• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
இருவரின் நினைவுகள்:

ஏய்...இப்பயாவது உன்னுடைய பெயர் சொல்லு டி...

தனது கண்ணை மூடியவளோ ஷமீரா தாஸ் என்க... நோ...ஷமீரா இளஞ்செழியன் என்றவன் சொல்லும் போது அவளையும் மீறி அவள் உதட்டில் சிரிப்பு வரவும் அதை ரசித்தவன் மனசில் இவ்வளவு ஆசை இருக்கு இருந்தாலும் பிடிவாதமா இருக்க இல்லையா?

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் இருக்கிறேன் டி.நிச்சயமா உன்னை கைவிட மாட்டேன்.என்னை நம்பி வா டி என்க,அதைக்கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் நம்பிக்கை இல்லாமல் தான் உங்களை தேடி நான் வந்தேனா என்று கோவத்தில் வார்த்தையை விட்டாள்..

அதைக் கேட்டவன் ஹா ஹா என்று சிரித்துவிட்டு அப்படி போட அரிவாள்...என் பொண்டாட்டி வாயாலே உண்மை வந்துடுச்சா சூப்பர் டி சூப்பர் டி.

எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அந்த உதட்டை புடிச்சி கடிக்கணும் போல வருது.இருந்தாலும் தொட விட மாட்டேங்கறியே டி???

உன்னோட அனுமதி இல்லாம கண்டிப்பா நான் உன்னை தொட மாட்டேன்.அதாவது நீ மிசஸ் செழியனாக ஆகும் வரைக்கும் தான் இந்த டீலிங்.அதுக்கப்புறம் நான் தொட்டது மிச்சம் தான் உன்னோடது புரியுதா???

அவனின் வார்த்தைகளை கேட்டு அவள் முகம் சிவப்பதை கண்டவன்,சண்டாள சிறுக்கி கொல்றாளே?

இப்படியே இவள் கழுத்தில் மூணு முடிச்சு போட்டு கையோடு இழுத்துட்டு போயிடலாமா என்று நினைக்க,அதைக் கேட்டவனின் மனசாட்சியோ அடப்பாவி என்றது.

பிறகு தன்னைத்தானே தேற்றியவன், என்னங்க மேடம் புடவை கட்டிட்டு வந்துருக்கீங்க??

எனக்காக தானே??

ம்கும் இல்லை என்றாள்.

அப்படியா...!!!

அப்ப இந்த புடவை எனக்காக கட்டவில்லை..சரி நீ கிளம்பு டி நேரம் ஆகுது.

அதில் பாவமாக அவனை நிமிர்ந்து பார்க்க,ரொம்ப நேரமா உன் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கிறது டி.உன் காதில் கேட்கலையா ?

அப்போ என்னோட அருகாமையில் நீ உலகத்தை மறக்கிற தானே...ஐ லவ் யூ மை டியர் என்றவன் ஒரு நிமிஷம் கண்ணை மூடு டி..

அவளோ ஏனென்று பார்வையால் கேட்கவும் தயவுசெய்து கண்ணால பேசாதடி,சத்தியமா என்னால தாங்க முடியலை.நீ வேற அம்சமா புடவை கட்டிட்டு வந்துருக்க.

உன்னோட வளைவு நெளிவுலாம் என்னை பித்து புடிக்க வைக்குது.உன்னை பொண்டாட்டியாக்கும் வரையில் நான் நல்லவனா இருக்க பார்க்கிறேன்.

இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கு இருந்தால் சத்தியமா இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.முழுசா உன்ன வீட்டுக்கு அனுப்பனும்னு பார்க்கிறேன்.

என்னை காமுகனாக்கிடாத கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டுருக்கேன் சீக்கிரம் கிளம்பி போ,இல்லை அதுக்கு பிறகு உன் விருப்பம் என்கவும்,அதைக் கேட்டவளோ அதிர்ந்து போய் இரண்டு அடி தள்ளி போனாள்.

இதைப் பார்த்து சிரித்தவன் அதான் சொல்லிட்டேனே உன் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேனு.பயப்படாம வா டி...

நோஓஓஓ...முடியாது என்றாள்

"என் பிரண்டு வராள்" பாய் என்று ஓடிவிட்டாள்.

