஏன் மகி விஷயம் தெரிந்த உடனே என் தங்கச்சி என்கிட்ட சொல்லுச்சு.நானும் பாபுகூட கல்யாணத்தை முடித்து விடலாம்ன்னு சொன்னேன்..
நீ என்ன சொன்ன,படிப்பை நிறுத்த வேண்டாம்.திடீர்னு கல்யாணம் பண்ணினால் ஊர் உலகம் தப்பா பேசும்னு..படிப்பும் முடிச்சிது.நம்ப புள்ள மனசுல அந்த பையன் தான் இருக்கிறான் என்பதை அதுவும் தெளிவாக சொல்லுச்சு..
நீ அதை பத்தி ஏதாச்சும் கேட்டியா என்கவும்,எனக்கு அது தேவையில்லாத விஷயமா இருந்துச்சு மாமா...பாபுக்கு தானே நம்ம கல்யாணம் பண்ணலாமென்று இருந்தோமென்று மகி அதையே சொன்னார்..
தனது மைத்துனன் சொன்னதைக் கேட்டு அந்தோணிக்கு கோபம் வந்தது. ஏன் மகி பொண்ணுங்க மனசு என்ன சட்டைனு நினைச்சிட்டியா?
நேரத்திற்கு ஏற்ற போல மாத்திட்டு போறதுக்கு?.
மனசுல ஒருத்தனை நினைச்சு வாழ்ந்திட்டிருக்கும் புள்ளைகிட்ட இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படி பண்ணிக்கும் சொல்லு...
ஏன் மாமா இது சின்ன வயசுலயே பேசி முடிவு பண்ண விஷயம் தானே..என்னமோ இன்னைக்கு நேத்து முடிவு பண்ணிய போல நீங்களும் பேசுறீங்களே என்கவும்,சின்ன வயசில நம்ப தான் பேசி முடிவு பண்ணினோமே தவிர நம்ம ரெண்டு பிள்ளைகள் கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசினோமானு அந்தோணியும் கடுப்பாக கேட்க, மகியோ இல்லையென்றார்.
பையனை பார்த்தால் நல்ல பையன் போல தான் தெரியுது.அதே போல் குடும்பமும் நல்லாதான் இருக்கு.நல்லபடியா வாழட்டும்னு வாழ்த்திட்டு போவோம் வேற என்ன பண்றது சொல்லு என்கவும்,அதன் பின்னர் மகியால் எதுவும் பேச முடியவில்லை.
ஊர் வந்து சேர்வதற்கே அவர்களுக்கு நள்ளிரவு ஆனது.ஷமீரா வீட்டை விட்டு ஓடிப்போன விஷயம் ஊருக்குள் ஓரளவுக்கு பரவ ஆரம்பிக்க எல்லாரும் சாரதாவிடம் வந்து கேட்காமல் இல்லை..
சாரதாவோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைனு சமாளித்துக் கொண்டிருந்தார்..
விடியலும் யாருக்கும் காத்திருக்காமல் தொடங்கியது...
வனிச்சூர்:
ஆமா இல்லாததை நான் சொல்றேன், உடனே வேலு கம்பு தூக்கிட்டு வந்துட்டா என்ன குத்தி கிழிக்கிறதுக்கென்று தாத்தா சொல்ல,தோட்டத்து பக்கம் சென்று கொண்டிருந்த சுமதி பாட்டியோ திரும்பி பார்த்து என்ன அங்கு முணுமுணுப்பு என்க,ஒன்னும் இல்லடி யம்மா நீ போய் குளி என்றார்.
இந்த வீராப்பு எல்லாம் எங்க பாட்டி கிட்ட ஒன்னும் செல்லாது தாத்தானு கவிதா சொல்லவும்,என்ன பண்றது ஆத்தா..ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் ஊட்டுக்கு புருஷன்காரனா இருக்கிறேனே பயந்து தானே ஆகணுமென்று தாத்தாவும் சிரித்தார்.
உங்க மாமன் பொண்டாட்டி ஒரு வாரம் இங்க தான் இருக்க போகுது என்கவும், அப்படியா என்று இருவரும் சந்தோஷப்பட்டனர்.இங்கு மூன்றும் ஆண் பிள்ளைகள் என்பதால் பேச்சு துணைக்கு கவிதாவுக்கும் கண்மணிக்கும் அந்த வீட்டில் அவர்களை தவிர வேற யாருமில்லை.
அம்மாக்கள் இருவரும் எப்போதும் வேலை வேலை என்று இருப்பர்
அதே போல் இருவரும் பிரெஷ் ஆகி வரவும் அவர்களுக்கு டீ டம்ளரை கொடுத்துவிட்டு ஆத்தா ஷமீரா இந்தா காபி.நீ டீ குடிக்க மாட்டன்னு செழியன் சொன்னான் என்றபடியே காபி டம்ளரை புவனா நீட்ட,அதை வாங்கியவளோ தேங்க்ஸ் மா என்றாள்.