ஷமீராவும் ராஜியும் அங்கு இருக்கும் கடைகளை எல்லாம் ஒரு சுத்து சுற்றியவர்கள் என்னென்ன வேண்டுமோ வாங்கி விட்டு,அவரவருக்கு பிடித்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு அங்கே இருப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது ராஜியின் போனுக்கு கால் வந்தது.

அப்பா தான் டி என்றவாறு அட்டென் பண்ணியவள் ஓகே பா இதோ என்றாள்.பின்னர் இருவரும் கார் நிற்கும் இடத்திற்கு சென்று பின் சீட்டில் ஏறியதும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

ஷமீராவின் நினைவுகளோ தன்னவனிடம் தான் இருந்தது.

சில மாதங்களாகவே செழியனின் நினைவுகள் அவளை வாட்டி எடுக்க,ஒரு வாரம் பாஸ்டிங் பிரேயர் போட்டவள் ஜூசஸிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தாள்.

அதாவது போன ஆண்டு எப்படி எதிர்பாராமல் அவனை சந்தித்தாளோ அதேபோல் இந்த முறையும் அதே கடையில் அவனை நான் சந்தித்தால் எனக்காக தான் அவனை நீங்கள் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இல்லை என்றால் என் மனதில் உள்ள ஆசையை அதோடு அழித்து விடுகிறேன் ஏசப்பா என்று மனதிற்குள் வேண்டியிருந்தாள்.

ஒரு பக்கம் மனம் அவன் வரக்கூடாது என்றாலும் இன்னொரு பக்கமும் அவன் வந்திருக்க வேண்டும் என்று பாடாய்படுத்தியது.

அதேபோல அவன் இருப்பதை பார்த்து சந்தோஷத்தில் அழுகை வர,அதை அடக்கிக் கொள்ளப் படாத பாடுபட்டாள்.

என்னம்மா தேவையானது எல்லாம் வாங்கிட்டீங்களா என்று ராஜியின் அம்மா கேட்க அதில் நிகழ்வுக்கு வந்தவள் ஆமாங்க மா.

இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த கடை இருக்கும் அவ்வப்போது தேவையானதை வாங்கிட வேண்டியதுதான் என்று ராஜு சொல்லவும் அடிப்பாவி இதுக்கு தான் நீ காலேஜுக்கு போறியா என்று மகளை முறைக்க,வாய்ப்பு கிடைக்கும்போது இதெல்லாம் அனுபவிச்சுக்கணும் மா.

உனக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகுது என்று அவள் சிரிக்கவும் வீட்டுக்கு வாடி தொடப்பத்தாலே சாத்துறேன் என்றார்.

இவர்களோடு அரட்டை அடித்தபடி வந்தாலும் செழியன் ஊருக்கு கிளம்பி இருப்பானா? கிளம்பிருக்க மாட்டானா என்ற சிந்தனை மட்டும் ஷமீராவை விட்டு போகவில்லை.

அரை மணி நேர பயணத்தில் சோழனூருக்கு வந்தவர்கள் வாடா ஷமி இருந்துட்டு காலையில போகலாம் என்று வேதாச்சலமும் அவர் மனைவியும் சொல்ல,இருக்கட்டும் பா.

அம்மா மட்டும் தனியாக இருக்காங்களே...அதுவும் சரி என்றவர்களா அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டவர்கள் சிறிது நிமிடம் எஸ்தரிடிடம் பேசி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தன் வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம் ஷமீரா காட்ட,மகளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்தவர் எப்போதும் உன் முகத்தில் இந்த சந்தோஷம் குறையாமல் இருக்கணும் ஷமீ...

நீ இருக்கும் போது எனக்கு என்னமா கவலை என்றாள்.

எல்லா நேரமும் அம்மா உன் கூட இருக்க மாட்டேன்.திடீர் என்று எனக்கு ஒன்னு ஆயிடுச்சுனாக்க நீயே தனியா இந்த உலகத்துல வாழ பழகிக்கணும் என்க, ஏன் மா இப்படி சொல்ற என்கும் போது ஷமீராவுக்கு கண்கள் கலங்கியது.

எதார்த்தத்தை சொல்கிறேன் இது தான் வாழ்க்கை.எல்லாத்துக்கும் தகுந்த போல நம்மளை நாமே பழகிக்கணும் புரியுதா என்கவும் கண்ணீரோடு தலையை அசைக்கும் மகளை பார்த்த எஸ்தருக்கு வேதனையாக தான் இருந்தது. .

சிறிது நாட்களாக ஏதோ ஒரு சம்பவம் வீட்டில் நடக்கப்போகுது என்பது மட்டும் அவர் மனதில் உருத்துக்கொண்டே இருப்பதால்தான் திடீர்னு நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் மகள் யாரும் இல்லை என்று உடைந்து போக கூடாது என்பதற்காக இப்படி பேசி தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சரி வா ஷமி சாப்பிடலாம்...

ஐயோ அம்மா வேண்டாம்.பஜ்ஜி அப்பளம் அது இதுனு சாப்பிட்டது வயிறு ஃபுல்லா இருக்கு எனக்கு ஒண்ணுமே வேண்டாம் என்றவள் கீழே இருக்கும் ரூமில் டிரஸ்சை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் டிவியை ஆன் பண்ணி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க பின்னர் தூக்கம் வருவது போல் இருக்கும் ஆப் பண்ணி விட்டு கீழே இருக்கும் ரூமிற்குள் படுத்து விட்டாள்.

குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்த செழியன் நேரடியாக அவள் வீட்டுக்கு போகலாமா என்று யோசிக்கும் போது அவன் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று பார்த்தவன் வசுந்தரா மேடம் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் எஸ் மேடம் என்க..

அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை.எஸ் மேடமென்று அழைப்பை கட் பண்ணியவன் தனது வாட்ஸ் அப்பில் செக் பண்ண,அதில் ஒரு கேஸுடைய சில டீடெயில்ஸை வசுந்தரா அனுப்பியிருந்தார்.

அதெல்லாம் படித்து பார்த்தவன் அவருக்கு பதிலை அனுப்பிவிட்டு அந்த கேஸ் சம்பந்தமாக விசாரிக்க அன்று இரவே மதுரைக்கு பஸ் ஏறினான்.

அதிகாலையில் வந்தவனோ வழக்கமாக தங்கும் லாட்ஜிக்கு சென்றவன் குளித்து தயாராகி கீழே இருக்கும் ஹோட்டலுக்கு வந்தவன் டீயும் இரண்டு வடையையும் வர வைத்து சாப்பிட்டு எழுந்தவன் பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவனோ அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறியவன் தெரு பேரை சொல்லி அங்கு போக சொன்னான்.

அரை மணி நேரத்தில் அவர் சொன்ன வ உ சி தெருவுக்குள் ஆட்டோவும் நுழைந்தது.அங்கே இருந்த டீ கடையில் ரவீந்திரனின் வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்க அவர்களோ இவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.

எதுக்கு எல்லாரும் இப்படி பாக்குறீங்க??என்க..

தம்பி ரவீந்திரன் வீட்டில் தான் யாருமே இல்லையே???

நீங்க இப்படி தேடி வந்திருக்கீங்கன்னு அமைச்சருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகும்.சீக்கிரம் இங்கிருந்து போங்க தம்பி என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,நான் ரவீந்திரன் கூட படிச்சவன்.

ஒரு வேலை விஷயமா அவனை தேடி வந்திருக்கேன் என்று செழியனும் விஷயத்தை மாற்றி சொன்னான்.

ஐயோ தம்பி ரவீந்திரன் எங்கேன்னே தெரியலப்பா.அமைச்சர் பொண்ணை ரவீந்திரன் காதலிச்சதாக பிரச்சனை ஆகி ஊர விட்டு போயிட்டாங்க.

இப்ப ரவீந்திரன் எங்க இருக்காங்கன்னு தெரியல அவங்க அப்பா அம்மாவும் பக்கத்து ஊர்ல தங்கியிருக்காங்கப்பா நீ சீக்கிரம் கிளம்பு என்பவர்களிடம் அவர்களை நான் பார்க்க முடியுமா என்றான்.