அம்மாக்கு என்னம்மா தேங்ஸ்னு வேக வைத்த பயித்தங்காயை ஆளுக்கு ஒரு தட்டில் எடுத்துட்டு வந்து கொடுக்க, அதைப் பார்த்தவுடன் ஷமீராவுக்கு தனது தாயின் நினைவு வந்தது .
அவர்கள் வயலில் விளையும் உளுத்தங்காயை இப்படித்தான் எஸ்தரும் வேக வைத்து கொடுப்பார் .
அதை நினைத்து பார்த்தவளுக்கு கவலையாக இருந்தது. அவள் முகத்தை வைத்தோ எதையோ நினைத்து வருந்துகிறாள் என்பது மற்றவர்களுக்கும் புரிந்ததும் உடனே பேச்சை மாற்றினார்கள்.
ஆமா கா நீங்க எந்த ஊரு என்கவும் சோழனூர் என்றாள்.அந்த ஊரு எங்கே கா இருக்கு?.
சிதம்பரம் பக்கம் என்க...சிதம்பரம் பக்கமாஆஆஆஆ என்று அதிர்ந்த கவிதாவோ,எப்படி மாமாவுக்கும் உங்களுக்கு பழக்கம் ஆச்சி கா??பேஸ்புக்ல ஏதாச்சும் பிரண்டானு கேட்கும் போது,சின்ன குட்டி என்று அதட்டிக் கொண்டு உள்ளே வந்த தனது பெரியப்பாவை பார்த்த கவிதாவிற்கு நடுக்கம் வந்தது.
இரண்டு பொம்பளைங்க இருக்கீங்களே கொஞ்சம் கூட அறிவு இல்லை?.சின்ன புள்ள என்ன பேச்சு பேசுது கண்டிக்காமல் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே இதுதான் புள்ள வளர்க்கற லட்சணமானு தனது மனைவியையும் தம்பி மனைவி பார்த்து அன்பரசன் பல்லை கடித்தார்.
பின்னர் மகள் பக்கம் திரும்பியவர் பள்ளிக்கூடம் போனோமா வீட்டுக்கு வந்தோமா படிச்சோமா சாப்பிட்டோமான்னு இருக்கணும்.அதை விட்டு பெரிய பேச்சுல எல்லாம் தலையிட்ட ஊட்டியிலே மிதிச்சிடுவேன் புரியுதா?.
கண்மணி உனக்கு எப்படியோ அப்படித்தான் உன் மாமா பொண்டாட்டியும் என்கவும் சரிப்பா என்றாள்.சத்தமா சொல்லு என்கவும் சரிங்கப்பா ...
ம்ம்...அடுத்த மாசம் தானே உனக்கு பரீட்சை போய் படிக்கிற வேலையை பாரு போ என்றவர் இப்பொழுது பெரிய மகள் பக்கம் திரும்பியவர் கண்மணி என்க சொல்லுங்கப்பா என்றாள்.
உனக்கு 23 வயசு ஆயிடுச்சு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தேன் ஒரு வரன் வந்துருக்கு..அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களென்று சொல்ல அப்பா என்று அதிர்வாய் சொல்ல,என்ன அண்ணனுங்க போல உனக்கும் ஏதாச்சும் மனசுல ஆசைகள் இருக்கா?.
அப்படி இருந்தால் சொல்லிடு...கடைசி நேரத்துல அவனுங்க போல நீயும் கழுத்தறுக்காதே.
அந்த நேரம் உள்ளே வந்த கண்ணனை பார்த்தவர் இந்த உருப்படாத மாடுக்கும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறது தான் பேச்சு இருக்கு.. ரெண்டு பேருக்கும் ஒரே வீட்டுல தான் சம்பந்தம் பண்ண போகுது என்கவும், எனக்கு இப்போதைக்கு வேண்டாம் பா என்றான்.
மகன் சொன்னதை கேட்டவர் ஏன் உனக்கு என்ன கேடு?
அது வந்து பா கண்மணிக்கு முதல்ல பண்ணலாம்.நான் பொறவு பண்ணிக்கிறேன் என்க..எப்போ நாங்க சுடுகாட்டுக்கு போன பிறகா?.
அம்மாகிட்ட போட்டோ கொடுத்துருக்கேன் வாங்கி பாருங்க. அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் புடிச்சுருச்சு. அவங்களே ஜாதக பொருத்தமும் பாத்துட்டாங்க..