தம்பி நீங்க உண்மையிலேயே அமைச்சரோட ஆளு தானே என்க..அய்யோ..பக்கத்து ஊரு தான் என்னோட சொந்த ஊருங்க என்று தனது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டு எடுத்துக்காட்டவும் அதில் வனிச்சூர் அட்ரஸ் இருக்க,அதில் ஒருவர் இந்தாப்பா தம்பி வீரையன்-தம்புசாமி யை தெரியுமா???

அட..அவங்க ரெண்டு பேரும் என்னோட தாத்தாங்க என்றவன் அவர்களோடு எடுத்திருந்த போட்டோக்களை காட்டிய பிறகே அவனை நம்பியவர்கள் நைட் 11 மணிக்கு வாப்பா என்று அனுப்பி வைத்தார்கள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
மதுரை:

அப்பொழுது அவன் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்க,யார் என்றவாறு எடுத்துப் பார்க்க அதில் பொண்டாட்டி என்று வந்தது.

பார்ரா என்றவாறு அட்டென்ட் பண்ணியவன் என்ன டி சண்டிராணி ஆச்சரியமா இருக்கு...நீ கால் பண்ணருக்க?

எங்கே இருக்கீங்க என்றாள்.

ஓய்...நான் உன் மனசுல தான் டி இருக்கேன் என்கவும்,அய்யோ ஆண்டவரே,ஏழு ஊர் வாய்.

ஆஆஆஆஆ...

கடிக்காமல் நீங்க எங்க இருக்கீங்க என்று மீண்டும் ஷமீரா கேட்க,எங்கே டி என்னை தொட விட்ட.இந்த லட்சணத்தில் நான் கடிச்சேனாம்.

செழியன் சொன்னதை கேட்டவள் அடபோடா என்று அழைப்பை துண்டித்தாள்.

திமிர் பாரேன் என்றவாறு கால் பண்ண அவளும் அட்டென் பண்ண,என்ன டி அவ்வளவு அதப்பா? கட் பண்ற, இது எனக்கு பிடிக்காது சொல்லிட்டேன்..

நான்தான் உன்கிட்ட சொன்னேனடி இன்னைக்கு நைட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்னு.நீ எங்கே டி அதெல்லாம் காதுல வாங்குன???

அதான் கண்ணாலேயே அங்கம் அங்கமா போட்டோ எடுத்து மனசுல பதிய வைச்சிட்டு இருந்தியே என்கவும்,இதைக் கேட்டவளுக்கு காதுமாடல்கள் இரண்டும் சிலிர்த்து போனது.

சரி பாய் நான் காலேஜ் கிளம்பிட்டேன் என்று போனை வைத்து விட்டாள்.

அன்று இரவு ரவீந்திரனின் அப்பா அம்மாவை சந்தித்தவன் தான் போலீஸ்காரன் என்றும் நீங்கள் தானே மனித உரிமை கழகத்திற்கு லெட்டர் போட்டதென்க,அதைக் கேட்ட பிறகே அவனை நம்பியவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டு எப்படியாவது எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுங்கள் தம்பியென்று கை கூப்பி இருவரும் கதறினார்கள்.

அதை பார்த்தவன் ஐயோ என்ன பண்றீங்க???

வயசுல பெரியவங்க என் முன்னாடி போய் கை கூப்புறீங்களே கையை இறக்குங்க என்று இருவரின் கையை பிடித்து கீழே இறங்கி விட்டவன் கண்டிப்பாக உங்க பையன் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கொடுப்பேன் கவலைப்படாதீங்க.

உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று தனது போன் நம்பரை கொடுத்துவிட்டு அங்கிருந்து வனிச்சூருக்கு வந்து சேர்ந்தான்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரவீந்திரன் கேஸ் விஷயத்தில் அலைந்து திரிந்து எல்லாத்தையும் கண்டுபிடிக்கவே செழியனுக்கு நாட்கள் சரியாக இருக்க,ஷமீராவிடம் பேசும் நேரமும் குறைந்தது.

நாட்களும் அதன் போக்கில் செல்ல இரண்டாம் வருடத்தை முடித்தவளோ மூன்றாம் வருட வகுப்பிற்கும் வந்துவிட்டாள்.சில மாதங்களாக தன்னவன் பிஸியாக இருப்பது தெரிந்தும் அவனை பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசை இருந்தாலும் அவளாக கூப்பிடுவதற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அவனுக்கும் அந்த எண்ணம் இருந்தாலும் அவள் கூப்பிட்டால் தான் இனிமேல் சிதம்பரம் பக்கம் போவேன் என்று பிடிவாதமாக இருந்தான்.

ஒரு நாள் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது எங்க வீட்டுல வந்தும் அல்லேலுயா தான் பாடுவியா இல்லை சாமியும் கும்பிடுவியாடியென்று கேட்கவும் அவனிடம் விளையாட நினைத்தவள் அதுக்கு ஹிந்து பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும் எதுக்கு கிறிஸ்டியன் பொண்ண காதலிச்சீங்க???

நான் தான் வேணும்னு ஒத்த காலில் நின்றிங்களே...அதெல்லாம் உங்க சாமியை கும்பிட முடியாது என்று விளையாட்டாக ஆரம்பித்த பேச்சோ பெரிய வாக்குவாதமாகியது.

கேஸ் பற்றிய டென்ஷன் ஒரு பக்கம்,இப்போது ஷமீராவின் பேச்சும் அவனை சூடேத்த,அப்போ உங்க அப்பன் பார்க்கிற மாப்பிள்ளையையே கட்டிக்கிட்டு குடும்பம் பண்ணுடி..

இனிமே நான் உன்னை தேடி வரமாட்டேன் என்கும் போது அந்த பக்கமிருந்தவளோ அழைப்பை துண்டிக்க..

எவ்வளவு திமிர் இவளுக்கு???

ஒருத்தன் பேசிட்டு இருக்கும் போதே கட் பண்றாளே என்றவன் மீண்டும் அவள் நம்பருக்கு கால் பண்ண அவளோ அட்டென் பண்ணவையில்லை.

இதில் மேலும் கோவம் வர இனி நீ எனக்கு தேவையில்லை டி என்று வாய்ஸ் மெசேஜை அனுப்பியவன், போனை ஆப் பண்ணி அங்கிருந்த பெட்டின் மேல் தூக்கி எறிந்து விட்டு படுத்து விட்டான்.

அதன் பின்னர் இருவரும் அவரவர் நினைவுகளில் ஏங்கித் தவிக்க,கோவத்தை விட்டு அவரவர் இடத்தில் இருந்து இறங்கி வர முயலவில்லை.

செழியனுக்கோ ஒவ்வொரு முறை அவன் போனிற்கு கால் வரும் போதெல்லாம் அவளாக இருக்கமாட்டாளா என்ற எண்ணம் வந்தது.பாரேன் நான் வேண்டாமென்று சொன்னதும் ஏன் டா இப்படி சொன்னனு சண்டை போடாமல் இவள் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறாள்..

"கொழுப்பு கொஞ்சம் நஞ்சமில்லை டி"

கையில் என்றைக்கு சிக்குவியோ அன்றைக்கு உன் பாடு என்னனு பாக்குறேனென்று புலம்பிக் கொண்டான்.

"அதேபோல தான் அவளும்"

இன்பார்மரிடமிருந்து கால் வர கண்ணனிடம் மட்டும் விஷயத்தை சொல்லியவன் தனது பெற்றோர்களிடம் கம்பெனி விஷயமாக சென்னை வரைக்கும் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது சொந்தத்தில் ஒருவர் இறந்து விட்டதாக துக்க செய்தி வர சொந்தங்களோடு அங்கு சென்றான்.

மறுநாள் பாடி எடுத்த பிறகு ஊருக்கு வந்தவன் வேகமாக கிளம்பி மதுரைக்கு வந்தவனோ அங்கிருந்த இன்பார்மரிடம் மற்ற டீடெயில்ஸ் தெரிந்து கொண்டு சேத்தியாத்தோப்பை நோக்கி பயணமானான்.

சேத்தியாதோப்பு:

நள்ளிரவு 2 மணிக்கு வந்து இறங்கியவன் அங்கிருந்த டீக்கடையில் டீ குடித்துவிட்டு போலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கு என்று கேட்க,சிறிது தூரம் நடந்து போனால் வரும் என்றார்கள்.