பையன் படிச்சு முடிச்சுட்டு அப்பாவோட பாத்திர கடைய பெரிய கடையாக்கி வியாபாரம் பார்க்கிறான்.நல்லா விசாரிச்சிட்டேன்."பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது".
"நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாப்பிள்ளை".
பொண்ணு உங்க ஸ்கூல்ல தான் டீச்சரா இருக்கு,போட்டோவ பாருங்களென்று உள்ளே போனார்.
அப்பா இப்படி ஒரு குண்டை தூக்கி போடுவார் என்பதை கண்ணனும் கண்மணி எதிர்பார்க்கவில்லை.நேரமும் கடந்து செல்ல இரவு உணவை சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர்..
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த ஷமீராவிற்கு தனது அப்பா அம்மா இருவரின் நினைவாகவே இருந்தது.அப்பா கண்டிப்பாக தனது அம்மாவை அடிப்பார்.பாவம் அம்மா என்று நினைக்கும்போது அழுகையாக வந்தது.
காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?.
எனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்ககூட எனக்கு உரிமை இல்லையா?.
வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு பிடித்த போல வாழணுமென்று நினைக்கிறார்களே?.எனக்கென்று விருப்பம் இருக்க கூடாதானு தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...
பெட்டிலிருந்து எழுந்தவள் லைட்டை ஆன் பண்ணிவிட்டு கதவை திறக்க, அங்கே கவிதாவும் அவளுக்கு பின்னே கண்ணனும் நின்றனர்.
உள்ளே வாடா கவி வாங்கணா.உன் புருசன் போன் பண்ணினான் டா.அதான் போனை குடித்துட்டு போகலாம்னு வந்தோம்னு அங்கிருந்து சென்றான்.
பின்னர் கதவை தாழிட்டு உள்ளே வந்து மெத்தையில் உட்கார கால் வரவுய் அட்டென்ட் பண்ணியவள் ம்ம் என்றாள்.
ஓய் பொண்டாட்டி என்னடி பண்ற?.
சாப்டியாடி?.
அங்க உனக்கு பிடிச்சிருக்கு தானேயென்று செழியனும் கேள்வியை அடுக்க...ஷமிராவோ அமைதியாக இருக்கவும்,அடியேய் உன்னை தாண்டி, வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு?.நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ செவுடி போலயிருந்தா என்னடி அர்த்தமென்று திட்ட,டேய் நிறுத்துடா.
எங்கடா என்ன பேச விட்ட?.
ஒரு கேள்வி கேட்டால் அவங்க பதில் சொல்ற வரைக்கும் அமைதியா இருக்கணும்.இந்த பேசிக் கூட தெரியாதாடா காட்டானென்க
ஹாஹா என்று சிரித்தவன் அல்லிராணி பேக் டூ பார்ம்.
ஏய் கதவை திறடி,எவ்வளவு நேரம் ஒரு மனுசன் குரங்கு போல மரத்தில் இருக்கிறது என்கவும்,ஒரு நிமிடம் கணவன் சொன்னதை கேட்டு குழம்பியவள் வீட்டுக்குள்ள ஏது மரமென்றாள்.
அடியேய் பால்கனி கதவை திறடி என்கவும்,எதேஏஏ என்றவாறு வேகமாக போய் கதவை திறந்தவள் பால்கனியின் அருகில் உள்ள கிரில் கிட்ட நின்றவளோ அங்கிருந்த பாதாம் மரத்தை அன்னார்ந்து பார்க்க அதன் கிளையிலிருந்த செழியனோ பொத்தென்று பால்கனியின் தரையில் குதித்தான்.
ஆஆஆ என கத்தப்போன மனைவியின் வாயை பொத்தியவன்,அணைத்தபடியே உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு மனைவியை இறுக்கமாக அணைத்து அவளின் இதழோடு தனது முரட்டிதழை புதைத்தான்.
மென்மையான இதழை முரட்டுத்தனமாய் மென்னெடுக்க ஷமீக்கு வலித்ததும் தன்னவனின் டி ஷர்ட்டை இறுக்கமாக பிடிக்க அதை உணர்ந்தவன் பின்னர் இதழை விட்டு, தன்னவளை கைகளில் ஏந்தியபடி மெத்தையில் உட்கார்ந்து கொண்டவனோ அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
ஷமிராவின் காதிற்குள் கணவனின் இதய துடிப்பு ரீங்காரமாய் ஒலித்தது....
சாப்டீங்களா?.
ம்ம்... நீ டி?.
உன்னை இங்க விட்டு அங்கிருக்க மனசு வரலைடி?? அதான் உன்னை பார்க்கணும் போல இருந்துச்சா ஓடி வந்துட்டேன் டி.