இந்த நேரத்தில் எதுக்கு தம்பி போலீஸ் ஸ்டேஷன் என்று டீக்கடைகாரர் கேட்க, தெரிஞ்சவங்க இருக்காங்க ணா.வர சொன்னாங்க அண்ணா என்று அவர் நம்பும்படி சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போக,அங்கு ஏட்டும் இன்னொரு போலீசும் இருந்தனர்.
மற்ற மூன்று பேரும் ரோந்து பணிக்கு போயிருந்தனர்.

காலடி சத்தம் கேட்டு டேபிளின் மேல் தலை வைத்து படுத்திருந்த ஏட்டுவோ நிமிர்ந்து பார்த்தவர் யார் தம்பி?

இந்த நேரத்தில் வந்துருக்கீங்க?

என்ன விஷயம்?

அவனோ நிதானமாக உள்ளே வந்து அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவன் இன்ஸ்பெக்டர் இல்லையா???

அவனின் தோரணை பார்த்த இருவருக்கும் கோபம் வந்து, எலேய் எந்திரிடா...ரெண்டு அதிகாரிக்கு முன்னால் என்னமோ மாமியார் வீட்டுக்கு விருந்து திங்க வந்த போல உன் இஷ்டத்துக்கு உக்காந்துகிட்டு எங்களையே கேள்வி கேக்குறியா?

எவ்வளவு திமிரு என்றவாறு அவன் சட்டையை பிடிக்க வந்த ஏட்டுவை பார்த்து ஒரு முறை முறைத்தவன்,தனது பர்சில் இருக்கும் ஐடி கார்டை எடுத்துக்காட்ட,பதறிய இருவரும் சாரி சாரென்று சல்யூட் அடித்தனர்.

இது தான் பொதுமக்களுக்கு நீங்கள் சேவை செய்யும் லட்சணம் என்றவன், பின்னர் தான் வந்த விஷயத்தை பற்றி அவர்களிடம் விசாரிக்க காலையில கூப்பிட்டு போகிறோம் சார் என்றார்கள்.

சரி என்றவன் அங்கிருந்த பெஞ்சில் படுத்து கண்களை மூடினான்.விடியலும் ஆரம்பமாக சார் என்கும் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.பக்கத்தில் இருக்கும் லாட்ஜில் உங்களுக்கு ரூம் போட்டுருக்கு..

"இன்ஸ்பெக்டர் வந்தாரு"

நீங்கள் நல்ல தூக்கத்தில் இருந்ததால் எழுப்ப வேண்டானு சொல்லிட்டு காலையில் பார்ப்பதாக வீட்டிற்கு போயிட்டார்.

ஓஓஓ...

தேங்க்ஸ் ணா என்றவாறு எழுந்து சோம்பல் முறித்தவன் அவருடைய வண்டியில் ஏறி பக்கத்தில் இருக்கும் லாட்ஜிக்கு போய் குளித்து தயாரானவனோ சாதாரண ஆள் போல் ஏட்டுவோடு போனான்.

பத்து நிமிட பயணத்தில் அந்த பெரிய காம்பவுண்ட் சுவர் உள்ள வீட்டின் முன்பு போய் வண்டியை நிறுத்தியவர், சார் இந்த வீடுதான்.

ம்ம் என்றவாறு கீழே இறங்கியவன் தெருவை பார்க்க அதில் பாதி இடம் இந்த சுவருக்குள் தான் இருந்தது.இரும்பு கேட்டை திறந்தவர் வாங்க சார் என்க, அட அண்ணா...

இந்த சார் மோரெல்லாம் வேண்டாம்.அதும் இப்போது நாம வந்திருக்கிறது ஏன்னு உங்களுக்கு தெரியும்.இப்படி சார் கீருனு...

அவங்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது சரிங்களா?

புரிஞ்சிடுச்சி தம்பி என்றவர் உள்ளே போகலாம் என்க..ஓகே ணா என்றவன் அந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்தவன் சுற்றி பார்த்துக் கொண்டே வர, தோட்டத்தில் பூ பரித்துக் கொண்டிருந்த பெண்மணியோ என்ன ஏட்டையா இவ்வளவு தூரம்?

அந்த சத்தத்தில் திரும்பியவர் தம்பி எனக்கு வேண்டியவரோட பிள்ளைங்க...விதை நெல் விஷயமா வந்திருக்குங்க மா.நம்ம கிட்ட தான் நல்ல குவாலிட்டியா இருக்குமே அதுக்கு தான் அழைச்சிட்டு வந்தேன் என்று அவர் நம்பும்படி பொய் சொன்னார்.

அப்படிங்களா ஏட்டு...!!

பரவாயில்லையே...

வயசு பசங்களும் இப்ப விவசாயம் பண்றாங்களென்று நினைக்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது..நம்ம காலத்துக்கு அப்புறம் விவசாயம் அழிஞ்சிடுமோன்னு பயம் இருந்துச்சுனு சொல்லிக் கொண்டு அங்கிருந்து உள்ளே போனவர் வாங்க என்று அவர்களை அழைக்க,தனது லேசர் பார்வையால் செழியனும் அந்த இடத்தை அலசிக்கொண்டே உள்ள வந்தவனின் கண்ணில் அங்கிருந்தவள் பட்டாள்.

தன் யாருக்காக வந்தோமோ அவளை பார்த்து விட்டதை உணர்ந்து,எப்படி அவளிடம் பேசலாம் என்று யோசனையா இருக்க,அதற்கு ஏட்டுவே வழி வகுத்தார்.

ஏங்க பெரியம்மா உங்க கையால அந்த இஞ்சி டீ போடுவீங்களா பிரமாதமா இருக்கும்.நீங்கள் யார் கிட்ட கத்துக்கிட்டீங்கனு சொல்லுங்களேன் என்று அந்த பெண்மணியை புகழ்ந்து பேசியவாறு செழியனிடம் கண்ணசைத்தார்.

இதைக் கேட்ட அந்த பெண்மணிக்கு சந்தோஷம் தாளவில்லை.அய்யோ என்னங்க ஏட்டு நான் ஏதோ டீ போடுறேனென்று சிரிக்க...தான் போட்ட திட்டமும் நன்கு வேலை செய்யுதேயென்று நினைத்துக் கொண்டார்.

இதோ ஏட்டையா உங்களுக்கு இல்லாத டீயா என்று அந்த குண்டு பெண்மணி கிச்சனிற்குள் செல்ல,வேகமாக எழுந்த செழியன் ஜன்னலை வெறித்தபடி உட்கார்ந்திருந்தவளிடம் வந்தவன், பாப்பா...

உன்னோடு கேஸ் விஷயமாக ரவீந்திரன் பேரன்ட்ஸ் சொல்லி தான் வந்திருக்கேன்.இதுதான் என் நம்பர். எப்படியாவது இந்த நம்பருக்கு கால் பண்ணனுமானு சொல்லிவிட்டு சோபாவில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

தம்பி என்னாச்சு என்று ஏட்டு கேட்க, நம்பர் குடுத்துருக்கேன் ணா என்ன நடக்குதென பாக்கலாம்.

எப்படியாவது அந்த புள்ளை கிட்ட பேசணும் ணா.அது தான் இப்போதைக்கு யோசனை?

அட இவ்வளவு தானா தம்பி...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை தம்பி. இந்தம்மா தீப்பாஞ்சாள் கோயிலுக்கு(அருள்மிகு தீப்பாய்ந்த நாச்சியார்)போயிட்டு நடை சாத்தும் போது தான் அங்கிருந்து கிளம்புவாங்க.இன்னைக்கு மதியம் அன்னதானம் இவங்க செலவில் நடக்கும்.

அதனால கண்டிப்பா இந்த பொண்ணு பேசும் தம்பி.இந்த பொண்ணு கோயிலுக்கு வந்து இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது என்கவும், அப்படிங்களா அண்ணா என்று சந்தோஷப்பட்டவன் பிரியா கிட்ட கேட்டு ரவீந்திரனை கண்டு பிடித்து அவனோட அப்பா அம்மா கிட்ட ஒப்படைக்கணுமென மனதிற்குள் கோட்டை கட்டினான்.

மேலிருந்து இதை பார்த்த விதியோ அய்யா பாவமென சிரித்தது...



வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top